நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இல்லாத ஒரு பொருளின் நினைவலைகளை எப்படிப் பத்திரப்படுத்தி வைக்க முடியும்? ஓ.... இப்போது தான் நினைவுக்கு வருகின்றது. விமானக் குண்டு வீச்சின் அழியாத வடுவாக என் கையில் இருக்கும், தழும்பிலிருந்து உன் நினைவுகள் இன்றும் வந்து போகின்றதே. அப்படியாயின் நீ எங்கே? உன்னை தொலைத்து விட்டுத் தேடுகிறேனா?
இல்லை, நீ என்னுள் உறைந்ததனால் தவிக்கிறேனா?
ஓ.....இப்போது தான் உய்த்தறிந்து கொண்டேன்.
அன்றைய தினம் மாலை வேளை...........................
பசியும், தேடலும் தொடரும்.......
பதிவின் முதலாம் பாகத் தொடர்ச்சியாக.......
சாதுரிகா, ஐ லவ்யூ என்று, நீ வரும் அழகை ரசித்தபடி கத்த வேண்டும் போலிருக்கும். ஆனாலும் அருகே இருப்பவர்கள் என்னை ஒரு பைத்தியக்காரன் போலப் பார்த்து, ஆசுப்பத்திரிக்கு அனுப்பி விடக் கூடாதென்னும் ஒரு நம்பிக்கைக்காக அந்தக் கணமே மௌனித்து விடுவேன். எனக்கும் அவளுக்குமான தேடல்- காதல் உடல் சார்ந்த பசியிலிருந்தே ஆரம்பித்தது என்பேன். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கின்றது?
ஒவ்வொரு மனிதர்களும், தமக்கான உடல் பசி ஆரம்பிக்கும் போது, பெண்மைக்குள் என்ன இருக்கின்றது என அறிய முற்படுகின்ற போது- ஒரு அழகிய பெண்ணின் முன்னழகுகள் கண்களுக்கு கம்பீரம் கொடுக்கின்ற போது தான்;
அந்தப் பெண் மீது இரு ஈர்ப்பினை வரவைத்து, அவளை அடைய வேண்டும் எனும் ஆவலில் காதலிக்கத் தொடங்குகிறான்.
இது தான் காதல் என்ற நாகரிக வார்த்தை கொண்டு பேசப்படும், காமம்.
இதனை மறுத்துரைத்து, காதலுக்குப் புது அர்த்தம் சொல்லும் பல கோடி கவிஞர்கள், இரு உள்ளங்களுக்குள் இடம் பெறும் அன்புப் பரிமாற்றம் காதல் என்றும்,
ஒருவர் மீது இன்னொருவருக்குத் தோன்றும் விருப்பு காதல் என்றும் வார்த்தைகளால் பொய் பூசி, புனைதல் எனும் முலாமிடுகின்றனர். ’’மனதைத் திறந்து காதல் வயப்பட்ட ஆடவர்கள் யாராவது சொல்லட்டும் பார்ப்போம்.
‘’அவள் மீதான உடற் பசியைக் கொண்டு என் காதல் எழுதப்படவில்லை என்று?
உடல் என்ற வனப்பினை அடையாளமாக்கித் தான் காதல் என்ற வர்ணம் பூசப்பட்ட்டு, காமம் எனும் புணர்தலுக்கான மேடையில் காதல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.
காதலின் தொடக்கமான காமம் பற்றிய ஆசை தீர்ந்த பின்னர் ஒருவர் மீது இன்னொருவருக்கு உண்டாகும் அன்பிருக்கிறதே. அது தான் உண்மைக் காதலாகப் பரிணாமம் பெறுகின்றது. தீராத காதலோடு, நீ இல்லையேல் நான் செத்து விடுவேன் எனக் கூப்பாடு போடும் நபர்களில் உடற் பசியினைப் போக்கிய யாராவது ‘ நீ இல்லையேல் நான் செத்து விடுவேன்’ என்று கூறுவதில்லை என்று மனோதத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
சாதுரிகா, நான் இருக்குமிடம் வந்து, என்னைப் பார்ப்பதற்கு முன்பதாகவே,
குளக்கட்டின் மறு கரையில் சைக்கிளில் வரும் அவள் அழகை ரசித்தபடி, என் எண்ணவோட்டங்களை மெதுவாகத் தட்டி விட்டேன். எங்கள் ரியூசனில் பத்தாம் கிளாஸ் படிக்கும் போது, என் மீது அவளுக்கும், அவள் மீது எனக்கும் ஒரு ஈர்ப்பு உருவாகியது.
வகுப்பறையில்,விஞ்ஞான பாடத்தில் ‘ Fertilization' பற்றிய அவளது சந்தேகமும், அதனைத் தொடர்ந்து அவள் கேட்ட கேள்விகளும், அவளுக்கு மறு கரையில் இருந்த என் மன உணர்வுகளுக்குள் ‘இவள் பிஞ்சிலே பழுத்து விட்டாளோ’ என்ற எண்ணத்தினைத் தந்தது. ஆனாலும் சாதுரிகா தான் அதற்குப் பொருத்தமானவள் என்றெண்ணிக் காதல் செய்யத் துணிந்தேன்.
எங்களின் ஆழமான காதல், மொட்டு விட்ட காலத்தில் பொத்தி வைத்து மனச் சிறைக்குள் கூடு கட்டி, மெது மெதுவாக உயரப் பறக்க எத்தணித்த காலப் பகுதியது.
முத்தம் கேட்கும் சாக்கில்- முகத்தினை அருகே கொண்டு செல்லுகையில், தள்ளி விட்டு ஓடிப் ப்ளேன் கிஸ் தரும் அவள் எப்படி, அதற்குச் சரிப்படுவாள் என சந்தேகம் கொண்டிருந்தேன்.
அவள் அழகு வதனத்தை ஆரத் தழுவி, அவளை விரல் கொண்டு மீட்டி மகிழ நான் ஆவல் கொண்ட நேரமதில், அவள் என்னை விட்டு விலகிச் செல்ல, போய் வருகிறேன் என்று சொல்லும் சந்தம் இருக்கிறதே!
எனக்குள் என் ஆண்மைத் தீயினைக் கொதிக்கச் செய்து, மன அறைகளில் வேதனைகளைத் தந்து விட்டுச் சென்றிருக்கிறது.
அவள் மீதான என் எண்ணம் இன்றாவது நிறைவேறும் என்று சிந்திக்கையில்,
அவள் என்னருகே வந்தாள்.
மனம் எவ்வளவு வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை, சாதுரிகா என்னருகே வந்து ‘ஹலோ’ சொல்லும் போது தான், உணர்ந்து கொண்டேன். இன்று ’எப்படியாச்சும் ஐஸ்கிரீமை மாற்றி மாற்றிச் சுவைத்து எச்சிலூற்றி மகிழுவோம்;
உமிழ் நீரோடு- உமிழ் நீர் பரிமாறி ஒரு இராசாயனப் போர் செய்வோம் எனக் கற்பனையில் உறைந்திருந்த வேளை,
திடீரெனப் பேரிரைச்சலோடு வானத்தில் தமிழர்களை மாத்திரம் குண்டு வீசிக் கொல்லவல்ல விமான வல்லூறொன்று வந்து வட்டமிட்டுத் தாழப் பறந்தது.
‘கண் இமைக்கும் நேரமதில் நான் தூக்கியெறியப்பட்டேன். சாதுரிகா.............
எங்கே என்று கண்களால் தேடி அறிய முடியாத அளவிற்கு, புகை மூட்டத்தினுள் மறைந்திருந்தாள்.
மெதுவாய் அடியெடுத்து அவள் அருகே சென்று பார்த்த போது,
அவள் என்னை மறந்தும், இவ் உலகை மறந்தும் பறந்து சென்றிருந்தாள்.
இனவாதப் பேய்களின் பசிப் பிணியினைத் தீர்க்கக் குருதி வேண்டிச் செய்யப்படும் போர்- அன்று சாதுரிகாவின் குருதியினையும் குடித்திருந்தது.
அவளைக் கொன்ற அந்தப் போரை எதிர்க்க, அவளின் கனவினை நிறைவேற்ற நான் என்ன செய்திருக்க வேண்டும்? ஆனால் நான் அதனைச் செய்யவில்லை.
உயிரினைப் பாதுக்காத்து வைத்திருக்க வேண்டும் எனும் இழிவான குணம் கொண்டதால், பழிவாங்கும் எண்ணம் மறந்து, அவள் நினைவுகளோடு சில காலம் அலைந்தேன். காலச் சுழற்சியில் ‘முறிகண்டிப் பிள்ளையாருக்கு அருகே, புதிதாக ஊருக்கு இடம் பெயர்ந்து மன்னாரிலிருந்து வந்த ஷாமலியை மனம் அடையாளம் கண்டு கொண்டது.
சாதுரிகாவை விட இவள், இன்னும்......................அழகாக இருக்கிறாளே என சிந்தையில் ஞானம் உதிக்க, ஷாமலியை என் காதலியாக்க வேண்டுமெனும் நோக்கோடு பின் தொடர்ந்து, விரட்டி விரட்டிக் காதலிக்கும் தொழிலில் இறங்கினேன். கோயிலில் பிரார்த்தனை முடிந்து, அவள் வீட்டிற்குப் போகத் தயாரான வேளையில், நானும் அவளின் பின்னே செல்லத் தொடங்கினேன்.
அப்போது தான் மனம் திடீரெனச் சதிராடத் தொடங்கியது.
‘நீ இல்லையென்றால் நான் செத்து விடுவேன் என்று, சாதுரிகாவிற்கு வாக்குக் கொடுத்தேனே’ அதன் நிலை என்ன என்று ஒரு தடவை மூளையில் கிளிக் ஆகியது.
சீ...சீ...இப்ப அந்தக் கறுமத்தைப் பற்றி ஏன் நினைத்துத் தொலைக்க வேண்டும்?
ஷாமலியைத் தானே இனி நான் விரும்பப் போறேன்.
அவளின் பின்னே போவோம் என.....ஷாமலியைப் பின் தொடர்ந்தேன்!
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்கு தானே மருந்து- திருக்குறள் 1102.
மேற்படி குறளுக்கான பொருள் விளக்கம்: மனித உடலில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற நோய்களுக்கு மருந்துப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பெண்ணால் வருகின்ற அல்லது வளர்ந்த நோய்க்கு; பெண்ணே மருந்தாக இருக்கின்றாள்.
|
67 Comments:
காதல் மன்னனாக இருப்பீர்கள் போல் தெரிகிறதே
சற்றே நீளமான பதிவு என்றாலும் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் முழுவதும் சுவாரஸ்யம்.
ஹிஹி காதல் மன்னனா???அதனையும் தாண்டி!!
யோவ் என்ன ஆளுயா நீர்???சீ வெக்கம் வெக்கம்..இப்பிடி ஆளுன்னு தெரிஞ்சிருந்தா நான் முதலே வந்திருக்கமாட்டேன் ஹிஹிஹீ
அதில திருக்குறள் வேறு ஹிஹி
///சாதுரிகா, ஐ லவ்யூ என்று, நீ வரும் அழகை ரசித்தபடி கத்த வேண்டும் போலிருக்கும்./// யோவ், அப்ப நேமிசாவோட வாழ்க்க...
///ஒவ்வொரு மனிதர்களும், தமக்கான உடல் பசி ஆரம்பிக்கும் போது, பெண்மைக்குள் என்ன இருக்கின்றது என அறிய முற்படுகின்ற போது- ஒரு அழகிய பெண்ணின் முன்னழகுகள் கண்களுக்கு கம்பீரம் கொடுக்கின்ற போது தான்;/// பார்ரா பார்ற.... எங்கெல்லாம் போறார்னு..))
///இதனை மறுத்துரைத்து, காதலுக்குப் புது அர்த்தம் சொல்லும் பல கோடி கவிஞர்கள், இரு உள்ளங்களுக்குள் இடம் பெறும் அன்புப் பரிமாற்றம் காதல் என்றும்,// கவிதைக்கு பொய் தானே அழகு...
///உடல் என்ற வனப்பினை அடையாளமாக்கித் தான் காதல் என்ற வர்ணம் பூசப்பட்ட்டு, காமம் எனும் புணர்தலுக்கான மேடையில் காதல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது./// நானும் இதோடு ஒத்துப்போகிறேன்.. உந்த மனசை பார்த்து காதலிப்பது எண்டு சொல்லுவதெல்லாம் பொய்..
ஒரே வரில சொல்லணும் எண்டா "காமம் துறந்தவன் காதல் செய்யான்" ஒரு பெண்ணின் மீதான ஈர்ப்பு தான் காதலாகிறது. அந்த ஈர்ப்பு அவள் அழகோ இல்லை அவள் மீது எதோ ஒரு வகையான கவர்ச்சியிலோ தான் எழுகிறது. மற்றும்படி உந்த மனசை பார்த்து காதலிப்பது என்று காதலிச்சவை யாராவது இருந்தா காட்டுங்கோ ????
///காதலின் தொடக்கமான காமம் பற்றிய ஆசை தீர்ந்த பின்னர் ஒருவர் மீது இன்னொருவருக்கு உண்டாகும் அன்பிருக்கிறதே. அது தான் உண்மைக் காதலாகப் பரிணாமம் பெறுகின்றது. /// இது உண்மை தான், உடலாசை தீர்ந்தா பிறகு தொடர்ந்தும் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பே உண்மையானது.
////காலச் சுழற்சியில் ‘முறிகண்டிப் பிள்ளையாருக்கு அருகே, புதிதாக ஊருக்கு இடம் பெயர்ந்து மன்னாரிலிருந்து வந்த ஷாமலியை மனம் அடையாளம் கண்டு கொண்டது. //// சாதுரியாவும் முதலாவது இல்ல, அவளுக்கு முதலே நேமிசா எண்ட பெண்ணையும் இந்தாள் செட்டப் பண்ணியிருக்கார் என்பதை இவ்விடத்தில் கூற கடமைப்பட்டுள்ளேன்.............. ஹிஹி
மாப்பூ நீ சிவப்பு ரோஜாக்கள் கமலைவிட மோசமானவன் போல காதல்கிளிகள் தேடியோடும் காளை! குரள் வேற விளக்கத்துடன் !முதலில் பிரியவதனா இப்ப சாதுரிகா ஐயோ ராமா நிரூபனைக் காப்பாத்து!
சுவாரசியமாக நகரும் பதிவு தமிழின் புலமையை பறைசாற்றுகின்றது நாற்று!
இப்படி எல்லாம் எழுதுவதற்கு உங்களால் மட்டும்தான் முடியும் நண்பா!
உடல்கவர்ச்சியில் வரும் காதல் ஒரு ஈர்ப்பு மட்டுமே உள்ளன்பும் புரிந்துணர்வுமே சரியான காதலாக இருக்கும் காமத்தைத் தாண்டிய உறவிலே காதல் உயிர் வாழ்கின்றது.
கடைசியில் முருகண்டிப்பிள்ளையார் கடலைக்கடை போட்டு காதலித்த பலருக்கு வழிவிட்டவர் தனக்கு மட்டும் இன்னும் தேடுகின்றார் ஒருத்தியை!
சேரன்குளிர்களி மறந்து போன சில நினைவுகளை தட்டிவிடுகின்றது சகோ ! காலமாற்றம் பலதை விட்டுச் செல்கின்றது !
உள்ளதை உள்ளபடியே உரைக்கும் கண்ணாடிப் பதிவு.
காதலின் ஆரம்பம் காமமே..ஆனால் முடிவும் காமம் ஆனால் அது காதல் அல்ல!
போரின் கொடுமையை தொடர்ந்து முன்வைக்கும் நிரூவிற்கு ஒரு சல்யூட்!
பதிவின் லேபிள் ‘அனுபவம்’ ’புனைவு’-ன்னு ரெண்டும் காட்டுதே...எப்படி?
நிரூ....இப்பத்தான் இரண்டு பதிவும் வாசிச்சேன்.முறிகண்டிப் பிள்ளையார்தான் துணை !
அழகிய ரசனை மிகுந்த படைப்பு . படிக்க படிக்க சுவாரசியம் தருகிறது .
அருமையாகக் கதை எழுதுறீங்க நிரூபன்.
//கண் இமைக்கும் நேரமதில் நான் தூக்கியெறியப்பட்டேன். சாதுரிகா.............
எங்கே என்று கண்களால் தேடி அறிய முடியாத அளவிற்கு, புகை மூட்டத்தினுள் மறைந்திருந்தாள்.
மெதுவாய் அடியெடுத்து அவள் அருகே சென்று பார்த்த போது,
அவள் என்னை மறந்தும், இவ் உலகை மறந்தும் பறந்து சென்றிருந்தாள்.//
இப்படி ஒரு உண்மைச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்தது அறிந்திருப்பீங்களோ தெரியவில்லை. 8 வருடமாக லவ் பண்ணி, பெற்றோர் சம்மதிக்காமையால், நண்பர்கள் துணையோடு தாலிகட்டிக்கொண்டு மணக்கோலத்தோடு வீட்டுக்குள் வந்து ஏற, பொம்பர் குண்டு போட்டதாம்... கணவர் அதிலேயே சரி. மனைவி தப்பினா, பின் வெளிநாட்டுக்குப் போயிருப்பதாக செய்தியில் வந்தது.
இது உண்மையா..........என்னா ஒரு கதை...குறள் எல்லாருக்கும் முக்கியம்..காதலில் தோர்தவர்களுக்கு..
எனது கனா.................
>>ஒரு பெண்ணால் வருகின்ற அல்லது வளர்ந்த நோய்க்கு; பெண்ணே மருந்தாக இருக்கின்றாள்.
aahaa ஆஹா . என்னமா சிந்திக்கறீங்க நிரூபன்.. திருக்குறள் வரியை கதைக்கு முத்தாய்ப்பான வரியா கொண்டு வந்த விதம் அழகு
நல்ல பதிவு...வாழ்த்துக்கள் ...
ஒரு பெண்ணால் வருகின்ற அல்லது வளர்ந்த நோய்க்கு; பெண்ணே மருந்தாக இருக்கின்றாள்//
அடடடடடா அருமை அருமை நிரூபன்...!!!!
ஒரு பெண்ணால் வருகின்ற அல்லது வளர்ந்த நோய்க்கு; பெண்ணே மருந்தாக இருக்கின்றாள்//
அடடடடடா அருமை அருமை நிரூபன்...!!!!
@செங்கோவி
பதிவின் லேபிள் ‘அனுபவம்’ ’புனைவு’-ன்னு ரெண்டும் காட்டுதே...எப்படி?//
மச்சி, ஓ....அதுவா, அனுபவத்தில் கொஞ்சம் புனைவு கலந்திருப்பதாக எழுதினேன். அத்தோடு தமிழ்மணத்தில் உப பிரிவின் கீழ் வர வேண்டும் என்பதற்காகவும் சேர்த்திருந்தேன்.
ஹா...ஹா...
naan schoolla irukken niru..
appuram padichchuttu virivaa comment poduren..
நல்ல சுவாரஸ்யமாக உள்ளது ....
அருமையான தொடர்
அருமை! அண்ணன் பெரிய ஆள்தான் போல!
நாமளும் இருக்கோம் வேஸ்டா! :-)
நன்றாக உள்ளது
காதலால் தான் எல்லாமே, காதலால் தான் வாழ்க்கையும், காதலால் தான் காமமும். காமத்தால் காதல் அல்ல, இது எனது கருத்து. . . நன்றி நிரூ. . .
//ஒவ்வொரு மனிதர்களும், தமக்கான உடல் பசி ஆரம்பிக்கும் போது, பெண்மைக்குள் என்ன இருக்கின்றது என அறிய முற்படுகின்ற போது- ஒரு அழகிய பெண்ணின் முன்னழகுகள் கண்களுக்கு கம்பீரம் கொடுக்கின்ற போது தான்;
அந்தப் பெண் மீது இரு ஈர்ப்பினை வரவைத்து, அவளை அடைய வேண்டும் எனும் ஆவலில் காதலிக்கத் தொடங்குகிறான்.
இது தான் காதல் என்ற நாகரிக வார்த்தை கொண்டு பேசப்படும், காமம்.//
சரிதான்! இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு மனிதன் குகையில் வசித்த காலத்திலிருந்து நாளாவட்டத்தில் சற்றே கண்ணியம் பெற்று, மென்மையைக் குழைத்து, மொழியில்லாத காலத்திலிருந்து கவிதையெழுதுகிற சமகாலம் வரை நிகழ்ந்து கொண்டிருக்கிற பரிணாம வளர்ச்சி!
நன்றாக இருக்கிறது சகோதரம்!
தலைப்பே பல ஆயிரம் கதை சொல்கிறதே
உளவு ரீதியான
உணர்வுப் பதிவு
காதலொன்றும் காமமில்லை
காமமென்றால் காதலில்லை.....
அருமை. அருமை...
வாசிக்க வாசிக்க ஏதோ செய்யுது வார்த்தையே வரமாட்டேன் என்குது
சேரன் குளிர்களி எண்டவுடன் செந்தமிழ் மண் வாசனையை அனுபவிக்கலாம் எண்டு பார்த்தா அடுத்ததா ஆசுப்பத்திரி ஐஸ்கிரீம் எண்டு போட்டு ஏமாதிட்டின்களே பாஸ்
ஒரு குறளே ஒரு பக்கத்தை விளக்கி விட்டது.
உண்மையை இப்படி போட்டு உடைக்க கூடாது நண்பா...
ஆயிரம் விகாரங்கள் மனதிற்குள் உண்டு
அதை அடக்க தெரிந்தவர்கள் நல்லவர்களாக வாழ்கிறார்கள். மற்றவர்கள் கெட்டவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள்..
////மனித உடலில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற நோய்களுக்கு மருந்துப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பெண்ணால் வருகின்ற அல்லது வளர்ந்த நோய்க்கு; பெண்ணே மருந்தாக இருக்கின்றாள். ////
பாஸ்...! இதுதான் விசயமே. கலக்கலா இருக்கு.
வாழ்த்துக்கள் நிரூபன்!
காதலின் தொடக்கமான காமம் பற்றிய ஆசை தீர்ந்த பின்னர் ஒருவர் மீது இன்னொருவருக்கு உண்டாகும் அன்பிருக்கிறதே. அது தான் உண்மைக் காதலாகப் பரிணாமம் பெறுகின்றது. அருமை! அருமை!!
உங்கள் பதிவை படித்ததும் ....வைரமுத்துவின் ஆயுத எழுத்து பட பாடல் ஞாபகம் வந்தது
நீ முத்த பார்வை பார்த்தால் போதும் என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தான் மழை மேகம் எனக்கு
என் ஹர்மொனே நதியில் வெல்ல பெறுக்கு
பாசாங்கு இனி நமக்கு எதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு
இதை எழுத பெரிய உழைப்பு தேவை பட்டு இருக்குமே ..
வாழ்த்துக்கள் நண்பா
காதல் கிரிடம்
சூட்டிய
காதல் மன்னன்
சகோ நிரூபன்
வணக்கம்
அருமையான பதிவு
அசத்தலான கருத்துக்கள்
மகுடம் வைத்தாற் போல்
வள்ளுவனை எடுத்தாண்ட
விதம்
வியப்பு
வியாபம்
வித்தியாசம்
வித்தகம்
அப்பாடா! எப்படி நான் வர்ணிப்பேன்.>>>>
வர்ணித்து விட்டு எப்படி வர்ணிப்பேன் என சொல்கிறீர்களே சகோ?
அவளுக்குமான தேடல்- காதல் உடல் சார்ந்த பசியிலிருந்தே ஆரம்பித்தது>>>>
ரைட்டு சகோ...பலரும் இப்படித்தான் சகோ.
அவள் என்னை மறந்தும், இவ் உலகை மறந்தும் பறந்து சென்றிருந்தாள். >>>
அப்போது என் காதலும் அவளுடன்பறந்து சென்றது.
ஷாமலியை என் காதலியாக்க வேண்டுமெனும் நோக்கோடு>>>>>
ஆகா...ஆகா.. சகோ ஒரு மார்க்கமா இருக்கிறீரே? காதல் வாழ்க சகோ
//’’மனதைத் திறந்து காதல் வயப்பட்ட ஆடவர்கள் யாராவது சொல்லட்டும் பார்ப்போம்.
‘’அவள் மீதான உடற் பசியைக் கொண்டு என் காதல் எழுதப்படவில்லை என்று?
உடல் என்ற வனப்பினை அடையாளமாக்கித் தான் காதல் என்ற வர்ணம் பூசப்பட்ட்டு, காமம் எனும் புணர்தலுக்கான மேடையில் காதல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.//
என்னால் உங்களுடன் உடன்பட முடியவில்லை நிரூ!காதலைப் பற்றிய என் பார்வை வேறு!(அனுபவம்?!)
ஹேமா ஏனுங்க பிள்ளையாரை துணைக்கு கூப்பிடுகிறீர்கள்.. அவரே இன்னும் ஒரு பிகர் மாட்டாம தனிச்சுப்போய் இருக்கிறார்.. !??
மாப்பிள நீ ஜாமாய்டா..!? காட்டானால் பெருமூச்சிடதான் முடியும்...
காட்டான் குழ போட்டான்...
ரொம்ப சிந்திக்கிறீர்கள் சகோ! கலக்குங்க!
காமத்தின் போர்வைதான் காதல்
kathal yogi yogi...kathal yogi yogi..yogi yogi yogi yogi..kathal yogi kathal yogi...
kathal enum then kudithaal
paithiyam pidikkum
kathal then ennai kudithaal enna thaan nadakkum
bothai thanthu theliya seithu gnaanam tharuvathu kaathal thaan...
saathuriga vukku get out...
shaamilikku cut out ah?
nadathunga nadathunga
////உடல் என்ற வனப்பினை அடையாளமாக்கித் தான் காதல் என்ற வர்ணம் பூசப்பட்ட்டு, காமம் எனும் புணர்தலுக்கான மேடையில் காதல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.//////
செம செம......
// ஒரு பெண்ணால் வருகின்ற அல்லது வளர்ந்த நோய்க்கு; பெண்ணே மருந்தாக இருக்கின்றாள். //
semma!!!! செம்ம பதிவு சார்!!!
அவள் நினைவுகளோடு சில காலம் அலைந்தேன்... உண்மையான நேசம் மற்றதெல்லாம் மாயை....
சூப்பர் பாஸ்!!
அப்புறமா நம்ம வலை பதிவு நண்பர்களுக்காக ஒரு நியூஸ்
<< Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க
/////சாதுரிகாவை விட இவள், இன்னும்......................அழகாக இருக்கிறாளே என சிந்தையில் ஞானம் உதிக்க, ஷாமலியை என் காதலியாக்க வேண்டுமெனும் நோக்கோடு பின் தொடர்ந்து, விரட்டி விரட்டிக் காதலிக்கும் தொழிலில் இறங்கினேன்/////
உங்கள் வாக்கு மூலம் நீதி மன்றத்தால் எற்றுக் கொள்ளப்படகிறது... அடுத்த தவணையில் சந்திப்போமாக..
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ!
Post a Comment