*************************************************************************************
’ஹலோ....யாரு பேசுறது? எனக் கேட்டவாறு தனது டாப்போ டீப்போ தொலைபேசியினைக் காதில் வைத்தார் குணா.
’’ஆய், அப்பா, நான் வர்ஷி பேசுறேன். எப்படி இருக்கிறீங்க அப்பா. என மறு முனையில் குணாவின் ஆசை மகள் வர்ஷி தொடர்ந்தார்.
’’நான் இருக்கேன்டா செல்லம், வூட்டிலை அம்மா எப்படி இருக்கிறா. நீ சாப்பிட்டியா..எனக் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போன வர்ஷியிடமிருந்து, இப்படி ஒரு கேள்வி திடீரென்று புற்றீசல் போல வருமென்று பதிவர் குணா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
‘அப்பா குளிச்சீங்களாப்பா.....
பதிவர் தன்னை யாரோ திருப்பாச்சி அருவாள் கொண்டு வெட்டுவதற்குப் பதிலாக, நடு ரோட்டில் நிற்க வைத்து டவுசரை உருவுவது போன்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டார். ’’ச்சே....என் மகளா என்னைப் பார்த்து இப்படிக் கேட்டிருக்கிறாள்.
’’என்ரை செல்லமெல்லே, என் டாடிச் செல்லக் குட்டியெல்லே. உங்களுக்கு அப்பா ஊருக்கு வரும் போது அமெரிக்கன் மிலிட்டரி லப்டாப்பும், ஐஸ்லாந் மேட் இன் ஐ பாட்டும் வாங்கிட்டு வாரேன்’ என்று குணா கதையினை வேறு பக்கம் திருப்ப முனைந்தார்.
ஆனாலும் ஐந்து வயதான சுட்டி வர்ஷி, ’’அப்பா ஐஸ்லாந்திலை எங்கப்பா ஐ பாட் செய்வாங்க. நீங்க நல்லாத் தான் ரீலு வுடுறீங்க. நான் என்ன சின்னப் புள்ள என்றா நெனைச்சீங்க. நான் இப்போ பெரிய பொண்ணு. என்னை ஏமாத்துற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க. என்னை ஏமாத்தனும் என்று நெனைச்சீங்க. நீங்க குளிக்காத மேட்டரைப் புதுசா ஒரு ப்ளாக் தொடங்கி எழுதிடுவேன் ஜாக்கிரதை’ என்று வர்ஷி பேசியதும் தான் தாமதம்,
‘’செல்லம் அம்மாகிட்டப் போனைக் குடுக்கிறீங்களா. நான் பேசனும், என்றவாறு அந்தக் குழந்தையின் விருப்பமின்றியே போனை மனைவி ஷீலாவின் கைகளுக்கு மாற்றினார் குணா.
‘என்னங்க எப்படி இருக்கிறீங்க. சாப்பிட்டீங்களா... அப்புறம் குளிச்சீங்களா? என மனைவி ஷீலாவிடமிருந்து வந்த கேள்விகளால் கடுப்படைந்த குணா, ‘உனக்கென்ன நேர காலம் தெரியாதா?
இப்போ காலங்காத்தாலை தான் எந்திருக்கேன். நீ வேறை போனைப் பண்ணுறாய்? என்னோடை ஆசை மனைவியெல்லே,
நான் கேட்கிறேன் என்று கோவிச்சுக்காதே?
‘இப்போவெல்லாம் நான் குளிக்கிறேல்லை என்ற சேதியை யார் உனக்குச் சொன்னது? மெதுவாச் சொல்லு பார்க்கலாம்.... எனக் கெஞ்சலுடன் கேட்டார் குணா.
’’என்னங்க ஒரு பெரிய பொய்யை விடுறீங்க. நீங்க இப்ப மட்டும் தான் குளிப்பதில்லை என்று?ஊரிலுருந்து அரபு நாட்டிற்குப் போகும் போது குளிச்சதுக்கு இப்ப வரைக்கும் நீங்க குளிக்கலை என்று ப்ளாக்கிலை வேறு அரேபியாவில் இருந்து எழுதியிருக்கிறாங்க. ஊருக்கே தெரிஞ்ச விசயம், உங்க பெண்டாட்டி எனக்குத் தெரியாமலா இருக்கும்?
’அடிப் பாவி ஷீலா, நீ ப்ளாக் எல்லாம் படிப்பியா?
’’ப்ளாக் எல்லாம் படிப்பேனா? சமையல் முடிஞ்சாப் பிறகு எனக்கு என்ன வேலை?
ப்ளாக் படிப்பது தானே. ப்ளாக் படிக்கலைன்னா, நீங்க இந்தியாவை விட்டு 2009ம் ஆண்டு கிளம்பியதிலிருந்து இற்றை வரை குளிக்காமல் நாற நாற ‘அரபு நாட்டு அஸ்கி ஜாஸ்மீன் பெர்ஃபியூமை அடிச்சுக் கொண்டு வேலைக்குப் போய் வாற கதை எனக்குத் தெரிஞ்சிருக்குமா சொல்லுங்க.
பதிவர் நிலை தடுமாறிப் போனார். இதற்கு மேலும் பேசினால், தன் ஒட்டு மொத்த மானத்தையும் தனது ஆசை மனைவி ஷீலாவே கப்பலேற்றி விடுவாள் என்பதால், ’நான் இப்போ அவசரமாக டாய்லெட்டுக்குப் போகனும்’ எனக் கூறிப் பேச்சை மாற்றினார். குணா ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். ஒரு மனிதன் குளிக்கவில்லை என்பதையுமா ப்ளாக்கில் எழுதி நாறடிப்பாங்க. ’முதல்ல இப்போ அரேபியாவில் இருந்து என் வாழ்கையில் கலியை(துன்பத்தை) உண்டாக்கிய அந்த கலியுகம் பதிவரைத் தேடிப் பிடிக்கனும்.
’பயங்கர வீக்கிலிக்ஸ் ஆளா இருப்பானோ அந்தக் கலியுகம் பையன்?
’பின்னே நான் ஒருத்தன் குளிக்காமல் என்ன பாடி ஸ்பிரே யூஸ் பண்ணிக் கொண்டு இங்கே இருக்கேன் என்பதை மோந்து பிடித்து மானத்தைக் கப்பலேற்றியிருக்கிறான். அவன் மட்டும் என் கையில் கிடைக்கனும், செத்தான் அவன்’ எனக் கோப மிகுதியால் அரபி ஒருவன் சியேர்ஸ் சொல்லி தேநீர் குடிக்க கொடுத்த அழகிய மார்பிள் கிளாஸை உடைத்தெறிந்தார்.
அவசர அவசரமாக டாய்லெட்டுக்குப் போயிட்டு, வந்த பின்னர், குணா வேலைக்கு கிளம்பினார். அவர் வேலை செய்யும் இடத்தில் தன் பதவிக்குப் பதிலாக மாட்டி வைத்திருக்கும் வசனமான
‘அரபு நாட்டில் தண்ணீர் பஞ்சம்
ஐயா குளிக்கலைன்னா வாட்டர் பில் மிஞ்சும்!
எனும் வசனத்தையும் யாராச்சும் பார்த்துப் போட்டோ புடிச்சு ப்ளாக்கில் போட்டிட்டால், ஊருக்குப் போய் ஏர் போட்டில் இறங்கும் போது தண்ணி பவுசரோடு ஒரு குழு நம்மளைக் குளிப்பாட்டும் நோக்கோடு காத்திருப்பாங்க எனும் நினைப்பில், மேற்படி வசனம் எழுதிய போர்ட்டை முறித்துக் குப்பையில் போட்டார் குணா.
இன்று மாலை எப்படியாச்சும் அரபியிடம் பேசி, ஊருக்குப் போவதற்கான லீவினை உறுதிப்படுத்த வேண்டும் எனக் காத்திருந்த குணாவிற்கு, அரபியே ஒன்றரை மாத விடு முறையோடு, மும்பையின் புகழ் பூத்த அரபுக் கடலில் நீராடி மகிழ்வதற்கும், அழகிகள் மசாஜ் செய்வதற்கென புக் பண்ணப்பட்ட பவுச்சரையும்(Voucher) குணாவின் கையில் கொடுத்தார். இதனால் அளவில்லா மகிழ்ச்சியடைந்த குணா, தான் ஊருக்குப் போவதற்குரிய நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.
ஊருக்குப் போகும் காலத்தில் ஈரோட்டில் ஒரு பதிவர் சந்திப்பு இடம் பெறவுள்ள தகவலும் குணாவின் காதுகளுக்கு எட்டியது. எப்படியாவது பாரத மண்ணில் கால் வைத்து, அங்கேயுள்ள அரபுக் கடலில் குளித்து, பதிவர் சந்திப்பிற்கு கம கமெவென்று வாசனை வீச, அனைத்துப் பதிவர்களும் தான் நடக்கும் போது தன் உடல் வாசனையினை நுகர்ந்து பார்த்து வியப்படைய வேண்டும் எனும் எண்ணங்கள் மனத் திரையில் ஓடிக் கொண்டிருக்க, அரபி கொடுத்த மசாஜ்- குளியல் வவுச்சரைத் தன் சேர்ட் பாக்கட்டினுள் வைத்தவாறு, நடந்து சென்ற குணாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தண்ணீரில் குணாவிற்கு உள்ள கண்டத்தை உறுதி செய்வது போல, எங்கிருந்தோ வீசிய பாலைவனப் புழுதிப் புயல், குணாவின் பாக்கட்டினுள் இருந்த அந்த வவுச்சரையும் தன்னோடு காவிச் சென்று விட்டது. குணா, ’சரி, நாம குளிப்பது கூட அரபு தேசப் பாலைவன புழுதிப் புயலுக்கும் புடிக்கலை’ எனத் தன் மனதைத் தேற்றிக் கொண்டார். ’அட, இந்த வவுச்சர் போனால் என்ன, நான் நாகர்கோயிலிலும், குற்றாலத்திலும் எப்படியோ குளிக்கத் தானே போறேன் எனத் தன் மனதைத் திடப்படுத்தியவாறு, பயணத்திற்குரிய ஆடைகளைப் பொதி செய்து, தன் பயண நாளுக்காக காத்திருந்தார் குணா.
அரபு தேசத்திற்கு விடை கொடுத்து, இந்திய மண்ணினுள் காலடி எடுத்து வைத்த குணா, நேரடியாக நாகர்கோயிலிற்குச் சென்றால், தன் உடலில் இருந்து வெளிப்படும் குளிக்காத அழுக்கு நாற்றத்தினால் தன்னை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் புறக்கணிப்பார்களே எனக் கருதி மும்பை ஏர்போர்ட்டில் இறங்கினார். ஏர்போட்டில் இறங்கி வெளியே வந்ததும் தான் குணாவிற்கு இப்போது இந்தியாவில் கத்தரி வெய்யில் எனும் நினைப்பு வெளியே வந்தது.
அடடா, உடம்பெல்லாம் வியர்க்கப் போகிறதே, என்ன பண்ணலாம் என யோசித்தவருக்கு, தெருவோரத்தில் இருந்த ஐஸ்கட்டி வியாபாரி கண்ணில் தென் பட்டார். மூன்று கிலோ ஐஸ்கட்டிப் பையினை வாங்கித் தான் போகும் வழியெங்கும், தன் உடல் மீது கொட்டிக் கொண்டு நடந்தார் குணா. மும்பையிலிருந்து புகை வண்டி மூலமாக நாகர்கோயிலுக்கு வரும் வரைக்கும்,
அஸ்மி ஜாஸ்மீன் பாடி ஸ்பிரேயை அரை மணி நேரத்திற்கொரு தரம் அடித்துக் கொண்டே வந்தார் குணா.
நாகர்கோயிலில் வரவேற்க ஆவலோடு காத்திருக்கும் தனது மனைவி ஷீலாவும், மகள் வர்ஷியும் ஓடோடி வந்து ஆவலுடன் குணாவை இறுக்கி அணைத்து மகிழுவார்கள் என நினைத்த குணாவிற்கு ஏமாற்றத்துடன் கூடிய அவமானம் தான் கிடைத்தது. ‘நீயெல்லாம் குளிக்காமல் இருக்கிறியே அப்பா, உனக்கு வெட்கமா இல்லே?
பாடி ஸ்பிரே வைச்சு அடிச்சுக் கொண்டு திரியுறியே...உனக்கு இது அவமானமா இல்லே...எனும் மகள் வர்ஷியின் கேள்விகள் குணாவின் அடி மனதை வெகுவாகப் பாதித்தது.
’எல்லோரும் ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க’. நான் குற்றாலத்தில் போய் குளிக்கிறேன்’ எனச் சொல்லி விட்டு, குற்றாலத்தில் இடம் பெறும் பதிவர் சந்திப்பிற்குத் தன்னைத் தயார்படுத்த தொடங்கினார் குணா.
‘தன் உடம்பெங்கும் நறுமணம் கம கம என்று வீசும் வண்ணம் அஸ்மி ஜாஸ்மீன் அரபு ஸ்பெசல் பாடி ஸ்பிரேயை அடித்துக் கொண்டு சென்ற குணாவைக் கண்ட ஏனைய பதிவர்கள் முகத்தைச் சுழிக்கத் தொடங்கினார்கள். சந்திப்பில் இருந்த ஒரு பெண் பதிவர் ‘ஓடோடிச் சென்று வாந்தியெடுப்பதற்காக வெளியே போனதும்’ இனியும் பொறுத்தல் அழகில்லை எனப் பொங்கியெழுந்த ஆப்பிசர் சங்கரன்,
குணாவிடம் தனிப்பட்ட முறையில் பேசி, குளிப்பதற்குரிய சம்மதத்தை வாங்கினார்.
தனக்கு முன்னே நடிகை குளிக்கும் காட்சி காண்பிக்கப்பட்டால் தான் குளிப்பேன் என அடம்பிடித்தார் குணா. எந்த நடிகையின் காட்சி என்று தெரியாததால், அரங்கில் இருந்த அனைவரும் குழம்பி விட்டார்கள். இறுதியில் அந்த நடிகை என்று குணா சொல்ல, ஆப்பிசர் அந்த நடிகையின் குளு குளியல் கட் அவுட்டினைத் தாயார் செய்து, குற்றாலத்திற்குப் போகும் வண்டியில் அனுப்பி வைத்தார் ஆப்பிசர் சங்கரன்.
குணா பலரது பெரும் முயற்சிகளின் பின்னர், குற்றாலத்தில் குளிப்பதற்குத் தயாரானார். குற்றாலத்திற்குப் போகும் வழியில் குணாவுடன் கூடச் சென்ற விஸ்வா, ’’ஏன் குணா அண்ணே, நீங்க குளிப்பதில்லை, ஏன் குணா அண்ணே உங்களுக்கு தண்ணியென்றால் பயம்...என குணாவின் பொறுமையினைச் சோதிக்கும் வகையில் அடுக்கடுக்காக கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தார். வேறு வழியின்றிக் குணா தன் நினைவுகளை மீட்டத் தொடங்கினார்.
’’ஓ....அதுவா...அரேபியாவிற்குப் போக முன்னாடி, ஒருவாட்டி நாகர்கோயிலில் ஆற்றில் நண்பர்களோடு, இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு குளிச்சிக்கிட்டிருந்தேன். திடீரென என் இடுப்பில் இருந்த சிறு துண்டும் ஆற்றுத் தண்ணீரோடு சேர்ந்து போய் விட்டது. அப்புறம் எப்பூடி நான் ஆற்றில் இருந்து வெளியேறுவது. என் நண்பர்களுக்கு மேட்டர் என்னான்னு தெரியாமல், என்னைக் கரையேறச் சொல்லிக் கேட்டாங்க. ஆனால் உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் எப்படிக் கரையேற முடியும்? ஆதலால், நண்பர்கள் வூட்டுக்குப் போனதுக்கப்புறம் நான் வெளியே வந்து துணி மாத்திக்கலாம் என்று இருந்தப்போ,
யாரோ ஒருத்தன் ‘நாஞ்சில் குணா ஆற்றுக்குள்ளே சாதனை செய்யுறான் என்று தகவல் கொடுத்து விட, ஊரிலை உள்ள மீடியாகாரங்க, பத்திரைக்காரங்க எல்லோருமே ஆற்றைச் சுற்றிக் கூடிட்டாங்க. வேறு வழி?
தண்ணிக்குள்ளே நின்றே ஒரு பேட்டி கொடுத்தேன். இந்தக் கருமாந்திரத்தை சன் டீவி வேறு லைவ் டெலிக்காஸ்ட் பண்ணப் போறதா பர்மிஷன் கேட்டிச்சு. நான் தான் கடைசி நேரத்திலை உணமையைச் சொல்லி, உலக அளவில் நான் பேமஸ் ஆக கிடைச்ச சந்தர்ப்பத்தை கெடுத்திட்டேன். என கண்களில் கண்ணீர் மல்க தன் சோக கதையினக் கூறி முடித்தார் குணா.
இவ்ளோ பெரிய கதையை குணா சொல்லி முடித்துப் பக்கத்தில் இருந்த விஸ்வாவைத் திரும்பிப் பார்த்தார். அவன் அரைத் தூக்கத்தில் சீத்துவாயினை அருகே இருந்த பதிவர் செந்தில் மீது ஊற்றிக் கொண்டிருந்தான். சே...கறுமம் கறுமம்.........என்று குணா கத்தவும், குற்றாலம் இறக்கம் என டிரைவர் சொல்லவும் சரியான டைம்மிங்காக அமைந்தது. குற்றாலத்தில் நடிகையின் கட் அவுட்டினை வைத்துப் பதிவரைக் குளிப்பாட்ட அனைவரும் ரெடியாகிய வேளை ஆப்பிசர் சங்கரன் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டார்.
‘ஏம்பா, விஸ்வா இந்தக் குற்றாலம் அருவித் தண்ணியிலை கலப்படம் ஏதுமிருக்கா என்று குளிக்க முன்னாடி செக் பண்ணினியா?
நான் ஜிஸ்கி புஸ்கா என்று ஒரு மிசின் தந்தேனே அதை வைச்சு, ஒருவாட்டி குற்றாலம் அருவியில் கலப்படம் ஏதாச்சும் இருக்கா என்று செக் பண்ண முடியுமா? என விஸ்வாவிற்கு கடுப்பேற்றிக் கொண்டிருந்தார் ஆப்பிசர்?
‘ஆப்பிசர், அருவித் தண்ணியிலை எப்பூடிக் கலப்படம் இருக்கும்? என்ன என் கூட விளையாடுறீங்களா? என்னை என்ன லூசென்று நினைச்சீங்களா? என விஸ்வா கோபப்பட்டார்,
ஆப்பிசர் மறு முனையில் போடாங்......’தண்ணியிலை அந்த தண்ணி கலந்திருக்கா என்று செக் பண்ணடா......ராஸ்கல்’ என்று பேசிவிட்டு போனைக் கட் பண்ணினார்.
பலத்த சிரமங்களின் பின்னர், இரண்டு வருடங்களாக குளிக்காத ஒருவரைக் குளிக்கச் செய்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் செந்திலும், விஸ்வாவும் துள்ளிக் குதித்தனர். குற்றாலப் பயணம் நிறைவுற்ற பின்னர், குணாவுக்கு தண்ணி மீதிருந்த கண்டமெல்லாம் நீங்கி விட்டது போலும், இப்போது ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் அருவி என அளவற்ற மகிழ்ச்சியோடு நீராடி மகிழ்கிறார்.
கடந்த வாரம், குணாவுவிற்கு அலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டிருந்தேன். ‘ஹலோ குணா அண்ணாவோடு பேச முடியுமா? எனக் குரல் கொடுத்த எனக்கு, மறு முனையில் ஒரு மழலைக் குரல் கேட்டது.
‘நான் வர்ஷி பேசுறேன். அப்பா இப்போ குளிக்கிறார்’ அப்புறமா போன் பண்றீங்களா’.
’ஓக்கே நான் அப்புறமா போன் பண்றேன்’ எனச் சொல்லி விட்டு, அழைப்பினைத் துண்டித்து விட்டு, ஒரு கணம் குணாவினை நினைத்து மனதினுள் சிரித்தேன்!
யாவும் கற்பனையே............
பிற்சேர்க்கை: வழமை போல இப் பதிவிற்கும் படங்களினைத் தன் கை வண்ணத்தால் கலக்கலாக வடிவமைத்தவர் சகோதரன் நிகழ்வுகள் வலைப்பதிவு ஓனர் கந்தசாமி.
|
97 Comments:
ஹா..ஹா..இப்படிச் சிரிச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு..கலக்கிட்டீங்க.
படங்கள் தயாரித்த கந்துவும் பிரித்து மேய்ந்துவிடார்.
//நீர் நிலைகளில் திவ்ய தரிசனம் செய்யும் பதிவருக்கும், இச் சிறுகதைக்கும் யாராவது தொடர்பிருக்கென்று கருதினால். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.// ஆமாம், ஆமாம்..அந்தப் பதிவர் அண்ணனே முழுப் பொறுப்பு.
//‘எப்படி இருக்கிறீங்க. சாப்பிட்டீங்களா... அப்புறம் குளிச்சீங்களா? // எவ்வளவு பெரிய பேட் வேர்ட்!!!
//லீவினை உறுதிப்படுத்த வேண்டும் எனக் காத்திருந்த குணாவிற்கு, அரபியே ஒன்றரை மாத விடு முறையோடு, // இதுக்கு மேல தாங்காதுன்னு முடிவு பண்ணீட்டாரோ.
//அரபு தேசத்திற்கு விடை கொடுத்து, இந்திய மண்ணினுள் காலடி எடுத்து வைத்த குணா, // விடை கொடுத்தாரா...விடுதலை கொடுத்தாரா?
//ஆப்பிசர் அந்த நடிகையின் குளு குளியல் கட் அவுட்டினைத் தாயார் செய்து, குற்றாலத்திற்குப் போகும் வண்டியில் அனுப்பி வைத்தார் ஆப்பிசர் சங்கரன். // ஆஹா..ஆஃபீசரும் உங்க கிட்ட மாட்டிக்கிட்டாரா?
//அப்புறம் எப்பூடி நான் ஆற்றில் இருந்து வெளியேறுவது. என் நண்பர்களுக்கு மேட்டர் என்னான்னு தெரியாமல், என்னைக் கரையேறச் சொல்லிக் கேட்டாங்க. // அண்ணன் கரை ஏறி இருந்தா, மேட்டர் தெரிஞ்சிருக்கும்.
//ஏம்பா, விஸ்வா இந்தக் குற்றாலம் அருவித் தண்ணியிலை கலப்படம் ஏதுமிருக்கா என்று குளிக்க முன்னாடி செக் பண்ணினியா?// அண்ணனை அங்க குளிக்க அனுப்புனதை விடவா, பெரிய கலப்படம் அங்க இருந்திடப் போகுது?
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆஃபீசரைத் தேடலியா?
மனோ மாஸ்டர் நாளை அருவாளோட வரப்போராரு, மொத வெட்டு உங்களுக்கா எனக்கா எண்டு ஜோசிச்சுக்கொண்டு இருக்கிறன்..)))
///’’என்னங்க ஒரு பெரிய பொய்யை விடுறீங்க. நீங்க இப்ப மட்டும் தான் குளிப்பதில்லை என்று?ஊரிலுருந்து அரபு நாட்டிற்குப் போகும் போது குளிச்சதுக்கு இப்ப வரைக்கும் நீங்க குளிக்கலை என்று ப்ளாக்கிலை வேறு அரேபியாவில் இருந்து எழுதியிருக்கிறாங்க. ஊருக்கே தெரிஞ்ச விசயம், உங்க பெண்டாட்டி எனக்குத் தெரியாமலா இருக்கும்?///சேம் சேம் பப்பி சேம் ...
///அவன் மட்டும் என் கையில் கிடைக்கனும், செத்தான் அவன்’ எனக் கோப மிகுதியால் அரபி ஒருவன் சியேர்ஸ் சொல்லி தேநீர் குடிக்க கொடுத்த அழகிய மார்பிள் கிளாஸை உடைத்தெறிந்தார்///அரபி சும்மா விட்டிருப்பானா என்ன ??.....பின் நடந்ததை தணிக்கை செய்துவிட்டீர்களோ )))
///தண்ணிக்குள்ளே நின்றே ஒரு பேட்டி கொடுத்தேன். இந்தக் கருமாந்திரத்தை சன் டீவி வேறு லைவ் டெலிக்காஸ்ட் பண்ணப் போறதா பர்மிஷன் கேட்டிச்சு. நான் தான் கடைசி நேரத்திலை உணமையைச் சொல்லி, உலக அளவில் நான் பேமஸ் ஆக கிடைச்ச சந்தர்ப்பத்தை கெடுத்திட்டேன்./// அடடா , இன்னொரு நித்தியானந்தா சாமியை இந்த உலகு தவறவிட்டுவிட்டதே ஹிஹிஹி ...
அரபு நாட்டில் பெட்ரோலை விட ஒரு லிட்டர் தண்ணீர் விலை அதிகமான காரணமா இருந்திருக்கலாம்:)
அட!ஆமாம் குணா மெய்யாலுமே குளிக்கிறார்.அதுவும் கிளு கிளுக்குளியலா இருக்குதே:)
கடைசியில் குணாவைக் குளிக்க வைத்தவர்கள் கெட்டிக்காரர்கள் .
மனோ நாளை வாளுடன் வருவார் நான் இனித்தான் குளிக்கப் போறன் !
நண்பா, நெல்லை பதிவர் சந்திப்பில் நீங்களும் வந்திருந்தீர்களோ கண்ட ஞாபகம்!
பாவம்.
ஏன் நாஞ்சில் மனோவை இந்த பாடு படுத்துகிறீர்கள்?
வாழ்த்துக்கள்.
ஜனரஞ்சகமான குளியல்
ஐயோ பாவம் நாஞ்சில் மனோ
//அறிவிப்பு: அரபு நாட்டில் தண்ணீர் பஞ்சம் எனப் பொய் சொல்லிக் குளிக்காது; தற்போது தமிழகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு தண்ணீர் மேல் உள்ள தன் கண்டத்தினைப் போக்கும் நோக்கில் நீர் நிலைகளில் திவ்ய தரிசனம் செய்யும் பதிவருக்கும், இச் சிறுகதைக்கும் யாராவது தொடர்பிருக்கென்று கருதினால். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
///
ஹிஹிஹி அட நம்மட மாப்பு!!!
//அறிவிப்பு: அரபு நாட்டில் தண்ணீர் பஞ்சம் எனப் பொய் சொல்லிக் குளிக்காது; தற்போது தமிழகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு தண்ணீர் மேல் உள்ள தன் கண்டத்தினைப் போக்கும் நோக்கில் நீர் நிலைகளில் திவ்ய தரிசனம் செய்யும் பதிவருக்கும், இச் சிறுகதைக்கும் யாராவது தொடர்பிருக்கென்று கருதினால். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
///
ஹிஹிஹி அட நம்மட மாப்பு!!!
//‘அப்பா குளிச்சீங்களாப்பா.....//
ஹிஹிஹி நல்ல கேள்வி!
//என்னை ஏமாத்தனும் என்று நெனைச்சீங்க. நீங்க குளிக்காத மேட்டரைப் புதுசா ஒரு ப்ளாக் தொடங்கி எழுதிடுவேன் ஜாக்கிரதை’ என்று வர்ஷி பேசியதும் தான் தாமதம்,//
ஹிஹி மொக்கைன்ன இது மொக்கை!!
//‘என்னங்க எப்படி இருக்கிறீங்க. சாப்பிட்டீங்களா... அப்புறம் குளிச்சீங்களா? என மனைவி ஷீலாவிடமிருந்து வந்த கேள்விகளால் கடுப்படைந்த //
ஹிஹி மறுபடியுமா??அவ்வ்வவ்வ்
//‘என்னங்க எப்படி இருக்கிறீங்க. சாப்பிட்டீங்களா... அப்புறம் குளிச்சீங்களா? என மனைவி ஷீலாவிடமிருந்து வந்த கேள்விகளால் கடுப்படைந்த //
ஹிஹி மறுபடியுமா??அவ்வ்வவ்வ்
//
அடடா, உடம்பெல்லாம் வியர்க்கப் போகிறதே, என்ன பண்ணலாம் என யோசித்தவருக்கு, தெருவோரத்தில் இருந்த ஐஸ்கட்டி வியாபாரி கண்ணில் தென் பட்டார். மூன்று கிலோ ஐஸ்கட்டிப் பையினை வாங்கித் தான் போகும் வழியெங்கும், தன் உடல் மீது கொட்டிக் கொண்டு நடந்தார் //
ஹிஹிஹி என்ன கொடுமை மனோ சார் இது!!
//இறுதியில் அந்த நடிகை என்று குணா சொல்ல, ஆப்பிசர் அந்த நடிகையின் குளு குளியல் கட் அவுட்டினைத் தாயார் செய்து, குற்றாலத்திற்குப் போகும் வண்டியில் அனுப்பி வைத்தார் ஆப்பிசர் சங்கரன்.
/
ஹிஹிஹி அப்புறம் தானா மச்சான் குளிச்சாறு??
சி பி டென்சன் ஆகி இருப்பரே!
//இறுதியில் அந்த நடிகை என்று குணா சொல்ல, ஆப்பிசர் அந்த நடிகையின் குளு குளியல் கட் அவுட்டினைத் தாயார் செய்து, குற்றாலத்திற்குப் போகும் வண்டியில் அனுப்பி வைத்தார் ஆப்பிசர் சங்கரன்.
/
ஹிஹிஹி அப்புறம் தானா மச்சான் குளிச்சாறு??
சி பி டென்சன் ஆகி இருப்பரே!
// யாவும் கற்பனையே............
//
அடச்சீ..இத போட்டு தொலைச்சிட்டீன்களே பாஸ்!
லேப்டாப் மனோ மாட்னான் நிரூபன் கிட்டே ஹா ஹா
leeptaap லேப்டாப் மனோ ராம்சாமிக்கிட்டயும் மாட்டப்போறான்.. நமீதா அவர் ஆள் ஆச்சே?
>FOOD said...
இப்போ ஓட்டு மட்டும். பின்னர் வந்து, கமெண்ட்.
ஆமா.. ஆஃபீசர் பிஸி ஹி ஹி
செம மொக்கை பாஸ்.
நன்றி நன்றி ...மனசை லேசாக்கிய நல்ல நகைச்சுவை ...நன்றி
களத்திற்கு தகுந்த படங்களும் ...சிறப்பு
//‘நான் வர்ஷி பேசுறேன். அப்பா இப்போ குளிக்கிறார்’ அப்புறமா போன் பண்றீங்களா’.
’ஓக்கே நான் அப்புறமா போன் பண்றேன்’ எனச் சொல்லி விட்டு, அழைப்பினைத் துண்டித்து விட்டு, ஒரு கணம் குணாவினை நினைத்து மனதினுள் சிரித்தேன்!//
ஏதோ நல்லது நடந்தா சந்தோஷம்தான்! :-)
//யாவும் கற்பனையே.....//
சும்மா போங்க பாஸ்! அப்புடிச் சொன்னா நாங்க நம்பிடுவமா? :-)
பாவம் மனோ ச்சீ குணா.....!
குளிச்சா நல்லதுன்னு சொல்லி, லேப்டாப்பையும் தண்ணில கழுவிட போறாரு... யாராவது எடுத்துச் சொல்லுங்க...!
//////சி.பி.செந்தில்குமார் said...
leeptaap லேப்டாப் மனோ ராம்சாமிக்கிட்டயும் மாட்டப்போறான்.. நமீதா அவர் ஆள் ஆச்சே?//////
சிபிக்கு என்னே ஒரு பெருந்தன்மை..... என்ன இருந்தாலும் பெரிய மனுசன் பெரிய மனுசன் தான்.... இந்த மாதிரியெல்லாம் சொல்லி சின்னப்பசங்களை சந்தோசப்படுத்துறதுல அவரை யாரும் மிஞ்ச முடியாது.....!
கலக்கல் போட்டோ கந்தசாமிக்கும் ஒரு வாழ்த்துக்கள் அழகான கைவண்ணம்.
///////இறுதியில் அந்த நடிகை என்று குணா சொல்ல, ஆப்பிசர் அந்த நடிகையின் குளு குளியல் கட் அவுட்டினைத் தாயார் செய்து, குற்றாலத்திற்குப் போகும் வண்டியில் அனுப்பி வைத்தார் ஆப்பிசர் சங்கரன்.///////
மீட்டிங் போட்டதுக்கு ஆப்பீசருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்யா.... !
யாவும் கற்பனையே............/////////
ஏண்ணே...?
நமீதா போட்டோவுக்கு பதிலா நாலு எரும போட்டோவ சேர்த்து போட்டு மிக்சிங் பண்ணி இருந்தா சிபி ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாரு... அட நம்ம மனோ சந்தோசப்பட்டிருப்பாரு... நமக்கும் போட்டோவுல வித்தியாசமா எதுவும் தெரிஞ்சிருக்காது?
அப்படியே பொங்குதுங்க.. சிரிப்பு....
ரொம்ப நாளைக்கு பிறகு தங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு...
///////
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யாவும் கற்பனையே............/////////
ஏண்ணே...?//////
ரொம்ப எதிர்பாத்திங்களோ...
//தண்ணீர் மேல் உள்ள தன் கண்டத்தினைப் போக்கும் நோக்கில் நீர் நிலைகளில் திவ்ய தரிசனம் செய்யும் பதிவருக்கும், இச் சிறுகதைக்கும் யாராவது தொடர்பிருக்கென்று கருதினால். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.//
பார்தீங்கதானே மாப்பு உலக பேமஸ் ஆனா உதுதான் பிரச்சனை...!? எனக்கும் அந்த பதிவர தெரியும் மக்கா..! மக்கா..! மக்கா அவற்ற பேர்கூட ம வில தொடங்கி வேண்டாம்ய்யா அடுத்த எழுத்த எழுதினா காட்டானுக்கு கிசுகிசு எழுத வராதெண்டு எல்லாரும் வந்து கும்மியடிச்சு போடுவார்கள் ...!?
ஹா ஹா ஹா
இது குளியல் சிரிப்பு. நல்ல கற்பனை நிரூ.
இந்த நிரூ ஓவரா போறான் அங்க சுத்தி இங்க சுத்தி எங்க அண்ணன் மேலயே கைய வச்சிட்டியா.. எங்கண்ணன் மேல கைய வச்சிட்டு எப்படி உலகத்துல இருந்திடுறேன்னு பார். ஹி ஹி
சிரிப்பு நிக்க மாட்டேங்குது!!பாவம் மனோ,இந்த மாதிரிக் கலாய்க்கிறீங்க!
எங்க ஊர் காரரையா கிண்டல் பண்றே ....இப்பவே கூட்டுறேண்டா பஞ்சாயத்த ....
பாவம் அவர இப்பிடி நாறடிச்சு போட்டீங்களே???
koodal bala said...
எங்க ஊர் காரரையா கிண்டல் பண்றே ....இப்பவே "கூட்டுறே"ண்டா பஞ்சாயத்த ....////கூட்டுங்க,கூட்டுங்க!ஒரே குப்பையும் கூளமுமாத் தான் இருக்குது!(பஞ்சாயத்து)
"குளிக்கிறது"லயும் பிரச்சினையா? சரி நீங்க குளிச்சீங்களா?ஆப்பீசரு சே..............ல புர...............ரு!பரவால்ல,குளிக்க வேண்டியதில்ல!மத்தவங்க நெஞ்ச(அவங்கவங்க)தொட்டு சொல்லுங்க,குளிக்கிறீங்க?????????????
செங்கோவிsaid...
படங்கள் தயாரித்த கந்துவும் பிரித்து மேய்ந்துவிடார்.?!?!););););)
செங்கோவிsaid...
//‘எப்படி இருக்கிறீங்க. சாப்பிட்டீங்களா... அப்புறம் குளிச்சீங்களா? // எவ்வளவு பெரிய பேட் வேர்ட்!!!§§§§§அதானே,குளிச்சதுக்கு அப்புறமாத் தானே சாப்பிடுவாங்க?
செங்கோவிsaid...
ஹா..ஹா..இப்படிச் சிரிச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு..கலக்கிட்டீங்க.////?!?!?
குற்றாலத்தயா?
செங்கோவிsaid...
//அப்புறம் எப்பூடி நான் ஆற்றில் இருந்து வெளியேறுவது. என் நண்பர்களுக்கு மேட்டர் என்னான்னு தெரியாமல், என்னைக் கரையேறச் சொல்லிக் கேட்டாங்க. // அண்ணன் கரை ஏறி இருந்தா, மேட்டர் தெரிஞ்சிருக்கும்.§§§§§§அப்புறம் பொண்டாட்டியாவது,புள்ளயாவது?????????????????
சசிகுமார்said...
இந்த நிரூ ஓவரா போறான் அங்க சுத்தி இங்க சுத்தி எங்க அண்ணன் மேலயே கைய வச்சிட்டியா.. எங்கண்ணன் மேல கைய வச்சிட்டு எப்படி உலகத்துல இருந்திடுறேன்னு பார். ஹி!ஹி!!
/////இம்மாம் பெரீ...........ய ஒலகத்துல ஒங்களுக்கு இல்லாத எடமா?இருந்துட்டுப் போங்க!!!!!!!!!!!!!!!!
Rathnavel said...
பாவம்.
ஏன் நாஞ்சில் மனோவை இந்த பாடு படுத்துகிறீர்கள்?வாழ்த்துக்கள்.///என்னது,பாடு படுத்துறமா?அவரு தாய்யா குளிக்காம இருந்துகிட்டு நம்பள பாடு படுத்துறாரு!!!
J.P Josephine Baba said...
நண்பா, நெல்லை பதிவர் சந்திப்பில் நீங்களும் வந்திருந்தீர்களோ கண்ட ஞாபகம்!/////நல்ல வேள,மோந்து பாக்காம வுட்டீங்களே?
மகேந்திரன்said...
ஜனரஞ்சகமான குளியல்!ஐயோ பாவம் நாஞ்சில் மனோ!////ஆமாமா,ஜனரஞ்சகமான குளியல் இல்லையா?பரிதாபப்படத்தான் வேண்டும்!
2011 7:24 AM
மைந்தன் சிவாsaid...
//அறிவிப்பு: அரபு நாட்டில் தண்ணீர் பஞ்சம் எனப் பொய் சொல்லிக் குளிக்காது; தற்போது தமிழகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு தண்ணீர் மேல் உள்ள தன் கண்டத்தினைப் போக்கும் நோக்கில் நீர் நிலைகளில் திவ்ய தரிசனம் செய்யும் பதிவருக்கும், இச் சிறுகதைக்கும் யாராவது தொடர்பிருக்கென்று கருதினால். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
///
ஹிஹிஹி அட நம்மட மாப்பு!!!
§§§§§ஓகோ!உங்க ஆளுதானா? கொழும்பில் அப்படியொன்றும் நீர்ப்பஞ்சம் இல்லையே?
மைந்தன் சிவாsaid...
அடடா, உடம்பெல்லாம் வியர்க்கப் போகிறதே, என்ன பண்ணலாம் என யோசித்தவருக்கு, தெருவோரத்தில் இருந்த ஐஸ்கட்டி வியாபாரி கண்ணில் தென் பட்டார். மூன்று கிலோ ஐஸ்கட்டிப் பையினை வாங்கித் தான் போகும் வழியெங்கும், தன் உடல் மீது கொட்டிக் கொண்டு நடந்தார் //
ஹிஹிஹி என்ன கொடுமை மனோ சார் இது!!§§§§§எங்கள்(உங்கள்) ஊரில் "ஊற" வைப்பதில்லையா?அந்த மேட்டர் தான் இது!
பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
யாவும் கற்பனையே............/////////
ஏண்ணே...?§§§§§அது வந்துங்க,"கனவான்" ஒப்பந்தம் மாதிரின்னு வச்சுக்குங்களேன்!
ஜீ...said...
//யாவும் கற்பனையே.....//
சும்மா போங்க பாஸ்! அப்புடிச் சொன்னா நாங்க நம்பிடுவமா?§§§§சீரியல்ல போடுறாங்க,சினிமால போடுறாங்க!யாவும் கற்பனையே அப்பிடீன்னு!நம்புறீங்களா?
# கவிதை வீதி # சௌந்தர்said...
அப்படியே பொங்குதுங்க.. சிரிப்பு....////தை மாசம் வரைக்கும் தாங்குமா?????
கார்த்திsaid...
பாவம் அவர இப்பிடி நாறடிச்சு போட்டீங்களே???////பிரச்சினைக்குக் காரணமே அதாங்க!(நாத்தம்!)
குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதே...
செம கலாய்ப்பு.... சிரிப்பு இன்னும் நிக்கல....
மாப்பிள காட்டான் சார்பா நாலு ஒல்லிக்கோழ அனுப்பிவை அந்த பதிவருக்கு குளிக்கதான் தெரியாதெண்டா நீச்சலும் தெரியாது போல அரைவாசி தண்ணியில..!? நிக்கிற படத்த பாத்தோன்ன காட்டான் மனசு வலிக்கிறது....!? நாலு கோழ என்னத்துக்கெண்டுரியா... சின்ன பயலே.. சின்ன பயலேбиоидрушастрплм..இதுக்குதான்..!?
பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே ஜிலுஜிலு எண்டு சொல்லி இருக்கிங்களே இதுல உள்குத்து என்ன ?
நிரூ.....!
எனய்யா மனோ அண்ணனை இப்படி கலாய்சிருக்கிறியள். பாவமய்ய மனிதர். ஹிஹிஹி.
இதுக்குப் பிறகும் மனோ குளிக்கேல்லயெண்டா....ச்சீ....!
nadaththunka nadaththunka.....
அட.!.படங்கள் வடிவமைத்த விதம் கச்சிதம்.. நல்ல எண்டெர்டெயின்மெண்ட் பதிவு..
ஹா ஹா ஹா ! பின்னிஎடுக்கறீங்க நிரூபன்.நடக்கட்டும் நடக்கட்டும்,
ஹா....ஹா....ஹா
சிறந்த நகைசுவை பதிவு அருமையாக எழதி இருக்கீங்க ஆன தனது முகத்தை காட்டமாட்டேனு அடம் பிடித்த இம்சைஅரசனை பத்தி எதுவும் எழுதலையே...
செம காமெடி தர்பா நிரூ பாஸ்,
இன்ணைக்கு உங்களுக்கு ஒரு ஆடு சிக்கியிருக்கு, ஹும்... ஜாமாய்க்குறீங்க,
பாவம் அந்த பதிவர்.
அப்புறம் ஒண்ணு....
மாத்தியோசி மாதிரி நகைச்சுவையிலையும் கலக்குறீங்க பாஸ்.
இதுகெல்லாம் காரணம் நான் இல்லிங்கோ அண்ணே வாங்கண்ணே புதுசா வாட்டர் டேங் கட்றோம் வந்து குளிச்சிட்டு போங்கண்ணா ன்னு கூப்பிட்டா வரவே மாட்டேன் சொல்லிட்டார் மனோ அண்ணே .........
நிருபன் அண்ணா ஏன் அவருடைய பதிவில கமெண்ட் போட்டு வாங்கினது பத்தாது ஏன்னு பதிவிலயும. சரி சரி விடுங்கப்பா இப்பவாவது நம்ம அண்ணன் சிங்கம் குளிச்சிட்டாறு தானே .
செம கலக்கல் பதிவு அண்ணா .படங்களும் பொருத்தம பண்ணியிருக்காரு எங்க கந்தசாமி அண்ணே அவருக்கும் ஒரு ஒ
"ம " இல் தொடங்கி " னோ " இல் முடியும் நபர் ஹிஹி..... அப்பவும் சொன்னேன் இப்படி குளிக்கிற படங்களா போடாதீங்க நாறப் போவுதுன்னு கேட்டாதானே. கலக்கல் பதிவு, நிரூ.
( நான் ஏதோ கெட்ட பதிவு என்று நினைச்சு இந்தப் பக்கம் வராமல் இருந்திட்டன். இப்பதான் சும்மா எட்டிப் பார்த்தா எங்கள் மனோ அங்கிள் குளிக்காமல் இருந்து குளிச்ச கதை )
எலேய் யார்லேய் அங்கே...எட்றா அந்த அருவாளை, கெளப்புலேய் காரை.....
சி.பி.செந்தில்குமார் said...
leeptaap லேப்டாப் மனோ ராம்சாமிக்கிட்டயும் மாட்டப்போறான்.. நமீதா அவர் ஆள் ஆச்சே?//
டேய் அண்ணா, நாயே எதுக்குடா என்னை பன்னிகுட்டி'கிட்டே மாட்டி விடுறே.....
ஆமா அங்கே தண்ணிக்குள்ளே இருந்து நமீதாவை சைட் அடிப்பது யாருங்கோ..??
நமீதாவை என்னோடு நெருக்கமாக விட்டு டைரக்ட் [[போட்டோ]] செய்யாத கந்தசாமி'க்கு என் கடும் கண்டனம் ம்ஹும்....
அடப்பாவிகளா....என்னை கலாசிட்டதுக்கு இம்புட்டு கமெண்ட்ஸா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
எல்லார் கிட்டயும் ஒண்ணு சொல்லணும்;மனோ ஊரில தான் இருக்காராம்!"காட்டான்" கோழிக் கொழம்பு வச்சத பாத்துப்புட்டு,அவுக அம்மாச்சிகிட்ட கோழிக் கொழம்பு வச்சுக் குடுக்க சொல்லி கேக்கப் போறாராம்! குளிக்காம சாப்பிடலாமா?எல்லாரும் கேளுங்க!/// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நான் ஊர்லதாம்லேய் இருக்கேன் எங்கட அம்மாச்சிகிட்டே கதைச்சி கோழி கறி சாப்பிட போறேன் இன்டைக்கி....///
vanathy said...நான் ஏதோ கெட்ட பதிவு என்று நினைச்சு இந்தப் பக்கம் வராமல் இருந்திட்டன். இப்பதான் சும்மா எட்டிப் பார்த்தா எங்கள் மனோ அங்கிள் குளிக்காமல் இருந்து குளிச்ச கதை.///கதையில்லீங்க,நெஜம்!இன்னும் குளிக்கல,ஆனா ஊரில தான் இருக்காராம்!
MANO நாஞ்சில் மனோ said...
ஆமா அங்கே தண்ணிக்குள்ளே இருந்து நமீதாவை சைட் அடிப்பது யாருங்கோ..?///ஆங்.......அவங்க வூட்டுக்காரரு!
HUNDRED!!!!!!!!!!!!!!!!!
MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips [Reply To This Comment]
அடப்பாவிகளா....என்னை கலாசிட்டதுக்கு இம்புட்டு கமெண்ட்ஸா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
/// இருக்காதா பின்ன..
இன்னும் சிரிப்பு நிக்கல..
கலக்கிடீங்க
இதுக்கப்புறமும் அந்தாளு குளிக்கப் போகுமா ?
Post a Comment