இப் பதிவின் நோக்கம், ஒரு சில விடயங்களினைத் தெளிய வைப்பதாகும். இப் பதிவில் வரும் கருத்துக்கள் யாவும் தமிழ் ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளன. இங்கே எழுதப்பட்டுள்ள என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை, ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களாக மாத்திரம் முன் வைக்கிறேன்.
இந்து மத நம்பிக்கையாளர்களிடமும், கடவுள் இருக்கிறார் என்று ஆணித்தரமாக கூறும் இந்து மத மக்களிடமும் என் மனதில் இருக்கும் சந்தேகங்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.‘’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ எனும் வாக்கினை அடிப்படையாக வைத்தும், எம்மை விட மேலான ஒருவன் - கடவுள் என்ற பெயரில் இவ் உலகத்தில் இருக்கிறான் என குறிப்பிடும் மக்களிடமும் நான் முன் வைக்கும் வினா, இது தான்,
இன்றையா கால கட்டத்தில் யுத்தம் மூலம் பல கோயில்களை இடித்து, பல மக்களைக் கொன்றதாக நீங்கள் அனைவரும் சொல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்தவிற்கு உங்களால்- நீங்கள் வணங்கும் கடவுளால் என்ன செய்ய முடியும்?
அடுத்த வினா, செய்வினை, சூனியம், பிசாசு, மாந்திரீகம், பேய் கட்டுதல் பற்றிய நம்பிக்கைகள் எனக்கு இல்லை; என்றாலும், இன்றும் எங்கள் ஊர்களில், ஊருக்கு அண்மையாக செய்வினை, சூனியம் முதலியவற்றால் பீடிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பூசாரிகள் என்ற பெயரில் ஒரு சிலர் கோயில்களில் அமர்ந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிப் பலர் வாயிலாக அறிந்துமுள்ளேன்.
சமீபத்தில் கூட, பல வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பகைமை உணர்வினை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட செய்வினை மாந்திரீகச் செயற்பாட்டின் காரணத்தால், பாதிக்கப்பட்டு, துன்பத்திற்குள்ளாகிப் பேய்களுடன் பேசிக் கொண்டிருந்த நபர் என்று ஒருவரை ஆலயத்திற்கு அழைத்து வந்து, அந்த மாந்திரிகள் அவரில் இருந்த பேயை விரட்டியதாக ஊர் மக்கள் பேசுகிறார்கள்.
இந்த மனிதரில் பிடிக்கப்பட்ட பேயினை விரட்டிய பின்னர், அவரில் இருந்த பேய்களுடன் பேசும் குணங்கள், தன்னை மறந்து செய்வினையின் காரணமாக வாய் ஓயாது அலப்பறை கொட்டும் குணங்கள் நீங்கி விட்டதாக எமது தேநீர்க் கடைச் சந்தியில் பேசி மகிழ்ந்தார்கள்.
இதனை விட, இப்போது யாழ்ப்பாணத்தில் பேய் விரட்டுவோர், செய்வினை- சூனியம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு விடுதலை அளிப்போர் என ஒரு குழுவினர் தமிழகத்தில் இருந்தும், இந்தியாவின் கேரளத்தில் இருந்தும் வருகை தந்துள்ளதோடு, பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் கொடுத்து மக்களிடம் ஏமாற்றிப் பணம் பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.
ஈழத்திலும் செய்வினை சூனியம் நிகழ்வுகளில் சிறந்தவர்களாக மட்டக்களப்பில் வாழும் மாந்திரிகர்கள் விளங்குவதாக அறிந்துள்ளேன். இந்த மாந்திரிகர்களின்- சக்திக்கு உதாரணமாக, ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் என்றால், அவரை அறியாமலே அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அவரைத் தூக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று கூறுவார்கள்.
ஒரு மனிதனின் தலை முடி, காலடி மண், அவனது ஆடைகள், இவற்றில் ஏதாவது ஒன்றினை எடுத்து, செய்வினை - சூனியம் செய்தால் வாழ் நாள் பூராகவும் அவனைத் துன்பத்திற்கு ஆளாக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
இத்தனை தகவல்களையும் அடிப்படையாக வைத்து, இந்த மந்திரவாதிகளிடம் நான் கேட்கும் கேள்வி, உங்களால்
இலங்கையின் ஜனாதிபதியாகத் தற்போது உள்ளவரும், நவீன துட்டகைமுனு என்று இலங்கையின் பெரும்பானை இனச் சகோதர்களால் அழைக்கப்படுபவரும்,
போர் குற்றங்கள் புரிந்தவர் என்று உலகச் செய்தி நிறுவனங்களால் ஆதாரங்களுடனும் சொல்லப்படுகின்றவருமான
மகிந்த ராஜபக்சேவிற்கு,
உங்களால் செய்வினை செய்ய முடியுமா?
இது மதவாதிகளிடமும், மாந்திரீக வித்தை செய்வோரிடமும் நான் விடும் பகிரங்க சவால். இது.
கடவுள் இருக்கிறார், மாந்திரீக வித்தைகள் உண்மை என்று சொல்லுகின்ற உங்களிடம் நான் கேட்பது இது தான்.
இன்று உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மனங்களுக்கு எதிரியாகவும், போர்க் குற்றங்கள் புரிந்தவராகவும்,
தமிழருக்கான தீர்வினைக் கொடுக்காது, ஏமாற்றி வருகின்றவர் இந் நபர் தான் என்று நீங்கள் சொல்லுகின்ற ஜனாதிபதி மகிந்தவுக்கு உங்களால் செய்வினை வைக்க முடியுமா? பேய் ஏவி விட முடியுமா? இல்லை கடவுளால் தான் இந் நபரின் அசைவினைத் தடுக்க முடியுமா?
அப்போ எங்கே கடவுள்! மாந்திரீக வித்தைகள் என்பது பொய்யா?
பதிவினை முழுமையாகப் படிக்காது, வெள்ளை வான் அனுப்ப முயற்சி செய்வோர் கவனத்திற்கு:
இலங்கையின் அதிபர் மகிந்தவினை இப் பதிவிற்கான ஓர் உதாரணமாகத் தான் கையாண்டுள்ளேன்.
ஹி....ஹி....
|
80 Comments:
வணக்கம் வணக்கம்
பதிவை படிச்சிட்டு வாறன்
இன்றையா கால கட்டத்தில் யுத்தம் மூலம் பல கோயில்களை இடித்து, பல மக்களைக் கொன்றதாக நீங்கள் அனைவரும் சொல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்தவிற்கு உங்களால்- நீங்கள் வணங்கும் கடவுளால் என்ன செய்ய முடியும்?
தெய்வம் நின்று கொல்லும் நீச்சயம் தண்டனை உண்டு .
பதிவினை முழுமையாகப் படிக்காது, வெள்ளை வான் அனுப்ப முயற்சி செய்வோர் கவனத்திற்கு:
இலங்கையின் அதிபர் மகிந்தவினை இப் பதிவிற்கான ஓர் உதாரணமாகத் தான் கையாண்டுள்ளேன்.
முன்னெச்சரிக்கை
இலங்கையின் ஜனாதிபதியாகத் தற்போது உள்ளவரும், நவீன துட்டகைமுனு என்று இலங்கையின் பெரும்பானை இனச் சகோதர்களால் அழைக்கப்படுபவரும்,
போர் குற்றங்கள் புரிந்தவர் என்று உலகச் செய்தி நிறுவனங்களால் ஆதாரங்களுடனும் சொல்லப்படுகின்றவருமான
மகிந்த ராஜபக்சேவிற்கு,
உங்களால் செய்வினை செய்ய முடியுமா?
எல்லாம் பேக்காட்டு வித்தை சகோ
நாசுக்காக வெள்ளை வான் அனுப்ப முயற்சி செய்வோர் கவனத்திற்கு:
நல்ல பதிவு,
யோசிக்க வெண்டிய விஷயம்.இந்த மாதிரி விஷயம் எனல்க்கு நம்பிக்கை இல்லையென்றாலும் இது குறித்து அறிய முயல்வது உண்டு.
******************
பெரும்பாலும் இந்தியாவில் உயர் பதவியில் இருப்பவர்கள் கொஞ்ச மந்திர,தந்திர ஆட்களை அருகில் வைத்துக் கொள்வது சாதாரணமாக் பார்க்கலாம்.இவர்களை கல்க்காமல் எந்த காரியமும் செய்ய மாட்டார்கள்.ஆனால் அத்னை மட்டுமே நம்பி ஒரு காரியத்திலும் இறங்க மாட்டார்கள்.
புத்தரை பற்றி வரலாற்றில் மூட நம்பிக்கைகளை ஒழித்தவர் என்றே படித்து இருக்கிறோம்.இலங்கை பௌத்த மதத்தில் எப்படி இந்த மாதிரி மந்திர தந்திரம் நம்பிக்கை,இத்னை வைத்து கல்லா கட்டும் ஆசாமிகள் உண்டா?
நன்றி நண்பரே!!!!!!!!!!!!!!
நிரூபா.. ஒரே கல்லுல 2 மாங்கா.. ஹா ஹா
ஹ...ஹ... நிரு சிவனின் ஐந்து தொழில்களையும் அவற்றுக்குரிய வடைப்பகளையும் சொல்லு பாப்பம்... நான் நினைக்கிறேன் அதில் ஒன்றாக இருக்குமோ என்று (யோவ் ஒருத்தரும் சண்டைக்கு வராதிங்க நகைச்சுவையாக சொல்றேன்)
அப்படி ஏதாவது இருந்தா மகிந்தாவுக்கு டெஸ்ட் பண்ணுங்கப்பா ......
வணக்கம் நிரூபன் அவர்களே,
கடவுள் உண்டா இல்லையா ? என்ற
கேள்வி இரணியன் காலத்தில் இருந்தே
இருக்கிறது..
அது அனுபவத்தால் உணரப்பட வேண்டிய விசயம்..
கடவுள் என்பவர்,
நம்பியவர்க்கு நடராசன்
நம்பாதவர்ககு எமராசன்..
என்ற ஒரு பழமொழியும் உண்டு..
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைவனை அவரவர்களே உணர்ந்து அறிய வேண்டும்..
அதற்கும் உங்களுக்கு முன்வினைப் புண்ணியம் இருக்க வேண்டும்.
நன்றி..
மகிந்த ராஜபக்சேவிற்கு,
உங்களால் செய்வினை செய்ய முடியுமா?
செய்வினை, சூனியம் என்பது ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் பரிசீலிக்கும் பொழுது,
அந் நபருக்கு தீய கிரகத்தின் திசா புத்தி
நடக்கும் பொழுதுதான் அது பாதிக்கும்..
எடுத்துக்காட்டாக ராகு திசை என்றால் 18 வருடங்கள் - இக்காலகட்டத்தில் அந்த பிணந்தின்னி இருக்குமானால் ( அதான் மகிந்த ராஜபக்சே )
அவனுக்கு வைக்கப்படும் செய்வினை
அவனை பாதிக்கும்.
இல்லையேல் பிரயோசனமில்லை..
ஏன் என்றால்,
அவனுக்கு குரு திசை நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்..
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் - அவனை
அந்த செய்வினைகள் பாதிக்காமல் அந்த திசா நாதன் எனப்படுப்வரும் + கிரகங்களில் முழுச் சுபர் எனப்படுபவருமான குரு அவனைக் காத்துக் கொள்வார்..
எனவே பில்லி சூனியம் என்பது உண்மை என்றாலும் கூட - அது சம்பந்தப்பட்டவருடைய விதிப் பயனை பொறுத்தே வேலை செய்யும் என்பது எமது கருத்து.
நன்றி..
வணக்கம் தோழரே,
உங்களுடைய 3 வது கேள்வி,
//இல்லை கடவுளால் தான் இந் நபரின் அசைவினைத் தடுக்க முடியுமா?//
கடவுள் என்பவர் நடுநிலையாளர்..
அவர் யாருக்கும எந்த வினைப் பயனையும் தன்னிச்சையாகக் கொடுப்பதில்லை...
அவரவர் செய்த நல்வினை தீவினைக்கேற்பவே பலாபலன்களைத் தருகிறார்..
யாரும் தவறாகக் கருதாதீர்கள்..
ஒரு கூட்டமாக சேர்ந்து நாம் செய்த தீவினைப் பயனை அனுபவிக்க வேண்டுமானால் இது போன்ற அரக்கர்களின் ( அதான் மகிந்த ராஜபக்சே ) கையில் மாட்டி பலகாலம் துன்பப் படவேண்டும் என்பது விதி..
நமது தீவினையின் தாக்கம் குறையும் போது ( ஓரளவு குறைந்தாலேயே போதும் ) இறைவன் தோன்றி அவ் வரக்கனை அழித்து அம் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பான்..
எடுத்துக்காட்டாக,
தக்கன் வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களுக்குத் தண்டனையாக 108 யுகங்கள் ஆட்சி செய்த சூரபத்மனை கொண்டு இறைவன் தண்டித்த வரலாறுகளைப் படியுங்கள்..
அவன் ஆட்சிக் காலம் முடியாதபோதும் கூட அவனது அக்கிரமம் அளவுகடந்த போது இறைவன் முருகப் பெருமானை அனுப்பி அவனை அழித்த வரலாறுகளை நினைவு கூருங்கள்..
இதனாலேயே தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி தோன்றியது..
நிற்க..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இக்கருத்தை ஏற்க முடியாது.
என்றாலும்..
அறிவியலில் திளைக்கும் அன்பர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை
என்ற ஒன்று உண்டு..
இல்லையா ?
அவ்வடிப்படையிலேயே இன்றைய இலங்கை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..
நிச்சயமாக அதான் மகிந்த ராஜபக்சேவின் தீவினைக்கான பயனை
அவன் அனுபவித்தே தீருவான்.
நம்புங்கள்..
தெய்வம் சத்தியம்
வினை சத்தியம்
பயனும் சத்தியம்...
தர்மம் சத்.. !
அப்படியெல்லாம் நம்பிக்கை இல்லாமல் பேசப்படாது.
@சிவ.சி.மா. ஜானகிராமன்
அருமையான பதில்.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
வணக்கம் தொப்பி தொப்பி அவர்களே,
//@சிவ.சி.மா. ஜானகிராமன்
அருமையான பதில்.//
எமது கருத்தை வழிமொழிந்தமைக்கு மிக்க நன்றி..
@சிவ.சி.மா. ஜானகிராமன்
ஐயா அப்படி என்றால் பிரபாகரனின் வீழ்ச்சி?
நிகழ்காலத்தின் எதிர்வினையா இல்லை முன்ஜென்மத்தின் ஊழ்வினையா?
//@ FOOD
பதில் சொல்ல யார் வருவாங்களோ!//
வணக்கம் தோழரே..
அடியவன் அறிந்த பதில்களை சொல்லியிருக்கிறேனே பின் ஊட்டத்தை கவனிக்கவில்லையா ?
நன்றி
வணக்கம் தொப்பி தொப்பி அவர்களே,
//ஐயா அப்படி என்றால் பிரபாகரனின் வீழ்ச்சி?
நிகழ்காலத்தின் எதிர்வினையா இல்லை முன்ஜென்மத்தின் ஊழ்வினையா ? //
நிச்சயம் முன்வினை தான்
( முன்ஜென்மத்தின் ஊழ்வினை )
நாம் பிறவி எடுப்பதே நமது முன்வினையை கழிக்கும் பொருட்டே
நமக்கு நல்வினை இருக்கும் வரை
நமக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்
தீவினை வேலை செய்ய ஆரம்பித்தவுடன் தோல்விகள், விபத்து, நோய், மரணம் முதலியன ஆரம்பிக்கின்றன.
எமது சிவயசிவ - வலைப்பதிவில் இணைந்தமைக்கு நன்றி தோழரே.
அரசன் அன்று கொல்வான்..தெய்வம் நின்று கொல்லும். நம்பிக்கை கொள்ளுங்கள். இதே ராஜபக்ஷேவுக்கு முடிவு எப்படி வரும் என்பதைப் பார்க்கத் தான் போகின்றீர்கள்.
மனிதர்களின் அநீதியின் காரணமாக அவர்களை இறைவன் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்கமாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்ப்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.'
-குர்ஆன்: 16:61
எந்த ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கும் இறைவன் உடன் தண்டனையை கொடுத்து விடுவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.
மற்றபடி எனக்கு அந்த சக்தி இருக்கிறது: இந்த சக்தி இருக்கிறது என்று பீலா விட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகளே! அவர்களை நம்பி காசை கொடுத்து ஏமாற வேண்டாம்.
இப்ப நான் யாரைப்பற்றியும் சொல்லப் போறதில்லை.
செய்வினைபற்றித்தான் சொல்லப்போறன் கவனமாக்
கேட்டுக்கொள்ளுங்கள்.நல்லவர்களை அழிப்பதற்கு
ஒரு கெட்டசக்தியைப் பயன்படுத்தி செய்வினைமூலமாக
அழிப்பது என்பது சர்வசாதாரணமான ஒரு விசயம்.ஆனா
உலகத்திலயே அதி உக்குரமான ஒரு கெட்டசக்தியை
அழிப்பதற்கு கடவுள் ஒருவரால்மட்டும்தான் முடியும்.
அதுதான் நம்ம சிவய சிவ சொல்லிவிட்டாரே இது
எங்களது பூர்வ ஜென்ம பாவம் என்று இதற்குப் பிறகும்
ஏன் வெட்டிப்பேச்சு?....வேற ஏதாவது வழி இருக்கா என்று
யோசியுங்கள்.(பின் குறிப்பு நல்லவர்கள் செய்வினைபற்றி
பேசினாலே அதன் தாக்கத்தை உணரமுடியும் என்று ஒரு
ஐதீகம் அதனால் கட்டாயம் ஒரு முழுக்கு போடுவது அவசியம்.
மறந்திராதீர்கள்!....)
நன்றி நிருபன் அருமையான பகிர்வுக்கு.
பாஸ்........!
நீங்கள் உதாரணத்துக்கு குறிப்பிட்டுள்ள நபரே மந்திரங்கள்- மாயைகள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.
எனக்கு மந்திரம் மண்ணாங்கட்டியிலேல்லாம் நம்பிக்கையில்லை.
ஆனால், கால ஓட்டத்தில், வெற்றி பெற்றவர்கள் தோற்றுப் போனவர்கள் ஆவாதும், தோற்றுப் போனவர்கள் வெற்றியாளர்களாவதும் வரலாறு!! அது என்றைக்காவது நடக்க வேண்டும். அப்போது 400- 500 வருடங்கள் ஆகியிருக்கும்.
வெள்ளை வான் /// அப்படியென்றால் என்ன நண்பா?
அரசன் அன்று கொல்வான்..தெய்வம் நின்று கொல்லும். /// இது பழ மொழி..
//
அரசன் அன்று கொல்வான்..தெய்வம் இன்று கொல்லும். // இது புது மொழி..
பொறுத்திருந்து பார்ப்போம்..
வணக்கம் அம்பாளடியாள் அவர்களே,
//அதுதான் நம்ம சிவய சிவ சொல்லிவிட்டாரே இது
எங்களது பூர்வ ஜென்ம பாவம் என்று இதற்குப் பிறகும்
ஏன் வெட்டிப்பேச்சு?..//
இந்த வார்த்தையில் ஏதேனும் கோபம் தென்படுகிறதா என்று தெரியவில்லை..
என்றாலும் ...
நான் யாரையும் தனித்து குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..
நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நம்மாலேயே உருவாக்கப்பட்டன என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே எனது கருத்துக்கள் தரப்பட்டன.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்
என்னும் வள்ளுவம் போல,
தாமே தமக்கு சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
என்னும் திருவாசகத்தைப் போல,
அவரவர் வினைவழி
அவரவர் அனுபவம்
என்னும் சிவபோக சாரத்தை போல,
வினை விதைத்தவன் வினை அறுத்துத் தான் ஆகவேண்டும்
என்னும் தத்துவங்களைப் போலவே
எனது கருத்தும் அமைந்திருக்கிறது
என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
வணக்கம் பாஸ் ...
////இன்றையா கால கட்டத்தில் யுத்தம் மூலம் பல கோயில்களை இடித்து, பல மக்களைக் கொன்றதாக நீங்கள் அனைவரும் சொல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்தவிற்கு உங்களால்- நீங்கள் வணங்கும் கடவுளால் என்ன செய்ய முடியும்?//// கடவுளே பயந்துட்டாரோ இவரைக்கண்டு...
///இன்றும் எங்கள் ஊர்களில், ஊருக்கு அண்மையாக செய்வினை, சூனியம் முதலியவற்றால் பீடிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பூசாரிகள் என்ற பெயரில் ஒரு சிலர் கோயில்களில் அமர்ந்துள்ளார்கள். // அவங்களுக்கும் தொழில், வருமானம் வேணும்ல ..))
///பாதிக்கப்பட்டு, துன்பத்திற்குள்ளாகிப் பேய்களுடன் பேசிக் கொண்டிருந்த நபர் என்று ஒருவரை ஆலயத்திற்கு அழைத்து வந்து, அந்த மாந்திரிகள் அவரில் இருந்த பேயை விரட்டியதாக ஊர் மக்கள் பேசுகிறார்கள்./// ஹிஹிஹி
///இந்த மாந்திரிகர்களின்- சக்திக்கு உதாரணமாக, ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் என்றால், அவரை அறியாமலே அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அவரைத் தூக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று கூறுவார்கள்.//இதை தான் கூடு விட்டு கூடு பாய்தல் என்பார்கள் .. எனக்கும் அந்த சக்தி இருந்தால் எவ்வளவு நல்லது ...)))
///இலங்கையின் ஜனாதிபதியாகத் தற்போது உள்ளவரும், நவீன துட்டகைமுனு என்று இலங்கையின் பெரும்பானை இனச் சகோதர்களால் அழைக்கப்படுபவரும்,
போர் குற்றங்கள் புரிந்தவர் என்று உலகச் செய்தி நிறுவனங்களால் ஆதாரங்களுடனும் சொல்லப்படுகின்றவருமான
மகிந்த ராஜபக்சேவிற்கு,
உங்களால் செய்வினை செய்ய முடியுமா?//// அவர் தான் கூடவே நம்போதரிகளையும் புத்த பிக்குகளையும் வச்சுக்கொண்டு நாள் நட்சத்திரம் பார்த்து தமிழர் தலையில் குண்டு போட்டவரச்சே , எல்லாம் பிளான் பண்ணி தானே செய்யுறாங்கள் ...
தானை தலைவர், தன்மான சிங்கம், மனித குல வி(வெ)டிவெள்ளி, வாழும் துட்டகைமுனு, எங்கள் மாத்தையா மதிப்புக்குரிய ,மாண்பு மிகு ,உயர்திரு மேதகு, --------(கொஞ்சம் நல்ல வார்த்தையா சேர்த்துக்கோங்கோ) மகிந்த ராஜாபக்சே அவர்களுக்கு சூனியம் வைக்க எண்ணியதற்க்காக உம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்கிறோம்...ஹிஹிஹி.
///இலங்கையின் அதிபர் மகிந்தவினை இப் பதிவிற்கான ஓர் உதாரணமாகத் தான் கையாண்டுள்ளேன். // அப்போ 'கோத்தப்பாய,பசில் ,பொன்சேகா என்று எல்லோரையும் சொல்லுவேன்' என்கிறீர்களா..)
சிவ.சி.மா. ஜானகிராமன் கூறியது...
வணக்கம் அம்பாளடியாள் அவர்களே,
" மகிந்தவுக்கு செய்வினை வைக்க முடியுமா - ஒரு சவால்! ":
என்ற பதிவில் தாங்கள் கீழ்கண்டவாறு
கருத்திட்டிருந்தீர்கள்...
//அதுதான் நம்ம சிவய சிவ சொல்லிவிட்டாரே இது
எங்களது பூர்வ ஜென்ம பாவம் என்று இதற்குப் பிறகும்
ஏன் வெட்டிப்பேச்சு?..//
இந்த வார்த்தையில் ஏதேனும் கோபம் தென்படுகிறதா என்று தெரியவில்லை..
என்றாலும் ...
நான் யாரையும் தனித்து குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..
நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நம்மாலேயே உருவாக்கப்பட்டன என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே எனது கருத்துக்கள் தரப்பட்டன.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்
என்னும் வள்ளுவம் போல,
தாமே தமக்கு சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
என்னும் திருவாசகத்தைப் போல,
அவரவர் வினைவழி
அவரவர் அனுபவம்
என்னும் சிவபோக சாரத்தை போல,
வினை விதைத்தவன் வினை அறுத்துத் தான் ஆகவேண்டும்
என்னும் தத்துவங்களைப் போலவே
எனது கருத்தும் அமைந்திருக்கிறது
என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் அம்பாளடியாள் தங்களின் தீர்ப்பே சரியானது
என்பதை முன்மொளிவதர்க்காகவே அவ்வாறு கருத்திட்டேன்.
இந்த பூர்வஜென்ம பலனை அனுபவரீதியாய் நன்கு உணர்ந்தவள்
நான்.இதைவிட தங்களின் ஆன்மீக அறிவுரைகளைக் கண்டு
ரசிக்கும் என் மனதுக்கு எந்தக் கோவமும் வருவதற்கு வாய்ப்பில்லையே.
இறைவனது சித்தம் மனிதனது வாழ்வு என்றோ விதைத்த விதையை
இன்று அறுவடை செய்கின்றோம் இதில் என்ன கோவம்.ஆனால்
ஒன்று அவர் அதி உச்ச இராட்சதர் என்பதை உணர்த்த நல்லதொரு
வாய்ப்பளித்தமைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லக்
கடமைப்பட்டுள்ளேன்.நன்றி அன்பரே........
அதெல்லாம் மஹிந்தாவுக்கு நடக்காது
நான் வேணும்னா ஒரு லாரி பிஞ்ச செருப்புக்கு ஆர்டர் பண்ணட்டுமா நாய்பக்ஷேவுக்கு...???
அப்பு ராசா நிரூ...கவனம்.சிவப்புச் சால்வைக்காரர் கேள்விப்பட்டா யாராச்சும் தேரர் உங்கட வலைக்கும் உங்களுக்கும் வைக்கப்போறாங்கள் செய்வினை !
கடவுளாவது செய்வினையாவது.....எல்லாமே பொய்.பணமும் பதவியும் எதையும் செய்விக்கும் !
///பதிவினை முழுமையாகப் படிக்காது, வெள்ளை வான் அனுப்ப முயற்சி செய்வோர் கவனத்திற்கு:/// நான் முழுமையாகப் படித்து விட்டேன்!இப்போது என்ன செய்வது?
இப்போதும் பிரித்தானியாவில் "பறக்கும் தட்டு" வருவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன,ஏன் நிழற்படங்கள் கூட வருகின்றன!உலகம் இயங்குவதற்கு ஒரு அமானுஷ்ய சக்தி வேண்டும்! விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்!உலகில் வாழும் உயிரினங்களை விடவும் மேலான ஒரு சக்தி இருக்கிறது!அதனை அவரவர் விருப்பிற்கேற்ப ஒவ்வொரு வடிவில் வணங்குகிறார்கள்.நம்புகிறார்கள்!இங்கே பிரான்சிலே கூட நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலையை நீக்கும் பொருட்டு பிரார்த்தனை செய்தார்கள்!மற்றும்படி நீங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் கிட்டாது!அது யதார்த்தம்! வாழ்க,வளர்க!(பயன்படுத்தும் பெயர்களில் கவனம் வேண்டும்,வேலியில் போகும் ஓணானை பிடித்து ஏன் சட்டைப்பைக்குள் வைக்க வேண்டும்?)
அணையப்போகிற விளக்குதான் சுடர்விட்டு பிராகசிக்கும் என்று சொல்வார்கள். அதுபோல் மிகக்கொடுரமான அழிவுகாலம் அந்தக்கொடுரனை நெருங்குவதால்தான் இத்தனை அட்டுழியம் செய்கிறான். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். தர்மம் ஒருநாள் வெல்லும். நிச்சயம்.
நிரூபன்
இதெல்லாம் ஒரு போலியான, சமூகத்தை முட்டாளாக்கி தம் பிழைப்பை நடத்தும் செயற்பாடே தவிர வேறெதுவும் இல்லை
//சிவ.சி.மா. ஜானகிராமன் said...
கடவுள் என்பவர்,
நம்பியவர்க்கு நடராசன்
நம்பாதவர்ககு எமராசன்..///
கடைசியில கடவுளும் அரசியல்வாதியாகிட்டாரே..... நிறைய தமிழ்சினிமா பார்ப்பாரோ?
//சிவ.சி.மா. ஜானகிராமன் said...
தக்கன் வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களுக்குத் தண்டனையாக 108 யுகங்கள் ஆட்சி செய்த சூரபத்மனை கொண்டு இறைவன் தண்டித்த வரலாறுகளைப் படியுங்கள்..
அவன் ஆட்சிக் காலம் முடியாதபோதும் கூட அவனது அக்கிரமம் அளவுகடந்த போது இறைவன் முருகப் பெருமானை அனுப்பி அவனை அழித்த வரலாறுகளை நினைவு கூருங்கள்..////
இந்த சம்பவம் இடம்பெற்றதற்கான ஆதாரம் ஏதும் உண்டா/தங்களால் நிரூபிக்க முடியுமா நண்பரே? அல்லது அதையும் நாம் மனதினால் உணர்ந்துகொள்ள வேண்டுமா?
நல்ல கேள்வி, இதெல்லாம் உண்மையா இருந்தால் பெரியார்னு ஒருத்தர் இருந்திருக்கவே மாட்டார்.... விட்டு வெச்சிருக்க மாட்டாங்க!
அன்பு நண்பர் நிரூபன்
பல கேள்விகளை கேட்டு இருக்குறீர்கள் சரி
எனக்கு இந்த பில்லி சூன்யம் செய்வினை இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது ஏனெனில் இவையெல்லாம் மனம் பலகீனமானவர்களும், கோழைகளும் நம்பவேண்டிய, நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள்
அடுத்து இந்து கடவுளுக்கு ஒரு கேள்வி , இதில் ஏன் நீங்கள் இந்து கடவுளுக்கு மட்டும் கேட்டுருக்கிறீர்கள் என்பதை நானறியேன், அநேகமாக பெரும்பாலான இலங்கை தமிழர்கள் இந்துமதத்தை சார்ந்தவராக இருக்கலாம் ,இல்லை நீங்கள் சார்ந்த மதம் என்பதால் இருக்கலாம்.
மதம் என்பது மனிதருக்குத்தான் கடவுளுக்கு இல்லை, எல்லா கடவுளும் ஒன்றே , மதம் பார்த்து பலன் தந்தால் அது கடவுளே இல்லை அந்த கடவுளும் நமக்கு வேண்டாம்,
அம்மா என்றும்
மம்மி என்றும்
ஆத்தா என்றும் இன்னும் பல மொழிகளில் அன்னையை அழைத்தாலும் அதன் அடிநாதம் என்னை பெற்றவளே காப்பவளே என்பதுதான், அது மாதிரித்தான் கடவுளும் , எனக்கு பிடித்த பெயரில் பிடித்த முறையில் நான் என் கடவுளை வணங்குகிறேன், இதுதான் நான் அறிந்தவரையில்.
மற்றபடி முன்பிறவி , வரும் பிறவி என்பதெல்லாம் என் அறிவிற்கு அப்பாற்பட்டது.
ஹிட்லர் யூதர்களை அழிக்கும் போது
புஷ் ஈராக்கியர்களை அழித்தபோது
அமைதியாக இருந்த கடவுள் இப்போதும் அப்படியே இருக்கிறார், இதற்க்கான காரண காரியங்கள் யாரரிவர், அறிந்தால் , அறிவித்தால் அவரும் ஒரு அவதாரமாகலாம் , இல்லை இன்னுமொரு மதம் உருவாகலாம். இன்று எல்லா மதத்தினரும் தங்கள் மதமும் , கடவுளும் தான் பெரியவர் என்று நினைப்பதும் அதையே சொல்லுவதும் எனக்கு உடன்பாடில்லாத விஷயங்கள், நான் சார்ந்திருப்பது கட்சியல்ல மதம் , ஏனெனில் கட்சிகளுக்குத்தான் விளம்பரம் தேவை, என் மதமும் மனமும் நம்பிக்கை பூர்வமானது என்பதை விட உணர்வுப்பூர்வமானது, ஏனெனில் நம் நம்பிக்கைகள்தான் நாட்களின் நகருதலில் மாறிக்கொண்டே இருக்கின்றனவே.
இதுவரை நான் சொன்ன விஷயங்கள் என்வரை உண்மையானது,
நன்றி என் மனம் திறக்க வைத்தமைக்கு
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
ராஜபக்சே வை தெய்வம் நின்று தான் கொல்லும். அன்றே கொன்றிருந்தால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காது.
செய்வினை,மாந்த்ரீகம் எல்லாம் உண்மையாக இருந்தால் பலகோடி உலகத்தமிழர்கள் சந்தோஷமாக மகிந்த மீது ஏவியிருப்பார்களே!
வணக்கம் நிரூ நானும் 100% சிவ.சி.ம.ஜானகிராமனுடன் ஒத்துப் போகின்றேன் ஊழ்வினை வந்து மேவ தன்பழி தீர்பான் பரமதயாளன் அவன் தான் நடந்தான் பாற்கடல் மீது என்று படித்த புரானவரி ஞாபகம் வருகிறது அது எந்தப்புத்தகம் என்று தேட என்னால் முடியாது ஆனால் மத நம்பிக்கையுள்ள என்னால் நிச்சயம் கூறுவேன் ஒரு நாள் ஊழ்வினை பழி தீர்க்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!
பில்லி சூனியம் என்பது சகோதர மதம் மீதும் உள்ள நம்பிக்கை ஆனால்
இது எந்தளவு சாத்தியம் என்று என் சிற்றறிவுக்கு தெரியாது நான் நம்புவதும் இல்லை.
பாஸ் இவருக்கு பின்னால் இருந்த அசோக நாட்டு வெளிவிவகார,புலன் ஆய்வுத்துறை பெருச்சாலிகள், சர்வதேச அன்னக்காவடிகள் எல்லோருக்கும் அல்லவா சூனியம் வைக்கனு,.ம் இது என்பார்வை அதுக்காக எனக்கும் வைக்கக்கூடாது சூனியம் சின்னப்பிள்ளை!
வரலாற்றில் மன்னவர்கள் புத்திரர்களாலும் வஞ்சனையாளும்தான் கொலையுண்டதாக இதிகாசம் சொல்கிறது!
வணக்கம் மதுரன் அவர்களே,
//இந்த சம்பவம் இடம்பெற்றதற்கான ஆதாரம் ஏதும் உண்டா/தங்களால் நிரூபிக்க முடியுமா நண்பரே? அல்லது அதையும் நாம் மனதினால் உணர்ந்துகொள்ள வேண்டுமா?//
இதுபோன்ற கேள்விக்கு ஆதாரம் கேட்க ஆரம்பித்தால் சொல்ல வேண்டிய பதில் சற்று கடுமையாக இருக்கும் பரவாயில்லையா ?
சரி.. அந்த பதிலை இங்கு நான் சொல்ல விரும்பவில்லை..
நீங்கள் ( நாத்திகவாதிகள் அல்லது பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் ) எல்லோரும்
கடவுளை ஒரு இளிச்சவாயனாக,
உங்கள் தேவைகளை மட்டும் நிறைவேற்றும் ஒரு மெசினாகப் பார்க்கிறீர்கள்...
முதலில் கடவுள் என்றால் என்ன ?
உயிர்கள் என்றால் என்ன ?
கடவுளுக்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம் ?
எந்த வகையில் சம்பந்தம் ?
வினை என்றால் என்ன ?
நல்வினை என்ன செய்யும் ?
தீவினை என்ன செய்யும் ?
என்பது பற்றி முதலில் அறியுங்கள்
பிறகு கடவுள் உண்டா ? இல்லையா ?
என்று ஆராயலாம்..
அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்..
நாளை நீங்களோ அல்லது நானோ உயிரோடு தான் இருப்போம் என்று நம்புவதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா ? தோழரே...
இதை ஆதாரத்தோடு நிருபணம் செய்யுங்கள் - தங்களுடைய மற்ற கேள்விகளுக்கு நானும் ஆதாரம் தருகிறேன்..
பிழைபடின் யாவரும் பொறுத்தருள்க.
நன்றி..
இன்ட்லியில் ஒட்டு போட்டேன் சகோ..ஏற்க்கனவே சேர்க்கப்பட்டதுன்னு விழுது..
அப்புறம் உங்களின் பதிவு காத்திரமானது நாம் அறிந்தது ...நான் இப்போ கமெண்ட்டுகளை வாசித்தேன்...எதோ ஒரு நிறைவு வருகிறது தானால்...
ஆறுதலாய் வருகிறேன் பாஸ்
இந்த விளையாட்டுக்கு நான் வரல!!! எஸ்கேப்
செய்வினைன்ன என்ன இலக்கண விதிப்படி பார்த்தா செய்த வேலை.
கொஞ்சம் "ஆன்மீகம்" கலந்து பார்த்தா செய்த பாவம்.
அவர் செய்யவேண்டிய பாவத்தையெல்லாம்
செய்து முடிச்சாச்சு.
அது ஒரு சீட்டுக்கட்டு மாளிகை.
"உஃப்"னு ஊதினா கொலாப்ஸ் ஆயிரும்.
உங்கள்ள ஓரளவு வில் பவர் உள்ளவுக ( ?)
9397036815 என்ற என் மொபைலுக்கு கால் பண்ணுங்க
நான் ரெண்டே ரெண்டு வார்த்தை சொல்வேன். ராஜபக்சே
பாஸ்போர்ட் சைஸ் படத்தை கையில வச்சுக்கிட்டு
நான் சொல்ற ரெண்டு வார்த்தைய நேரம் கிடைக்கிறப்பல்லாம்
சொல்லனும் ..
ஒரு 9 பேர் - ஃபிக்சட் டைம்ல சொன்னா போதும் . மாலை 5.45 முதல் 6.00 க்குள்
நான் ரெடி நீங்க ரெடியா?
நான் மந்திரவாதியோ தந்திரவாதியோ அல்ல. பீஜாக்ஷரங்களின் வலிமையை
ஆராய்ந்துவருபவன்.
ச்சொம்மா டெஸ்டிங் டோஸ்தான். கோழியறுத்து கும்மியடிக்க வேண்டிய அவசியம்லாம் இல்லை.
ஜஸ்ட் வில்..
வணக்கம் தலை,
//ஒரு 9 பேர் - ஃபிக்சட் டைம்ல சொன்னா போதும் . மாலை 5.45 முதல் 6.00 க்குள்
நான் ரெடி நீங்க ரெடியா?
//
சூப்பர் .. உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.
உங்க ஐடியாவும் சூப்பர்..
வாழ்க வளமுடன்..
நிருபன்
இந்த காலகட்டத்தில் ஏன் சூர சங்காரம் நடப்பதில்லை
கடவுள் இல்லையா இப்ப
முந்தி கடவுள் இருந்திருக்கிறார் அதனால சூர சங்காரம் நடந்திச்சு ஒரு கட்டத்தோட கடவுளர் எல்லாம் சமாதி அடஞ்சிட்டாங்க என்றால் அப்ப அசுரர் சூரர் என்ன ஆனாங்க அவங்களையும் இப்ப காணலையே அவங்களும் சமாதி அடஞ்சுட்டாங்களா
அசுரர் தான் இப்ப மனித வடிவில் அட்டுழியம் செய்கிறார்கள் என்றால் அப்ப கடவுள் தோத்திடடாரா அவர காணலையே . மனித வடிவில் கடவுள் வருவார் என்றால் யார் கடவுள் இன்னும் அநியாயங்களை கண்டும் காணாமல் இருக்கிறாரே எப்ப வருவார்
கடவுள் இருக்கிறாரா என்று தெரியாது. இருந்தாலும் வெறும் கல்தான்.
@Mahan.Thamesh
வணக்கம் வணக்கம்
பதிவை படிச்சிட்டு வாறன//
ஓக்கே, பதிவினைப் படித்து விட்டு வாங்கோ.
@Mahan.Thamesh
தெய்வம் நின்று கொல்லும் நீச்சயம் தண்டனை உண்டு .//
இதனைத் தான் எல்லோரும் பல வருடங்களாகச் சொல்கிறார்கள். ஆனால் ஏதும் நடப்பதாக தெரியலையே மச்சி.
@Mahan.Thamesh
முன்னெச்சரிக்கை//
ஆமா பாஸ், எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனும் நம்பிக்கை தான்.
@sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
நாசுக்காக வெள்ளை வான் அனுப்ப முயற்சி செய்வோர் கவனத்திற்கு//
யோ, மாப்ளே, நான் உயிரோடு இருப்பது உங்களுக்குப் பிடிக்கலை.
@சார்வாகன்
பெரும்பாலும் இந்தியாவில் உயர் பதவியில் இருப்பவர்கள் கொஞ்ச மந்திர,தந்திர ஆட்களை அருகில் வைத்துக் கொள்வது சாதாரணமாக் பார்க்கலாம்.இவர்களை கல்க்காமல் எந்த காரியமும் செய்ய மாட்டார்கள்.ஆனால் அத்னை மட்டுமே நம்பி ஒரு காரியத்திலும் இறங்க மாட்டார்கள்.
புத்தரை பற்றி வரலாற்றில் மூட நம்பிக்கைகளை ஒழித்தவர் என்றே படித்து இருக்கிறோம்.இலங்கை பௌத்த மதத்தில் எப்படி இந்த மாதிரி மந்திர தந்திரம் நம்பிக்கை,இத்னை வைத்து கல்லா கட்டும் ஆசாமிகள் உண்டா?
நன்றி நண்பரே!!!!!!!!!!!!!!//
பௌத்த மதத்தில் இருக்கும் மந்திர தந்திரங்கள் பற்றிச் சரியாகத் தெரியவில்லை நண்பரே,
ஆனாலும் எங்கள் ஜனாதிபதிக்கு இம் மந்திர தந்திரங்கள் மீது அதீத நம்பிக்கை..
ஹி....
@சி.பி.செந்தில்குமார்
நிரூபா.. ஒரே கல்லுல 2 மாங்கா.. ஹா ஹா//
நன்றி பாஸ்.
@♔ம.தி.சுதா♔
ஹ...ஹ... நிரு சிவனின் ஐந்து தொழில்களையும் அவற்றுக்குரிய வடைப்பகளையும் சொல்லு பாப்பம்... நான் நினைக்கிறேன் அதில் ஒன்றாக இருக்குமோ என்று (யோவ் ஒருத்தரும் சண்டைக்கு வராதிங்க நகைச்சுவையாக சொல்றேன்)//
ஹா...ஹா...
@koodal bala
அப்படி ஏதாவது இருந்தா மகிந்தாவுக்கு டெஸ்ட் பண்ணுங்கப்பா ......//
அதனைத் தான் நானும் கேட்கிறேன் பாஸ்.
@சிவ.சி.மா. ஜானகிராமன்
வணக்கம் நிரூபன் அவர்களே,
கடவுள் உண்டா இல்லையா ? என்ற
கேள்வி இரணியன் காலத்தில் இருந்தே
இருக்கிறது..
அது அனுபவத்தால் உணரப்பட வேண்டிய விசயம்..
கடவுள் என்பவர்,
நம்பியவர்க்கு நடராசன்
நம்பாதவர்ககு எமராசன்..
என்ற ஒரு பழமொழியும் உண்டு..
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைவனை அவரவர்களே உணர்ந்து அறிய வேண்டும்..
அதற்கும் உங்களுக்கு முன்வினைப் புண்ணியம் இருக்க வேண்டும்.
நன்றி../
வணக்கம் சகோ,
கடவுள் இருக்கிறார் என்பதனை உணர்ந்து கொள்ளும் பக்குவத்தினை நான் இன்னும் அடையவில்லை என்று நினைக்கிறேன், அதனால் தான் கடவுள் எனக்குத் தோற்றம் தரவில்லை.
@சிவ.சி.மா. ஜானகிராமன்
எனவே பில்லி சூனியம் என்பது உண்மை என்றாலும் கூட - அது சம்பந்தப்பட்டவருடைய விதிப் பயனை பொறுத்தே வேலை செய்யும் என்பது எமது கருத்து.//
ஆஹா...அப்படீன்னா நம்ம ஜனாதிபதிக்கு வேலை செய்யாதா..
இப்போ அவருக்கு நல்ல திசை என்பதால்,
தமிழ் மக்களுக்கு கெட்ட திசை...
@சிவ.சி.மா. ஜானகிராமன்
உங்களின் ஆழமான கருத்துக்கள் எப்போது பலிக்கும் என்பதனை ஆவலுடன் எதிர்பார்த்துப் பல தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் வழியில் நானும்,
நன்றி சகோ.
@THOPPITHOPPI
அப்படியெல்லாம் நம்பிக்கை இல்லாமல் பேசப்படாது.
@சிவ.சி.மா. ஜானகிராமன்
அருமையான பதில்.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.//
நன்றி சகோ.
@FOOD
நல்லா நச்சுன்னு கேள்விகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். பதில் சொல்ல யார் வருவாங்களோ!//
நன்றி சகோ
@செங்கோவி
அரசன் அன்று கொல்வான்..தெய்வம் நின்று கொல்லும். நம்பிக்கை கொள்ளுங்கள். இதே ராஜபக்ஷேவுக்கு முடிவு எப்படி வரும் என்பதைப் பார்க்கத் தான் போகின்றீர்கள்.//
ஆஹா...
அண்ணாச்சி வேறை தேதி குறித்த மாதிரிப் பேசுறாரே, எல்லாமே புரியாத புதிராக இருக்கிறதே...
@சுவனப்பிரியன்
எந்த ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கும் இறைவன் உடன் தண்டனையை கொடுத்து விடுவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.
மற்றபடி எனக்கு அந்த சக்தி இருக்கிறது: இந்த சக்தி இருக்கிறது என்று பீலா விட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகளே! அவர்களை நம்பி காசை கொடுத்து ஏமாற வேண்டாம்.//
நன்றி சகோ.
@அம்பாளடியாள்
நன்றி சகோ
@மருதமூரான்.
பாஸ்........!
நீங்கள் உதாரணத்துக்கு குறிப்பிட்டுள்ள நபரே மந்திரங்கள்- மாயைகள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.
எனக்கு மந்திரம் மண்ணாங்கட்டியிலேல்லாம் நம்பிக்கையில்லை.
ஆனால், கால ஓட்டத்தில், வெற்றி பெற்றவர்கள் தோற்றுப் போனவர்கள் ஆவாதும், தோற்றுப் போனவர்கள் வெற்றியாளர்களாவதும் வரலாறு!! அது என்றைக்காவது நடக்க வேண்டும். அப்போது 400- 500 வருடங்கள் ஆகியிருக்கும்.//
எனக்கும் தான் இந்த மந்திரங்களில் நம்பிக்கையில்லை. அதனால் தான் இப்படி ஓர் பதிவினை முன் வைத்திருக்கிறேன்.
இன்னும் 400-500 வருடங்கள் காத்திருக்கனுமா...
நன்றி பாஸ்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வெள்ளை வான் /// அப்படியென்றால் என்ன நண்பா?//
உங்க ஊரில் அரசியல்வாதிகள் பற்றிப் பேசினால் ஆட்டோ அனுப்புவார்கள் தானே;-))
அதே போலத் தான் நம்ம ஊரில்...
ஆட்டோவிற்குப் பதிலாக வெள்ளைவான்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அரசன் அன்று கொல்வான்..தெய்வம் நின்று கொல்லும். /// இது பழ மொழி..
//
அரசன் அன்று கொல்வான்..தெய்வம் இன்று கொல்லும். // இது புது மொழி..
பொறுத்திருந்து பார்ப்போம்.//
இதனை யாரய்யா இயற்றியது?
கடைசியில் கொஞ்சம் ஜாக்கிரதையை விட்டீர்கள், ஹீ ஹீ.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். என்பது சரி யல்ல அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்.
பதிவரின் கேள்வி நறுக்கென்ற சரியான கேள்வி . மாந்த்ரீகம் கடவுள் இதையெல்லாம் நம்பும் நீங்கள் மஹிந்தா போன்றோருக்கு செய்வினை வைக்க வேண்டியதானே ?
முடிந்தால்
என்ன சார் இது சப்ப மேட்டர் ..... அவரோட முடி + காலடி மண்ணும் கொண்டுவந்து என்னோட mail கு அனுப்புங்க ....நான் பாத்துக்குறேன் .........
Post a Comment