அன்பிற்கினிய உறவுகளே,
வாழ்க்கையில் சந்தோசமா இருக்க விரும்புகிறீர்களா? திருமணம் செய்ய விருப்பமா? இல்லை உங்களுக்கு ஒரு காதலி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? எதுவானாலும் நீங்க ஒரு மிக முக்கியமான விடயத்தினை மறந்து விடக் கூடாது. அது தான் சமையற் கலையில் நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வுகளின் அடிப்படையில் இக் காலப் பெண்கள் சமையலில் தேர்ச்சி பெற்ற ஆண்களையே தமது வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள விரும்புகிறார்களாம். ஆகவே சமையல் செய்யத் தெரியாத ஆண்களுக்கும், சமையற் கலையில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கும் இத்தால் அறிவித்துக் கொள்வது என்னவெனில்;
என் வலையில் சமையற் குறிப்புக்களை உங்களுக்காகப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்;
பாகற்காய்/ பாவற்காய் வற்றல் கறி/ பிரட்டல் கறி வைப்பது தொடர்பான குறிப்புக்களை இப் பதிவினூடாக வழங்குகிறேன்.
ஈழத்து மிளகாய்த் தூள் தயாரிப்பது எப்படிஎனும் பதிவினைத் தொடர்ந்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகும் இரண்டாவது சமையற் குறிப்புத் தான் இது.ஈழத்து மிளகாய்த் தூள் தயாரிப்பது தொடர்பான விடயங்களை நீங்கள் இங்கே சென்று பார்க்க முடியும்.
சுவையான ஈழத்துப் பாகற்காய் பிரட்டல்/ வற்றல் கறி தயாரித்தல்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய்/ பாவற்காய்/ Bitter Melon
வெங்காயம்
மிளகாய்த் தூள்
உப்பு
பழப் புளி/ Tamarind Paste
இளநீர்(பாகற்காயினைக் கசப்பின்றிச் சுவையாக சமைப்பதற்கு)
வெந்தயம்
இனிச் செய்முறையினைக் கொஞ்சம் படிப்போமா.
*பாவற்காயினைச் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாகப் பொரிக்காது அரைப் பருவம் ஆகும் வரை(Just like half frying) பொரித்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
*பழப் புளியோடு உங்களுக்குத் தேவையான அளவு/ சிறிதளவு இளநீரையும் சேர்த்துக் குழைத்து/ பிசைந்து வைத்திருக்கவும்.
(பாகற்காய் சமைக்கும் போது இளநீர் சேர்த்தால் கசப்பின்றி, சுவையானதாக பாவற்காய் சமையல் இருக்கும். )
(பாகற்காய் சமைக்கும் போது இளநீர் சேர்த்தால் கசப்பின்றி, சுவையானதாக பாவற்காய் சமையல் இருக்கும். )
*வெங்காயத்தை நீங்கள் வழமை போல உணவிற்குச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது போன்று வெட்டி, சிறிதளவு வெந்தயம் சேர்த்து மிக்ஸ் பண்ணி வதக்க/ தாழிக்கத் (Fried) தொடங்கவும்.
*வதக்கும் போது(Fried பண்ணும் போது) வெங்காயம் அரைப் பருவமாகப் பொரிந்து வருகையில், ஏற்கனவே பொரித்து வைத்துள்ள பாகற்காயினையும் சேர்த்துப் பொரிக்கவும்.
*பாகற்காயோடு, வெங்காயத்தினையும் சேர்த்து மிக்ஸ் பண்ணிய பின்னர் - தேவையான அளவு மிளகாய்த் தூளினைச் சேர்க்கவும்.
*இறுதியாகப் பழப் புளியோடு சேர்த்துக் கலந்துள்ள இளநீரையும் ஒன்றாகச் சேர்த்து அவிய விடவும். அவிந்து வருகையில் சிறிதளவு உப்புச் சேர்த்து வற்ற விட்டு இறக்கவும்.
*பாகற்காயோடு, வெங்காயத்தினையும் சேர்த்து மிக்ஸ் பண்ணிய பின்னர் - தேவையான அளவு மிளகாய்த் தூளினைச் சேர்க்கவும்.
*இறுதியாகப் பழப் புளியோடு சேர்த்துக் கலந்துள்ள இளநீரையும் ஒன்றாகச் சேர்த்து அவிய விடவும். அவிந்து வருகையில் சிறிதளவு உப்புச் சேர்த்து வற்ற விட்டு இறக்கவும்.
*சிறிது நேரத்தில் சுவையான பாவற்காய் கறி தயார்!
கொஞ்சம் தண்ணிப் பருவமாக அல்லது குழம்பு பருவமாக இந்தப் வற்றல் கறியினை உண்ண விரும்புவோர் சிறிதளவு அல்லது இரண்டு தேக்கரண்டி பாலினையும் சேர்த்துக் கொள்ளலாம்.
டிஸ்கி: சமையற் குறிப்பில் சந்தேகம் இருந்தால் அப்பாவி ஆண்களே, தயவு செய்து வெட்கப்படாமது கேளுங்க..
|
116 Comments:
"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment
அருமையான நல்ல சமையல் குறிப்புகள் , நன்றி
"என் ராஜபாட்டை"- ராஜா
எனக்கு தான் வடையா ?
"என் ராஜபாட்டை"- ராஜா
வீட்டுல சமையல் நீங்கதான ?
சமையல் செய்து சம்சாரத்தை அசத்தலாமா!::::////
யோவ் சம்சாரத்த அசத்துறத்துக்கு “ வேறு’ சில நல்ல வழிகள் இருக்கும் போது, எதுக்கு வீணாக சமைக்கணும்?
இரு சிறிது நேரம் கழிச்சு வர்ரேன்!
புள்ள கல்யாணத்துக்கு ரெடியாகுது ....சரி சரி
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சமையல் செய்து சம்சாரத்தை அசத்தலாமா!::::////
யோவ் சம்சாரத்த அசத்துறத்துக்கு “ வேறு’ சில நல்ல வழிகள் இருக்கும் போது, எதுக்கு வீணாக சமைக்கணும்?
he he he அதானே
///திருமணம் செய்ய விருப்பமா? இல்லை உங்களுக்கு ஒரு காதலி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? //ஆமா நீங்க இதில எந்த வகை ...)
//சமையல் செய்து சம்சாரத்தை அசத்தலாமா! /// சமையல் செய்து(ம்) சம்சாரத்தை அசத்தலாம்...ஹிஹிஹி ..
///சமையற் குறிப்பில் சந்தேகம் இருந்தால் அப்பாவி ஆண்களே, தயவு செய்து வெட்கப்படாமது கேளுங்க.// நமக்கு சோறு மட்டும் ஆக்க தெரியும் , மற்றவையும் சமைக்க தெரியும் ஆனா சமைச்சா நான் மட்டும் தான் சாப்பிடனும்...
கசக்கிற பாவக் காயக்கூட நீங்க
கசக்காம சமைச்சிடிங்க ஆமா
எங்க என் வலைப்பக்கம் தலை
காணோம்
வாங்க சார் இப்படி இருந்தா
எப்படி
புலவர் சா இலாமாநுசம்
சந்தோஷம்...
தங்கள் முயற்ச்சித்து எவ்வளவு நன்றாக வந்தது என்று சொல்ல வேண்டும்..
//////
சமையற் குறிப்பில் சந்தேகம் இருந்தால் அப்பாவி ஆண்களே, தயவு செய்து வெட்கப்படாமது கேளுங்க../////
ரைட்டு...
இன்றைய கவிதை வீதியில்..
வலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)
http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post_16.html
எனக்கு மிக பிடித்த காய் வித்தியாசமான முறையில்...
செஞ்சு பார்த்துட்டு சொல்றேன், சுவை எப்படி என்று !! :))
பெண்களுக்கு போட்டியா சமையல் குறிப்பு கொடுபதிலும் ஆண்கள் வந்தாச்சா ?
ம்ம்ம்...வாழ்த்துக்கள்.
நிலவுக்கே போயிட்டு வந்துடலாம் போல நிரூபனுக்கு கமெண்ட் போட முடியாது போல. அரை மணி முன்னால் வந்தேன். கமெண்ட் பாக்ஸயே காணோம்.
அப்புறம் அசத்தவா? இல்லை பயமுறுத்தவா? # டவுட்டு.
அன்பிற்கினிய உறவுகளே,/////
இருக்கிறம் சொல்லுங்கோ!
வாழ்க்கையில் சந்தோசமா இருக்க விரும்புகிறீர்களா? /////
ஓம் அதுக்கென்ன?
இல்லை உங்களுக்கு ஒரு காதலி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? /////
இல்லை ஏன்? இருக்கிறதையே கட்டி மேய்க்கேலாம இருக்கு!
எதுவானாலும் நீங்க ஒரு மிக முக்கியமான விடயத்தினை மறந்து விடக் கூடாது. /////
என்னது? ஆட்டுக்கு கொம்பு இருக்கு! அதுவா? குரன்கில இருந்து மனுஷன் வந்தான்! அதுவா? எதை மறக்க கூடாது?
இல்லாட்டி, பஞ்சலிங்கம் விதானையாரின்ர, இளையவள் சாமத்தியப் படாக்கு முன்னமே ஆரோடையோ கதைச்சு திரிஞ்சவளாம் எண்டு, உவன் றயன் சொல்லிக்கொண்டு திரிஞ்சான்! அதுவோ?
அது தான் சமையற் கலையில் நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்./////
கிழிஞ்சுது! இதுக்கே இவ்வளவு பில்டப்?
ஆய்வுகளின் அடிப்படையில் இக் காலப் பெண்கள் சமையலில் தேர்ச்சி பெற்ற ஆண்களையே தமது வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள விரும்புகிறார்களாம். /////
நிப்பாட்டு! ஆர் ஆய்வு செய்தது? எப்ப ஆய்வு செய்தது? எங்க ஆய்வு செய்தது?
என் வலையில் சமையற் குறிப்புக்களை உங்களுக்காகப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்;
பாகற்காய்/ பாவற்காய் வற்றல் கறி/ பிரட்டல் கறி வைப்பது தொடர்பான குறிப்புக்களை இப் பதிவினூடாக வழங்குகிறேன்.//////
என்னடாப்பா லிங்கம் கூல் பாரில ஐஸ்கிறீம் வேண்டிக்குடுத்தே அவளளவள் பிச்சுக்கொண்டு ஓடுறாளவை!
நீ என்னடா எண்டா பாவக்காய் காய்ச்சி கவுக்கச் சொல்லுறாய்! நடக்கிற கதையே இது!
சரி சொல்லு பார்ப்போம்!/
ஈழத்து மிளகாய்த் தூள் தயாரிப்பது எப்படிஎனும் பதிவினைத் தொடர்ந்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகும் இரண்டாவது சமையற் குறிப்புத் தான் இது.ஈழத்து மிளகாய்த் தூள் தயாரிப்பது தொடர்பான விடயங்களை நீங்கள் இங்கே சென்று பார்க்க முடியும்./////
அதுக்குள்ள ஒரு விளம்பரம்?
தேவையான பொருட்கள்:
பாகற்காய்/ பாவற்காய்/ Bitter Melon
வெங்காயம்
மிளகாய்த் தூள்
உப்பு
பழப் புளி/ Tamarind Paste
இளநீர்
வெந்தயம்/////
மஹா ஜனங்களே! இவன் ஏமாத்துறான்! பொய் சொல்லுறான்! இதை நம்பாதீங்கோ!
பாவக்காய் பிரட்டல் வைக்க இவ்வளவும் காணாது!
சட்டி வேணும், ஏப்பை வேணும் அல்லது அலுமினிய கறண்டியாவது வேணும்!
மூடுறத்துக்கு மூடி வேணும், அடுப்பு வேணும், விறகு வேணும், அதை மூட்ட கொஞ்சம் மண்ணென்னையும், தீப்பெட்டியும் வேணும்!
அடுப்பு நோந்தா ஊதுறத்துக்கு குழல் வேணும்/
இதொண்டும் இல்லாமல் கடைசி வரைக்கும் சமைக்கேலாது!சொல்லிப்போட்டன்!
இம்ம்..................
வரப்போறவங்க சமையல் செய்ய வேண்டாம் போல இருக்கு
நீங்களே எல்லாமே செஞ்சிடுவிங்க போல......................
நல்ல சமையற்குறிப்பு சகோ. அதுவும் கசக்கும் பாகற்காயை பக்குவமாய்
சமைக்கும் முறையை தந்த விதம் அருமை
*பாவற்காயினைச் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாகப் பொரிக்காது அரைப் பருவம் ஆகும் வரை(Just like half boiling) பொரித்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.//////
boiling எண்டா அவிக்கிறது, கொதிக்க வைக்கிறது, காய்ச்சுறது!
ஆனா நீ பாவக்காய அரைப் பருவத்துக்கு பொரிக்கச் சொல்லியிருக்கிறாய்!
பொரிக்கிறதுக்கு இங்கிலீசில frying எண்டெல்லோ வரும்! அரைப் பொரியல் எண்டா half frying எண்டுதான் வரும்!
நிலாந்தன் வாத்தியிட்ட என்ன கிழிச்சனீங்கள்?
*பழப் புளியோடு உங்களுக்குத் தேவையான அளவு/ சிறிதளவு இளநீரையும் சேர்த்துக் குழைத்து/ பிசைந்து வைத்திருக்கவும். :::::///
இதில ரெண்டு பிழை இருக்கு!
ஒண்டு - பழப்புளி எண்டா என்னவெண்டு சில வேளை தமிழக உறவுகளுக்கு விளங்காமல் இருக்கலாம்! அதையொருக்கா விளங்கப்படுத்து!
ரெண்டாவது- உங்களுக்கு தேவையான அளவு இளநீர்! எண்டா, எனக்கு நல்ல வெயில் அடிக்கேக்க 3 கோம்பை இளனி தேவைப்படும்! அதையெல்லாத்தையும் பாவக்காய் சட்டிக்குள்ள ஊத்தலாமோ?
பயனுள்ள பதிவு சகோ . உண்மையிலே எங்களை போல் தனியாக இருப்பவர்களுக்கு உதவும் .
சம்சாரத்தை அசத்த இது மட்டும் போதுமா ,? இன்னும் வேணாமா,?
அண்ணே நீங்களும் சமையல் பக்கம் போட்டீங்களா
டிஸ்கி: சமையற் குறிப்பில் சந்தேகம் இருந்தால் அப்பாவி ஆண்களே, தயவு செய்து வெட்கப்படாமது கேளுங்க../....
.::://////
இதில வெக்கப்பட என்ன இருக்கு? எனக்கு “ அரைச்சு காய்ச்சிறது “ எப்பிடியெண்டு ஒருக்கா விளங்கப்படுத்தவும்!
அடுத்தமாதமளவில தேவைப்படும்! ஹி ஹி ஹி!!!!
சபாஷ் சமயற்கட்டிலும் அசத்தும் நிரூ
வாழ்த்துக்கள் சகோ..
புளியினை இளநீரில் கரைத்து செய்வது, பாக்ற்காயின் கசப்பினை குறைக்குமா...அதற்காக தான் பயன்படுத்துகின்றோமா அல்லது டேஸ்டிற்காகவா...
இளநீர் சேர்ப்பது நல்ல ஐடியா...
நிரு நீங்களுமா?
இந்த சமையல் உங்க அனுபவமோ?
அசத்தல் கலக்குங்க
நிருவிர்க்கு பாகற்காய் ரொம்ப பிடிக்குமோ?
ஐயோ எனக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்கும்.ஆனால் அப்புறம் கால் கிலோ பால்கோவா வேண்டும்.
vaalththukkal..........
nalla pathivu.........
!!!!!!namma pakkamum kaaththirukku unkalukkaaka!!....
ஹிஹி பயபுள்ள தலையை நீட்டப் போகிறது...
ஹிஹி சொல்லிக்குடுக்கிறது தான் குடுக்கிறது நல்ல கறியா சொல்லி குடுக்கிறது...பாவக்காய் கசக்கும் ஹிஹி
ஹிஹி மிக இலகுவான்ன சமையல் குறிப்பு??
செய்து பார்ப்போமோ??டயும் கிடைக்கேக்க பார்ப்போம்!
ஹிஹி மிக இலகுவான்ன சமையல் குறிப்பு??
செய்து பார்ப்போமோ??டயும் கிடைக்கேக்க பார்ப்போம்!
கல்யாண மார்க்கெட்டில் உங்களுக்கு கிராக்கிதான்!படத்தில நல்லாத்தான் இருக்கு;சாப்பிட்டலும் நல்லாருக்கும்னு நம்புகிறேன்!
காதல் கசந்துவிடாமல் இருக்க வேண்டும் .......
சமையலிலும் மன்னரா.. பேஷ்.. பேஷ்.
நிரு... பாவக்காய் தான் கிடைத்ததா....? முதல் சமையல் குறிப்பே ரொம்ப கசக்குது.. இருந்தும் செய்து பாக்கலாம்.
உங்க தைரியம் எனக்கு புடிச்சுருக்கு
அன்புக்கினிய உறவுகளே இதனால் நிரூபன் தெரிவிப்பது என்ன வெண்றால் நானும் கலியாணத்திற்கு தயாராகிவிட்டேன் என்று முரசு கொட்டுகிறார் ஹி ஹி!
அன்புக்கினிய உறவுகளே இதனால் நிரூபன் தெரிவிப்பது என்ன வெண்றால் நானும் கலியாணத்திற்கு தயாராகிவிட்டேன் என்று முரசு கொட்டுகிறார் ஹி ஹி!
பாவற்காய் கசப்பானது இதில் சூப் செய்யும் வழி முறை இருந்தால் சொல்லுங்கள் பாஸ்!
பாவற்காய் கசப்பானது இது உடம்புக்கு நல்லது என்று என் பாட்டி நச்சரித்து சாப்பிட வைத்தது ஒருகாலம்!
@நிரூபன்
"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment
அருமையான நல்ல சமையல் குறிப்புகள் , நன்றி//
உங்களின் பின்னூட்டத்தை முதலாவது பதிவிற்உ அளித்திருந்தீங்க, அதனால் தான் இப் பகுதியில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது சகோ.
@நிரூபன்
என் ராஜபாட்டை"- ராஜா
எனக்கு தான் வடையா //
சந்தேகமே இல்லை,
உங்களுக்குத் தான் வடை சகோ, ஆனால் கை வசம் வடை இல்லை, பாவற்காய் வற்றல் தான் இருக்கு. தரவா.
@"என் ராஜபாட்டை"- ராஜா
வீட்டுல சமையல் நீங்கதான ?//
அடிங்...படவா. பிச்சுப் புடுவே பிச்சி, யாரைப் பார்த்து என்ன வார்த்தை, எப்பவுமே நான் தலைவா சமையல்.
நான் இப்பவுமே தனி ஆள் தான் பாஸ்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
யோவ் சம்சாரத்த அசத்துறத்துக்கு “ வேறு’ சில நல்ல வழிகள் இருக்கும் போது, எதுக்கு வீணாக சமைக்கணும்?
இரு சிறிது நேரம் கழிச்சு வர்ரேன்!//
ஜனங்களே, நான் நல்லவானக திருந்தி, கெட்ட தலைப்பு வைக்காமல் பதிவு எழுதுவம் என்றா,
இவன் ஓட்ட வடை திருந்த விட மாட்டான் போல இருக்கே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
யோவ் சம்சாரத்த அசத்துறத்துக்கு “ வேறு’ சில நல்ல வழிகள் இருக்கும் போது, எதுக்கு வீணாக சமைக்கணும்?
இரு சிறிது நேரம் கழிச்சு வர்ரேன்!//
எப்போ பார்த்தாலும் அதே சிந்தனையில தான் இரு..
மனுசனா நீ,
நிரூ...ஏனோ உங்கள் பதிவுகள் எனக்குப் பிந்தியே கிடைக்கிறது.
காரணம் தெரியவில்லை.இப்போகூட 0 விநாடி என்று காட்டுகிறது.எங்கே உங்கள் பதிவுகளைக் காணவில்லையே என்று நானாகத் தேடி வந்தேன் !
ம்ம்...எனக்குப் பிடித்த பாகற்காய்க்கறி.இது யாழ்ப்பாணத்து சமையல் முறை.நானும் இப்படித்தான் சமைக்கிறேன்.
அதென்ன சம்சாரத்தை அசத்துறது !
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இரு சிறிது நேரம் கழிச்சு வர்ரேன்!//
அடிங்.
என்ன யாராச்சும் பொண்ணுங்களைப் பார்த்திருப்பியே?
ஹன்சிகா எனும் நினைப்பில நீ பின்னாடி போய் ஏமாந்து வருவாய் என்று எனக்கு முன்னாடியே தெரியும் மாப்ளே.
@ரியாஸ் அஹமது
புள்ள கல்யாணத்துக்கு ரெடியாகுது ....சரி சரி//
அப்படியெல்லாம் இல்லை சகோ, நாமளும் சமைக்கத் தெரிஞ்சிருந்தா, நமக்கு வரப் போறவா குற்றம் குறை சொல்ல மாட்டா தானே..
ஹி...ஹி...
@கந்தசாமி.
ஆமா நீங்க இதில எந்த வகை ...//
பாஸ், அது எனக்கு இன்னமும் தெரியலையே பாஸ்..
@கந்தசாமி.
சமையல் செய்து(ம்) சம்சாரத்தை அசத்தலாம்...ஹிஹிஹி ..//
யோ நீங்க ஓட்ட வடையோட தம்பியா?
திருந்தவே மாட்டீங்க.
@கந்தசாமி.
நமக்கு சோறு மட்டும் ஆக்க தெரியும் , மற்றவையும் சமைக்க தெரியும் ஆனா சமைச்சா நான் மட்டும் தான் சாப்பிடனும்...//
அதான் பாஸ், உங்கள மாதிரி நல்ல பசங்களுக்கு நான் வழி காட்டுறேன்,
பார்த்தீங்களா,
இதைப் பாலோ பண்ணியாச்சும் பிறர் சாப்பிடும் படி சமைக்கலாமில்லே.
@புலவர் சா இராமாநுசம்
கசக்கிற பாவக் காயக்கூட நீங்க
கசக்காம சமைச்சிடிங்க ஆமா
எங்க என் வலைப்பக்கம் தலை
காணோம்
வாங்க சார் இப்படி இருந்தா
எப்படி
புலவர் சா இலாமாநுசம்//
நேரம் இல்லை சகோ, கொஞ்சம் பிசி,
கண்டிப்பா உங்கள் வலைக்கு வருவேன்,
எப்படி இருக்கிறேன், நான் கதிரையில் தானே உட்கார்ந்துள்ளேன், அதுவும் தப்பா.
@கவிதை வீதி # சௌந்தர் said...
சந்தோஷம்...
தங்கள் முயற்ச்சித்து எவ்வளவு நன்றாக வந்தது என்று சொல்ல வேண்டும்.//
பாஸ், ஆல்ரெடி நான் இதனை முயற்சி பண்ணித் தான் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்,
இனிமே நீங்க தான் இந்த ரெசிப்பியை செய்து பார்த்திட்டு சொல்ல வேண்டும்.
@Kousalya
எனக்கு மிக பிடித்த காய் வித்தியாசமான முறையில்...
செஞ்சு பார்த்துட்டு சொல்றேன், சுவை எப்படி என்று !! :))
பெண்களுக்கு போட்டியா சமையல் குறிப்பு கொடுபதிலும் ஆண்கள் வந்தாச்சா ?
ம்ம்ம்...வாழ்த்துக்கள்.//
பெண்களுக்குப் போட்டியா ஒன்றுமில்லைங்கோ,
ஏதோ நம்மாலை முடிஞ்சது..
நாம சமைக்கத் தெரிஞ்சிருந்தா...
வீட்டில உள்ள பெண்கள் டீவி பெட்டியைப் பார்க்க ஒரு சின்ன உதவியாக இருக்கும் தானே.
ஹி...ஹி..
@பலே பிரபு
நிலவுக்கே போயிட்டு வந்துடலாம் போல நிரூபனுக்கு கமெண்ட் போட முடியாது போல. அரை மணி முன்னால் வந்தேன். கமெண்ட் பாக்ஸயே காணோம்.
அப்புறம் அசத்தவா? இல்லை பயமுறுத்தவா? # டவுட்டு.//
இல்லை பாஸ், முதல் இடுகையில் ஹெடிங்கிற்கு கலர் கொடுத்தேன், அது தமிழ் மணத்தில் சரியாக வரவில்லை,
ஆதலால் அதனை அழித்து விட்டு மீண்டும் ஒரு புதிய இடுகையினைப் பதிவிட்டேன்.
ஆதலால் தான் அந்த இடுகையில் கமெண்ட் போட முடியாதபடி இருந்திச்சு.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அன்பிற்கினிய உறவுகளே,/////
இருக்கிறம் சொல்லுங்கோ!//
அடிங்..இங்க என்ன தெருக் கூத்தே போடுறோம்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வாழ்க்கையில் சந்தோசமா இருக்க விரும்புகிறீர்களா? /////
ஓம் அதுக்கென்ன?//
யோ அதுக்குத் தானே ஐடியா சொல்லுறேன் பாஸ்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இல்லை உங்களுக்கு ஒரு காதலி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? /////
இல்லை ஏன்? இருக்கிறதையே கட்டி மேய்க்கேலாம இருக்கு!//
அவ், உங்களுக்கு ஏற்கனவே ஒன்னு இருக்கா. அப்போ ஹன்சிகா என்பது சும்மா உல்டாவா.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எதுவானாலும் நீங்க ஒரு மிக முக்கியமான விடயத்தினை மறந்து விடக் கூடாது. /////
என்னது? ஆட்டுக்கு கொம்பு இருக்கு! அதுவா? குரன்கில இருந்து மனுஷன் வந்தான்! அதுவா? எதை மறக்க கூடாது?
இல்லாட்டி, பஞ்சலிங்கம் விதானையாரின்ர, இளையவள் சாமத்தியப் படாக்கு முன்னமே ஆரோடையோ கதைச்சு திரிஞ்சவளாம் எண்டு, உவன் றயன் சொல்லிக்கொண்டு திரிஞ்சான்! அதுவோ?//
மவனே வந்தனெண்ட்டா, உனக்கு பெண்ட் எடுத்துப் போடுவேன்,
இது என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு..
ஊர்க் கதையை, அதுவும் விதானையாரின்ர வீட்டு ரகசியத்தை இப்படிப் போதுச் சபையில கொண்டு வந்து கொட்டுறியே, இது நியாயமா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
கிழிஞ்சுது! இதுக்கே இவ்வளவு பில்டப்?//
பின்ன எதுக்கு?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிப்பாட்டு! ஆர் ஆய்வு செய்தது? எப்ப ஆய்வு செய்தது? எங்க ஆய்வு செய்தது?//
யோ, நீர் எந்த உலகத்தில இருக்கிறீர் ஐசி?
அது அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு மச்சி.
ஏன் உதாரண்மாக உங்களை மாதிரி ஒரு இளம் பையனை எடுத்துக் கொண்டால் பாருங்கோ,
நீங்களும் வீட்டிற்கு சமைச்சு தானே கொடுக்கிறனீங்க.
இந்த ஆய்வு போதாது;-))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
என்னடாப்பா லிங்கம் கூல் பாரில ஐஸ்கிறீம் வேண்டிக்குடுத்தே அவளளவள் பிச்சுக்கொண்டு ஓடுறாளவை!
நீ என்னடா எண்டா பாவக்காய் காய்ச்சி கவுக்கச் சொல்லுறாய்! நடக்கிற கதையே இது!
சரி சொல்லு பார்ப்போம்!//
நீ என்ன ஐஸ்கிரீம் மச்சி கொடுத்தனி?
உனக்கு இன்னமும் விசயம் பிடிபடவில்லை. அது தான் அவளுங்க ஓடுறாளுங்க.
கோன் ஐஸ்கிரீம் ஒன்று வாங்கி இரண்டாப் பகிர்ந்து குடிச்சுப் பாரு..
சில வேளை சிக்கினாலும் சிக்கலாம்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அதுக்குள்ள ஒரு விளம்பரம்?//
அதான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று முன்னோர்கள் சொல்லியிருக்காங்களே,
உனக்குத் தெரியாதா மச்சி.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மஹா ஜனங்களே! இவன் ஏமாத்துறான்! பொய் சொல்லுறான்! இதை நம்பாதீங்கோ!
பாவக்காய் பிரட்டல் வைக்க இவ்வளவும் காணாது!
சட்டி வேணும், ஏப்பை வேணும் அல்லது அலுமினிய கறண்டியாவது வேணும்!
மூடுறத்துக்கு மூடி வேணும், அடுப்பு வேணும், விறகு வேணும், அதை மூட்ட கொஞ்சம் மண்ணென்னையும், தீப்பெட்டியும் வேணும்!
அடுப்பு நோந்தா ஊதுறத்துக்கு குழல் வேணும்/
இதொண்டும் இல்லாமல் கடைசி வரைக்கும் சமைக்கேலாது!சொல்லிப்போட்டன்!//
கன்ராபி, இதெல்லாம் எழுதினா ரெசிப்பி இரண்டு பக்கத்தில தான் வரும்,
பிறகு யார் வாசிக்கிறது,
நீரும் நானுமே வாசிக்கிறது.
ஹி...ஹி..
கறுமம் கறுமம். பானை சட்டி எல்லாம் சமைக்கிற ஆளுங்களுக்கு முன்னாடியே தெரிஞ்ச மேட்டரு.
@A.R.ராஜகோபாலன்
நல்ல சமையற்குறிப்பு சகோ. அதுவும் கசக்கும் பாகற்காயை பக்குவமாய்
சமைக்கும் முறையை தந்த விதம் அருமை//
நன்றி சகோ.
அப்புறம் ஏன் வெயிட்டிங்?
ஒருவாட்டி கறி ஆக்கிப் போட்டுச் சொல்லாமில்லே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
boiling எண்டா அவிக்கிறது, கொதிக்க வைக்கிறது, காய்ச்சுறது!
ஆனா நீ பாவக்காய அரைப் பருவத்துக்கு பொரிக்கச் சொல்லியிருக்கிறாய்!
பொரிக்கிறதுக்கு இங்கிலீசில frying எண்டெல்லோ வரும்! அரைப் பொரியல் எண்டா half frying எண்டுதான் வரும்!
நிலாந்தன் வாத்தியிட்ட என்ன கிழிச்சனீங்கள்?//
மச்சி, அவசர அவசரமாகப் போட்ட பதிவு மச்சி, அதாலை ஏதோ வாயில வந்த இங்கிபீஸினை எழுதிச் துலைச்சிட்டேன்,
ஆமா அதற்கு கீழ் பந்தியில் தாழிப்பது பற்றிச் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன், நீ கண்டுக்கலையா.
//*வெங்காயத்தை நீங்கள் வழமை போல உணவிற்குச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது போன்று வெட்டி, உங்களுக்குத் தேவையான அளவு மிளகாய்த் தூளுடன், வெந்தயம் முதலியவற்றையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி வதக்க/ தாழிக்கத் (Fried) தொடங்கவும். //
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதில ரெண்டு பிழை இருக்கு!
ஒண்டு - பழப்புளி எண்டா என்னவெண்டு சில வேளை தமிழக உறவுகளுக்கு விளங்காமல் இருக்கலாம்! அதையொருக்கா விளங்கப்படுத்து!
ரெண்டாவது- உங்களுக்கு தேவையான அளவு இளநீர்! எண்டா, எனக்கு நல்ல வெயில் அடிக்கேக்க 3 கோம்பை இளனி தேவைப்படும்! அதையெல்லாத்தையும் பாவக்காய் சட்டிக்குள்ள ஊத்தலாமோ?//
வழமையாப் போடுற குளிசையை நீர் போடேல்லையோ? அல்லது பதிவினை முழுமையாகப் படிக்கலையோ.
இதைக் கொஞ்சம் பார்க்கிறது.
//பழப் புளி/ Tamarind Paste//
//*பழப் புளியோடு உங்களுக்குத் தேவையான அளவு/ சிறிதளவு இளநீரையும் சேர்த்துக் குழைத்து/ பிசைந்து வைத்திருக்கவும். //
அடோய் பாவி, இதில தேவையான அளவு பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறேன் தானே,
முழுசாப் படிச்சிட்டு வந்து உல்டா விடுறது.
ஹி...ஹி...
@Mahan.Thamesh
பயனுள்ள பதிவு சகோ . உண்மையிலே எங்களை போல் தனியாக இருப்பவர்களுக்கு உதவும் //
ரொம்பச் சந்தோசம் மச்சி.
செய்து பார்த்திட்டு பதில் மடல் அனுப்புங்க. அப்புறமா நான் அடுத்த சமையற் குறிப்பைத் தருகிறேன்,
@Mahan.Thamesh
சம்சாரத்தை அசத்த இது மட்டும் போதுமா ,? இன்னும் வேணாமா,?//
இப்போதைக்கு இது மட்டும் போதும் சகோ,
இது இருந்தால் அது தானாக வருமாம்.
ஹி...ஹி..
@கவி அழகன்
அண்ணே நீங்களும் சமையல் பக்கம் போட்டீங்களா//
தம்பி நீங்க எனக்கு முன்னாடி சமைக்கத் தொடங்கிட்டீங்க, நான் இப்பத் தானே கற்றுக்கத் தொடங்கியிருக்கேன்.
ஹி..ஹி..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதில வெக்கப்பட என்ன இருக்கு? எனக்கு “ அரைச்சு காய்ச்சிறது “ எப்பிடியெண்டு ஒருக்கா விளங்கப்படுத்தவும்!
அடுத்தமாதமளவில தேவைப்படும்! ஹி ஹி ஹி!!!!//
மச்சி கண்டிப்பாக நீங்கள் கேட்ட விருப்பம் நிறைவேற்றப்படும். ஆமா யாரு மாசமா இருக்கிற ஆளு..
@ஜ.ரா.ரமேஷ் பாபு
சபாஷ் சமயற்கட்டிலும் அசத்தும் நிரூ
வாழ்த்துக்கள் சகோ..//
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆசிர்வாதமும், ஊக்கமும் தான் இதற்கெல்லாம் காரணம் சகோ.
நன்றி சகோ.
@GEETHA ACHAL
புளியினை இளநீரில் கரைத்து செய்வது, பாக்ற்காயின் கசப்பினை குறைக்குமா...அதற்காக தான் பயன்படுத்துகின்றோமா அல்லது டேஸ்டிற்காகவா...
இளநீர் சேர்ப்பது நல்ல ஐடியா...//
முதலில் இப்படியொரு காத்திரமான வினாவினைக் கேட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
நான் இளநீர் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று பதிவில் சொல்லியிருக்க வேண்டும்,
மறந்து விட்டேன்,
இளநீர் சேர்ப்பது பாகற்காயின் கசப்பினைக் குறைப்பதற்காகத் தான் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நிரு நீங்களுமா?
இந்த சமையல் உங்க அனுபவமோ?//
அப்போ நீங்களும் சமைக்கிறீங்க இல்லே,.
என் அம்மாவின் அனுபவம் தான் இந்தச் சமையல்.
அவா அருளிய ரெசிப்பியைக் கொண்டு தான் நானே இப்போது சமைக்கிறேன் சகோ.
மச்சி, அவசர அவசரமாகப் போட்ட பதிவு மச்சி, அதாலை ஏதோ வாயில வந்த இங்கிபீஸினை எழுதிச் துலைச்சிட்டேன்,
ஆமா அதற்கு கீழ் பந்தியில் தாழிப்பது பற்றிச் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன், நீ கண்டுக்கலையா.
//*வெங்காயத்தை நீங்கள் வழமை போல உணவிற்குச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது போன்று வெட்டி, உங்களுக்குத் தேவையான அளவு மிளகாய்த் தூளுடன், வெந்தயம் முதலியவற்றையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி வதக்க/ தாழிக்கத் (Fried) தொடங்கவும். //
June 17, 2011 12:09 AM
மச்சி மேல பிழைவிட்டுட்டு, அதை கீழ சரிப்பண்ணலாம் எண்டு நினைக்காத!
மேலையும் சரியா இருக்கோணும், கீழையும் சரியா இருக்கோணும்! அப்பத்தான் அது சரி!
இங்கிலீசு கிரம்மர் பத்திதான் சொல்லுறன்!
@ஆர்.கே.சதீஷ்குமார்
அசத்தல் கலக்குங்க//
நன்றி சகோ.
@shanmugavel
நிருவிர்க்கு பாகற்காய் ரொம்ப பிடிக்குமோ?//
ரொம்ப எல்லாம் இல்ல சகோ, ஏதோ கொஞ்சம் பிடிக்கும்.
@shanmugavel
ஐயோ எனக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்கும்.ஆனால் அப்புறம் கால் கிலோ பால்கோவா வேண்டும்.//
பால்கோவா இல்லாமலே நீங்க அருமையாக சமைக்கக் கூடிய ரெசிப்பி தான் இது சகோ.
ஒருக்கா ட்ரை பண்ணிப் பார்த்து விட்டுச் சொல்லுங்க சகோ.
@vidivelli
vaalththukkal..........
nalla pathivu.........
!!!!!!namma pakkamum kaaththirukku unkalukkaaka!!....//
பாஸ், கொஞ்சம் பிசி பாஸ்,
டைம் இருக்கும் போது கண்டிப்பா வருவேன்.
@மைந்தன் சிவா
ஹிஹி பயபுள்ள தலையை நீட்டப் போகிறது...//
அவ்...அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை பாஸ்,
@மைந்தன் சிவா
ஹிஹி சொல்லிக்குடுக்கிறது தான் குடுக்கிறது நல்ல கறியா சொல்லி குடுக்கிறது...பாவக்காய் கசக்கும் ஹிஹி//
மச்சி கசக்காலம் சமைக்கத் தான் இளநீரோடு சேர்த்துக் சமைப்பது எப்படி என்று விளக்கியிருக்கிறேன், நேரம் கிடைக்கும் போது ட்ரை பண்ணினீங்க என்றால் எதிர்காலத்தில் உங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
@சென்னை பித்தன்
கல்யாண மார்க்கெட்டில் உங்களுக்கு கிராக்கிதான்!படத்தில நல்லாத்தான் இருக்கு;சாப்பிட்டலும் நல்லாருக்கும்னு நம்புகிறேன்!//
நன்றி ஐயா.
@koodal bala
காதல் கசந்துவிடாமல் இருக்க வேண்டும் .......//
நன்றி சகோ.
@ரிஷபன்
சமையலிலும் மன்னரா.. பேஷ்.. பேஷ்.//
எல்லாம் உங்களைப் போன்ற உள்ளங்களுக்காத் தான் சகோ.
நன்றி சகோ.
என்னமோ,ஏதோ என்று வந்தால்?இதுவெல்லாம் நமக்கு "பிசுக்கோத்து" சமாச்சாரம்!காத கிட்ட கொண்டு வாருங்கோ,ஒரு ரேசியம் சொல்லுறன்:இதில கமண்டின எல்லாருக்கும் சமைக்க தெரியும்!சும்மா பில்டாப்பு குடுக்கீனம்!!!!!!!!!!!!!!
@தமிழ்வாசி - Prakash
நிரு... பாவக்காய் தான் கிடைத்ததா....? முதல் சமையல் குறிப்பே ரொம்ப கசக்குது.. இருந்தும் செய்து பாக்கலாம்.//
இது கசக்காத சமையற் குறிப்பு மாப்ளே,
சமைக்கும் போது நான் பதிவில் கூறியது போல நீங்கள் இளநீர் சேர்த்தால் கசப்பு இன்றிச் சுவையான பாகற்காயினைச் சமைத்து உண்ணலாம் சகோ.
@குணசேகரன்...
உங்க தைரியம் எனக்கு புடிச்சுருக்கு//
ஹி...ஹி..நக்கலு.
@Yoga.s.FR
என்னமோ,ஏதோ என்று வந்தால்?இதுவெல்லாம் நமக்கு "பிசுக்கோத்து" சமாச்சாரம்!காத கிட்ட கொண்டு வாருங்கோ,ஒரு ரேசியம் சொல்லுறன்:இதில கமண்டின எல்லாருக்கும் சமைக்க தெரியும்!சும்மா பில்டாப்பு குடுக்கீனம்!!!!!!!!!!!!!!//
ஆமா ஐயா, இந்தக் காலப் பசங்களுக்கு சமையல் அத்துப்படி, வீட்டில மட்டும் சமையற்காரனாக இருந்து விட்டு, வெளியில நன்றாக நடிக்கிறாங்க ஐயா.
நிரூபன் said...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதில வெக்கப்பட என்ன இருக்கு? எனக்கு “ அரைச்சு காய்ச்சிறது “ எப்பிடியெண்டு ஒருக்கா விளங்கப்படுத்தவும்!
அடுத்தமாதமளவில தேவைப்படும்! ஹி ஹி ஹி!!!!//
மச்சி கண்டிப்பாக நீங்கள் கேட்ட விருப்பம் நிறைவேற்றப்படும். ஆமா யாரு மாசமா இருக்கிற ஆளு?///வேற ஆர்?"தும்மின"வளாத் தானிருக்கும்!///
நல்ல ஒரு ஹெல்தி ரெசிபி தான் தந்திருக்கீங்க .இளநீர் சேர்ப்பது பற்றி இப்பதான் கேள்விபடறேன். நான் இதுவரைக்கும் தயிர் சேர்த்து தான் சமைதிருகிறேன் .படம் பசிய தூண்டுது.
(அப்படியே வரிசையா சீனி சம்பல் , தட்டை மாதிரி இருக்குமே அது, மீன் குழம்பு எல்லா ரெசிபியும் போட்ருங்க) .
நிரூ, முதல் சமையல் குறிப்பா??? பாவற்காய் தான் கிடைச்சுதா? இதைப் பார்த்து சமைச்சு எத்தனை வீடுகளில் ஆண்களுக்கு பிரச்சினைகள் வரப் போவுதோ தெரியவில்லை.
@vanathy
நிரூ, முதல் சமையல் குறிப்பா??? பாவற்காய் தான் கிடைச்சுதா? இதைப் பார்த்து சமைச்சு எத்தனை வீடுகளில் ஆண்களுக்கு பிரச்சினைகள் வரப் போவுதோ தெரியவில்லை//
இலங்கை மிளகாய்த் தூள் தயாரிப்பது பற்றிய விளக்கத்தினைத் தொடர்ந்து வந்துள்ள முதலாவது சமையற் குறிப்புத் தான் இது,
இன்னும் பல ரெசிப்பிகள் கைவசம் இருக்கு. வெகு விரைவில் வரும்.
@angelin
நல்ல ஒரு ஹெல்தி ரெசிபி தான் தந்திருக்கீங்க .இளநீர் சேர்ப்பது பற்றி இப்பதான் கேள்விபடறேன். நான் இதுவரைக்கும் தயிர் சேர்த்து தான் சமைதிருகிறேன் .படம் பசிய தூண்டுது.
(அப்படியே வரிசையா சீனி சம்பல் , தட்டை மாதிரி இருக்குமே அது, மீன் குழம்பு எல்லா ரெசிபியும் போட்ருங்க) //
ஆமா,, வெகு விரைவில் சீனிச் சம்பல் செய்வது?
அரைத்து குழம்பு வைப்பதெப்படி என பல ரெசிப்பிகளைத் தாறேன்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோ.
@ஹேமா
நிரூ...ஏனோ உங்கள் பதிவுகள் எனக்குப் பிந்தியே கிடைக்கிறது.
காரணம் தெரியவில்லை.இப்போகூட 0 விநாடி என்று காட்டுகிறது.எங்கே உங்கள் பதிவுகளைக் காணவில்லையே என்று நானாகத் தேடி வந்தேன் !//
ஓ அதுவா, என் ப்ளாக்கிற்கு நீங்கள் கொடுத்துள்ள பாலோவர்ஸினை நீக்கி விட்டுப் புதிதாக மீண்டும் என் ப்ளாக்கில் Followres ஆக புதிதாக இணைய வேண்டும், என் வலையின் முகவரியை மாற்றிய பின்னர், நான் ஒரு அறிவித்தல் தந்தேன். நீங்கள் அதனைக் கவனிக்கவில்லைப் போல,
//ம்ம்...எனக்குப் பிடித்த பாகற்காய்க்கறி.இது யாழ்ப்பாணத்து சமையல் முறை.நானும் இப்படித்தான் சமைக்கிறேன்.
அதென்ன சம்சாரத்தை அசத்துறது !//
அடடா, சமைத்துப் பார்த்த பின்னர் மறந்திடாமல் உங்களின் கருத்தினையும் சொல்லுங்கோ,
சம்சாரத்தை அசத்துறது என்றால், மயக்கிறது.
இப்போ பெண்கள் ஆண்களைச் சமைச்சுக் கொடுத்துக் கையிற்குள் போட்டுக் கொள்ளுவாங்க என்று சொல்லுவார்களே,
அது மாதிரித் தான் இதுவும்...
ஹி..ஹி...
பாவக்காய் வேண்டாம் வேற எதாவது சொல்லிதாங்கோ.....குருஜி...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid//மேலையும் சரியா இருக்கோணும், கீழையும் சரியா இருக்கோணும்!அப்பத்தான் அது சரி//மேல,மூளையை சொல்லுறீங்களா,முடியை சொல்லுறீங்களா?கீழ,செருப்பை சொல்லுறீங்களா,காச்சட்டைய சொல்லுறீங்களா?
புலவர் சா இராமாநுசம்said...
கசக்கிற பாவக் காயக்கூட நீங்க கசக்காம சமைச்சிடிங்க///பாவக்காய "கசக்காம" தான் ஐயா சமைக்க வேண்டும்!கசக்கினால் இன்னும் அதிகம் "கசக்கும்"!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid//யோவ் சம்சாரத்த அசத்துறத்துக்கு“வேறு’சில நல்ல வழிகள் இருக்கும் போது,எதுக்கு வீணாக சமைக்கணும்?//அதான?"கசக்கிற"பொருள் தான் கிடைச்சுதா???????????
குணசேகரன்...said...
உங்க தைரியம் எனக்கு புடிச்சுருக்கு//சரி,சரி சத்தம் போடாதீங்க!வெளிய தெரிஞ்சிடப் போவுது!!!!!!!!
சூப்பர் சமையல் அசத்துறீங்க. அப்ப ஊட்டுகாரம்மா நம்பி சாப்பிடலாம்..[இதுவர வராமயிருந்தா பயப்புடாம வா தாயி;;]
அது சரி.. சம்சபரத்தை அசத்த காரமும், கைப்புமான சுவைகள்தான் கிடைக்குதா???
உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நல்லா புரியுது போங்க :))
வீட்டுல தான் தாங்க முடியலன்னா , இங்கேயும் பாகற்காயா ? போதுமடா சாமி
Post a Comment