'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....
அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர்,
’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்?
உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!!
மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான்.
காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் நிலையிருந்தும் உணவினை மறக்கச் செய்யும். தூங்கும் வேளையிலும் விழிப்பைத் தந்து கனவில் அவளுடனோ இல்லை அவனுடனோ உலகின் எங்கோ ஓர் மூலையில் உள்ள பசுமை மிகு நிலத்தில் காதல் டூயட் பாடி ஆட வைக்கும். இந்தக் காதல் பலருக்குப் பல வித உணர்வுகளைத் தோற்று விக்கும்.
பாசத்தின் இருப்பிடத்திற்கு ஆதாரமாய் இந்தக் காதல் மனித மனங்களுக்குள் வியாபித்திருக்கும்.
‘உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்’’
என்று பேசிய படி வகுப்பறைக்குள் இருந்த பதினெட்டு மாணவிகளுக்குள் நடு வரிசையில் இருந்த நேமிசாவை அவன் கண்கள் தேடிக் கொண்டிருந்தது.
தன் மனமெனும் குவியத்தினூடாகப் பட்டுத் தெறிப்படையும் உணர்ச்சியலைகளை, காதற் பெரு மூச்சாக்கி,
ஒன்று திரட்டி, மூளையெனும் கடத்தி மூலம் செயற் பட வைத்து கண் எனும் பரா லைட்டின் மூலம் நேமிசாவின் கண்ணில் வெளிச்சம் பாய்ச்சினான் மிருதுளன்.
இவை யாவும் ஒரு கணப் பொழுதினுள் நடந்தேறிட, தன் நிலையுணர்ந்து, அடடா மீண்டும் ட்ராக் மாறி விட்டோமே,
‘உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்’’
எனும் உணர்வுகளைக், கவிதைக்கு வேண்டிய கற்பனைகளைத் தந்து விடும் வல்லமை கொண்டது தான் இந்தக் காதல் என எங்கேயோ தொடங்கி, எங்கோயோ சொருகி, இடையில் பேச்சிற்கான தலைப்பிற்குச் சம்பந்தமில்லாத விடயங்களைச் செருகித் தனது பேச்சினை நிறைவு செய்தான் மிருதுளன்.
அவள், என் நினைவுகளைக் கிளறி விட்டு, உணர்வுகளை நீந்தச் செய்து விட்டு மௌனித்திருக்கிறாளே! எத்தனை நாளைக்குத் தான் இப்படி இருப்பாள், விரைவில் அவளிடம் என் மன நிலையினை உரைத்துப் பதில் பெற்றே தீருவேன் என மீண்டும் மீண்டும் அவளைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கத் தொடங்கினான் மிருதுளன்.
நேமிசா, வட்டக்கச்சி விதானையாரின் மூன்று பெண் பிள்ளைகளுக்குள் வந்து இடையில் செருகிக் கொண்ட இரண்டாமவள். நேமிசாவில் தான் வன்னியூரின் வளங்களில் இருந்து பெறப்பட்ட அழகு சேர்க்கும் தாவரங்களின் ஜீன்களை எல்லாம் பிரம்மன் ஒட்டிப் பிசைந்து உயிர் கொடுத்து ஓவியமாக்கியிருப்பான் என எல்லோரும் எண்ணி வியந்து கொள்வார்கள்.
வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல ஆண்கள் மனதிற்குள் தாகத் தீயை வார்த்துச் செல்வதிலும், தன் கூந்தல் அசைவோடு ஆண்களின் மனம்- உணர்வுகள் அனைத்தையும் அசைத்துச் செல்லக் கூடிய வல்லமையும்
நேமிசாவின் அழகிற்கு இருந்தது.
அழகென்றால் அப்படி ஒரு அழகு! அவளது அம்மம்மா தெய்வானை ‘என்ரை பேத்தியைத் தொடுவதென்றால் சவர்க்காரம் போட்டுக் கை கழுவித் தான் தொட வேண்டும்’ பாலப் பழம் போன்ற நிறம் என்ரை பேத்தி எனச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளுவா.
இத்தனை அழகுகளும் ஒருங்கு சேர்ந்த ஒற்றைச் சிலையினைத் தூண்டில் போட்டு வளைத்துப் பிடிக்கப் பல உள்ளங்கள் மாலை வேளையில் வீதியெல்லாம் படையெடுத்தாலும், அதிஷ்டம் மிருதுளனுக்குத் தான் என்பது மட்டும் எழுதப்படாத விதியாக இருந்தது.
நேமிசாவின் நெற்றியோடு தன் விழிப் பார்வைகளைக் கலக்கச் செய்வதற்காய் ஒவ்வோர் நாளும் தவறாது பாடசாலைக்குப் போகும் மிருதுளன்,
ஒரு நாள் வேண்டுமென்றே பாடசாலைக்குப் போகாமல் நின்றான்.
அடுத்த நாள் பாடசாலைக்குச் சென்றதும்,
நேமிசா, நேற்று நான் பள்ளிக் கூடம் வரவில்லைத் தானே,
உங்கடை சயன்ஸ் நோட் புக்கை ஒருக்கா தர முடியுமோ?
வீட்டை கொண்டு போய் விடுபட்ட குறிப்புக்களை எழுதிப் போட்டு, நாளைக்கு கட்டாயமா திரும்பவும் கொண்டு வந்து தாறேன்’
நேமிசா பிகு பண்ணத் தொடங்கினாள்.
ஆண்கள் சமரசமாய் தமக்கேயுரிய நிலமையிலிருந்தும் கீழிறங்கிப் பணிந்து பேசுவது பெண்களுக்குச் சாதகமான வழி என்பதை உணராத அப்பாவிப் பெண்ணல்ல நேமிசா,
’நோட் புக் வேணுமென்றால் வேறு யாரிடமும் கேட்கலாம் தானே?
என்னிடம் ஏன் கேட்கிறீங்க?
இல்லை, நீங்க தானே வகுப்பில நல்லா படிக்கிற பொண்ணு, அதோட உங்களோட ஹாண்ட் ரைற்றிங்(Hand Writing) தானே வடிவா இருக்கும், அதான் உங்களிட்ட கொப்பியை வாங்கினால் புரிந்து கொள்வதில் எனக்கு கஷ்டம் இருக்காது தானே, என்ன, தாறீங்களா?
‘இனியும் பிகு பண்ணல் தவறென்று உணர்ந்து ஓக்கே நான் நோட் புக் தாறேன், ஆனால் பத்திரமா நீங்க திருப்பிக் கொண்டு வந்து தந்திடனும், என் வாழ்க்கையே இதில தான் இருக்கு. அம்பலத்தார் காணியிற்குள் கள்ள மாங்காய் புடுங்கப் போகும் போது கொப்பியை மறந்து போய் விட்டிட்டுப் போறேல்லை, என ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டு நோட் புக்கினை மிருதுளனிடம் கையளித்தாள் நேமிசா.
மிருதுளன் பள்ளிக்குப் போகாத காரணத்தால் விடுபட்ட தனது பாடக் குறிப்புக்களை எழுதத் தொடங்கினான். பாதிப் பக்கம் எழுதி முடிய முன்பே அவளின் நினைவுகள் கொண்டல் காற்றில் அவனைத் தாலாட்ட....வீட்டில் யாராவது தன் மேசைக்கு வருகிறார்களா என்பதைப் பார்த்து விட்டு,
நெஞ்சோடு அணைத்தான், மேலும் கீழும் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான். கொப்பிக்கு முத்தம் கொடுத்தான்.
தீடீரென்று காதல் நரம்புகள் கிளர்ந்தெழுந்து அவனின் மூச்சுக் காற்றினுள் அவளைப் பற்றிய புரிதல்களைக் கிளறிப் போட,
அவளது கொப்பியில் நேமிசா எழுதாது விட்ட நோட்ஸ் ஒன்றினைத் தேடி எடுத்து எழுதி முடித்தான். கொப்பியின் பின் புற மட்டையைப் பார்த்தான்.
’மிருதுவான தேகம் பூனைகளுக்கு மட்டுமல்ல-
பார்வைகளால் எனைக் கொல்லும்
மிருதுளனுக்கும் பொருந்தும்!
என அவள் காதல் டிசைன் போட்டு எழுதியிருந்தாள். காதல் அம்புக் குறியின் கீழே MN என அவள் வர்ணம் தீட்டியிருந்தான்.
(இப் பட உதவி: சகோதரன்- நிகழ்வுகள் வலைப்பதிவு கந்தசாமி)
மிருதுளன் தெளிந்தான். காதல் மோட்சம் கிடைக்கவுள்ளதாய் கனவு காணத் தொடங்கினான். அவளது கொப்பியில் அதே வரிகளுக்கு கீழே
‘மனசிற்குள் மறைக்கின்ற நியாயம் என்ன?
மௌனத்தால் கொல்கின்ற வேசம் என்ன?
என எழுதி விட்டுத் தூங்கி விட்டான். மறு நாள் அவளிடம் பள்ளியில் வைத்துக் கொப்பியைக் குடுத்தான்.
அவளின் வசனத்தை அவன் படித்ததாகவோ, அவனின் வசனத்தை அவள் படித்ததாகவோ இருவரும் காட்டிக் கொள்ளவில்லை. சில நாட்களின் பின் ஒரு கடிதம் எழுதினான் மிருதுளன், தன் மனதின் எண்ண அலைகளை நான்கு பக்களில் கொட்டித் தீர்த்தான். வர்ணங்கள் தீட்டி, மேலும் கீழும் என கொப்பி ஒற்றையின் எல்லாப் புறமும் காதல் கவி வரிகளை எழுதி அவளிடம் கொடுத்தான் மிருதுளன்.
நாளடைவில் மிருதுளனுக்கு நேமிசா பதிற் கடிதம் வரைந்தாள்.
‘அன்பால் எனைக் கொன்று, உன் அழகால் என் மனதை வென்று, என்னுள் உறைந்திருகும் உயிரே!
என்றென்றும் என் மனங் கவர்ந்த மிருதுளனே, எனத் தொடங்கித் தன் மன ஓட்டங்களை, எட்டுப் பக்கங்களில் வடித்துக் கொடுத்தாள் நேமிசா.
மிருதுளன் இப்போது புதியதோர் உலகில் பறக்கத் தொடங்கினான். ரெட்பானா- விசுவமடு வீதியெங்கும் அவன் காற்றில் மிதப்பது போலக் கனவு காணத் தொடங்கினான். அவள் பெயரை நினைத்தாலே போதும், மனதிற்குள் எழுகின்ற இன்ப அலை மெது மெதுவாக கீழிறங்கி ஐஸ் கட்டி ஏதுமின்றி நடு வயிற்றினைக் குளிர் விக்கும் ஒரு அசிட்டினைச் சுரப்பது போன்ற உணர்வினைப் பெற்றான்.
வாரத்தில் ஒரு நாள் வீட்டாருக்குத் தெரியாது சந்திப்பதென்றும், வட்டக்கச்சி கந்தசுவாமி கோயிலின் பின் புறம் தான் தமது ரகசியச் சந்திப்பிற்கான பேச்சுவார்த்தை மேடை என்பதையும் தீர்மானித்தார்கள்.
நாளடவில் வாரத்தில் ஒரு நாள் என்பது, காதலின் முற்றிய நிலையின் காரணத்தால் வாரத்தில் இரு நாளாக மாற்றமுறத் தொடங்குகிறது.
மிருதுளன் அவளைக் காணாத வேளைகளில், தன்னை மறந்தவனாய் அவள் நினைவுகளில் மூழ்கத் தொடங்குவான். அவள் இரட்டைப் பின்னல் கூந்தலோடு சைக்கிள் ஓடி வரும் அழகினைத் தனக்குள் மீண்டும், மீண்டும் கற்பனை செய்து மகிழ்ந்து கொள்வான்.
இந்த முறைக் கடிதத்தில் இப்படி எழுதுவோம் என முடிவெடுத்தான்,
’ஒட்டாமல் எட்ட நின்று பேசுவதன் அர்த்தமென்ன- உதடு
முட்டாமல் காதல் செய்யும் மர்மமென்ன??
காதலில் கிடைக்கும் முதல் முத்தம் இருக்கிறதே, அது எந்தக் காலத்திலும் மனசை விட்டு நீங்கி விடாது. அந்த முதல் முத்தத்தை நினைத்து - நினைத்து மனதில் பசுமை நினைவுகள் தாலாட்ட வாழும் உணர்வானது, வார்த்தைகளுக்குள் உள்ளடக்கி கற்பனா ரதத்தில் ஏற்றி வரக் கூடிய எளிமையான உணர்வென்று கூறி விட முடியாது.
அத்தகைய ஓர் உணர்வினைப் பெறுவதற்காய் மிருதுளன், நேமிசா இருவரும் காத்திருந்தார்கள். வெள்ளிக் கிழமை கந்த சுவாமியாரின் கோயில் பூஜை முடிந்த பிற்பாடு, நேமிசா குளக்கட்டின் வழியே முத்தம் வாங்கும் ஆசை மனதினுள் மையமிட, மிருதுளனைத் தேடி கோயிலுக்கு வருகிறாள்.
மிருதுளன் நாவில் எச்சில் முழுவதையும் தேக்கி, குருதிப் பரிமாற்றம் செய்வதற்காய் காத்திருக்கிறான்.
நேமிசா தனது சைக்கிளைப் பார்க் பண்ணி விட்டு வரும் வேளையில் தீடீரென வான் பரப்பில் இருந்து வட்டமிட்டுத் தாழப் பறந்த படி கிபிர் விமானங்கள் இரண்டு வட்டக்ச்சியினை நோக்கி உயிர் குடிக்கும் ஆசையில் வருகின்றன. வட்டக்கச்சி கோயிலுக்கு அருகாமையில் போட்ட குண்டுகள் தெறித்து வந்து நேமிசாவின் உடலைத் துளைத்துக் கொள்ள அவள் தரையில் சாய்ந்து விழுகிறாள்.
மிருதுளன் தன் உயிரினைப் பாதுகாப்பதா, இல்லை நேமிசாவின் உடலினைத் தாங்குவதா எனத் தெரியாதவனாய்ப் பிரம்மை பிடித்து நிற்கையில், தாம் வந்த நோக்கம் நிறை வேறிய மகிழ்ச்சியில் போர் விமானங்கள் இரண்டும் தம் இருப்பிடம் நோக்கி நகர்கின்றன. மிருதுளன் மட்டும் நேமிசாவின் நினைப்பில் அழுது கொண்டு அவள் உடலைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்குகிறான்.
எங்கிருந்தோ திடீரெனப் பறந்து வந்த ஆட்டிலறி ஷெல் ஒன்று மிருதுளனின் தலையினைச் சீவிக் கொண்டு சென்றது. அவ் வேளையில் வன்னிப் பெரு நிலப்பரப்பு முழுவதும் வெடியோசையால் அதிரத் தொடங்கியது. கிளி நொச்சி மாவட்டம் பாரிய இடப் பெயர்விற்காகத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்க, மிருதுளன் நேமிசாவின் உடலினை வீதியில் போட்டு விட்டு, இடம் பெயர்ந்து செல்லும் மக்களோடு தானும் நடக்கத் தொடங்கினான்!!
டிஸ்கி: இக் கதைக்கான காதல் சின்னப் போட்டோ உதவி, சகோதரன்- நிகழ்வுகள் வலைப்பதிவு கந்தசாமி)
|
62 Comments:
முதல் வடை இன்று எனக்கே எனக்கா?
காதல் கதை எழுத ஆரம்பிச்சிட்டாரு மாப்பு.. எவகிட்ட மாட்டினாரோ???
//அவளது கொப்பியில் நேமிசா எழுதாது விட்ட நோட்ஸ் ஒன்றினைத் தேடி எடுத்து எழுதி முடித்தான்.//
இந்த அனுபவம் நமக்கும் இருக்கு.. ஹி ஹி..
அவ் அழகான லவ் ஸ்டோரிய பிரிச்சுட்டிரே மாப்பு.. :(((((
வன்னியின் சோகம் தோய்ந்த நிகழ்வுகளுக்கு உங்க கதையும் ஒரு ஆதாரம்..
வளமான தமிழ் கதையினை ஆக்கிரமிச்சு நிற்குது சகோ.. வாழ்த்துக்கள்.
மாப்ள உன் கருத்துக்களை காதல் தூவி அளிக்க தொடங்கி இருக்கிறாய்...தொடர்வாயாக நன்றி!
அட ச்சீ...கொஞ்சம் முந்தி இருந்தா வடை எனக்கு
அட ச்சீ...கொஞ்சம் முந்தி இருந்தா வடை எனக்கு
அட ச்சீ...கொஞ்சம் முந்தி இருந்தா வடை எனக்கு
அட ச்சீ...கொஞ்சம் முந்தி இருந்தா வடை எனக்கு
//அவளது அம்மம்மா தெய்வானை ‘//
ஓகே ஓகே
//நேமிசா, நேற்று நான் பள்ளிக் கூடம் வரவில்லைத் தானே,
உங்கடை சயன்ஸ் நோட் புக்கை ஒருக்கா தர முடியுமோ?
வீட்டை கொண்டு போய் விடுபட்ட குறிப்புக்களை எழுதிப் போட்டு, நாளைக்கு கட்டாயமா திரும்பவும் கொண்டு வந்து தாறேன்’//
ஹிஹி இப்பிடித்தானே பாடசாலை காதல் ஆரம்பிக்கிறது!!
//இல்லை, நீங்க தானே வகுப்பில நல்லா படிக்கிற பொண்ணு, அதோட உங்களோட ஹாண்ட் ரைற்றிங்(Hand Writing) தானே வடிவா இருக்கும், அதான் உங்களிட்ட கொப்பியை வாங்கினால் புரிந்து கொள்வதில் எனக்கு கஷ்டம் இருக்காது தானே, என்ன, தாறீங்களா?///
அடே அடே அள்ளி அள்ளி வைக்கிறான் பயபுள்ள வாளி ஐஸ் எல்லாம்!!!
//’ஒட்டாமல் எட்ட நின்று பேசுவதன் அர்த்தமென்ன- உதடு
முட்டாமல் காதல் செய்யும் மர்மமென்ன??///
அட நவீன வள்ளுவரே...கொல்லுறீங்க போங்க!!
//’ஒட்டாமல் எட்ட நின்று பேசுவதன் அர்த்தமென்ன- உதடு
முட்டாமல் காதல் செய்யும் மர்மமென்ன??///
அட நவீன வள்ளுவரே...கொல்லுறீங்க போங்க!!
என்னய்யா நல்ல மாதிரி ஆரம்பிச்சிட்டு இப்பிடி முடிச்சிட்டீங்க??
உங்கள் தமிழில் கதை கேட்பது சுகமோ சுகம் ....
காதலும் சோகமும் நெஞ்சை தொட்டது
காதலை இவ்வளவு அழகாக சொல்லும் நீங்க சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுங்க
http://kaviyulagam.blogspot.com/2011/06/blog-post_15.html
ஹன்சிகா எனக்கா ஓட்டவடைக்கா??எக்ஸ்க்ளூசிவ் போட்டி!!
பதினெட்டு மாணவிகளுக்குள் நடு வரிசையில் இருந்த நேமிசாவை அவன் கண்கள் தேடிக் கொண்டிருந்தது.>>>>
அவன் ரூட் விடுறான் பாருங்க...
மாப்ளே! காதல் கொப்பழிக்குது உன் வரிகளில்...
//உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்//
மிக அழகான வரிகள்.
கதை இல்ல கவிதை இல்ல கதை இல்ல கவிதை இது என்ன குழப்பம் இது கவிதை கதை.
நல்லா இருக்கு நிரூ வாழ்த்துக்கள்.
எழுத்துலே ரொம்பதான் விளை
யாடறிங்க நிரு
எதைஎழுதினாலும் எல்லாரும்
படிக்கிற மாதிரி ஏன்,முழுதும்
படிக்கிற மாதிரி எழுதிரீங்க
தொடரட்டும்
புலவர் சா இராமாநுசம்
மச்சி நான் அப்புறமா வர்ரேன்! இப்போ ஹன்சிகாகூட ஸ்கைப்ல பேசிக்கிட்டு இருக்கேன்! ஹி ஹி ஹி !!!
மிக அற்புதமான கதை..
தெளிவான நடை,
எளிய தமிழ் அசத்தல் நண்பா..
மென்மையான காதல் கதையொன்றை இப்படி முடித்து விட்டீர்களே? உண்மையில் எத்தனையோ இதுபோல் நடந்திருக்கலாம்.துள்ளலுடன் படிக்கத்தொடங்கிய நான்,துவண்டு போனேன் முடிவில் நண்பரே!
பாவம் அந்த வட்டக்கச்சி விதானையாரோட பொண்ணு! சாகடிச்சிடீங்களே பாஸ்!
கதையும் கவிதையும் சேர்த்து "ஒன்றுக்குள் இரண்டை"வைத்து
கலக்கோ கலக்கென்று கலக்குகின்றீர்கள் சகோ.
அருமை!... அருமை!.. வாழ்த்துக்கள் சகோ.............
ஆஹா நல்லயிருக்கே. நோய் ஒண்டாய்த்தான் இருக்கும் ஆனால் பெடியளுக்கு நோயக்கான காரணக்கிருமிகள்தான் அடிக்கடி மாறிக்கொண்டு இருக்கும் எண்டு நினைக்கிறன்
மாப்பூக்கு காதல் களைகட்டுது எழுத்தில் தேன் பாயுது வாசிக்கும் எனக்கும் பிடிக்குது காதல் கிறுக்கு என்றாலும் வேண்டாம் இந்த தவிப்பான முடிப்பு!
சோப்பும் சம்போவும் கட்டுப்பாடு போட செய்தி தெரியாத தெய்வானைப் பாட்டிக்கு கொழுப்பு பாலாப்பழத்தைவிட அதிகம்தான்!
விதானைமாரின் மகள்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு கரும்போ இப்படி வாளி, வாளியாக வழிகிறீங்க.
""‘உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்’’""
அமுதம் தோய்த்து எழுதிய வரிகள்
காதல் பித்து பிடித்த பரிகள்
எழுத்துக்களில் இலக்கிய நயம் தேனாக சொட்டுகிறது பாஸ் ...
///‘உன் பார்வைகள் மூலம் எனக்குப் பதில் கிடைக்கும் என ஏங்கிக் கிடக்கிறேன்
பெண் பார்வையில் காந்தம் இல்லை எனும் நோக்கில் நீயோ மௌனித்திருக்கிறாய்’’/// சூப்பர் வரிகள் ...
////நேமிசா, வட்டக்கச்சி விதானையாரின் மூன்று பெண் பிள்ளைகளுக்குள் வந்து இடையில் செருகிக் கொண்ட இரண்டாமவள். //// விதானையார் ஊரில உங்களை நல்லா தான் காச்சி எடுத்திருக்கார் போல, அதன் பிரதிபலிப்பு தான் இது ஹிஹிஹி
’ஒட்டாமல் எட்ட நின்று பேசுவதன் அர்த்தமென்ன- உதடு
முட்டாமல் காதல் செய்யும் மர்மமென்ன??
காதலும் காமமும் சரியான
விதத்திலும் விகிதத்திலும்
கொப்பளிக்கும் அழகு
அற்புதம் சகோ
///மிருதுளன்// அழகான பேர் ,பிற்காலத்தில் எனக்கு உதவும் ஹிஹிஹி
////மைந்தன் சிவா said...
//அவளது அம்மம்மா தெய்வானை ‘//
ஓகே ஓகே
/////// அப்பிடின்னா விதானையாருக்கு வள்ளி என்ற பெயரில இன்னுமொரு மனிசி இருப்பார் என்று நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு தோணுது...)))
""மிருதுளன் நேமிசாவின் உடலினை வீதியில் போட்டு விட்டு, இடம் பெயர்ந்து செல்லும் மக்களோடு தானும் நடக்கத் தொடங்கினான்!! ""
ஆட்டிலறி ஷெல் ஒன்று மிருதுளனின் தலையினைச் சீவிக் கொண்டு மட்டும் போகவில்லை சகோ என்னுடைய மனதினையும் தான்
ஏன் இந்த சோகமான முடிவு சகோ , நிஜத்தில் நடக்கட்டும்
கதையிலாவது சந்தோஷம் கொள்ளாகூடாதா???
வட்டக்கச்சி பெயரை கேக்கவே வாய் ஊருது
அந்த காதல் கதை வாசிக்கக மனசு பொங்குது
hi hi ஹி ஹி செம கில்மா
க்ளைமாக்ஸ்ல ஏன் கொல்மா?
ஒரு உரைநடைக்கவிதையை வாசித்தேன்...
அப்புதமான நடை மற்றும் வார்த்தைகள்..
நான் வருவதற்க்குள் அதிகம்பேர் வந்து விரிவாக சொல்லிவிடுகிறார்கள் ஆகையால் நான் எளிமையாக முடித்துக் கொள்கிறேன்..
//'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....//
இது இப்ப தொடங்கின டையலொக் ஆச்சே.
மீண்டும் வணக்கம் நிரூபன்!
எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்துள்ளது! தொடக்கத்திலிருந்து விறு விறுப்பாகவும் கலகலப்பாகவும் சென்று கடைசியில், இப்படி கொண்டு வந்து முடித்து விட்டீர்கள்!!
எத்தனையோ கனவுகளுடனும் கற்பனைகளுடனும், ஆசைகளுடனும் வாழ்ந்த எத்தனையோ உயிர்கள் இன்று மண்ணுக்குள்! அவையனைத்துக்கும் அஞ்சலி செய்வது போல, இக்கதை அமைந்துள்ளது!
தூக்கத்தை கெடுக்கும் அதிசய நோய்! ::::
கதையின் தலைப்பு எனக்குப் பிடிக்கவில்லை! இது கதைக்குப் பொருந்தவில்லை!
நிரு இது ஒரு காமெடி பதிவு அல்ல! இன்று கும்மிக்கு இடமில்லை! இன்றைய பதிவு ஒரு வலி நிறைந்த பதிவு!
இச்சிறுகதை - ஒரு காலகட்டத்தை எம் கண்முன்னே கொண்டு வருகிறது! ஒரு காலத்தில் எமது வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை மிக இயல்பாக எடுத்துச் சொல்கிறது!
எமது வாழ்க்கை, எமது வலிகள், எமது ஏமாற்றங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது!
மிக அழகான இந்தச் சிறுகதைக்கு தலைப்பு ஒரு சத வீதம் கூட பொருந்தவில்லை!
கதையின் தொடக்கத்தில் இருந்து முடிவுவரை எமது புலன்கள் வேறு திடைக்கு செல்லாதவாறு கதையைப் புனைந்திருப்பது உங்கள் எழுத்து திறமையைக் காட்டுகிறது! வாழ்த்துக்கள்!!!!
‘என்ரை பேத்தியைத் தொடுவதென்றால் சவர்க்காரம் போட்டுக் கை கழுவித் தான் தொட வேண்டும்’"பாலப் பழம்" போன்ற நிறம் என்ரை பேத்தி எனச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளுவா.///"பாலப்பழம்" ஒட்டும் தானே?சவர்க்காரம் போட்டுக் கழுவினால் ஒட்டும் தன்மை போகாதே?
ஒரு வகையில் பார்த்தால் தலைப்பு பொருந்தவில்லை தான்!ஆனாலும்,உணர்வு பூர்வமாக முடித்து வைத்ததால் அப்படி எண்ணத் தோன்றுகிறதோ?இந்தக் கால தென்னிந்திய திரைப்படங்களுக்கே தலைப்புக்குப் பஞ்சம் நிலவுகையில்,ஆழ யோசித்து தலைப்பிட நேரம் போதவில்லையோ?
சூப்பர் நண்பா... போரடிக்காமல் முழுமையாக வாசிக்க வைக்குறது உங்கள் ஆக்கம்
இப்ப ஓ.கே.தலைப்பு சரியாயிருக்கிறது!
தமிழ் படம் அதிகமா பாக்காதீங்க பாஸ்.. அப்படி பாத்தா இப்படி தான் முடிவு வைக்கணும்னு தோணும்.. உண்மையாவே ஒரு லவ் ஃபீல் வந்தது. அது பாராட்டபடவேண்டிய விடயம்.. இறுதியில் ஆனால் அந்த நெகட்டிவாக முடித்ததன் வலியை இன்னும் கொஞ்சம் விவரித்திருந்திருக்கலாம்.. காதலுக்காக இருந்த விரிவாக்கம் பிரிவுக்காக இல்லை.. காதலை உறுகி உறுகி சொன்ன நீங்கள்-பிரிவை பட்டும் படாமல் சொல்லிவிட்டீர்கள்.. உங்களுக்கு நிறையா காதல் அனுபவம் இருந்திருக்கும்.. ஆனால் பிரிதல் அனுபவம் இல்லாமல் கழட்டி விடும் அனுபவம் மட்டும் இருந்ததால தான் இப்படி ஆகிவிட்டது.. ஹி ஹி
சகோ
உங்களுக்கு ஒன்னு தெரியுமா
நான் காதலிச்சு தான் கலியாணம்
பண்ணி கிட்டேன்
தயவுசெய்து யாரையும்
பிரிக்காதிங்க சகோ
புலவர் சா இராமாநுசம்
மனசோடு நெருங்கி வந்து இறுதியில் சோகத்தில் நனைய வைத்துவிட்டீர்கள்.
அழகாகத்தான் காதல் கதை எழுதியிருக்கிறீங்க நிரூபன்.
//நேமிசா// இந்த நேமிஸை:) எல்லாம் எங்க தேடிப்பிடிக்கிறீங்க?:).
MN := எங்கேயோ இடிக்குதே Niruban:)))))))
அருமையான நடையில் சிறப்பான படைப்பு.வாழ்த்துக்கள்.
விக்கியுலகம் said...
மாப்ள உன் கருத்துக்களை காதல் தூவி அளிக்க தொடங்கி இருக்கிறாய்...தொடர்-வாயாக நன்றி!//
யோவ்... தக்காளி... பதிவு நல்லா இருக்குன்னா நல்லாருக்குன்னு சொல்லு... அத விட்டுபுட்டு... நிரூ வாய பத்தி ஏன் பேசறே?
கதை படித்தேன்... எழுத்து நடை... வெகுவாக பாராட்ட வேண்டிய தேவை... நான் இலங்கை பதிவர்களின் சிறுகதையோ..நாவலோ படிப்பதற்கு துணிய மாட்டேன்... (உள்குத்து!) காரணம் அவர்களின் எழுத்து நடை... தப்பு சொல்லவில்லை.. எனக்கு புரிவதில்லை.. அவ்வளவே...!!!
ஆனால் நிரூபனின் சிறுகதை... அட்டகாசம்... கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆகாமல் பார்த்துக்கொள்வதே பெர்ர்ர்ரிய விஷயம்... நானே பல இடங்களில் பல்ப் வாங்கியிருக்கிறேன்,... (அதென்ன "நானே"? அவ்ளோ பெரிய ஆளா நீ...???)
இதே போல இன்னும் நிறைய கதைகளை எழுதவேண்டும்... கலக்கலாக... வாயில ச்வீட்'அ வச்சி..,, அடியில வெடிய வச்சிட்டியே மாதிரி கதைகள் நிறைய இருக்கும் போலயே...
(இது கமென்ட் ஆ இல்ல கடிதமா?)
உன்னோட தமிழ் மணத்துல தீய வைக்க...
துள்ளலுடன் ஆரம்பித்து நெகிழ்வுடன் முடித்து விட்டீர்கள்..நன்று நிரூ
ம்ம்.... இப்பிடி எனக்குத்தெரிஞ்சே ஊரில எத்தினயோ உண்மைக்கதை இருக்கு.அப்பிடியே சொல்லீட்டிங்க.
தொடக்கத்தில் சிறு சம்பவங்களையும் கொஞ்சம் நீளமாக வர்ணித்து,.. விபரித்து,.. இறுதியில் ஓரிரு வரிகளுடன் முடித்துவிட்டிருக்காமல் முடிவையும் இன்னும் கொஞ்சம் இளுத்து, விபரித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறேன்.
ஆனா.. நல்லா இருக்கு.
Post a Comment