பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
வலைப் பதிவு எனப்படுவது, இன்றைய கால கட்டத்தில் தணிக்கைகள் ஏதுமற்ற ஒரு சுயாதீன ஊடகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எமக்குப் பிடித்தவற்றை, எங்களின் எண்ணங்களை வலையில் எழுதி உலகெங்கும் கொண்டு செல்வதற்கு கூகிள் அம்மம்மா இலவசமாக வழங்கும் ஓர் ஊடகம் தான் ப்ளாக்.
நானும் இவ்ளோ நாளா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன், கூட்டமே இல்லையே என்று கவலை உணர்வு மேலோங்க, என் பதிவுகளை எப்படிப் பிரபலமாக்கலாம் எனும் நோக்கில், அழாக் குறையா
பதிவரும், என் நண்பருமான இடிச்ச புளி இத்தியாசி அவர்களிடம் என் சந்தேககங்களைக் கேட்கத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலின் போட்டோவோடு ப்ளாக் தொடங்கிய இடிச்ச புளி அவர்கள், திடீரெனத் தனது போட்டோவையும், மாற்றி விட்டு இப்போது வேறோர் வடிவில் ப்ளாக்கில் முதிர்ந்த தோற்றத்தோடு வலம் வருகிறார்( இந்தப் போட்டோ மாற்றத்திற்கான காரணம் இடிச்ச புளியின் பேட்டியுடன் வெளியான அவரது போட்டோவும்,
அவரது ப்ளாக்கில் இருந்த செந்திலின் போட்டோவும் வித்தியாசமின்றி இருக்கே எனப் பதிவர்கள் பலர் கிண்டல் பண்ணியது தானாம்.)
ஓக்கே மேட்டருக்குப் போவேமா. இப் பதிவில் உள்ள விடயங்கள் அனைத்தும் பதிவர் இடிச்ச புளி எனக்கு அருளிய விடயங்களே. ஆகவே பதிவினைப் படித்து விட்டு என் மீது கோபங் கொள்வது முறையல்ல. எதுவாக இருப்பினும் பதிவர் இடிச்ச புளி இத்தியாசியிடம் நீங்களே டீல் பண்ணிக்குங்க.
எச்சரிக்கை/ Warning: இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உங்களில் யாருக்காச்சும் இருந்தா; இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்: ஓட்ட வடை நாராயணன்)
________________________________________________________________________
ப்ளாக் எழுதுவோரைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.
*ஆத்ம திருப்திக்காக எழுதுவோர் அல்லது அலுவலக வேலைச் சுமையில் கொஞ்சம் ஆறுதல் வேண்டி ப்ளாக் எழுதுவோர், இவர்கள் தான் இன்று ப்ளாக் எழுதுவோர்களில் முதலாமிடத்தில் இருக்கிறார்கள்.
*மற்றையோர் தாம் என்ன எழுதினாலும் சரி, தமக்கு ஓட்டும், பின்னூட்டங்களும் வந்து பிரபலமாகினால் போதும் எனும் நோக்கில் பதிவெழுதுவோர்.
*எப்போதாவது கிடைக்கும் தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்தி தம் படைப்புக்களைப் பகிரும் இலக்கியவாதிகள்.
*பிறரை வசை பாடும் நோக்கில் ப்ளாக் எழுதும் நபர்கள்.
*விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ப்ளாக் எழுதத் தொடங்குவோர்.
இப்படிப் பல்வேறு வகையானோர் ப்ளாக் எழுதினாலும் நாம பிரபலமாக வேண்டும் என்றால் நிறைய உத்திகள் இருக்கிறது. அவற்றினை நாம் கடைப் பிடித்தால் தான் எங்களின் பதிவுகளைப் பல நூற்றுக்கணக்கான வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒரு அதிரடிச் செய்தியைத் தந்தார் பதிவர் இடிச்ச புளி அவர்கள்.
*நாம ஒரு ப்ளாக்கினைத் தொடங்கி விட்டு, யாராச்சும் வருவாங்களா என்று இலவு காத்த கிளி போன்று காத்திருக்கக் கூடாது. முதல்ல ஜாலியாக கூண்டை விட்டுக் கிளம்பி, வலையில் எழுதும் சக பதிவர்களோடை பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமும், வாக்குகளும் போட வேண்டும்.
*ஈகோவைக் களைந்து எம்மால் முடிந்த வரை எமது நேர எல்லைக்குள், வாசிப்பு பரப்பளவிற்குள் எட்டக் கூடிய பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும். பதிவினைப் படிக்காது ஒற்றை வரிகளில், ஏனைய பதிவர்கள் தங்கள் பதிவுகளை வந்து படித்தால் போதும் எனும் நோக்கத்தில் பின்னூட்டமிடாது,
பதிவினைப் படித்து பின்னூட்டமும், வாக்குகளும் ஊக்கங்களும் வழங்க வேண்டும்.
*இவ்வாறு ’கடமையைச் செய் பலனௌ எதிர் பாராதே’ எனும் நோக்கில் செயற்படும் போது நமக்கென்று ரசனையுள்ள நண்பர்கள் குழாம் உருவாகும்.
காலப் போக்கில் நண்பர்களின் முயற்சியால் எமது பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையும்.
*நாமளே எழுதிப் போட்டு, நண்பர்களின் ப்ளாக்கினைப் படிக்காது, ஓட்டும் போடாது இருந்தால்
தனிக் கடையில் Page Refresh பண்ணி ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலமை தான் கிடைக்கும்.
* சிறிது காலத்தின் பின்னர் நண்பர்கள், வாசகர்கள் அதிகரிக்கத் தொடங்கும் போது எமது பதிற்கான அங்கீகாரம், ஆதரவு, பதிவின் தரம் முதலிய விடயங்கள் இயல்பாகவே கூடிக் கொண்டு போகும்.
*எம்மோடு இருக்கும் நண்பர்கள் தான் எங்கள் பதிவுகளை அதிகம் பேர் படிப்பதற்கு உந்து சக்தியாக இருப்பார்கள். நண்பர்கள் இல்லேன்னா....நாம என்ன எழுதினாலும் ரீச் ஆக வாய்ப்பே இருக்காது. இது வெளியில் இருந்து பார்க்கும் உள்ளங்களுக்கு கூட்டம் அமைத்து ஓட்டுப் போட்டுப் பின்னூட்டம் போடும் செயலாக இருந்தாலும், எமது பதிவுகள் பிரபலமாவதற்கும், நண்பர்கள் மனம் விட்டுப் பேசுகையில் பல் வேறு பட்ட விமர்சனங்களை முன் வைப்பதால் பதிவர்களின் எழுத்துக்கள் மெருகேற்றப் படச் சிறந்த ஓர் வாய்ப்பாக அமையும்.
*மனந் திறந்து பிறரின் படைப்புக்களைப் பாராட்டும் பக்குவம் இருக்க வேண்டும்.
புதிதாக ஒரு பதிவர் எழுத வந்து விட்டால் ஓடோடிச் சென்று அவரை நமக்குப் பின்னூட்டமும் ஓட்டும் போடும் நபராக மூளைச் சலவை செய்து மாற்றும் எண்ணங்களை விட்டு விட்டு மனந் திறந்து பதிவினை ரசித்துப் படித்துப் பாராட்ட வேண்டும்.
*இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கே ஆச்சரிய மூட்டக் கூடிய ஒரு வழி இருக்கு. அது தான் ஓட்டுப் போடுதலின் ரகசியம்.
இண்ட்லி திரட்டியில் நீங்கள் புதிதாக எழுதிய உங்களது பதிவினை இணைத்த பின்னர் புது வரவு என்ற பக்கத்தின் கீழ் உங்களது பதிவு தோன்றும். இந்தப் புது வரவு என்ற பக்கத்தில் இருக்கும் பதிவுகள் அனைத்திற்கும் ஒரே பக்கத்தில் வைத்து பசக்- பசக் என்று ஒரு இருபது குத்துக் குத்திப் பாருங்க. உங்கள் பதிவிற்கு ஒரு சில மணி நேரங்களின் பின் அதற்கான எதிர் வினை கிடைக்கும். அதாவது எப்படி வருமோ?
யார் ஓட்டுப் போடுவார்களோ தெரியாது, தானியங்கி முறையில் மர்ம நிலையில் பல ஓட்டுக்கள் உங்கள் பதிவிற்கு வந்து குவியும்.
அட என்ன பார்க்கிறீங்க? ஒரு வாட்டி செஞ்சு பார்த்திட்டுச் சொல்லலாமில்ல!!
*அடுத்த அதிர்ச்சிகரமான விடயம், உங்க ப்ளாக் லோடிங் ஆக நிறைய நேரம் எடுக்க கூடாது, ப்ளாக்கில் அதிகளவான ஹெட்ஜெற்றினை (Gadget) இனைச் செருகி வைத்தால் ப்ளாக் லோடிங் ஆக இருக்கும். இதனால் வருகையாளர்களிற்குச் சலிப்புத் தான் ஏற்படும். ப்ளாக் ஓப்பின் ஆகலை என்றால் எஸ் ஆகிடுவாங்க.
*ஓட்டுப் பட்டைகள் அனைத்தையும் பதிவிற்கு கீழே வருமாறு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பதிவினைப் படித்த பின் ஓட்டுப் போடக் கூடியவாறு இருக்கும்.
*இன்னொரு முக்கியமான விடயம், நீங்கள் பதிவு எழுதியதும், உங்கள் ப்ளாக்கைப் பாலோ பண்ணும் நண்பர்களிற்கு Google Friend Connect ஊடாக மின்னஞ்சல் வடிவில் உங்களது புதிய பதிவு பற்றிய தகவலினை அனுப்பலாம்.
உங்கள் ப்ளாக்கைப் பாலோ பண்ணும் நபர்களில் பலருக்கு அவர்களின் டாஷ் போர்ட்டில் உங்கள் பதிவுகள் எப்போது வருகின்றன, எப்படி வருகின்றன என்பது தெரியாமல் இருக்கும். ஆகவே பதிவு எழுதிப் ப்ப்ளிஷ் பண்ணிய உடன் http://www.google.com/friendconnect இம் முகவரி ஊடாக உங்களது மொழி நடையில் உங்களது புதிய பதிவினைப் பற்றிய விபரங்களையும், பதிவிற்கான லிங்கினையும் அனுப்பலாம்.
டிஸ்கி: இவ்ளோ வழியையும் பின் பற்றினால் போதாது, குறுக்கு வழியில் பிரபல பதிவராக வேண்டும் என்றால் நல்ல பதிவினை எழுத வேண்டும்.
ஹி...ஹி....
அட என்ன பார்க்கிறீங்க, குறுக்கு வழியில் பிரபலமாகுவதற்கான டிப்ஸ்; என்று தலைப்பிட்டு விட்டு, நேர் வழியைச் எழுதிட்டான் நிரூபன் என்றா...
ஹி...கோபம் வேணாம், இப்பவே உங்க வேலையை ஆரம்பிக்கலாமில்ல!
|
123 Comments:
அய்.. எனக்கு தேவையான மாட்டார்.. வாறன் பொறுங்க மாப்புள
மாப்பிள பொறுடி வாறன் இத விட செம ஐடியாக்கள் இருக்குடி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
ஹிஹி நமக்கு இதெல்லாம் பழைய மேட்டர் ஹிஹிஹெஹெஹெஹெஹ்ஹிஹி ஐயோ அடிக்காதீங்கூ
ஹிஹி நமக்கு இதெல்லாம் பழைய மேட்டர் ஹிஹிஹெஹெஹெஹெஹ்ஹிஹி ஐயோ அடிக்காதீங்கூ
///Ashwin-WIN said...
அய்.. எனக்கு தேவையான மாட்டார்..வாறன் பொறுங்க மாப்புள!////
என்னது ,"மாட்டார்"?
தேவையான மாட்டர் எண்டு சொன்னான் வோய். என்னவோய் நீர் கமன்டிலையும் பிழை பிடிக்குரீர்??
ஃஃஃஃஃஈகோவைக் களைந்து எம்மால் முடிந்த வரை எமது நேர எல்லைக்குள், வாசிப்பு பரப்பளவிற்குள் எட்டக் கூடிய பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும்.ஃஃஃஃ
இது தான் கிரேட் ஐடியா ...
//புது வரவு என்ற பக்கத்தில் இருக்கும் பதிவுகள் அனைத்திற்கும் ஒரே பக்கத்தில் வைத்து பசக்- பசக் என்று ஒரு இருபது குத்துக் குத்திப் பாருங்க. உங்கள் பதிவிற்கு ஒரு சில மணி நேரங்களின் பின் அதற்கான எதிர் வினை கிடைக்கும். //
ஆஹ்ஹ் முதல்ல இத பண்ணிட்டு வாறன். எதிர்வினை வேற வடிவத்துல வந்தா மாப்புள மதி. சுதா நீர் கீஞ்சிடுவீர்.
ஃஃஃஃஎப்போதாவது கிடைக்கும் தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்தி தம் படைப்புக்களைப் பகிரும் இலக்கியவாதிகள். ஃஃஃஃ
மாப்புள எல்லாம் எனக்கு பொருந்துது அனால் ஒண்ணை தவிர இலக்கியவாதியில்லை இலக்கில்லாவாதி...
அஷ்வினை மாதிரி எடக்கு முடக்கா சங்கீதா, சாராயம் எண்டு எழுதினால் என்னும் இரண்டு படி பிரபலமாகும்.
அருமை!புதியவர்களுக்கும்,ஏன் பழையவர்களுக்கும் "அறிவூட்டும்" விதத்தில் "அலசி"(துணியை அல்ல)ஆராய்ந்து,பட்டறிந்து,படாதறிந்து,தெரிந்தும்,தெரியாமலுமிருப்பவர்களுக்கும் அறிந்தும் அறியாமலிருப்பவர்களுக்கும் பயன் தரும் (பனை அல்ல)விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்!வாழ்க உங்கள் புகழ்!
அருமை!புதியவர்களுக்கும்,ஏன் பழையவர்களுக்கும் "அறிவூட்டும்" விதத்தில் "அலசி"(துணியை அல்ல)ஆராய்ந்து,பட்டறிந்து,படாதறிந்து,தெரிந்தும்,தெரியாமலுமிருப்பவர்களுக்கும் அறிந்தும் அறியாமலிருப்பவர்களுக்கும் பயன் தரும் (பனை அல்ல)விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்!வாழ்க உங்கள் புகழ்!
// http://www.google.com/friendconnect //
நன்றி மாப்பு ப்ரெண்டு கனேக்டருக்கு. தேடிட்டிருந்தன். கிடைசிட்டு.
இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு முன்னமே தெரியும்
உபயம் சாட்சாத் சகோ நிரூபன் தான்
மிக உபயோகமான தகவல்கள் சகோ
இது போல நிறைய டிப்ஸ் கொடுங்கள் சகோ
ஃஃஃஃAshwin-WIN said...
ஆஹ்ஹ் முதல்ல இத பண்ணிட்டு வாறன். எதிர்வினை வேற வடிவத்துல வந்தா மாப்புள மதி. சுதா நீர் கீஞ்சிடுவீர்ஃஃஃஃ
டாப்பிள அளவுக்கதிகமா போட்டுடாத அப்புறம் ஆப்பு தான்டியோய்...
ஆமா மேல சொன்ன பதிவர் வகையில நாம எந்த வகை.. கண்ணு பிடிக்கமுடியலையே. ஆத்தா ஒருவேளை நான் பதிவர் இல்லையோ??
சரி,சரி "வின்" டென்ஷனாவாதீங்க!"மேட்டர்" படிச்சீங்களா?
@Ashwin-WIN
அய்.. எனக்கு தேவையான மாட்டார்.. வாறன் பொறுங்க மாப்புள//
என்ன மோட்டாரா? இல்ல மாட்டாரா?
அது என்ன மாட்டார். புதுசா இருக்கே. ஹி...
@♔ம.தி.சுதா♔
மாப்பிள பொறுடி வாறன் இத விட செம ஐடியாக்கள் இருக்குடி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio//
ஏன் அவசரமா எங்கேயோ போக வாளி தேடுறீங்களோ?
ஹி..ஹி..
@மைந்தன் சிவா
ஹிஹி நமக்கு இதெல்லாம் பழைய மேட்டர் ஹிஹிஹெஹெஹெஹெஹ்ஹிஹி ஐயோ அடிக்காதீங்கூ//
பிச்சுப் புடுவன், பிச்சு,
புதுசா ஒருத்தன் இடிச்ச புளி இத்தியாசி எனும் பெயரிலை ஐடியா கொடுக்கிறான்,
நீங்க பழசு என்று சொல்லி எஸ் ஆகிறீங்களே;-)))
@♔ம.தி.சுதா♔
ஃஃஃஃஃஈகோவைக் களைந்து எம்மால் முடிந்த வரை எமது நேர எல்லைக்குள், வாசிப்பு பரப்பளவிற்குள் எட்டக் கூடிய பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும்.ஃஃஃஃ
இது தான் கிரேட் ஐடியா ...//
அப்போ, அந்த ஐடியா கொடுத்த ஆளுக்கு பரிசேதும் இல்லையா?
@♔ம.தி.சுதா♔
மாப்புள எல்லாம் எனக்கு பொருந்துது அனால் ஒண்ணை தவிர இலக்கியவாதியில்லை இலக்கில்லாவாதி...//
அடிங்....என்ன ஒரு டெரர் தனம்;-))
@நிருஜன்
அஷ்வினை மாதிரி எடக்கு முடக்கா சங்கீதா, சாராயம் எண்டு எழுதினால் என்னும் இரண்டு படி பிரபலமாகும்.//
நான் திருந்தி நல்ல பொடியன் ஆகிற முடிவோட இருக்கேன், நீங்க கெடுக்கிறதா ப்ளான் பண்ணுறீங்களே?
அஷ்வின், இவரு கெட்ட பையன், கெட்ட கெட்ட வார்த்தை எல்லாம் பேசுறாரு,
நீங்க அவர் கூட சேர வேணாம்(((:
@Yoga.s.FR
அருமை!புதியவர்களுக்கும்,ஏன் பழையவர்களுக்கும் "அறிவூட்டும்" விதத்தில் "அலசி"(துணியை அல்ல)ஆராய்ந்து,பட்டறிந்து,படாதறிந்து,தெரிந்தும்,தெரியாமலுமிருப்பவர்களுக்கும் அறிந்தும் அறியாமலிருப்பவர்களுக்கும் பயன் தரும் (பனை அல்ல)விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்!வாழ்க உங்கள் புகழ்!//
என்ன ஒரு இலக்கிய ரசனை நிறைந்த வாழ்த்தினைச் சொல்லுறீங்க மாம்ஸ்..
நன்றி.
@Ashwin-WIN
நன்றி மாப்பு ப்ரெண்டு கனேக்டருக்கு. தேடிட்டிருந்தன். கிடைசிட்டு.//
யோ, என்னப்பா சொல்லுறீங்க, என்ன கனேங்கத்தாரின்ரை பொட்டையை கனக்ட் பண்ணத் தேடிக் கொண்டிருந்தனீங்களோ;-))
கிடைச்சிட்டாவே, ஆ சந்தோசம்.
Ashwin-WIN said... ஆத்தா ஒருவேளை நான் பதிவர் இல்லையோ??///நீங்களும் பதிவர் தான்!,பதிவர் தான்!,பதிவர் தான்!,பதிவர் தான்!,பதிவர் தான்!(ஆனா என்ன பதிவீங்கன்னு தான் தெரியல)///
@A.R.ராஜகோபாலன்
இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு முன்னமே தெரியும்
உபயம் சாட்சாத் சகோ நிரூபன் தான்
மிக உபயோகமான தகவல்கள் சகோ
இது போல நிறைய டிப்ஸ் கொடுங்கள் சகோ//
அவ்...ஏனுங்க என்னைப் போயி வம்பில மாட்டி வுடுறீங்க,
இந்தக் தகவலை நம்ம கூடப் பகிர்ந்ததே பதிவர் இடிச்சபுளி இத்தியாசி தானுங்க. அவர் நானில்லை சகோ.
இவ்வளவுனாலும் இந்த டிப்ப்சுகளை தெரியாமா மஞ்சமாக்காவா இருந்துட்டேன் ஆத்தா.
//அஷ்வின், இவரு கெட்ட பையன், கெட்ட கெட்ட வார்த்தை எல்லாம் பேசுறாரு,
நீங்க அவர் கூட சேர வேணாம்(((:
// ஹி ஹி நீங்க சொன்னா சரி தல.
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்
நிரூபன்said...ஏன் அவசரமா எங்கேயோ போக வாளி தேடுறீங்களோ?
ஹி..ஹி..///நாங்க தான் "வாளி" தேடுவம்!அவங்க,"சொம்பு" தான்!
மற்றவரை பாரட்டுவதுதான் மிக சிறந்த செயல் இதற்கு காசு பணம் செலவு இல்லை பாரட் டபடுபவர்கள் பெரும் மகிழ்ச்சியே .. மிக பெரிய கிப்ட்
நகைச்சுவையாக இருந்தாலும் இது அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ஃஃஃஃ Yoga.s.FR said...
நிரூபன்said...ஏன் அவசரமா எங்கேயோ போக வாளி தேடுறீங்களோ?
ஹி..ஹி..///நாங்க தான் "வாளி" தேடுவம்!அவங்க,"சொம்பு" தான்ஃஃஃ
ஹ...ஹ.. யோக எனக்கு அது கூட தேவையில்லப்பா...
மைந்தன் சிவாsaid...
ஹிஹி நமக்கு இதெல்லாம் பழைய மேட்டர் ஹிஹிஹெஹெஹெஹெஹ்ஹிஹி ஐயோ அடிக்காதீங்க!///அடிச்சு ஏதும் பிரயோசனமெண்டா பறுவாயில்ல!இது எருமை மாட்டில மழை பெஞ்ச மாதிரித் தான?(அடிக்கிறது)///
நானும் இவ்ளோ நாளா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன், கூட்டமே இல்லையே என்று கவலை உணர்வு மேலோங்க, என் பதிவுகளை எப்படிப் பிரபலமாக்கலாம் எனும் நோக்கில், //
இது உனக்கே ஓவரா இல்ல.!?
இடிச்ச புளி இத்தியாசி/
ஹி ஹி.. ஓட்ட வடை மாத்தியோசி யா.1?
A.R.ராஜகோபாலன்said...
இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு முன்னமே தெரியும்
உபயம் சாட்சாத் சகோ நிரூபன் தான்
மிக உபயோகமான தகவல்கள் சகோ
இது போல நிறைய "டிப்ஸ்" கொடுங்கள் சகோ!//"டிப்ஸ்"எல்லாம் கொடுக்கும் வழக்கமில்லை!டீயைக் குடித்து விட்டு எழுந்து வந்து விட வேண்டியது தான்!////
அவரது ப்ளாக்கில் இருந்த செந்திலின் போட்டோவும் வித்தியாசமின்றி இருக்கே எனப் பதிவர்கள் பலர் கிண்டல் பண்ணியது தானாம்.//
ஹி ஹி.. தொப்பி தொப்பி..
@Ashwin-WIN
இவ்வளவுனாலும் இந்த டிப்ப்சுகளை தெரியாமா மஞ்சமாக்காவா இருந்துட்டேன் ஆத்தா.
//அஷ்வின், இவரு கெட்ட பையன், கெட்ட கெட்ட வார்த்தை எல்லாம் பேசுறாரு,
நீங்க அவர் கூட சேர வேணாம்(((:
// ஹி ஹி நீங்க சொன்னா சரி தல.
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்//
அதென்ன பழைய லிங்கைப் போட்டு விட்டு எஸ் ஆகிறது, இப்ப இரண்டாம் பாகமும் வந்திட்டில்ல.
@Yoga.s.FR
நாங்க தான் "வாளி" தேடுவம்!அவங்க,"சொம்பு" தான்!//
அப்போ நீங்க பேப்பர் ருசு பாவிக்கிறதில்லையா?
@பிரபாஷ்கரன்
மற்றவரை பாரட்டுவதுதான் மிக சிறந்த செயல் இதற்கு காசு பணம் செலவு இல்லை பாரட் டபடுபவர்கள் பெரும் மகிழ்ச்சியே .. மிக பெரிய கிப்ட்
நகைச்சுவையாக இருந்தாலும் இது அருமையான பதிவு வாழ்த்துக்கள்//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ.
@தம்பி கூர்மதியன்
இது உனக்கே ஓவரா இல்ல.!?//
ஏன் மாப்பு, நான் இப்பவும் நாற்றத் தானே இருக்கேன்,
ஹி..ஹி...
இவர்கள் தான் இன்று ப்ளாக் எழுதுவோர்களில் முதலாமிடத்தில் இருக்கிறார்கள்.//
எடுடா அந்த அருவாளை.. போட்டு தள்ளிடுவோம்
@தம்பி கூர்மதியன்
ஹி ஹி.. ஓட்ட வடை மாத்தியோசி யா.1?//
அவர் வேறை ஆளு,
இவர் வேறை ஆளு!
ஹி.ஹி..!
தமக்கு ஓட்டும், பின்னூட்டங்களும் வந்து பிரபலமாகினால் போதும் எனும் நோக்கில் பதிவெழுதுவோர். //
யாரையோ மக்கா கிண்டலு பண்ணுறான்.. மக்களே.!! இவன் சரியில்ல..
@தம்பி கூர்மதியன்
ஹி ஹி.. தொப்பி தொப்பி..//
ஆங்...சைட் கப்பில ஓட்ட வடையை வம்புக்கிழுக்கிறாரே நம்ம சகோ.
தம் படைப்புக்களைப் பகிரும் இலக்கியவாதிகள். //
இது எனக்கு பொருந்துமே.!! ஆனா படைப்பாளிகள்.!!? ஹி ஹி
பிறரை வசை பாடும் நோக்கில் ப்ளாக் எழுதும் நபர்கள். //
இந்த பதிவு எழுதுபவர் போலா.!?
விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ப்ளாக் எழுதத் தொடங்குவோர்.//
அதெப்படி யா.!! எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்.. ஹி ஹி
வலையில் எழுதும் சக பதிவர்களோடை பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமும், வாக்குகளும் போட வேண்டும். //
நேரமின்மை.. 10 மணி வரையில் நம்ம வெளி பொழப்பு.. பின்னர் சில ப்ளாக்குகள் பாத்துகொண்டே நம் ரிப்போர்ட் பொழப்பு.. இப்படி இருக்கையில் அதிகமான பதிவுகளை படிக்க முடியவில்லை.. மேலும் படித்தாலும் கமண்டிட முடியவில்லை.. என்ன செய்யலாம்..?
ரசனையுள்ள நண்பர்கள் குழாம் உருவாகும். //
அதெப்படியோ.! எனக்கு இதுமட்டும் அமஞ்சிடுச்சு..
நண்பர்களின் முயற்சியால் எமது பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையும். //
ஹி ஹி.. சரியான காமெடி பாஸ் நீங்க
மாப்பு பிரபலமாகிரதுக்கு எனக்கொரு ஐடியா ஆழ்ந்த சிந்தனையில தோனியிருக்குது. பேசாம நமக்கு முன்னாடி பிரபலமா இருக்குறவங்கள எல்லாம் ஒரு வெள்ளை வானை அனுப்பி தூக்கிட்டா அப்புறம் நாமதானே பிரபல பதிவர். யார் யாரெல்லாம் என்கூட இந்த ஆப்பிரேசனுக்கு வாரியல்.
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்
சகோ பாகம் ஒண்டில போய் ரெண்டாவதையும் படிச்சுக்கட்டும் சொந்தங்கள்.:))))
சகோ.நிரூபன்,
ஸலாம் உண்டாவதாக.
இன்ட்லி பற்றி இப்படி ஒரு மேட்டர் இருக்கா..?! சுவாரஸ்யமான ஆச்சர்யம் கலந்த தகவல். பகிர்வுக்கு நன்றி.
@தம்பி கூர்மதியன்
இவர்கள் தான் இன்று ப்ளாக் எழுதுவோர்களில் முதலாமிடத்தில் இருக்கிறார்கள்.//
எடுடா அந்த அருவாளை.. போட்டு தள்ளிடுவோம்//
ஏன், ஏன் நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு.
@தம்பி கூர்மதியன்
தமக்கு ஓட்டும், பின்னூட்டங்களும் வந்து பிரபலமாகினால் போதும் எனும் நோக்கில் பதிவெழுதுவோர். //
யாரையோ மக்கா கிண்டலு பண்ணுறான்.. மக்களே.!! இவன் சரியில்ல..//
அவ்..எத்தினையோ நல்ல வசனங்கள் இருக்க இதனை மட்டும் எடுத்துக் ஹைலைட் பண்ணி, போட்டுக் குடுக்கிறியா?
உன்னை அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்.
@தம்பி கூர்மதியன்
தம் படைப்புக்களைப் பகிரும் இலக்கியவாதிகள். //
இது எனக்கு பொருந்துமே.!! ஆனா படைப்பாளிகள்.!!? ஹி ஹி//
அப்போ நீங்க படைப்பாளி இல்லையா?
ஹி...
@தம்பி கூர்மதியன்
பிறரை வசை பாடும் நோக்கில் ப்ளாக் எழுதும் நபர்கள். //
இந்த பதிவு எழுதுபவர் போலா.!?//
அடப் பாவி, இந்த மாதிரிப் பழக்கமெல்லாம் நமக்கு இல்லை...
ஏன்யா, ஏனு?
@தம்பி கூர்மதியன்
விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ப்ளாக் எழுதத் தொடங்குவோர்.//
அதெப்படி யா.!! எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்.. ஹி ஹி//
மாப்பிளை உன் ப்ளாக்கில் கூகிள் அட்சென்ஸ் இணைக்கபட்டிருந்தால் தான் அதிகளவு பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் கடந்த இரு வருடங்களாக தமிழ் வலைப் பதிவுகளுக்கு கூகிள் அட்சென்ஸ் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.
உங்கள் தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அவர்களின் விளம்பரங்களைக் கிளிக் செய்து பார்ப்பதை அடிப்படையாக வைத்து ஒவ்வோர் கிளிக்கிற்கும் ஒரு சிறு தொகைப் பணத்தினைத் தருவார்கள்.
இப்போது இந்தியாவின் அட்மாயா நிறுவனம் விளம்பரங்களை வழங்குகிறது, ஆனால் நிறைய வருமானம் கிடைக்கும் வண்ணம் நாம் தான் தளத்தினையும், பதிவுகளையும் மெயிண்டேன் பண்ண வேணும்.
@Ashwin-WIN
மாப்பு பிரபலமாகிரதுக்கு எனக்கொரு ஐடியா ஆழ்ந்த சிந்தனையில தோனியிருக்குது. பேசாம நமக்கு முன்னாடி பிரபலமா இருக்குறவங்கள எல்லாம் ஒரு வெள்ளை வானை அனுப்பி தூக்கிட்டா அப்புறம் நாமதானே பிரபல பதிவர். யார் யாரெல்லாம் என்கூட இந்த ஆப்பிரேசனுக்கு வாரியல்.
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்
சகோ பாகம் ஒண்டில போய் ரெண்டாவதையும் படிச்சுக்கட்டும் சொந்தங்கள்.:))))//
அடிங் கொய்யாலா..
ஐடியா கொடுக்கிறாராம், ஐடியா.
மச்சி எனக்கு ஐஞ்சு வருசம் என்றால்,
பக்கத்து அறையில உங்களுக்கும் ஐஞ்சு வருசம் தான்,
அத்தோடு பாணும் பருப்புக் கறியும் தான் தருவாங்கள்.
வாய் கூசாமல் வெள்ளை வான் என்று ப்ளாக்கிலை சொல்லுறது,
அப்புறம் இரவு நாய் குலைக்கத் தொடங்க கழுசானோடை
வீட்டை அசிங்கம் பண்ணுறது;-)))
மச்சி, இந்த ஆப்ரேசனுக்கு நான் செத்தாலும் வர மாட்டேன்.
ஏற்கனவே பட்ட வேதனை போதும், அதுவும் அரை அவியல் உருளைக் கிழ்ங்கும், வெந்தும் வேகாத மீனும் தான் கிழமையில ஒருக்கால் எண்டாமும் மெனிக் பாமில ஒழுங்கா தந்தாங்க,
இதுவே களுத்துறை கூசா, நாலாம் மாடி என்றால்..
ஆளை விடு மச்சி, நான் உந்த விளையாட்டுக்கு வரேல்ல.
அப்புறம் நாம மீட் பண்ணும் போது நளபாகத்தில புட்டுக் கொத்து வாங்கித் தருவீங்க தானே;-)) வரும் போது நான் எதுக்கும் ஒரு சோடாப் போத்தலினுள் தண்னீர் விட்டுக் கொண்டு வாறேன்.
ஹி...ஹி...
@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'
சகோ.நிரூபன்,
ஸலாம் உண்டாவதாக.
இன்ட்லி பற்றி இப்படி ஒரு மேட்டர் இருக்கா..?! சுவாரஸ்யமான ஆச்சர்யம் கலந்த தகவல். பகிர்வுக்கு நன்றி.//
ஆமாம் சகோ, சும்மா ட்ரை பண்ணிட்டு, அப்புறம் சொல்லுங்க.
நன்றி சகோ.
@நிரூபன்
மாப்பு லிஸ்டுல இருக்குற மொத பேரே ஒங்கடதான்.
//அப்புறம் நாம மீட் பண்ணும் போது நளபாகத்தில புட்டுக் கொத்து வாங்கித் தருவீங்க தானே;-)) வரும் போது நான் எதுக்கும் ஒரு சோடாப் போத்தலினுள் தண்னீர் விட்டுக் கொண்டு வாறேன்.
ஹி...ஹி...//
கண்டிப்பா ஒன்னுக்கு ரெண்டாவே வாங்கிதாறேன்.
ஆனா போத்தல் செண்டிமெண்டா சரிவராது.. ஒரு செம்புல கொண்டுவாங்களேன் தண்ணிய..
வணக்கம் செல்வராசா நிரூபன் அவர்களே!
தலைப்பின் மூலமாகவும், முன்னுரை மூலமாகவும் ஒரு வித பரபரப்பினை ஏற்படுத்திவிட்டு, கடைசியில் சப்பென்று கவிழ்த்தமைக்கு எனது கண்டனங்கள்!
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
வலைப் பதிவு எனப்படுவது, இன்றைய கால கட்டத்தில் தணிக்கைகள் ஏதுமற்ற ஒரு சுயாதீன ஊடகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. /////////
அதென்ன இன்றைய காலகட்டத்தில்.....!!! ஏதோ அம்பது வருஷமா ப்ளாக் இருக்கிறமாதிரியும், அது அப்ப ஒரு மாதிரியும், இப்ப வேறு மாதிரியும் இருக்கிற மாதிரியெல்லோ கதை!
எல்லாமே ஒண்டுதான் மாப்ளே
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் செல்வராசா நிரூபன் அவர்களே!//
வணக்கம் ஓட்டவடை நாராயணன், ஓனர் ஆப் மாத்தியோசி, அவர்களே!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வரிக்கு வரி பிச்சு பிசிரெடுக்கிறதெண்ட முடிவோடதான் இருக்குரியல் போல. நிருபன் மாமோய் அலெர்ட்..
நானும் இவ்ளோ நாளா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன், கூட்டமே இல்லையே என்று கவலை உணர்வு மேலோங்க, என் பதிவுகளை எப்படிப் பிரபலமாக்கலாம் எனும் நோக்கில், அழாக் குறையா
பதிவரும், என் நண்பருமான இடிச்ச புளி இத்தியாசி அவர்களிடம் என் சந்தேககங்களைக் கேட்கத் தொடங்கினேன். //////////
யார் அந்த இ.பு. இத்தியாசி, ஐ வான்ட் டு மீட் ஹிம்!!!
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலின் போட்டோவோடு ப்ளாக் தொடங்கிய இடிச்ச புளி அவர்கள், திடீரெனத் தனது போட்டோவையும், மாற்றி விட்டு இப்போது வேறோர் வடிவில் ப்ளாக்கில் முதிர்ந்த தோற்றத்தோடு வலம் வருகிறார்////////
தங்கள் நிஜ முகத்தினை மறக்க சிலர் விண்வெளியில் ராக்கட் பறப்பது போலவும், பூமிக்கு பறக்கும் தட்டு வருவது போலவும் சிம்போல் போட்டு, ‘ எடுவாரம் ‘ காட்டும் போது, யாரோ ஒரு முதியவரின் படம் போட்டு ப்ளாக் எழுதுகிறாரா?
யாருய்யா அந்த தில் உள்ள மனுஷன்?
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.s.FR
நாங்க தான் "வாளி" தேடுவம்!அவங்க,"சொம்பு" தான்!//
அப்போ நீங்க பேப்பர் ருசு பாவிக்கிறதில்லையா?///அது ருசு இல்ல,"ரிஷ்யூ".இல்ல,அது பாவிக்கிறேல்ல!முடிஞ்ச ஜவல் போத்தில் வாய வெட்டிப் போட்டு தண்ணி எடுத்து,"கழுவ" பாவிக்கிறம்!
( இந்தப் போட்டோ மாற்றத்திற்கான காரணம் இடிச்ச புளியின் பேட்டியுடன் வெளியான அவரது போட்டோவும்,
அவரது ப்ளாக்கில் இருந்த செந்திலின் போட்டோவும் வித்தியாசமின்றி இருக்கே எனப் பதிவர்கள் பலர் கிண்டல் பண்ணியது தானாம்.)//////////
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னாரம் ‘ போட்டோவ பார்க்க ராத்திரி அடிச்சது இறங்காத மாதிரி கிடக்காம் எண்டு, பன்னிக்குட்டி சொன்னது ராத்திரி அடிச்ச விஷ்கி பற்றி
அதுக்கு இடிச்ச புளி சொன்னான்ராம், ” இல்லையே நான் ராத்திரி அடிக்கும் போது நல்லாத்தானே இறங்கினதெண்டு “”
பன்னிக்குட்டி அழாத குறையாக என்னிட`ம் சொன்னாப்ல!
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்: ஓட்ட வடை நாராயணன்) ////////////
மச்சி - நீ உபயம் எண்டதும் எனக்கு வட்டக்கச்சி பரஞ்சோதி விதானையார்தான் நினைவுக்கு வாறார்! கோயில் திருவிழாவில, தேர்த்திருவிழா உபயகாரர் அவர்தான்! வருஷா வருஷம் திருவிழாவுக்கு ரெண்டு லட்சம் குடுக்கிறவர்!
தேர்த்திருவிழா அண்டைக்கு, வெள்ளை வேட்டி யும், கழுத்ந்தில ஒரு பென்னம் பெரிய சங்கிலியோடையும் வந்து நிப்பார்!
அவருக்குப் பின்னால ஒரு தேவதை மாதிரி அவரின்ர மகள் நிப்பா! ஒரே நேரத்தில அந்தப் பெட்டைக்கு 36 பேர் ரை பண்ணினவங்கள்! வடிவெண்ட வடிவு அப்பிடி ஒரு வடிவு!
சூப்பர் அப்பு!
இப்பிடி ஒரு பதிவுதான் தேடின நான்
தொடர.......
///////*ஆத்ம திருப்திக்காக எழுதுவோர் அல்லது அலுவலக வேலைச் சுமையில் கொஞ்சம் ஆறுதல் வேண்டி ப்ளாக் எழுதுவோர், இவர்கள் தான் இன்று ப்ளாக் எழுதுவோர்களில் முதலாமிடத்தில் இருக்கிறார்கள்.
*மற்றையோர் தாம் என்ன எழுதினாலும் சரி, தமக்கு ஓட்டும், பின்னூட்டங்களும் வந்து பிரபலமாகினால் போதும் எனும் நோக்கில் பதிவெழுதுவோர்.
*எப்போதாவது கிடைக்கும் தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்தி தம் படைப்புக்களைப் பகிரும் இலக்கியவாதிகள்.
*பிறரை வசை பாடும் நோக்கில் ப்ளாக் எழுதும் நபர்கள்.
*விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ப்ளாக் எழுதத் தொடங்குவோர்.//// இதுக்கிள்ள எல்லாம் நம்மள அடக்க முடியாது ...ஹும்
இண்ட்லி திரட்டியில் நீங்கள் புதிதாக எழுதிய உங்களது பதிவினை இணைத்த பின்னர் புது வரவு என்ற பக்கத்தின் கீழ் உங்களது பதிவு தோன்றும். இந்தப் புது வரவு என்ற பக்கத்தில் இருக்கும் பதிவுகள் அனைத்திற்கும் ஒரே பக்கத்தில் வைத்து பசக்- பசக் என்று ஒரு இருபது குத்துக் குத்திப் பாருங்க. உங்கள் பதிவிற்கு ஒரு சில மணி நேரங்களின் பின் அதற்கான எதிர் வினை கிடைக்கும். அதாவது எப்படி வருமோ?
யார் ஓட்டுப் போடுவார்களோ தெரியாது, தானியங்கி முறையில் மர்ம நிலையில் பல ஓட்டுக்கள் உங்கள் பதிவிற்கு வந்து குவியும்// ஆமா நான் கூட சந்தேக பட்டதுண்டு இவங்க யார் எண்டு, கொசு அம்புலி பவன் கார்க்கி எண்ட பேர்களில ஓட்டு விழுந்திருக்கும்...
////மச்சி - நீ உபயம் எண்டதும் எனக்கு வட்டக்கச்சி பரஞ்சோதி விதானையார்தான் நினைவுக்கு வாறார்! கோயில் திருவிழாவில, தேர்த்திருவிழா உபயகாரர் அவர்தான்! வருஷா வருஷம் திருவிழாவுக்கு ரெண்டு லட்சம் குடுக்கிறவர்! //// அதெல்லாம் மக்களிட்ட அடிச்சது தானே ஹிஹிஹி, விதானை எண்டாலே வில்லங்கம் தான் ...
நிருபன் நீங்க சொன்ன தகவல் அருமை.
அதைவிட உங்கள் கருத்துப்பட்டியலின்
நீளம் கருத்துக்களால் நீண்டு போவதால்
மாவுச உறுட்டி உறுட்டி களைத்துப்போனேன்
இப்ப எனக்கும் ஒரு யோசனை வந்துவிட்டது
பேசாமல் உங்கள மாதிரி அன்பு உறவுகளிடம்
எங்களைப்பற்றிய தகவலை தெரிவிக்குமாறு
ஒரு சின்ன அன்புக்கட்டளையை விட்டிட வேண்டியதுதான்
இது எப்படி இருக்கு............நன்றி சகோ பகிர்வுக்கு.
இண்ட்லி திரட்டியில் நீங்கள் புதிதாக எழுதிய .....அட அப்படியா சொல்லவே இல்லை !!! பதிவு அருமை
தமிழ்மண்ம.இண்ட்லி இரண்டிலும் இணைப்பதைத் தவிர வேற ஏதும் தெரியாது அப்பனே !
ஹீ ஹீ என்னத்த சொல்லுறது, இதுவும் ஒரு பயன் உள்ள தகவல்தான்
//சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க//
நாங்க தாண்டி வருவோம் இல்ல
//டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்: ஓட்ட வடை நாராயணன்)//
அவர வம்புக்கு இழுக்காமல விட மாட்டிங்களே
//நாம ஒரு ப்ளாக்கினைத் தொடங்கி விட்டு, யாராச்சும் வருவாங்களா என்று இலவு காத்த கிளி போன்று காத்திருக்கக் கூடாது. முதல்ல ஜாலியாக கூண்டை விட்டுக் கிளம்பி, வலையில் எழுதும் சக பதிவர்களோடை பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமும், வாக்குகளும் போட வேண்டும்.//
கவிதை மாதிரி எழுதி ஒரு உண்மையை சொல்லி இருக்கீங்க பாஸ்
இண்ட்லி திரட்டியில் நீங்கள் புதிதாக எழுதிய உங்களது பதிவினை இணைத்த பின்னர் புது வரவு என்ற பக்கத்தின் கீழ் உங்களது பதிவு தோன்றும். இந்தப் புது வரவு என்ற பக்கத்தில் இருக்கும் பதிவுகள் அனைத்திற்கும் ஒரே பக்கத்தில் வைத்து பசக்- பசக் என்று ஒரு இருபது குத்துக் குத்திப் பாருங்க. உங்கள் பதிவிற்கு ஒரு சில மணி நேரங்களின் பின் அதற்கான எதிர் வினை கிடைக்கும். அதாவது எப்படி வருமோ?
யார் ஓட்டுப் போடுவார்களோ தெரியாது, தானியங்கி முறையில் மர்ம நிலையில் பல ஓட்டுக்கள் உங்கள் பதிவிற்கு வந்து குவியும்.
இந்தத் தகவலை உபயமளித்தவர் சகோதரன் மதியோடை சுதா.
இப்படியும் ஒரு வழி இருக்கா ,,?
நகைச்சுவை யாக சொன்னாலும் ஒரு நல்ல பதிவு . சகோ
நிஜமாகவே பயனுள்ள தகவல்கள்..
நான் ரோந்ப லேட் ன்னு நினைக்கிறேன்.
அவருக்குப் பின்னால ஒரு தேவதை மாதிரி அவரின்ர மகள் நிப்பா! ஒரே நேரத்தில அந்தப் பெட்டைக்கு 36 பேர் ரை பண்ணினவங்கள்! வடிவெண்ட வடிவு அப்பிடி ஒரு வடிவு!// பதிவுக்கு கமென்ட் போட சொன்ன ஜொள்ளு விடறார் ரஜீவன்,
இண்ட்லி ஓட்டு மேட்டர் கரெக்ட் தான்.. உங்க மொழி நடை கொஞ்சம் மாறி இருக்கு,அநேகமா ஜீவன் ஸ்பான்ஸர் பண்ணுன பதிவா இருக்கலாம் ஹி ஹி
சகோ... எல்லோருக்கும் தேவையான மேட்டர் சொல்லியிருக்கிங்க.
தலைப்பு குறுக்கு வழி, ஆனா பதிவு நேர் வழி.
இன்ட்லில நீங்க சொல்வது போல தினமும் ஓட்டு போட வேண்டாம் என்பது என் கருத்து அறிவுரை....
நல்ல பதிவு , குறுக்கு வழி கடைசி வரை எதிபார்த்தேன்
நான் தான் கடைசியோ ...
உழைக்காமல் எதுவும் கிடைக்காது. நல்லா சொன்னிங்க சகோ..
இடிச்ச புளியவே இடிக்காம புதிய புளிய இடிசு இருக்கீங்க.. எல்லாமே நல்ல ஐடியா.
கஷ்டப்படாம ஏதும் கிடைக்காதுதான்...
நான் ரொம்ப லேட் நண்பரே....
தமிழ்மணம் 20
குறுக்கு வழி சாரி ....நேர் வழியை காட்டினதுக்கு ரொம்ப நன்றி.முதல் போனி ( கமென்ட் ) உங்களுக்குத்தான்....
அடடா! இப்பிடியெல்லாம் இருக்கா?
ஒருவேளை இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நாமளும் பிரபலமாயிருப்பமோ?
//குறுக்கு வழியில் பிரபல பதிவராக வேண்டும் என்றால் நல்ல பதிவினை எழுத வேண்டும்.///
ஆகா! வச்சிட்டாம்பா ஆப்பு! :-)
நிறைய பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!
ஜீ... said... Best Blogger Tips [Reply To This Comment]
அடடா! இப்பிடியெல்லாம் இருக்கா?
ஒருவேளை இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நாமளும்பிரபலமாயிருப்பமோ?///என்னத்த தெரிஞ்சு,என்னத்த எழுதி,என்னத்த பிரபலமாகி????????????///
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி;;;;///அவருக்குப் பின்னால ஒரு தேவதை மாதிரி அவரின்ர மகள் நிப்பா! ஒரே நேரத்தில அந்தப் பெட்டைக்கு 36 பேர் ரை பண்ணினவங்கள்! வடிவெண்ட வடிவு அப்பிடி ஒரு வடிவு!///இப்ப கலியாணம் கட்டி நாலஞ்சு பிள்ளையளோட "நிம்மதியா" இருக்குதாம்!!!!
அம்பாளடியாள் said...
நிருபன் நீங்க சொன்ன தகவல் அருமை.
அதைவிட உங்கள் கருத்துப்பட்டியலின்
நீளம் கருத்துக்களால் நீண்டு போவதால்
மாவுச உறுட்டி உறுட்டி களைத்துப்போனேன்
இப்ப எனக்கும் ஒரு யோசனை வந்துவிட்டது
பேசாமல் உங்கள மாதிரி அன்பு உறவுகளிடம்
எங்களைப்பற்றிய தகவலை தெரிவிக்குமாறு
ஒரு சின்ன அன்புக்கட்டளையை விட்டிட வேண்டியதுதான்
இது எப்படி இருக்கு.நன்றி சகோ பகிர்வுக்கு.///என்னது "மாவை" உறுட்டுறீங்களோ?
மாப்ள என்னமா போட்டு தள்ளிட்ட ஹிஹி!
நல்லாத்தான் சொல்லி கும்மியடித்திருக்கும் சூரப்புலி நிரூபன் வாழ்க வளமுடன்!
பதிவர்களை பாராட்டும் போது நிறைகுறைகளை சொல்வது சிறப்பாக எழுத ஊக்கிவிக்கும்!
இன்ட்லில நீங்க சொல்வது போல தினமும் ஓட்டு போட வேண்டாம் என்பது என் கருத்து அறிவுரை//
உண்மைதான் நானும் வழிமொழிகிறேன்..நான் அதை செய்வதில்லை...
இந்த தலைப்பில் யார் எழுதினாலும் மேட்டர் ஓடும்..ஆனா புதுசா ஏதாவது சொல்லணும்...வந்தே மாதரம் சசிகுமார்..ப்ளாக்கர் நண்பன் போன்ற தளங்களில் சொல்லப்படாத புது கருத்துக்கள் எதுவும் நாம் சொல்லிவிடப்போவதில்லை..இஹே தலைப்பில் நான் ஐந்து பதிவுக்கும் மேல் எழுதிவிட்டேன்
நகைச்சுவையாக நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள் நிரூபன்
எந்த பாதையில் நடந்தாலும் திரும்பிச் செல்லும் வழியையோசித்துக்கொண்டே செல்பவன் நான் ஒருமுறைகூடஅடைந்ததேயில்லை தேடிப்போன எதையும்...
அதிருக்காடும் நண்பரே. என்னுடைய ப்ளாகை மட்டும் ஏன் இன்டலி "தடை செய்ய பட்ட முகவரி என்று சொல்கிறது" சற்று விளக்கம் தாருங்களேன்.
அப்படா இஞ்சையும் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் பழக்கத்தை நம்ம சுடுசோறு மாப்பிள விடவில்லையா? ஏற்கனவே அறிந்தவை என்றாலும் உங்கள் மொழி நடை நகைச்சுவையாக உள்ளது. நண்பர்களே என்ர கொல்லைப்புறமான http://www.pc-park.blogspot.com/ க்கும் வந்து செல்லுங்கள்.சேர்ந்தே சரக்கடிக்கலாம்.
சூப்பர் ஐடியாஸ் மாப்ளே.....
ரொம்ப ரசித்துப்படித்தேன் சகோ! இன்ட்லி விஷயம் புதுசு.நன்றி.
நல்ல ஐடியாதான் சொல்லுறீங்க ஆனா இண்டிலி விசயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை சும்மா நாங்க போட்டம் எண்டுறதுக்காக மற்ற ஆக்கள் போட கூடும்...
திரைதகவல் பெட்டகம்-VI (பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் சிறப்பு)
அப்படாடி...எப்படியோ கமெண்ட பக்கதிற்கு வந்தாச்சு...எவ்வளவு கமெண்ட்ஸ்..வாழ்த்துகள்..
பகிர்வுக்கு நன்றி..
இது எனக்கே எனக்காக எழுதிய உள்குத்து பதிவு... இத நான் ஒத்துக்கமாட்டேன்... ஆவ்வ்வ்....
இந்த மாதிரி படு பயங்கரமான உள்குத்து பதிவு போட்டால் நாட்டில் பலபேரு நாண்டுக்கிட்டு செத்துடுவானுங்கோ... எச்சரிக்கை...
யோவ்... உனக்கு திறமை இருக்கு ... நீ எழுதுவே நல்ல பதிவு... எங்கக்கிட்ட எங்க இருக்கு... திறமையோ என்ன எழவோ... ச்சும்மா ஏதாவது குறுக்கு வழி சொல்லுயான்னா ...
ஏற்கனவே தெரிந்த விசயங்கள்தான் என்றாலும் புதிதாக வருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும், பகிர்வுக்கு நன்றி நிரூபன்
நல்ல ஆலோசனைகள்!கடைசி டிஸ்கி சூப்பர்.
//இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கே ஆச்சரிய மூட்டக் கூடிய ஒரு வழி இருக்கு. அது தான் ஓட்டுப் போடுதலின் ரகசியம்.//
முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது!எலிக்குஞ்சை அமுக்கி விரல் வலிதான் மிச்சம்!
வணக்கம் நிருபன் அவர்களே,
முதல் முறையாக தங்களது வலைப்பக்கத்தில் பின் ஊட்டமிடுகிறேன்..
மறுமொழிப் பெட்டியின் வாசகங்களே
பயங்கரமாக இருக்கிறதே ?
தங்களது எண்ணங்கள் நியாயமானது தான் என்றாலும்,
இது நல்ல வருகையாளர்களையும் + வாசக்ர்களையும் நோகச் செய்யுமே ?
இயன்றால் திருத்தி அமையுங்கள்..
பிழையென்றால் பொறுத்தருளுங்கள்..
இப்பதிவின் ஆலோசனைகளைப் பின்பற்றிப் பார்க்கிறேன்.
யாருக்குத் தான் ஆசையில்லை தனது தளம் முன்னேற வேண்டும் என்பதில் ?
ஆசையே துன்பத்திற்கு காரணம்..
என்றாலும்
அத்தனைக்கும் ஆசைப்படுகிறோம்..
ஆகட்டும்.. முயற்சிப்போம்.
நன்றி...
நல்ல ஐடியா........நானும் எல்லாருக்கும் சும்மா ஓட்டு போடப்போறன்... வேலை செய்யுதா எண்டு பாப்பம்............
நன்றி பாஸ். நானும் try பண்ணப்போறன்
யாருய்யா அந்த ஓட்டைவடை நாராயணன் சிகப்பு கோடு போட்டு மனுசன பயமுறுத்தறது.....
நிரூ...உங்க கிட்ட மட்டும் செல்லுற யாருகிட்டியும் சொல்லிருதிங்க இன்ட்லியைவிட உடான்ஸ்ல நமக்கு நாமே எத்தனை ஓட்டு வேணாலும் போட்டுக்கலாம் நம்ம பதிவ ஓப்பன் செய்து உடான்ஸ்ல ஓட்டு போடுங்க ஓட்டு விழும் இரண்டாவதா ஓட்டு போட்டா நீங்க ஓட்டு போட்டுட்டிங்கன்னு சொல்லும் பிரவுசர குளேஸ் பன்னிட்டு மறுபடியும் உங்க பதிவ ஓப்பன் செய்து ஓட்டு போட்டா ஓட்டு விழும் யாருகிட்டியும் சொல்லிறாதிங்க.....ஒரு நாளைக்கு எத்தனை ஓட்டு வேணாலும் போட்டுக்கலாம்...எப்படி ஜிங்கிலிப்பி பிலாப்பி மாமா பிஸ்கோத்து...ஹஹஹஹ
Post a Comment