அண்மையில் வெளியான பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஈழத்தின் இறுதி யுத்தம் பற்றிய விபரணத் தொகுப்பின் எதிரொலியாக, (கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்) ஈழத் தமிழர்கள் பற்றிய இறுகிய சிந்தனையுடைய மனங்கள் பலவும், ஈழத்தின் மீது தமது இரக்கப் பார்வையினை வீசத் தொடங்கியிருக்கின்றன.
ஓர் இனத்தை தம் காலடியின் கீழ் அடக்கி வாழ வேண்டும் அல்லது பூண்டோடு அழித்து வாழ வேண்டும் என்கின்ற மமதையின் - அகங்காரத்தின் உச்சக் கட்டம் தான் இந்தப் படுகொலைகள்.
இப் படுகொலைகலைப் புரிந்துள்ள நபர்களிடம் நிறைந்துள்ள போர் வெறியினையும் தாண்டி இச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விடயம்/ இச் சம்பவங்கள் யாவும் எமக்கு உணர்த்தும் செய்தி; மீண்டும் இலங்கையில் இன்றோ அல்லது நாளையோ ஒரு சந்ததி விடுதலை கோரிப் போராடக் கூடாது என்பதேயாகும்.
ஒரு இனத்தின் மீதான நேரடி யுத்தம் தவிர்ந்த - போர் விதி முறைகளுக்கு முரணான உச்சக்கட்ட வன்முறைகளின் வெளிப்பாடாக
*1983ம் ஆண்டு இடம் பெற்ற ஜூலைக் கலவரம்,
*1995ம் ஆண்டு ஆடி மாதம் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட மணலாறு இராணுவ முகாம மீதான தாக்குதலை முன் கூட்டியே அறிந்த இராணுவத்தினர்,
உள் இழுத்துத் தாக்கி 300 இற்கும் மேற்பட்ட பெண் போராளிகளின் இறந்த உடல்களைக் கைப்பற்றிப் கண்ட துண்டமாக வெட்டிப் பொலித்தீன் பைகளில் பொதி செய்து அனுப்பிய சம்பவம்,
*2006ம் ஆண்டு மே மாதம் இடம் பெற்ற அல்லைப்பிட்டிப் படுகொலைகள்.
*2006ம் ஆண்டு ஜூன் மாதம் இடம் பெற்ற மன்னார் படு கொலைகள்
*2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம் பெற்ற அனுராதபுரம் விமான நிலையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இறந்த போராளிகளின் உடலங்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தெருத் தெருவாக காட்சிப்படுத்தப்பட்டமை
*2005ம் ஆண்டின் இறுதிக் காலந் தொடக்கம் 2009ம் ஆண்டின் மே மாதம் வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற ஈவிரக்கமற்ற வீதியோரங்களில் வைத்து கடத்தி, காணாமற் செய்யப்பட்டு, சில நாட்கள் கடந்த பின் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக வீதியோரங்களில் போடுதல்
*2006ம் ஆண்டு-2009 மே மாதம் வரையான காலத்தில் வன்னிப் பகுதியினை மையமாக வைத்து இடம் பெற்ற ஈவிரக்கமற்ற பொது மக்கள் மீதான படு கொலைகள்.
பிற் சேர்க்கை: இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு, மாற்றுக் குழுக்கள், எனப் பலரால் இடம் பெற்ற படு கொலைகள் பற்றிய குறிப்புக்கள் இப் பதிவிற்குத் தேவையில்லை என்பதால், இங்கே இணைக்கவில்லை.
இக் கொடூரமான படு கொலைகளைப் புரிந்தவர்கள் பற்றி, நாம் ஏதும் பேச முடியாதவர்களாக- அடக்கி வாழப் பழக்கப்பட்டு விட்டோம். மேற் கூறப்பட்ட படு கொலைகளுள் அண்மைக் காலத்தில் பலரது மனங்களையும் வேதனையுற வைத்த ஓர் விடயம் தான் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ தொகுப்புக்களாகும்.
2007ம் ஆண்டின் மன்னார் பகுதியில் தொடங்கிய முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து- பெண் போராளிகளை உயிரோடு பிடித்தல். தமது இச்சைகளுக்கு ஆளாக்குதல் எனும் பெயர் கூற முடியாத நபர்களின் செயற்பாடுகள் வெறியாட்டமாக மாற்றமுறுகின்றன.
இறுதி யுத்தம் இடம் பெற்ற பகுதிகளில் 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் புலிகளின் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல விரும்பிய மக்கள் பலரும், ‘இராணுவத்தினருக்கு அண்மையில் செல்லும் போதும் ஆடைகளைக் களைந்து முழு நிர்வாணமாக செல்ல வேண்டும் எனும் விதி முறைக்கு ஆயுத முனையின் கீழ் கட்டுப்பட வேண்டிய நிலமைக்கு ஆளானார்கள். இதற்காக அவர்கள் கூறிய காரணம்- மக்களோடு மக்களாக தற்கொலைக் குண்டுதாரிகளும் வந்து தம்மைத் தாக்கலாம் என்பதாகும்.
2008ம் ஆண்டின் பின்னரான போர் வெறி நடவடிக்கைகள் நலிவடைந்த மக்கள் மீது எவ் வகையில் பிரயோகிக்கப்பட்டது என்பதற்கனான ஓர்ச் சிறிய சாட்சி(சிறு துளி) தான் இந்த வீடியோ தொகுப்புக்கள். இவ் வீடியோத் தொகுப்பினூடாகவும் வெளி வராத பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன. காலவோட்டத்தில் அவையும் வெளியாகும் என நினைக்கின்றேன்.
இது போன்ற ஒரு சில சம்பவங்களைக் கண் முன்னே பார்த்தும், கை கட்டி, அவர்களின் கால் பிடித்து என் உயிரைக் காப்பதற்காய் கெஞ்சிய குற்ற உணர்ச்சி இன்று என் மனதை வதைக்கிறது.
இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட மக்களின் சரியான கணக்கெடுப்பு இதுவரை எவராலும் வெளியிடப்படவில்லை. இவையாவும் ஒரு புறமிருக்க;
இனிக் கீழே வரும் விடயங்கள் உங்களுக்கு அதிர்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம்.
இந்தக் காணொளியினைப் பார்த்த பின்னர், பலரது மனங்களில் யுத்த வெறி! மீண்டும் அவர்களைக் கொல்ல வேண்டும். அவரைப் பிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்கின்ற வன்மம் வந்து படிந்து கொள்ளலாம். அதனை நான் தவறென்று சொல்லவில்லை. என்னுடைய கேள்வி, இது தான்,
*பல ஆயிரம் மக்களின் கொலைக்கு காரணமான ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, அவருக்குத் தண்டனையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், இறந்து போன எங்கள் உறவுகளின் உயிர்கள் திரும்பி வந்து விடுமா?
*இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் தமிழ் மக்களிற்கான தீர்வெனப்படுவது ஏமாற்றிப் பிழைக்கும் வித்தையாகத் தானே பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமிருக்கிறது, ஆகவே இப்போது ஆட்சியிலுள்ளவர் போய், புதிதாக அடுத்த நபர் வந்தாலும் இதே நிலமை தானே எமக்கு ஏற்படும்?
*பல கோடி ரூபாக்களைத் திரட்டி, இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகளுக்குத் தண்டனையினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கோடு செயற்படும் அன்பு உள்ளங்களே, உங்களிடம் ஒரு சில கேள்விகள்-
இங்கே உங்களின் நடவடிக்கைகள் தவறானது என்று நான் கூறவரவில்லை.
இதே யுத்தத்தால் அங்கவீனர்களாவும், வறுமைக் கோட்டின் கீழும், கல்வியினைத் தொலைத்து விட்டும் வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்?
அவர்களும் மனிதர்களில்லையா. பணம் கொடுத்தாலோ அல்லது பொருளாக அனுப்பினாலோ அரசாங்கம் அபகரித்து விடும், தடுத்து வைத்து விடும் என்று கூறும் நீங்கள், ஏன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உங்களின் உதவிக் கரங்களை நீட்டக் கூடாது.
ஈழம் என்ன குடிபானம் அருந்தி மகிழும் போது தொட்டு நக்கும் ஊறுகாயா? ஈழம் பற்றிய அனுதாபங்களை உருவாக்கும் செய்திகள் வரும் வேளையில் வெறி கொண்டெழுந்து உணர்வுகளைக் கொட்டவும், பின்னர் அவ் உணர்வுகள் எல்லாம் திக்குத் திசை தெரியாது ஓடி மறைந்து விடவும், ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா?
போர்க் குற்ற வழக்கில் நிறுத்தித் தண்டனையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் துடி துடிக்கும் உள்ளங்களே, மீண்டும் உங்களிடம் சில வினாக்களை முன் வைக்கின்றேன். உங்களின் உணர்வுகளில் தவறேதுமில்லை- ஆனால் அதே உணர்வெழுச்சியுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் உங்களின் கடைக் கண் பார்வையினைக் காட்டலாமல்லவா.
இறுதி யுத்தத்தின் பின்னர் :
*அங்கவீனர்களாக உள்ள பலர் தமது உடல் உறுப்புக்களைப் பொருத்த வசதியின்றி நடைப் பிணமாக வாழ்கிறார்கள்.
*விடுதலைக்காக போராடிய பலர் வேலை வாய்ப்புக்கள் ஏதுமின்றி மாற்றுக் குழுக்களோடு(Paramilitary) இணைந்து கொலை, களவு முதலிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
*விடுதலைப் போரிற்குத் தோள் கொடுத்த பலர் தமது வாழ்க்கையினைக் கட்டியெழுப்ப முடியாதவர்களாக அல்லற் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*அறு நூறிற்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் இன்று வரை விடுதலை செய்யப்படாது- துன்புறுத்தப்பட்டு/ சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு போதிய உணவு மற்றும் மருந்து வசதியின்றி வாழ்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
*இது தவிர அவசர காலச் சட்டம், பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்று வரை வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, இலங்கையின் பல்வேறு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்களே, இவர்களுக்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன?
*கல்வியினைத் தொலைத்த ஒரு சந்ததிக்கு நீங்கள் வழங்கப் போகும் பரிசு என்ன?
தாயகம் எனும் இலட்சியத்திற்காக உயிர் துறந்த பலரது கனவுகளில் முதன்மை பெற்றிருந்த விடுதலைக் கனவினைத் தவிர்த்துப் பார்க்கையில்; தமது வருங்காலச் சந்ததி நிறைவான கல்வியறிவினைப் பெற்று, வளமான வாழ்வினை வாழ வேண்டும் எனும் இலட்சிய நோக்கத்திற்காகத் தான் அவர்கள் இறந்தார்கள்.
இறந்தவர்களை மதிக்காவிட்டாலும், அவர்களின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து ஒரு சந்ததியின் எதிர்காலத்தை நாம் மிதிக்காதிருத்தல் சிறப்பல்லவா!
|
121 Comments:
வணக்கம் நிரூபன்!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இனிய காலை வணக்கம் மிஸ்டர் ஓட்ட வடை நாராயணன் ஓனர் ஆப் மாத்தி யோசி
நோ நோ...அவற்றை பற்றி கதைக்காமல் இருப்பது என்னமோ எனது மனதுக்கு நிம்மதியாய் இருக்கிறது..கதைக்க வெளிக்கிட்டால் வாய்க்கு கட்டுப்பாடுகள் தெரியாது...எட்டுக் கம்பிகள் ஆல்ரெடி எண்ணி இருக்கிறேன் ..
இண்டைக்கு உங்களோட சண்டைதான்! மாற்றுக் கருத்துக்களை வரவேற்பீர்கள் என்று எண்ணுகிறேன்!
இலங்கையில் ஒரு சாபக் கேடு இருக்கிறது, மாற்றுக் கருத்துச் சொன்னால், ஃபிரெண்ஷிப்பை அறுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்!
ஆனால் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்!
@மைந்தன் சிவா
நோ நோ...அவற்றை பற்றி கதைக்காமல் இருப்பது என்னமோ எனது மனதுக்கு நிம்மதியாய் இருக்கிறது..கதைக்க வெளிக்கிட்டால் வாய்க்கு கட்டுப்பாடுகள் தெரியாது...எட்டுக் கம்பிகள் ஆல்ரெடி எண்ணி இருக்கிறேன் ..//
ஆமாம் மச்சி, நானும் இவற்றைப் பேசக் கூடாது என்று தான் இருந்தேன்.
ஆனால் இந்தக் கட்டுரையில் மக்களின் இன்றைய நிலையினைச் சொல்ல வேண்டிய கடப்பாடு இருப்பதால் தான் மேலதிகமாக ஒரு சில விடயங்களையும் சேர்க்க வேண்டியேற்பட்டது சகோ.
புலம்பெயர்தமிழர்கள், மற்றும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள், யுத்த வெறியுடன், பழிவாங்கும் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் இப்போது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்!
இன்னமும் புலம்பெயர்தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நிலைமைதான் இலங்கையில் இருக்கிறது!
நாங்கள், துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவித்த ஒரு மக்கள் குழாத்தை ( வன்னிமக்கள் ) மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிவிட முனையவில்லை!
மாறாக படுமோசமான யுத்தக் குற்றவாளிகளை, சர்வதேசத்தில் அம்பலப்படுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே புலம்பெயர் மக்களின் உணர்வாக இருக்கிறது!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இண்டைக்கு உங்களோட சண்டைதான்! மாற்றுக் கருத்துக்களை வரவேற்பீர்கள் என்று எண்ணுகிறேன்!
இலங்கையில் ஒரு சாபக் கேடு இருக்கிறது, மாற்றுக் கருத்துச் சொன்னால், ஃபிரெண்ஷிப்பை அறுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்!
ஆனால் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்!//
மச்சி, என்னுடைய பல விவாத மேடைகளில் நீ பங்குபற்றியிருக்கிறாய், உனக்கு நன்றாகவே தெரியும்,மாற்றுக் கருத்துக்களை நான் அனுமதிப்பதால் தான் வலைப் பதிவின் பின்னூட்டப் பெட்டியினைத் திறந்து வைத்திருக்கிறேன்.
ஆனால் ஜீரணிக்க முடியாத அளவிற்கு பின்னூட்டங்கள் மூலமாக யாரும் வரலாற்றினை மாற்றாத வரைக்கும் மாற்றுக்கருத்துக்களுக்கு வரவேற்பு உண்டு!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்தமிழர்கள்தான் உதவ வேண்டும் என்றால், இலங்கையில் அரசாங்கம் என்ற ஒன்று என்ன மசிருக்கு இருக்கு?
நிருபன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
புலம்பெயர்தமிழர்கள், மற்றும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள், யுத்த வெறியுடன், பழிவாங்கும் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் இப்போது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்!//
மச்சி, ஒட்டு மொத்த மக்களையும் இங்கே உள்ளவர்கள் குற்றம் சாட்டவில்லைத் தானே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மாறாக படுமோசமான யுத்தக் குற்றவாளிகளை, சர்வதேசத்தில் அம்பலப்படுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே புலம்பெயர் மக்களின் உணர்வாக இருக்கிறது!//
அந்த உணர்விற்குத் தலை வணங்குகிறேன்,
அதே நேரம் நான் கட்டுரையில் குறிப்பிடும் விடயம் என்ன?
அதே பேரெழுச்சியோடு எங்கள் மக்கள் மீதும் உங்களின் கடைக் கண் பார்வையினைக் காட்டலாமல்லவா.
ஒரே நாடு ஒரே மக்கள் - நாமெல்லோரும் சகோதரர்கள் என்று மூச்சுக்கு முன்னூறுதரம் கத்தும் ஆட்சியாளர்கள் - இதுவரை வன்னி மக்களுக்கு என்ன செய்து கிழித்தார்கள்?
யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பியதா? அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதா?
அல்லது அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல்தான் தோற்றுவிக்கப்பட்டதா?
ஒரு அரசாங்கத்துக்கு சில கடமைகள் இருக்கின்றன! அதையெல்லாம் செய்யத் தெரியாமல், புலம்பெயர்தமிழர்கள் வந்துதான், புடுங்க வேணும் என்று சொல்வது என்ன நியாயம்?
நியாயமான கோபங்கள் தெளிக்கின்றன சகோ. அதே நானும் கேட்கிறேன் ஈழத்தில் உயிர்ப் பிணங்களாக மீந்து போன உள்ளங்களுக்கு உலகத்தில் இருந்து என்ன உதவிகள் வந்தன .. உறவுகளே கைவிட்டால் எதிரியின் செயலைக் கேட்கவா வேண்டும் ???
பதில்கள் சொல்வாரில்லை !!!
***********************
வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்தமிழர்கள்தான் உதவ வேண்டும் என்றால், இலங்கையில் அரசாங்கம் என்ற ஒன்று என்ன மசிருக்கு இருக்கு?.//
மச்சி, இந்தக் கட்டுரையில் நான் என்ன சொல்லியிருக்கேன்,
இலங்கையில் இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் ஒரே நிலமை தான்.
ஆனால் மக்களுக்கு நாங்கள் தான் உதவி செய்து, எமது வருங்காலச் சந்ததியினைக் கல்வியறிவின் மூலம் வளர்த்தெடுத்து நமக்கான வழியினை அமைத்துக் கொள்ள வேண்டும்.
என் லொஜிக் இது தான்.
சண்டை நடந்த போது , எல்லா நாடுகளுக்கும் ஓடிப்போய், கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி, ஆயுதம் வேண்டிய ..........களுக்கு, அதே நாடுகளிடம் உதவிபெற்று, மக்களுக்கு உதவ முடியாதா?
வன்னிமக்களையும் தனது சொந்த மக்களாக , அந்த .......கள் கருதியிருந்தால். இந்த இரண்டு வருடங்களில் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கலாமே?
இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்கள் , பெளத்த மத வெறி மற்றும் இனவெறி பிடித்த, மிருகங்கள்! ஒரே ஒரு கணம் சர்வதேச அரசுகளுடன் - இலங்கை அரசை ஒப்பிட்டுப் பாருங்கள்! எவ்வளவு கேவலமானவர்கள் என்று புரியும்!
மனிதாபிமானத்துக்கும், கருணைக்கும் பெயர்போன, பிரெஞ்சு தேசத்தில் இருந்து, இந்த கருணைமிக்க அரசின் நிழலில் இருந்துகொண்டு, இலங்கை அரசை திரும்பி பார்கக்க, மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது!
@கவி அழகன்
நிருபன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை//
நன்றி சகோ, என்ன மாப்ளே, ஒற்றை வரியோடு எஸ் ஆகிட்டீங்க.
நிரூபன், நீங்கள் வாழ்வது உலகில் மிகவும் கேவலமான ஒரு அரசாங்கத்தின் கீழாகும்! அங்கு நடைபெறும் ஆட்சி - சர்வதேசத்துடன் ஒப்பிடும் போது 300 வருஷங்கள் பின்னிற்கிறது!
இங்கெல்லாம் மக்களுக்குத்தான் முதலிடம்! மனிதனுக்குத்தான் முதலிடம்! மனிதாபிமானத்துக்குத்தான் முதலிடம்!
ஒரு முறை இந்த அரசாங்கத்தின் நிழலில் வாழ்ந்தால், இலங்கை அரசு மீது காறி உமிழ்வீர்கள்/! ஒப்பிட்டுப் பார்க்கும் போது, எவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்கிறார்கள் என்று புரியும்!
உடனடி நிவாரணம் கட்டமைப்புகளை வலுப்படுத்தல் விழிப்புணர்வு இந்த மூன்று விடயங்களும் சரி சமமாக நடந்தால் தான் தமிழ் மக்களின் வேதனை அடங்கும்
காய்ச்சலுக்கு மருந்து கொடுக்காமல் ஆசுப்பத்திரி கட்டுற வேலைதான் இப்ப முமரமா நடக்குது
நிரூ, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நீங்கள் மாத்திரமல்ல, கொழும்பிலே பிறந்து கொழும்பிலே வாழ்பவர்கள் கூட, மிகவும் பிந்தங்கிய வாழ்க்கை முறையினையே வாழ்கின்றனர்! காரணம் அரசாங்கம்! அரசின் கல்வி முறை! இனவாதம்..... இன்னும் பல!
உங்களில் யாராவது ஒரு பத்து நாளைக்கு மேற்கு நாடொன்றுக்கு வந்தால், அதன் பின்னர் சொல்வீர்கள் - ச்சே எவ்வளவு கேவலமான ஒரு அரசின் கீழே இவ்வளவு காலமும் வாழ்ந்து விட்டோம் என்று!
படிக்கும் போது நெஞ்சம் படபடக்கிறது...
இந்த நிலமை மாற வேண்டும்..
அதற்காக தற்போதைக்கு ஆண்டவை வேண்டுவதை தவிர வேறு வழி தெரிய வில்லை...
அன்பு சகோ
பல நியாயமான கேள்விகளை உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எழுப்பி இருக்கீங்க
இலங்கை அரசாங்கம் நினைத்திருந்தால், வெறும் இரண்டு வருடங்களில், வன்னி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி இருக்கலாம்! ஆனால் அடிப்படையில் அப்படி ஒரு எண்ணம், அந்த மத வெறியர்களுக்கு இல்லை!
மக்களின் அபிவிருத்திக்கு பணம் தா எண்ரு கேட்டிருந்தால், அள்ளிக் கொடுப்பதற்கு சர்வதேசம் இருக்கிறது!
ஆனால் இவர்களால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சர்வதேசத்துடன் உறவுகளைப் பேண முடியுமா?
சீனாவுடனும், பாக்கிஸ்தானுடனும் நல்லுறவை பேணுகிறார்களாம்! - அந்த நாதாரிகளே மகா கேவலமானவர்கள்!
பண்றியோட சேர்ந்த பசுவும் ........ தின்னுமாம்!
இலங்கையில் மீண்டும் - மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வரவேண்டும் என்பது எனது விருப்பமாகும்! ஆட்சியில் இருந்து அவர்களது மதத்தை பிரித்து எறிந்தால் தான் நாடு உருப்படும் !
உலகில் எங்கெல்லாம் அரசாங்கத்துடன் சேர்ந்து மதம் இயன்குகிறதோ, அல்லது மதத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஆட்சி நடத்துகிறார்களோ அவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க வேண்டும்!
இந்த விஷயத்தில் நான் அமெரிக்கா சார்பாகவே சிந்திக்கிறேன்!
சகோ!நிருபன்!உங்களையும்,இக்பால் செல்வனையும் எனது பதிவுகளின் பின்னூட்டப்பக்கங்களில் எதிர்பார்த்தேன்.அதனை இக்பால் செல்வன் பின்னூட்டங்கள் மூலமாக சொன்னதிலிருந்து பதிவின் சாரம் என்னவென்பதை உள் வாங்கியிருப்பார் என நம்புகிறேன்.
ஏதாவது ஒரு விதத்தில் தீர்வுகளுக்கான பாதையை திறக்கவேண்டுமென்ற நம்பிக்கையில் இருபக்கங்களிலும் உள்ள முரண்பாடுகளோடு தீர்வுக்கான வழிகள் இப்படியிருக்கலாமே என சொல்லியிருக்கிறேன்.நீண்ட பதிவுகளாய் இருப்பதால் வாசிக்கும் கால அவகாசங்கள் இல்லாமல் கூட சிலர் கருத்துக்கள் சொல்லாமல் போயிருக்க கூடும்.
அடுத்து தொடர்கிறேன்.
சிந்திக்க வைத்த பதிவு,
நிரூ, காலிவீதியில் , கோல் ஃபேஸ் கடற்கரையில் இருந்து, ரத்மலானை வரை , நடு வீதியால் ட்ராம் போனால் எப்படி இருக்கும்?
ஈஃபில் டவர் போன்று ஒரு உலக அதிசயம் இலங்கையில் கட்டப்பட்டு, வருடா வருடம் வருமானத்தை அள்ளீக் கொட்டினால் எப்படி இருக்கும்?
யாழ்ப்பாணத்தில் இருனூறு அடி ஆழத்தின் கீழே, நிலத்துக்கு அடியால் மெட்ரோ சேவைகள் நடத்தப்பட்டால் எப்படி இருக்கும் !
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மின்னல் வேக ரயில் சேவை நடத்தப் பட்டால் எப்படி இருக்கும் ?
கூலி வேலை செய்பவர்களும் - பென்ஷன் எடுக்கக் கூடிய பொற்காலம் வந்தால் எப்படி இருக்கும்?
இருபத்தி நான்கு மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டால் எப்படி இருக்கும்?
இதெல்லாம் சாத்தியமில்லையா என்ன?
இப்படியெல்லாம் செய்து தரச்சொல்லி,ன் ஆட்சியில் இருக்கும், .........களைக் கேளுங்கள்!
கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை வாழும் அத்தனை மக்களையும் மிகவும் கீழ்த்தரமான வாழ்க்கை முறையில் வைத்திருக்கிறார்கள் உங்கள் அரசாங்கம்!
ஓ அமெரிக்காவே! எப்போது இலங்கையில் உனது கரங்களைப் பதிப்பாய்?
பொருளாதாரப் பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்ககூடியது என்றும் அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டுமென்றும்,ராணுவ அனுமதி வாங்கித்தர தான் தயார் என்றும் இலங்கை அரசின் ஊதுகுழலாக குமரன் பத்மநாதன் கூறுகிறார்.
இந்திய அரசும் ஏனைய இலங்கை நட்பு நாடுகளும் உதவிகள் செய்கின்றன.ஆனால் இவைகள் எந்த விதத்தில் செலவு செய்யப்படுகின்றன என்பதற்கெல்லாம் மேற்பார்வை ஒன்றும் கிடையாது.
எனவே பொருளாதார உதவிகள் ஒரு பிரிவினருக்கு மட்டும் போய்ச் சேருகின்றது அல்லது ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்டையப் போடுகிறார்கள் என்று அர்த்தம்.
புலம் பெயர் தமிழர்களின் மீது விரோத மனப்பான்மை கொண்டும் செயல்படுவது,அதே சமயத்தில் அவர்களின் உதவியும் தேவையென்ற கொள்கை யாருடைய குற்றம்?
சீரியஸ் போஸ்ட்
இலங்கைக்கு சர்வதேசம் தண்டனை கொடுக்காவிட்டால், இனவாதமும் ஒழியாது, மதவாதமும் ஒழியாது, இலங்கை சிங்கப் பூராகவும் மாறாது, சர்வதேச தரத்தையும் எட்டாது, தொடர்ந்து ஒரு மூன்றாம்தர நாடாகவே, கேவலம் மிக்க சிந்தனைகளுடன், ஒரு பக்க வளர்ச்சியுடன்! அரை குறையாகத்தான் இருக்கும்!
மக்களின் வாழ்க்கை ஒருபோதுமே மேம்படாது! ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒழுங்கான படிப்பறிவு இருக்கா? குடு கடத்தினவனும், கஞ்சா வித்தவனும், மோசடி செய்தவனும், அமைச்சராக, எம்பியாக இருந்தால் நாடு எப்படி உருப்படும்?
இங்கு இருக்கும் ஒரு நாடளுமன்ற உறுப்பினரின் காலடித் தூசிக்கும் கூட தகுதி இல்லாதவர்கள்தான் அங்கு இருப்பவர்கள்!
எனவே, இலங்கை அரசை சர்வதேசம் தண்டிக்க வேண்டும் என்று புலம்பெயர்தமிழர்கள் கோருவது, தமிழ்மக்களின் நலன்கருதி மட்டுமல்ல, அப்பாவி சிங்கள மக்களின் நலன்கருதியும்தான்!
தற்போதைய நிலையில் இன்னொரு நாட்டின் அழுத்தங்கள் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.இக்பால் செல்வனின் பதிவொன்றில் விவாதிக்கும் போது மக்களுக்கு உதவ யார் தடையாக இருக்கிறார்கள்? என்ற கேள்வியையும் கேட்டு விட்டு தனி மனிதர்கள் உதவி செய்வதில் பிரச்சினையில்லை,ஆனால் நிறுவனமாக உதவினால் மட்டுமே ராணுவ அனுமதி தேவையென்றார்.மொத்த மக்களின் அடிப்படை வசதிகளை NGO போன்ற நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும்.வெளி உதவியும் தேவை,ஆனால் எனது அனுமதியும்,அடக்கியாளும் தன்மையும் மாற்ற இயலாது என்கிற நிலையில் என்ன செய்ய இயலும்?
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பார்கள்.வெளிப்படைத்தன்மை,நம்பிக்கையிருந்தால் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல,தமிழக மக்கள் கூட உதவ தயாராக இருப்பார்கள்.உதவிகள் போய்ச் சேருகிறதென்பதற்கு உத்தரவாதமென்ன?
மேனனும்,நிருபமராவும் பிரச்சினைகள் தீர்க்க மாட்டார்கள் என்பதை இந்தியாவும்,இலங்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.இவர்களுடன் தமிழகத்திலிருந்து நம்பகமான ஒருவர் இணையும் போதே மக்களைப் போய் அடைய முடியும்.பான் கி மூன் மாலை போட்டு விட்டு விமானம் ஏறவும்,இந்தியப் பிரதிநிதிகள் இதோ இலங்கை போகிறேன் என்று அறிக்கை விடவுமே லாயக்கு.
தமிழ்நாட்டுப் பிரதிநிதி,புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்ற கூட்டுக்கலவையோடு,தமிழக அரசின் மூலமாக இந்திய உதவி என்பது மட்டுமே மக்களின் அடிப்படபிரச்சினைகளைத் தீர்க்கும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாது சிங்கள மக்களின் பிரச்சினைகளைக் கூட தீர்க்கும் வலிமை ராஜபக்சே குழுவினருக்கு இல்லை.அவசர கால சட்டங்களும்,ராணுவ கெடுபிடியும் ராஜபக்சே அரசை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.மேலை நாடுகளின் தலையீடு இல்லாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பல சமயங்களில் பின்னூட்டங்களில் வெளுத்து வாக்குறீங்க? ஆனால் உங்க பதிவில் நக்கலும் நையாண்டியுமாக கடந்து போயிடுறீங்க? ஏன்? ஏன்?
முகாமிலிருந்து வெளியேறி புலம் பெயர்ந்த உங்களின் அனுபவங்களை ஒரு தொகுப்பாக கொடுக்கலாமே?
என் கூட சேர்ந்து வடை நாராயணன் நல்லா பேட்டிங்க செய்கிற மாதிரி இருக்குதே:)
தமிழ் மக்கள் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித் தருவதற்கும் அப்பாலும் சிந்திக்க வேண்டும்.அதே நேரத்தில் தண்டனை வாங்கித் தருவதே அடுத்த கட்டத்திற்கும் வழி வகுக்கும்.
இலங்கையை உற்று நோக்குபவர்கள் அத்தனை பேருக்கும் சேனல் 4 காணொளி அத்துபடி.இப்படிப்பட்ட நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிகழ்த்திய கலந்துரையாடலில் கலவரம் என செய்திகள் வருகிறது.அடிபட்டிருக்கும் நிலையில் சமாதானத்தை நாம் விரும்பினாலும் ஆணவத்தின் உச்சியில் நிற்கும் அதிகார கும்பல் அதனைப்பற்றியெல்லாம் சிந்திக்கிற மாதிரி தெரியவில்லை.
அமெரிக்காகாரன் திரிகோணமலைக்கு வந்தால் பிரச்சினையென்று நினைத்த காலங்கள் போய் இப்பொழுது அமெரிக்காகாரன் பிரிட்டன் மூலமாக தலையீடு செய்தால்தான் தீர்வுக்கு வழி பிறக்கும்.(Briton got a moral responsibility to interfere its uncompleted job of 1948) இந்தியா,ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் பிரச்சினைகளை இன்னும் நீட்டிக்கவே உதவுவார்கள்.
சிந்திக்க தூண்டும் பதிவு. வீண் வீராப்பை விட பாதிக்கப்பட்ட்வர்களின் நலனே முக்கியம்.
எனவே ஒன்று தமிழக,புலம்பெயர் பிரதிநிதிகளின் கூட்டாக இந்தியாவின் தலையீடு
இரண்டாவது பிரிட்டனின் மூலமாக அமெரிக்காவின் தலையீடு என்ற இரண்டில் எதனை தேர்ந்தெடுப்பது என்பதே தமிழர்கள் தற்போது சிந்திக்க வேண்டியவை.
நேரம் கிட்டினால் அப்புறமா ஏனைய பின்னூட்டங்கள் பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்.
Its very super and deep analysis I ever read
சிங்களமும் இப்போது தமிழர் புனர்வாழ்வு என உலக நாடுகளிடம் பெருமளவு பணத்தினை வாங்கி விழுங்கி வருகிறது .....
நண்பா அண்மைக்காலமாக இந்நிகழ்வுகள் மனதையும் எழுத்தையும் உணர்வு பெறச்செய்யுது. பயமா இருக்கு எங்கே எனது கையும் உணர்வு பெற்றுவிடுமோ எண்டு..
நிரந்தர தீர்வுக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கும் சிறந்த வழியை கூறியிருக்கிறீர்கள். ஆனால் நம்மில் சிலரே இதற்கு முட்டுக்கட்டடையாக இருப்பர். குறைந்த எண்ணிக்கையில் உள்ள அவர்களை திருத்துவதுதான் இன்றுள்ள முக்கிய பணி!
நிரந்தர தீர்வுக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கும் சிறந்த வழியை கூறியிருக்கிறீர்கள். ஆனால் நம்மில் சிலரே இதற்கு முட்டுக்கட்டடையாக இருப்பர். குறைந்த எண்ணிக்கையில் உள்ள அவர்களை திருத்துவதுதான் இன்றுள்ள முக்கிய பணி!
போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதும் இனிவரும் ஆட்சியாளர்கள் மமதையைக் குறைக்கும் அல்லவா? இவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் தமிழர்களுக்கு இதே அநீதி இனியும் இழைக்கப்படலாம் அல்லவா? தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது சரியே. அதே நேரத்தில் தண்டனையும் அவசியமே. பொர் பற்றிய சிந்தனை மறைய வேண்டியது இருதரப்பின் மனதில் இருந்தும் தானே?
கேள்விகள் நியாயமானவையே!சர்வதேசத்தின் முன் நிறுத்துவதால் என்ன பயன்,பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவுதல் தலையாய கடமை என்பது உங்கள் வாதம்!ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்!சர்வதேசம் உதாரணமாக,ஐ.நா செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில்,அவரே நியமித்த நிபுணர்கள் குழு போர்க் குற்றம் குறித்தான பதிவுகளை மட்டுமல்லாது,ஐ.நா வின் கையாலாகாத் தனத்தையும் அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து ஆய்ந்திருக்கிறது.கூடவே,இன மோதலுக்கான காரணத்தையும் சுட்டியிருக்கிறது.பிரச்சினைக்கான தீர்வையும் கூடவே பரிந்துரைக்கிறது.அதிலிருந்து இது.அதாவது,குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதன் மூலம்,தவறுகளை திருத்த முடியும் என்று குழு கருதுகிறது.அதாவது,சாதாரணமாக நீதி நடை முறையில் திருடனுக்கு சிறை அல்லது தண்டம் வழங்குவதன் மூலம் திருத்துவது போல்!இலங்கையைப் பொறுத்த வரை,நீதியாவது,தண்டனையாவது என்று நீங்கள் வாதிடலாம்!அதற்காகவே சர்வதேச விசாரணை என்ற நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது!அதிலும்,இவ்வாறான ஒன்று பரிந்துரைக்கப்படின்,சர்வதேசத்தின்,அதாவது ஐ.நா வின் மேற்பார்வையின் கீழ் ஈழத் தமிழருக்கான நீதி அல்லது சுதந்திரம் உறுதி செய்யப்படும்!அப்போது,சர்வதேசம் நீங்கள் கேட்ட அத்தனைக்கும் உதவும்!அதற்காக,புலம்பெயர்ந்து வாழ்வோர் உதவக் கூடாது என்றில்லை!என்ன,நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியும்!(இங்கே புல் தான் பாதிக்கப்பட்ட தமிழர்களாக குறிப்பிடப்படுகின்றனர்)நான் சொல்ல வருவது,இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,அவமானப்பட வைப்பதன் மூலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதன் மூலமும் ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியும்.பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் நேரடியாக செல்வது உறுதி செய்யப்படும்!மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips [Reply To This Comment]
நிரூபன், நீங்கள் வாழ்வது உலகில் மிகவும் கேவலமான ஒரு அரசாங்கத்தின் கீழாகும்! அங்கு நடைபெறும் ஆட்சி - சர்வதேசத்துடன் ஒப்பிடும் போது 300 வருஷங்கள் பின்னிற்கிறது!
இங்கெல்லாம் மக்களுக்குத்தான் முதலிடம்! மனிதனுக்குத்தான் முதலிடம்! மனிதாபிமானத்துக்குத்தான் முதலிடம்!
ஒரு முறை இந்த அரசாங்கத்தின் நிழலில் வாழ்ந்தால், இலங்கை அரசு மீது காறி உமிழ்வீர்கள்/! ஒப்பிட்டுப் பார்க்கும் போது, எவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்கிறார்கள் என்று புரியும்!
போர்குற்ற செய்தவர்கள் கட்டாயமாக தண்டிக்கபடவேண்டும் அதற்காக என் தாய் நாட்டை கேவலமாக கதைக்க தங்களுக்கு உரிமையில்ல வெளிநாட்டில் சொகுசாக வாழும் நீங்கள் எங்கே கல்வி கற்றீர்கள் ,உலகில் எந்த நாடாவது பாளர் பள்ளி முதல் பல்ல்களைகலகம் வரை இலவசமாக அரச செலவில் மேற்கொள்ள வலி ஏற்படுத்தியுள்ளத??
நீங்களே இங்கே இலவசமாக படித்துவிட்டு உங்கள் உறவினரின் புண்ணியத்தால் வெளிநாட்டில் குப்பைகொட்டி கொண்டு எங்கள் நாட்டை கேவலமாக பேச வேண்டாம்
பள்ளிகளை உடைத்துவிட்டு இங்கேதான் தங்கள் கடவுள் பிறந்தார் எனக்கூறும் நாட்டைவிட இலங்கை 100 % நல்லதுதான் சகோ
இன்னும் ஏராளம் இருக்கின்றது சொல்வதற்கு நேரம் போதவில்லை
///பள்ளிகளை உடைத்துவிட்டு இங்கேதான் தங்கள் கடவுள் பிறந்தார் எனக்கூறும் நாட்டைவிட இலங்கை 100 % நல்லதுதான் சகோ///வெளிநாட்டில் "சொகுசாக" வாழும் நீங்கள் எங்கே கல்வி கற்றீர்கள் ,உலகில் எந்த நாடாவது பாளர் பள்ளி முதல் பல்ல்களைகலகம் வரை இலவசமாக அரச செலவில் மேற்கொள்ள வலி ஏற்படுத்தியுள்ளத??////இந்தக் கருத்தை தெரிவிப்பவரை வேறு ஓர் இடத்தில்(இணையத்தில்)சந்தித்திருக்கிறேன்!"சிட்டிசன்" ஆக மறைவதன் பொருள் என்ன?பாவம்!!!!!!கிணற்றுத் தவளை!
*பல ஆயிரம் மக்களின் கொலைக்கு காரணமான ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, அவருக்குத் தண்டனையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், இறந்து போன எங்கள் உறவுகளின் உயிர்கள் திரும்பி வந்து விடுமா?//////
இப்படியா சின்னப் பிள்ளைத்தனமாக கெள்வி கேட்பீர்கள்! அப்படியானால் தவறு செய்தவனுக்கு தண்டனையே இல்லையா?
தவறு செய்த ஒருவனுக்கு தண்டனை எதற்காக கொடுக்கப் படுகிறது என்றால், அவன் மேலும் மேலும் அத்தவறை செய்யாது இருப்பதற்கும், அவனைப் பார்த்து ஏனையவர்கள் தப்பு செய்யாமல் இருப்பதற்கும் ஆகும்/
செத்தவர்கள் எழுந்து வரமாட்டார்கள்தான்! அதுக்காகா தண்டிச்சு என்ன பயன் என்று கேள்வி கேட்ட உங்களுக்கு எனது பலத்த கண்டனங்கள்!
நிரூ, தமிழர்களும் இந்த நாட்டின் மக்களே, அவர்களும் சமமாக நடத்தப் படவேண்டும் என்ற தூய எண்ணமுள்ள ஒரு சிங்களத்தலைவர் ஒருவரது பெயர்சொல்லுங்கள் பார்க்கலாம்!
ரணில் கூட நம்பகத் தன்மை அற்றவர்! மஹிந்த தடியெடுத்து செய்வதை, ரணில் தடவி தடவி செய்வார்! அவ்வளவுதான்/
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... ரணில் கூட நம்பகத் தன்மை அற்றவர்! மஹிந்த தடியெடுத்து செய்வதை, ரணில் தடவி தடவி செய்வார்! அவ்வளவுதான்////ரணில் அமெரிக்க பாணியில் அரசியல் செய்பவர்,செய்தவர்!
இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாத ஒரு நல்ல தலைவன் இலங்கையை ஆண்டால் மட்டுமே, எல்லோருக்கும் விடிவு கிடைக்கும் !
இலங்கையில் உள்ள முதலாவது பிழையே கல்வித்திட்டம்!
இலங்கையில் கல்வியறிவு உச்சத்தில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், கற்பிக்கப்படும் விடயங்கள் படு மோசமானவை! குறிப்பாக வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்தும் மிகவும் மோசமான கருத்துக்களையே கற்பிக்கின்றன!
அவற்றை முதலில் மாற்ற வேண்டும்/
வணக்கம் யோகா ஐயா!
உண்மையில் ரணில் அமெரிக்க சார்பு ஆள்தான்! ஆனால் இப்போது இலங்கையில் அமெரிக்க சார்பு கொள்கைதான் தேவைப்படுகிறது!
புலிகளை ஒடுக்க, ரணில் அமெரிக்காவை சார்ந்து செயல்பட்டார்! அதே போல மஹிந்த கொம்பனியை ஒடுக்க இப்போது அமெரிக்க சார்பு கொள்கைகளே எமக்குத் தேவைப் படுகின்றன!
நாம் வாழும் பிரெஞ்சு தேசமும், மஹிந்தவை தண்டிக்கவேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது!
அது நடக்கும்!
*இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் தமிழ் மக்களிற்கான தீர்வெனப்படுவது ஏமாற்றிப் பிழைக்கும் வித்தையாகத் தானே பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமிருக்கிறது, ஆகவே இப்போது ஆட்சியிலுள்ளவர் போய், புதிதாக அடுத்த நபர் வந்தாலும் இதே நிலமை தானே எமக்கு ஏற்படும்?:///
அதைத்தான் நாமும் சொல்கிறோம்! ஒட்டுமொத்தத்தில், தமிழர்கள் மீது , எந்த சிங்களத் தலைவருக்கும் அக்கறை இல்லை!
நியாயமான ஆதங்கம் பாஸ் ..ஆனால் எனக்கு சில முரண்பாடுகளும் உள்ளது...
///*பல ஆயிரம் மக்களின் கொலைக்கு காரணமான ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, அவருக்குத் தண்டனையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், இறந்து போன எங்கள் உறவுகளின் உயிர்கள் திரும்பி வந்து விடுமா?//// அப்புறம் எதுக்கு பாஸ் ஒரு நாட்டில் நீதிமன்றங்கள்...
இன்று தண்டனை வாங்கி கொடுத்தால் தான் இனி அடுத்து வரும் ஆட்சியாலர்களும் தமிழர்கள் மீது தம் இன வாதத்தை காக்க முன் ஜோசிப்பார்கள்... தற்சமயம் மேற்குலகில் மாட்டுப்பட்டுவிட்டார்கள்.. இனி அவ்வளவு சுலபமாக தப்பிக்க வழியில்லை ...
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது என்பது எமது கடமை.. ஆனால் உதவிகளை தனி நபராக செய்யவேண்டிய நிலையில் தான் நாம் இருக்கோம்..இது ஆணை பசிக்கு அறுகம்புல் போன்றது...
அது மட்டுமல்ல அப்படி தனி நபராக செய்யும் உதவிகள் எம்மாத்திரம் ...புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அப்படி செல்வந்தர்களாகவா இருக்கார்கள்...வறுமை கடன் என்று ஆயிரம் கனவுகளோடு நாட்டை விட்டு வெளியேறியவனுக்கு தன் குடும்பம் தன்னை சுற்றியுள்ள உறவுகள் என்று அவர்களையே கவனிக்க /உதவ சரியாக இருக்கும்..இவை அனைத்தையும் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி நபர் உதவி என்பது அத்தனை புலம்பெயர் உறவுகளாலும் முடியாத ஒன்று தான்...
சிங்களத்தின் தடை என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்று நிலைமை வேறாக இருக்கும்...
தாயகம் எனும் இலட்சியத்திற்காக உயிர் துறந்த பலரது கனவுகளில் முதன்மை பெற்றிருந்த விடுதலைக் கனவினைத் தவிர்த்துப் பார்க்கையில்; தமது வருங்காலச் சந்ததி நிறைவான கல்வியறிவினைப் பெற்று, வளமான வாழ்வினை வாழ வேண்டும் எனும் இலட்சிய நோக்கத்திற்காகத் தான் அவர்கள் இறந்தார்கள். // உண்மையான வரிகள் ...
இன்னொன்று, எவ்வளவு சீக்கிரம் தண்டனை வாங்கி கொடுக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் எம்மக்கள் மீதான அவர்களின் இரும்பு பிடி விடுபட வாய்ப்புள்ளது..
///Citizen said...
போர்குற்ற செய்தவர்கள் கட்டாயமாக தண்டிக்கபடவேண்டும் அதற்காக என் தாய் நாட்டை கேவலமாக கதைக்க தங்களுக்கு உரிமையில்ல வெளிநாட்டில் சொகுசாக வாழும் நீங்கள் எங்கே கல்வி கற்றீர்கள் ,உலகில் எந்த நாடாவது பாளர் பள்ளி முதல் பல்ல்களைகலகம் வரை இலவசமாக அரச செலவில் மேற்கொள்ள வலி ஏற்படுத்தியுள்ளத??/// அண்ணே இலவச கல்வி ஒன்னும் மகிந்தவின் வீட்டு சொத்தில் எமக்கு தரவில்லை எல்லாம் எமது வரிப்பணம்..
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இலவச கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தவருக்கு தான் நாம் எமது நன்றியை சொல்ல வேண்டும்...
உங்களுக்கு தெரியுமா யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யாழில் ஒரு கிலோ அரசியில் விலை நூற்று ஐம்பதை தாண்டி இருந்தது..
முப்பது ரூபா விற்ற அரிசி நூற்று ஐம்பது ரூபாவுக்கு வந்ததென்றால் எப்படி ...அவ்வளவுக்கு பணவீக்கமா ..இல்லை ,சிங்கள அரசு தமிழனின் பணத்தில் குண்டு வாங்கி தான் அதை தமிழனின் தலை மீது போட்டான் ..
ஈழத் தமிழ் உடன்பிறப்புகள் துன்பங்கள் அனுபவிப்பதை காணும்போதெல்லாம் கண்ணீரை மட்டுமே அளிக்க முடிகிறது .தமிழர்களின் துன்பங்களையும் துயரங்களையும் கட்சியை வளர்ப்பதற்காகவும் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் வளர்ப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்ளும் மானம் கெட்டவர்கள் பலர் வாழும் நாட்டில் இருந்துகொண்டு வேறென்ன செய்ய முடியும் .ஆனால் நேர்மையான உணர்ச்சியுடன் சிந்தப்படும் கண்ணீர் வீண் போனதாக சரித்திரம் இல்லை ......உங்கள் வாழ்வில் விரைவில் ஒளி பிறக்கும் .
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு அரசாங்கத்துக்கு சில கடமைகள் இருக்கின்றன! அதையெல்லாம் செய்யத் தெரியாமல், புலம்பெயர்தமிழர்கள் வந்துதான், புடுங்க வேணும் என்று சொல்வது என்ன நியாயம்?//
மச்சி, இக் கட்டுரையினூடாக நான் ஒரே நாட்டின் கீழ் வாழ வேண்டும் என்றோ/
அரசாங்கம் புடுங்க வேண்டும் என்றோ கூறவில்லை, நான் கேட்பது;
எங்களின் வருங்காலச் சந்ததியினை முன்னேற்றி,
அவர்களை அபிவிருத்தியிலும், கல்வியறிவிலும் மேம்பட வைத்து
கல்வியில் நாம் புரட்சி செய்து எமக்கான வழியினை நாமே அமைத்துக் கொள்ளலாம் அல்லவா. தமிழர்களுக்கு குண்டியில் ஒட்டிய மண்ணினைக் கூடக் கொடுக்க மனமில்லாத ஆட்சியாளர்களை நான் இங்கே முன் நிறுத்தவில்லை.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு அரசாங்கத்துக்கு சில கடமைகள் இருக்கின்றன! அதையெல்லாம் செய்யத் தெரியாமல், புலம்பெயர்தமிழர்கள் வந்துதான், புடுங்க வேணும் என்று சொல்வது என்ன நியாயம்?//
புலம் பெயர்ந்த தமிழர்கள் மக்களை முன்னேற்றுவதற்கு/ இலங்கையின் தற்போதைய நிலமைகளை வெளிநாடுகளிற்கு எடுத்துச் சொல்லி இலங்கையினுள் மூன்றாம் தரப்பினைக் கொண்டு வருவதற்கேற்ற வழியினை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை, அதனைத் தான் இப் பதிவினூடாகவும் சொல்லுகிறேன்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு அரசாங்கத்துக்கு சில கடமைகள் இருக்கின்றன! அதையெல்லாம் செய்யத் தெரியாமல், புலம்பெயர்தமிழர்கள் வந்துதான், புடுங்க வேணும் என்று சொல்வது என்ன நியாயம்?//
புலம் பெயர்ந்த தமிழர்கள் மக்களை முன்னேற்றுவதற்கு/ இலங்கையின் தற்போதைய நிலமைகளை வெளிநாடுகளிற்கு எடுத்துச் சொல்லி இலங்கையினுள் மூன்றாம் தரப்பினைக் கொண்டு வருவதற்கேற்ற வழியினை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை, அதனைத் தான் இப் பதிவினூடாகவும் சொல்லுகிறேன்.
@இக்பால் செல்வன்
நியாயமான கோபங்கள் தெளிக்கின்றன சகோ. அதே நானும் கேட்கிறேன் ஈழத்தில் உயிர்ப் பிணங்களாக மீந்து போன உள்ளங்களுக்கு உலகத்தில் இருந்து என்ன உதவிகள் வந்தன .. உறவுகளே கைவிட்டால் எதிரியின் செயலைக் கேட்கவா வேண்டும் ???
பதில்கள் சொல்வாரில்லை !!!//
இதனைத் தான் நானும் இங்கே முன் வைக்கிறேன். நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
சண்டை நடந்த போது , எல்லா நாடுகளுக்கும் ஓடிப்போய், கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி, ஆயுதம் வேண்டிய ..........களுக்கு, அதே நாடுகளிடம் உதவிபெற்று, மக்களுக்கு உதவ முடியாதா?
வன்னிமக்களையும் தனது சொந்த மக்களாக , அந்த .......கள் கருதியிருந்தால். இந்த இரண்டு வருடங்களில் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கலாமே?//
வன்னி மக்களைத் தமது மக்களாகவோ அல்லது ஏன் தமிழ் மக்களைத் தன் குஞ்சுகளாகவோ நினைக்கத் தாய்க் கோழியாக இப்போது கூரையில் உள்ள கழுத்து வெட்டிச் சிகப்புச் சேவலுக்கு விருப்பமில்லை.
அதனால் தான் நான் பதிவில் கேட்பது,
போர்க் குற்ற வழக்கில் தள்ளும் நோக்குடன் இலங்கைக்கு வந்து பல கோடி ரூபாக்களைச் செலவு செய்து, பல இன்னல்களைப் பட்டு வீடியோக்களை இராணுவத்திடமிருந்து வாங்கிச் சென்ற
உலக நாட்டு மக்களால்,
ஏன் எமது மக்களின் இன்றைய வாழ்வாதார நிலையினையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியாது?
இதனையும் செய்திருந்தால்
உலகில் உள்ள ஏதாவது ஒரு தொலைக் காட்சியில்
சிறையில் உள்ளோர் தொடர்பான கருத்துக்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றிய கருத்துக்கள் காண்பிக்கப்படுமல்லவா.
இதனைப் பார்த்ததும்
மூன்றாம் தரப்பு ஒன்று சிவப்பு கழுத்துச் சேவலுக்கு எச்சரிக்கை விட்டு,
மக்களுக்கு உதவி செய்வதற்காக இலங்கையினுள் காலடி எடுத்து வைக்குமல்லவா.
இவ் இடத்தில் நீங்கள் கேட்கலாம்.
இலங்கை அரசானது தொண்டு நிறுவனங்களை நாட்டினுள் அனுமதிக்காது, எப்படி இது சாத்தியமாகும் என்று?
தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத பட்சத்தில்,
தமிழர்களின் சுய நிர்ணய அடிப்படையில் தமிழர்கள் தமிழர்கள் இனங்காணப்பட்டு(தமிழர் தாயக கோட்பாட்டின் அடிப்படையில்) அவர்களுக்கு மூன்றாம் தரப்பின் மூலம் உதவிகள் கிட்டுமல்லவா.
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன்.
//அவர்களும் மனிதர்களில்லையா. பணம் கொடுத்தாலோ அல்லது பொருளாக அனுப்பினாலோ அரசாங்கம் அபகரித்து விடும், தடுத்து வைத்து விடும் என்று கூறும் நீங்கள், ஏன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உங்களின் உதவிக் கரங்களை நீட்டக் கூடாது.
ஈழம் என்ன குடிபானம் அருந்தி மகிழும் போது தொட்டு நக்கும் ஊறுகாயா? ஈழம் பற்றிய அனுதாபங்களை உருவாக்கும் செய்திகள் வரும் வேளையில் வெறி கொண்டெழுந்து உணர்வுகளைக் கொட்டவும், பின்னர் அவ் உணர்வுகள் எல்லாம் திக்குத் திசை தெரியாது ஓடி மறைந்து விடவும், ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா?//
இதுதான் என் கேள்வியும்.
@கவி அழகன்
உடனடி நிவாரணம் கட்டமைப்புகளை வலுப்படுத்தல் விழிப்புணர்வு இந்த மூன்று விடயங்களும் சரி சமமாக நடந்தால் தான் தமிழ் மக்களின் வேதனை அடங்கும்
காய்ச்சலுக்கு மருந்து கொடுக்காமல் ஆசுப்பத்திரி கட்டுற வேலைதான் இப்ப முமரமா நடக்குது//
சபாஷ், சரியாகச் சொன்னீர்கள் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உங்களில் யாராவது ஒரு பத்து நாளைக்கு மேற்கு நாடொன்றுக்கு வந்தால், அதன் பின்னர் சொல்வீர்கள் - ச்சே எவ்வளவு கேவலமான ஒரு அரசின் கீழே இவ்வளவு காலமும் வாழ்ந்து விட்டோம் என்று!//
மேற்கு நாட்டிற்கு வருவதற்கு நீயா மச்சி விசா கொடுக்கப் போறாய்?
ஹி...ஹி...
சின்னப் புள்ள மாதிரி கதைக்கிறாய்.
@A.R.ராஜகோபாலன்
அன்பு சகோ
பல நியாயமான கேள்விகளை உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எழுப்பி இருக்கீங்க//
நன்றி சகோ.
@ராஜ நடராஜன்
சகோ!நிருபன்!உங்களையும்,இக்பால் செல்வனையும் எனது பதிவுகளின் பின்னூட்டப்பக்கங்களில் எதிர்பார்த்தேன்.அதனை இக்பால் செல்வன் பின்னூட்டங்கள் மூலமாக சொன்னதிலிருந்து பதிவின் சாரம் என்னவென்பதை உள் வாங்கியிருப்பார் என நம்புகிறேன்.//
உங்கள் பதிவுகள் சிலவற்றிகுப் பின்னூட்டமிட முடியாத நிலமை, காரணம் என் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வண்ணம் பெரிசினைப் பற்றி நீங்கள் எழுதும் கட்டுரைக்கு என்னால் கருத்துரை வழங்க முடியவில்லை அண்ணாச்சி,
சுதந்திரமான ஊடக கொள்கை எமது நாட்டில் இருந்தால் நான் கண்டிப்பாக எனது கருத்துக்களை முன் வைப்பேன்,
ஆனால் பெரிசு பற்றி நீங்கள் சமீபத்தில் எழுதிய விடயத்திற்கு கருத்துரை வழங்கப் பயம் என்பதை விட,
என் பெற்றோர், சகோதரிகள், சகோதரன் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆதலால் தான் வர முடியவில்லை. மன்னிக்கவும்.
@ரியாஸ் அஹமது
சிந்திக்க வைத்த பதிவு,//
நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூ, காலிவீதியில் , கோல் ஃபேஸ் கடற்கரையில் இருந்து, ரத்மலானை வரை , நடு வீதியால் ட்ராம் போனால் எப்படி இருக்கும்?//
மச்சி, நீ சொல்வதெல்லாம் ஓக்கே,
இதே ஆசைகள் தான் முன்பு வித்தாகிப் போன பல வீர....உள்ளத்திலும் இருந்தது.
அப்படி ஒரு நாள் வராதா என்று தான் இங்கே வாழும் பலரும் ஏங்குகிறார்கள்.
@ராஜ நடராஜன்
பொருளாதாரப் பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்ககூடியது என்றும் அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டுமென்றும்,ராணுவ அனுமதி வாங்கித்தர தான் தயார் என்றும் இலங்கை அரசின் ஊதுகுழலாக குமரன் பத்மநாதன் கூறுகிறார்.
இந்திய அரசும் ஏனைய இலங்கை நட்பு நாடுகளும் உதவிகள் செய்கின்றன.ஆனால் இவைகள் எந்த விதத்தில் செலவு செய்யப்படுகின்றன என்பதற்கெல்லாம் மேற்பார்வை ஒன்றும் கிடையாது.
எனவே பொருளாதார உதவிகள் ஒரு பிரிவினருக்கு மட்டும் போய்ச் சேருகின்றது அல்லது ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்டையப் போடுகிறார்கள் என்று அர்த்தம்.
புலம் பெயர் தமிழர்களின் மீது விரோத மனப்பான்மை கொண்டும் செயல்படுவது,அதே சமயத்தில் அவர்களின் உதவியும் தேவையென்ற கொள்கை யாருடைய குற்றம்?//
அண்ணாச்சி, என்னுடைய பதிவில் குமரன் பத்மநாதன் பற்றியோ, இல்லை மேற்படி கருத்துக்களையோ கூறியிருக்கிறேனா?
ப்ளீஸ் என் பதிவில் நான் என்ன கூற வருகிறேன் என்பதனைப் புரிந்து கொள்ளு உங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியுமா?
புலம் பெயர்ந்த மக்களின் உதவிகள் நேரடியாக மக்களிடம் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று தான் நான் இப் பதிவில் கூறியுள்ளேன், இங்கே மூன்றாம் தரப்பு நபர்களிடம் கைமாறப் பட்டு மக்களிடம் கிடைக்க வேண்டும் என்று நான் எதுவும் கூறவில்லை.
@சி.பி.செந்தில்குமார்
சீரியஸ் போஸ்ட்//
நன்றி சகோ.
//யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்தமிழர்கள்தான் உதவ வேண்டும் என்றால், இலங்கையில் அரசாங்கம் என்ற ஒன்று என்ன மசிருக்கு இருக்கு? //
இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசினால் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதனால்தானே புலம் பெயர் தமிழர்களும் நாமும் இலங்கை அரசுக்கு எதிராக போராடுகின்றோம். தமிழர்களுக்கு உதவாத அரசு என்பது உங்களுக்குத் தெரியும்.
இலங்கை அரசு தமிழர்களுக்கு உதவவில்லை... புலம் பெயர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழர்கள் உதவி செய்யத்தானே வேண்டும்.
தமிழீழத்துக்காக போராடுங்கள் என்று உசுப்பேற்றுவதைவிட அவர்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
@ராஜ நடராஜன்
,ஆனால் நிறுவனமாக உதவினால் மட்டுமே ராணுவ அனுமதி தேவையென்றார்.மொத்த மக்களின் அடிப்படை வசதிகளை NGO போன்ற நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும்.வெளி உதவியும் தேவை,ஆனால் எனது அனுமதியும்,அடக்கியாளும் தன்மையும் மாற்ற இயலாது என்கிற நிலையில் என்ன செய்ய இயலும்?
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பார்கள்.வெளிப்படைத்தன்மை,நம்பிக்கையிருந்தால் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல,தமிழக மக்கள் கூட உதவ தயாராக இருப்பார்கள்.உதவிகள் போய்ச் சேருகிறதென்பதற்கு உத்தரவாதமென்ன?//
அண்ணாச்சி, இன்றைய தொழில் நுட்ப விருத்தி காரணமாக ஊருக்கு ஒவ்வோர் அமைப்புக்கள் இருப்பதை நீங்கள் அறியவில்லையா?
ஒவ்வோர் ஊருக்கும் இப்போதெல்லாம் பேஸ் புக்கில் கூட அமைப்புக்கள் வந்து விட்டன, ஊருக்கு ஒன்று என இருக்கும் சன சமூக நிலையங்கள்(Library) மூலமாக வெளி நாட்டில் இருந்து சிறிது சிறிதாகப் பணம் அனுப்பி உதவி செய்யலாமே?
அரசாங்கம் ஊடாக அனுப்பினால் தானே ஆட்டையைப் போடும்,
வெளி நாட்டு வாழ் தமிழர்கள் பலர் விடுமுறையில் வந்து நிற்கும் போது பொது நோக்கத்தோடு தமிழ் மக்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால்
வெளி நாட்டில் உள்ளோர்,
இலங்கையில் விடு முறையினைக் கழிப்பதற்காக வந்துளோரிடம்/ நம்பிக்கையானவர்களிடம் பணப் பரிமாற்றங்களைச் செய்து உதவி செய்யலாமல்லவா.
யார் தடுக்கப் போகிறார்கள்?
@JOTHIG ஜோதிஜிசகோ, எங்களிடமும் பல விடயங்கள் பொதிந்துள்ளன,
ஆனால் எழுதினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலமை.
அத்தோடு ஓட்ட வடையிடமும் நிறைய விடயங்கள் பொதிந்துள்ளன. ஆனால் ஓட்ட வடையின் பெற்றோர், சகோதரர்கள் இலங்கையில் இருப்பதால் அவராலும் எதுவும் செய்ய முடியாத நிலமை,
பாராளுமன்றத்திற்கு முன்னுக்குப் போனாலே பத்து மாசம் உள்ளே தூக்கிப் போட்டு உதைக்கும் எம் நாட்டின் நிலமை அறிந்துமா இதனை எதிர்பார்க்கிறீங்க.
ஹி...ஹி..
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips [Reply To This Comment]
புலம்பெயர்தமிழர்கள், மற்றும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள், யுத்த வெறியுடன், பழிவாங்கும் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் இப்போது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்!
இன்னமும் புலம்பெயர்தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நிலைமைதான் இலங்கையில் இருக்கிறது! //
புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளை புரிந்திருக்கின்றோம். தாயகத்திலே கஸ்ரப்படுகின்ற தமிழர்களுக்கு பலர் உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர்.
இருந்தும் பலர் தமிழீழம் வேண்டும் தமிழீழம் வேண்டும் என்று மக்களுக்கு உணர்ச்சி வார்த்தைகளை சொல்லி.. சொல்லியே தமிழ் மக்களை அழித்து விட்டனர்.
உணர்ச்சி வார்த்தைகளை அள்ளி வீசியவர்கள் பலர் தமிழீழ போராட்டத்துக்கு என்ன செய்திருக்கின்றனர். உணர்ச்சி வார்த்தைகளைத் தவிர..
போராட்டம் போராட்டம் என்று மக்களை பலிக்கடாவாக்கியவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள்.
தமிழீம் மலர்ந்தால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்தான். தமிழனக்கு ஒரு நாடுகிடைத்து விட்டது சந்தோசமாக நிம்மதியாக வாழலாம் என்றுநிம்மதிப் பெருமுச்சு விடலாம்.
@ராஜ நடராஜன்
என் கூட சேர்ந்து வடை நாராயணன் நல்லா பேட்டிங்க செய்கிற மாதிரி இருக்குதே:)
தமிழ் மக்கள் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித் தருவதற்கும் அப்பாலும் சிந்திக்க வேண்டும்.அதே நேரத்தில் தண்டனை வாங்கித் தருவதே அடுத்த கட்டத்திற்கும் வழி வகுக்கும்.
இலங்கையை உற்று நோக்குபவர்கள் அத்தனை பேருக்கும் சேனல் 4 காணொளி அத்துபடி.இப்படிப்பட்ட நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிகழ்த்திய கலந்துரையாடலில் கலவரம் என செய்திகள் வருகிறது.அடிபட்டிருக்கும் நிலையில் சமாதானத்தை நாம் விரும்பினாலும் ஆணவத்தின் உச்சியில் நிற்கும் அதிகார கும்பல் அதனைப்பற்றியெல்லாம் சிந்திக்கிற மாதிரி தெரியவில்லை.//
அண்ணாச்சி, என் பதிவிலும் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ள விடயம்.
தண்டனை கொடுப்பது தவறில்லை, அதனை நான் எதிர்க்கவும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வழி என்ன?
இரண்டாவது தண்டனை வழங்கிக் கொடுத்தால் மாத்திரம் போதுமா?
போரினால் பாதிக்கப்பட்ட, உடல் உறுப்புக்களை இழந்த மக்களுக்கு நீங்கள் வழங்கப் போகும் பரிசு என்ன?
அவர்களுக்கும் வாழ்க்கை இல்லையா? ஆசா பாசங்கள் இல்லையா? இடுப்பிற்கு கீழ் இயங்காத உறவுகள் எத்தனை இருக்கிறார்கள் என்று தெரியுமா?
புலிகள் காலத்தில் கட்டிக் காக்கப்பட்ட செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச் சோலை(அநாதை இல்லங்கள்/ சிறுவர் காப்பகங்களில்) இருந்து உயிரிழந்தோர் தவிர்ந்த, எஞ்சி குழந்தைகள் தற்போது வவுனியா, மன்னாரில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ளார்கள்- அவர்களுக்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன?
கிளிநொச்சியில் புதிதாக ஒரு குருகுலம் சிறுவர் இல்லம் கட்டுகிறார்கள். அங்கே உள்ள அநாதரவான உள்ளங்களுக்கு நாம் கொடுக்கப் போகும் பரிசு என்ன?
சிகப்பு கழுத்துச் சேவலைத் தண்டித்த இரத்தமா?
ஏன் இன்று வரை போர்க் குற்றம், போர் குற்ற வழக்கு வேண்டும் என நிமிடத்திற்கு நிமிடம் கூக்குரல் போடும் புலம் பெயர்ந்த உறவுகளில் எத்தனை பேர்?
கண் இல்லாத, கால் இல்லாத, உடல் உறுப்புக்கள் யுத்தத்தால் இழந்த எம் பெண்களினைத் திருமணம் செய்து கொள்ள உடன்படுவார்கள்?
உள்ளூரில் உதவி செய்ய இலங்கை அரசாங்கம் விடாது என்று அறிக்கை விட்டுப் போர்க் குற்ற வழக்கிற்குப் பணம் சேகரிக்கும் இணையத்தளங்கள், நிறுவனங்களைச் சேர்ந்த வெளி நாட்டு வாழ் அன்பர்களிடம் விசா இருக்கிறது தானே,
இலங்கையில் உள்ள போரால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அவர்கள் ஏன் நல் வாழ்க்கை கொடுக்க முடியாது?
வெளி நாட்டில் இருந்து ஓடி வருவோர் எல்லாம் தமக்கு ஹன்சிகா, அசின் மாதிரி இல்லா விட்டாலும் ஊனமில்லாத, கை கால்கள் இல்லாத அழகிய பெண் தேவை என்று எங்களின் சகோதரிகளை மணம் முடிக்க,
தாயகம் எனும் இலட்சியத்திற்காகப் போராடி உடல் உறுப்புக்களை இழந்தோரும்,
இடம் பெயர்ந்திருத போது இறுதி யுத்தத்தில் உடல் அவையங்களை இழந்தோரும் உள்ளூரில் வாழ வேண்டும்?
அப்படித் தானே?
ஆக, போர்க் குற்ற வழக்குச் செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விட்டால், போதும்,
போரால் பாதிக்கபட்ட மக்களைப் பற்றிக் கருத்துச் சொல்ல எவராலும் முடியாது, அப்படித் தானே?
@சிநேகிதன் அக்பர்
சிந்திக்க தூண்டும் பதிவு. வீண் வீராப்பை விட பாதிக்கப்பட்ட்வர்களின் நலனே முக்கியம்.//
உங்களின் புரிதலுக்கு நன்றி சகோ,
@"என் ராஜபாட்டை"- ராஜா
Its very super and deep analysis I ever read//
நன்றி சகோ.
@sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
சிங்களமும் இப்போது தமிழர் புனர்வாழ்வு என உலக நாடுகளிடம் பெருமளவு பணத்தினை வாங்கி விழுங்கி வருகிறது ....//
பாஸ், அவர்கள் விழுங்குகிறார்கள் என்பதனை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள பலர் பாராமுகமாக இருக்கிறார்களே,
என்ன செய்யலாம்?
@Ashwin-WIN
நண்பா அண்மைக்காலமாக இந்நிகழ்வுகள் மனதையும் எழுத்தையும் உணர்வு பெறச்செய்யுது. பயமா இருக்கு எங்கே எனது கையும் உணர்வு பெற்றுவிடுமோ எண்டு..//
மாப்ளே,
நான் இங்கே உணர்வூட்டும் வகையில் எதுவும் எழுதலை..
விட்டால் பிரச்சாரம் வைக்கிறதா ஒரு பிலீமே ஓட்டிடுவீங்க போல
இருக்கே;-))
@சுவனப்பிரியன்
நிரந்தர தீர்வுக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கும் சிறந்த வழியை கூறியிருக்கிறீர்கள். ஆனால் நம்மில் சிலரே இதற்கு முட்டுக்கட்டடையாக இருப்பர். குறைந்த எண்ணிக்கையில் உள்ள அவர்களை திருத்துவதுதான் இன்றுள்ள முக்கிய பணி!//
நன்றி சகோ.
@செங்கோவி
போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதும் இனிவரும் ஆட்சியாளர்கள் மமதையைக் குறைக்கும் அல்லவா? இவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் தமிழர்களுக்கு இதே அநீதி இனியும் இழைக்கப்படலாம் அல்லவா? தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது சரியே. அதே நேரத்தில் தண்டனையும் அவசியமே. பொர் பற்றிய சிந்தனை மறைய வேண்டியது இருதரப்பின் மனதில் இருந்தும் தானே?//
சகோதரம், தண்டனை கொடுப்பது பற்றி எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை, அது தவறென்றும் நான் சொல்லவில்லை,
என்னுடைய கருத்துக்கள் என்னவென்றால்,
தண்டனை கொடுக்க வேண்டும் என்று எவ்வளவு வேகமாக மக்கள் செயற்படுகிறார்களோ,
அதேயளவு கரிசனையினை இடம் பெயர்ந்த யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதார- அபிவிருத்தி நடவடிக்கைகள் மீதும் காட்டலாமல்லவா.
வணக்கம் நிரூபனே பதிவை இப்போதுதான் படித்தேன் உங்கள் ஆதங்கம் புலப்படுவது சரி என்ன செய்யமுடியும் நடந்தது ஒரு அப்பழுக்கற்ற யுத்தமீறல் அதை யாரும் மறுக்க முடியாது !
உண்மையில் அதன் பின்பு செய்ய வேண்டிய விடயங்களை மக்கள் சலிப்பு அடைந்தும் சிலர் சுருட்டியதால் வந்த வேதனையாலும் ஒதுங்கியதும் சர்வதேச பொருளாதார நெருக்கடி (விலைவாசி ஏற்றம் ) இப்போது தனி நபர் கூட சமாளிக்க முடியாத நிலை என்ன செய்யமுடியும் புலம் பெயர் தேசத்தில் அகதியாக வாழ்ந்தாலும் தாயக உறவுகளுக்கு எங்களுக்கு கிடைக்காத சொளபாக்கியம் கிடைக்கவேண்டும் என்று ஆதங்கப் படும் உறவுகளால் !
முடிந்தால் வருகின்ரேன் இன்னும் சொல்ல முடியும் என் கவலைகளை கடமை அழைக்கிறது,
@Yoga.s.FR
அதற்காக,புலம்பெயர்ந்து வாழ்வோர் உதவக் கூடாது என்றில்லை!என்ன,நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியும்!(இங்கே புல் தான் பாதிக்கப்பட்ட தமிழர்களாக குறிப்பிடப்படுகின்றனர்)நான் சொல்ல வருவது,இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி,அவமானப்பட வைப்பதன் மூலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதன் மூலமும் ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியும்.பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் நேரடியாக செல்வது உறுதி செய்யப்படும்!மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!//
உங்களின் கருத்துக்களுக்கும், புரிதலுக்கும் சல்யூட் ஐயா,
போர்க் குற்றத் தண்டனை வழங்க எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியாத நிலையில் நாமெல்லாம் நேரடியாக மக்களிடம் உதவிகள் வழங்குவதற்கேற்ற வழி முறைகளைப் பின்பற்றுவதில் தவறேதுமில்லைத் தானே ஐயா.
மச்சி, மஹிந்தவுக்கு தண்டனை கொடுப்பது வேறு! பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவது வேறு! இரண்டையும் ஏன் ஒன்றோடு ஒன்று சேர்க்கிறாய்?
இப்போது அந்தக் காணொளியைத் தொடர்ந்து, மஹிந்தவைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது!
இந்தச் சந்தர்ப்பத்தில், ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று, புலம்பெயர் தமிழர்களை குற்றம் சுமத்துவது, மஹிந்தவுக்கு சார்பான ஒரு கூற்றாக கருதப்பட வாய்ப்புக்கள் இருக்குமல்லவா?
மேலும், புலம்பெயர்தமிழர்களை, ஈழத்தில் உள்ள தமிழர்கள் குறைசொல்லிக்கொண்டு இருப்பது, சிங்கள மக்களும் புலம்பெயர் தமிழர்களைக் குறைசொல்ல வழிகோலும் அல்லவா?
ஈழத்தில் அமைதியாக வாழ நினைக்கும் தமிழர்களை, புலம்பெயர்தமிழர்கள்தான், அதை இதைச் சொல்லி குழப்பி வருகின்றனர் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரம் உண்மையென்றாகிவிட வழிசமைத்தது போலாகிவிடாதா?
நடந்த கொடுமைகளை பட்டியல் போட்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் அகல வேண்டும் சகோ...
பொஸ்.....!
எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பல குள்ளநரிகள் வயிற்றுப்பிழைப்புக்காக எங்களுடைய இனத்தையே விற்றுவிடும்.
அழிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தையும், கல்வியையும் முன்னோக்கி நகர்த்துவதே எம்முடைய சமூகத்தை தலைநிமிர வைக்க இருக்கின்ற ஒரே வழி.
(முடியுமானால், குழந்தைகள் தொங்கவிடப்பட்டுள்ள படங்களை அகற்றிவிடுங்கள். பார்க்க முடியவில்லை. )
முக்கியமான கேள்விகள் நிரூபன்.ஆனால் தண்டனை வாங்கிக் கொடுத்தல் என்பது சமூக நோக்கில் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதாலும் ,இனியும் தொடர்ந்தது மனிதத் தன்மையற்று நடந்து கொண்டால்சர்வதேச அரங்கில் அசிங்கப்படுவோம் என்ற உணர்வை தோற்றுவிக்கும் என்பதாலும்தான்.
தலைப்பு பார்த்தவுடன் படிக்க தோன்றியது உண்மையிலேயே யோசிக்க வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளது
என்ன சொலவதென்று தெரியவில்லை. தண்டனை வாங்கிக் கொடுக்க நினைப்பது , எப்படி தொட்டு நக்கும் ஊறுகாய் ஆகும் ? நாங்கள் என்ன செய்ய முடியும் இங்கிருந்து ?
உண்மையான ஆதங்கம் நிரூபன் சார் .....
எங்கட நெட் வேர்கில் இருந்து உங்கட பக்கம் கொமன்ட் போட முடியாமல் இருக்கு. என்ட பிரண்டுக்கு ஈமெயில் அனுப்பி போடச் சொல்லுறன். உடன போடுவா என்டு நினைக்கிறேன்.
ஒரு அரை மணி நேரம் அவசரமாக மின்னஞ்சல் பார்க்க வந்த இடத்தில் இதைப் பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்.
எவ்வளவு சீக்கிரம் தண்டனை வாங்கி கொடுக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் எம்மக்கள் மீதான அவர்களின் இரும்பு பிடி விடுபட வாய்ப்புள்ளது.
எனக்கு தெரிஞ்ச குடும்பத்தில் இருந்து மட்டும் 50, 000 (ஐயாயிரம் இல்லை. அம்பதாயிரம்) யூரோ கடைசி இரண்டு வருட சண்டையில் போது கொடுக்கப்பட்டது. இப்படி நிறைய பேர் சண்டைக்கு காசு கொடுத்து போட்டு இருக்கின. இப்ப அந்த கடனை தீர்ப்பதில் தான் முழு சம்பளமும் போகுது. (ரிசீட் வேணும் என்டால் ஸ்கான் பண்ணி அனுப்புகிறேன்.)
உங்க இலங்கைக்கு வந்து சோக்காட்டுற ஆக்கள் யாரும் இயக்கத்திற்கு ஒரு சல்லி காசு கொடுத்த ஆக்கள் இல்லை. குடுத்த ஆக்கள் எல்லாம் சரியா கஷ்டபடுதுகள். அது தான். உண்மை.
நீங்கள் இரண்டு குழுவும் வித்தியாசமான ஆக்கள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அங்க சோக்காட்டுற வீணாப்போனதுகளால கடனாளியாகப் போன எங்களுக்கு ஏசுவது சரி இல்லை நிரூ. =(( வலிக்கிறது. பாவம் ஓரிடம் பழி ஓரிடம்.
எல்லாரும் ஒரு ஒரு யூரோ / டொலர் குடுத்தால் கொஞ்சம் உதவலாம் தான். ஆனால், அப்படி வார ஒரு டொலரையும் கடன் வட்டிக்கு கொடுக்கத்தான் பலர் நினைக்கிறார்கள். அதைப் பிழை என்டும் சொல்ல முடியாது.
அப்படி இருந்தும் சிலர் கொஞ்சம் கொஞ்சம் சனத்துக்கு கொடுக்கிறார்கள். அனானியாக கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் எல்லாரையும் ஏசேல என்டு சொன்னாலும், பல நேரங்களில் பதிவுகளைப் படிக்கும் போது எங்களை ஏசுவது போலத் தான் இருக்கிறது.
சனம் வந்திருக்கக் கூடாது, கடைசி வரை நின்டு செத்திருக்க வேண்டும் என்டு சொன்ன நாய்களின் குடும்பத்தில் ஒருவரும் ஒரு சதமும் இயக்கத்திற்கு கொடுத்திருக்க மாட்டினம். ஒருவரும் நாட்டிற்காக செத்தும் இருக்கமாட்டினம். அவை தான் வீணாக விழல் கதை கதைச்சு புலம்பெயர்ந்த ஆக்களுக்கும் உங்க இருக்கிற ஆக்களும் சில்லு முடியினம்.
காசு கொடுக்கிற சனத்தில் பல போராளி மாவீரர் குடும்பத்து ஆக்களும் இருக்கிறனம். உயிரையும் கொடுத்து காசையும் காட்டில் அடிச்சு (கடன் அட்டை) குடுத்து வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்படுபவர்களையும் எனக்குத் தெரியும். இரண்டு வேலை செய்தும் கடனடைக்க முடியாமல் இருக்கினம். அதுகள் பாவம்.
அதுகளை குறை சொல்லிக் கொண்டு இருப்பது நல்லா இல்லை. உண்மையில் அந்த சனம் உங்களை இஞ்ச இருந்து ஏசுவதும் இல்லை. அதுகளுக்கு ப்ளொக் படிக்க நேரமும் இல்லை. உங்களை சண்டைக்கு இழுப்பது சோக்கு காட்ட ஊருக்கு வருபவர்களின் ஆட்களே. உதவினதுகள் இரண்டு வேலையைச் செய்து போட்டு வந்து படுக்க நேரமில்லாமல் இருக்குதுகள்.
உண்மையில், இந்த நேரத்தில் நாங்களே எங்களுக்க அடிச்சுக் கொண்டிருக்கிறது நல்லாயில்லை. இப்படியே அடிச்சுக் கொண்டிருக்காமல், முதலில் ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
வன்னியில் நின்று கஷ்டப்பட்டவன் பெரிசா, நாட்டுக்காக காட்டில் காசு அடிச்சு குடுத்துப் போட்டு சண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டு பனியிலும் வெயிலிலும் கஷ்டப்படுகிறவன் பெரிசா என்ற பிரச்சினை வேண்டாம். ஒவ்வொருவரும் தனித்துவமான ஆட்கள். நான் பெரிது நீ பெரிது என்ற சண்டையில் கடையில் எதுவுமே கிடைக்கப் போவதில்லை.
மேலும், ஒரு சதமும் இன்று வரை கொடுக்காத வசதியாக இருக்கும் சிலரிடம் நாங்கள் பேசித்தான் பார்க்கிறோம். ஒரு சதமும் கொடுக்கிறார்கள் இல்லை. காசு கேட்கப் போகும் போது துப்பின ஆக்களும் இருக்கினம். இப்படி எல்லாம் அவமானப் பட்டுத் தான் உதவி கேட்க ஓடுப்படுகிறோம்.
ராஜபக்சவை அகற்றினால், யுனெஸ்கோ, அது இது என்று சிலர் வந்து உதவ முடியும். அவர்களுடன் வந்து உதவ இங்கே இருக்கும் இளைஞர்கள் ரெடியாகத் தான் இருக்கிறார்கள். யூ.என். காமடி பீஸ் என்டாலும் யுனெஸ்கோ, செஞ்சிலுவைச் சங்கம், யூ.என்.எச்.ஈ.ஆர் போன்றவற்றால் நிறைய உதவ முடியும். அவர்கள் நாட்டிற்குள் வர வேண்டும் என்றால் ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும். அப்பத் தான் ஓரளவு வளமான (அடிப்படை தேவைகள பூர்த்தி செய்யப்படும்) வாழ்க்கை மக்களுக்கு கிடக்கும். ரெகுலராக காசு கிடைக்க வழி சமைக்க முடியும்.
எங்களுடன் படிக்கும் பெண்ணின் சித்தப்பா ஒருவர் உங்க வந்த இடத்தில் பொலிஸ் அவரை அடிச்சு கொண்டு போட்டு அதிகம் குடிச்சதால செத்துப் போனார் என்று ரிப்போட் குடுத்திருக்கினம். அவர் உங்க இருக்கிற சனத்திற்கு உதவ என்டு தான் வந்தவர். இதில என்ன வேடிக்கை என்றால் இத்தனைக்கும் அந்த அங்கிள் குடிக்கிறேல. அதுக்குப் பிறகு இலங்கைக்குப் போய் உதவ யாருக்கு தைரியம் வரும்.
உயிர் பயம் எல்லாருக்கும் இருக்கு தானே. எதிரியின்ட கோட்டைக்குள் போய் வா என்டு சவால் விட யாரும் க.பு இல்லையே. அவர்கள் நெஞ்சுரம் எங்களுக்கு இருந்தால் நாங்களும் க.பு ஆக அல்லோ போயிருப்பம்.
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
என்ட இரண்டு சதத்தை "நம்பி" பதிஞ்சுவிட்டு போகிறேன்.
@ மைந்தன் சிவா
//எட்டுக் கம்பிகள் ஆல்ரெடி எண்ணி இருக்கிறேன் .. //
வேண்டாம் கோபங்கள், வேண்டியதை அடைய சாத்வீகதையே தேர்ந்தெடுப்போம்
சொல்வது சரிதான்.ஆனால்... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதோடு நின்றுவிடாது,
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதுவும் முக்கியமல்லவா.இதுவரைக்கும் தொடர்ச்சியாக ஆள் மாறி ஆளாக இவ்வாறான கொடுஞ்செயல்களைப் புரிந்து வந்த எந்த ஒருவருக்கும் இந்த அளவுக்கு உலக எதிர்ப்புகள் கிளம்பியதாக நான் அறியவில்லை(எமது நாட்டில்). ஆனால் இப்பொழுது கிளம்பியிருக்கிறது.ஆகவே கிளம்பியுள்ள எதிர்ப்பை சாதகமாக்கி,குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை வழங்குவதனூடாக , அடுத்து ஆட்சிக் கட்டில் ஏறப்போபவர்களுக்கு கொஞ்சமாவது ஒரு அச்சத்தையேற்படுத்தவோ அல்லது தமிழர்கள் மீதுள்ள வெறியினால் செய்யக்கூடிய அழிப்புக்களை கொஞ்சமாவது கட்டுப்படுத்தவோ முடியுமல்லவா.
அப்போதுதானே சமமான தீர்வொன்றுக்கு சிறிய வழியாவது மெதுவாகவேனும் பிறக்கும்.
நீங்கள் கூறும்போது-தண்டனை பெற்றுக்கொடுக்கவென்று செயற்படவேண்டாம்,உதவிக்காக செயற்படுங்கள் என்று கூறுவது போன்று இருந்தது.அதனால்தான் கூறுகிறேன்.
"நானும் குறித்த காலப்பகுதியில் கல்வியைத் தொலைத்தவன்தான்."
இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்க தலையீடு என்பது ராஜீவ் காலத்துக்குப் பின்னரானது.இலங்கை அருகே இந்திய வல்லரசு?!இருப்பதால் ராஜ தந்திர வழிமுறைகளையே,அதாவது,மனித உரிமை மீறல் என்ற பெயரில் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்.இலங்கையில்,புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உடன்படிக்கையையும் நோர்வேயை வைத்து நீர்த்துப் போகச் செய்தவர்கள் அவர்களே!உண்மையில்,இறுதிக் கட்ட இன அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவுக்கு ஏற்பு இருந்ததில்லை.எப்பொழுதும் பிய்க்கல்,பிடுங்கல் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதில் நாட்டமுள்ளவர்கள்,அமெரிக்கர்கள்!"பிறவிக்குணம்" அது.இப்போதும் அதனையே விரும்புகிறார்கள்.அலை வரிசை-4(சனல்-4)ஒளிபரப்பிய போர்க் குற்றம் குறித்தான ஆவணப்படம் உலக நாடுகளில் அதிர்ச்சியை தோற்றுவித்திருக்கையில் முதல் ஆளாக விசாரணை கோருவது,கண்டனம் தெரிவிப்பதெல்லாம் பம்மாத்து.ஏலவே,சிறிய,சிறிய துண்டுகளாக ஒளிபரப்பான காட்சிகளில் தோன்றும் படையினர்(இராணுவத்தினர்)படிப்படியாக கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பப்படுகிறார்கள்,சரத் பொன்சேகாவின் "விசுவாசிகள்"என்ற பெயரில்!போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினர் காணாமல் போக செய்யப்பட்டிருக்கிறார்கள்! இப்போது,கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு "அந்த"ஆவணப் படம் சம்பந்தமாக இணக்கத்துக்கு,அதாவது"பேசி"த் தீர்க்க முன் வந்திருக்கிறார்கள்!இனி யாரை அடையாளம் காட்டுவது?பார்க்கலாம்!
வணக்கம் நிருபன் அண்ணா,
உங்கள் இந்த பதிவை நான் அடியோடு எதிர்க்குறேன்,
உங்கள் பதிவை படிக்கும் போது நிறைய பேசணும் என்று நினைத்தேன் , ஆனால் உங்கள் பதிவின் கருத்துரைகளை பார்க்கும் போது,,
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இன் கருத்தை பார்த்து மனசுக்குள் ஒரு சந்தோசம் , பதிவை படிக்கும் போது நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அழகாக சொல்லிவிட்டார் அவர்,
உங்கள் பதிவுக்கு என் கருத்தாக அவர் சொல்லிய அத்தனையையும் நானும் கருத்திட்டதாக மீண்டும் ஒரு முறை படித்துகொள்ளுங்கள்.
குறிப்பாக இக்கருத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள் அண்ணா.,
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, மஹிந்தவுக்கு தண்டனை கொடுப்பது வேறு! பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவது வேறு! இரண்டையும் ஏன் ஒன்றோடு ஒன்று சேர்க்கிறாய்?
இப்போது அந்தக் காணொளியைத் தொடர்ந்து, மஹிந்தவைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது!
இந்தச் சந்தர்ப்பத்தில், ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று, புலம்பெயர் தமிழர்களை குற்றம் சுமத்துவது, மஹிந்தவுக்கு சார்பான ஒரு கூற்றாக கருதப்பட வாய்ப்புக்கள் இருக்குமல்லவா?
மேலும், புலம்பெயர்தமிழர்களை, ஈழத்தில் உள்ள தமிழர்கள் குறைசொல்லிக்கொண்டு இருப்பது, சிங்கள மக்களும் புலம்பெயர் தமிழர்களைக் குறைசொல்ல வழிகோலும் அல்லவா?
ஈழத்தில் அமைதியாக வாழ நினைக்கும் தமிழர்களை, புலம்பெயர்தமிழர்கள்தான், அதை இதைச் சொல்லி குழப்பி வருகின்றனர் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரம் உண்மையென்றாகிவிட வழிசமைத்தது போலாகிவிடாதா?
இது நாள் வரை ஐ.நா செயலர் எல்லோரையும் போல் தானும் இரு தடவைகள் "அனுபவிக்க" வேண்டும் என்ற ஆசையில் மெளனம் காத்து வந்தது போல் தெரிகிறது!இப்போது இரண்டாவது தடவையும்(மகிந்தர் போல்)கதிரை நிட்சயம் ஆனதால்,நிபுணர் குழு அறிக்கையை மீள் பரிசீலனை செய்வதுடன்,இரண்டாவது பதவிக்காலத்துக்கான வாக்கெடுப்புக்கு(செவ்வாய்)முன்னர்,அதாவது முற்பகலில்,ஐ.நா வளாகத்துக்கு அப்பால் ஓர் மண்டபத்தில் போர்க்குற்ற ஆவண காணொளியை பார்வையிடவிருப்பதாக தெரிகிறது.பார்க்கலாம்!
நிரூபன் said...உங்களின் கருத்துக்களுக்கும், புரிதலுக்கும் சல்யூட் ஐயா,
போர்க் குற்றத் தண்டனை வழங்க எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியாத நிலையில் நாமெல்லாம் நேரடியாக மக்களிடம் உதவிகள் வழங்குவதற்கேற்ற வழி முறைகளைப் பின்பற்றுவதில் தவறேதுமில்லைத் தானே ஐயா.///மீண்டும் கூறுகிறேன் உதவுவதில் தவறில்லை.ஏலவே,பலர் தனிப்பட்ட முறையில் உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!ஆனால் மறந்தும் அங்கே இயங்குவதாக கூறி இங்கே பணம் சேகரிப்போரிடம் ஏமாந்து விடாதீர்கள்!எம்மின விடுதலைக்காக பல்லாண்டு காலம் உதவியோர் இப்போது வீழ்ந்தவர்களை எழுந்து நிற்க உதவுவதில் சிரமமிருக்காது.
நண்பா அனாமிகா சொல்வது போல் கடனுக்கு வட்டியைக்கட்டுவதில் ஓடும் துயரத்தை பொதுவில் சொல்லாமல் ஓடினேன் இன்று வெளியிடுகிறேன் பலர் தனிப்பட்டமுறையில் என் உறவுகள் என்னுடன் கதைப்பதில்லை காசு தரவில்லை என்று உண்மையில் எத்தனை செலவைத் தாங்குவது நண்பா! வெளியில் சிரித்துக்கொண்டு உள் அழுவதில் உள்ளதை சொல்ல முடியாது ஆனாலும் எதையும் செய்யனும் என்ற ஆதங்கம் உண்டு தப்பி ஓடியந்தாலும் மனம் துடிக்கும் குற்ற உனர்ச்சி சொல்லி மாழாது,பலது எழுதலாம் வேண்டாம் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் வலிகள் அதிகம் வேண்டாம் நண்பா!
நிரூ....பதிவையும் பின்னூட்டங்களையும் முழுமையாக வாசித்தேன்.நான் வடையண்ணா,நடா கட்சியில்தான் இருக்கிறேன்.
புலம்பெயர் தமிழர்கள் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே தம் குடும்பங்களை ஒட்டியாவது உதவிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.பொதுவாகச் செய்வதில் நம்பிக்கையீனமே காரணம்.கொடுக்கும் உதவி சரிவரப் போய்ச் சேர்வதில்லை.
சிவப்புச் சால்வைக் காரர்களை இப்படியே விட என்கிறீர்களா.
என்ன ஏன் இது இப்படிச் சிந்தனை !
நண்பரே...
உங்கள் பதிவும்...
நண்பர்களது பின்னூட்டங்களும்... ஒன்றை தெளிவாக சொல்கின்றன.
இன்னும் விடியவில்லை.
கோ உங்களின் கேள்விகள் பல நியாயமானைவை தான் .. பட் எல்லாம் அல்ல .
பல ஆயிரம் மக்களின் கொலைக்கு காரணமான ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, அவருக்குத் தண்டனையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், இறந்து போன எங்கள் உறவுகளின் உயிர்கள் திரும்பி வந்து விடுமா?
இறந்து போன உயிர்கள் திரும்பி வந்துவிடாது . தான் சகோ அனால் அப்போ குற்றவாளிகளுக்கு தண்டனை தேவையில்லையா ? . இப்படியே விட்டால் இனி வருபவர்களும் இதைதான் செய்வார்கள் . தமிழனுக்கு விடிவு ஏற்படாது சகோ . இவர்களுக்கு தண்டனை பெற்று கொடுப்பதன் மூலம் இறந்த உயிர்கள் ஆத்மா சாந்தியடையும் அல்லவா,
சகோ
நான் ஓட்ட வடை நாராயணன் அண்ணனின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.
மாப்ள மன்னிக்கவும்....இதில் என் கருத்துக்கள் :
முதல் விஷயம்...இன்றைய ராட்ஜசனுக்கு ஒரு கைவிலங்கு போடப்பட வேண்டும்...
இரண்டாவது துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு சர்வதேசம் தன் கை நீட்டி உதவிட வேண்டும்....
இதனில் முதல் விஷயம் நடக்கவில்லையெனில்...இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே...இப்போதைய விஷயத்தையும் கருத்தில் கொண்டு செயல் படவேண்டும் என்பதே என் பார்வை...தவறு இருந்தால் மன்னிக்கவும்...
ஏனெனில் வதை படுபவனுக்கே அந்த வலி தெரியும்....கண்டு கொண்டிருப்பவனுக்கல்ல!
இதைப்பற்றி கதைக்க நினைத்தாலே பிரஷர் எகிறிடும் பாஸ்! ஆனாலும் இருக்கிற இடத்தை நினைத்து பம்மிக் கொண்டு இருக்கிறேன்! இங்கே பலரும் இப்படியே வாழப் பழகிட்டோம் போலிருக்கு!
அடுத்தவன் கஷ்டத்தை வைத்து நிறையப் 'பேச' முடிகிறது - அதுவும் நண்பர்களுக்குள் மட்டும்!
காலங்காலமா இதைவிட நாங்கள் ஒண்டும் செய்யல! (என்னைப் போன்றவர்களைச் சொன்னேன்!)
ஏதோ அதிகபட்சமாக அடுத்தவன் கஷ்டத்தை, வலியை உணர்ந்துகொள்ளவாவது முடிகிறதே! :-(
நேற்றே இரண்டு முறைப் படித்தேன்
இன்றும் படித்து விட்டு ஒரு வாறு
மனந்தேறி இதனை எழுதுகிறேன்
நிரூ உங்கள்
உள்ளத்து வேதனையும
ஆதங்கத்தையும் நான் அறிகிறேன்
அதே போல வந்துள்ள மறு மொழிகளையும் வரி விடாமல்
படித்தேன்
என்ன எழுதுவது என்றே
எனக்குப் புரியவில்லை
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கே கொண்டாட்டம் - பழமொழியைக்
அனைவரும்
கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்
ஒரே தீர்வு, நிரந்திரத் தீர்வு
தமிழீழம் காண்பது ஒன்றுதான்
முயல்வோம் வெற்றி பெறு
வோம்
புலவர் சா இராமாநுசம்
சர்வேதச நாடுகள் இலங்கை மீது நடவடிக்க எடுக்காதவரை இந்த பொறம்போக்கு சிங்கள நாய்கள் திருந்த மாட்டானுங்க... நடவடிக்கை எடுத்தால் தமிழன் மீது கை வைத்தால் உலகம் நம்மை கேள்வி கேட்கும் என்றம் பயம் வராதவரை தமிழன் நிலை மாறாது.
நண்பா ஒதுங்க நினைத்தேன் @சிட்டிசனின் கூற்றில் சில நியாயம் இருந்தாலும் அவர் நினைப்பது போல் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை .அடக்கு முறை இல்லாமல் எங்கேயும் என் நேரத்திலும் சுதந்திரமாக போக முடியும் மற்றும் படி அவரிடம் உள்ள மிக தரந்தாழ்ந்த செயல் குப்பை கொட்டி என்பது கண்டனத்திற்கு உரியது செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லும் குடியில் வந்துவிட்டு. இவர்கள் குப்பை கொட்டி என்பவருக்கு தெரியாது போல இன்று புலம் பெயர் தேசத்தில் நம்மவர் வெற்றிநடை போட்டு பாராளமன்றம் வரை போவது. அவர் விடயத்தை விட்டு தாய் நாடு என்று சொல்லுவதில் நானும் முரன்படவில்லை பலர் யுத்தத்தால் தாய் நாட்டை ஆளுவோரால் தானே பாதிக்கப் பட்டோம் அதனால் தானே உயிரைக்காக்க ஓடி வந்தோம் இவ்வளவு வெளிநாடுகள் அள்ளிக்கொடுத்ததை தமிழருக்கு கிள்ளிக் கொடுத்து மீளுவதற்கு உதவலாமே இப்படி கேவலமாக நாட்டை ஆளும் அவர்களிடம் எப்படி நாங்கள் வியர்வை ,நித்திரை தொலைத்து சேர்க்கும் பணத்தை கொடுப்பது 1euro உழைப்பதற்கு எத்தனை துயரங்கள் தும்பங்களை தாங்க வேண்டி இருக்கு சிட்டிசன் வந்து பாத்தால் புரியும் வெளிநாட்டில் பாலும் தேனும் ஓடுது புலம் பெயர்ந்தவன் வீட்டில் பெட்டகத்தில் கொட்டி வைத்திருக்கிறான் பணம் அள்ளிக் கொடுக்க என்று. என்ன ஒரு மட்டமான கற்பனை சிட்டிசனுக்கு?!உங்களுக்கு மட்டும் கருத்துப் போட நேரமில்லை நாங்களும் புலம் பெயர் தேசத்தில் மெத்தையிலா படுத்திருக்கிறோம் பதிவின் விடயத்தை மாற்றுகிறார் நண்பா கொதிக்கு வார்த்தைகள் என்னிடம்!
நிரூபன், அங்குள்ள தமிழீழ குழந்தையின் கல்விக்கு அல்லது வேறு ஏதேனும் தேவைக்கு நான் எவ்வழியில் உதவ இயலும் என்று தெரியவில்லை. விரிவாக மெயில் அனுப்புங்கள். என்னால் ஆன உதவியை செய்கிறேன்.
நியாயமான கோபங்கள் தெளிக்கின்றன
அனைத்திற்கும் காலமும் வரலாறுமே பதில் தரவேண்டும் என்று நினைக்கின்றேன் :(
எங்கள் சின்ன வயதில், சிலோன் ரேடியோவில் கே.எஸ்.ராஜாவின் குரலுக்காக தவம் கிடப்போம். கண் மூடி, புத்தகத்தை நெஞ்சில் சாய்த்து படித்துக் கொண்டிருப்பதாய் பாவனை காட்டி பாடல் கேட்டுக் கொண்டிருப்போம். அப்படிப்பட்ட 'சிலோனின்'இன்றைய நிலை? செங்கை ஆழியான் அவர்களின் "மரணங்கள் மலிந்த பூமி" வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மனது துன்பச் சூழலில் ஊறி பொதும்பி போய் இருக்கிறது.
சிந்தனையைத் தூண்டும் பதிவு!உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கேள்விகளுக்கு உலக நாடுகள் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றன.
வணக்கம் நிரு ,, என்னால நேற்று வரமுடியவில்லை..
>>
இறந்தவர்களை மதிக்காவிட்டாலும், அவர்களின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து ஒரு சந்ததியின் எதிர்காலத்தை நாம் மிதிக்காதிருத்தல் சிறப்பல்லவா!
kalakkal இந்தப்பதிவில் விக்கியின் கருத்துக்களும் ஜீவனின் கருத்துக்களும் சிந்திக்க வைத்தன
Post a Comment