பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே;
தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலாமா? இன்றைய கால கட்டத்தில் அரசியல் கொஞ்சம் விவகாரமான விடயமாகத் தான் இருக்கிறது. தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலாமா என்று தலைப்பு எழுதியதும் பல பேர் கடுப்பாகியிருப்பீங்க. ’ஈழத்து அரசியலை நோண்டிப் பார்க்கத் தைரியம் இல்லை. அதில நம்ம தமிழக அரசியலைப் பற்றி ஏதோ எழுதுறியா? உன்னை அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்’ என்று யாராவது உணர்ச்சிவசப்பட்டால் அதற்கு நான் சொல்லும் பதில் இது தான்.
ஈழத்து அரசியல் என்பது மனிதாபிமானமற்ற மனிதர்களது அரசியல். ஆகவே அதனைப் பற்றி வாய் திறந்தால் எத்தகைய பிரதி கூலங்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். இனிப் பதிவிற்குள் நுழைவோமா. இப் பதிவினூடாக நாம் அலசவிருப்பது நோண்டி பற்றிய சில குறிப்புக்களைத் தான்.
தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கப் போறியா மவனே, உன்னை நொங்கெடுத்திடுவேன் என்று யாரோ பேசுறீங்க போல இருக்கே.
தமிழக மக்களின் பேச்சு வழக்கில் நோண்டிப் பார்த்தல் என்பது கிண்டிப் பார்த்தல், அல்லது கிளறிப் பார்த்தல் எனும் பதத்தில் வந்து கொள்ளும். ஈழத்திலும் நோண்டிப் பார்த்தலுக்கு இதே பொருள் இருந்தாலும், இந்த நோண்டி எனும் பதத்தினை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில்-ஏன் சுட்டுகின்றோம் எனும் சரியான காரணம் தெரிந்தும் அச் சொல்லிற்கான அர்த்தத்தினை அறியாதவர்களாய்ப் பயன்படுத்துகிறோம்.
2001ம் ஆண்டின் இறுதிப் பகுதியினைத் தொடர்ந்து கடுகதி வேகத்தில் ஈழத்தின் வட கிழக்கு மாகாணங்களில் பிரபல்யமான வார்த்தை தான் இந்த நோண்டி. இக் காலத்திற்கு முன்னரே இலங்கையின் தென் மாகாணங்களில் இந்த நோண்டி எனும் பதம் வழக்கத்திலிருந்திருக்கிறது.
நோண்டி எனும் சொல்லிற்கான பொருள் விளக்கங்கள் இடம், பொருள், ஏவல் எனும் மூன்றினையும் அடிப்படையாகக் கொண்டு வேறுபட்டுக் கொள்ளும்.
இதனடிப்படையில் பார்க்கும் போது தமிழில் நாம் பயன்படுத்தும் நோண்டி எனும் பேச்சு மொழிக்கான அர்த்தம் ஆழமாக/ உள்ளார்ந்தமாக/ ஊடுருவிப் பார்த்தல் எனும் தொனியில் வந்து கொள்ளும்.
எடுத்துக் காட்டாக,
*மச்சான் நாங்கள் அந்தப் பிகருக்குப் பின்னால போறது வீட்டிற்கு மட்டும் தெரிஞ்சுது, செம நோண்டி மச்சான்.
*நீ கொஞ்சம் நோண்டியாக்காமல் பேசாமல் இருக்கலாம் தானே(ஒருவர் அளவுக்கதிகமாக ஓயாது பேசும் போது இதனைப் பயன்படுத்துவோம்.)
*இது கொஞ்சம் நோண்டியான விசயம் மச்சான். (இடக்கு முடக்கான மேட்டரை இப்படிச் சொல்லுவோம்)
*கொஞ்ச நேரம் அந்தப் போனை நோண்டாமல் இருக்கிறியே(அதாவது கொஞ்ச நேரம் அந்தப் போனை ஆராயாது இருக்கிறியே என்று சொல்லுவார்கள்.
* கோபத்தில் ஒரு சிலர் ‘சும்மா நோண்டாமல் இருக்கிறியே மச்சி’ என்று பேசுவார்கள்(இது கொஞ்ச நேரம் சொறியாமல் இருக்க முடியுமா எனும் அர்த்தத்தில் வரும்)
*பெரிசின்ரை ஆட்களுக்குத் தெரிஞ்சுது, நோண்டி நொங்கெடுத்துப் போடுவாங்கள் மச்சி, பார்த்து மச்சி. கவனமா டீல் பண்ணு.(போராளிகள் ஈழத்தில் இருந்த காலத்தில், அப் போராளிகளின் தலைவரைப் பெரிசு என்று சிறப்பித்துக் கூறுவார்கள். அதே போல கோஷ்டி மோதலில் ஈடுபடும் நபர்கள் பெரிசின் ஆட்களிடம் அகப்பட்டால் கடுமையான தண்டணையினை எதிர் நோக்க நேரிடும் என்பதால் இவ்வாறு கூறுவார்கள்.)
*வாடா மச்சான் அவனை நோண்டியாக்குவோம்.(இது வாடா மச்சி அவனைக் கலாய்ப்போ/ கிண்டலடிப்போம் எனும் அர்த்தத்தில் சொல்லப்படும்).
*இவர் கொஞ்சம் நோண்டியான ஆள் மச்சி(இது ஒரு மாதிரியான ஆளை/ மெண்டல் கேசினைக் விளிக்கப் பயன்படும் நோண்டி)
* மீன், கருவாடு முதலிய கடலுணவுகளைச் சமைக்கையிலும் நோண்டிப் பார்த்து/ நோண்டிச் சமைப்பதாக கூறுவார்கள்.
2001ம் ஆண்டின் இறுதிப் பகுதியினைத் தொடர்ந்து இலங்கையின் வட கிழக்கு மக்களிடையே இந்த நோண்டியெனும் சொல்லானது பரவியிருந்தாலும், சிங்கள மக்களிடையே அவர்களது ஆரம்ப காலந் தொட்டு பேச்சு மொழி வழக்கில் இந்த நோண்டியானது புழக்கத்திலிருக்கிறதாம்.
இலங்கையில் வாழும் சிங்கள மொழிச் சகோதரர்கள் பயன்படுத்தும் Nondi- நோண்டி என்பதற்கான அர்த்தமானது
வெட்கப்படுதல், ஆழமாக ஊடுருவி ஆராய்ந்து பார்த்தல் எனும் வகையில் வந்து கொள்ளுமாம்.
பொட்ட நோண்டி பாங்- Podda nondi bang எனப்படுவது, ’’நன்றாக வெட்கப்படுவது போல ஆகி விட்டதே’’ என்று சிங்கள மக்கள் சொல்லிக் கொள்ளுவார்கள்.
இத்தகைய தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இந்த நோண்டியானது தமிழகத்திலிருந்து ஈழத்திற்குப் பரவியதா? அல்லது சிங்கள மொழிச் சொல்லின் கலப்பாக இலங்கைத் தமிழர்களின் பேச்சு மொழிக்குள் ஊடுருவியதா? இதற்கான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
டிஸ்கி: தயவு செய்து என்னை நோண்டியாக்காமல் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமல்லவா.
|
88 Comments:
முடியலடா சாமி ..........
+vadai
@koodal bala
முடியலடா சாமி ..........//
ஏன் பாஸ், அவ்ளோ கொலை வெறியோடையா எழுதியிருக்கேன்,
இது ஒரு சின்ன மேட்டர் சகோ.
ஹி...ஹி...
@koodal bala
+vadai//
இன்னைக்கு வடை எல்லாம் தர முடியாது, இட்லி மாத்திரம் தான் தர முடியும்.
///’ஈழத்து அரசியலை நோண்டிப் பார்க்கத் தைரியம் இல்லை. அதில நம்ம தமிழக அரசியலைப் பற்றி ஏதோ எழுதுறியா?// அப்ப தங்களையும் யாரோ நோன்டியாக்கியிருக்காங்க போல ))
நாங்க நொங்கையும் நோண்டி தானே குடிப்பம் ..))
அது சரி இதுக்கு நடுவில என் நம்ம இளைய தளபதியின் போட்டோ அதுவும் குதிரேல வருவது போல .....உங்களுக்கு நக்கல் தான் மாப்பு ...))
டேய் "கேம" கேட்டாய் , நோண்டி நொங்கெடுத்துபோடுவம் ....(நம்ம பள்ளியில அதிகமா பாவிக்கும் வார்த்தை )
டேய் அவளுக்கு பின்னால போகதடா நோண்டியாகிடுவா ...( நண்பனுக்கு அடிக்கடி சொல்லும் வார்த்தை ஹிஹிஹி )
முடியல.முடியல...முடியல ...
tamil manam 4
நிரூ
நீங்க நல்லாவே நோண்டிரீங்க
நிரூ. ஆமா இவ்வளவும் எங்க நோண்
டினீங்க யாரை, எப்படி, நோண்
டினீங்க
அதைச் சொல்ல மாட்டீங்களே. தலைப்பிலேயே நோண்டிட்டீங்க தப்பி உள்ளே வந்தவங்களையும நோண்டிட்டீங்க
சகோ நானும் மத்தவங்க மாதிரியே எழுத முயற்சி பண்றேன்
ஆனா தடம் மாறுது தடு மாறுது
இல்லையா
உங்களை நேர்ல பாக்கனும் சிரிக்கனும் சிந்திக்கனும் அப்படியெல்
லாம் ஆசை முடியுமா???
பார்போம்.
புலவர் சா இராமாநுசம்
அல்வா!!!!!?
நிரு புரியுதா?
நண்பரே உங்கள் மொழி ஆராய்ச்சி வியப்பாக இருக்கிறது.
நோண்டி என்ற வார்த்தை இத்தனை பதத்தில் பிரயோகிக்கப்படுகிறது எனபதை கூர்ந்து கவனித்து விளக்கியிருக்கிறீர்கள்.
நன்றி.
நல்லா நோண்டி இருக்கிங்க...
@கந்தசாமி.
///’ஈழத்து அரசியலை நோண்டிப் பார்க்கத் தைரியம் இல்லை. அதில நம்ம தமிழக அரசியலைப் பற்றி ஏதோ எழுதுறியா?// அப்ப தங்களையும் யாரோ நோன்டியாக்கியிருக்காங்க போல ))//
ஹி...ஹி...,
உங்களுக்கும் பலர் நோண்டியிருக்கிறாங்க என்று நினைக்கிறேன்.
@கந்தசாமி.
நாங்க நொங்கையும் நோண்டி தானே குடிப்பம் ..))//
ஆமா பெரிய பாஸ்.
@கந்தசாமி.
அது சரி இதுக்கு நடுவில என் நம்ம இளைய தளபதியின் போட்டோ அதுவும் குதிரேல வருவது போல .....உங்களுக்கு நக்கல் தான் மாப்பு ...))//
அந்தப் போட்டோவிற்கு மேலே உள்ள வசனத்துடன், இந்தப் போட்டோவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது
நிறைய விடயங்கள் புரியுமில்ல.
@கந்தசாமி.
டேய் "கேம" கேட்டாய் , நோண்டி நொங்கெடுத்துபோடுவம் ....(நம்ம பள்ளியில அதிகமா பாவிக்கும் வார்த்தை )//
அஃதே....அஃதே....அஃதே..
@ரியாஸ் அஹமது
முடியல.முடியல...முடியல ...//
என்ன பாஸ், இங்க நின்று சொன்னால் எப்பூடி?
ஒரு வாளியினுள் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஓட வேண்டாமா;-))
@ரியாஸ் அஹமது
tamil manam 4//
நன்றி சகோ.
@புலவர் சா இராமாநுசம்
நிரூ
நீங்க நல்லாவே நோண்டிரீங்க
நிரூ. ஆமா இவ்வளவும் எங்க நோண்
டினீங்க யாரை, எப்படி, நோண்
டினீங்க
அதைச் சொல்ல மாட்டீங்களே. தலைப்பிலேயே நோண்டிட்டீங்க தப்பி உள்ளே வந்தவங்களையும நோண்டிட்டீங்க//
ஹா...ஹா...நா இதுவரைக்கும் யாரையுமே நோண்டலை ஐயா. தலைப்பில் ஒரு கிக்கு, வாசகர்களைச் சுண்டி இழுக்கத் தான். உள்ளே வந்து அவஸ்தைப் பட்டுவிட்டீங்களா;-))
ஹி...ஹி...
நன்றி ஐயா.
//சகோ நானும் மத்தவங்க மாதிரியே எழுத முயற்சி பண்றேன்
ஆனா தடம் மாறுது தடு மாறுது
இல்லையா//
இல்லை ஐயா, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வோர் விதமான திறமை ஒளிந்திருக்கிறது, கவலையினை விடுங்கள். தொடர்ந்தும் எழுதுங்கள் ஐயா. நாங்கள் அருகே இருக்கிறோம்.
//உங்களை நேர்ல பாக்கனும் சிரிக்கனும் சிந்திக்கனும் அப்படியெல்
லாம் ஆசை முடியுமா???
பார்போம்.
புலவர் சா இராமாநுசம்//
ஏன் இந்த விபரீத ஆசை ஐயா?
உங்களின் அன்பிற்கு முதலில் நன்றி,
இச் சிறியேனை நேரில் பார்க்கும் உங்களின் ஆசை வெகு விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அல்வா!!!!!?//
என்ன பாஸ், நெல்லையில கொடுக்கிறாங்களா;-))
நிரூபன், உன்னையொருக்கா சவுந்தலா அக்கா வந்திட்டு போவட்டாம்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நிரு புரியுதா?//
புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறது. நேரடியாகச் சொல்லலாமில்லே மாப்ளே.
ரவியண்ணை வீட்ட இல்லையாம்! கொழும்புக்குப் போட்டாராம்! வர அஞ்சு நாள் ஆகுமாம்!
@உலக சினிமா ரசிகன்
நண்பரே உங்கள் மொழி ஆராய்ச்சி வியப்பாக இருக்கிறது.
நோண்டி என்ற வார்த்தை இத்தனை பதத்தில் பிரயோகிக்கப்படுகிறது எனபதை கூர்ந்து கவனித்து விளக்கியிருக்கிறீர்கள்.
நன்றி.//
நன்றி சகோ, எம் வாழ்வோடு இந்த நோண்டியும் ஒன்றித்துப் போய் விட்டது, அதனால் தான் நோண்டி பற்றி நோண்டியாகாமல் எழுத முடிந்தது.
@சந்ரு
நல்லா நோண்டி இருக்கிங்க...//
நிஜமாவா பாஸ், ஆமா யாரை என்று சொல்லவே இல்லையே;-))
நன்றி சகோ.
என்னத்துக்கெண்டு எனக்குத் தெரியாது! ஏதோ தேங்காய் புடுங்கோணுமாம்!
மவனே நீ போட்ட தலைப்பு வடக்கால போகுது!
பதிவு தெற்கால போகுது!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூபன், உன்னையொருக்கா சவுந்தலா அக்கா வந்திட்டு போவட்டாம்!//
மச்சி, நான் கொஞ்சம் பிசியடா மாப்ளே,
கொஞ்ச நேரம் நோண்டியாக்காமல் இருக்கிறியே.
அதாலதான் என்ர கமெண்டு மேற்கால போகுது! ஹி ஹி ஹி!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ரவியண்ணை வீட்ட இல்லையாம்! கொழும்புக்குப் போட்டாராம்! வர அஞ்சு நாள் ஆகுமாம்!//
அடிங்...எப்பவுமே கெட்ட கெட்ட சிந்தனையில தான் இருக்கிறியா மவனே, ரவி அண்ணையையும், சவுந்தலா அக்காவையும் எப்படி ஜொயின் பண்ணூறாய் படவா.
பிச்சுப் புடுவே, பிச்சி.
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே; ////
அந்த தெருக்கூத்து டச் இன்னும் விட்டுப் போகேலையே?
விட்டா அன்பார்ந்த த..... மக்களே எண்டு விளிப்பாய் போல!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
என்னத்துக்கெண்டு எனக்குத் தெரியாது! ஏதோ தேங்காய் புடுங்கோணுமாம்!//
உல்உமக்கு, இல்இந்த வல்வார்த்தை அல்ஆர் சொல்சொல்லித் தல்தந்தது?
இல்இந்த பொல்பொது இல்இடத்தில், நில்நீர் இல்இரட்டை அல்அர்த்தம் பொல்பேசலாமோ?
உல்உனக்கு அல்அடிச்சால் பல்பறக்கும்;-))
தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலாமா? /////
நோண்டிப் பார்க்க அது என்ன நெத்தலிக் கருவாடா? அல்லது சூடைக் கருவாடா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மவனே நீ போட்ட தலைப்பு வடக்கால போகுது!
பதிவு தெற்கால போகுது!//
தலைப்பிற்கும் பதிவிற்கு என்னய்யா தவறு?
நோண்டிப் பார்ப்பது பற்றித் தானே எழுதியிருக்கிறேன் மச்சி.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அதாலதான் என்ர கமெண்டு மேற்கால போகுது! ஹி ஹி ஹி!//
ஆய், நிசமாவோ,
பதிவைக் கொஞ்சம் உள்ளார்ந்தமாகப் படிக்கிறது மாப்பிளே.
இன்றைய கால கட்டத்தில் அரசியல் கொஞ்சம் விவகாரமான விடயமாகத் தான் இருக்கிறது. ///////
இப்ப மட்டும்தானா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே; ////
அந்த தெருக்கூத்து டச் இன்னும் விட்டுப் போகேலையே?
விட்டா அன்பார்ந்த த..... மக்களே எண்டு விளிப்பாய் போல!//
அடோய், நடுச் சபையில் வைத்துப் பேசுற பேச்சா இது, நீ ரொம்ப ஓவராத் தன் யோய்க் கொண்டிருக்கிறாய். வெகு விரைவில் உனக்குக் கால் கட்டுப் போட வேண்டும்.
மச்சி, இது வந்து முந்தி ஒரு காலத்தில வந்த இறுவட்டுக்கள் சிலவற்றுக்கு கொடுத்த குரலின்ரை வசனம்,,,
ஹி...ஹி....
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலாமா? /////
நோண்டிப் பார்க்க அது என்ன நெத்தலிக் கருவாடா? அல்லது சூடைக் கருவாடா?//
அடிங், பதிவைப் படிச்சிட்டு, இந்த ஆராய்ச்சியைச் செய்யலாமில்லையா.
இங்கே தமிழில் நோண்டுதல் என்றால் தோண்டுதல் என பொருள் படும் , அதை போலவே நீங்கள் சொன்ன அத்தனை பொருளும் அர்த்தப்படும்
நல்ல சுவையான பதிவு சகோ
மவனே நீ போட்ட தலைப்பு வடக்கால போகுது!
பதிவு தெற்கால போகுது!//
தலைப்பிற்கும் பதிவிற்கு என்னய்யா தவறு?
நோண்டிப் பார்ப்பது பற்றித் தானே எழுதியிருக்கிறேன் மச்சி.
June 17, 2011 3:06 PM/////
டேய் நான் இப்ப சொன்னானே உன்ர பதிவுக்கும் தலைப்புக்கும் தொடர்பு இல்லையெண்டு!
தலைப்பு வடக்கால போகுது , பதிவு தெற்கால போகுது எண்டு சும்மா பம்பலுக்கு எல்லோ சொன்னான்!
இப்போ நான் ஃபிரான்சில இருக்கிறன், ஹன்சி இந்தியாவில இருக்கிறா அதுக்காக ரெண்டு பேருக்கும் சம்மந்தம் இல்லை எண்டு ஆகிடுமே!
அதுமாதிரித்தான் இதுவும் !
சரி மச்சி இப்ப நான் கொன்ஞ்சம் பி சி பிறக் உவாறன்
நொங்கை நோண்டிக் குடித்தோம் ஒரு காலத்தில் பின் நோண்டியாக்கி நோண்டியானோம் கொழும்பில் அதைத்தவிர எனக்கு நோண்டுவதில் விருப்பம் இல்லை நண்பா ! நோகடிச்சிட்டாங்க!
நிருபன் நாளுக்கு நாள் உங்களின் எழுத்துக்களில் ஒரு வித புரட்சி தெரிகிறது.
////நிரூபன் said...
@கந்தசாமி.
அது சரி இதுக்கு நடுவில என் நம்ம இளைய தளபதியின் போட்டோ அதுவும் குதிரேல வருவது போல .....உங்களுக்கு நக்கல் தான் மாப்பு ...))//
அந்தப் போட்டோவிற்கு மேலே உள்ள வசனத்துடன், இந்தப் போட்டோவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது
நிறைய விடயங்கள் புரியுமில்ல.///
(((((இவர் கொஞ்சம் நோண்டியான ஆள் மச்சி(இது ஒரு மாதிரியான ஆளை/ மெண்டல் கேசினைக் விளிக்கப் பயன்படும் நோண்டி) ))) ஐ அவரை மனசில வச்சுக்கொண்டு தானா இந்த வசனங்கள்...
பாவம் பாஸ் நம்ம டாக்குத்தரு ஹிஹிஹி
கூகிள் தளத்தில் Nondi- நோண்டி என்ற அர்த்தத்திற்கு விடை தேடி பார்த்தேன் உங்கள் தளம் தான் வருகிறது அடுத்து facebookil மற்றவர்களை நோண்டியாக்குவோர் சங்கம்
என்ற தளம் தான் வருகிறது
இந்த நோண்டி கதை கொலோம்பில் இருந்து வட பகுதி வந்தவர்களால் அறிமுகபடுதபட்டது என்று நினைக்கிறேன் கொழும்பில் உள்ளவர்கள் சின்ஹல நண்பர்களிடம் சுட்ட வார்த்தையாய் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு
ரவுண்டு கட்டி நோண்டி இருக்கீங்க....
நல்லாவே நோண்டிப் பார்த்துட்டீங்க! தமிழ்நாட்டிலிருந்துதான் பரவியிருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.இங்கிருந்து அங்கே சென்றது அதிகம்.
பெருச்சாளி வளை நோண்டற மாதிரி நோண்டிட்டீங்க!
நோண்டின் நிரூபோல் நோண்டுக
அஃதிலார்
நோண்டலின் நோண்டாமை நன்று!
ஐயா,
அப்பா,
சார்,
அக்னி நட்சத்திரம் தான் முடிஞ்சிப் போச்சில்லே..
ஏம்ப்பா ? ஏம்ப்பா இப்படி ?
( வடிவேலு ப்ளோவில் படித்துக் கொள்ளுங்கள் )
நன்றி...
http://sivaayasivaa.blogspot.com
//தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கப் போறியா மவனே, உன்னை நொங்கெடுத்திடுவேன் என்று யாரோ பேசுறீங்க போல இருக்கே. //
அதெப்பிடி பாஸ் நாம நினைக்கிறதெல்லாம் உங்களுக்கு தெரியுது??
//* மீன், கருவாடு முதலிய கடலுணவுகளைச் சமைக்கையிலும் நோண்டிப் பார்த்து/ நோண்டிச் சமைப்பதாக கூறுவார்கள்.//
பயபுள்ள அடிக்கடி சமையல் பக்கம் தலை காட்டுதில்லே ??
// Podda nondi bang எனப்படுவது, ’’நன்றாக வெட்கப்படுவது போல ஆகி விட்டதே’’ என்று சிங்கள மக்கள் சொல்லிக் கொள்ளுவார்கள்.
///
அப்போ paarungalen...அப்போ,சாட்டர் என்றுவதும் இதுவும் ஒன்றா??
//டிஸ்கி: தயவு செய்து என்னை நோண்டியாக்காமல் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமல்லவா. //
என்னது உங்கள வெக்கப்பட வைக்கிறதா??அது வருங்கால மனைவி நினைத்தாலும் நடக்காதே??!!!
I think Nondi=Chatr!!
ஈழத்து அரசியல் என்பது மனிதாபிமானமற்ற மனிதர்களது அரசியல். ஆகவே அதனைப் பற்றி வாய் திறந்தால் எத்தகைய பிரதி கூலங்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும்//
என்ன செய்வோம்
தங்களின் எழுத்தாற்றளுக்கு ஒரு சபாஷ் சகோ!
எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல.. வந்ததே என்பது தான் முக்கியம்.. வந்திடுச்சுல அடுத்த வேலைய பாருமய்யா.. இதுல போட்டிருக்கு பாதிய நாங்க யூஸ் பண்ண மாட்டோம்.. ஹி ஹி.. அப்போ அங்கட தமிழும் இங்கட தமிழும் கொழப்புதே.!! எதுதான் தமிழ்.!?
ஹா ஹா நோன்டிக்குள்ள இவ்வளவு அர்த்தமா.. நான் நோன்டியாகிர்றேன்
நோன்டியயே நோன்டிப்பாத்த நம்ம அஞ்சா நெஞ்சன் நிருபன் வாழ்க வாழ்க...
நிரூ...நோண்டி கொழும்பிலிருந்துதான் யாழ் பரவியிருக்கு.நல்லாத்தான் நோண்டிப் பாக்கிறீங்கள் எங்கட அழகான தமிழை !
அப்பாடா...எதோ அரசியல் சாக்கடையை நோண்டப்போறதா எண்ணி வந்தா
அருமையான அல்வா கிண்டிக்
குடுத்திற்ரீங்களே!..நன்றி சகோ.......
ஹாய் அண்ணா,
சொஞ்ச நாளா ப்ரான்ஸ்ல இல்லை ( கனடா ), அதான் உங்க ப்ளாக் பக்கம் வரவில்லை,
மன்னிக்கவும், இப்போ இதோ வந்துட்டோம் இல்ல :) ( இவன் வெரல்ல எண்டு யார் அளுதா நீங்க கடுப்பாகிறது தெரியுது)
//ஈழத்து அரசியல் என்பது மனிதாபிமானமற்ற மனிதர்களது அரசியல்//
அதே அதே
//நோண்டிப் பார்த்தல் என்பது கிண்டிப் பார்த்தல், அல்லது கிளறிப் பார்த்தல் எனும் பதத்தில் வந்து கொள்ளும். ஈழத்திலும் நோண்டிப் பார்த்தலுக்கு இதே பொருள் இருந்தாலும், இந்த நோண்டி எனும் பதத்தினை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில்-ஏன் சுட்டுகின்றோம் எனும் சரியான காரணம் தெரிந்தும் அச் சொல்லிற்கான அர்த்தத்தினை அறியாதவர்களாய்ப் பயன்படுத்துகிறோம்.
//
இதுதான் நிரூபன் அண்ணாவில் எழுத்து ஸ்டையில்
// கோபத்தில் ஒரு சிலர் ‘சும்மா நோண்டாமல் இருக்கிறியே மச்சி’ என்று பேசுவார்கள்(இது கொஞ்ச நேரம் சொறியாமல் இருக்க முடியுமா எனும் அர்த்தத்தில் வரும்)//
இது நம்ம லைப்பில அடிக்கடி நடைக்கிற மேட்டர் ஆச்சே
அண்ணே காலையில உங்க பதிவ படிச்சிடேன் அனால் கருத்துகூற முடியல்ல
காரணம் வேலைத்தளத்தில இருந்து போன் மூலம் படிச்சேன என்னோட மேற்பார்வையாளர் பார்த்துட்டாரு அப்புறம் என்ன நோண்டி நோங்கேடுத்திட்டாறு
சகோ நம் தமிழர்களின் தமிழ்ல இருந்து நொண்டி என்ற வார்த்தையினை எடுத்து நல்லாவே நொண்டி இருக்கீங்க
நோண்டி பற்றி நோண்டி நோண்டி வரலாற்று பதிவு போட்டு நோண்டியான நிரூபன் வாழ்க் வளர்க!!!
நொங்கு திண்னவன் தப்பிச்சுகிட்டான், நோண்டி திண்னவன் மாட்டிகிட்டான் - இது எங்கள் ஊர் பக்கம் சொல்லும் பழமொழி
அரசியல் நமக்கு கொஞ்சம் தூரம்...
அட... அன்று சின்பசலுக சிலபேர் எனக்கு மாமரத்தை காட்டி முயல் நிற்குது பாருங்க அங்கிள் என்றாங்கள். நானும் முயல் என்பது விளங்காமல் மேலே பார்க்கும்போது..
ஆ...... நோண்டி ..நோண்டி அங்கிளுக்கு நோண்டி எண்டாங்களப்பா
நோண்டியவன் ஓடிபுட்டான்...பாத்தவன் மாட்டிக்கிட்டான்!
"நோண்டி" க்கு இத்தனை அர்த்தங்களா?
நானும் வந்துட்டேன் பாஸ்....
அடடா இதுதான் மேட்டரா?
நானும் என்னவோ ஏதோ என்று பெருசா எதிர்பார்த்து வந்தா...................................
சம்மந்தமே இல்லாம நம்ம தளபதி படத்த எதுக்கு போட்டிருக்கிறீங்க பாஸ்?
//ஐயா வாங்க! அம்மா வாங்க! உறவுகளே வாங்க! மற்றும் அனைவரும் வாங்க!
இவ்ளோ தூரம் வந்திட்டீங்க எல்லே, அப்புறம் என்ன பார்க்கிறீங்க. கீபோர்ட்டை தட்டி கமெண்டை போட்டிட வேண்டியது தானே!!!///
ஹி ஹி... கீபோர்ட்டை தட்டினா கமெண்ட் வந்திருமா பாஸ்.... நானும் அரை மணி நேரமா வச்சு தட்டு தட்டுன்னு தட்டுறன்... ஒன்னுமே வரல்லயே....
//ஈழத்து அரசியல் என்பது மனிதாபிமானமற்ற மனிதர்களது அரசியல்///
பாஸ் பாத்து
ஏன்னா நானும் அரசியலுக்கு வரப்போறன்
ஹி...ஹி...ஹி
//நோண்டி எனும் சொல்லிற்கான பொருள் விளக்கங்கள் இடம், பொருள், ஏவல் எனும் மூன்றினையும் அடிப்படையாகக் கொண்டு வேறுபட்டுக் கொள்ளும்.//
ஆஹா அண்ணன் இலக்கியத்துக்க கால் வச்சுட்டாரு.. இதுக்குமேல நாம இங்க இருக்கிறது தப்பு
//எடுத்துக் காட்டாக,
*மச்சான் நாங்கள் அந்தப் பிகருக்குப் பின்னால போறது வீட்டிற்கு மட்டும் தெரிஞ்சுது, செம நோண்டி மச்சான்//
பாஸ்.. உங்க பதிவில பிகரு என்ற வார்த்தை எப்பிடியாவது வந்திரும்... ஹி ஹி எப்பிடி பாஸ்?
ஒருத்தரும் மூக்கை "நோண்டுறது"/"தோண்டுறத"ப் பற்றி எழுதேல்ல!பொறுத்துப்,பொறுத்துப் பாத்திட்டு நான் எழுதியிருக்கிறன்!விமர்சியுங்கோ!!!!
சரியான நொண்டிப் பதிவு
சாரி ஃபார் லேட் கம்மிங்க்
நோண்டிப் பதிவு நொண்டிப் பதிவு என்று டைப் ஆகிவிட்டது . மன்னிக்கவும்
Post a Comment