பிள்ளை பிடிகாரர் பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்தப் பிள்ளை பிடிகாரர் பற்றிய செய்திகளைக் கேட்டாலே அதிர்ச்சியாகக் தான் இருக்கும். கூடவே பயத்தோடு கூடுய நடுக்கமும் ஏற்பட்டு விடும்.
சிறு வயதில் எமது சுட்டித் தனத்தை அடக்கும் வண்ணம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ‘அந்தா வாசலைப் பார், பிள்ளை பிடிகாரன் வாற சத்தம் கேட்குது’ என்று சொன்னாலே போதும், பயந்து நடுங்கி வீட்டில் அம்மாவின் சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வோம். ஆனால் கால மாற்றத்தில் இந்தப் பிள்ளை பிடிகாரரின் பெயரைக் கேட்டாலே காற் சட்டையுடன் சிறு நீர் போகக் கூடிய பயந்த நிலைக்கு நாமெல்லாம் தள்ளப்பட்டு விட்டோம்.
இலங்கை மக்களைப் பொறுத்த வரை சிறுவர்கள் சுட்டித் தனம் புரிகையில், அவர்களை மிரட்டிப் பயமுறுத்தி அவர்களின் குறும்புகளை அடக்க பிள்ளை பிடிகாரன், உம்மாண்டி முதலிய சொற்களைப் பயன்படுத்துவார்கள்.
’உம்மாண்டி சாக்குப் பையோடு வாறார், உன்னையைப் பிடிச்சுக் கொண்டு போடுவார்’ என்று ஒரு சுட்டியைப் பார்த்துச் சொன்னாலே போதும், அந்தக் குழந்தை அடுத்த நிமிடமே ஓடி ஒளிந்து கொள்ளும்.
தமிழர் தரப்பின் விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்த காலப் பகுதியான 1987ம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் இலங்கையில் வாழும் ஒவ்வோர் மக்களும் அச்சத்துடனும் பீதியுடனும் உச்சரிக்கும் ஒரு வார்த்தையாக இந்தப் புள்ள புடிகாரங்க எனும் சொல் திரிபடைந்து கொள்கிறது.
அடையாளம் தெரியாத நபர்களாக(Unidentified persons) ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களது வீடுகளிற்கு நுழைந்து பல இளைஞர்களை வெள்ளை வானில் துப்பாக்கி முனையில் கடத்திப் பின்னர் கொலை செய்து வீசும் இரக்கமற்ற மனிதர்களைத் தான் தமிழ் மக்கள் பிள்ளை பிடிகாரங்க என்று அழைக்கத் தொடங்கினார்கள். இதற்கான காரணம்,
*இந்தப் பிள்ளை பிடிகாரங்களை இலகுவில் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத மாதிரி முகத்தினைக் கறுப்புத் துணியால் கட்டி இருப்பார்கள்.
*இனந் தெரியாத நபர்களாக ஆட்களைக் கடத்திக் கொலை செய்யும் நோக்கோடு வரும் நபர்களினைப் பற்றிய விபரங்கள் தெரிந்தும் சமூகத்தின் முன்னே- அல்லது பொது இடங்களில் அவர்களைப் பெயர் சுட்டி அழைக்க முடியாத துன்ப நிலை- பெயர் சுட்டி அழைத்தால் அந் நபர்களைக் காட்டிக் கொடுத்தால் தாமும் கொலை செய்யப்படுவோம் எனும் அச்சம் மக்கள் மனங்களில் இயல்பாகவே ஒட்டிக் கொண்டமை.
*இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வட கிழக்குப் பகுதியில் மட்டும் பரவி இருந்த உயிரோடு ஆட்களைக் கடத்திக் கொலை செய்யும் நிலமை பிற் காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது.
*வட கிழக்குப் பகுதிகளில் இடம் பெற்ற இனந் தெரியாத நபர்களின் ஆட் கடத்தல், கொலைச் செயற்பாடுகள் 2005ம் ஆண்டிலிருந்து ‘குறித்த ஒரு இனத்தினது இளைய சமூகத்தினை(15-50 வயதுடைய மக்களினை) அடக்கும் நோக்கோடும், இளையவர்களின் தொகையினைக் குறைக்கும் நோக்கோடும் தான் அரங்கேறின.
*2005ம் ஆண்டினைத் தொடர்ந்து இந்தப் பிள்ளை பிடிகாரர்களின் நோக்கம் அடையாளம் தெரியாத நபர்களாக வந்து கப்பம் கோருதல். ஆட்களைக் கடத்தி மறைத்து வைத்து பெருந் தொகைப் பணத்தினை வாங்குதல். வீடு புகுந்து ஆயுத முனையில் திருடுதல் எனப் பல வடிவங்களில் மாற்றம் பெற்றது.
*இலங்கையின் ஒரு சில பகுதிகளில் மனிதர்களைக் கடத்தி உடல் அவையங்களான கண் , சிறு நீரகம் முதலியவற்றை வெளி நாட்டிற்கும், உள் நாட்டிற்கும் விற்பனை செய்யும் நோக்கோடும் இந்த ஆட் கடத்தல் சம்பங்கள் நடை பெற்றுள்ளன.
*விடுதலைப் போராட்டத்திற்காகவும், கட்டாய ஆட்சேர்ப்பிற்காகவும் தமிழ் மக்களது விடுதலை வேண்டிப் போராட்டம் இடம் பெற்ற பகுதிகளில் 2008ம் ஆண்டினைத் தொடர்ந்து வேறோர் வடிவில் பிள்ளை பிடிகாரர் பிறந்து கொள்கிறார்கள்.
வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்கு வேண்டும் எனும் கொள்கை அடிப்ப்படையில் வெள்ளை வான்கள் மூலம் புலிகளது கட்டுப் பாட்டின் கீழிருந்த வன்னிப் பகுதியில் புலிகளால் இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களையும் மக்கள் பிள்ளை பிடிகாரர் என்றே அழைத்தார்கள்.
*பிள்ளை பிடிகாரர் கடத்தலுக்குப் பயன்படுத்தும் வாகனம் வெள்ளை நிறத்தில் இருப்பதால், மக்கள் வெள்ளை வான் மர்ம மனிதர்கள் என்றும் இவர்களை அழைக்கத் தொடங்கினார்கள்.
அரசியல் விடயங்களை அதிரடியாகத் தமிழ் நாட்டில் எழுதினால் ‘ஆட்டோ வீட்டிற்கு வரும் எனும் அச்சம் இருப்பது போல,
இன்றும் ஈழத்தில் ’வெள்ளை வான் இரவு வீட்டிற்கு வரும் எனும் அச்சமும் இருக்கிறது.
டிஸ்கி: தொடர்ச்சியாக என் பதிவுகளுக்கு நான் வைத்து வரும் அசிங்கமான, இடக்கு முடக்கான தலைப்புக்களை இனிமேல் பதிவுகளுக்கு வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். பல வாசக நெஞ்சங்களிற்கு இந்தத் தலையங்கங்கள் காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக உள்ளங்கள் பலரது அன்புக் கட்டளைக்கமைவாக இன்று முதல் என் பதிவுகளுக்கு நல்ல தலைப்புக்களை வைப்பதாகத் தீர்மானித்துள்ளேன்.
நான் பதிவெழுதத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தனிக் கடையில் ஈ கலைக்க வேண்டிய நிலமையில் இருந்த காரணத்தால் தான் கொஞ்சம் விவகாரமான-விபரீதமான தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைக்கத் தொடங்கினேன். ஆகவே இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
94 Comments:
நானா முதல்
ஹப்பி ஹப்பி
இது எனக்கு கிடைச்சு இருக்கிற ரெண்டாவது வடை lol
:)))
@துஷ்யந்தன்
நானா முதல்
ஹப்பி ஹப்பி//
சந்தேகமே இல்லை.
நீங்க தான் முதல்.
வாங்க! வருக வருக என வரவேற்கிறேன்..
//விடுதலைப் போராட்டத்திற்காகவும், கட்டாய ஆட்சேர்ப்பிற்காகவும் தமிழ் மக்களது விடுதலை வேண்டிப் போராட்டம் இடம் பெற்ற பகுதிகளில் 2008ம் ஆண்டினைத் தொடர்ந்து வேறோர் வடிவில் பிள்ளை பிடிகாரர் பிறந்து கொள்கிறார்கள்.
வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்கு வேண்டும் எனும் கொள்கை அடிப்ப்படையில் வெள்ளை வான்கள் மூலம் புலிகளது கட்டுப் பாட்டின் கீழிருந்த வன்னிப் பகுதியில் புலிகளால் இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களையும் மக்கள் பிள்ளை பிடிகாரர் என்றே அழைத்தார்கள்//
உங்களுக்கு ரெம்ப தில் பாஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@துஷ்யந்தன்
இது எனக்கு கிடைச்சு இருக்கிற ரெண்டாவது வடை lol
:))//
வடை வாங்குவது ஓக்கே,
பூசைக்குரிய தட்சணையினைத் தரலாமில்ல..
//டிஸ்கி: தொடர்ச்சியாக என் பதிவுகளுக்கு நான் வைத்து வரும் அசிங்கமான, இடக்கு முடக்கான தலைப்புக்களை இனிமேல் பதிவுகளுக்கு வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். பல வாசக நெஞ்சங்களிற்கு இந்தத் தலையங்கங்கள் காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக உள்ளங்கள் பலரது அன்புக் கட்டளைக்கமைவாக இன்று முதல் என் பதிவுகளுக்கு நல்ல தலைப்புக்களை வைப்பதாகத் தீர்மானித்துள்ளேன்//
அப்போ அந்த கிளு கிளு தலைப்பை எல்லாம் இனி காண முடியாதா??
அவ்வ்வ்வவ்
@துஷ்யந்தன்
உங்களுக்கு ரெம்ப தில் பாஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//
அடிங். எல்லாமே நீங்க இருக்கிறீங்க எனும் நம்பிக்கையில் தான்.
ஹி...ஹி...
உள்ளே போகும் போது ஒன்னாப் போவமில்ல.
இது எப்பூடி?
@துஷ்யந்தன்
அப்போ அந்த கிளு கிளு தலைப்பை எல்லாம் இனி காண முடியாதா??
அவ்வ்வ்வவ்//
அப்போ, இனிமே நீங்க எல்லாம் என் ப்ளாக்கிற்கு வர மாட்டீங்களோ?
//நிரூபன் said...
@அடிங். எல்லாமே நீங்க இருக்கிறீங்க எனும் நம்பிக்கையில் தான்.
ஹி...ஹி...
உள்ளே போகும் போது ஒன்னாப் போவமில்ல.
இது எப்பூடி?//
ஆசை ஆசையா பிரஞ்சு சிட்டிசன் எடுத்து வைச்சு கொண்டு அடுத்த வருஷம் உங்க வரலாம் எண்டு இருக்கான்,
அதுக்குள்ள இப்புடியா..?? அவ்வ்
பிள்ளை பிடிகாரங்க பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! ///
வணக்கம் நிரூ!
வித்தியாசமான தலைப்பு! வழக்கத்துக்கு மாறானது! என்னாச்சு? மாத்தி கீத்தி யோசிச்சிங்களா?
//நிரூபன் said...
வடை வாங்குவது ஓக்கே,
பூசைக்குரிய தட்சணையினைத் தரலாமில்ல..//
நீங்க வடை தரமா விட்டாலும் நாங்க வந்து எங்க தட்சணைய வைச்சுட்டு போறனாங்கள் பாஸ்.
நச்சுன்னு நாலு கமெண்ட்ஸ் போட்டுடே தரலாம் எண்டு இருந்தேன்
இதோ தந்துட்டான் பாஸ்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் நிரூ!
வித்தியாசமான தலைப்பு! வழக்கத்துக்கு மாறானது! என்னாச்சு? மாத்தி கீத்தி யோசிச்சிங்களா?//
வணக்கம் மிஸ்டர் ஓட்ட வடையாரே!
மாத்தி யோசிக்கலை..
நம்ம ரசிகங்க மீண்டும் என்னை
நான் ப்ளாக் தொடங்கிய ஆரம்ப காலப் பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
இனிமே நோ கில்மா, கிளு கிளுப்பு தலைப்பு.
எல்லாம் நம்ம ரசிகர்களின் அன்புக் கட்டளை தான்.
பிள்ளை பிடிகாரர் பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்தப் பிள்ளை பிடிகாரர் பற்றிய செய்திகளைக் கேட்டாலே அதிர்ச்சியாகக் தான் இருக்கும். கூடவே பயத்தோடு கூடுய நடுக்கமும் ஏற்பட்டு விடும்./////
உண்மைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், கடத்தல்காரர்கள் கடத்திக்கொண்டே இருப்பார்கள்/ அரசாங்கமோ மவுனமாக இருக்கும்!
வணக்கம் நிரூ!
வித்தியாசமான தலைப்பு! வழக்கத்துக்கு மாறானது! என்னாச்சு? மாத்தி கீத்தி யோசிச்சிங்களா?//
வணக்கம் மிஸ்டர் ஓட்ட வடையாரே!
மாத்தி யோசிக்கலை..
நம்ம ரசிகங்க மீண்டும் என்னை
நான் ப்ளாக் தொடங்கிய ஆரம்ப காலப் பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
இனிமே நோ கில்மா, கிளு கிளுப்பு தலைப்பு.
எல்லாம் நம்ம ரசிகர்களின் அன்புக் கட்டளை தான்.
June 13, 2011 4:27 AM
அப்ப எங்களப் பார்த்தா என்னமாதிரி தெரியுது?
@துஷ்யந்தன்
நீங்க வடை தரமா விட்டாலும் நாங்க வந்து எங்க தட்சணைய வைச்சுட்டு போறனாங்கள் பாஸ்.
நச்சுன்னு நாலு கமெண்ட்ஸ் போட்டுடே தரலாம் எண்டு இருந்தேன்
இதோ தந்துட்டான் பாஸ்//
எங்கே தந்தீங்க..
அர்ச்சனைத் தட்டு இன்னமும் வெறுமையாகத் தானே இருக்கு.
@துஷ்யந்தன்
ஆசை ஆசையா பிரஞ்சு சிட்டிசன் எடுத்து வைச்சு கொண்டு அடுத்த வருஷம் உங்க வரலாம் எண்டு இருக்கான்,
அதுக்குள்ள இப்புடியா..?? அவ்வ்//
மாப்பு, இரண்டு நண்பர்கள் ஒன்னாப் போனால் தான்,
உட்கார்ந்து யோசித்து நிறையப் புது விடயங்களை ஆலோசனை செய்ய முடியும்.
ஹி...ஹி...
சிறு வயதில் எமது சுட்டித் தனத்தை அடக்கும் வண்ணம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ‘அந்தா வாசலைப் பார், பிள்ளை பிடிகாரன் வாற சத்தம் கேட்குது’ என்று சொன்னாலே போதும், பயந்து நடுங்கி வீட்டில் அம்மாவின் சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வோம். ///////
இப்படி இல்லாத ஒன்றைக் கூறி தங்கள் பிள்ளைகளை வெருட்டும் பெற்றோர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! பிள்ளை வளர்க்க தெரியாவிட்டால் எதுக்கு பெற வேண்டும்?
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பிள்ளை பிடிகாரங்க பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! ///
வணக்கம் நிரூ!
வித்தியாசமான தலைப்பு! வழக்கத்துக்கு மாறானது! என்னாச்சு? மாத்தி கீத்தி யோசிச்சிங்களா?//
ஓட்டவடை ஓனர் அண்ணா உங்களோட சேந்து அவரும் மாத்தி யோசிக்க தொடங்கிட்டாரோ..??
அப்புறம் ஒண்ணு
ப்ரான்சில நாம ரெண்டு பெரும் தான் தூங்காம கமெண்ட்ஸ் அடிச்சுட்டு இருக்கோம் எண்டு நினைக்குறேன்
ஹா ஹா
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உண்மைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், கடத்தல்காரர்கள் கடத்திக்கொண்டே இருப்பார்கள்/ அரசாங்கமோ மவுனமாக இருக்கும்!//
ம்....
பிள்ளையினையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் பழமொழி நன்றாகப் படித்திருப்பார்கள் போல(((;
’உம்மாண்டி சாக்குப் பையோடு வாறார், உன்னையைப் பிடிச்சுக் கொண்டு போடுவார்’ என்று ஒரு சுட்டியைப் பார்த்துச் சொன்னாலே போதும், அந்தக் குழந்தை அடுத்த நிமிடமே ஓடி ஒளிந்து கொள்ளும்.///////
பாவம் அப்பாவிக் குழந்தைகள்!!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்ப எங்களப் பார்த்தா என்னமாதிரி தெரியுது?//
சின்னப் பசங்க மாதிரித் தெரியுது..
ஹி...ஹி...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பிள்ளை பிடிகாரங்க பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! ///
வணக்கம் நிரூ!
வித்தியாசமான தலைப்பு! வழக்கத்துக்கு மாறானது! என்னாச்சு? மாத்தி கீத்தி யோசிச்சிங்களா?//
ஓட்டவடை ஓனர் அண்ணா உங்களோட சேந்து அவரும் மாத்தி யோசிக்க தொடங்கிட்டாரோ..??
அப்புறம் ஒண்ணு
ப்ரான்சில நாம ரெண்டு பெரும் தான் தூங்காம கமெண்ட்ஸ் அடிச்சுட்டு இருக்கோம் எண்டு நினைக்குறேன்
ஹா ஹா
June 13, 2011 4:30 AM???
இப்ப நேரம் நள்ளிரவு ஒருமணி 2 நிமிடம்! விடிய வேலைக்குப் போகவெணும்! இண்டைக்கு மழையில நனைஞ்சிட்டன் துஷி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இப்படி இல்லாத ஒன்றைக் கூறி தங்கள் பிள்ளைகளை வெருட்டும் பெற்றோர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! பிள்ளை வளர்க்க தெரியாவிட்டால் எதுக்கு பெற வேண்டும்?//
அதைப் பெற்றோர் கிட்டத் தானே கேட்கனும் பாஸ்..
ஹி...ஹி...
@துஷ்யந்தன்
அப்புறம் ஒண்ணு
ப்ரான்சில நாம ரெண்டு பெரும் தான் தூங்காம கமெண்ட்ஸ் அடிச்சுட்டு இருக்கோம் எண்டு நினைக்குறேன்
ஹா ஹா//
ஏன் இரண்டு பேரும் சேர்ந்து கிளப்பிங் போறனீங்களோ?
@துஷ்யந்தன்
அப்புறம் ஒண்ணு
ப்ரான்சில நாம ரெண்டு பெரும் தான் தூங்காம கமெண்ட்ஸ் அடிச்சுட்டு இருக்கோம் எண்டு நினைக்குறேன்
ஹா ஹா//
ஏன் இரண்டு பேரும் சேர்ந்து கிளப்பிங் போறனீங்களோ?
அப்ப எங்களப் பார்த்தா என்னமாதிரி தெரியுது?//
சின்னப் பசங்க மாதிரித் தெரியுது..
ஹி...ஹி...
June 13, 2011 4:32 AM
சின்னப் பசங்களுக்குத்தானே கில்மா விஷயங்கள் தேவை! அப்ப இனிமேல் எங்களை ஏமாத்தப் போறீங்களோ? நான் ப்ளாக் பக்கமே தலை வச்சு படுக்கமாட்டன்! சொல்லிப்போட்டன்
இப்படி இல்லாத ஒன்றைக் கூறி தங்கள் பிள்ளைகளை வெருட்டும் பெற்றோர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! பிள்ளை வளர்க்க தெரியாவிட்டால் எதுக்கு பெற வேண்டும்?//
அதைப் பெற்றோர் கிட்டத் தானே கேட்கனும் பாஸ்..
ஹி...ஹி...
June 13, 2011 4:33 AM
அதான் உங்களிடம் கேட்கிறேன்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
சின்னப் பசங்களுக்குத்தானே கில்மா விஷயங்கள் தேவை! அப்ப இனிமேல் எங்களை ஏமாத்தப் போறீங்களோ? நான் ப்ளாக் பக்கமே தலை வச்சு படுக்கமாட்டன்! சொல்லிப்போட்டன்//
இனிமே ஏமாற்ற மாட்டேன், நான் பதிவில் ஏதும் எழுதுவதில்லையே,
தலைப்பில் தானே அப்பிடி இப்பிடிப் போடுறேன்.
ஹி...ஹி...
அப்புறம் ஒண்ணு
ப்ரான்சில நாம ரெண்டு பெரும் தான் தூங்காம கமெண்ட்ஸ் அடிச்சுட்டு இருக்கோம் எண்டு நினைக்குறேன்
ஹா ஹா//
ஏன் இரண்டு பேரும் சேர்ந்து கிளப்பிங் போறனீங்களோ?
June 13, 2011 4:33 AM
ஓ போறனாங்கள்! விடிய விடிய நல்லா ஆட்டம் போடுவம்!
கொய்யாலே கடுப்பை கிளப்பாதே! ஒழுங்கா குளிச்சு முழுகவே நேரமில்லை! இதுக்க கிளப்பிங் வேற?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அதான் உங்களிடம் கேட்கிறேன்//
நானே பொண்ணு கிடைக்காமல் அலைஞ்சிட்டிருக்கேன்...நீங்க வேறை.
சின்னப் பசங்களுக்குத்தானே கில்மா விஷயங்கள் தேவை! அப்ப இனிமேல் எங்களை ஏமாத்தப் போறீங்களோ? நான் ப்ளாக் பக்கமே தலை வச்சு படுக்கமாட்டன்! சொல்லிப்போட்டன்//
இனிமே ஏமாற்ற மாட்டேன், நான் பதிவில் ஏதும் எழுதுவதில்லையே,
தலைப்பில் தானே அப்பிடி இப்பிடிப் போடுறேன்.
ஹி...ஹி...
June 13, 2011 4:37 AM
அப்ப அந்த ஏறாவூர் இஞ்சினியர், ரஞ்சினி கவிதை மாதிரி இனி வராதோ?
அதான் உங்களிடம் கேட்கிறேன்//
நானே பொண்ணு கிடைக்காமல் அலைஞ்சிட்டிருக்கேன்...நீங்க வேறை.
June 13, 2011 4:37 AM
அது கலியாணம் கட்ட எல்லோ? நான் சொன்னது புள்ளை பெறுறுறது சம்மந்தமா
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்ப அந்த ஏறாவூர் இஞ்சினியர், ரஞ்சினி கவிதை மாதிரி இனி வராதோ?//
அதெல்லாம் வரும் பாஸ்,
ஆனால் தலைப்புத் தான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
ஹி...ஹி...!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அது கலியாணம் கட்ட எல்லோ? நான் சொன்னது புள்ளை பெறுறுறது சம்மந்தமா//
புள்ள பெறுவதை ஏன்யா என் கிட்ட கேட்கனும்?
*இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வட கிழக்குப் பகுதியில் மட்டும் பரவி இருந்த உயிரோடு ஆட்களைக் கடத்திக் கொலை செய்யும் நிலமை பிற் காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது.//////
பழைய சம்பவங்கள நினைச்சு பார்க்கவே பயமாஇருக்குது!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஓ போறனாங்கள்! விடிய விடிய நல்லா ஆட்டம் போடுவம்!
கொய்யாலே கடுப்பை கிளப்பாதே! ஒழுங்கா குளிச்சு முழுகவே நேரமில்லை! இதுக்க கிளப்பிங் வேற?//
பொதுச் சபையில் உண்மையினை ஒத்துக் கொண்ட ஓட்ட வடையின் நேர்மை வாழ்க!
அது கலியாணம் கட்ட எல்லோ? நான் சொன்னது புள்ளை பெறுறுறது சம்மந்தமா//
புள்ள பெறுவதை ஏன்யா என் கிட்ட கேட்கனும்?
June 13, 2011 4:42 AM
அப்ப உங்களுக்கு பிள்ளையள் இல்லையோ?
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இப்ப நேரம் நள்ளிரவு ஒருமணி 2 நிமிடம்! விடிய வேலைக்குப் போகவெணும்! இண்டைக்கு மழையில நனைஞ்சிட்டன் துஷி//
ஆஹா
இந்த நேரம் கோம்புட்டரோட இருக்குறதுக்கு இப்போ கண்டா திட்ட போறாங்க
நான் போறேன் பாய் பாஸ் , நாளைக்கு எனக்கு பின்னேரம் மூன்றுக்கு தான் வொர்க்
சோ ஹாப்பி, இன்னைக்கு நானும் மழையில் நனைச்சுட்டன் பாஸ்
சேம் சேம் பப்பி சேம்
அப்புறம் நிருபன் அண்ணாக்கும் பாய்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்ப உங்களுக்கு பிள்ளையள் இல்லையோ?//
அடிங், கலியாணம் கட்டினால் தானே பிள்ளை இருக்கும் மாப்பு.
ஓ போறனாங்கள்! விடிய விடிய நல்லா ஆட்டம் போடுவம்!
கொய்யாலே கடுப்பை கிளப்பாதே! ஒழுங்கா குளிச்சு முழுகவே நேரமில்லை! இதுக்க கிளப்பிங் வேற?//
பொதுச் சபையில் உண்மையினை ஒத்துக் கொண்ட ஓட்ட வடையின் நேர்மை வாழ்க!
June 13, 2011 4:43 AM
இதில நான் ஏமாறமாட்டன்! நான் ஒழுங்கா குளிக்கிறேலை என்பதை ஹைலைட் பண்ணத்தானே இந்த பில்டப்?
அப்ப உங்களுக்கு பிள்ளையள் இல்லையோ?//
அடிங், கலியாணம் கட்டினால் தானே பிள்ளை இருக்கும் மாப்பு.
June 13, 2011 4:46 AM
உதென்ன விசர்கதை! கலியாணம் கட்டாமல் எத்தின பேர் ஊரில புள்ளை பெத்தவை! தெரியாதோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உதென்ன விசர்கதை! கலியாணம் கட்டாமல் எத்தின பேர் ஊரில புள்ளை பெத்தவை! தெரியாதோ?//
என்னா நைனா சின்னப் பையன் கூட கெட்ட கெட்ட வார்த்தை எல்லாம் பேசுறா?
அதுக்காக நானும் பெத்துப் போட்டு, ரோட்டிலை எறியச் சொல்லுறீங்களே?
மச்சி நித்திரை தூக்கி அடிக்குது! விடிய வாறன்
ada அட மேட்டர் புதுசா இருக்கே
@சி.பி.செந்தில்குமார்
ada அட மேட்டர் புதுசா இருக்கே//
இனிய காலை வணக்கம் சகோ, நம்ம ஊரிலை இந்த மேட்டர் என்றாலே எல்லோருக்கும் பயம் பிச்சுக்கிட்டு வரும்.
நிஜமாகவே படிக்கும்போதே பயமாக இருக்கிறது சகோ..
ஹிஹி எனக்கும் அஞ்சாம் ஆண்டுவரைக்கும் பயம்,,
பிடிச்சு கொண்டு போயி கருவாடு போட பயன் படுத்துவாங்க எண்டாங்க ஹிஹி
ஹிஹி மற்றைய பிள்ளை பிடி பற்றி நோ கமெண்ட்ஸ்
ஹட்ஸ் ஒப் டு நிரூபன்..
உங்க டிஸ்கி பத்தி நானே கதைக்கனும் எண்டிருந்தன்...
தொடர்க!!இப்போ நீங்க வேர்ல்ட்டு பெமச்சு தானே..
ஆகவே அப்பிடியான தலைப்புகள் வேண்டாமே..
சகே
ஏதோ சாதாரண செய்தியா இதை என்னால எடுத்துக்க முடியல
எவ்வளவு வேதனைகள் அங்கே
நடந்தன நடந்து கொண்டிருக்கின்றன
இது வேதனையின் வெளிப்
பாடே என புரிந்து கொள்ள முடிகிறது
என்று விடயுமோ--
புலவர் சா இராமாநுசம்
அப்போ சகோ நெசமாவே திருந்திட்டியலா? இனிமே கிளு கிளு இல்லையா..:(((((
நாங்க கொஞ்சம் ஈ கலைச்சுட்டு அப்புறம் நாங்க திருந்திறம்..:))
மாப்புளை நீ பக்கச்சார்பில்லாம இருக்குரதுதான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே..
வெள்ளைவான ஓட்டுரவங்கள் மாரிட்டிருந்தாலும் தமிழ்மக்களுக்கு வெள்ளைவான் என்கிறது வாழ்க்கையோட துரத்துற ஒரு கொலைகாரன்.
படிக்கும் போதே மனம் பதை பதைக்கிறதே , அதை சந்தித்த அல்லது சந்தித்து கொண்டிருக்கிற மனிதர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என என்னும் போதே நெஞ்சை பிசைகிறது.
இந்த வெள்ளை வேனைப் பற்றி பல முறை பல பத்திரிக்ககளின் வாயிலாக படித்திருந்தாலும் நேரடியாக பார்த்த உங்களின் வார்த்தைகளில் படிக்கும் போதே அதன் வீரியம் இன்னும் அதிகமாகிறது சகோ
இதுவரை அந்த வேன் இளைஞர்களை அழிக்கத்தான் என எண்ணி இருந்தேன் அவர்கள் உறுப்புகளை கடத்தி பணம் பண்ணுகிறார்கள் என்பது புதிய செய்தி. இவர்களை எல்லாம் ஒண்ணுமே பண்ணமுடியாதா சகோ. தமிழர்கள் நான் கேட்பார் அற்றவர்களா
ரத்தம் கொதிக்கிறதே சகோ
சிறு நீர் போகக் கூடிய பயந்த நிலைக்கு நாமெல்லாம் தள்ளப்பட்டு விட்டோம்.//
ஹி ஹி.. அப்படியா பண்ணின நீ.!! வெரி பேட்
’உம்மாண்டி சாக்குப் பையோடு வாறார், உன்னையைப் பிடிச்சுக் கொண்டு போடுவார்’ //
அந்த உம்மாண்டி தான் மக்களே இந்த பதிவ போட்டது.. இவர காமிச்சு தான் குழந்தைகள பயமுறுத்துவாங்கனு நேத்து தான் இவரு சொன்னாரு..
அடையாளம் தெரியாத நபர்களாக(Unidentified persons)//
ஆஹா அருமையான கண்டுபிடித்து.. எப்படி அந்த தமிழ் சொல்லுக்கு இதுதான் ஆங்கில வார்த்தை என்று கண்டுபிடித்தீர் நிரூ..? ஹி ஹி
இன்றும் ஈழத்தில் ’வெள்ளை வான் இரவு வீட்டிற்கு வரும் எனும் அச்சமும் இருக்கிறது.//
நானும் காமெடி பதிவோனு நினச்சுட்டேன்
இன்று முதல் என் பதிவுகளுக்கு நல்ல தலைப்புக்களை வைப்பதாகத் தீர்மானித்துள்ளேன்.//
அய்யய்யோ.!! நாடு தாங்காதே.!!
@ரஜீவன்:
வித்தியாசமான தலைப்பு! வழக்கத்துக்கு மாறானது! என்னாச்சு? மாத்தி கீத்தி யோசிச்சிங்களா?//
சத்தியமா சொல்லு நிரூபன் இத பத்தி உன்கிட்ட சொல்லலனு.!? ஏன் இந்த வேல.!?
இலங்கையின் ஒரு சில பகுதிகளில் மனிதர்களைக் கடத்தி உடல் அவையங்களான கண் , சிறு நீரகம் முதலியவற்றை வெளி நாட்டிற்கும், உள் நாட்டிற்கும் விற்பனை //
அதிர்ச்சியா இருக்கு
தைரியம் சொல்லி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் பயமுறுத்தி வளர்க்க கூடாது என குழந்தைகள் நல உளவியளாளர்கள் சொல்கின்றனர்
எந்த சப்ஜெக்ட் தொட்டாலும் அலசி கும்மி காயப்போட்டுடறீங்க
நல்ல பதிவு + நல்ல முடிவு..பல வெளிவராத விஷயங்களை துணிச்சலுடன் சொல்கிறீர்கள்!
சின்னன்ல நாங்க பயந்தம் பிள்ளபிடிகாரருக்கு
பெரிசானாப்பிறகு பயந்தம் வெள்ளவானுக்கு
எல்லாகட்டதிலும் பிடிகாரரின் பரிணாமம் மாறுபட்டவை
வாழ்வே சோர்ந்தொடுங்கி
வதங்கிப் போய்க் கிடக்கிறது!
வாசலிலே வரும் போதே
வயிறு தட்டிப் பசிக்குதென்று
ஆசையாய்க் கேட்கின்ற
அருமை மகன் நேற்றிரவு
வீடு வரவில்லை!
ஏனென்றே புரியாமல்
வீதி எல்லாம் அழுதபடி
திரிகையிலே மூலை ஒன்றில்
சைக்கிளும் செரும்பும் அவன்
கைவார் அறுந்த மணிக்கூடும்
கண்டெடுத்தோம் மற்றபடி
ஓர் முடிவும் தெரியாமல்
உறைந்திருந்தோம்..
போக்கறுந்த
சாத்திரத்தின், சகுனத்தின்
சாப்பிழைப்பு வாழ்விடையே
நெஞ்சினிக்கும் சேதி ஒன்று
நிகழ்ந்த தின்று!
பற்றை ஒன்றில்
உருக்குலைக்கப்பட்டு
உயிராடிக் கொண்டிருக்கும்
இருதயம் மட்டும்
இழுத்திழுத்துத் துடிக்கின்ற
இன்னும் உணர்வறுக்கா
இளம் பெடியன் சாட்சியத்தில்
இரண்டு நாள் முன்பாக
இன்னாரின் வதை வீட்டில்
காற் குதிகள் வெட்டுண்டும்
கை முறிந்தும் மூக்காலே
கொப்பளித்துக் குருதி வர
குளறி விழும் என் மகனை
தப்பிக்க முன்னர்
தான் கண்டதுண்மை
உண்மையென
ஒப்பித்தான் என்னிடத்தில்
உயிர் சிலிர்த்தேன்
உலகமெலாம்
என் வசமென்றானதுவாய்
உணர்ந்தேன்,
வேங்கடவா!
வைத்த நேத்தி வீண் போகவில்லை
வருடங்கள்
பொய்த்தோடி நான்கைந்தாய்ப்
போனாலும், புத்திரனை
கண் முன்னாற் காணாத
கவலை எனைச் சுட்டாலும்
தலை பிடித்து மூக்கிழுத்து
எண்ணைக்குள் தோய்த்தெடுத்து
பார்த்துப் பார்த்து நான்
வளர்த்து விட்ட மகன் உடலம்
கீலம் கீலமாய் கிழிந்து
சிதைவடைந்து
அம்மா! என அவன் அலறும்
குரல் உணர்ந்து என் வயிறு
உள்ளுக்குள் சிதறி
ஒன்று மற்றுப் போனாலும்
யாரேனும் எங்கும்
என் மகனை
அவர்கள் இன்னும்
நார் நாராய்க் கிழித்துப்
போடுகின்ற செய்தியினை
எந்தனுக்குச் சொல்லுங்கள்
மகிழ்ந்திடுவேன்! ஏனென்றால்
’இருக்கின்றான்’ என்பதுவே
இப் பிறப்பில் எந்தனுக்கு
அப்பாவித்தனமான
ஆறுதலாய் ஆகட்டும்..
தி.திருக்குமரன்
--
Balasundaram Nirmanusan
http://www.nirmanusan.blogspot.com/ [English]
http://www.nirmanusan.wordpress.com/ [Tamil]
அதிர்ச்சி தகவல்கள் சகோ ...கூடவே எனக்கும் கூட
இந்த தலைப்பு வைப்பதில் குற்ற உணர்வு இருக்காதான் செய்கிறது ...விரைவில் நானும் திருந்தி விடுகிறேன்
தலைப்பு விஷயத்தை மாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி நிரூ பதிவு மிக அருமை
பல புதிய அதிர்ச்சிச் செய்திகளை உங்கள் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்கிறேன்!
வெள்ளை வேன் பற்றி பத்திரிக்கைகளில் படித்து இருக்கிறேன். விரிவாக சொன்னதற்கு நன்றி.
நிரூபன், டிஸ்கியில் சொன்னது போல இனி நல்ல தலைப்புகளை மட்டும் வைத்து எழுதினால் நன்றாக இருக்கும். இதை தங்களுக்கு சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிறர் உரிமையில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை என எண்ணி மெளனமாக இருந்தேன். ஆபாச வார்த்தைகள், கவர்ச்சி படங்கள், பதிவிற்கு சம்மந்தம் இல்லாத பரபரப்பு தலைப்புகள், 100% காப்பி பேஸ்ட் பதிவு, அர்த்தமற்ற தனிமனித தாக்குதல் போன்றவை இல்லாமலே பதிவுலகில் இளைய தலைமுறை வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பது எனது அவா. மூத்த பதிவர்கள் தெரிந்தே செய்கின்றனர். அது அவர்கள் விருப்பம். எப்போதாவது ஒரு முறை இவ்வாறு செய்தால் பரவாயில்லை. அடிக்கடி இப்படி செய்வதுதான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதை பார்த்து புதிய மற்றும் இளம்பதிவர்களும் செய்வது வருத்தமாக உள்ளது.
சினிமாவோ, கவிதையோ, சமையலோ, வாழ்வியலோ.. எவ்வகை பதிவாக இருப்பினும் நாகரிக எல்லைக்கோட்டை தாண்டாமல் இருத்தல் வேண்டும் எனும் எண்ணத்துடன் சில இளம் பதிவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். இதை வலியுறுத்தி என் பதிவுலக நண்பர்களுடன் பேசினேன். அந்த இளம் பதிவர்கள் அதற்கு இசைவு தெரிவித்து உள்ளனர். தாங்களும் அதற்கு வலு சேர்த்தால் பதிவுலகில் அடுத்த தலைமுறையாவது ஆரோக்யமாக இருக்கும். அதைத்தான் தங்கள் டிஸ்கி உணர்த்துகிறது. மிக்க மகிழ்ச்சி!
மாப்ள பகிர்வு அருமை....பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி!
வாழ்த்துக்கள் நிரூபன்... நாற்று பயனுள் ளது தான். அதனால் தலைப்பால் யாரையும் கவர வேண்டியதில்லை. நல்ல முடிவு... (அதுக்காக நல்ல பிள்ளையாயிட்டீங்க எண்டு சொல்ல வரல்ல... ஹீ..ஹீ)
பதிவு நல்லது.. தமிழன் வாழ்வில் இந்த விடயத்தில் எல்லாம் சனி பெயர்ச்சி, வியாழ்ன் மாற்றம் எல்லாம் கிடையாது...பிறப்பு முதல் இறப்பு வரை பிள்ளை பிடிகாரர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
///
நான் பதிவெழுதத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தனிக் கடையில் ஈ கலைக்க வேண்டிய நிலமையில் இருந்த காரணத்தால் தான் கொஞ்சம் விவகாரமான-விபரீதமான தலைப்புக்களைப் பதிவுகளுக்கு வைக்கத் தொடங்கினேன்
///
உண்மைய ஒத்துகிட்ட தலைக்கு ஒரு ஓ போடு
///’உம்மாண்டி சாக்குப் பையோடு வாறார், உன்னையைப் பிடிச்சுக் கொண்டு போடுவார்’ // யு பிளேட் சேம் பிளேட்...))
///*வட கிழக்குப் பகுதிகளில் இடம் பெற்ற இனந் தெரியாத நபர்களின் ஆட் கடத்தல், கொலைச் செயற்பாடுகள் 2005ம் ஆண்டிலிருந்து ‘குறித்த ஒரு இனத்தினது இளைய சமூகத்தினை(15-50 வயதுடைய மக்களினை) அடக்கும் நோக்கோடும், இளையவர்களின் தொகையினைக் குறைக்கும் நோக்கோடும் தான் அரங்கேறின.// கவனம் பாஸ் வீட்ட பூட்டி வச்சிருங்கோ .... உங்களுக்கும் ஒரு வான் தயாராயிட்டுதாம்...))
///*இனந் தெரியாத நபர்களாக ஆட்களைக் கடத்திக் கொலை செய்யும் நோக்கோடு வரும் நபர்களினைப் பற்றிய விபரங்கள் தெரிந்தும் சமூகத்தின் முன்னே- அல்லது பொது இடங்களில் அவர்களைப் பெயர் சுட்டி அழைக்க முடியாத துன்ப நிலை- பெயர் சுட்டி அழைத்தால் அந் நபர்களைக் காட்டிக் கொடுத்தால் தாமும் கொலை செய்யப்படுவோம் எனும் அச்சம் மக்கள் மனங்களில் இயல்பாகவே ஒட்டிக் கொண்டமை/// அது மட்டுமா சர்வ சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் வந்து நடு ரோட்டில் வச்சு சுட்டு தள்ளிட்டு போவாங்களே .....கொடும என்னன்னா ,ஊருக்கு ஒரு ஆமிகாம் இருக்கு...
///*வட கிழக்குப் பகுதிகளில் இடம் பெற்ற இனந் தெரியாத நபர்களின் ஆட் கடத்தல், கொலைச் செயற்பாடுகள் 2005ம் ஆண்டிலிருந்து ‘குறித்த ஒரு இனத்தினது இளைய சமூகத்தினை(15-50 வயதுடைய மக்களினை) அடக்கும் நோக்கோடும், இளையவர்களின் தொகையினைக் குறைக்கும் நோக்கோடும் தான் அரங்கேறின./// இதில கொடும, இதை சேர்ந்து செய்ததும் சில தமிழ் பினாமிகள் தான்...
உங்க தைரியத்துக்கு ஒரு சபாஸ்..இருந்தாலும் நான் சொன்ன போல வீட்டை நல்லா பூட்டிட்டு இருங்க ...)
மற்றுமொரு அருமையான பதிவு,, நிரூபன். அப்புறம் வாரேன்
ஆனால் கால மாற்றத்தில் இந்தப் பிள்ளை பிடிகாரரின் பெயரைக் கேட்டாலே காற் சட்டையுடன் சிறு நீர் போகக் கூடிய பயந்த நிலைக்கு நாமெல்லாம் தள்ளப்பட்டு விட்டோம்.//
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே.
வித்தியாசமான தலைப்பு!
இன்னொரு வான் வரும் என்று பயத்தில் ஒழிந்து திருந்ததை ஞாபகப் படுத்திவிட்டு இவ்வளவு விசயங்களை ஓட்டைவடையுடன் கும்மியடிக்க எப்படி பாஸ் முடியுது.
(நீங்கள் இப்படி திருந்திவிட்டன் என்று சொன்னாலும் நாங்க நம்ப மாட்டம் ஆப்போட ஆல் வேனும் பாஸ் எத்தனை நாள் தான் ஈ ஓட்டுவது)
பயங்கர நியூஸ் தான் திடுக்கிடும் செய்திகள் இனி நிறைய வருமோ
//*இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வட கிழக்குப் பகுதியில் மட்டும் பரவி இருந்த உயிரோடு ஆட்களைக் கடத்திக் கொலை செய்யும் நிலமை பிற் காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது.//
இதெல்லாம் புதிய விஷயம் சகோ! நன்று.வாழ்த்துக்கள்.
//மனிதர்களைக் கடத்தி உடல் அவையங்களான கண் , சிறு நீரகம் முதலியவற்றை வெளி நாட்டிற்கும், உள் நாட்டிற்கும் விற்பனை செய்யும் நோக்கோடும் இந்த ஆட் கடத்தல் சம்பங்கள் நடை பெற்றுள்ளன.//
என்ன பயங்கரம் ..
அன்றும் இன்றும் என்றும் பிள்ளைப்பிடி காரங்களால் தமிழர்கள் சிக்கித் தவிக்க வெண்டிய தலைவிதி...
நானும் பல நாட்கள் பிள்ளைப்பிடிகாரங்களுக்கு பயந்து பற்றைகளுக்குள் இரவு பகலாக இருந்த காலத்தை உங்கள் பதிவு ஞாபகப்படுத்தியது.
நல்ல பதிவு செல்வா தலைப்புகளை பற்றிய உமது முடிவு வரவேற்க வேண்டியது ! @settaikaaran
உங்க டிஸ்கியில் பல பேரோட கோவம் தெரியுதே சகோ...
சகோ.. புள்ள புடிகிறவங்க இப்படி முகமூடி தான் போடுவாங்களா?
தொடர்ச்சியாக என் பதிவுகளுக்கு நான் வைத்து வரும் அசிங்கமான, இடக்கு முடக்கான தலைப்புக்களை இனிமேல் பதிவுகளுக்கு வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.//நிரூபன், நல்ல கொள்கை. நான் அருவெறுப்பான தலைப்பு இருந்தா அந்தப் பதிவு படிக்கவே மாட்டேன்.
வெள்ளை வான், ஆள் கடத்தல்.... இன்னும் நிறைய எல்லாம் இப்பவும் இருக்கா? இலங்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கும்.
அசிங்கமான, இடக்கு முடக்கான தலைப்புக்களை பதிவுகளுக்கு வைத்து வாசகர்களை ஏமாற்றி ஹிற்ஸ் அள்ளுபவர்களை பதிவுலக பிள்ளை பிடிகாரர் என்று இனிமேல் சொல்லலாமே. உங்களையும் தான் போஸ்.
@யாழ் கணினி நூலகம்
அசிங்கமான, இடக்கு முடக்கான தலைப்புக்களை பதிவுகளுக்கு வைத்து வாசகர்களை ஏமாற்றி ஹிற்ஸ் அள்ளுபவர்களை பதிவுலக பிள்ளை பிடிகாரர் என்று இனிமேல் சொல்லலாமே. உங்களையும் தான் போஸ்.//
ஏன் போஸ் எரிச்சல்படுறீங்க..
என் பதிவுகளின் தலைப்புக்கள் எப்போதுமே பதிவோடு தொடர்புடைய வகையில் தான் இருக்கும்.
சின்னப் புள்ளத் தனாமா பொங்கியெழ முன்னாடி யோசிக்கனும் பாஸ்..
என் பதிவுகளின் தலைப்புக்களை ஆராய்ந்து விட்டு வரலாமில்ல.
அசிங்கமான தலைப்பு வைக்காவிட்டாலும் நாளொன்றுக்கு ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட ஆளுங்க வாறாங்க போஸ்,
அப்புற்மா நான் ஹிற்ஸ் இற்கு ஆசைப்படும் ஆள் இல்லை..
ஹி..ஹி...
ஏன்னா என் சைட் பாரில் ஹிட் கவுண்டரோ, அல்லது மொத்த வருகையாளர்களைக் காட்டும் கவுண்டர்களோ கிடையாதே பாஸ்...
இந்த பதிவ நான் மிஸ் பண்ணிடன்......
உங்க பதிவுகள பிளாக்கர் காட்டுது இல்ல...
Post a Comment