பதிவுலகில் மிக நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. பதிவினைப் படிக்காது பின்னூட்டம் போடும் நபர்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்பது தான். பதிவுலகின் பரபரப்புப் பதிவர்களும், தொழில் நுட்ப ஆய்வாளர்களும் இதற்குரிய விடையினைத் தெரியாதவர்களாய் தங்கள் மண்டையினைச் சொறிந்து, பெல் மூடி போன்ற வழுக்கைத் தோற்றத்தினைத் தமது தலைகளுக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நல் வேளையில், ஒரு புதிய கண்டு பிடிப்பினை நான் உங்கள் அனைவருக்குமாகச் செய்துள்ளேன்! அது என்ன?
அது தான் SMART COMMENT FOUNDER எனப்படும் ஒரு மென் பொருள், மற்றும் ஹார்ட்வேர்- வன் பொருள் இணைந்த சாதனமாகும். பதிவுலகில் பக்கம் பக்கமாக பதிவெழுதினாலும் சரி, பதிவுகள் எழுதப்பட்டு, திரட்டிகளில் இணைக்கப்படுவதற்கு முன்பதாகவே வந்து பின்னூட்டம் போட்டு, பதிவினைப் படிக்காது பதிவின் தலைப்போடு தொடர்புபடுத்திப் பின்னூட்டம் போட்டு விட்டுப் போகும்; உள்ளங்களைக் கண்டறியும் ஒரு அருமையான தொழில் நுட்பம் தான் ‘’மூலக் கருத்தை முகர்ந்து அறி’ எனும் என் தொழில் நுட்பமாகும்.
பல நாட்கள் இரவு பகலாக தூக்கமின்றி உழைத்த எனது உழைப்பின் பயனாக இவ் மென், வன் பொருள் (Soft & Hard -ware) உருவாகியிருக்கிறது. புதிய பதிவர்களிற்கு இந்தப் பதிவரசியல் பற்றி அதிகமாகத் தெரியாது என, நான் பதிவெழுத வந்த காலத்தில் 'சக பதிவர்கள் எனக்குக் கூறிய வசனத்தினை அடிப்படையாக வைத்துத் தான் நான் இந்த ஸ்மார்ட் கமெண்ட் பவுண்டரினைக் கண்டு பிடித்தேன்.
''பதிவெழுதி வெளியிடப்பட்டு ஒரு நிமிடமாக முன்னரே பட படவெனப் படித்து விட்டுப் போடப்படும் பின்னூட்டங்கள் தான் இந்தத் தொழில் நுட்பம் பற்றிய சிந்தனையை என்னுள் தூண்டியது எனலாம்.
இனி, இந்த மென் பொருளின் பயன்பாடுகள் என்ன என்று பார்ப்போம்.
உங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸிமார்ட் கமெண்ட் பவுண்டரின் மூலம்,
*உங்களுடை பதிவில் பின்னூட்டமிட்டிருக்கும் நபர் உங்கள் பதிவினைப் படித்தாரா இல்லையா என்பதனை மணந்து பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
*வடை, வாழைப்பழம், பஜ்ஜி, போண்டா, முதலிய இத்தியாதிப் பொருட்களைத் தமக்குத் தருமாறு பசியோடு வந்து கையேந்தும், உங்கள் பிளாக் நண்பர்களுக்கு, நீங்கள் விரும்பினால் இந்த ஹார்ட் வேர் மூலம் இவ் உணவு வகைகளையே உடனடியாக உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் வாங்கிக் கொடுக்க முடியும்.
*உணவுப் பண்டங்களான வடை, பஜ்ஜி, போண்டா, வாழைப்பழம் முதலியவற்றை பின்னூட்டம் மூலம் கேட்கும் பதிவர்களுக்கு நீங்கள் அவற்றை அன்பளிப்பாக, தானமாக வழங்க விரும்பினால் வழங்கலாம். ஆனல் ’பேய்பால்’(Pay pal) அல்லது கடனட்டை(Credit Card) மூலம் நீங்கள் கட்டணம் செலுத்தும் வசதியுள்ள இணைப்பினை இதற்காக எங்களிடமிருந்து வாங்க வேண்டும்.
*உங்கள் பின்னூட்டங்களுக்குரிய பதில்களை கணினி வசிதியின்றி, உங்கள் பொன் வாயால் நீங்கள் சொல்லச் சொல்ல ஆட்டோமெட்டிக்காக(Automatic) டைப் செய்யும் வசதியும் இந்த சிஸ்டத்தில் உள்ளது.
இவை தான் இந்த ஸ்மார்ட் கமெண்ட் பவுண்டரின் சிறப்பியல்புகள்.
இதனை எப்படிப் பயன்படுத்துவது?
சிறிய புளூடூத் அளவில்(Blue tooth) அளவில் இருக்கும் ஸ்மார்ட் எனப்படும் மைக்ரோ சிப்(Micro Chip) தான் இதில் உள்ள ஹார்ட் வேர்(Hardware) ஆகும். இந்தக் ஹார்ட் வேரானது மூன்று Touch model switch இனைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
*வலது பக்க மேல் மூலையில் உள்ள பட்டனை அழுத்தினால் உங்கள் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டத்தை அனுப்பியவர் பற்றிய விபரங்கள், அவர் உங்கள் பதிவினைப் படித்தாரா இல்லையா எனும் விபரங்கள் கிடைக்க்ப் பெற்று விடும்.
*இடது பக்க மேல் மூலையில் உள்ள பட்டனை அழுத்தி விட்டு, உங்களது பின்னூட்டங்களுக்கான மறு மொழிகளை நீங்கள் அனுப்ப விரும்பினால் போதும், உங்கள் வாயால் நீங்கள் சொல்லத் தொடங்க, அந்த மெஷின் உங்கள் வாயிலிருந்து வரும் ஒலிகளை எழுத்துக்களாக Convert பண்ணி பின்னூட்டமாக மாற்றி பப்ளிஷ் பண்ணி விடும்.
*மேலிருந்து கீழாக உள்ள பட்டனை அழுத்தினால் போதும், உங்களது பதிவினூடாக யார் யார் வடை, வாய்ப்பன், போண்டா, பஜ்ஜி, பாயாசாம் கேட்கிறார்கள் என்பதனை Filter பண்ணி தெள்ளத் தெளிவாக காட்டி விடும்.
உங்களது பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து, மிகவும் பசியாக இருக்கும் ஒரு பதிவருக்கு நீங்கள் வடை, போண்டா, பஜ்ஜி வழங்க விரும்பினால் இந்த ‘மேலிருந்து கீழாக உள்ள பட்டனுடன், இடது பக்க மேல் மூலையில் உள்ள பட்டனையும் சேர்த்து அழுத்தினால் போதும்,
அடுத்த விநாடியே கூகிள் மாப்பின் உதவியுடன்(Google map) அந்தப் பதிவர் எங்கே இருக்கிறார், என அறிந்து, அப் பதிவருக்கான உணவினை பதிவரின் ஊரில் உள்ள சப்பாட்டுக் கடையில் இருந்தே எடுத்து home delivery அடிப்படையில் வெறும் ஐந்தே நிமிடங்களுக்குள் எமது ஸிமார்ட் மெசின் வழங்கி விடும் என்றால் பாருங்களேன்!
இதற்குரிய கட்டணம் மட்டும் உங்களின் கணக்குகளில் இருந்து வசூலிக்கப்படும்.
*இந்த ஸ்மார்ட் கமெண்ட் பவுண்ரடை உபயோகிப்பது எப்படி?
*முதலில் இதற்குரிய மென் பொருளை(Software) உங்கள் கணினியில் Install பண்ன வேண்டும், அதன் பின்னர் Install பண்ணிய புரோகிராமை ஓப்பின் பண்ணி, உங்கள் ப்ளார்க்கர் ஐடி எண், மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.
*இந்தக் ஸ்மார்ட் சிஸ்டத்தின் ஹார்ட்வேரை உபயோகிக்க உங்களிடம் மொபைல் போன் இருக்க வேண்டும். ஆப்பிள் ஐ போன் முதல், அந்தக் கால நோக்கியா 3310 வரை இதற்கு சப்போர்ட் ஆகும் வண்ணம் இந்தக் சிஸ்ரத்தை உருவாக்கியிருக்கிறேன். பின்னர் இந்த ஹார்ட் வேரிலும் நீங்கல் உங்கள் பிளாக் ஐடி, பிளாக்கர் எண் முதலியவற்றை றிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
*இன்னொரு விடயம், இதனை உங்கள் கைகளில் வைத்தே touch model ஆக நீங்கள் பயன்படுத்தி (Use பண்ணி) மகிழலாம்.
*இந்த ஸிமார்ட் சிஸ்டம் தொடர்பான பத்திரிகை, மீடியா நிறுவனங்களுடனான அறிமுகச் சந்திப்பு இன்று மாலை லாஸ் ஏஞ்சலில் அமைந்துள்ள எமது தலையலுவலகத்தில் இடம் பெறவுள்ளது;-))
எங்கள் ஸிமார்ட் சிஸ்டத்தை வாங்குவதாக பிளான் பண்ணி விட்டீர்களா?
விலையோ குறைவு, ஆனால் இதன் விவேகமோ அதிகம்!!
*ஸிமார்ட் ஸிஸ்டத்தை வாங்க வரும் முதல் பத்து வாடிக்கையாளர்களுக்கு 10% வீத விலைக் கழிவும், ஐபி எல் கிறிக்கற்றின் மூன்று நாள் ஆட்டங்களைக் காணும் இலவச வசதிகளும் செய்து தரப்படும்!
*இவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐவருக்கு, எமது ஸிமார்ட்டை பாப்புலர் ஆக்கும் வகையில் நடிகை தப்ஸி, மற்றும் நமீதா எமக்காக நடித்துக் கொடுக்க விருக்கும் விளம்பர சூட்டிங்கை தூரத்தே இருந்து மட்டும் பார்க்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.
*இதன் விலை இலங்கை ரூபாயில் வெறும் 821 ரூபா .49காசுகள் மட்டுமே
இந்தியாவில் இரு நூற்றியைம்பது ரூபா 26காசுகள் மட்டுமே.
சர்வதேச நாடுகளில்,அந் நாட்டினைப் பொறுத்தும், தொடர்பு கொள்ளும் நபரைப் பொறுத்தும் விலை விகிதம் வேறுபடும்!
முகவர்களுக்கும் முன்னுரிமை உண்டு, இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
Smart comment Founder system
Smart Academy Lap
No 251 ஆரிய குளம்
அடங்கா நல்லூர்
யாழ்ப்பாணம்
தொலை பேசி 0094- 7773333444
மின்னஞ்சல் smartcommentno@ smart.com
Web URL: பின்னூட்டமிடுவோர் பின்நகரம்.com
இன்றே முந்துங்கள்! இப் பொழுதே விரையுங்கள்!
கையிருப்பில் குறைந்த ஸ்டொக் இருப்பதால் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
Hurry up., Don't miss your massive offer!
பின்னூட்டங்களில் இனி நிஜ வடை
பிளாக்கில் கமெண்ட் போட்டால் கிடைக்கும்
சூடான கீரை வடை!
|
144 Comments:
உங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸிமார்ட் கமெண்ட் பவுண்டரின் மூலம்,
*உங்களுடை பதிவில் பின்னூட்டமிட்டிருக்கும் நபர் உங்கள் பதிவினைப் படித்தாரா இல்லையா என்பதனை மணந்து பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
ஹி ஹி காமிடி பண்ணாத சகோ
*இந்தக் ஸ்மார்ட் சிஸ்டத்தின் ஹார்வேரை உபயோகிக்க உங்களிடம் மொபைல் போன் இருக்க வேண்டும். ஆப்பிள் ஐ போன் முதல், அந்தக் கால நோக்கியா 3310 வரை இதற்கு சப்போர்ட் ஆகும் வண்ணம் இந்தக் சிஸ்ரத்தை உருவாக்கியிருக்கிறேன். பின்னர் இந்த ஹார்ட் வேரிலும் நீங்கல் உங்கள் பிளாக் ஐடி, பிளாக்கர் எண் முதலியவற்றை றிஜிஸ்டர் செய்ய வேண்டும்
நெசமாத்தான் சொல்லுறேங்களா?...
இந்த ஸிமார்ட் சிஸ்டம் தொடர்பான பத்திரிகை, மீடியா நிறுவனங்களுடனான அறிமுகச் சந்திப்பு இன்று மாலை லாஸ் ஏஞ்சலில் அமைந்துள்ள எமது தலையலுவலகத்தில் இடம் பெறவுள்ளது;-))
ஐயோ... ஐயோ...
@ரேவா
உங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸிமார்ட் கமெண்ட் பவுண்டரின் மூலம்,
*உங்களுடை பதிவில் பின்னூட்டமிட்டிருக்கும் நபர் உங்கள் பதிவினைப் படித்தாரா இல்லையா என்பதனை மணந்து பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
ஹி ஹி காமிடி பண்ணாத சகோ//
அடிங் கொய்யாலா.... பதிவெழுதி பப்ளிஷ் பண்ண முதலே பின்னூட்டமா? என்ன ஒரு வேகம்.
பி.டி உசாவே தோற்று விடுவா போல இருக்கிறதே.
நெசமாத் தான் சகோ....
*இவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐவருக்கு, எமது ஸிமார்ட்டை பாப்புலர் ஆக்கும் வகையில் நடிகை தப்ஸி, மற்றும் நமீதா எமக்காக நடித்துக் கொடுக்க விருக்கும் விளம்பர சூட்டிங்கை தூரத்தே இருந்து மட்டும் பார்க்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல
*இதன் விலை இலங்கை ரூபாயில் வெறும் 821 ரூபா .49காசுகள் மட்டுமே
இந்தியாவில் இரு நூற்றியைம்பது ரூபா 26காசுகள் மட்டுமே.
சர்வதேச நாடுகளில்,அந் நாட்டினைப் பொறுத்தும், தொடர்பு கொள்ளும் நபரைப் பொறுத்தும் விலை விகிதம் வேறுபடும்!
அது சரி கிடைச்சதே ஓசி ப்ளாக் அதுக்கு இவ்ளோ செலவு பண்ணனுமா?...
வடை பிடிகதவங்களுக்கு என்ன கொடுப்ப சகோ...
@ரேவா
நெசமாத்தான் சொல்லுறேங்களா?...//
நெசமாவே தான் சொல்லுறன். இல்லேன்னா இதுக்கு போயி ஒரு விளம்பரம் வேறை போடுவேனா?
உடனே போனைப் பண்ணி ஆர்டர் பண்ணுறதை விட்டுப் புட்டி.. நேரத்தை விரயமாக்குறீங்களே.
@ரேவா
*இவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐவருக்கு, எமது ஸிமார்ட்டை பாப்புலர் ஆக்கும் வகையில் நடிகை தப்ஸி, மற்றும் நமீதா எமக்காக நடித்துக் கொடுக்க விருக்கும் விளம்பர சூட்டிங்கை தூரத்தே இருந்து மட்டும் பார்க்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல//
இதிலை உள் கூத்தெல்லாம் இல்லிங்கோ...
நடுவர்களின் தீர்ப்பும், அழைப்பை மேற்கொள்ளும் நபரின் நேரமும் தான் இதிலை இருக்கு......
ஹி...ஹி..........ஹி........
அடிங் கொய்யாலா.... பதிவெழுதி பப்ளிஷ் பண்ண முதலே பின்னூட்டமா? என்ன ஒரு வேகம்.
பி.டி உசாவே தோற்று விடுவா போல இருக்கிறதே.
நெசமாத் தான் சகோ....
உன் பதிவ பாத்ததும் வந்துட்டேன்...ஹி ஹி
இடது பக்க மேல் மூலையில் உள்ள பட்டனை அழுத்தி விட்டு, உங்களது பின்னூட்டங்களுக்கான மறு மொழிகளை நீங்கள் அனுப்ப விரும்பினால் போதும், உங்கள் வாயால் நீங்கள் சொல்லத் தொடங்க, அந்த மெஷின் உங்கள் வாயிலிருந்து வரும் ஒலிகளை எழுத்துக்களாக Convert பண்ணி பின்னூட்டமாக மாற்றி பப்ளிஷ் பண்ணி விடும்.
இப்போ தான் தெரிஞ்சது இந்த மிசின் டுபாக்கூர்.. ஹி ஹி
@ரேவா
அது சரி கிடைச்சதே ஓசி ப்ளாக் அதுக்கு இவ்ளோ செலவு பண்ணனுமா?//
என்னது,,, கூகிளே என்னோடை ஸிமார்ட் சிஸ்டத்தை அறிஞ்சு ப்ளாக்கை பணம் கட்டி கட்டண சேவையாக அடுத்த மாதம் முதல் மாற்றப் போவதாக தகவல் வேறை சொல்லுது, நீங்க வேற,
எனக்கு வேணாம் பா... என்கிட்ட இதுவரைக்கும் வடை பஜ்ஜி கேட்டு யாரும் வரல...
என்னது,,, கூகிளே என்னோடை ஸிமார்ட் சிஸ்டத்தை அறிஞ்சு ப்ளாக்கை பணம் கட்டி கட்டண சேவையாக அடுத்த மாதம் முதல் மாற்றப் போவதாக தகவல் வேறை சொல்லுது, நீங்க வேற,
சகோ நீ போய் சொல்லுற நான் கண்டு பிடிச்சுட்டேன்...
@ரேவா
இப்போ தான் தெரிஞ்சது இந்த மிசின் டுபாக்கூர்.. ஹி ஹி//
நீங்கள் தான் அந்த ஸிமார்ட் ஸிஸ்டத்தை வாங்கிய முதல் கஸ்டமரா?
சாரி, தெரியாம சொல்லிட்டன், மன்னிச்சிடுங்க...
பதிவர்களே! சகோ ரேவா! எனது ஸிமார்ட் சிஸ்டத்தின் முதல் கஸ்டமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பின்னூட்டங்களை அவர் வாயல் சொல்லச் சொல்லவே, பின்னூட்டங்கள் ஓட்டோ அப்டேற் ஆகிறது... என்ன ஒரு மகிமை. விஞ்ஞானம் வாழ்க..! நிரூபன் நீ எங்கேயோ போயிட்டாய்!
@ரேவா
வடை பிடிகதவங்களுக்கு என்ன கொடுப்ப சகோ...//
வடை பிடிக்காதவங்களுக்கா, பொங்கல், இல்லேன்னா குருவி ரொட்டி, இல்லேன்னா பம்ளிமாஸ்............
இதிலை எது உங்கள் சாய்ஸ்?
@ரேவா
சகோ நீ போய் சொல்லுற நான் கண்டு பிடிச்சுட்டேன்...//
ஒரு இளம் பையன் விஞ்ஞானி ஆகிட்டான் என்று ஒரு வாழ்த்துச் சொல்லுறதை வுட்டிட்டு, நான் பொய் சொல்லுறேனாம். நெசமாத் தான்..
என் ஸ்மார்ட் சிஸ்டம் மேலை சத்தியமா சொல்லுறேன்!
இப்ப ஓகே வா?
சாரி, தெரியாம சொல்லிட்டன், மன்னிச்சிடுங்க...
பதிவர்களே! சகோ ரேவா! எனது ஸிமார்ட் சிஸ்டத்தின் முதல் கஸ்டமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பின்னூட்டங்களை அவர் வாயல் சொல்லச் சொல்லவே, பின்னூட்டங்கள் ஓட்டோ அப்டேற் ஆகிறது... என்ன ஒரு மகிமை. விஞ்ஞானம் வாழ்க..! நிரூபன் நீ எங்கேயோ போயிட்டாய்!
என்னா ஒரு வில்லத்தனம்..
!சகோ கிளம்புறேன்... குட் நைட்..take care
sema sema had a hearty laugh
ஒரு இளம் பையன் விஞ்ஞானி ஆகிட்டான் என்று ஒரு வாழ்த்துச் சொல்லுறதை வுட்டிட்டு, நான் பொய் சொல்லுறேனாம். நெசமாத் தான்..
என் ஸ்மார்ட் சிஸ்டம் மேலை சத்தியமா சொல்லுறேன்!
இப்ப ஓகே வா?
இல்லாதா ஒன்னுக்கு வாழ்த்தாம்... ஹி ஹி போ சகோ... ராத்திரில பகிடி பண்ணிக்கிட்டு.
வடை பிடிக்காதவங்களுக்கா, பொங்கல், இல்லேன்னா குருவி ரொட்டி, இல்லேன்னா பம்ளிமாஸ்............
இதிலை எது உங்கள் சாய்ஸ்?
அது என்ன சமந்தமே இல்லாம பம்ளிமாஸ்....வர வர ஓட்ட வடை கூட சேந்து நீயும் கேட்டு போயிட்ட.. ஹி ஹி
@எல் கே
sema sema had a hearty laugh//
are you still laughing....
Just Have some break, then Start laughing again...
@ரேவா
இல்லாதா ஒன்னுக்கு வாழ்த்தாம்... ஹி ஹி போ சகோ... ராத்திரில பகிடி பண்ணிக்கிட்டு..//
ராத்திரியிலை யாராச்சும் பகிடி பண்ணுவாங்களா? நான் எப்பவுமே சீரியஸ்ஸாத் தான் பேசுவேன். பகிடி பண்ணுறதுக்கு ஒரு நேர காலம் வேணாம்;-))
அப்புறம் நாளைக்கு தினத்தந்தி, தினகரன், தினமலர், மாலை முரசு, த ஹிந்து, இந்தியா டூடே, டைம்ஸ் ஒப் இண்டியா, சண்டே லீடர் எல்லாத்திலையும் இது தான் hot topic..
@ரேவா
அது என்ன சமந்தமே இல்லாம பம்ளிமாஸ்....வர வர ஓட்ட வடை கூட சேந்து நீயும் கேட்டு போயிட்ட.. ஹி ஹி//
பம்ளி மாஸ் என்றால் சத்தியமா எனக்கு அர்த்தமே தெரியாது, ஏதோ ஒரு தமிழ் நாட்டுச் சொல் என்று மட்டும் அறிந்துள்ளேன், தவறாக ஏதாவது இருப்பின் மன்னிக்கவும்.
என்னது அர்த்தம் தெரியாதா?... அது எவ்ளோ பெரிய கெட்ட வார்த்தை தெரியுமா... நாராயணா இந்த நிரூபனை காப்பாத்து... ஹி ஹி போ சகோ இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கே... அப்பறம் என் பின்னோட்டத்தில் ஸ்பெல் மிஸ்டேக் இருக்கு, அத வந்து யாரும் திருத்துறதுக்குள்ள நானே ஒத்துக்கிறேன்.. வரட்டுமா?....நல்ல சிந்தனை.... நல்ல பதிவு சகோ..மனம் லேசாகியது...
சரி,இப்ப சித்திர மாதம்!ஆரியகுளத்தில தண்ணி(அந்த தண்ணி இல்ல!)இருக்கோ?அந்த மென்/வன் பொருள்?!வில கொஞ்சம் கூடத் தான்!பறுவாயில்ல,மக்கள்சுக்கு "பெரிசா"உதவும்!
ஒரே நாள்ல சீரியஸ் மற்றும் காமெடி பதிவா..
ஹி ஹி..
உங்க சாப்ட்வேர் எனக்கு வேண்டாம்..
எனக்கு அவர்கள் இடும் கமண்ட்டுகளில் இருந்தே படித்தாரா இல்லையா என கண்டுபிடிக்கும் தன்மை இருக்கு.!
அவருக்கு பிடிக்கல அதனால படிக்கல.. இருந்தாலும் நம் நெருங்கியவராக இருப்பதாலும், அவர் பதிவுக்கு நாம் வரவேண்டும் என்பதாலும் அப்படி செய்வர்..
இதை பற்றி நான் கவலைபடாததால் எனக்கு உங்க ப்ராடக்ட் வேண்டாம்..
உங்க ப்ராடக்ட்ல ஒரு கேள்வி.. சிலர் பதிவின் தலைப்பை மட்டும் பாக்காமல் பின்னூட்டம் நான்கினை பாத்துவிட்டு கமண்ட் போடுவார்களே.! அதனையும் உங்க ப்ராடக்ட் கண்டுபிடிக்குமா.?
ஹி ஹி.. மத்தபடி நல்ல காமெடி பதிவு மக்கா.. ஒவ்வொரு வரியாக ஆராய்ந்து பதிலளிக்கும் அளவிற்கு இதில் விடயம் இல்லை.. காமெடி மட்டும் தானே.!! ஹி ஹி..
@YOGA.S
சரி,இப்ப சித்திர மாதம்!ஆரியகுளத்தில தண்ணி(அந்த தண்ணி இல்ல!)இருக்கோ?அந்த மென்/வன் பொருள்?!வில கொஞ்சம் கூடத் தான்!பறுவாயில்ல,மக்கள்சுக்கு "பெரிசா"உதவும்!//
சகோதரம், நீங்கள் என்னமோ சொல்ல வர்றீங்க என்று மட்டும் புரிகிறது, ஆனால் அதனைக் கொஞ்சம் விளங்குமாறு சொல்லலாமே?
copyright seekiramaa vaangunga. poiyaana machin,kal virppanaikku vanthuda poguthu. sago
சகோதரம்!பின்னூட்டங்கள் மகிழ்ச்சியேற்படுத்தினாலும் பின்னூட்டங்கள் மட்டுமே எனது நோக்கமல்ல.
எனவே இந்த மிட்டாய் எனக்கு வேண்டாம்:)
@தம்பி கூர்மதியன்
ஒரே நாள்ல சீரியஸ் மற்றும் காமெடி பதிவா..
ஹி ஹி..
உங்க சாப்ட்வேர் எனக்கு வேண்டாம்..//
எங்கள் ஆய்வு கூடத்திலிருந்து(LAB) இரண்டு ஸிமார்ட் ஸிஸ்டம் காணாமற் போனதாக எனது உதவியாளர் அறிவித்துள்ளார். அப்படியாயின் உங்களுக்கு வேண்டாம் தானே;-)))
ஹி...ஹி...........
எனக்கு அவர்கள் இடும் கமண்ட்டுகளில் இருந்தே படித்தாரா இல்லையா என கண்டுபிடிக்கும் தன்மை இருக்கு.!//
ஆனால் இன்றைய புதிய பதிவர்களுக்கு இதெல்லாம் தெரியாது தானே? நான் கூட மூன்று மாதமாக பதிவெழுதுகிறேன். போன வாரம் தான் இந்த வித்தைகளைப் பற்றி அறிந்து கொண்டேன். ஹா......ஹா..ஹி..
அவருக்கு பிடிக்கல அதனால படிக்கல.. இருந்தாலும் நம் நெருங்கியவராக இருப்பதாலும், அவர் பதிவுக்கு நாம் வரவேண்டும் என்பதாலும் அப்படி செய்வர்..//
சரியான கருத்துக்கள் சகோதரம்.
இதை பற்றி நான் கவலைபடாததால் எனக்கு உங்க ப்ராடக்ட் வேண்டாம்..//
ஓகே....உங்களுக்கு ஐபி எல்லை இலவசமாக பார்க்கிற அதிஸ்டம் வேண்டாம் என்று சொல்லுறீங்க. இன்னொரு ஆளுக்கு கொடுத்தால் போச்சுது.
//உங்க ப்ராடக்ட்ல ஒரு கேள்வி.. சிலர் பதிவின் தலைப்பை மட்டும் பாக்காமல் பின்னூட்டம் நான்கினை பாத்துவிட்டு கமண்ட் போடுவார்களே.! அதனையும் உங்க ப்ராடக்ட் கண்டுபிடிக்குமா.?//
ஆமாம், அதனையும் கண்டு பிடிக்கும்,
எப்படித் தெரியுமா? இடது பக்க மேல் மூலையில் உள்ள பட்டனுடன், கீழே உள்ள பட்டனையும் சேர்த்து அழுத்த வேண்டுன்:-)))
ஹ...ஹா..ஹா...
//
ஹி ஹி.. மத்தபடி நல்ல காமெடி பதிவு மக்கா.. ஒவ்வொரு வரியாக ஆராய்ந்து பதிலளிக்கும் அளவிற்கு இதில் விடயம் இல்லை.. காமெடி மட்டும் தானே.!! ஹி ஹி..//
நன்றிகள் சகோதரம்.
நான் தான் பக்க வாத்தியம் போல தெரியுது.மிருதங்க கச்சேரியே கூர்மதியன் போல இருக்குதே:)
@தமிழ்வாசி - Prakash
copyright seekiramaa vaangunga. poiyaana machin,kal virppanaikku vanthuda poguthu. sago//
காப்பி ரைட் எல்லாம் வாங்கியாச்சு, போலிகள் சந்தைக்கு வர சந்தர்ப்பம் குறைவு, காரணம் சகோ எங்கடை தொழில் நுட்ப ரகசியங்களை வெளியிலை நாங்கள் சொல்வதே கிடையாது. நன்றிகள் சகோ.
@தமிழ்வாசி - Prakash
copyright seekiramaa vaangunga. poiyaana machin,kal virppanaikku vanthuda poguthu. sago//
காப்பி ரைட் எல்லாம் வாங்கியாச்சு, போலிகள் சந்தைக்கு வர சந்தர்ப்பம் குறைவு, காரணம் சகோ எங்கடை தொழில் நுட்ப ரகசியங்களை வெளியிலை நாங்கள் சொல்வதே கிடையாது. நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
சகோதரம்!பின்னூட்டங்கள் மகிழ்ச்சியேற்படுத்தினாலும் பின்னூட்டங்கள் மட்டுமே எனது நோக்கமல்ல.
எனவே இந்த மிட்டாய் எனக்கு வேண்டாம்:)//
சகோதரம், உங்களின் நல்ல மனசிற்காக நான் இதனை இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கவுள்ளேன், ஓகே வா?
nirupan ungakiita ippadi oru mokkaiya naan ethirpaarkkavillai.
//வடை, வாழைப்பழம், பஜ்ஜி, போண்டா, முதலிய இத்தியாதிப் பொருட்களைத் தமக்குத் தருமாறு பசியோடு வந்து கையேந்தும், உங்கள் பிளாக் நண்பர்களுக்கு, நீங்கள் விரும்பினால் இந்த ஹார்ட் வேர் மூலம் இவ் உணவு வகைகளையே உடனடியாக உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் வாங்கிக் கொடுக்க முடியும்.//
ஹே ஹே ஹே ஹே ஹே எனக்கே ஆப்பா பிச்சிபுடுவேன் பிச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
//இன்றே முந்துங்கள்! இப் பொழுதே விரையுங்கள்!
கையிருப்பில் குறைந்த ஸ்டொக் இருப்பதால் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்//
கண்டிப்பா உங்க பிளாக்'ல சூனியம் வச்சிருவேன்......[[வடை கிடைக்காமல் போனதுக்காம்]]
@ராஜ நடராஜன்
நான் தான் பக்க வாத்தியம் போல தெரியுது.மிருதங்க கச்சேரியே கூர்மதியன் போல இருக்குதே:)//
ஆமாம்... எல்லோரும் தூங்கப் போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
// தமிழ்வாசி - Prakash said...
nirupan ungakiita ippadi oru mokkaiya naan ethirpaarkkavillai//
பாருய்யா தமில்வாசி நம்மகிட்டே வேலைய காட்டுறார். ஒருநாள் நாம ரெண்டு பெறும் வேடதாங்கல் வாத்தி பிளாக்'கை நாரடிச்சா மாதிரி இவரையும் வடை போண்டா பஜ்ஜி மிளகாய் பருப்பு வெங்காயம்னு போட்டு தாளிச்சிருவோமா...என்ன ரெடிதானே..?
First am really sorry to put comment in english. Am never put comment from mobile. But after reading this post i can't go without put comment.
Am really enjoy this post and still laughing:-)
(sema comedy nka, mobile la irunthu comment poduraku siramama iruku)
அடப்பாவிகளா.!!
எங்கிருந்து தான் யோசிக்கிறாங்களோ.??
சகோ.! நீங்க ஏதாச்சும் மார்க்கெட்டிங் லைன்ல இருக்கீங்களா.?
வணக்கம் சகோதரம்..
சில நாட்களாக பின்னூட்டம் இட இயலவில்லை மன்னிக்கவும்.
இந்த பதிவு உள்குத்து, வெளிக்குத்துக்களுடன் ரசிக்கதக்கதாகவே இருக்கிறது.
mano am redi. oru naal nirupanai mokkai potturuvom
@தமிழ்வாசி - Prakash
nirupan ungakiita ippadi oru mokkaiya naan ethirpaarkkavillai.//
இதை விட செம மொக்கைகளை ஏற்கனவே றிலீஸ் ஆகியிருக்கு சகோ, நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்,
இம் முறைத் தேர்தலில் எல்லாமே இலவசம்!
மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
கேட்டியளே, எனக்கு கலியாணம் நடக்காதாம்!
நினைவில் தத்தளிக்கும் பருவங்கள்! (பாகம் 01)
இப்படி இன்னும் நிறைய அயிட்டங்கள் இருக்கு, நீங்கல் மிஸ் பண்ணீட்டீங்க என்று நினைக்கிறேன்.
நன்றிகள் சகோதரா.
@MANO நாஞ்சில் மனோ
ஹே ஹே ஹே ஹே ஹே எனக்கே ஆப்பா பிச்சிபுடுவேன் பிச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்.....//
அவ்.............முடியலைச் சகோ....சிரிப்பை அடக்க முடியலை....
யாரு சொன்னாங்க உங்களுக்கு ஆப்பு என்று.... பதிவின் முன்னோட்டத்திலை சொல்லியிருக்கேனே...
கம்பனி பொறுப்பேற்காது என்று;-)))
சும்மா ஒரு டைம் பாஸிற்குத் தான் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
கண்டிப்பா உங்க பிளாக்'ல சூனியம் வச்சிருவேன்......[[வடை கிடைக்காமல் போனதுக்காம்]]//
நான் பச்சப் புள்ள.... என்னையைப் போயி இப்படிப் பயமுறுத்தலாமா?
எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்குவம்.......ஓகே...
வன்முறை வேண்டாம்..
@தம்பி கூர்மதியன்
அடப்பாவிகளா.!!
எங்கிருந்து தான் யோசிக்கிறாங்களோ.??
சகோ.! நீங்க ஏதாச்சும் மார்க்கெட்டிங் லைன்ல இருக்கீங்களா.?//
ஆமா....ஆமா........இப்ப ஸ்மார்ட் சிஸ்டத்தை விளம்பரப்படுத்தி விற்கிற மார்க்கட்டிங்கிலை தான் நான் இருக்கேன்:-))
போதுமா?
//ஆமா....ஆமா........இப்ப ஸ்மார்ட் சிஸ்டத்தை விளம்பரப்படுத்தி விற்கிற மார்க்கட்டிங்கிலை தான் நான் இருக்கேன்:-))
போதுமா?//
இவுங்கலாம் திருந்தமாட்டாங்க.. திருந்தவே மாட்டாங்கப்பா.!!
@பாரத்... பாரதி...
வணக்கம் சகோதரம்..
சில நாட்களாக பின்னூட்டம் இட இயலவில்லை மன்னிக்கவும்.//
வாங்க, வாங்க.....
என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிப் புட்டு... கவலையை விடுங்க...கச்சேரியிலை கலக்குங்க சகோதரம்.
@பாரத்... பாரதி...
இந்த பதிவு உள்குத்து, வெளிக்குத்துக்களுடன் ரசிக்கதக்கதாகவே இருக்கிறது.//
ஆஹா..ஆஹா...எதுவா இருந்தாலும் சீக்கிரட்டா பேசி முடிச்சிக்குவம். பப்ளிக்கிலை வேணாம்....
nirupan, naan thavara vidavillai. antha pathivukalai padithullen. aanaa intha maathiriyaana mokkaiyai sonnen. ok,vaa
@தம்பி கூர்மதியன்
/ஆமா....ஆமா........இப்ப ஸ்மார்ட் சிஸ்டத்தை விளம்பரப்படுத்தி விற்கிற மார்க்கட்டிங்கிலை தான் நான் இருக்கேன்:-))
போதுமா?//
இவுங்கலாம் திருந்தமாட்டாங்க.. திருந்தவே மாட்டாங்கப்பா.!!//
மனுசன் கெட்டுப் போகவே இல்லை.. அதுக்கை எப்பிடிப்பா
திருந்துறது:-)))))
@தமிழ்வாசி - Prakash
nirupan, naan thavara vidavillai. antha pathivukalai padithullen. aanaa intha maathiriyaana mokkaiyai sonnen. ok,vaa//
ஓ... நீங்க அப்பிடி வழிக்கு வாறீங்களா..... நன்றிகள் நன்றிகள்....
@தமிழ்வாசி - Prakash
mano am redi. oru naal nirupanai mokkai potturuvom//
எப்பவுமே தனிக் கட்சியா இருந்தால் தொகுதியைப் பங்கிட வேண்டிய தேவை வராது, ஆனால் கூட்டணி வைச்சுக் கிட்டா..................வேணாம் சாமியோ...
நம்மளைக் கூட்டணி சேர்ந்து கும்மப் போறாங்களாம்....
நண்பர்களே தமிழ்மணம் is Sleeping?
enna nirupan, chumma thaan kalaaippukkaaga, vaanga koottani,kku
@தமிழ்வாசி - Prakash
enna nirupan, chumma thaan kalaaippukkaaga, vaanga koottani,kku//
ஒருத்தன் அடிக்கிறதை, தாங்கலாம் சகோ, ஆனால் நீங்களும், சகோ மனோவும் சேர்ந்து நம்மளை வைச்சு கலாய்ச்சா தாங்க முடியாதுங்கோ.............
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இந்த டீல் நல்லா இருக்குதே.... இங்கேயும் ஒண்ணு அனுப்பி வைங்க.... உங்கள் பதிவுகளை முழுவதும் வாசித்து விட்டு பின்னூட்டம் போடும் எங்களுக்கு சிறப்பு சலுகை விலை உண்டா?
சகா... எனக்கு அந்த மென்பொருளை ஓசியில் கொடுக்க முடியுமா? ஹி ஹி...
இதுக்கு பேரு தான் ஓசியில ஓட்டவடை கேக்குறதுங்கிறது
@Chitra
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இந்த டீல் நல்லா இருக்குதே.... இங்கேயும் ஒண்ணு அனுப்பி வைங்க.... உங்கள் பதிவுகளை முழுவதும் வாசித்து விட்டு பின்னூட்டம் போடும் எங்களுக்கு சிறப்பு சலுகை விலை உண்டா?//
ஆம் சிறப்புச் சலுகை இருக்கிறது, எல்லோருக்கும் 10% offer, உங்களுக்கு மட்டும் 5% offer, அத்தோடு ஐந்து வீத அடிப்படையில் ஒரு ஸிமாட் சிஸ்டம் வாங்கினால் Buy one get One Free அடிப்படையில் இன்னொன்று இலவசம்.
இது எப்பூடி:-)))
@டக்கால்டி
சகா... எனக்கு அந்த மென்பொருளை ஓசியில் கொடுக்க முடியுமா? ஹி ஹி...
இதுக்கு பேரு தான் ஓசியில ஓட்டவடை கேக்குறதுங்கிறது//
நோ சகா... முடியவே முடியாது, இது என்ன தேர்தலா இலவசமாக கொடுக்க:-))
எவ்வளவு நாள் கஸ்டப்பட்டு இதை உருவாக்கினேன் தெரியுமா? அட்லீஸ் அரைவாசி விலையிலை தர நான் றெடி.
@டக்கால்டி
சகா... எனக்கு அந்த மென்பொருளை ஓசியில் கொடுக்க முடியுமா? ஹி ஹி...
இதுக்கு பேரு தான் ஓசியில ஓட்டவடை கேக்குறதுங்கிறது//
நோ சகா... முடியவே முடியாது, இது என்ன தேர்தலா இலவசமாக கொடுக்க:-))
எவ்வளவு நாள் கஸ்டப்பட்டு இதை உருவாக்கினேன் தெரியுமா? அட்லீஸ் அரைவாசி விலையிலை தர நான் றெடி.
என்ன சகோதரம் கண்டுபிடிப்புக்கு காப்புறுமை செய்யமறந்துவிட்டீர்கள்.
எங்களுக்கு ஓடியல் கூழ்தான் ஊத்தனும் .
நான் அன்றாடம் நம்மவர் பதிவுகள் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனான். ஆனால் பெரிதாக பின்னூட்டங்கள் இடுவதில்லை ஏனெனில் பின்னூட்டம் இடும் நேரத்திலே இன்னொரு பதிவை கூடுதலாக படித்துவிடலாமே...) ம்ம் சுயநலம் தான் )))))
எவ்வளவு நாள் கஸ்டப்பட்டு இதை உருவாக்கினேன் தெரியுமா? அட்லீஸ் அரைவாசி விலையிலை தர நான் றெடி. //
ரைட்டு அப்போ நான் ஒட்டு மொத்த தமிழ் பதிவர்கள் ஒட்டுக்களை அடகு வைத்து இதை அம்மா கிட்டயோ, இல்ல அய்யா கிட்டயோ கேட்டு வாங்கிக்கிறேன்...
எவ்வளவு நாள் கஸ்டப்பட்டு இதை உருவாக்கினேன் தெரியுமா? அட்லீஸ் அரைவாசி விலையிலை தர நான் றெடி. //
ரைட்டு அப்போ நான் ஒட்டு மொத்த தமிழ் பதிவர்கள் ஒட்டுக்களை அடகு வைத்து இதை அம்மா கிட்டயோ, இல்ல அய்யா கிட்டயோ கேட்டு வாங்கிக்கிறேன்...
மாத்தியோசி நண்பரை போல நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா நிரூபன். கலக்கல் காமடி
நிரூபன்....சரியாச் சொல்லவேணும் இப்ப.நான் வாசிச்சனோ இல்ல வாசிக்கேல்லையா.வாசிச்சா எதுவரைக்கும் வாச்சிசனான்.நீங்க சரியாச் சொல்லாட்டி என்னட்ட ஒரு மெசின் இருக்குத் தெரியுமோ.
எதுக்கெண்டு பிறகு சொல்றன் !
தமிழ்நாடு ஏகபோக உரிமையை நான் வாங்கிக்கொள்ளுகிறேன். மேல் விபரங்கள் பேச எங்கு வரவேண்டும்?
இலங்கை வரவேண்டுமென்றால் உடனடியாக பிளேன் டிக்கட் வாங்கி அனுப்பவும். அப்படியே கைச்செலவுக்காக ஒரு லட்சம் இந்திய ரூபாய் அனுப்பவும். உங்கள் புரொடக்ட் வெற்றி பெற நான் க்யாரன்டி.
மொத வட எனக்கா? ( ஐ எழுபதாவது வடையும் எனக்கா? )
அருமையான கலக்கலான பதிவு!!
அருமையான கலக்கலான பதிவு!!
எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?
இன்னமும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்!!
வித்தியாசமான பதிவு, அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!!
எந்த மாதிரி கமெண்டுகள் வரக்கூடாதுன்னு நிரு சொல்ல வந்தாரோ, அதெல்லாம் போடுறேனே?
நிரு! கையக் குடுங்க!! கலக்கிட்டீங்க!! நானும் படிக்காமல் கமெண்டு போடுபவர்களால் நொந்து போய் ஒரு பதிவு போட்டேன்!! இந்த லிங்கில் கிளிக்கவும்!!
http://krrajeevan.blogspot.com/2011/03/blog-post_03.html
http://krrajeevan.blogspot.com/2011/03/blog-post_03.html
இந்த டிவைஸ் கண்டிப்பாக தேவை!! பிரான்சுக்கு எப்படி அனுப்புவீர்கள்?
SMART COMMENT FOUNDER
ஸ்மார்டான கமெண்டுகளை மட்டும் கண்டறிந்து சொல்லுமா? அப்படிஎன்றால் எழுத்துக்களை போல்ட் செய்து போடவா? ஹி...........ஹி.........ஹி........!!
SMART COMMENT FOUNDER
ஸ்மார்டான கமெண்டுகளை மட்டும் கண்டறிந்து சொல்லுமா? அப்படிஎன்றால் எழுத்துக்களை போல்ட் செய்து போடவா? ஹி...........ஹி.........ஹி........!!
பதிவினைப் படிக்காது பதிவின் தலைப்போடு தொடர்புபடுத்திப் பின்னூட்டம் போட்டு விட்டுப் போகும்; உள்ளங்களைக் கண்டறியும் ஒரு அருமையா தொழில் நுட்பம் தான் ‘’மூலக் கருத்தை முகர்ந்து அறி’ எனும் என் தொழில் நுட்பமாகும்.
நம்ம பன்னிக்குட்டி, ஈஸ்டர்ன் & வெஸ்டர்ன் டாய்லெட் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார்! அதனோட மூலக்கருத்த எப்படி ' முகர்ந்து' அறிய முடியும்?
@கந்தசாமி.
நான் அன்றாடம் நம்மவர் பதிவுகள் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனான். ஆனால் பெரிதாக பின்னூட்டங்கள் இடுவதில்லை ஏனெனில் பின்னூட்டம் இடும் நேரத்திலே இன்னொரு பதிவை கூடுதலாக படித்துவிடலாமே...) ம்ம் சுயநலம் தான் )))))//
கவலையை விடுங்கள் சகோதரம், இதற்குத் தானே நான் ஸிமார்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன், நீங்கள் நினைப்பதை அழக்ய் தமிழில் சொன்னால் போதும், நீங்கள் வேண்டிய பதிவிற்கு பின்னூட்டம் தானாக ஓட்டோ அப்டேற் அடிப்படையில் பப்ளிஷ் ஆகி விடும். உங்களுக்கும் ஒன்று அனுப்பி வைக்கவா?
@டக்கால்டி
ரைட்டு அப்போ நான் ஒட்டு மொத்த தமிழ் பதிவர்கள் ஒட்டுக்களை அடகு வைத்து இதை அம்மா கிட்டயோ, இல்ல அய்யா கிட்டயோ கேட்டு வாங்கிக்கிறேன்...//
ஐய்யா, அம்மாவின் எலக்ஷன் பேச்சினையே நம்ம சிமார்ட் சிஸ்டம் தான் எழுதிக் கொடுக்கவுள்ளது, நீங்க வேறை....
பதிவர்களின் ஓட்டு எப்போதும் நம்ம பன்னிக்குட்டி ராம்சாமிக்குத் தான், ஏன்னா அவர் தான் இந்த முறை சுயேச்சையாக எலக்ஷனிலை இறங்கிட்டாரே?
@தோழி பிரஷா
மாத்தியோசி நண்பரை போல நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா நிரூபன். கலக்கல் காமடி//
இதென்ன ஒப்பீட்டு விமர்சனமா?(ஸிமார்ட் சிஸ்டம் தான் இதனையும் கண்டு பிடித்துள்ளது)
நன்றிகள் சகோ.
@ஹேமா
நிரூபன்....சரியாச் சொல்லவேணும் இப்ப.நான் வாசிச்சனோ இல்ல வாசிக்கேல்லையா.வாசிச்சா எதுவரைக்கும் வாச்சிசனான்.நீங்க சரியாச் சொல்லாட்டி என்னட்ட ஒரு மெசின் இருக்குத் தெரியுமோ.
எதுக்கெண்டு பிறகு சொல்றன் ///
முழுவதும் வாசித்திருக்கிறீர்கள். ஓக்கேவா..........
உங்கள் கிட்டேயும் ஒரு மிசினா? என்னது;-))
உங்கள் கவிதைகளின் கருத்துக்களைக் கண்டறிவது எனும் மிசினா அது?
எனக்கும் ஒன்று அனுப்பி வையுங்கோ. எதிர் காலத்தில் நிச்சயம் எனக்குத் தேவைப்படும்.
இன்னும் நிறைய கமெண்டு போடச்சொல்லி மனசு துடிக்குது! நித்திரை தூகியடிக்குது!! ஸோ ஐ ஆம் லீவிங் டு பெட்!!
@DrPKandaswamyPhDதமிழ்நாடு ஏகபோக உரிமையை நான் வாங்கிக்கொள்ளுகிறேன். மேல் விபரங்கள் பேச எங்கு வரவேண்டும்?
இலங்கை வரவேண்டுமென்றால் உடனடியாக பிளேன் டிக்கட் வாங்கி அனுப்பவும். அப்படியே கைச்செலவுக்காக ஒரு லட்சம் இந்திய ரூபாய் அனுப்பவும். உங்கள் புரொடக்ட் வெற்றி பெற நான் க்யாரன்டி.//
புராடக்ட் வெற்றி பெற்று விட்டது சகோ, றிலீஸ் பண்ணி, ஒரே நாளில் 500பொருட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன...
நீங்கள் என் கம்பனியைக் கவிழ்க்கப் பிளாண் பண்ணித் தான் இந்த டீலைக் கேட்கிறீங்களா?
பொருள் மட்டும் தான் அனுப்பி வைக்கலாம். பணமெல்லாம் அனுப்ப முடியாது, ஏன்னா தமிழ் நாட்டு ஏக போக விற்பனை உரிமையே உங்களிற்குத் தானே தரவுள்ளேன்.. இதனை விளம்பரமாக்கினாலே வியாபாரம் பிச்சுக்கிட்டு ஓடுமே:-))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மொத வட எனக்கா? ( ஐ எழுபதாவது வடையும் எனக்கா? )//
Smart Comment Founder said:
Doi Nirupan, you have to be very alert with this kind of people, Because He didn't start reading your blog yet.
We can't give to him vadai on this time, he is the 70th commenter.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அருமையான கலக்கலான பதிவு!!//
ஸ்மார்ட் சிஸ்டம் இந்தப் பின்னூட்டத்தை reject பண்ணி விட்டது, காரணம் இது ஒரு ஊகத்தின் அடிப்படையில் போடப்பட்ட வழமையான பின்னூட்டமாம்.
அத்தோடு இதனை எழுதியவர் ஏற்கனவே தனது கணினியின் Word பைலில் பதிந்து வைத்திருக்கும் Sample comment இல் இருந்து காப்பி பண்ணி பேஸ்ற் செய்திருக்கிறார் என்றும் சொல்கிறது...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?//
நான் ஏதோ உலக விடயத்தைச் சொல்லுற மாதிரி, பெரிசா கேட்கிறாரு இவரு, எப்ப்டி என்னாலை மட்டும் முடியுதாம்:-))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வித்தியாசமான பதிவு, அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!!//
இவையெல்லாம் என் ஸிமார்ட் சிஸ்டம் reject பண்ணிய பின்னூட்டங்கள், ஆனாலும்,வாசகர்களுக்காக இவற்றை மீண்டும் வெளியிடுகிறேன்.
ஏதோ நான் கவிதையோ, இல்லை ஆன்மிகப் பதிவோ போட்டிருக்கிற மாதிரி, வித்தியாசமான பதிவாம்.....
அதுவும் அழகாக சொல்லியிருக்கேனாம்.........
நோகடிக்கிறாங்களே கடவுளே.....
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எந்த மாதிரி கமெண்டுகள் வரக்கூடாதுன்னு நிரு சொல்ல வந்தாரோ, அதெல்லாம் போடுறேனே?.//
அட நீங்களும் நம்மாளுங்களைக் கலாய்க்கிறீங்க.......
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு! கையக் குடுங்க!! கலக்கிட்டீங்க!! நானும் படிக்காமல் கமெண்டு போடுபவர்களால் நொந்து போய் ஒரு பதிவு போட்டேன்!! இந்த லிங்கில் கிளிக்கவும்!!
http://krrajeevan.blogspot.com/2011/03/blog-post_03.html
http://krrajeevan.blogspot.com/2011/03/blog-post_03.html//
நன்றிகள், நன்றிகள்...
நாம பொண்ணுங்க கிட்டை தான் கையைக் கொடுத்துப் பழக்கம், பையன்க கிட்ட காலை மட்டும் தான் கொடுப்போம்..........
நன்றிகள் சகோதரம், இந்த விசயத்திலை இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசித்திருக்கிறோம்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இந்த டிவைஸ் கண்டிப்பாக தேவை!! பிரான்சுக்கு எப்படி அனுப்புவீர்கள்?//
DHL இலையோ இல்லேன்னா, வேற ஏதாச்சும் கூரியர் கம்பனியின் உதவியுடனோ அனுப்பிட்டாப் போச்சு, பிரான்ஸிற்காக ஏக போக உரிமைக்கு ஒரு வியாபார முகவர் தேவை, உங்க ஊரிலை இது பட்டையைக் கிளப்புமா? எத்தனை சிஸ்டம் அனுப்பி வைக்கிறது?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஸ்மார்டான கமெண்டுகளை மட்டும் கண்டறிந்து சொல்லுமா? அப்படிஎன்றால் எழுத்துக்களை போல்ட் செய்து போடவா? ஹி...........ஹி.........ஹி........!//
இந்த ஸிஸ்டத்தின் தனி ஸ்டைலே, சிமார்ட் இல்லாத கமெண்டுகளை ஸிமார்ட் ஆக கண்டறிவது தான்........
இந்த போல்ட் எல்லாம் வேலைக்கு ஆகாது,
நீங்க போல்ட் கமெண்ட் போட்டால் உங்களுக்கு
மூன்று நாள் ஆகியும் விற்காத சூடான நம்மூரு வடை தான் அனுப்பி வைக்கப்படும்..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நம்ம பன்னிக்குட்டி, ஈஸ்டர்ன் & வெஸ்டர்ன் டாய்லெட் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார்! அதனோட மூலக்கருத்த எப்படி ' முகர்ந்து' அறிய முடியும்?//
யோ இந்த மாதிரியெல்லாம் நம்ம ஸிஸ்டத்தாலை கண்டறிய முடியாது, ஒன்லி பதிவின் உள்ளடக்கம் மட்டுமே, மத்தவையெல்லாம் கண்டறிய உங்களின் மூக்கு இருக்கிறதே:-)))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இன்னும் நிறைய கமெண்டு போடச்சொல்லி மனசு துடிக்குது! நித்திரை தூகியடிக்குது!! ஸோ ஐ ஆம் லீவிங் டு பெட்!!//
இப்ப தூங்கப் போகும் போதும் மனசிலை நீங்கள் யாரைவாது நினைத்துக் கொண்டு தூங்கப் போனாலும் எங்கடை ஸிஸ்டம் கண்டறிஞ்சு சொல்லும்..
சரி சரி, குட் நைட்..
வணக்கம் நிரூபன் சார்,
நம்ம ப்ளாகை எல்லாம் சும்மாவேனும் பின்னூட்டம் போடக் கூட ஆளில்லை
ஆஹா! நான் பதிவ படிச்சு பின்னூட்டம் போட்டேனா?படிக்காமலா?
100 சகோதரம்,100
haa ஹா ஹா கலக்கல்.. பதிவு..
உங்க பதிவால் பாதிக்கப்பட்ட நாஞ்சில் மனோக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//.
//உங்க ப்ராடக்ட்ல ஒரு கேள்வி.. சிலர் பதிவின் தலைப்பை மட்டும் பாக்காமல் பின்னூட்டம் நான்கினை பாத்துவிட்டு கமண்ட் போடுவார்களே.! அதனையும் உங்க ப்ராடக்ட் கண்டுபிடிக்குமா.?//
என் அன்பு சகோ கூர் சொன்னதை நான் அப்படியே வழி மொழிகிறேன்...:)))
நிரு....செம flow வில் காமடி வருது உங்களுக்கு...கலக்குங்க...பதிவை சரியா வாசிக்காதவங்க...வாழ்த்துக்கள் னு சொல்லிட்டு...ஆர்டர் பண்ணினால் கமிஷன் பதிவுலகத்துக்கும் வெட்டவும்...:))))
அல்லோ தன்ராஜா.....? டூஃபிஃப்டி சிமெண்ட் பேக் ரெடி பண்ணுங்க, நாளைக்கே டெல்லி போறேன்.. ஈவ்னிங் ஹோம் மினிஸ்டர பாத்து பேசுறேன்..... இதெல்லாம் எனக்கு சாதாரணம்....!
நாராய்ணா இந்தக் கொசு தொல்ல தாங்க முடிலடா...........
////சி.பி.செந்தில்குமார் said...
haa ஹா ஹா கலக்கல்.. பதிவு..
உங்க பதிவால் பாதிக்கப்பட்ட நாஞ்சில் மனோக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//.
//////////
ஆல் தி ப்ராப்ளம்..........!
எச்சூஸ் மி, சண்டையில கிழியாத சட்ட வேணும், ரெடி பண்ண முடியுமா?
ஏங்க... உண்மையத்தான் சொல்றீங்களா... இல்லை ஏப்ரல் ஒண்ணாம் தேதி??????
இருந்தாலும் கடைசி வரைக்கும் நம்பறமாதிரியே எழுதியிருக்கீங்க... ஏற்கனவே நான் மாட்டியிருக்கேனே!!!! போன்ல...
ங்கொய்யாலே புதுசு புதுசா ராவடி பன்றாங்கப்பா...
நடக்கட்டும் நடக்கட்டும்
1. ஹையோ...! ஹையோ...! படிச்சோ, படிக்காமலோ பின்னூட்டம் போடறதுக்கும், யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி, தினம் தினம் பத்துப் புதிய பதிவர்களை உருவாக்கி, இணையங்களில் உறுப்பினராக்கி, பத்து ஓட்டுக்குக் குறையாமல் 'பச்சக்குன்னு' வந்து போட்டுட்டுப் போற "எந்திரனைக்" கண்டுபிடிசீங்கன்னா, நீங்க ஒரே வாரத்திலே கோடீஸ்வரன் ஆகிடுவீங்க! அதை விட்டுட்டு, இந்த மாதிரி வீணான விஷயத்துக்கெல்லாம் உங்க அறிவையும், நேரத்தையும் ஏங்க விரயம் பண்றீங்க!
2.இப்போ, நான் உங்க பதிவை முழுசாப் படிச்சேனா, இல்லையா? அதைச் சொல்லுங்க பாக்கலாம், மொதல்ல!
@இரா.எட்வின்
வணக்கம் நிரூபன் சார்,
நம்ம ப்ளாகை எல்லாம் சும்மாவேனும் பின்னூட்டம் போடக் கூட ஆளில்லை//
கவலையை விடுங்கோ சகோ, தமிழ் மணத்தில் இணையுங்கள் உங்கள் பதிவை, அனைவரும் தேடி வருவார்கள்.
அப்புறம் ஒரு ஸிமார்ட் சிஸ்டத்தை வாங்கினால் போதும், உங்கள் பதிவைப் படிக்க ஆட்களே கூடுவாங்க........
@shanmugavel
ஆஹா! நான் பதிவ படிச்சு பின்னூட்டம் போட்டேனா?படிக்காமலா?//
Smart System Said:
I rejected this comment two time's. But Niru has published this comment without my permission..
நீங்க இதனைப் படிக்காமல் தான் போட்டதாக சிஸ்டம் சொல்லுது.
சு....ச்சும்மா ஒரு காமெடி சகோ.
@shanmugavel
100 சகோதரம்,100//
அப்போ உங்களுக்கு என்ன வேணும்?
வடை, போண்டா, பூந்தி லட்டு, பொங்கல், இல்லே பஜ்ஜி...
கைவசம் திருப்பூர் பவனிலை இது தான் இருக்காம். ஸ்டாக் தீர முதல்ல ஆர்டர் பிளீஸ்.
@இராஜராஜேஸ்வரி
ஒரு இளம் பையன் விஞ்ஞானி ஆகிட்டான்.வாழ்த்துக்கள்.//
பதிவும்,பின்னூட்டங்களும் நகைச்சுவை கலந்து, நூறு பின்னூட்டங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் கண்டுபிடிப்பின் மகத்துவத்தை பறைசாற்றுகின்றன.
மேலும் மேலும் நிறைய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி செய்து வளர வாழ்த்துக்கள்.//
நீங்கள் நெசமாவே நம்பீட்டீங்க போல இருக்கே.
@சி.பி.செந்தில்குமார்
haa ஹா ஹா கலக்கல்.. பதிவு..
உங்க பதிவால் பாதிக்கப்பட்ட நாஞ்சில் மனோக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்////
இது தான் வத்திப் பெட்டி இல்லாமலே பத்த வைக்கிற வேலையோ?
நான் மனோவைப் பற்றி இப் பதிவில் புகழவே இல்லை. நீங்க வேறை:-))
மனோ எங்கிருந்தாலும் இவ் இடத்திற்கு வருக.
@ஆனந்தி..
//உங்க ப்ராடக்ட்ல ஒரு கேள்வி.. சிலர் பதிவின் தலைப்பை மட்டும் பாக்காமல் பின்னூட்டம் நான்கினை பாத்துவிட்டு கமண்ட் போடுவார்களே.! அதனையும் உங்க ப்ராடக்ட் கண்டுபிடிக்குமா.?//
என் அன்பு சகோ கூர் சொன்னதை நான் அப்படியே வழி மொழிகிறேன்...:)))//
சகோதரம், இது தான் பின்னூட்டங்களில் ஒரு பந்தியை காப்பி செய்து கமெண்ட் போடுவதோ(I didn't say anything- My smart system said to me) கூர் சொன்னதற்கு கீழே பதிலும் சொல்லியாச்சு, கவனிக்கவில்லை போலும்.
//நிரு....செம flow வில் காமடி வருது உங்களுக்கு...கலக்குங்க...பதிவை சரியா வாசிக்காதவங்க...வாழ்த்துக்கள் னு சொல்லிட்டு...ஆர்டர் பண்ணினால் கமிஷன் பதிவுலகத்துக்கும் வெட்டவும்...:))))//
கமிஷன் பதிவுலகிற்கு வெட்டலாம், ஆனால் பதிவுலகத்தில் தானே சங்கங்கள் இல்லை. ஆதலால், கமிஷன் முழுக்க விஞ்ஞானிகள் ஆய்வு கூடத்திற்கு தான்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
அல்லோ தன்ராஜா.....? டூஃபிஃப்டி சிமெண்ட் பேக் ரெடி பண்ணுங்க, நாளைக்கே டெல்லி போறேன்.. ஈவ்னிங் ஹோம் மினிஸ்டர பாத்து பேசுறேன்..... இதெல்லாம் எனக்கு சாதாரணம்....!//
ஏன் டெல்லியிலை சீமெண்ட் பாக்கட் ரொம்ப சீப்பாக கிடைக்காதா?
பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் பன்னிக்குட்டி கமெண்ட் போடுறார்.
ஹா.....ஹா....
சகோ ஏன் டெல்லி போறீங்க,
டெல்லியில் ஒரு விற்பனை நிலையம் தொடங்க தானே!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்:-))
ஸிமார்ட் ஸிஸ்டத்தை டெல்லியில் பெற்றுக் கொள்ள பன்னிக் குட்டி ராம்சாமியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
நாராய்ணா இந்தக் கொசு தொல்ல தாங்க முடிலடா...........//
ஏன் டாய்லெட் இருந்திட்டு பதிவைப் படிக்கிறீங்களா:-))
ஒரு Ninja இல்லேன்னா Mortein வாங்கினாப் போச்சு..
அதுக்கும் சரிப்பட்டு வராட்டி, வேப்பங் கொட்டையை வேக வைச்சால் எல்லாமே சரியாப் போயிடுமாம்...
எங்க பாட்டி சொன்னா.
@பன்னிக்குட்டி ராம்சாமி
////சி.பி.செந்தில்குமார் said...
haa ஹா ஹா கலக்கல்.. பதிவு..
உங்க பதிவால் பாதிக்கப்பட்ட நாஞ்சில் மனோக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//.
//////////
ஆல் தி ப்ராப்ளம்..........!///
மனோ! நீங்க எங்கிருந்தாலும் உடனடியாக இங்கே வாங்கோ.
@பன்னிக்குட்டி ராம்சாமி
எச்சூஸ் மி, சண்டையில கிழியாத சட்ட வேணும், ரெடி பண்ண முடியுமா?//
அப்போ டவுசர் கிழிஞ்சு போச்சென்று சொல்றீங்க...
ஆர்டர் கொடுத்தா நாம சண்டையிலை கிழியாத சட்டையென்ன புல்லட்டே செய்திடுவோம்ல..
@Jey
ங்கொய்யாலே புதுசு புதுசா ராவடி பன்றாங்கப்பா...
நடக்கட்டும் நடக்கட்டும்//
ஆஹா...ஆஹா....
நன்றிகள் சகோதரம்.
@மனம் திறந்து... (மதி)
1. ஹையோ...! ஹையோ...! படிச்சோ, படிக்காமலோ பின்னூட்டம் போடறதுக்கும், யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி, தினம் தினம் பத்துப் புதிய பதிவர்களை உருவாக்கி, இணையங்களில் உறுப்பினராக்கி, பத்து ஓட்டுக்குக் குறையாமல் 'பச்சக்குன்னு' வந்து போட்டுட்டுப் போற "எந்திரனைக்" கண்டுபிடிசீங்கன்னா, நீங்க ஒரே வாரத்திலே கோடீஸ்வரன் ஆகிடுவீங்க!//
இப்படியும் ஒரு விசயம் இருக்கா.
அதனை இன்று தான் அறிந்து கொண்டேன் சகோ.
இப்பொழுதே என் டைரியில் குறித்து வைக்கிறேன்.
என்னுடைய அடுத்த ஆராய்ச்சி இது தொடர்பாகத் தான் இருக்கும்:-))
உதவி தேவை என்றால் உங்களையும் அழைக்கிறேன்.
//அதை விட்டுட்டு, இந்த மாதிரி வீணான விஷயத்துக்கெல்லாம் உங்க அறிவையும், நேரத்தையும் ஏங்க விரயம் பண்றீங்க!//
நம்ம பதிவர்களுக்கு ஒரு நன்மை, வெரைட்டி கிடைக்கும்னு தான் சகோ.
//
2.இப்போ, நான் உங்க பதிவை முழுசாப் படிச்சேனா, இல்லையா? அதைச் சொல்லுங்க பாக்கலாம், மொதல்ல!..//
பின்னூட்டத்தையும், பதிவுகளையும் நீங்கள் மேலோட்டமாக படித்தீங்க...
சரியா!
எப்பூடி நம்ம ஸிமார்ட் சிஸ்டம்:-)))
ஹா...ஹா...ஹா.......
@ஆதவா
ஏங்க... உண்மையத்தான் சொல்றீங்களா... இல்லை ஏப்ரல் ஒண்ணாம் தேதி??????
இருந்தாலும் கடைசி வரைக்கும் நம்பறமாதிரியே எழுதியிருக்கீங்க... ஏற்கனவே நான் மாட்டியிருக்கேனே!!!! போன்ல...//
பதிவை பப்ளிஷ் பண்ணி இருக்கிறதே ஏப்ரல் நாலாம் திகதி தான் சகோ...
நெசமாத் தான் சொல்லுறேன். நம்பினா நம்புங்க...
போனிலை மாட்டினீங்களா?
அதெல்லாம் விடுங்க சகோ,
இது முழுக்க முழுக Reality Show.
@கோமாளி செல்வா
First am really sorry to put comment in english. Am never put comment from mobile. But after reading this post i can't go without put comment.
Am really enjoy this post and still laughing:-)
(sema comedy nka, mobile la irunthu comment poduraku siramama iruku)//
Oh, Sorry Bro, Until this time, you'r comment was in the spam folder,
நன்றிகள் சகோ...... உங்க கமெண்ட் ஆட்டோமெட்டிக்கா ஸ்பாம் போல்டருக்கை போயிடுச்சு..
இப்போ தான் கண்டு பிடிச்சேன்.
ஓகே.. ஓகே... குட் boy க்க்கு இது அழகு..:-)))
அப்புறம் Don't worry, Be happy.
நன்றிகள் சகோதரம்.
இது பற்றி நானும் முன்னர் பலமுறை ஆழமாக சிந்தித்திருக்கின்றேன். உண்மையில அப்படி ஒரு சாதனம் கண்டுபடித்தால் நல்லதுதான் பலபேருக்கு! :)
/////வடை, வாழைப்பழம், பஜ்ஜி, போண்டா, முதலிய இத்தியாதிப் பொருட்களைத் தமக்குத் தருமாறு பசியோடு வந்து கையேந்தும், உங்கள் பிளாக் நண்பர்களுக்கு, /////
இப்போது பலர் அப்படி வெளியிடும் கருத்துக்களை பிரசுரிப்பதில்லை... ஆனால் ஒன்று மட்டும் நிஜம் கருத்தப் பெட்டி எங்களுக்குரிய இடம்.. எமது தணிக்கைக் குட்பட்ட கருத்தானால் மட்டுறுக்கலாம்... மிகுதி புரியும் என நினைக்கிறேன்...
இப்போது சிலருக்கு சுடு சோறு கொடுப்பதே இல்லை...
ஐயோ! அந்த மெஷினை நீங்க உபயோகிக்காம... எனக்கு முதன் முத்லா அனுப்பி வைத்ததுக்கு நன்றி! அது உங்க பின்னூட்டத்தை உள்ளே விட மாட்டீங்குது.மெஷின் ரிப்பேரா? அல்லது நீங்க பின்னூட்டம் இடுவதில்லையா? எங்கிட்ட வாரண்டி கார்ட் இருக்கு, வாட்டி எடுத்துடுவோம்.
@Jana
இது பற்றி நானும் முன்னர் பலமுறை ஆழமாக சிந்தித்திருக்கின்றேன். உண்மையில அப்படி ஒரு சாதனம் கண்டுபடித்தால் நல்லதுதான் பலபேருக்கு! :)//
நீங்கள் சீரியஸ்ஸாவே நம்பிட்டீங்க போல இருக்கு. நன்றிகள் சகோ.
@♔ம.தி.சுதா♔
////வடை, வாழைப்பழம், பஜ்ஜி, போண்டா, முதலிய இத்தியாதிப் பொருட்களைத் தமக்குத் தருமாறு பசியோடு வந்து கையேந்தும், உங்கள் பிளாக் நண்பர்களுக்கு, /////
இப்போது பலர் அப்படி வெளியிடும் கருத்துக்களை பிரசுரிப்பதில்லை... ஆனால் ஒன்று மட்டும் நிஜம் கருத்தப் பெட்டி எங்களுக்குரிய இடம்.. எமது தணிக்கைக் குட்பட்ட கருத்தானால் மட்டுறுக்கலாம்... மிகுதி புரியும் என நினைக்கிறேன்..//
மிகுதி புரிகிறது சகோ, ஒரு காமெடிக்காகத் தான் இந்த விடயத்தை வைத்துப் பதிவு போட்டேன். ஒரு சிலர் பதிவுடன் தொடர்புபட்ட பின்னூட்டங்களை விடுத்து, தமது பதிவிற்கு வரும் கும்மிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க இப்படியான பின்னூட்டங்களைப் போடுவார்கள் தானே. அது தான் சொன்னேன்.
நன்றிகள் சகோ.
@♔ம.தி.சுதா♔
இப்போது சிலருக்கு சுடு சோறு கொடுப்பதே இல்லை...//
இப்போது என்ன பிட்டு, இடியப்பம், கொம்பு பணிஸ், றோஸ் பாணே கொடுக்க்கிறனீங்க;-))
@Anonymous
ஐயோ! அந்த மெஷினை நீங்க உபயோகிக்காம... எனக்கு முதன் முத்லா அனுப்பி வைத்ததுக்கு நன்றி! அது உங்க பின்னூட்டத்தை உள்ளே விட மாட்டீங்குது.மெஷின் ரிப்பேரா? அல்லது நீங்க பின்னூட்டம் இடுவதில்லையா? எங்கிட்ட வாரண்டி கார்ட் இருக்கு, வாட்டி எடுத்துடுவோம்.//
சகோதரம், நான் எல்லோருக்கும் பின்னூடம் இடுவேன், நீங்க என்னிடம் மிசின் வாங்கிய ஆளாக நிச்சயம் இருக்க மாட்டீங்க. ஏன்னா, என்னிடம் மிசின் வாங்கிய எல்லோருக்கும் பெயர் இருக்கும். ஆனால் உங்களுக்கு ;-))
மெஷின் றிப்பேரும் இல்ல... மிஷினில் எந்த தப்பும் இல்ல..,உங்க பதிவிற்கு கீழை பின்னூட்டப் பெட்டி இருக்கிறதா என்று பாருங்கோ.
அறிமுகம்... சென்னையில் மிக பிரம்மாண்டமாய்... அது என்னா மிஸின்? ஆங்... SMART COMMEND FOUNDER மிஸின்... இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு.., தமிழ் நாட்டில், ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் அரிய மிஸின். விலை ரூபாய் 250 மட்டுமே... தமிழ் நாட்டில் விற்பனை உரிமம் பெற்ற ஒரெ நிறுவனம் " நாசமாப்போன நாதாரி அண்ட் கோ". அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்... முந்துங்கள். முதல் பத்து பேருக்கு இலவசமாக மெது வடை கிடைக்கும்.
எப்படி எல்லாம் யோசிக்கறாங்க. சூப்பர்!!
புதுசு இல்லையா?
பதிவைபடிச்சு பின்னூட்டம் இடுராங்காளாங்கறகதை ஒருபுறமாக
இருக்கட்டும். பதிவைப்படித்து மாஞ்சு, மாஞ்சு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
பல பதிவர்கள்,மறுமொழியே கொடுக்கமாட்டேங்கராங்களே. அது ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
வடை என்பதை வடை என்று தமிழில் போடனுமா? vadai அப்டின்னு இங்கிலீஷ்ல போடணுமா?
@சரியில்ல.......
அறிமுகம்... சென்னையில் மிக பிரம்மாண்டமாய்... அது என்னா மிஸின்? ஆங்... SMART COMMEND FOUNDER மிஸின்... இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு.., தமிழ் நாட்டில், ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் அரிய மிஸின். விலை ரூபாய் 250 மட்டுமே... தமிழ் நாட்டில் விற்பனை உரிமம் பெற்ற ஒரெ நிறுவனம் " நாசமாப்போன நாதாரி அண்ட் கோ". அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்... முந்துங்கள். முதல் பத்து பேருக்கு இலவசமாக மெது வடை கிடைக்கும்.//
ஆஹா... விட்டா, நம்ம மிசினுக்குரிய ஒட்டு மொத்த ஏக போக உரிமையினையும் நீங்களே எடுத்திடுவீங்க போல.//
காசில்லாமல் விளம்பரம் போடும், நம்ம சகோவே வாழ்க.......
@! சிவகுமார் !//
பாஸ்... எப்படியெல்லாம் யோசிக்கலை பாஸ், ஏதோ நம்மாலை முடிஞ்சதை தான் யோசிக்கிறம் பாஸ்.
@ராஜ நடராஜன்
புதுசு இல்லையா?//
இதோ..........கூகிள் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறது சகோதரம்.
@ராஜ நடராஜன்
புதுசு இல்லையா?//
இதோ..........கூகிள் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறது சகோதரம்.
@Lakshmi
பதிவைபடிச்சு பின்னூட்டம் இடுராங்காளாங்கறகதை ஒருபுறமாக
இருக்கட்டும். பதிவைப்படித்து மாஞ்சு, மாஞ்சு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
பல பதிவர்கள்,மறுமொழியே கொடுக்கமாட்டேங்கராங்களே. அது ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?//
இதனை நீங்க அந்தப் பதிவர்கள் கிட்டத் தான் கேட்கனும்;-))
அதற்குரிய பதில் தான் இன்னமும் மர்மமாக இருக்கிறது. இப்போது அது தொடர்பான ஆராய்ச்சிகள் எமது ஆய்வு கூடத்தில் இடம் பெறுகின்றன. முடிவுகள் வெகு விரைவில் வரும் என்பதில் மாற்றமில்லை.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
வடை என்பதை வடை என்று தமிழில் போடனுமா? vadai அப்டின்னு இங்கிலீஷ்ல போடணுமா?//
பாஸ் நீங்க வேறை...
வாயால் வடை என்று சொன்னால் போதும், அது தானாகவே தமிழில் டைப் ஆகும். நீங்கள் எல்லாம் கஸ்டப்பட்டு, கையால் டைப் செய்ய வேண்டியதில்லை;-)))
Post a Comment