இந்த வகையில் வருபவர் தான் நம்ம வாத்தியார் வப்புசாமி...
வாத்தியார் வப்பு சாமியும் மாணவர்களும்!
ஒரு நாள் வாத்தியார் தமிழ்ப் பாடத்திலுள்ள திருக்குறளைப் பற்றி கற்பிக்கத் தொடங்குகிறார். முதல் நாள் பார்த்த ரஜினி படம், காரணமாக தூக்கம் கண்களைத் தழுவ நம்ம சக மாணவன் நரம்படி நாகமுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான். ஆசிரியருக்குப் பயங்கர கோபம்.
டோய் நரம்படி நாகமுத்து! எழும்படா, திருக்குறளை எழுதினவர் யார் என்று சொல்லு பார்ப்பம்?
‘மாடத்திலே கன்னி மாடத்திலே எனும் பாடலில் மனதைப் பறி கொடுத்திருந்த நம்ம நரம்படி, சேர் சத்தியமா நான் எழுதவில்லை என்று சொல்கிறான்.
ஆசிரியருக்குப் பாடத்தைக் கவனிக்காத கோபம் ஒரு புறம், பாவிப் பயல் நித்திரை கொண்டு தன்னை அவமானப்படுத்திட்டானே எனும் கவலை ஒரு பக்கம் இருக்க. உடனடியாக மாணவனை ஹெட் மாஸ்டரிடம் அனுப்புகிறார். ஹெட் மாஸ்டரும் நர.. நாகமுத்துவைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்க, அவன் அதே பதிலைச் சொல்லத் தொடங்குகிறான். பிறின்சிப்பலுக்குப் பயங்கரக் கோபம். நாக முத்துவை வீட்டுக்கு அனுப்பி, ’’ஓடிப் போய் உன்ரை அப்பாவைக் கூட்டி வாடா என்று கலைத்து விடுகிறார்.
ஓடிப் போன மாணவன், தந்தையாருடன் வருகிறான். தந்தையாரிடம் ஹெட் மாஸ்டரும், பிறின்சிப்பலும் நடந்தவற்றை ஒன்றும் விடாமல் கூறுகிறார்கள்.
நரம்படி நாகமுத்துவின் தந்தையார், நிறுத்துங்க சார், தெருக்குறளை எழுதினது யாரோ? இது கூடத் தெரியாமலா பாடம் நடாத்துறீங்க.
’’உந்த றோட்டு மதில்களிலை, சுவர்களிலை பொட்டையளின்ரை பெயரோடு பொடியங்கடை பேரையும் சேர்த்து எழுதுறது யார் தெரியுமே? என்ரை மகன் தான்.
சத்தியமா உவன் நாகமுத்து தான் சேர் உந்தத் தெருக் குறளையும் எழுதியிருப்பான். அதிலே சந்தேகமே இல்லை சேர்.. ... ஹெட் மாஸ்டரும், ஆசிரியரும் ஒருவரை ஒருவர் பார்த்து.. முழித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
வாத்தியார் வப்பு சாமியும் பாத்றூம் நினைவுகளும்!
நம்மடை வப்புசாமி வாத்தியார் பள்ளிக் கூடத்திற்குச் சேர்ந்து கொஞ்ச நாட்களில் பாடசாலை நிர்வாகம் புதிதாக ஒரு வெஸ்ரேன் பாத்றூமை(சிறு நீர் கழிக்குமிடம்) கட்டி, அதன் சுகாதாரப் பொறுப்பையும், மேற் பார்வையும் நம்ம வாத்தியார் கிட்ட கொடுக்கிறாங்க. முதன் முதலாக டாயிலெட் மேற் பார்வை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நம்ம வாத்தியார், மாணவர்களுக்கு கண்டிப்பான உத்தரவினை வழங்குகிறார். ’’மாணவர்களே இது புது பாத்றூம், யாரும் இங்கே அசுத்தம் பண்ணக் கூடாது, மீறிப் பண்ணினால் நடக்கிறதே வேறை.
இரண்டு நாட்களின் பின், பாத்றூம் சுவரில் நம்ம சகோ, நக்கல் நந்த கோபால் எழுதினானே ஒரு வசனம்......’’உங்கள் எதிர் காலம் உங்கள் கைகளில்’’.
இதனைப் படித்த வாத்தியாருக்கு எப்படி இருந்திருக்கும்!
குட்டியும், சூட்டியும்!
மின்சாரத்திற்கு ஆங்கிலம் என்ன என்று நம்ம ஆங்கில ஆசிரியர் அல்போன்ஸ் சகோதரி சூட்டியினைக் கேட்கிறார்.
.......அது எலக்ரிகுட்டி எனப் பதில் சொல்லுகிறாள் நம்ம சகோ.
ஆசிரியர்...என்ன பிள்ளை அது, அது எலக்ரிகுட்டி சேர். திரும்பவும் அதே பதில்..
அவர் எலக்ரிசிற்றி எனப் பல முறை சொல்லிக் கொடுத்தும், ஆசிரியரால் மாணவியின் உச்சரிப்பினைத் திருத்த முடியாது போகவே சூட்டியின் தந்தையாரினைப் பாடசாலைக்கு அழைத்து வருமாறு ஆசிரியர் சொல்லியனுப்புகிறார்.
சூட்டியின் தந்தையார் சூலவைரவன் பாடசாலை அதிபரைச் சந்திக்க வருகிறார். ஆசிரியரும் நடந்தவற்றையும், சூட்டியின் உச்சரிப்பில் உள்ள தவறினையும் விளக்குகிறார். நன்றாக செவிமடுத்த சூலவைரவன், சேர் அவளின்ரை கப்பாகுட்டி அப்படித்தான், அவள் இன்னும் கொஞ்ச நாளிலை எலக்ரிகுட்டியை பிக் பண்ணிடுவாள், நீங்கள் இதனைப் பப்ளிகுட்டி பண்ணிப் போடாதேங்கோ...
எனக் கூறி விட்டுச் செல்கிறார்...
ஆசிரியர் ஒரு கணம் சுய நினைவற்று நிற்கிறார்...
வாத்தியார் தொடர்ந்தும் வருவார்.....!
இதில் வருகின்ற முதலாவது நகைச்சுவையினை யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில்(இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு) பிரபலமாக ஒலித்துக் கொண்டிருந்த லூஸ் மாஸ்டரின் தனி நடிப்பு கசற்றில் இருந்து உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக எழுதியிருக்கிறேன்.
இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு.
மூன்றாவது நகைச்சுவை ஒரு புத்தகத்தில் படித்தது.
டிஸ்கி: நாற்றின் வாசகர்கள், அன்பு உறவுகள், நண்பர்கள், விமர்சகர்கள், தோளோடு தோள் நிற்கும் உள்ளங்கள், மற்றும் அனைவருக்கும் என் உளம் கனிந்த இனிய தமிழ் புது வருட வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டு, எங்கள் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் ஓர் நல்ல ஆண்டாக மலரும் என் நம்பிக்கையோடு, இன்றைய நாளை இனிதாகத் தொடங்குவோமாக!
|
91 Comments:
:-)))))))))) ...Super!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
haa haa ஹா ஹா செம காமெடி நண்பா.. அந்த பையன் தூங்கும் ஃபோட்டோ டைமிங்க்
>>>
இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு.
ஏன் இந்த தடுமாற்றம்? ஹி ஹி
@Chitra
:-)))))))))) ...Super!//
உங்கள் வார்த்தைகளைச் சிரிப்பினுள் அடக்கி விட்டு, எஸ் ஆகிட்டீங்களே?
@Chitra
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
haa haa ஹா ஹா செம காமெடி நண்பா.. அந்த பையன் தூங்கும் ஃபோட்டோ டைமிங்க்//
சகோ, போட்டோ டைமிங் ஒகே/ ஆனால்... அந்த போட்டோவிலை இருக்கிறது நானில்லை.
@சி.பி.செந்தில்குமார்
இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு.
ஏன் இந்த தடுமாற்றம்? ஹி ஹி//
இல்ல சகோ, சும்மா ஒரு பில்டப்பு தான்..
இன்னும் சிரிப்பு நிக்கல..
அருமை நண்பரே
சூப்பர் நண்பா
//இரண்டு நாட்களின் பின், பாத்றூம் சுவரில் நம்ம சகோ, நக்கல் நந்த கோபால் எழுதினானே ஒரு வசனம்......’’உங்கள் எதிர் காலம் உங்கள் கைகளில்’’.//
ஹா..ஹாஹா
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிப்பு நிக்கல..
யாராவது கொஞ்சம் தண்ணி கொடுங்கப்பா
ஹஹா எல்லாமே சூப்பர் நிரூபன்.
சுவாரஸ்யமான எழுத்து...
நல்லா இருக்குயா மாப்ள!
புத்தாண்டு முதல் நாளே கலகல நிரூபன்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு.//
அதுதான் ஹை- லைட்ஸ்.... நீ கலக்கு சித்தப்பு....
பப்ளிகுட்டி பண்ணிப் போடாதேங்கோ.//
.... sema comedy boss....
//Prepare) பாடசாலைக்குச் சென்றால் தான் மாணவர்கள் கேட்கும் கேள்விகளிற்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.//
நிரூ நீங்க வாத்தியாரா இருந்தா இப்படிதான் பண்ணியிருப்பீங்களா.?
//கேள்வியைக் கேட்டு விட்டு, மாணவனின் வாயை அடக்கிய பின்னர் பாடத்தைத் தொடருவார்கள்.//
நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்.. ஹி ஹி..
//முதல் நாள் பார்த்த ரஜினி பாடம், //
பாடமா இல்ல படமா.?
//நரம்படி நாகமுத்து!//
பெரிய ரௌடியா இருப்பாரோ.?
//நித்திரை கொண்டு தன்னை அவமானப்படுத்திட்டானே எனும் கவலை ஒரு பக்கம் இருக்க//
இதிலென்ன இருக்கு.. அவ்வளவு எளிதில் வராத தூக்கத்தை அசால்ட்டா கொண்டு வந்துட்டோமேன்னு சந்தோசபடவேண்டியது தானே
//குறுக்கு விசாரணை செய்யத் தொடங்க, //
ஆமாம் பெரிய விசயகாந்து.. குறுக்கு விசாரணை செய்யிராராம்..
//ஓடிப் போன மாணவன், தந்தையாருடன் வருகிறான். //
கெட்ட பையனா இருப்பான் போல.. நானா இருந்தா வீட்டு போயிட்டு ஹெட் மாஸ்டர் செத்துட்டாரு அதனால லீவு உட்டுட்டாங்கன்னு சொல்லியிருப்பேன்..
//தெருக்குறளை எழுதினது யாரோ? //
தெருக்குறளை எழுதினது கார்ப்பரேஷன் காரங்க.. எழுத சொன்னது கலைஞர் தாத்தா..
//’’உந்த றோட்டு மதில்களிலை, சுவர்களிலை பொட்டையளின்ரை பெயரோடு பொடியங்கடை பேரையும் சேர்த்து எழுதுறது யார் தெரியுமே? என்ரை மகன் தான்.//
அட என்ன ஒரு தந்தை.. கண்கள் கலங்குது இவரை பார்க்கும்போது.. ஆனந்த கண்ணீர்.
//ஹெட் மாஸ்டரும், ஆசிரியரும் ஒருவரை ஒருவர் பார்த்து.. முழித்துக் கொண்டு நிற்கிறார்கள்.//
ஹி ஹி.. இத ஏற்கனவே ஏதோ தமிழ்படத்துல பாத்திருக்கேன்
// அதன் சுகாதாரப் பொறுப்பையும், மேற் பார்வையும் நம்ம வாத்தியார் கிட்ட கொடுக்கிறாங்க. //
இவரு வாத்தியா இல்ல கக்கூஸ் கழுவுற ஆயா வா.?
// மாணவர்களுக்கு கண்டிப்பான உத்தரவினை வழங்குகிறார். //
யோவ் வந்தா அடிச்சு புடிச்சு ஓடுற இடத்துல என்னயா கண்டிஷனு.?
//.......அது எலக்ரிகுட்டி எனப் பதில் சொல்லுகிறாள் நம்ம சகோ.//
அட பூ படம்..
//சூட்டியின் தந்தையாரினைப் பாடசாலைக்கு அழைத்து வருமாறு ஆசிரியர் சொல்லியனுப்புகிறார்.//
இதுக்கெல்லாமா அப்பாவ கூப்படுவாங்க.. சீ சீ சீ..
// நீங்கள் இதனைப் பப்ளிகுட்டி பண்ணிப் போடாதேங்கோ...
எனக் கூறி விட்டுச் செல்கிறார்...//
அப்படியே பூ படத்தில் உபயோகித்த வார்த்தைகள்.. இடம் மாறப்பட்டிருக்கு.. வாத்தியார்-ஸ்ரீகாந்த், மாணவர்-டீக்கடைகாரர், அப்பா-டீ குடிக்க வந்தவங்க.. இதான் அந்த காட்சி..
//மூன்றாவது நகைச்சுவை ஒரு புத்தகத்தில் படித்தது.//
அப்ப பூ படம் தான் காப்பியா.?
நீங்க கண்டுபிடிக்கறதுக்கு முன்பே சொல்லிவிடுகிறேன்.இன்னும் பதிவைப் படிக்கவில்லை.இப்பத்தான் அலுவலகம் வந்தேன்.
இப்ப தமிழ்ப் புத்தாண்டு மட்டும் சொல்லிக்கிறேன்.வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நல்ல நகைச்சுவை.
//இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு./
ஏனிந்த இழுவை ஓ அதுவா. ஹா ஹா
சிரிப்பு வெடி. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா.
சத்தியமா திருக்குறளை நான் எழுதவே இல்லை...
//நரம்படி நாகமுத்துவின் தந்தையார், நிறுத்துங்க சார், தெருக்குறளை எழுதினது யாரோ? இது கூடத் தெரியாமலா பாடம் நடாத்துறீங்க.///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//இரண்டு நாட்களின் பின், பாத்றூம் சுவரில் நம்ம சகோ, நக்கல் நந்த கோபால் எழுதினானே ஒரு வசனம்......’’உங்கள் எதிர் காலம் உங்கள் கைகளில்’’.
//
அடப்பாவிகளா....
யோவ் உமக்கு வாத்திங்க மேல அம்புட்டு கோவமா சொல்லவே இல்ல...
நிரூ....கலக்கல் சித்திரைப் புத்தாண்டு.உங்களை மாதிரி பின்னூட்டம் தர முடியேல்ல.வந்து பதிவை இன்னொருக்கா படிக்கிறேன் !
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.//
நன்றிகள், சகோ, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இன்னும் சிரிப்பு நிக்கல..//
சீக்கிரமே சிரிப்பை நிறுத்திடுங்க. இல்லேன்னா பின்னாடி ப்ராப்ளம் ஆகிடும்,
@prabashkaran
அருமை நண்பரே//
நன்றிகள் சகோதரம்,
@Mathuran
Mathuran said... [Reply to comment]
//இரண்டு நாட்களின் பின், பாத்றூம் சுவரில் நம்ம சகோ, நக்கல் நந்த கோபால் எழுதினானே ஒரு வசனம்......’’உங்கள் எதிர் காலம் உங்கள் கைகளில்’’.//
ஹா..ஹாஹா
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க//
நல்ல வேளை, அனுபவம் என்று சொல்லாமல் விட்டிட்டீங்க.. தப்பிச்சிட்டேன் சகோ.
@எல் கே
ஹஹா எல்லாமே சூப்பர் நிரூபன்.//
நன்றிகள் சகோ.
@கே.ஆர்.பி.செந்தில்
சுவாரஸ்யமான எழுத்து...//
நன்றிகள் சகோதரம்.
@விக்கி உலகம்
நல்லா இருக்குயா மாப்ள!//
நெசமாவா சகோ... நன்றிகள்.
@shanmugavel
புத்தாண்டு முதல் நாளே கலகல நிரூபன்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் சகோ.
@சரியில்ல.......
இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு.//
அதுதான் ஹை- லைட்ஸ்.... நீ கலக்கு சித்தப்பு....//
சின்னப் பசங்களுக்குப் புரியாது என்று நினைச்சேன்;-))
சீக்கிரமே உங்களுக்குப் புரிந்து விட்டதே..
ஹா...ஹாஅ..
@சரியில்ல.......
பப்ளிகுட்டி பண்ணிப் போடாதேங்கோ.//
.... sema comedy boss...//
ம்....ம்...அஃதே...அஃதே...
@தம்பி கூர்மதியன்
//Prepare) பாடசாலைக்குச் சென்றால் தான் மாணவர்கள் கேட்கும் கேள்விகளிற்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.//
நிரூ நீங்க வாத்தியாரா இருந்தா இப்படிதான் பண்ணியிருப்பீங்களா.?//
சகோ நெசமாத் தான் சகோ, நிச்சயமாக இதே வழியினைத் தான் பின்பற்றியிருப்பேன். நல்ல வேளை நான் வாத்தியாரக்கல்ல.. ஏன்னா பல ஸ்டூடன் வாழ்க்கை நல்லா இருக்கனுமில்ல. அதான்.
@தம்பி கூர்மதியன்
//கேள்வியைக் கேட்டு விட்டு, மாணவனின் வாயை அடக்கிய பின்னர் பாடத்தைத் தொடருவார்கள்.//
நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்.. ஹி ஹி.//
ஆய் சேம்........சேம்...!
@தம்பி கூர்மதியன்
//முதல் நாள் பார்த்த ரஜினி பாடம், //
பாடமா இல்ல படமா.?//
சகோ தமிழ் ஜம்ப் ஆகி விட்டது. அது தான். திருத்தி விட்டேன்..
@தம்பி கூர்மதியன்
//நரம்படி நாகமுத்து!//
பெரிய ரௌடியா இருப்பாரோ?//
நீண்ட நேரமா யோசித்தேன், காமெடிப் பெயர்கள் எதுவுமே மாட்டலை. அது தான் ஒரு சேஞ்சுக்காக வைத்தது இந்தப் பெயரு...
ரொம்ப பெரிய ரவுடியாக இருக்க மாட்டாரு, சுமாராக.;-))
@தம்பி கூர்மதியன்
//நித்திரை கொண்டு தன்னை அவமானப்படுத்திட்டானே எனும் கவலை ஒரு பக்கம் இருக்க//
இதிலென்ன இருக்கு.. அவ்வளவு எளிதில் வராத தூக்கத்தை அசால்ட்டா கொண்டு வந்துட்டோமேன்னு சந்தோசபடவேண்டியது தானே//
இது நமக்குத் தோணாது போய் விட்டதே.. ஆமாம், ஒரு சில ஆசிரியர்கள் கற்பிக்கத் தொடங்கினாலே நித்திரை பிச்சுக் கிட்டு வரும்...
@தம்பி கூர்மதியன்
/குறுக்கு விசாரணை செய்யத் தொடங்க, //
ஆமாம் பெரிய விசயகாந்து.. குறுக்கு விசாரணை செய்யிராராம்.//
ஆஹா.. நாம சீபி ஐ என்று போடவில்லை.. போட்டிருந்தால்... புலன் விசாரணை
செய்திருப்பீங்களே;-))
@தம்பி கூர்மதியன்
//ஓடிப் போன மாணவன், தந்தையாருடன் வருகிறான். //
கெட்ட பையனா இருப்பான் போல.. நானா இருந்தா வீட்டு போயிட்டு ஹெட் மாஸ்டர் செத்துட்டாரு அதனால லீவு உட்டுட்டாங்கன்னு சொல்லியிருப்பேன்..//
அப்பூடி சொல்லித் தப்பிக்கலாம் தான், ஆனால் மறு நாள் காலையிலை ஸ்கூல் போனா மாஸ்டர் கிட்ட மாட்டித் தானே ஆகனும்,
/தெருக்குறளை எழுதினது யாரோ? //
தெருக்குறளை எழுதினது கார்ப்பரேஷன் காரங்க.. எழுத சொன்னது கலைஞர் தாத்தா..//
ஹா..........ஹி.....ஹா...ஓ.......அவ்.........முடியலைச் சகோ.
@தம்பி கூர்மதியன்
//’’உந்த றோட்டு மதில்களிலை, சுவர்களிலை பொட்டையளின்ரை பெயரோடு பொடியங்கடை பேரையும் சேர்த்து எழுதுறது யார் தெரியுமே? என்ரை மகன் தான்.//
அட என்ன ஒரு தந்தை.. கண்கள் கலங்குது இவரை பார்க்கும்போது.. ஆனந்த கண்ணீர்.//
அப்பனுக்கேற்ற பிள்ளையில்ல.....
@தம்பி கூர்மதியன்
/ஹெட் மாஸ்டரும், ஆசிரியரும் ஒருவரை ஒருவர் பார்த்து.. முழித்துக் கொண்டு நிற்கிறார்கள்.//
ஹி ஹி.. இத ஏற்கனவே ஏதோ தமிழ்படத்துல பாத்திருக்கேன்//
ஆஹா.... இது நம்ம ஊர் நாடக கசற்றிலை வந்திருக்கு சகோ.. அப்போ அவங்க தமிழ்ப் படத்திலிருந்து உல்டா பண்ணியிருக்கிறாங்க. நான் நம்ம ஊர் கசற்றிலிருந்து உல்டா பண்ணியிருக்கிறேன். எப்பூடி...
@தம்பி கூர்மதியன்
// அதன் சுகாதாரப் பொறுப்பையும், மேற் பார்வையும் நம்ம வாத்தியார் கிட்ட கொடுக்கிறாங்க. //
இவரு வாத்தியா இல்ல கக்கூஸ் கழுவுற ஆயா வா.?//
நம்ம ஊர் பள்ளிக் கூடங்களிலை Discipline இற்கு என்று ஒரு தனி வாத்தியாரைப் நியமிப்பாங்க. அவர் தான் இதனையெல்லாம் மேற்பார்வை செய்வார். யாரு அசுத்தம் பண்ணுறான்? யாரு பள்ளிக் கூட சுவரை நாசம் பண்ணுறான் என்று பார்த்து பிரம்படி கொடுக்கிற பொறுப்பு அந்த வாத்தியாருக்கு உண்டு.
@தம்பி கூர்மதியன்
// மாணவர்களுக்கு கண்டிப்பான உத்தரவினை வழங்குகிறார். //
யோவ் வந்தா அடிச்சு புடிச்சு ஓடுற இடத்துல என்னயா கண்டிஷனு.?///
ஹி...ஹி....
அடிச்சுப் பிடிச்சு ஓடினால் பின்னாடி வீங்கிடும்;-))
@தம்பி கூர்மதியன்
//.......அது எலக்ரிகுட்டி எனப் பதில் சொல்லுகிறாள் நம்ம சகோ.//
அட பூ படம்..//
சகோ பூ படம் வந்தது, 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், ஆனால் இந்த ஜோக் நம்ம ஊரிலை நான் அறிஞ்சு வைச்சிருந்தது 2001ம் ஆண்டிலிருந்து...
அப்ப பூ படம் நம்ம ஊர் காமெடியை உல்டா பண்ணிட்டாங்களா?
@தம்பி கூர்மதியன்
/சூட்டியின் தந்தையாரினைப் பாடசாலைக்கு அழைத்து வருமாறு ஆசிரியர் சொல்லியனுப்புகிறார்.//
இதுக்கெல்லாமா அப்பாவ கூப்படுவாங்க.. சீ சீ சீ..//
நம்ம ஊரிலை உச்சரிப்பு சரியில்லாட்டியே அப்பாவை அல்லது அம்மாவை கூப்பிட்டு போட்டுக் கொடுத்து, வீட்டில் கவனம் எடுக்கச் சொல்லிப் போடுவாங்க.
@தம்பி கூர்மதியன்
//மூன்றாவது நகைச்சுவை ஒரு புத்தகத்தில் படித்தது.//
அப்ப பூ படம் தான் காப்பியா.?//
பூ படம் வர முன்னாடியே இந்த நகைச்சுவை நம்ம ஊரிலை இருக்கு சகோ....
நெசமாத் தான் சொல்லுறேன்.
@ராஜ நடராஜன்
நீங்க கண்டுபிடிக்கறதுக்கு முன்பே சொல்லிவிடுகிறேன்.இன்னும் பதிவைப் படிக்கவில்லை.இப்பத்தான் அலுவலகம் வந்தேன்.
இப்ப தமிழ்ப் புத்தாண்டு மட்டும் சொல்லிக்கிறேன்.வாழ்த்துக்கள்.//
நல்ல பிள்ளைக்கு இது அழகு....ஹி...ஹி...
ச்....சும்மா....
@அன்புடன் மலிக்கா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நல்ல நகைச்சுவை.
//இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு./
ஏனிந்த இழுவை ஓ அதுவா. ஹா ஹா//
உங்களுக்குப் புரிஞ்சுதா...ஹா....
ஹா..
நன்றிகள் சகோதரம்.
@அன்புடன் மலிக்கா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நல்ல நகைச்சுவை.
//இரண்டாவது, நகைச்சுவை.. அது. வந்து...............அது வந்து..........என் சொந்த தயாரிப்பு./
ஏனிந்த இழுவை ஓ அதுவா. ஹா ஹா//
உங்களுக்குப் புரிஞ்சுதா...ஹா....
ஹா..
நன்றிகள் சகோதரம்.
@! சிவகுமார் !
சிரிப்பு வெடி. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா.//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ. நன்றிகள் சகோ...
@MANO நாஞ்சில் மனோ
யோவ் உமக்கு வாத்திங்க மேல அம்புட்டு கோவமா சொல்லவே இல்ல...//
வாத்திங்க மேல கோபம் எல்லாம் இல்ல சகோ. ஒரு இனம் புரியாத அன்பு இருக்கிறது அவர்கள் மீது...
@ஹேமா
நிரூ....கலக்கல் சித்திரைப் புத்தாண்டு.உங்களை மாதிரி பின்னூட்டம் தர முடியேல்ல.வந்து பதிவை இன்னொருக்கா படிக்கிறேன் !//
நன்றிகள் சகோதரம், புத்தாண்டிற்கு கைவிசேஷம் தராமல் போயிட்டீங்களே;-))
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
மண் வாசனை வீசும் நகைச்சுவை சின வயசில கேட்ட ஜாபகம்
வாத்தியார் பிரம்படி இன்னும் மறக்கமுடியவில்லை நண்பா.
நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிரூபன் அண்ணா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என் சூரியகலா ஆசிரியர்
நினைவுக்கு வெருகுறார்... :))
இப்பத்தான் வசிக்கிறன் முழுசா.வால் வளர்ந்துதான் போச்சு !
புத்தாண்டை கலகலப்பாக தொடங்கியமைக்கும் வாழ்த்துகள் சகோ...
புத்தாண்டு வாழ்த்துக்கள். . நகைச் சுவை பதிவுக்கு நன்றி.
@MANO நாஞ்சில் மனோ
சத்தியமா திருக்குறளை நான் எழுதவே இல்லை...//
அது நம்மளுக்கு முன்னாடியே தெரியும் சகோ...
இதை பப்ளிகுட்டி பண்ணியா நீங்க சொல்லனும்?
@யாதவன்
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
மண் வாசனை வீசும் நகைச்சுவை சின வயசில கேட்ட ஜாபகம்//
உங்களுக்கும், எனது உளம் நிறைந்த பிந்திய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
@Nesan
வாத்தியார் பிரம்படி இன்னும் மறக்கமுடியவில்லை நண்பா.//
ஏன்; இப்போதும் மாறாத தழும்புகள் ஏதாவது இருக்கின்றனவோ;-))
@Ramani
நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றிகள் சகோ,உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
நிரூபன் அண்ணா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
நன்றிகள் சகோ, உங்களுக்கும் எனது இனிய, பிந்திய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
என் சூரியகலா ஆசிரியர்
நினைவுக்கு வெருகுறார்... :))//
ஆகா... ஆகா...சிங்கம் கிளம்பிடுச்சா...
@ஹேமா
இப்பத்தான் வசிக்கிறன் முழுசா.வால் வளர்ந்துதான் போச்சு !//
நக்கலு.. வாலை ஒட்ட நறுக்க வேண்டியது தானே;-))
@நிலாமகள்
புத்தாண்டை கலகலப்பாக தொடங்கியமைக்கும் வாழ்த்துகள் சகோ...//
உங்களைப் போன்ற நண்பர்களின் ஆசிர்வாதம் தான் இந்தக் கல கலப்பிற்கெல்லாம் காரணம். நன்றிகள் சகோ.
உங்களுக்கும் எனது, பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@நிலாமதி
புத்தாண்டு வாழ்த்துக்கள். . நகைச் சுவை பதிவுக்கு நன்றி//
உங்களுக்கும் எனது பிந்திய, உளம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும், நன்றிகள் சகோ.
Post a Comment