’எடுங்கடா அந்த அருவாளை, இவனை ஒரே போடாப் போட்டிடுவம் என்று நீங்க கிளம்ப முன்னாடி, நேரா மேட்டருக்கு வந்துடுறேன் உறவுகளே!
நாம சின்ன வயசிலை பள்ளிக் கூடத்திலை படிக்கும் போது குறளி வித்தைகள் செய்திருப்போம் தானே? குறளி வித்தைகள் என்பது; பள்ளிக் காலத்தில் நாம் செய்த குறும்புகள். அந்தப் பள்ளிக் காலக் குறும்புகள் வரிசையில், ஒரு சில சவாலான விடயங்களை, விவகாரமான மேட்டர்களை யாருமே இலகுவில் மறக்க மாட்டோம்.
முதலாவது விடயம், இது ஒன்றும் பெரிய சாதனை மேட்டர் இல்லை, ஆனால் இந்த வசனத்தை பத்துத் தடவை, நீங்க திக்காமல் சொன்னால், உங்களுக்கான எதிர் காலம் சும்மா.... ஓகோன்னு இருக்கும். அடுத்த வலையுலக ஹீரோ நீங்க தான் என்பதை நான் ஒத்துக்கிறேன்.
’கடற் கரையில உரல் உருளுது’
இதே மாதிரி, உங்களின் நாக்கை ஒரு கையால் பிடித்துக் கொண்டு
‘என்ரை பென்சிலைக் காணவில்லை’
இப்பூடி பத்து தடவை சொல்லனும், இதையும் நீங்க செய்தா வருங்கால வலையுலக முதல்வராகும் வாய்ப்பு, உங்களுக்கே!
அடுத்ததாக இதே மாதிரிப் பல வசனங்கள் மனதிற்குள் புதைந்து கிடக்கிறது. ஆனால் வெளியே சொன்னால் சங்கடங்கள் தான் உருவாகும்,
அரப்பு இண்டைக்கு ஐம்பது ரூபா....இதுவும் ஒரு ஜிங்குஜா வசனம் தான், ஆனால் இதனால் வரும் பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது. இப்பூடி பல குறும்பு வசனங்களைப் பாடசாலைக் காலத்தில் சொல்லி மகிழ்ந்திருக்கிறோம். உங்களுக்கான சவால் இது தான்.
இது போல உங்களுக்கும் பல விடயங்கள் தெரிந்திருக்கும், அவையும் சுவாரசியமாக இருந்தால், நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமே;-)))
அவ்.............................
அரப்பு- சீயாக்காய்.
இந்தப் பதிவைப் படிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது.
|
61 Comments:
அரப்பு!
//கடற் கரையில உரல் உருளுது’// இது யார் தச்ச சட்டை..தாத்தா தச்ச சட்டை!
அரப்பு கொஞ்சம் ஓவர் தான்!
"பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சால் பைத்தியம் பிடிச்ச வைத்தியருக்கு வைத்தியம் பாக்கிற பைத்திய வைத்தியர் யார் " இதை நாலு தரம் மூச்சு விடாம ( உயிர்ச்சேதம் வந்தா நான் பொறுப்பல்ல) தொடர்ந்து சொல்லுங்கோ உங்களையும் ரவுடி என்று ஒத்துக்கொள்ளுறன்.......)))
she sells sea shells on the sea shore
பகிர்வு அருமை......
"கயல்விழி" - நாக்கை பிடித்துக்கொண்டு சொல்லிப்பாருய்யா மாப்ள ஹிஹி!
சகோ....பதிவு ஹி....ஹி....ஹி...
இதெல்லாம் சொன்னா என்ன பரிசு????
// "கயல்விழி" - நாக்கை பிடித்துக்கொண்டு சொல்லிப்பாருய்யா மாப்ள //
நாக்கு வெளியே தள்ளிடும்...
நல்லா நாக்க பிடுங்குற மாதிரி போடுராப்புலே பதிவு!!
Maapu nanum sollava ? venandy venam
மாப்ள நான் ரொம்ப லேட்..
ஏழைக்கிழவன் வாழைபழத் தோல் வழுக்கி கீழே விழுந்தான்
நாக்கு நொந்ததுதன் மிச்சம்.......
hi hi ஹி ஹி
ரோடு ரோலர் ரோடில் உருளுது
கொக்கு நெட்ட கொக்கு,
நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட
***
யார் தச்ச சட்டை , எங்க தாத்தா தச்ச சட்டை
வரவர ஓவர் கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டீங்க!!! உங்களை முதல்ல விக்கிலீக்ஸுக்குப் போட்டுக் கொடுக்கணும்!!
அரப்பு- சீயாக்காய்.
எங்களூரில் அரப்பு பச்சை வர்ணத்தில் இருக்கும், சீயக்காய் காக்கி வர்ணத்தில்!!!
ஹி....ஹி....ஹி. சகோ
எங்க ஊர்ல பொண்ணுக குறளி வித்தைகள் கத்துக்கிறாங்கன்னுதான் அரளி விதைய கலக்கி கொன்னுடறாங்க:(
இது யாரு சுட்ட தோசை...எங்கம்மா சுட்ட தோசை குறளி வித்தை தெரியுமா?
இன்னும் நிறைய குறளி வித்தை சொல்லுங்க...தமிழ் நாட்டுல பலருக்கும் நா திரும்பறெதேயில்ல.
சொன்னார்கள் என்பது சொன்னார்கல் என்று ஆகிப்போனதுக்கு குறளி வித்தைகள் கற்றுக்கொள்ளாததே காரணம்.
தோடுடைய செவியன் நீ யாருடைய பொடியன் 5தடவை தொடர்ந்து சொல்லுங்கள் குடும்பம் சிரிச்சா நான் பொறுப்பில்ல நிரூபன்!
அரப்பு..செம குறும்பய்யா உமக்கு..!
ஆஹா..இதையெல்லாம் உச்சரிக்கிறது கஸ்டம் இதுல பத்து தடவை சொல்லணுமாம்..
பதிவிற்கு 18+போடுங்கோ....எங்கள் பக்கம் அரப்பு இண்டைக்கு ஐம்பது ரூபா என்றல்லாம் சொல்ல மாட்டோம்...அம்மியை சுத்தி அரப்புருண்டை என்பார்கள்....இதை வேகமாக சொல்லும்போது நாக்கு தவறி 18+வார்த்தை வந்துவிடும்
அம்மியில அரப்பு உருண்டை ..இது என்னோட பள்ளி வயசில ஒரு ஆன்ட்டி சொல்லச் சொன்ன வாக்கியம்.
(நம்புங்க சார் )
மனதிற்குள் சொல்லி சிரித்துக் கொண்டேன்.
@செங்கோவி
அரப்பு!//
உஸ்.....சத்தமாகச் சொன்னால் சங்கடமாகிடும்.
@செங்கோவி
//கடற் கரையில உரல் உருளுது’// இது யார் தச்ச சட்டை..தாத்தா தச்ச சட்டை!//
எல்லாம் ஒரே ப்ளோவில வருதே...
ஹா..ஹா...
@கந்தசாமி.
பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சால் பைத்தியம் பிடிச்ச வைத்தியருக்கு வைத்தியம் பாக்கிற பைத்திய வைத்தியர் யார் " இதை நாலு தரம் மூச்சு விடாம ( உயிர்ச்சேதம் வந்தா நான் பொறுப்பல்ல) தொடர்ந்து சொல்லுங்கோ உங்களையும் ரவுடி என்று ஒத்துக்கொள்ளுறன்.......)))//
நம்மளை நம்ப வைக்க, ஏன் இப்புடி ஒரு கொலை வெறி சகோ.
@angelin
she sells sea shells on the sea shore//
lol.....
@விக்கி உலகம்
"கயல்விழி" - நாக்கை பிடித்துக்கொண்டு சொல்லிப்பாருய்யா மாப்ள ஹிஹி!//
வேணாம்....வலிக்குது...
@தமிழ்வாசி - Prakash
சகோ....பதிவு ஹி....ஹி....ஹி...//
நன்றிகள் சகோ.
@vanathy
இதெல்லாம் சொன்னா என்ன பரிசு????//
முதல்ல சொல்லுங்க, அப்புறமா டீலை வைச்சுக்குவம்..
ஹி..ஹி..
@FOOD
இது யார் தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை! வேகமாக சொல்லி பாருங்கள்.//
ஆஹா..ஆஹா...
@Philosophy Prabhakaran
// "கயல்விழி" - நாக்கை பிடித்துக்கொண்டு சொல்லிப்பாருய்யா மாப்ள //
நாக்கு வெளியே தள்ளிடும்...//
அஃதே........அஃதே.......அஃதே.....
@மைந்தன் சிவா
நல்லா நாக்க பிடுங்குற மாதிரி போடுராப்புலே பதிவு!!//
அப்போ, எப்பூடி இன்னைக்குச் சாப்பிடப் போறீங்க...
ஹி..ஹி..
@♔ம.தி.சுதா♔
Maapu nanum sollava ? venandy venam//
இல்ல, பரவாயில்ல சொல்லுங்க சகோ.
@இராஜராஜேஸ்வரி
வியாழக்கிழமை ஏழைக்கிழவன்
வாழைப்பழம் வழுக்கிக் கீழே விழுந்தான் வேகமாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்.//
ஆமா...வழுத்தி...ஹி..ஹி..
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மாப்ள நான் ரொம்ப லேட்..//
இப்பத் தானய்யா..மேட்டரே சூடாகி இருக்கு... நீங்க லேட்டாம்..
வாங்கோ! வாங்கோ!
@டக்கால்டி
ஏழைக்கிழவன் வாழைபழத் தோல் வழுக்கி கீழே விழுந்தான்//
நன்றிகள் சகோ.
அஃதே...........அஃதே..!
@akulan
நாக்கு நொந்ததுதன் மிச்சம்.......//
நிஜமாவா....சரி, இன்னோரு தடவை ட்ரை பண்ணிப் பாருங்க சகோ.
@சி.பி.செந்தில்குமார்
hi hi ஹி ஹி//
சிரிக்கிற வுட்டிட்டு, பதிவிலை சொன்னதை முதலில் ரிஜாலிட்டியாக செய்து பார்க்கிறது..
அவ்...........
@நா.மணிவண்ணன்
ரோடு ரோலர் ரோடில் உருளுது//
எல்லோர் கிட்டயும், ஒவ்வோர் மேட்டர் இருக்குதே..
ஹா...ஹா...
@bigil
கொக்கு நெட்ட கொக்கு,
நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட
***
யார் தச்ச சட்டை , எங்க தாத்தா தச்ச சட்டை//
ஆகா....நன்றிகள் சகோ.
@ஆதவா
வரவர ஓவர் கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டீங்க!!! உங்களை முதல்ல விக்கிலீக்ஸுக்குப் போட்டுக் கொடுக்கணும்!!
அரப்பு- சீயாக்காய்.
எங்களூரில் அரப்பு பச்சை வர்ணத்தில் இருக்கும், சீயக்காய் காக்கி வர்ணத்தில்!!!//
சகோ, இதில் டபுள் மீனிங் ஒன்றும் இல்லையே.
@ரேவா
ஹி....ஹி....ஹி. சகோ//
ஆஹா....ஆஹா...இப்போதும் சிரிக்கிறீங்களா? இல்லை நிறுத்திட்டீங்களா.
@ராஜ நடராஜன்
எங்க ஊர்ல பொண்ணுக குறளி வித்தைகள் கத்துக்கிறாங்கன்னுதான் அரளி விதைய கலக்கி
கொன்னுடறாங்க:(//
அவ்........முடியலை சகோ.
@ராஜ நடராஜன்
இது யாரு சுட்ட தோசை...எங்கம்மா சுட்ட தோசை குறளி வித்தை தெரியுமா?//
இப்போ தான் நினைவிற்கு வந்திச்சு சகா.
@ராஜ நடராஜன்
இன்னும் நிறைய குறளி வித்தை சொல்லுங்க...தமிழ் நாட்டுல பலருக்கும் நா திரும்பறெதேயில்ல.
சொன்னார்கள் என்பது சொன்னார்கல் என்று ஆகிப்போனதுக்கு குறளி வித்தைகள் கற்றுக்கொள்ளாததே காரணம்.//
இது இங்கிபீசுக் காலம் சகோ...எல்லாமே இப்புடித் தான் மாறும்..
நன்றிகள் சகோ.
@Nesan
தோடுடைய செவியன் நீ யாருடைய பொடியன் 5தடவை தொடர்ந்து சொல்லுங்கள் குடும்பம் சிரிச்சா நான் பொறுப்பில்ல நிரூபன்!//
இதில் எந்தவித மாற்றங்களும் இல்லையே...அவ்.......
@ஆர்.கே.சதீஷ்குமார்
அரப்பு..செம குறும்பய்யா உமக்கு..!//
புரிஞ்சுதா...ஹி...ஹி...
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஆஹா..இதையெல்லாம் உச்சரிக்கிறது கஸ்டம் இதுல பத்து தடவை சொல்லணுமாம்..//
சும்மா...ட்ரை பண்ணிப் பார்க்கிறது சகோ.
@ரஹீம் கஸாலி
பதிவிற்கு 18+போடுங்கோ....எங்கள் பக்கம் அரப்பு இண்டைக்கு ஐம்பது ரூபா என்றல்லாம் சொல்ல மாட்டோம்...அம்மியை சுத்தி அரப்புருண்டை என்பார்கள்....இதை வேகமாக சொல்லும்போது நாக்கு தவறி 18+வார்த்தை வந்துவிடும்//
சகோ, கொஞ்சம் சூசகமாக சொல்லுறது...யாரவது அடிக்க வந்திடப் போறாங்க...
பப்ளிக்! பப்ளிக்!
@சிவகுமாரன்
அம்மியில அரப்பு உருண்டை ..இது என்னோட பள்ளி வயசில ஒரு ஆன்ட்டி சொல்லச் சொன்ன வாக்கியம்.
(நம்புங்க சார் )//
நம்பலாம் தான்...ஆனால் ஆன்ட்டி என்னும் போது தான் கொஞ்சம் உதைக்குதே;-))
அவ்..........
@Dr.எம்.கே.முருகானந்தன்
மனதிற்குள் சொல்லி சிரித்துக் கொண்டேன்.//
கொஞ்சம் சத்தமா, வெளியே சொன்னால் தான் மேட்டரே சூடாக இருக்கும் சகோ.
நீங்க சண்டை போட லாயக்கில்லை ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
நீங்க சண்டை போட லாயக்கில்லை ஹி ஹி//
ஏனுங்க சகோ, சும்மா சிவனே என்று இருக்கிற என்னைச் சுதி ஏத்தி விட்டு, கூத்துப் பார்க்க நினைக்கிறீங்களே! இது நியாயமா?
சாச்சி தச்ச சட்ட சாச்சாக்கு கட்ட சாச்சா தச்ச சட்ட சாச்சிக்கு கட்ட
சாச்சி- சித்தி
சாச்சா - சித்தப்பு
Post a Comment