இன்று முதல் மகளிர் அணியினரின் சாபத்தில் இருந்து தப்பும் நோக்குடன் என் வலைப் பதிவில் ‘ஈழத்துச் சுவையருவி’ எனும் பகுதியினை ஆரம்பிக்கவுள்ளேன். இந்த ஈழத்துச் சுவையருவியி;ல் ஈழத்து மண் வாசனை கமழும் இலங்கையின் கலாச்சார உணவு வகைகள், சிற்றுண்டிகள், எனப் பல வகையான அயிட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். எல்லோரும் சுவைக்க ரெடியா?
‘இல்லத் தரசிகளுக்கும், மனைவிமாரைக் கண் கலங்காமல் காலம் பூராவும் வைச்சுக் காப்பாற்றுவேன் எனும் சபதத்தோடு இருக்கும் நண்பர்களுக்கும்(வெங்காயம் நறுக்க விடாமல்- தாங்களே மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் கடமை உணர்வு உள்ள நண்பர்கள்), நம்ம ஓட்ட வடை நாராயணன் மாதிரி வெளிநாடுகளில் தமக்குத் தாமே சமையல் செய்து உண்ணும்- தனித்திருக்கும் ஜீவன்களுக்கும், மற்றும் பலருக்கும்...... இங்கே நான் வழங்கும் சமையற் குறிப்புக்கள் பயன் தரும் எனும் நம்பிக்கையில் எல்லாம் வல்ல ‘வலையாண்டார் வலைப் பதிவுச் சுவாமியை’ வேண்டிக் களமிறங்குகிறேன்.
ஈழத்துச் சுவையருவிக்குள் இறங்குவோமா...
இலங்கை உணவுகளை, கம கம வாசனையுடன் நீங்கள் கறி காய்ச்சி/ கறி ஆக்கி உண்ண வேண்டும் என்றால் உங்களுக்குத் தேவையான, மிக முக்கியமான ஒரு ’திங்ஸ்’ தான் மிளகாய்த் தூள். என்னுடைய சமையற் குறிப்புக்களில் ஈழத்துக் கலாச்சார உணவு வகைகளை மட்டுமே உங்களுக்காய் நான் இங்கே பகிர்ந்து கொள்வதால் நீங்கள் இந்த மிளகாய்த் தூள் இல்லாமல் சமையலில் இறங்க முடியாது.
அப்போ கண்டிப்பாக, முதல் முயற்சியாக மிளகாய்த் தூள் அரைக்கும் முயற்சியில் இறங்குங்கள். வெளி நாடுகளில் உள்ள நண்பர்கள் இந்த மிளகாய்த் தூளை உங்கள் நாடுகளில் உள்ள இலங்கை, இந்தியக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். வெளி நாடுகளில், மிளகாய்த் தூள் வாங்க முடியாதவர்கள் இந்த Recipes இனைப் பின் பற்றி மிளகாய் தூளைத் தயாரித்துக் கொள்ளலாம், இல்லை என்றால் உங்கள் உறவினர்களிடம் சொல்லி, பார்சல் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வருட இறுதியில் எனது உலகளாவிய மிளகாய்த் தூள் Selling Exporting நிறுவனம் ஒன்றினை தொடங்க இருக்கிறேன். சிலோன் மிளகாய் தூள் வாங்க, யாராவது விரும்பினால் இப்போதே ஆடர் பண்ணிக் கொள்வது நல்லது.
இனி மிளகாய்த் தூள் எப்படி அரைப்பது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
1kg செத்தல் மிளகாய்(Dry Red chilli)
1/2kg மல்லி
1/4kg கிலோ பெருஞ் சீரகம்/ பெரிய சோம்பு
150g சின்னச் சோம்பு/ சிறு சீரகம்
100g மிளகு
கறி வேப்பிலை - உங்கள் விருப்பத்திற்கேற்ற வாறு தேவையான அளவு
50g கராம்பு
25g கறுவாப் பட்டை
100g ஏலக்காய்
10g அன்னாசிப் பூ( சிறிய கையளவு)
10g ஜாதிபத்தினி
25g மஞ்சள் கட்டை
மேற் கூறப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி மிளகாய்த் தூளைத் தயாரிப்பது என்று பார்ப்போம்.
*மஞ்சள் கட்டையினைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
*செத்தல் மிளகாயினையும் இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்
*வானலியில்/ அடுப்பில் ஒரு இரும்புச் சட்டியினை வைத்துச் சூடாக்கத் தொடங்குங்கள்
*சூடான சட்டியினுள் மல்லி, கறி வேப்பிலை, மிளகு, நறுக்கிய மஞ்சள் கட்டைகள் முதலியவற்றை ஒன்றாகக் கொட்டிச் சூடாக்கவும்/ வறுக்கவும்.
*மல்லியானது வெடிக்கும் பருவத்தில் இறக்கவும்.
* இதன் பின்னர், ஏனைய பொருட்களைத் தனித் தனியாகச் சூடாக்கவும்.
* பின்னர் மிளகாயை மட்டும் தனியாக, லேசான தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து வறுக்கவும். 1kg மிளகாய்க்கு, இரண்டு சிறிய தேக் கரண்டி(Small tea spoon) தேங்காய் எண்ணையினைச் சேர்க்கவும்.
*மிளகாய் வறுத்து முடிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். மிளகாயில் உள்ள சூடு ஆறியதும் எல்லா வகையான பொருட்களையும், ஒன்றாகக் கலந்து/ மிக்ஸ் பண்ணி ஒரு அரைக்கும் ஆலை அல்லது மில்லில் கொடுத்து அரைக்கவும்.
*மில்லில் அரைத்ததும் உங்களுக்கு, கம, கமவென வாசனை வீசும் மிளகாய் தூள் கிடைக்கும், அதனை வீட்டிற்கு கொண்டு வந்து, பேப்பரில் கொட்டி, ஆற விடவும். பின்னர் போத்தலில் அடைத்து, உங்கள் சமையற் தேவைக்கேற்றாற் போல யூஸ் பண்ணத் தொடங்கலாம்.
*ஒரே, ஒரு கண்டிப்பான விசயம் என்ன என்றால், மிளகாயினைக் கருக்காது, பதமாகும் வரை வறுக்கவும். மிளகாய் கருக்கினால் நறு மணம் வீசாது, நாற்றம் தான் அடிக்கும்.
இனி எனது அடுத்தடுத்த பதிவுகளில் இந்தக் கம, கம என வாசமடிக்கும் இலங்கை மிளகாய்த் தூளின் துணையோடு, சுவையான கோழிக் கறி, ஆட்டிறைச்சிக் கறி, உருளைக் கிழங்குப் பிரட்டல், கத்தரிக்காய் வற்றல், இறால் கறி, மரக்கறி கூழ், மாமிசக் கூழ், கோழிப் பொங்கல், முதலிய பல வகையான, வாயில் நாவூற வைக்கும் உணவுகளைச் சமைப்பது எப்படி என்பதனையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மிளகாய்த் தூள் கொஞ்சம் காரம் கூடியது, வீட்டிற்குத் திருடன் வந்தாலோ அல்லது, வீட்டில் யாருடனும் சண்டை என்றாலோ இதனை நீங்கள் ஒரு தற் காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
********************************************************************************
டிஸ்கி: நீண்ட நாட்களின் பின்னர், பள்ளிக் கால நண்பர்களான அலுக்கோசும், குளுக்கோசும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அலுக்கோஸ்: உன்னைச் சந்தித்தது ரொம்பச் சந்தோசம் மச்சான். நான் அவசர அவசரமாக வீட்டை போக வேணும் மச்சான், உன்னை பிறகு ஒரு நாள் மீட் பண்ணுறன் மச்சான்.
குளுக்கோஸ்: ஏன் மச்சான், இண்டைக்குத் தானே நிறைய நாளுக்குப் பின்னர், என்னைக் கண்டிருக்கிறாய். வாவன் கொஞ்ச நேரம் ஜாலியா அரட்டை அடிப்பம்.
அலுக்கோஸ்: இல்லையடா, மச்சான், நான் வீட்டை போக வேணும், என்ரை மனுசி எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பா. அதை நினைச்சால் தான் ஒரே பீலிங்ஸ்சாக இருக்கடா மச்சி.
குளுக்கோஸ்: என்னடா, என்னாலை நம்பவே முடியலை; இந்தக் காலத்திலை, இப்படி ஒரு பொண்டாட்டியோ! அதுவும், உனக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறாளோ?
அலுக்கோஸ்: இல்லையடா மச்சான், நான் போய்த் தான் அவளுக்கும் சேர்த்துக் சமைச்சுக் கொடுக்க வேணும்;-) , நான் கிளம்பட்டோ மச்சான்...
|
98 Comments:
//சாபத்தில் இருந்து தப்பும் நோக்குடன்// ;)) உண்மையில் வித்தியாசமான முயற்சிதான், பாராட்டுக்கள் நிரூபன். ;)
எனக்கு மரக்கறிக் குறிப்பு மட்டும்தான் வேணும்.
யோவ் மாப்ள இது கலாய்க்கும் பதிவு மாட்டப்போறே நீ ஹி ஹி!
கோழிப் பொங்கல், ....?????
... :-)))))
இது சாதாப்பதிவா? உள்குத்துப்பதிவா? ஹி ஹி
ஆஹா! அலுக்கோசும்,குலுக்கோசும் சூப்பர்.
வணக்கம் உறவுகளே! இன்று முதல் வலைப் பதிவில் ஒரு வித்தியாசமான முயற்சியினைக் கொண்டு வரலாம் எனும் நோக்கத்தோடு களம் இறங்குகிறேன். நேற்று இரவு தான் ’டன்சல் வோஷிங்கன்’(Danzel washington) என் கனவில் வந்தார்.
யாரு இவர்? ஏதோ வாட்டப் பம்மிண்ட பேர் மாதிரி கிடக்கு!!
இன்று முதல் மகளிர் அணியினரின் சாபத்தில் இருந்து தப்பும் நோக்குடன் என் வலைப் பதிவில் ‘ஈழத்துச் சுவையருவி’ எனும் பகுதியினை ஆரம்பிக்கவுள்ளேன். இந்த ஈழத்துச் சுவையருவியி;ல் ஈழத்து மண் வாசனை கமழும் இலங்கையின் கலாச்சார உணவு வகைகள், சிற்றுண்டிகள், எனப் பல வகையான அயிட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.//////////
எனக்கும் பெண் பதிவர்களின் சாபம் இருக்கு! நானும் பிரெஞ்சு கிச்சன் என்று ஒரு பகுதி தொடங்கவா?
நம்ம ஓட்ட வடை நாராயணன் மாதிரி வெளிநாடுகளில் தமக்குத் தாமே சமையல் செய்து உண்ணும்- தனித்திருக்கும் ஜீவன்களுக்கும்,/////////////
நான் ' தனியாக ' இருக்கிறேன் என்று யார் சொன்னது? ஹி..........ஹி....ஹி.........!!
இலங்கை உணவுகளை, கம கம வாசனையுடன் நீங்கள் கறி காய்ச்சி/ கறி ஆக்கி உண்ண வேண்டும் என்றால் உங்களுக்குத் தேவையான, மிக முக்கியமான ஒரு ’திங்ஸ்’ தான் மிளகாய்த் தூள். என்னுடைய சமையற் குறிப்புக்களில் ஈழத்துக் கலாச்சார உணவு வகைகளை மட்டுமே உங்களுக்காய் நான் இங்கே பகிர்ந்து கொள்வதால் நீங்கள் இந்த மிளகாய்த் தூள் இல்லாமல் சமையலில் இறங்க முடியாது. //////////////
இது உண்மைதான்! அதுவும் நல்ல இறைச்சிக்கறியளுக்கு எங்கட அம்மாமார், நல்லா தூளை அள்ளிப்போட்டு காய்ச்சுவினம்! ஊதி ஊதி சாப்பிடுற சுகமே சுகம்!!
அப்போ கண்டிப்பாக, முதல் முயற்சியாக மிளகாய்த் தூள் அரைக்கும் முயற்சியில் இறங்குங்கள். வெளி நாடுகளில் உள்ள நண்பர்கள் இந்த மிளகாய்த் தூளை உங்கள் நாடுகளில் உள்ள இலங்கை, இந்தியக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.///////////
இங்கு ' அசல் யாழ்ப்பாணத்து தூள் ' என்று லேபல் ஒட்டி விக்கிறாங்கள்! அரைக்கிலோ தூள் ஐஞ்சம்பது யூரோ ! - இலங்கைப் பெறுமதியில் - 850 ரூபா!!
இந்த மிளகாய்த் தூள் கொஞ்சம் காரம் கூடியது, வீட்டிற்குத் திருடன் வந்தாலோ அல்லது, வீட்டில் யாருடனும் சண்டை என்றாலோ இதனை நீங்கள் ஒரு தற் காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.///////////
ம்.......... நல்ல ஆயுதம் தான்!! ம்..... பழைய நினைவுகள்...........!!!
@இமா
//சாபத்தில் இருந்து தப்பும் நோக்குடன்// ;)) உண்மையில் வித்தியாசமான முயற்சிதான், பாராட்டுக்கள் நிரூபன். ;)
எனக்கு மரக்கறிக் குறிப்பு மட்டும்தான் வேணும்.//
நன்றிகள் சகோ, மரக்கறிக் குறிப்பு நிச்சயமாய் தருவேன். சமைச்சுப் பார்த்து டேஸ்ட்டா இருந்தால் எனக்கும் அனுப்பி விடுங்கோ.
@விக்கி உலகம்
யோவ் மாப்ள இது கலாய்க்கும் பதிவு மாட்டப்போறே நீ ஹி ஹி!//
கோர்த்து விடுறதுக்கென்றே அலையுறீங்க...ஹி...ஹி..
சகோ, இது சீரியஸ் பதிவு சகோ,
@சி.பி.செந்தில்குமார்
இது சாதாப்பதிவா? உள்குத்துப்பதிவா? ஹி ஹி//
வம்பிலை மாட்டனுங்கிற நோக்கத்தோடையே காலையில் எழுந்திருக்கிறாங்க...
நிஜமாவே சீரியஸ் பதிவு சகோ
@shanmugavel
ஆஹா! அலுக்கோசும்,குலுக்கோசும் சூப்பர்.//
நன்றிகள் சகோ...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் உறவுகளே! இன்று முதல் வலைப் பதிவில் ஒரு வித்தியாசமான முயற்சியினைக் கொண்டு வரலாம் எனும் நோக்கத்தோடு களம் இறங்குகிறேன். நேற்று இரவு தான் ’டன்சல் வோஷிங்கன்’(Danzel washington) என் கனவில் வந்தார்.
யாரு இவர்? ஏதோ வாட்டப் பம்மிண்ட பேர் மாதிரி கிடக்கு!!//
இல்லைச் சகோ, இவர் தான் ஒரு பேமசான ஹாலிவூட் நடிகர். Unstoppable train, " The taking of palem 123" உட்பட பல சூப்பர் ஹிட் ஆக்சன் படங்களில் நடித்த ஆளு..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எனக்கும் பெண் பதிவர்களின் சாபம் இருக்கு! நானும் பிரெஞ்சு கிச்சன் என்று ஒரு பகுதி தொடங்கவா?//
ஆமா.. இதுவும் நல்லாத் தானே இருக்கு. தொடங்குங்க சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நான் ' தனியாக ' இருக்கிறேன் என்று யார் சொன்னது? ஹி..........ஹி....ஹி.........!!//
அப்ப என்ன பிரெஞ்சுக்காரி கூடவா;-)))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இது உண்மைதான்! அதுவும் நல்ல இறைச்சிக்கறியளுக்கு எங்கட அம்மாமார், நல்லா தூளை அள்ளிப்போட்டு காய்ச்சுவினம்! ஊதி ஊதி சாப்பிடுற சுகமே சுகம்!!//
பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறது போல இருக்கே. வெகு விரைவிலை சூடான, சுவையான வாசனை மிக்க கோழிக் கறி வைப்பதெப்படி என்று ஒரு பதிவு போட்டாப் போச்சு, நீங்களும் சமையற்காரர் ஆகிடுவீங்க.
ஹி...ஹி...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இங்கு ' அசல் யாழ்ப்பாணத்து தூள் ' என்று லேபல் ஒட்டி விக்கிறாங்கள்! அரைக்கிலோ தூள் ஐஞ்சம்பது யூரோ ! - இலங்கைப் பெறுமதியில் - 850 ரூபா!!//
பரவாயில்லையே... இப்போதைய எங்கள் உள்ளூர் விலைக்கு நிகராகத் தான் வெளி நாடுகளிலும் விற்கிறார்கள் போல இருக்கே,
ஒறிஜினல் தூள் தானா என்று செக் பண்ணிப் பார்க்கவும், செங்கட்டியைக் கலந்து மிக்ஸ் பண்ணியும் வித்திடுவாங்க சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இந்த மிளகாய்த் தூள் கொஞ்சம் காரம் கூடியது, வீட்டிற்குத் திருடன் வந்தாலோ அல்லது, வீட்டில் யாருடனும் சண்டை என்றாலோ இதனை நீங்கள் ஒரு தற் காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.///////////
ம்.......... நல்ல ஆயுதம் தான்!! ம்..... பழைய நினைவுகள்...........!!!//
ம்....ம்.. மறக்க முடியுமா சகோ.
@FOOD
சி.பி.செந்தில்குமார் said...
இது சாதாப்பதிவா? உள்குத்துப்பதிவா? ஹி ஹி//
ஆரம்பிச்சிட்டீங்களா?//
அப்பிடிப் போடுங்க அருவாளை..
ஹி...ஹி...
@FOOD
வாழ்துக்கள், சகோ.//
நன்றிகள் சகோ.
@FOOD
கலக்குங்க, கலக்குங்க.//
நன்றிகள் சகோ.
கோழிப்பொங்கல் பற்றிய உங்கள் விளக்கம் பார்த்தேன் சகோ! நான் சாப்பிட்டதில்லை.... ம்ம்ம் உங்களைச் சந்திக்கும்போது பார்க்காலாம்! :-)
இன்ட்லியில தட்டிபுட்டு கிளம்புறேன்..
மாப்ள நீங்களுமா?
தலைப்பு டெரரா இருக்கேன்னு உள்ளவந்தா ?
கடும் காரமான மிளகாய்த்தூள் தாயாரிக்காதீர்கள் கொஞ்சம் இதமான தூள்தான் இங்கே விற்பனை ஆகும் அதிக உறைப்பு குளிர் தேசத்திற்கு கூடாது!இப்போதே கொள்முதல் செய்யத்தயார் விரைவில் கோடைகாலம் வரும் நண்பர்கள் கண்களில் தூவலாம்!
விளம்பரம் யாரு செய்வார் நம்ம ஜனாவா?மதிசுதாவா?இல்லை தலைவர் மனோவா!
நாம மிளகாய் தூள் போடாமலே சமைப்பம்ல்ல.......))))
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
ப்லோக்கேரில் பெண் பதிவர்கள் குறைவ்வு ஆனாலும் எல்லோரும் பெண் பதிவர்களிடம் இருந்து பின் உட்டம் பெற விரும்புகிறார்கள் ஏன்
நிரூபன் கல்யாணத்துக்கு தயாராகுறார் போல தெரியுதே,,,,,,,,,,,,,ஹிஹிஹி
//இலங்கை உணவுகளை, கம கம வாசனையுடன் நீங்கள் கறி காய்ச்சி/ கறி ஆக்கி உண்ண வேண்டும் என்றால் உங்களுக்குத் தேவையான, மிக முக்கியமான ஒரு ’திங்ஸ்’ தான் மிளகாய்த் தூள்.//
நினைச்சேன்!திங்ஸ முதலில் குறிப்பிட்டது நல்லாதாப்போச்சு:)
//இந்த மிளகாய்த் தூள் கொஞ்சம் காரம் கூடியது, வீட்டிற்குத் திருடன் வந்தாலோ அல்லது, வீட்டில் யாருடனும் சண்டை என்றாலோ இதனை நீங்கள் ஒரு தற் காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.//
இதுவும் ஒரு ஆயுதம்னு போட்டு குடுத்திட்டியே மக்கா....
அப்பிடியே சுடுதண்ணி எப்பிடி பண்றதுன்னும் சொல்லி குடுங்க ஹே ஹே ஹே ஹே ஹே....
இதையெல்லாம் போயி வாங்கி பண்றதுக்கு, சிபி மாதிரி எனக்கு டைம் இல்லியே மக்கா...
வெயிட் போயி ஓட்டு போட்டுட்டு வந்துர்றேன்....
தலைப்பே கலவரமா இருக்கே....
// சி.பி.செந்தில்குமார் said...
இது சாதாப்பதிவா? உள்குத்துப்பதிவா? ஹி //
உருப்படியா சிந்திக்கவே மாட்டியாய்யா நீ...
48
49
50
மிளகாய்த்தூளில் கலப்படம் செய்வீர்களா சகோதரம்!
நீங்கள் கொச்சின் மிளகாயில் அரைப்பீர்களா இல்லை கைதடி மிளகாயில் தூள் தாயரிப்பீர்களா இதை அண்ணா கோப்பியிடம் கொடுப்பீர்களா!
சகோ!கோழிக் கறின்னா கோயம்புத்தூர்,செட்டி நாட்டுக்குழம்புகள்தான் உசத்தி:)
முன்னாடியெல்லாம் கோழியை துரத்திப்புடிக்கிறதே ஒரு தனிக்கலை.அப்புறம் கழுத்தை நசுக்கி முடியெல்லாம் ஒவ்வொன்னா பிச்சி பிச்சு தோலை நெருப்புல வாட்டி அப்புறமா குடல் எடுத்து துண்டு பண்ணி கழுவி அம்மியில மசாலா அரைச்சு வெங்காயம்,கருவேப்பிலையெல்லாம் வறுத்து அப்புறமா கோழி,மசாலாவெல்லாம் வறுத்து,தேங்காய் அரைச்சு கடைசில கொஞ்சம் கொதிக்க விட்டு எடுத்தா அந்த வீட்ல இன்றைக்கு கோழிக்கறி செய்றாங்கன்னு வீதி,தெருவெல்லாம் தெரியும்.
இப்பத்தான் பிராய்லர்,ரெடிமேட் மசாலான்னு வந்து மக்கள் தினமும் கோழி தின்ன ஆரம்பிச்சாட்டங்க.ஆனா பழைய கோழிக்கறி வாசம் போயே போயிந்தி:)
//Nesan said...
மிளகாய்த்தூளில் கலப்படம் செய்வீர்களா சகோதரம்!//
ஆமாம்.ரெசிபில இருக்குறதெல்லாம் கலப்படனும்:)
உங்கள் தயாரிப்பு உள்ளூருக்கு மட்டுமா இல்லை அரபு தேசத்திற்கும் அனுப்புவீர்களா!மிளகாய்த்தூள் வாங்க கியூவில் நிற்கனுமா சங்கக்கடையில்!
ஹலோ... நான் என்னவோ ஏதோன்னு நெனச்சு உள்ள வந்தா, சமையல் ஐய்ட்டமா போட்டு ஏமாத்திட்டீங்களே... சூடான செய்தின்னு சொல்லிட்டு காரமா போட்டிருக்கீங்க???
அடப் பாவிப் பொடியா...டன்சல் வோஷிங்டனா யாரு அது.என்ன கண்டு பிடிச்சிருக்கார்.
ஓ...மிளகாய்த்தூளோ !
இருக்கட்டும்...மாதேவி அக்கா பார்க்கிறதில்லப்போல உங்கட பதிவை !
நானெல்லாம் தூள் இங்க கடைகளில வாங்கிறதில்ல.அப்பப்ப கிரைண்டரில அரைச்சே போடுறன் !
வீட்டில சமைச்சும் குடுத்திட்டு பதிவுக்கும் கும்மிக்கு எப்பிடியப்பு நேரம் கிடைக்குது.நடுவில வேலைக்கும் போகவேணும்.அவவைப் பள்ளிக்கூடமோ வேலைக்கோ கூட்டிப்போயும் வரவேணும்.பிறகு ரிலாக்ஸ்....எப்பிடி எப்பிடி !
செம ஹட் மச்சி..
குளுக்கோஸ் கதை சூப்பர்
இதுதான் சூடான மேட்டரா
ஈழத்து உணவுகளை பற்றி எழுதுங்க பாஸ்
இந்த மிளகாய் போடி ஆரம்பத்தை பார்த்தா பின்னாடி சிக்கன்,மட்டன் வகையறா எல்லாம் காத்திருக்கும் போலிருக்கே ஐயம் வெயிட்
பெண்களுக்கான சுடன மேட்டர் கொஞ்சம் கரமா போச்சு நண்பா
@Chitra
கோழிப் பொங்கல், ....?????
... :-))))//
கோழிப் பொங்கல் எனப்படுவது யாதெனில், சர்க்கரைப் பொங்கலினைப் போன்று தான், இதனையும் பானையில் சமைப்போம் சகோ. கோழியினை துண்டு துண்டாக வெட்டி, அதற்குள் அரிசியையும், கோழி இறைச்சியையும், தூள், மற்றும் வாசனைத் தானியங்களையும் ஒன்றாகப் போட்டு ஒரு சாம்பார் போலக் காய்ச்சுவது தான் கோழிப் பொங்கல் சகோ.
வெகு விரைவில் கோழிப் பொங்கல் தொடர்பாக ஒரு பதிவு போடுறேன்.
நன்றிகள் சகோ
@FOOD
நல்ல நல்ல பயனுள்ள குறிப்புகள்//
நெசமாவா, அப்போ, இனிமே உங்க வீட்டிலை நீங்க தான் ச்மையல் என்பதை கன்போர்மா சொல்லுறீங்க.
நன்றிகள் சகோ
@ஜீ...
கோழிப்பொங்கல் பற்றிய உங்கள் விளக்கம் பார்த்தேன் சகோ! நான் சாப்பிட்டதில்லை.... ம்ம்ம் உங்களைச் சந்திக்கும்போது பார்க்காலாம்! :-)//
நீங்களும், சகோ ஜனாவும் ஒரு மார்க்கமாகத் தான் அலையுறீங்க. என்னையைச் சந்திக்கும் போது சமைக்க வைத்து சாப்பாட்டைக் குப்பையில் கொட்டுவதென்றே முடிவு பண்ணியாச்சா;-))
ஹி....ஹி...
@தம்பி கூர்மதியன்
இன்ட்லியில தட்டிபுட்டு கிளம்புறேன்..//
ஏன் மேட்டர் புடிக்கலையே, கொஞ்சம் உள்ளார்ந்து பார்க்கிறது;-))
எதிர்காலத்தில, வருங்காலத்தில யூஸ்புல் ஆகுமில்ல.
ஹி....ஹி...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மாப்ள நீங்களுமா?//
நீங்க வாழ்க்கையில செய்யாத ஒன்னையா நான் செய்கிறேன்... அப்போ சமையலும் நீங்க தான் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்றீங்க..வாழ்க! நம்ம சகோ வாழ்க!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தலைப்பு டெரரா இருக்கேன்னு உள்ளவந்தா ?//
என்ன வசனத்தை முடிக்காமலே கிளம்பிட்டீங்க...
உள்ள வந்தா, இப்பூடிக் காரத்தைக் கண்ணில தூவி நாசம் பண்ணிட்டியே பாவி...என்று ஏசுறீங்க போல இருக்கே.
@Nesan
கடும் காரமான மிளகாய்த்தூள் தாயாரிக்காதீர்கள் கொஞ்சம் இதமான தூள்தான் இங்கே விற்பனை ஆகும் அதிக உறைப்பு குளிர் தேசத்திற்கு கூடாது!இப்போதே கொள்முதல் செய்யத்தயார் விரைவில் கோடைகாலம் வரும் நண்பர்கள் கண்களில் தூவலாம்!//
ஆஹா..ஆஹா.. நம்ம கம்பெனிக்கு முத கஸ்டமர் மாட்டிக்கிட்டாரு...
கண்களிலை தூவலாமோ;-))
எல்லோரும் ஒரு மார்க்கமாகத் தான் அலையுறீங்க...
@Nesan
விளம்பரம் யாரு செய்வார் நம்ம ஜனாவா?மதிசுதாவா?இல்லை தலைவர் மனோவா!//
அந்தத்த நாடுகளிற்கேற்ற மாதிரி, நாடு கடந்து ஆட்களை நியமிக்க மாட்டமா?
@இராஜராஜேஸ்வரி
உண்மையில் வித்தியாசமான முயற்சி
அலுக்கோசும்,குலுக்கோசும் மாதிரி அருமையாய் ச்மையுங்கள்.வாழ்த்துக்கள்.//
ஹா...ஹா..ஹி....
நன்றிகள் சகோ.
உங்கள் எல்லோருக்கும் காலம் பூராக சமைச்சுத் தாற மாதிரி கணவன் அமைஞ்சிட்டா ஓக்கே என்பது போலச் சொல்லுறீங்க..
வாழக மகளிர்!
@கந்தசாமி.
நாம மிளகாய் தூள் போடாமலே சமைப்பம்ல்ல.......))))//
எப்பூடி மஞ்சள் தூள் போட்டா...
கவனம் சகோ, அதிக மஞ்சள் தூள் போட்டால் எதிர் காலத்தில் வம்சத்தையே அழித்து விடுமாம்.
@யாதவன்
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்//
கடவுள் காக்க, நீங்க உன் சமையல் அறையில்... நான் உப்பா சர்க்கரையா...
என்று பாடவில்லை.
@யாதவன்
ப்லோக்கேரில் பெண் பதிவர்கள் குறைவ்வு ஆனாலும் எல்லோரும் பெண் பதிவர்களிடம் இருந்து பின் உட்டம் பெற விரும்புகிறார்கள் ஏன்//
அது தான் எனக்கும் தெரியால் இருக்கே, ஏன்?
பெண் பதிவர்கள் என்றால் பொறுமையாக வாசித்து அருமையான கருத்துக்கள் சொல்லுவார்கள் எனும் நம்பிக்கை தான் காரணம் என்று நினைக்கிறேன்.
@கந்தசாமி.
நிரூபன் கல்யாணத்துக்கு தயாராகுறார் போல தெரியுதே,,,,,,,,,,,,,ஹிஹிஹி//
எடுங்கடா, அந்த அருவாளை...
@ராஜ நடராஜன்
//இலங்கை உணவுகளை, கம கம வாசனையுடன் நீங்கள் கறி காய்ச்சி/ கறி ஆக்கி உண்ண வேண்டும் என்றால் உங்களுக்குத் தேவையான, மிக முக்கியமான ஒரு ’திங்ஸ்’ தான் மிளகாய்த் தூள்.//
நினைச்சேன்!திங்ஸ முதலில் குறிப்பிட்டது நல்லாதாப்போச்சு:)//
ஆஹா... ஆஹா.. நமக்கு அடுத்த கஸ்டமரும் மாட்டிக்கிட்டாரா.. அப்போ வீட்டுக்கு சமையல் செய்ய நீங்களும் ரெடியாகிறீங்க.
@MANO நாஞ்சில் மனோ
//இந்த மிளகாய்த் தூள் கொஞ்சம் காரம் கூடியது, வீட்டிற்குத் திருடன் வந்தாலோ அல்லது, வீட்டில் யாருடனும் சண்டை என்றாலோ இதனை நீங்கள் ஒரு தற் காப்பு ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.//
இதுவும் ஒரு ஆயுதம்னு போட்டு குடுத்திட்டியே மக்கா...//
இதை உங்க டயரியில நோட் பண்ணி வையுங்க. சம் டைம் எதிர் காலத்தில தேவைப்படலாமில்ல;-))
@MANO நாஞ்சில் மனோ
அப்பிடியே சுடுதண்ணி எப்பிடி பண்றதுன்னும் சொல்லி குடுங்க ஹே ஹே ஹே ஹே ஹே....//
அடுத்த பதிவா, ஆண்களுக்கான சூடான விடயங்கள் எனும் தலைப்பில், தேநீர் வைப்பது எப்பூடி, சுடு தண்ணி கொதிக்க வைப்பது எப்பூடி என்றும் போடப் போறேன்.
@MANO நாஞ்சில் மனோ
அப்பிடியே சுடுதண்ணி எப்பிடி பண்றதுன்னும் சொல்லி குடுங்க ஹே ஹே ஹே ஹே ஹே....//
அடுத்த பதிவா, ஆண்களுக்கான சூடான விடயங்கள் எனும் தலைப்பில், தேநீர் வைப்பது எப்பூடி, சுடு தண்ணி கொதிக்க வைப்பது எப்பூடி என்றும் போடப் போறேன்.
@MANO நாஞ்சில் மனோ
இதையெல்லாம் போயி வாங்கி பண்றதுக்கு, சிபி மாதிரி எனக்கு டைம் இல்லியே மக்கா...//
சிபி...எங்கிருந்தாலும் இங்கே உடனடியாக வருக..
ஒருவர் கொலை வெறியோடு அலைஞ்சிட்டிருக்காரு..
ஹி..ஹி...
@MANO நாஞ்சில் மனோ
வெயிட் போயி ஓட்டு போட்டுட்டு வந்துர்றேன்....//
ஏன் இப்போ, பஹ்ரேனில் எலக்சன் நடக்குதா? அப்போ கள்ள ஓட்டு கன்போர்ம் தான்..
@MANO நாஞ்சில் மனோ
தலைப்பே கலவரமா இருக்கே....//
ஆனா மேட்டர் காரமா இருக்குமே!
@MANO நாஞ்சில் மனோ
// சி.பி.செந்தில்குமார் said...
இது சாதாப்பதிவா? உள்குத்துப்பதிவா? ஹி //
உருப்படியா சிந்திக்கவே மாட்டியாய்யா நீ...//
ஹி...ஹி...
அஃதே..அஃதே...
அப்படிப் போடுங்க அருவாளை.
@Nesan
மிளகாய்த்தூளில் கலப்படம் செய்வீர்களா சகோதரம்!//
தூள் கம்மியாக இருந்தா, செங்கல்லை இடித்துக் கலப்படம் செய்வோம். இதெல்லாம் நம்ம கம்பனி ரகசியம். இப்பூடிப் பப்ளிக்கா கேட்டு, தொழில் வித்தையை நாறடிக்கிறதெண்டே முடிவு பண்ணியாச்சா சகோ?
@Nesan
நீங்கள் கொச்சின் மிளகாயில் அரைப்பீர்களா இல்லை கைதடி மிளகாயில் தூள் தாயரிப்பீர்களா இதை அண்ணா கோப்பியிடம் கொடுப்பீர்களா!//
இது ரொம்ப முக்கியம், நாங்க கொச்சி மிளகாயை விட செத்தல் மிளகாயில் தான் அரைப்போம்...
தொழில் ரகசியங்களை வெளியில் பப்ளிக்காக சொல்ல முடியாது, எங்கள் கம்பனி வெப் சைட் இருக்கிறது, அங்கே சென்று ஒரு விண்ணப்பம் அனுப்புங்கள், எப்படி அரைப்போம் எனுன் கடிதம் உங்கள் வீட்டுக்கே வந்து சேரும்...;-))
இன்னைக்கு ஒரு முடிவோடை தான் களமிறங்கியிருக்கிறீங்க சகோ.
@ராஜ நடராஜன்
சகோ!கோழிக் கறின்னா கோயம்புத்தூர்,செட்டி நாட்டுக்குழம்புகள்தான் உசத்தி:)
முன்னாடியெல்லாம் கோழியை துரத்திப்புடிக்கிறதே ஒரு தனிக்கலை.அப்புறம் கழுத்தை நசுக்கி முடியெல்லாம் ஒவ்வொன்னா பிச்சி பிச்சு தோலை நெருப்புல வாட்டி அப்புறமா குடல் எடுத்து துண்டு பண்ணி கழுவி அம்மியில மசாலா அரைச்சு வெங்காயம்,கருவேப்பிலையெல்லாம் வறுத்து அப்புறமா கோழி,மசாலாவெல்லாம் வறுத்து,தேங்காய் அரைச்சு கடைசில கொஞ்சம் கொதிக்க விட்டு எடுத்தா அந்த வீட்ல இன்றைக்கு கோழிக்கறி செய்றாங்கன்னு வீதி,தெருவெல்லாம் தெரியும்.
இப்பத்தான் பிராய்லர்,ரெடிமேட் மசாலான்னு வந்து மக்கள் தினமும் கோழி தின்ன ஆரம்பிச்சாட்டங்க.ஆனா பழைய கோழிக்கறி வாசம் போயே போயிந்தி:)//
இதே அனுபவங்கள் எனக்கும் இருக்கிறது சகோ, பிராய்லரை விட ஊர்க் கோழி இறைச்ச் தான் அருமையாக இருக்கும் சகோ, நாங்கள் இப்பவும் கோழியைக் கலைச்சு புடிச்சு அடிச்சுத் தான் சாப்பிடுவோம்...
எங்க வீட்டை உள்ள ஒரு நாய்க்கு கோழியைக் காட்டி...ச்...ச்சூ.. என்று உச்சுக் காட்டி விட்டாலே போதும், கோழியைப் பிடிச்சுக் கொண்டு வந்து காலிலை வைக்கும்...
@ராஜ நடராஜன்
/Nesan said...
மிளகாய்த்தூளில் கலப்படம் செய்வீர்களா சகோதரம்!//
ஆமாம்.ரெசிபில இருக்குறதெல்லாம் கலப்படனும்:)//
அவ்.......அவ்...அஃதே...அஃதே...
@Nesan
உங்கள் தயாரிப்பு உள்ளூருக்கு மட்டுமா இல்லை அரபு தேசத்திற்கும் அனுப்புவீர்களா!மிளகாய்த்தூள் வாங்க கியூவில் நிற்கனுமா சங்கக்கடையில்!//
அரபு தேசம் முதல், ஆபிரிக்காவின் குச்சொழுங்க வரை எங்கள் மிளகாய்த் தூள் விற்பனைக்கு வரும் சகோ;-))
தமிழன் இல்லாத நாடும் இல்லை,
தமிழனுக்கென்றோர் நாடும் இல்லை...
ஆகவே உலகின் எப்பாகத்தில் தமிழர்கள் இருந்தாலும் அங்கெல்லாம் எங்கள் மிளகாய்த் தூள் வியாபாரம் விளம்பரப்படுத்தப்படும், விரும்பியவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சல் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
@Nesan
உங்கள் தயாரிப்பு உள்ளூருக்கு மட்டுமா இல்லை அரபு தேசத்திற்கும் அனுப்புவீர்களா!மிளகாய்த்தூள் வாங்க கியூவில் நிற்கனுமா சங்கக்கடையில்!//
கொஞ்சம் விட்டால், கூப்பன் கார்ட்டுக்கு(நிவாரண மட்டைக்கு) Free ஆகவும் கேட்பீங்களே;-))
@ஆதவா
ஹலோ... நான் என்னவோ ஏதோன்னு நெனச்சு உள்ள வந்தா, சமையல் ஐய்ட்டமா போட்டு ஏமாத்திட்டீங்களே... சூடான செய்தின்னு சொல்லிட்டு காரமா போட்டிருக்கீங்க???//
இதுக்குத் தான், எப்பவுமே உள்ளாடி இறங்கி, அலசி ஆராய்ந்து பார்க்க வேணும்ங்கிறது,
சூடான மேட்டர் என்றால், மிளகாய்த் தூளும் சூடானது தானே, உறைக்காதா, காரமா இருக்காதா.. அதான்... ஒரு டெரர் வேசம்.
ஹி...ஹி...
@ஹேமா
அடப் பாவிப் பொடியா...டன்சல் வோஷிங்டனா யாரு அது.என்ன கண்டு பிடிச்சிருக்கார்.
ஓ...மிளகாய்த்தூளோ !//
யோ.. அவரு ஒரு ஹாலிவூட் நடிகர்....அவ்...
@ஹேமா
இருக்கட்டும்...மாதேவி அக்கா பார்க்கிறதில்லப்போல உங்கட பதிவை !//
யார் அந்த மாதேவி அக்கா....ஏன் என்னைக் கொல்ல வேண்டும் என்கிற கொலை வெறியுடன் அலைகிறாவோ அவா...
எனக்கு மாதேவியை எல்லாம் தெரியாது, சிறிதேவியை மட்டும் தான் தெரியும்-))
@ஹேமா
நானெல்லாம் தூள் இங்க கடைகளில வாங்கிறதில்ல.அப்பப்ப கிரைண்டரில அரைச்சே போடுறன் !//
கிரைண்டரில் அரைச்சால் அரை படாதோ;-))
கடைத் தயாரிப்பை விட, வீட்டுத் தயாரிப்புத் தான் நன்றாக இருக்குமாம்.
@ஹேமா
வீட்டில சமைச்சும் குடுத்திட்டு பதிவுக்கும் கும்மிக்கு எப்பிடியப்பு நேரம் கிடைக்குது.நடுவில வேலைக்கும் போகவேணும்.அவவைப் பள்ளிக்கூடமோ வேலைக்கோ கூட்டிப்போயும் வரவேணும்.பிறகு ரிலாக்ஸ்....எப்பிடி எப்பிடி !//
யார்... நானு வீட்டிலை சமைச்சுக் கொடுக்கிறனாம்.. புரளிகளைக் கிளப்பி விடுறதுக்கென்றே அலையுறீங்க...
நேற்றுத் தான் பேஸ்புக்கில என்னையை விரும்புறதா ஒருத்தி Request form அனுப்பி இருக்கிறா. அதையும், கற்பனைப் பொய்களைச் சொல்லிக் கெடுக்கிறதாகப் ப்ளான் வேறு..
வீட்டிலை அம்மா சமைக்க இருக்கிறா, உதவிக்கு, கூடமாட வேலை செய்ய தங்கச்சியும், அக்காவும் இருக்கிறாங்க.
இதில் தொக்கி நிற்கிற அவா... ஆரு.. நான் அவாவை பள்ளிக் கூடம் கூட்டிக் கொண்டு போற அளவிற்கு எங்களுக்குள் இன்னும் நெருக்கம் அதிகமாகலை...
போன வாரம் தான் முதல் சந்திப்பே முடிஞ்சு, செல் போனிலை மனசை விட்டு பேசத் தொடங்கியிருக்கிறன், அதுக்குள்ள பள்ளிக் கூடத்திற்கு கொண்டு போய் விடுறதாம்...;-))
மகா ஜனங்களே, என்னைக் காப்பாற்றுங்கோ!
@பாட்டு ரசிகன்
செம ஹட் மச்சி..//
ஏன் மிளகாய் தூளைச் சாப்பிட்டுப் பார்த்தீட்டீங்களா;-))
நன்றிகள் சகோ
@ரஹீம் கஸாலி
குளுக்கோஸ் கதை சூப்பர்//
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
இதுதான் சூடான மேட்டரா//
இல்ல, காரமான மேட்டர்..
ஹி...ஹி..
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஈழத்து உணவுகளை பற்றி எழுதுங்க பாஸ்//
சொல்லிட்டீங்க எல்ல, செய்திட மாட்டோம்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
இந்த மிளகாய் போடி ஆரம்பத்தை பார்த்தா பின்னாடி சிக்கன்,மட்டன் வகையறா எல்லாம் காத்திருக்கும் போலிருக்கே ஐயம் வெயிட்//
ஆமா சகோ, நிச்சயமாய் நீங்கள் சொல்லும் வகையறாக்கள் எல்லாம் இருக்கு. வெயிட் பண்ணுங்கோ. அடுத்த வாரம் ஒரு அசத்தல் குக்கிங் டிப்ஸ் தாறேன்.
@Mahan.Thamesh
பெண்களுக்கான சுடன மேட்டர் கொஞ்சம் கரமா போச்சு நண்பா//
நெசமாவா... நன்றிகள் சகோ.
நல்ல கொள்கை தானே! வடையண்ணா, எங்கே ரெசிப்பி பார்த்து மிளகாய்த் தூள் அரையுங்கோ பார்க்கலாம்.
அடுத்த ரெசிப்பிக்கு ஆவலாக வெயிட்டிங்!!!
சூப்பர் பாஸ். இப்படியும் தொடருங்கோ.
Post a Comment