மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.
என்னையும், என் செய்கைகளையும் உய்த்தறிந்தவர்கள்(ஊகித்து அறிந்தவர்கள்) போல அம்மாவும், அம்மம்மாவும் ஓட்டோடி வந்து என்னைத் தூக்கிக் கொண்டு போனார்கள்.
வந்தவர்கள் வீட்டின் கூரையிற்கு கீழ் இருக்கும் லெவல் சீற்றினை எட்டிப் பார்க்கவே இல்லை.. சுற்றும் முற்றும் தேடி விட்டு ‘அடோய் யாரும் இங்கே வந்ததா’ எனும் அதட்டல் கலந்த அதிகாரத் தொனி நிறைந்த கேள்வியினைக் கேட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அப்போதைய கால கட்டத்தில் சிறிய வேள்விக்கான தாயார்படுத்தல்களில் எம்மவர்கள் ஈடுபடத் தொடங்கியிருந்தார்கள். இப்படித் தான் அக் காலத்தில் எங்களிற் பல மாமாக்களின் இறந்த காலங்கள் இருந்தன.
இனியும் கீழ்ப் படிந்து வாழ்தல் தகாது என்பதனை உணர்ந்தவர்களாய், இனிமேல் கை கட்டி வாழ்வதிலும் பார்க்க, காயமுற்று வீர மறவராய் வீழ்தல் மெலென எண்ணம் கொண்டார்கள்.
நெஞ்சம் எங்கும் விடுதலைத் தீ கொண்ட புரட்சியின் புதிய தளகர்த்தர்கள் பிறப்பெடுத்தார்கள். ஒரு சில ஊர்களை மையங் கொண்டு உருவான புயல்கள்;
வன்னி மண் தங்களை அரவணைக்கும், தமக்கான பாதுகாப்பை வழங்கும் என புவியியல் ரீதியில் உணர்ந்தவர்களாய் நகரத் தொடங்கினார்கள். இறுதியில் தம் இறக்கைகளை எங்கள் ஊர் நோக்கியும் பறக்க விட்டார்கள்.
வீரத்தில் பண்டாரவன்னியனின் பரம்பரை எனும் அளவிற்கு மார் தட்டும் வல்லமை வன்னி மண்ணில் உள்ள மக்களிடம் இருந்தது, ஆனாலும் அன்றும் சரி, பின் நாளிலும் சரி காக்கை வன்னியர்கள்(காட்டிக் கொடுப்பிற்கு பெயர் போனவர்கள்) பலர், சிவ பூஜையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகள் போல புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.
இவை எல்லாவற்றையும் கண்களால் தரிசிக்கும் வல்லமையை எங்கள் புதூர் நாகதம்பிரான் பெற்றிருந்தாள். குழந்தைகளே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், உங்களை நான் குளிர்விக்கிறேன் என வவுனிக் குளமும், கொத்தம்பியா குளமும் அவர்களைப் பார்த்து வரவேற்பளித்துக் கொண்டிருந்தது.
வாழ்தலுக்கான அடையாளங்களையும், இருத்தலுக்கான அடிப்படை வசதிகளையும் நாம் இழக்கத் தொடங்குகையில் தான் பல மாற்றங்களுக்கான, புரட்சிகளுக்கான புரிதல்களை அடையத் தொடங்குகிறோம்.
இன்றும், இன்றும் நினைக்கையில் கண் முன்னே இவை எல்லாம் காட்சிகளாய் விரியத் தொடங்கும். கண்ணில் ஒற்றிக் கொண்டாடி மகிழ்ந்து, கைகள் நிரம்ப மலர் அள்ளித் தூவினாலும், ஒரு காலத்தில் நாம் நிமிர்ந்ததற்கான கடனை அவர்களிடத்தே அடைக்க முடியாது.
கைகளால் மலர் தூவி, மௌனமாய் செலவழிக்கும் நொடிகள் அவர்களின் கால் தூசிற்கும் ஈடாகாது. எல்லாவற்றையும் கற்பனையில் மட்டும் கண்டுணர்ந்து கொள்ளும் சொப்பனத்தைத் தந்து விட்டுப் போய் விட்டார்களே!
தலை முறை தலை முறையாக மேய்ப்பாரற்றுக் கிடந்த ஆடுகளை; தலை சாய்த்து வெள்ள நீரின் கீழ் அமிழ்ந்து போய் விடும் நிலையிலிருந்த நாணற் புற்களை நிமிர்த்திய பெருமைக்குரிய கரங்கள் அவை. எங்களூர் இவர்களையும் தன்னருகே அணைத்துக் கொண்டது. தன் செம் புழுதித் தரையில் தேவர்கள் நடந்து வருவதாய் பெருமிதம் கொண்டிருந்தது.
மாலை ஆகும் வேளையில் சூரியன் தன் முளு உருவையும் சுருக்கி கொத்தம்பியா குளத்தினுள் நீராடி மகிழ்வான், யானைகள் வரிசையாக வந்து....ப்.....பீ............என ஒலி எழுப்பி நீர் அருந்தி மகிழும். யானைகளுக்கும் எமக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாய் ஒரு சிறிய உணர்வு, நீர் அருந்தும் யானைகளைச் சீண்டினால் சங்காரம் நிஜம் என்பது போலத் தான் அக் காலத்தில் தமிழர்களின் வாழ்வும் இருந்தது.
சும்மா இருந்த சங்கினை ஊதி, ஊரின் நிசப்தத்தைக் கிழித்தது போன்ற உணர்வினைத் தான், நிராயுத பாணிகளாய் அஹிம்சையில் இருந்த தமிழர்கள் மீது பூட்ஸ் கால்கள் தம் புஜ பலத்தைக் காட்டப் போய் எதிர் வினையாகப் பெற்றுக் கொண்டார்கள்.
கழிப்பறைகள் நம்பி எங்கள் வாழ்க்கைகள் அக் காலத்தில் இருக்கவில்லை. வீட்டிற்கு ஒரு கழிப்பறை இருந்தாலும், காலையில் எழுந்து; அதுவும் பனிக் காலத்தில் கொட்டாவி விட்டபடி போத்தலுடன் பனங் காணிக்குள் போய் குந்தி இருப்பதிலும் எங்களுக்கு ஒரு அலாதிச் சுகம் இருந்தது. யானைகளின் படையெடுப்பையும் பொருட்படுத்தாது, ஓடி ஓடி விளாம்பழம் பொறுக்கிய நினைவுகள் இன்றும் கண் முன்னே நிழலாடுகின்றன.
பாலப்பழம் ஒரு சீசனுக்கு வந்து வாயெல்லாம் ஸ்ரிக்கர் போல ஒட்டி விட்டுச் சென்று விடும், இராசாத்தி அக்காவுடன் ஓடோடிப் போய் பாலப் பழம் ஆய்ந்து. சேர்ட்டினை பையாக்கித் தூக்கிப் பிடித்து ஏந்தி வரும் சுகமே ஒரு அலாதிச் சுகமாக இருக்கும். இராசாத்தி அக்காவும் என்னுடைய மாமாவும் ஒரு காலத்தில் எங்களூரின் கலர்ப் பட நாயகர்களாய் எங்கள் கண்களுக்குத் தெரியத் தொடங்கினார்கள். இராசாத்தி அக்கா தானுண்டு, தன் வேலையுண்டு எனும் போக்கில் குழந்தைத் தனமாக இருப்பா. ஆனாலும் இராசாத்தி அக்காவும், மாமாவும் எங்களையெல்லாம் ஒளிச்சுப், பிடிச்சு விளையாடுங்கோ என்று சொல்லி விட்டு, ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்கள்.
.
இவையெல்லாம் எங்களுக்குள்; அப்போது ஒரு இனம் புரியாத காட்சிகளாய், தென்றலில் தேவதைகள் வந்து திரைப் பாடல் இசைக்கும் போது, நாங்கள் தந்தனாப் பாடி இரசிப்பதாக தோன்றின. அன்று மாலை, எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார்.......................................................டிஸ்கி: இது சிறுகதையோ அல்லது கதையோ அல்ல. கிரமாத்து மணங் கமழ எழுதப்படும் ஒரு உரை நடைத் தொகுப்பு.
|
56 Comments:
மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.////
ஒரு காலத்தில் இதுவே எமது துயர வாழ்வாக இருந்தது நண்பா!! ம்.... அதுமாமாக்கள் பயந்தொடுங்கிய காலம்!!
வீரத்தில் பண்டாரவன்னியனின் பரம்பரை எனும் அளவிற்கு மார் தட்டும் வல்லமை வன்னி மண்ணில் உள்ள மக்களிடம் இருந்தது, ஆனாலும் அன்றும் சரி, பின் நாளிலும் சரி காக்கை வன்னியர்கள்(காட்டிக் கொடுப்பிற்கு பெயர் போனவர்கள்) பலர், சிவ பூஜையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகள் போல புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.////////
தமிழினத்தின் சாபக்கேடே இதுதானே! அரசர் காலம் தொட்டு இக்காலம் வரை காட்டிக்கொடுப்புக்கு பஞ்சமில்லை!!
கைகளால் மலர் தூவி, மௌனமாய் செலவழிக்கும் நொடிகள் அவர்களின் கால் தூசிற்கும் ஈடாகாது. எல்லாவற்றையும் கற்பனையில் மட்டும் கண்டுணர்ந்து கொள்ளும் சொப்பனத்தைத் தந்து விட்டுப் போய் விட்டார்களே!/////////
ம்....... அவர்களின் தியாகங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்துபவை! ஒரு உயர்ந்த நோக்கோடு அவர்கள் உயிர் துறந்தார்கள்!!
ராச்சாத்திக்கு என்ன ஆகியிருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது! அப்படியான பெண்களும் இருக்கிறார்கள்!!
////வந்தவர்கள் வீட்டின் கூரையிற்கு கீழ் இருக்கும் லெவல் சீற்றினை எட்டிப் பார்க்கவே இல்லை../// முன்னர் இராணுவம் வீடுகளுக்கு வந்தால் எம்மவர்களை பாதுகாக்கும் இடமாக புகைக்கூடு இருந்துள்ளது. சிலர் பல மணி நேரமாக கூட இரண்டு கைகளாலும் புகைக்கூட்டை தொற்றி அந்தரத்தில் தொங்கிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு...
/////பின் நாளிலும் சரி காக்கை வன்னியர்கள்(காட்டிக் கொடுப்பிற்கு பெயர் போனவர்கள்) பலர், சிவ பூஜையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகள் போல புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.
/// நம் இனத்தின் சாபம். எப்ப எல்லாம் எழுவோமே அப்ப எல்லாம் இந்த நச்சு பாம்புகள் தோன்றிவிடும்
////கைகளால் மலர் தூவி, மௌனமாய் செலவழிக்கும் நொடிகள் அவர்களின் கால் தூசிற்கும் ஈடாகாது. எல்லாவற்றையும் கற்பனையில் மட்டும் கண்டுணர்ந்து கொள்ளும் சொப்பனத்தைத் தந்து விட்டுப் போய் விட்டார்களே!/// அவர்களுக்கான அடையாளங்கள் கூட எதிர்காலத்தில் இருக்குமா என்பது கேள்விக்குறி.ஏனென்றால் தற்சமயம் உள்ளவர்கள் துட்டகைமுனுக்கள் இல்லையே, "துஷ்ட" கைமுனுக்களாச்சே ((((
/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
ராச்சாத்திக்கு என்ன ஆகியிருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது! அப்படியான பெண்களும் இருக்கிறார்கள்!!//// (((( எத்தனை எத்தனை ரசாத்திக்கள்
நீங்கள் ரெண்டுபேரும் வன்னிக்குள்ள கிடந்து சாகிறத விட்டுட்டு, உங்களை யார் தப்பி வரச்சொன்னது!? இப்ப பாருங்கோ, வந்து நிண்டுகொண்டு, உண்மைய சொல்லுறன் அது இது எண்டு கத்துறியள்! நீங்க பாட்டுக்கு வன்னிக்குள நடந்த ஆள்பிடிப்பு, துவக்கால அடிச்சது, சனத்துக்க வச்சு செல் அடிச்சது, உதெல்லாத்தையும் வெளியால சொன்னா, இந்த உலகம் தாங்குமே?
விசர் வேலை பார்க்காதேங்கோ! நீங்கள் எல்லா உண்மைகளையும் சொன்னா, இனிமேல் தமிழ்நாட்டில ஆராவது தீக்குளிப்பானே? அவங்கள் மோட்டுவளத்தில தீக்குளிக்கிற படியால்தானே, நாங்கள் அந்த சூட்டில உயிர் வாழுறம்! நீங்கள் காரியத்த கெடுத்திடுவீங்கள் போல கிடக்கு!
நீங்கள் ரெண்டு பேரும் வன்னிக்காட்டுக்குள்ள கிடந்தநிங்கள்! உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமோ? டீசன்ட் டிசிப்பிளின் தெரியுமோ? விட்டா வன்னிச்சனத்திண்ட மைண்டையே மாத்திடுவீங்கள் போல!
பேசாமல் பொத்திக்கொண்டு இருங்கோ! நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, கொடி புடிச்சு, கும்மாளம் போட்டு, கத்திக் குளறி, இயக்கத்த காப்பாத்த ட்ரை பண்ணிக்கொண்டு இருக்கிறம்! நீங்கள் என்னடா எண்டால், இயக்கம் வன்னிச்சனத்த, வதைச்சது எண்டுறியள்!
உமக்கு புண்ணியம் கிடைக்கும்! இனிமேல் வன்னிக்கதையை இழுக்காதையும்! பேசாமல் சினிமா பற்றியோ, அல்லது டபுள் மீனிங் பதிவோ போடும்! மாவீரர்களை கொச்சை படுத்த வேண்டாம்!!
இலங்கை இலக்கியம் படைப்பதில் 5 பேர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.. அதில் நீங்கள் முன்னணியில் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது
அது சரி வளஞ்சர் மேடம் புத்க்குடியிருப்பு முல்லை தீவுக்கு கிட்ட இருக்கு புதூர் நாகதம்பிரான் புளியங்குளத்துக்கு கிட்ட இருக்கு ஏனெண்டு வந்த்துபோற சைக்கிளா டாக்டரா
குடும்பம் குடும்பமா தக்டரில காவடி எடுத்து வார நிகழ்வுகளையும் பெடியங்களா சைகிள காச்சட தேய தேய ஓடி வாரதையும் உங்கள் மண் வாசனை பதிவில் உள்ளடக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்
யோவ்...ஏன் யா கவலைய வர வைக்கிறா...
இப்பிடியான விசயங்கள மறக்கனுமேண்டு தான் நான் மொக்கைய போடுறன்...
என்றாலும் எழுத்து நடை சூப்பர் பாஸ்
present mattum pottukkaren nirooban
பகிர்வுக்கு நன்றி மாப்ள முடிந்தவரை சந்தோஷமான விடயங்களை எதிர்ப்பார்க்கிறேன்...நன்றி!
இது ஒரு முக்கியமான தொடராக வரும் என்றே தெரிகின்றது..தொடருங்கள் சகோ!
சோகங்களும் கஷ்டங்களும் நிரந்தரமில்லை சகோ. எல்லாம் மாறும் ஒருநாள் நலமாகும் அனைத்தும்..
உறவுகளே, நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், ஆதலால் உங்களின் வலைப் பதிவுகளுக்கு வர முடியவில்லை.
வலைப் பதிவில் சகோதரி அனாமிகா என் பதிவில் வந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அதனைத் தடுக்கும் நோக்கில் பின்னூட்டங்களை மட்டுறுத்த வேண்டிய தற்காலிக நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
அனானிமஸ் உள்ளம் ஒருவரும் இங்கு வந்து மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். ஆகவே என் வலைப் பதிவினை நல்ல முறையில் இயக்க வேண்டும் என்பதற்காக இந்த வாந்திகளையும், வயித்தெரிச்சல்களையும் என் வலையினுள் அனுமதிக்க கூடாது என்பதற்காக மறு மொழிகளை மட்டுறுத்த வேண்டிய கட்டாயத் தேவைக்கு உட்படுகின்றேன்.
மன்னிக்கவும் உறவுகளே!
nalla pagirvu
இந்தபாலபழம் பொருக்கப்போய் எத்தனை இம்சை தாங்கினோம் இரைட்டப்பெரியகுளத்தில் குழித்த அண்ணன் தம்பி நீ குளிடா 10வரை எண்ணு நான் வாரன் என்று போனவன் இன்னும் வரவில்லை எத்தனை தரம் இன்னும் என்னுகிறேன் இருக்கிறான் ஆணால் இல்லை இந்தசோகம் ஒருபுறம் அந்த கைபிடிக்காத மாமி இன்னும் கனவில் மருமகன் எப்படி இருக்கிறாய் புலம் பெயர்ந்து என்று கனவில் எத்தனை நாள் என் தூக்கம் கெட்டது!.
பாலப்பழத்தைத்தைத் தொடர்ந்து வரும் கயூப்பழம் ஆய்யும் போதுகண்ணில் விழுந்து பட்டபாடு எப்போது மறக்கமுடியும்!
நீங்கள் யாருடன் மோதுங்கள் அது உங்களின் சுதந்திரம் நாங்கள் கருத்திடுவது எங்களின் உரிமை இது கருத்துமோதல் நண்பா!
சிறப்பு நிரூபன்,தொடருங்கள்.
நல்லதும் கெட்டதும் எல்லா இடங்களிலும் இருக்கு.களைகளை அழிக்காமல் பயிர் இல்லை.ஆனால் எம் எதிர்காலம் என்கிற கேள்வி பெரிது.யாரும் யாரையும் குறைசொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம் தயவு செய்து.
பாருங்கள் குற்றபத்திரிகை வெளிவந்தவுடன் அத்தனை கட்சிச் சிங்களவர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கிறார்கள்.எம்மிடமும் இப்போ இதுதான் தேவை.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் !
நிரூபன்...பழைய வலியானாலும் மாறாத வடு.இன்னும் உள்புண்ணோடுதான்.என்றாலும் நம் மக்களின் எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம் !
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு காலத்தில் இதுவே எமது துயர வாழ்வாக இருந்தது நண்பா!! ம்.... அதுமாமாக்கள் பயந்தொடுங்கிய காலம்!!//
இப்போதும் நினைவில் வைத்திருக்கிறீங்க சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
தமிழினத்தின் சாபக்கேடே இதுதானே! அரசர் காலம் தொட்டு இக்காலம் வரை காட்டிக்கொடுப்புக்கு பஞ்சமில்லை!!//
ஹா..ஹா...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ராச்சாத்திக்கு என்ன ஆகியிருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது! அப்படியான பெண்களும் இருக்கிறார்கள்!!//
ம்...ம்...நீங்கள் நினைப்பது தான் நடந்திருக்கும் சகோ.
@கந்தசாமி.
சிலர் பல மணி நேரமாக கூட இரண்டு கைகளாலும் புகைக்கூட்டை தொற்றி அந்தரத்தில் தொங்கிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு..//
ஆம் சகோ, இதனையும் மறந்து விட்டேனே!
நன்றிகள் சகோ, எல்லாவற்றையும் இன்றும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
@கந்தசாமி.
/// நம் இனத்தின் சாபம். எப்ப எல்லாம் எழுவோமே அப்ப எல்லாம் இந்த நச்சு பாம்புகள் தோன்றிவிடும்//
இந்தப் பாம்புகள் எப்பூடி வரும், எப்போ வரும் என்று தெரியாது, ஆனால் சரியான நேரத்திற்கு திருவிழாவைக் குழப்ப வாற ஆட்கள் மாதிரி வந்து விடும்.
@கந்தசாமி.
உமக்கு புண்ணியம் கிடைக்கும்! இனிமேல் வன்னிக்கதையை இழுக்காதையும்! பேசாமல் சினிமா பற்றியோ, அல்லது டபுள் மீனிங் பதிவோ போடும்! மாவீரர்களை கொச்சை படுத்த வேண்டாம்!!//
நீங்கள் பாதை மாறி வந்து பின்னூட்டம் போடுறீங்கள் போல இருக்கே. நாங்க இரண்டு பேரும் சமாதானமாக போவோம். இனிமேல் இவ்வாறான இழிவான வேலைகள் வேண்டாம்.
@FOOD
உங்கள் பதிவு ஒவ்வொன்றும், நவரசங்களை நாங்களறிய செய்கிறது. நன்றி நண்பரே!
உணவு உலகத்தில், " இயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்”.
http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_25.html//
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
இலங்கை இலக்கியம் படைப்பதில் 5 பேர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.. அதில் நீங்கள் முன்னணியில் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது//
யோ..சும்மா உல்டா எல்லாம் இங்கே விட வேண்டாம் சகோ. நிஜமாவே, நான் எப்போதுமே நாற்றாகத் தான் இருக்க விரும்புகிறேன். நன்றிகள் சகோ.
ஆமா, அது யார் ஐவர்?
@யாதவன்
அது சரி வளஞ்சர் மேடம் புத்க்குடியிருப்பு முல்லை தீவுக்கு கிட்ட இருக்கு புதூர் நாகதம்பிரான் புளியங்குளத்துக்கு கிட்ட இருக்கு ஏனெண்டு வந்த்துபோற சைக்கிளா டாக்டரா//
சைக்கிள், டக்டர், தட்டிவான்... இப்படி நிறைய அயிட்டங்கள் இருக்கு சகோ, லாண்ட் மாஸ்டர்...
ஹி...ஹி..
ஆமா நீங்கள் கேட்பது சண்டைக்கு முன்பா, இல்லை சண்டைக்கு பின்பா?
@யாதவன்
குடும்பம் குடும்பமா தக்டரில காவடி எடுத்து வார நிகழ்வுகளையும் பெடியங்களா சைகிள காச்சட தேய தேய ஓடி வாரதையும் உங்கள் மண் வாசனை பதிவில் உள்ளடக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்//
என்னால் முடிந்தவரை, என் நினைவில் உள்ளவற்றைப் பதிவாக்குகிறேன் சகோ. ஏதாவது விடயங்கள் விடுபட்டால் சொல்லித் தருவீங்க தானே;-))
நன்றிகள் சகோ.
@மைந்தன் சிவா
யோவ்...ஏன் யா கவலைய வர வைக்கிறா...
இப்பிடியான விசயங்கள மறக்கனுமேண்டு தான் நான் மொக்கைய போடுறன்...
என்றாலும் எழுத்து நடை சூப்பர் பாஸ்//
மொக்கை போடுற உங்க கடைக்கு, ஒரு எதிர்க் கடை இருக்க வேண்டாம், அதான்;-)))
ஹி..ஹி..
நன்றிகள் சகோ.
@எல் கே
present mattum pottukkaren nirooban//
ஓக்கே, நான் வரவு பதிந்து விட்டேன்.
@விக்கி உலகம்
பகிர்வுக்கு நன்றி மாப்ள முடிந்தவரை சந்தோஷமான விடயங்களை எதிர்ப்பார்க்கிறேன்...நன்றி!//
சந்தோசமான விடயங்களை இத் தொடரில் எதிர்ப்பார்க்கிறீர்கள். என்னால் முடிந்த வரை, உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்கிறேன். நன்றிகள் சகோ.
@செங்கோவி
இது ஒரு முக்கியமான தொடராக வரும் என்றே தெரிகின்றது..தொடருங்கள் சகோ!//
நன்றிகள் சகோ.
@தமிழ்வாசி - Prakash
nalla pagirvu//
நன்றிகள் சகோ.
@Nesan
இந்தபாலபழம் பொருக்கப்போய் எத்தனை இம்சை தாங்கினோம் இரைட்டப்பெரியகுளத்தில் குழித்த அண்ணன் தம்பி நீ குளிடா 10வரை எண்ணு நான் வாரன் என்று போனவன் இன்னும் வரவில்லை எத்தனை தரம் இன்னும் என்னுகிறேன் இருக்கிறான் ஆணால் இல்லை இந்தசோகம் ஒருபுறம் அந்த கைபிடிக்காத மாமி இன்னும் கனவில் மருமகன் எப்படி இருக்கிறாய் புலம் பெயர்ந்து என்று கனவில் எத்தனை நாள் என் தூக்கம் கெட்டது!.//
உங்களிடத்தில் பல நினைவுகள் பொதிந்துள்ளன சகோ. ஊரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தாலும், மனம் மட்டும் இப்போதும் எங்கள் இரட்டைப் பெரிய குளத்தில் தான் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது போலும்;-))
@Nesan
பாலப்பழத்தைத்தைத் தொடர்ந்து வரும் கயூப்பழம் ஆய்யும் போதுகண்ணில் விழுந்து பட்டபாடு எப்போது மறக்கமுடியும்!//
நீங்களும் இந்த வேலைகள் செய்திருக்கிறீங்க. சேம் சேம்........
@Nesan
நீங்கள் யாருடன் மோதுங்கள் அது உங்களின் சுதந்திரம் நாங்கள் கருத்திடுவது எங்களின் உரிமை இது கருத்துமோதல் நண்பா!//
அதுக்காக, ஒரு அப்பாவியுடன், நிராயுத பாணியுடன் சண்டைக்கு வரலாமா?
ஆளை விடுங்கள் சகோ.
@shanmugavel
சிறப்பு நிரூபன்,தொடருங்கள்.//
நன்றிகள் சகோ.
@ஹேமா
நல்லதும் கெட்டதும் எல்லா இடங்களிலும் இருக்கு.களைகளை அழிக்காமல் பயிர் இல்லை.ஆனால் எம் எதிர்காலம் என்கிற கேள்வி பெரிது.யாரும் யாரையும் குறைசொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம் தயவு செய்து.
பாருங்கள் குற்றபத்திரிகை வெளிவந்தவுடன் அத்தனை கட்சிச் சிங்களவர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கிறார்கள்.எம்மிடமும் இப்போ இதுதான் தேவை.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் !
நிரூபன்...பழைய வலியானாலும் மாறாத வடு.இன்னும் உள்புண்ணோடுதான்.என்றாலும் நம் மக்களின் எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம் !//
தமிழனுக்கு எல்லாக் காலமும் ஒரே மாதிரித் தான் இருக்கும் சகோ. பார்ப்போம்!
இலங்கை இலக்கியம் படைப்பதில் 5 பேர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.. அதில் நீங்கள் முன்னணியில் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது
இது ஒரு முக்கியமான தொடராக வரும் என்றே தெரிகின்றது..தொடருங்கள் சகோ!
50-th comment
அருமை நிருபன் தொடருங்கள் ..
உங்கள் ஊரும் எழுத்து நடையும் வித்யாசமாய் இருக்கு ..தொடருங்கள் நிரூபன்.
@மாலதி
இலங்கை இலக்கியம் படைப்பதில் 5 பேர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்.. அதில் நீங்கள் முன்னணியில் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது//
என்ன நடக்குது இங்க..
சும்மா புரளியைக் கிளப்ப வேண்டாம்,
ரொம்பத் தான் ஓவராப் போய்க்கிட்டிருக்கீங்க..
@மாலதி
இது ஒரு முக்கியமான தொடராக வரும் என்றே தெரிகின்றது..தொடருங்கள் சகோ!//
ஆமா.. சகோ!
உங்கள் ஆதரவு இருக்கும் வரை, தொடருவோமில்ல!
@ரஹீம் கஸாலி
50-th comment//
ஐம்பதாவது கமெண்ட் ஓக்கே, ஆனால் விமர்சனம் எங்கே சகோ.
@மகாதேவன்-V.K
அருமை நிருபன் தொடருங்கள் ..//
நன்றிகள் சகோ.
@தேனம்மை லெக்ஷ்மணன்
உங்கள் ஊரும் எழுத்து நடையும் வித்யாசமாய் இருக்கு ..தொடருங்கள் நிரூபன்.//
நன்றிகள் சகோ, உங்கள் அனைவரினதும் ஆதரவும், ஊக்குவிப்பும் தான் இதற்கான காரணம்!
நன்றிகள் சகா.
Post a Comment