வணக்கம் உறவுகளே, இன்றைய கால கட்டத்தில், புறோக்கர்மாரின் பிழைப்பில் நிறையப் பேர் மண் அளிப் போடுறாங்களாம். இதை நான் சொல்லவில்லை, நம்ம ஊர் விசுவலிங்க புறோக்கர் தான் சொல்லுறார். இன்டநெட், செல்போன், ஐபோன் என்று அடுக்கடுக்காக நவீன தொழில் நுட்ப சாதனங்கள் வந்த காரணத்தினால், வருமானம் தங்களுக்கு வரவில்லை என்று, ரேசன் கடை நிவாரணத்தில் பிழைப்பை ஓட்டும் பணக்கார வீட்டார் மாதிரி, நம்ம ஊர் புரோக்கர்களும், பஞ்சம் கொட்டத் தொடங்கிட்டாங்கள். யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?
|
|

