ஆடலரசி அம்மாவின்
பாதார விந்தங்கள் பணியாத
கடை நிலைத் தமிழனின்
மதியுரை ஆசைகள் இவை!!
இலவசப் பொருட்களினால்
இனமானம் ஏலத்தில் போகையில்
நீயெனக்கு ஏதும் தருவியா
என்றிரைஞ்சி காலில் விழுகின்ற
கேவலமான ஜென்மமாய்
தமிழன் இன்று ஜெயாவின் மாளிகையில்!!
இப் பொழைப்பில்
உயிர் வாழ்வதிலும்
இன்றே செத்திடலாம்!!
மாறி மாறி திமுக - அதிமுக என
பாமர்களை ஏமாற்றி
இலவச மேனியாவில்
இங்கித ஓட்டுரிமை வாங்கி
புளகாங்கிதம் கொள்கிறது தமிழக மேடை!!
வாழ்வைப் பற்றி யோசிக்க மனமின்றி
அம்மாவின் பாதார விந்தங்களில்
தன் இன உரிமையினை - தம்
சந்ததியின் நிகழ்காலத்தை
சமர்பித்து எச்சில் நக்குகிறது
எம் இனம்?
இனி என் சொல்வேன்
நாளை ஆடலரசியும்
நடிகர்கள் மேடையில் உட்காரலாம்
அப்போது வான் தொடும்
கட் அவுட் வைத்து
பாலாபிஷேகம் செய்து
வழிகின்ற கழிவு நீரையும்
தீர்த்தமாய் குடித்து மகிழும்
சந்ததி வரும் - அப்போ
சந்தியும் சிரிக்கும்!!
|
3 Comments:
உண்மையை உணர்த்தும் உன்னத சிந்தனை கவிதைப் பகிர்வுக்கு
மிக்க நன்றி சகோதரா .
நல்ல கவிதை. இன்றைய தமிழ்நாடு நிலைமையை உணர்த்திவிட்டீர்கள்.
சூப்பருங்கண்ணா...
Post a Comment