வணக்கம் அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
இன்றைய பதிவினூடாக ஓர் வரலாற்றுச் சம்பவத்தினை மீட்டிப் பார்க்கவிருக்கின்றோம். அது என்ன வரலாற்றுச் சம்பவம் என்று நீங்க ஆழ்ந்த சிந்தனையினுள் செல்லலாம். வாருங்கள், மெதுவாக பதிவினுள் இறங்குவோம்.
எமது ஊர்களில் உள்ள வயதான மூதாட்டிகள் பணத்தை எங்கே வைப்பார்கள் என்று கேட்டால் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரே பதில் நெஞ்சினுள் மறைத்து வைப்பார்கள் என்பது தான். இதற்கு எடுத்துக் காட்டாக நந்தினி திரைப் படத்தில் இடம் பெற்ற “பட்ட சரக்கு பட்ட சரக்கு காதலில தோற்றவன் கண்டு பிடிப்பு” எனும் பாடலில் வரும்; “மனசையும் கூட மணி பர்சில் மறைத்து வைப்பள் பொம்பளை தாண்டா” எனும் பாடல் வரிகளைக் குறிப்பிடலாம்.
ஆரம்ப காலத்தில் பெண்களின் வைப்புப் பெட்டகமாக நெஞ்சு சட்டையே இருந்திருக்கிறது. மனசினை முந்தானையில் மறைத்து வைப்பவள் பொம்பளை தாண்டா எனும் தத்துவம் கூட, பெண்கள் சேலைத் தலைப்பில் பணத்தினைக் கட்டி வைப்பதாலும், நெஞ்சுச் சட்டைக்குள் பணத்தை வைப்பதாலும், மனசையும் அப்படியே பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறார்கள் எனும் நோக்கில் பிறந்ததாக கூட இருக்கலாம். பொதுவாக மூதாட்டிகளின் பணத்தினை மறைத்து வைக்கும் ஓர் இடமாக நெஞ்சுச் சட்டையே விளங்கியது. ஆனால் ஆண்களின் வைப்பகம் கொஞ்சம் வித்தியாசமானது.
ஆண்கள் முற்காலத்தில் (லுங்கியினுள்) சாரத்தினுள் ஓர் மடிப்பு மடிச்சி இடுப்பின் ஓராமாக பணத்தினைப் பதுக்கிப் பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். அல்லது வேட்டியின் இடுப்புப் பக்க கரை ஓரமாகவும் பணத்தினை வைத்துக் கொள்வார்கள். எப்போது எம் ஊர்களில் (wallet) எனப்படும் மணி பர்ஸ் அறிமுகமானதோ அப்பொழுது முதல் ஆண்களின் வைப்பகம் தானாகவே மணி பர்ஸை நோக்கி நகர்ந்து கொண்டது. ஆனால் பெண்கள் பணத்தினைப் பதுக்கி வைத்திருக்கும் வைப்பகம் இன்னும் மாறவேயில்ல.
இந்த மணி பர்ஸினை, பேர்ஸ் என்று எம் ஊர்களில் அழைப்பார்கள். அதே போன்று, பேஸ் என்றும் சிலர் சொல்லிக் கொள்வார்கள். இது மட்டுமன்றி, பொத்தாம் பொதுவாக மடிலேஞ்சி எனும் சொல்லிலும் எம் ஊர்களில் இந்த பர்ஸினைச் சொல்லிக் கொள்வார்கள். மடிலேஞ்சி எனும் சொல்லுக்குரிய காரணப் பெயர் இன்னமும் அடியேனுக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். பாட்டி மார் பணத்தினை இன்னோர் முறையிலும் பதுக்கிக் கொள்வார்கள். அது ஓலையால் இழைக்கப்பட்ட சிறியளவிலான உண்டியல் போன்ற பெட்டியாகும்.
இந்த ஓலையால் பின்னப்பட்ட சிறிய பெட்டியினைத் தான் கொட்டப் பெட்டி என்றும் சொல்லிக் கொள்வார்கள். பிற்காலத்தில் தமிழர்கள் போராட்டச் சூழலுக்கு அமைவாக இடம் பெயர்ந்து கொள்ளும் போது, மடிலேஞ்சி எனும் சொல், உண்டியல், திறைசேரி எனப் பல வகைகளிலும் பிறழ்ந்து கொள்கின்றது. மணி பர்ஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்த மணியான செய்திகளையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
*பதிவுக்கு தொடர்பற்ற ஓர் உரையாடல்:
எங்கள் ஊரில் முற்காலத்தில் பஸ்ஸில் இடம் பெற்ற பகிடியாக அண்ணை ரைட் நாடகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள். ஓர் வயோதிக மாது, சன நெரிசல் மிக்க பஸ்ஸினுள் கடகம் சகிதம் ஏறியிருக்கிறார். இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றதும், கடகத்தினை பஸ்ஸில் கியர் போடும் இடத்திற்கு சமீபமாக வைத்திருக்கிறார்.
பஸ் ஓட்டுனரோ, "ஆச்சி கியர் போடனும், கடகத்தினை கொஞ்சம் தள்ளி வையுங்களேன்"; எனக் கேட்டிருக்கார்.
அதற்கு ஆச்சி என்னா சொன்னா தெரியுமா? "தம்பி கியர் தானே போடப் போறீங்க, அதை இந்த கடகத்தினுள் போடுங்களேன்!!"
*************************************************************************************************************************
நான் இங்கிருக்கேன்! அப்படீன்னு நான் சொன்னா, நீங்க எங்கிருக்கிறீங்க என்று கேட்பீங்க அல்லவா? ஆனால் வலைப் பதிவில் "இன்னும் இருக்கிறேன்" எனும் வலைப் பூவுடன் களமிறங்கியிருக்கிறார் பதிவர் நெற்கொழுதாசன் அவர்கள்.
கவிதை, இலக்கியம், சுற்றுச் சூழல் தொடர்பான சம்பாசணைகள் என பல சுவையான பதிவுகளைத் தமிழ்ப் பதிவுலகில் படைத்து வருகின்றார் பதிவர் நெற்கொழுதாசன் அவர்கள்.
*************************************************************************************************************************
புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்:
|
7 Comments:
வணக்கம்,நிரூபன்!அருமையான நினைவுப் பகிர்வு.அதில் நீங்கள் குறிப்பிட்ட கைலேஞ்சி என்பது,கைக்குட்டை(தமிழ் நாட்டில்)என்று சொல்வார்கள்.வெளி நாடுகளில் மூக்கு சிந்தும் போது துடைத்துக் கொள்ள சிறிய ஒரு வகை தாளினை(பேப்பர்)பயன்படுத்துவார்கள்.அதற்கு முன்பே(ஆங்கிலேயர் வழக்கம்)சிறிய துணிகளை வெட்டி மடித்து சட்டைப் பையினுள்(பொக்கற்)வைத்திருப்பார்கள்.HANDKER CHIEF என ஆங்கிலத்தில் சொல்வது தான் மடிலேஞ்சி/கைலேஞ்சி யாக மாறியது!
புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன்
நன்றிகள் கோடி நண்பனே,
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
உங்களால் அறிமுகப்படுத்தபடுவதையிட்டு உண்மையில் பெரு மகிழ்வடைகிறேன்.a
உறவுகளே ,
ஒரு சகபதிவரின் அரவணைப்பால் வந்திருக்கும் என்னை நீங்களும் வந்து பார்த்து வாழ்த்துங்களேன் ................
உண்மைதான்... இந்த விடயங்கள் இன்னும் நமது ஊர்களில் மீட்டப்படுகின்றன...
லுங்கியில் பணத்தினை சுருட்டி வைத்துக்கொள்வார்கள். ஒரு ரூபாய்க்கு மதிப்பு இருந்த காலத்தில் காதில் சொருகி வைத்திருக்கும் ஆண்களையும் பார்த்திருக்கிறேன்.
HANDKER CHIEF::::::தமிழ் நாட்டில் தமிழில்?!கர்ச்சீப்/கர்சீப் என்று சொல்வதும் அது தான்!
புதிய செய்தி - www.classiindia.in
Post a Comment