மகா ஜனங்கள் அனைவருக்கும் அடியேனின் மெகா வணக்கமுங்க,
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? குளிச்சீங்களா? சாப்பிட்டீங்காளா என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். ஏன்னா நேரந் தவறாம சாப்பிடுவது தமிழனோடு ஒட்டிப் பொறந்த பழக்கம், ஆனால் குளிப்பது என்பது அதை நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்கனுமுங்க. ரொம்ப நாளா நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்க ஆசை தானுங்க. ஆனால் ப்ளாக் எழுத டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படியும் இருக்கிற நேரத்தில கம்புகுட்டர் முன்னாடி உட்கார்ந்து ப்ளாக் எழுத ஆரம்பித்தால் எழுத எதுவுமே தோணலைங்க. அப்புறம் என்னத்த நான் எழுதி கிளிப்பதுங்க.
இப்போ ப்ளாக் என்பது எனக்கு ரொம்ப போரடிச்சிட்டு. ஏலவே
*"ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்" அப்படீங்கிற ஒரு தொடர் முதல் அத்தியாய நிறைவோட முற்றுப் பெறாமல் இருக்கு. அப்புறமா
*”என்னைக் கெடுத்த பெண்கள்” எனும் தொடர் எட்டு பாகத்தோட வழியில பஞ்சராகி நிற்குது. காரணம் தொடரில வாற என் கல்லூரிப் பொண்ணுங்க போனைப் போட்டு தமது சொந்த பெயருடன் தொடரை ரிலீஸ் பண்ண சொல்லிட்டாங்க. இதென்னடா கொடுமைன்னு சொந்தப் பேரை போட்டு எழுதுவோம் என்று நெனைச்சால் என் மரமண்டை ஏத்துக்கமாட்டேங்குது. ஸோ.. என்ன பண்ணலாம்? அடுத்து
*”என்னைக் கெடுத்த பெண்கள்” எனும் தொடர் எட்டு பாகத்தோட வழியில பஞ்சராகி நிற்குது. காரணம் தொடரில வாற என் கல்லூரிப் பொண்ணுங்க போனைப் போட்டு தமது சொந்த பெயருடன் தொடரை ரிலீஸ் பண்ண சொல்லிட்டாங்க. இதென்னடா கொடுமைன்னு சொந்தப் பேரை போட்டு எழுதுவோம் என்று நெனைச்சால் என் மரமண்டை ஏத்துக்கமாட்டேங்குது. ஸோ.. என்ன பண்ணலாம்? அடுத்து
*"சிங்களனின் சித்திரவதை முகாம்” அப்படீன்னு ஒரு புதுத் தொடர் ஆரம்பித்த புள்ளியிலே சிங்களனுக்கு பயந்து நிற்பது போல ஸ்டாப் ஆகிடுச்சுங்க. இப்போ என்ன பண்ணலாம்?
கைவசம் மூனு தொடர்கள் இருக்கு. ஆனால் இன்னமும் முழுமையடையல்ல. எனக்கோ ப்ளாக் ரொம்ப போரடிச்சுப் போச்சு. என்ன பாவம் பண்ணினோ -5 (மைனஸ்) டிகிரி குளிர் இருக்கிற இடத்திற்கு என்னய ட்ரான்ஸ்பர் ஆக்கிட்டாங்க. உறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கிறேன். தூக்கம்னா இப்பவெல்லாம் ரொம்ப புடிச்சுப் போட்டுதுங்க. ஸோ....இப்படியான நெலமையில ப்ளாக் எழுதுவது நடக்கிற காரியமா? இன்று முதல் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். ஏலவெ இடை நடுவில் பஞ்சராகின தொடர்களை மொதல்ல இருந்து மீள் பதிவா போட்டு எழுதி முடிக்கவா? இல்லே இனிமே தொடர் வேணாம் என்று கம்முன்னு போகவா? நீங்க தான் சொல்லுங்க வாசகர்களே!
அப்புறமா நீங்க என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீங்க? ஏன்னா என் ப்ளாக் பத்து லட்சம் பார்வையாளர்களின் பார்வைக்கு உட்பட்டதாக கூகிள் சொல்லுது. வேண்ணா சைட் பாரில தேடிப் பாருங்க. இனிமே நான் என்ன எழுதனும்? என்னிடம் இருந்து கேட்டுப் பெற ஏதும் இருக்கா? நான் என்ன வகையான பதிவுகளை எழுதினால் உங்கள் ரசனைக்கு ஏதுவாக இருக்கும் என்று சொல்லுங்க. கண்டிப்பா என்னால் முடிஞ்சதை எழுதுகிறேன்.
நன்றி,
நேசமுடன்,
செ.நிரூபன்.
இம்புட்டு நாளா என்னால முடிஞ்சதை எழுதியிருக்கேன். அவற்றினைப் பொறுமையாகப் படித்து எனக்கு ஊக்கமும், விமர்சனமும் வழங்கி வரும் அன்பு உறவுகள் அத்தனை பேருக்கும் அடியேனின் சிரம் தாழ்த்திய நன்றிகள். மொத்தமா 433 பதிவுகள் எழுதியிருக்கேன். அதில 33 பதிவுகள் கண்டிப்பா மீள் பதிவா இருக்கும். அவற்றினையும் சகித்து, பொறுமையோடு படித்த அனைவருக்கும் நன்றிகள். இனி வரப் போகும் பதிவுகளைப் படிக்க காத்திருக்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.
***************************************************************************************************************************
|
16 Comments:
வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .
வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .வாழ்த்துகள் .வாழ்த்துகள்.வாழ்த்துகள் .
காமெடி யா ஏதாவது ட்ரை பண்ணுங்க
வணக்கம்...
நீங்க எழுத வந்ததுல இருந்து இதுவரைக்கும்....யார் சொல்லியும் எழுதி இருக்க மாட்டீங்கன்னு கருதுகிறேன்...உங்களின் தனிப்பட்ட கருத்துக்களும் பார்வைகளுமே இந்த பதிவுகள்...இது வரை எப்படி தன்னிச்சையாக எழுதினீர்களோ...அதே போல வாசகனுக்கு(நண்பர்களுக்கு) எது பிடிக்கும் என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டு எழுதுங்கள்...அதுவே உங்களை செம்மையாக்கும்!
அண்ணா..உங்களின் பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு திருப்பி அடித புலிகள்.. வவுனியா வுடன் முற்று பெற்று விட்டதா?? அல்லது தொடர்ந்து எழுதுவீர்களா?
அது முற்று பெறா விட்டால் அதை தொடர்ந்து எழுதுமாறு கேட்டு கொள்கிறேன். ஏன் என்றால் அதன் மூலம் தான் நான் உங்கள் ப்ளாக் வாசகன் ஆனேன்.
அன்புடன்,
நிரோஜ்
@நிரோஜ்
அன்பு நிரோஜ்.
அந்த தொடர் முடிவடைந்து விட்டதே..
தாங்கள் அதனை முழுமையாகப் படிக்கவில்லையா?
வணக்கம் நிரூபன்!(காலையா/மாலையா தெரியவில்ல,ஹி!ஹி!ஹி!)உங்களுக்கும் "அழுத்தமோ"?எதுவாயிருந்தாலும்,தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்காது தொடர்களை முடியுங்கள்!பின்னர் யோசிக்கலாம்.நீங்க எப்பிடிக் கக்கா போவீர்கள்(செம்புடனா?)என்பதை எழுதினால் கூட அது ரசிக்கும்படியாகவே இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்!எழுத்து ஒரு வரம்,அதை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள்.(என்னால் எழுத முடியவில்லை!)நன்றி நிரூபன்!!!!
@யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி
இம்புட்டு வாழ்த்துக்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேனோ தெரியலையே..
நன்றி தல
@"என் ராஜபாட்டை"- ராஜா
காமெடி யா ஏதாவது ட்ரை பண்ணுங்க
//
நன்றி பாஸ்..
நானும் ட்ரை பண்றேன்.
@விக்கியுலகம்
அருமையான, ஆழமான கருத்துக்களைக் கொடுத்திருக்கிறீங்க.
கவனத்தில் கொள்கிறேன் அண்ணே.
@நிரோஜ்
தங்களின் ஊக்க கருத்துக்களுக்கு நன்றி நிரோஜ்.
@Yoga.S.
மாலை வணக்கம் ஐயா,
தொடர்ந்தும் எழுதுகிறேன்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் நிரூபன் நலமா இருக்கியா?
உன் பதிவை பார்த்து ரொம்ப நாளாகிட்டுன்னு வந்தா நீ யோசனை கேட்கிறையே... என்னாச்சு ..... இது நீ இல்லையே.....
விக்கி அண்ணா சொன்ன கருத்தை நானும் காபி பண்ணிக்கிறேன்....
உம் தளம் வரும் பார்வையாளர்களுக்கு ஏற்ற பதிவு சீக்கிரம் இந்த நாற்றில் வரட்டும்.....
பத்துலட்சம் பார்வைகள் அத்தனை சாத்தியமில்லை நிரூபன், அத்தனை எளிதில் இவை கிட்டிவிடுவதுமில்லை... அதால சீக்கிரம் அடுத்த பதிவோடு வாரும்.... இந்த பல லட்சங்களுக்கு என் வாழ்த்துகள் :)
தம்பீ!
நலமா!
எழுதுவது இருகட்டும் ! முற் கண்
சென்ற இடத்தில் வலுவாக காலுன்ற
பாருங்கள்!
பிற பின்னர்!
புலவர் சா இராமாநுசம்
433 +/- 33 ...வாழ்த்துகள் சகோதரம்...
சொறி பிடிச்சவன் கையும் ப்ளாக் எழுதுறவன் கையும் சும்மாவே இருக்காதாம்...
யாரும் சொன்னதில்லை...நானா சொல்றேன்...-:)
வழமை போல் கலக்குங்கள்...ஆஸ்திரேலியாவிலே எங்கேயோ மைனஸ் 5 இப்பதான் தெரியும்..
தொடர்ந்து உங்கள் பாணியிலேயே கலக்குங்கள்...
நிருபன் ..உங்க மனதுக்கு பிடித்ததை நேர்மையென்று தோன்றுவதை எழுதுங்க .
ஆஸ்த்ரேலியாவில் கூட மைனஸ் ஐந்தா ???
எப்பவும் சந்தோஷமா இருங்க.take care.
Post a Comment