சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக!
ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.
ஆனா இம்முறைத் தேர்தல் நெருங்கி வரும் முன்பதாக இத்துப் போன கட்சியை எப்படியாச்சும் எதிர்க்கட்சி வரிசைல உட்காரச் செய்து சொத்துக்கு ஆசை கொண்ட சுய நல அரசியல் நடத்தாலாம்னு கெளம்பியிருக்காங்க கலைஞர் அண்ட் கோ மற்றும் கட்சி அடிப் பொடிகள். கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து ஈழ அரசியலை தொட்டு நக்கி தமிழக உள்ளங்களை ஏமாற்றி தறி கெட்ட அரசியல் நடத்தலாம்னு நெனைச்ச கழக தலமைகள் மறை கழண்ட கருநாய்நிதி மூலம் ஈழப் பிரச்சினைக்கு இலவச தீர்வு கொடுப்போம் என கெளம்பியிருக்காங்கோ! இனியும் ஏமாற உலகெல்லாம் பரந்து வாழும் பத்து கோடி தமிழர்கள் தயாரில்லை என்பதனை கலைஞர் கூட்டணி அண்மைக் காலத்தில் இக் கருத்து தொடர்பில் இடம் பெறும் சாட்டை அடி மூலம் உணர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்போது இத்துப் போன கட்சியை தக்க வைக்கும் இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்யும் நோக்கில் திமுக கட்சி தன் அல்லக் கைகளை ஆசை வார்த்தை காட்டி களமிறக்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக தான் கலைஞர் எனும் புளியங் கொம்பை பற்றி கொள்ளச் சொல்லி புத்தி சுவாதீனமற்ற சிலர் உளறியிருக்கிறார்கள். இப்படி ஓர் கட்டுரையை எழுதி விட்டு கலைஞரைச் சந்திக்க கோபாலபுரத்திற்கு நம்ம கட்டுரையாளர் செல்கிறார். அங்கே என்ன நடக்கிறது என்று அறிய ஆவலா? இதோ வாருங்கள்!
கோபாலபுரம் - கோபுரத்திலிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்ட இடம்!
கலைஞர், ஸ்டாலின், பிரச்சார பீரங்கி, மற்றும் சில கழக கண்மணிகள், கவிஞர் டாப்பு குத்து ஆகியோர் அபையில் இருக்காங்க.
புளியங் கொம்பு கட்டுரையாளர் அலறியடித்தவாறு ஓடிப் போய் கலைஞர் கால்ல விழுறாரு!
அல்லக்கை: மன்னா! என்னய காப்பாற்றுங்க. உங்க சொல் பேச்சை கேட்டு ஒரு இத்துப் போன கவுன்சிலர் பதவியாச்சும் கெடைக்கும்னு நெனைச்சு கட்டுரை எழுதினேன். திரும்புற இடமெல்லாம் மூஞ்சில காறி துப்பி நோகடிக்கிறாங்க. என்னால முடியலை மன்னா!
கலைஞர்: அல்லக்கை அப்பாவே! நீ என்ன செய்தே? பதிவுலகில் உள்ள தந்திர மந்திரங்களையெல்லாம் கையாண்டு பார்த்தியா? பதிவுலகில நம்ம கட்சி ஆதரவாளர்கள் யாராச்சும் இருப்பாங்களே! அவங்களை ஒனக்கு துணையா அழைச்சியா?
அல்லக்கை: மன்னா! என் ப்ளாக்கில ஒன்னுக்கு 56 அனானி கமெண்ட் கை வலிக்க எழுதி நானே நொந்து போயிருக்கேன்! ஆனாலும் விடாம அடிக்கிறாங்க மன்னா. பேஸ்புக்கில கூட என் போட்டோவை போட்டு கும்மி எடுக்கிறாங்க. உதவிக்கு அழைக்கலாம்னு கழக கண்மணிகள் கிட்ட போனா காறி உமிழுறாங்க, பெரிசு மறை கழண்ட நேரத்தில ஏதாச்சும் காமெடி பண்ணியிருக்கும். அதை கேட்டு நீ இப்படி சீரியஸ்ஸா எழுதிட்டியே நாயேன்னு திட்டுறாங்க மன்னா! உங்க கட்சிகாரங்களுக்கே ஒங்க மேல நம்பிக்கை இல்லைன்னா பாருங்களேன்!
திமுக பிரச்சார பீரங்கி: நிறுத்தும்! என்னா பேச்சு பேசுறீர்? குவாட்டரும், குருவி ரொட்டியும் வேணும்னு நீர் தானே அடம் புடிச்சு ப்ளாக்கில பிரச்சாரம் செய்யனும் என்று கெளம்பினீர்? இப்போ நம்ம தலைவரையே மறை கழண்ட ஆள் என்று சொல்லிப்புட்டீரே! உம்மை அப்புறமா கவனிச்சுக்கிறேன்.
கலைஞர்: இப்போ நம்ம கட்சி பத்தி வெளி உலகத்துல என்னல்லாம் பேசிக்கிறாங்கோ?
ஸ்டாலின்: டீ.ராஜேந்தர் கட்சி கூட நம்ம கட்சியை முந்திட்டுதாம். நாம ரொம்ப அதள பாதாளத்தில இருக்கோம்னு பேசிக்கிறாங்க. அது மட்டுமா சொல்றாங்கோ! திமுக இனிமே ஆட்சியை புடிக்கவே முடியாதாம் அப்படீன்னு பேசிக்கிறாங்க. நம்ம ஆளுங்களை எல்லாம் திருத்த முடியாத கழுதைங்க அப்படீன்னு பேசி நாறடிக்கிறாங்க. நீங்க என்னைக்கு கட்சியை விட்டு ஓய்வு எடுக்கிறீங்களோ! அன்னைக்கு தான் தமிழகத்திற்கும், உலக தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும் என்று பேசிக்கிறாங்க.
கலைஞர்: இதுக்கெல்லாம் ஒரே வழி! சுவிஸ் பேங்ல இருக்கும் பணத்தை எடுத்து இலவச ரவுண்டை ஓப்பன் செய்வது தான். கட்சியை விட்டு நான் போவதா? ஓய்வு எடுப்பதா? தம்பிகளா அது இன்னும் 20 வருசத்திற்கு நடக்கவே நடக்காது.
அல்லக்கை அப்பா: அப்படீன்னா என் பொள்ளயோட எதிர்காலம் என்னாவது?
ஸ்டாலின்: சீ! போ கழுதை! நீயே ஒரு அல்லக்கை! ஒன் புள்ளைக்கு மட்டும் எதிர்காலம் தேவையா?
கலைஞர்: சுவிஸ் பேங்ல இருக்கும் என் பணத்த்தை எடுத்து இலவச டீவி போல.. இனிமே இலவச நடிகை நடனம் காட்டுவோமா?
கவிஞர் டாப்பு குத்து: அது முடியாது மன்னா! ஏனெனில் நம்ம பணம் இப்போது கனியிடமும், ராசாவிடமும் இழுபறி நிலையில் இருக்கு, நாம பணத்தில கை வைச்சா மறுபடியும் உள்ளே போக வேண்டி வரலாம்!
கலைஞர்: இப்போது இதற்கு என்ன தீர்வு? எம் இழி நிலையை போக்க என்ன வழி?
கழக கண்மணிகள்: கட்சியை விட்டு நீங்க கதறி ஓடனும். கட்சியோட எதிர்காலத்தை இளைஞர்கள் கையில் கொடுக்கனும். இளைஞர் அணியில் இருக்கும் 50 வயசு முதியவர்களை உடனடியாக விரட்டி அடிக்கனும்.
கலைஞர்: அது தான் முடியவே முடியாதே! ஏன்னா உலகத்தில மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்த மூன்றும் தான் தீராத ஆசைன்னு சொல்லுவாங்க. இதில மண்ணாசை தீரலை என்பதால தான் நானே கட்சியோட கோவண துணியில தொங்கிட்டு இருக்கேன். பெண்ணாசை தீரலை என்பதால தான் அவ்வப்போது மானாட மயிலாட, பாசத் தலைவனுக்கு பாராட்டு விழான்னு வைச்சு மகிழ்ந்திட்டிருக்கேன்! இனிமே இப்படி பேசினீங்க? கட்சியை காங்கிரஸிற்கு தாரை வார்த்து கொடுத்திடுவேன்!
கலைஞரின் பேச்சை கேட்டு கழக கண் மணிகள் அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள்! திரை மூடப்படுகின்றது.
|
7 Comments:
வணக்கம்
செம காமடி போங்க.
ஆமா இந்த அல்லக்கைகள் எப்பூடீ இவ்வளவு கண்மூடிதனமாக இருகக்காயங்க.
வணக்கம் நிரூபன்!இது போதாதே?///என்னது சுவிஸ் பாங்கில இருக்கிற....................!ஏதாவது நடக்கிற கதையைப் பேசுவமே?அடுத்த மூணு -ஜி(3-G) கமிஷனில அப்புடீன்னு வரணும்!
ஹாஹாஹாஹா..
நிரு இது செம காமெடி ....
கரு நாய் நிதிக்கும் அதன் அல்லக்கை நோள்ளக்கைகலுக்கும் இது உறைக்கவா போகுது :))))
தமிழகத்தில் ஈழப்பிரச்சினைதான் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது என்றால் இன்றைக்கு வை.கோ தான் முதலமைச்சராக இருப்பார். கருணானிதியின் சமீபத்திய தமிழீழம் பற்றிய பேச்சு தானும் உலகத்தமிழர்களுக்காகப் பாடுபடுபவந்தான் என்பதை காட்டிக் கொள்வதற்காக இருக்கலாம், மற்றபடி ஆதாயம் எதுவும் இல்லை.
அம்மையார் ஆட்சி சரியில்லை என்றால் அடுத்தமுறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்கே கிட்டும். சட்டசபைத் தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழக அரசியலைப் பற்றிய சரியான புரிதல் உங்களுக்கு இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
@Robin
தமிழக அரசியலைப் பற்றிய புரிதல் இருக்கிறது நண்பரே.
தமிழக அரசியலின் போது தான் மேடைகளில் ஈழப் பிரச்சினை உணர்வெழுச்சியுடன் முழங்கப்படுகின்றது என்பது யதார்த்தம் தானே
Post a Comment