"தமிழன் இல்லாத நாடும் இல்லை! தமிழனுக்கு என்றோர் நாடும் இல்லை!" என்பது ஈழத்து ஆஸ்தான கவிஞரின் கவி வரிகளாகும். உலக நாடுகள் எங்கும் தமிழன் பரந்து வாழ்கின்றான் எனும் விடயத்திற்கும் அப்பால் இன்றளவில் உலக நாடுகள் சிலவற்றின் அரசியல் நிலமைகளை / ஆட்சியில் உள்ள கட்சியின் வாக்குப் பலத்தினைத் தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாகவும் உலகத் தமிழன் விளங்குகின்றான். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் பதிவினுள் நுழைவோம்.
கப்பல் ஓட்டிய தமிழன் எனும் பெயருக்கு சொந்தக்காரராக ஆசியாவில் உள்ள பழந்தமிழ்க் குடிகளுள் ஒன்றான ஈழத்தினைச் சேர்ந்த வல்வெட்டித்துறையில் வாழ்ந்த தமிழ்க் குடிகள் விளங்குகின்றார்கள். உலகளவில் பல நாடுகளுக்கும் சென்று தம் பண பலத்தால் முன்னேறிய குடிகளாக தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் இனவாதச் சிங்கள அரசின் கொடிய போர் மேலும் பல ஆயிரக் கணக்கான தமிழர்களை அவர்களின் பூர்விக நிலங்களை விட்டு புலம் பெயர்ந்து செல்ல வைத்தது.
தமிழன் தான் வாழும் நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ் நிலைகளால் தன் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டான். தமிழர்களில் போர் வெறியர்கள் வாழ்ந்ததாக, இன்றும் வாழ்ந்து வருவதாக வரலாறுகள் ஏதும் இதுவரை எழுதப்படவில்லை. தமிழர்கள் தானாகப் போரை விரும்பி ஏற்றவர்கள் அல்ல. போர் எனும் அரக்கனின் பிடிக்குள் வலிந்து தள்ளப்பட்டவர்கள். உலகெங்கும் பரந்து வாழும் இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்கள் போரை விரும்புவதாக அரசியல் பற்றி அதிகம் தெரியாத சில ஈனப் பிறவிகள் இன்று போலிக் கட்டுரை வரைந்து குளிர் காய்கின்றன.
ஈழத்தில் போர் ஓய்ந்தால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் அகதிக் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் நாட்டிற்குத் திரும்ப நேரும் என பொய்யுரைத்து பல வாசகர்களை முட்டாளாக்க முனைகின்றனர் சில மதம் பரப்பு நல் உள்ளங்கள். எந்த ஓர் நாட்டிலும் ஐக்கிய நாடுகள் சாசனப் படி அகதிக் குடியுரிமை வழங்கப்பட்டால் அது மீளப் பெறப்படமாட்டாது என்பது நியதி! உலகெங்கும் பரந்து வாழும் ஈழ மக்களில் 99 வீதமான மக்கள் அந் நாட்டுக் குடியுரிமையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று குடும்பம், வாழ்க்கை தொழில் எனப் பல அம்சங்கள் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன.
ஒரு சதவீதமான மக்கள் மாத்திரம் நிரந்தர குடியுரிமை இன்றி வாழ்க்கையுடன் போராடுகின்றார்கள். ஆக ஈழ மக்களைப் போர் வெறியர்களாக்கி அல்லாவின் தத்துவம் ஒன்றினை ஈழ மக்களின் இன்றைய நிலையுடன் செருகிப் பார்த்து ஈழ மக்களுக்கு அன்று அல்லா சொல்லி வைத்த கூற்றுப் படி இன்று இந்த நிலமை எனக் கட்டுரை வரைந்து சுய சொறிதல் செய்வதில் சிலருக்கு இன்பம் இருக்கு என்பதற்கு இப்படியான கட்டுரைகள் சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
உலகத் தமிழ் மக்கள் தாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக தம்மைத் தாமே பல துறைகளிலும் வளர்த்துக் கொள்கின்றார்கள். பாராளுமன்றங்களில் அரசியல்வாதிகளாக, தொழிற் துறைகளில் நன்கு முன்னேறிய செல்வந்தர்களாக, தொழில் நுட்பம், அறிவியல், எனப் பல வழிகளிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றார்கள். கனடா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் அங்கு வாழும் ஐந்து லட்சம் தமிழர்களின் வாக்குரிமையினை வைத்துத் தான் ஆளுங் கட்சியின் அரசியல் ஸ்திரத் தன்மை கூட தீர்மானிக்கப்படுகின்றது.
உலகெல்லாம் வாழும் மக்கள் அனைவரும் தம்மைப் போல இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களும் சகல வசதி வாய்ப்புக்களுடன் வாழ வேண்டும் என நினைக்கின்றார்களே அன்றி, போர் புரிந்து இன்னோர் சந்ததி தம் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என விஷமத்தனமாக நினைப்பவர்கள் அல்ல. தமிழினம் இன்று உலக நாடுகள் பலவற்றாலும் நேசிக்கப்படும் ஓர் இனமாக மாறி வருகின்றது. பல நாடுகளில் மாறியிருக்கின்றது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் அதீத திறமைகளைப் பட்டியலிட ஓர் பதிவு போதாது.
வரலாறுகள் புனை கதைகளாக மதக் கோட்பாடுகளை முன்னிறுத்தி எழுதப்படும் போது, அவற்றினை மீள ஆராய்வது மனிதனின் தலையாய கடமையாகின்றது!
*****************************************************************************************************************
எல்லோருக்கும் வணக்கமுங்க,
எல்லோரும் நல்லா இருக்கீங்களா? மிகவும் நீண்ட இடைவேளையின் பின்னர் உங்கள் அனைவரையும் இப் பதிவின் வாயிலாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!
மீண்டும் அடுத்த பதிவுடன் வெகு விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
இப் பதிவினைப் படித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
நேசமுடன்,
செ.நிரூபன்.
*****************************************************************************************************************
|
20 Comments:
இரவு வணக்கம் பாஸ்.
மதம் பரப்பும் பூதங்கள் ஆயிரம் சொல்லும் நாம் போரை நேசிக்கும் இனம் என்று அதில் எந்தளவு விசமத்தனம் இருக்கு என்று ஒரு கனம் சிந்தித்தால் இத்தனை வலிகள் தமிழருக்கு வந்திருக்காது.
இரவு வணக்கம் நிரூபன்!உண்மை சிலருக்குச் சுடுமே,பரவாயில்லையா?அப்புறம்,///லண்டன்,கனடா போன்ற நாடுகளில் வாழும்..........////கனடா ஒ.கே.லண்டன் நாடு அல்ல நகரம்,இங்கிலாந்து/ஐக்கிய இராச்சியம் என்று வர வேண்டும்,நன்றி!
நாம்(ஒடுக்கப்பட்ட இனம்/ஒடுக்கப்படும் இனம்)என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்று "எதிரி"யே தீர்மானிக்கிறான்!-வே.பிரபாகரன்.
இப் பதிவினைப் படித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
//ஹீ அறிவிப்பாளர் நிரூபன் .அவர்களே!
இன்று என் அபிமான அறிவிப்பாளர் a.l ஜாபீர் வாகன விபத்தில் காயப்பட்டார் என்று செய்தி கேட்டேன் அதன் தாக்கத்தில் மீளமுடியாது இருக்கும் போது நீங்கள் அவரைப் போல துள்ளளுடன் விடைபெறுவது அவரின் செயல் பாட்டை ஞாபகம் ஊட்டுகின்றது. எனக்கு.
நல்ல பதிவு மச்சி! ஆனா தலைப்பை ஏன் இவ்வளவு கொடூரமாக வைத்திருக்கிறாய்?
ஓ..... நம்மளைப் பற்றி “ சிலர்” என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறாயா? ஓகே ஓகே!
மச்சி, உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய எமக்கு - எமது பலம் தெரிவதில்லை! எமது முக்கியத்துவமும், ஏனைய சமூகங்கள் எம்மை எவ்விதம் நோக்குகின்றன என்பதையும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்!
இவற்றையெல்லாம், வெளிநாடுகளில் வாழும் மூத்த தலைமுறையினர் தான், எமக்கு எடுத்துக் கூறி, எமக்கு நம்பிக்கையூட்டி, எம்மை வழி நடத்த வேண்டும்!
ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கு அப்படி நடப்பதில்லை! இங்கு ஃபிரான்ஸைப் பொறுத்தவரை “ ஈழத்தமிழர் கொம்மியுனிட்டி” எந்தளவு மதிப்புடையது என்பது லா ஷபேலில் நின்றுகொண்டு, ஊர் வம்பளக்கும் சிலருக்குத் தெரிவதில்லை! அவற்றை ஊடகங்களும் எடுத்துரைப்பதும் இல்லை!
“ எல்லாமே போய்ச்சுது! நாசமாப்போய்ச்சுது” என்று ஒப்பாரி வைப்பதையே சிலர் எமக்குக் கற்றுத் தருகிறார்கள்!
இதனால் தான் நாம் முரண்பட வேண்டியுள்ளது! மற்றும்படி நாம் இறகு முளைத்தவர்கள் தான்! அதில் சந்தேகமே இல்லை!
மச்சி, லண்டன் ஒலிம்பிக் வரவேற்பு வீடியோ பார்த்தாய் தானே! அதில் முதலாவது வார்த்தையே “ வணக்கம்” என்பதுதான்!
யோசிச்சுப்பார் - அது ஒரு சாதாரண வீடியோ இல்லை! அது தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வீடியோ! அது சொல்லாமல் பல செய்திகளைச் சொல்கிறது!
கவனித்தாயா அந்த வீடியோவில் “ ஆயுபோவன்” இல்லை!
ம்.......... பிரித்தானியா எங்களுக்கு எவ்வளோ செய்கிறது - பல வழியிலும்!
தலைப்பு அசிங்கமாக இருக்கிறது.
அட நிரு பழைய மாதிரி பதிவு போட தொடங்கிட்டா ...... சூப்பர்...
நிரு.. நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மையே... இங்கே இப்போது "அகதிகள்" என்ற பேச்சுக்கே இடமில்லை.... தபால் நிலையம், வாங் .. என்று எங்கே போனாலும் அங்கே எம்மவர் உயர் பதவியில் இருக்கிறார்கள்..... நம் இளம் தலைமுறையும் படிப்பில் மிக முன்னேறிக்கொண்டு இருக்கிறது , மிக அதிகமாவார்கள் இங்கே சிட்டிஷனோடுதான் இருக்கிறார்கள் ... ஆனால்....! இதையெல்லாம் பார்க்காமல் பொறாமை புடிச்சதுகள் கண்டபடி பேசத்தான் செய்யும்.... எல்லாம் எங்கள் மேல் உள்ள வயித்தெரிச்சல் :))))))
அப்புறம்... அல்லா பற்றி நோ கமெண்ட்ஸ் ....... ஏக்கனவே அடிச்சு கொன்ற பாம்பை மீண்டும் மீண்டும் அடிக்க எனக்கே அவமானமாய் இருக்கு :(
உங்கள் பதிவுகளின் தலைப்பு ஏன் இப்படி கருத்து சிறப்பினும் தலைப்பு சிறப்பில்லையே
@தனிமரம்
வணக்கம் பாஸ்..
அந்த உணர்வு அவர்களுக்கெல்லாம் இருக்கும் என்றா நினைக்கிறீங்க?
கருத்துரைக்கு நன்றி
@Yoga.S.FR
இரவு வணக்கம் நிரூபன்!உண்மை சிலருக்குச் சுடுமே,பரவாயில்லையா?அப்புறம்,///லண்டன்,கனடா போன்ற நாடுகளில் வாழும்..........////கனடா ஒ.கே.லண்டன் நாடு அல்ல நகரம்,இங்கிலாந்து/ஐக்கிய இராச்சியம் என்று வர வேண்டும்,நன்றி!
//
ஹி....ஹி..
வணக்கம் ஐயா,
லண்டனை ஐக்கிய ராச்சியம் என திருத்தி எழுதி விட்டேன்.
நன்றி.
@Yoga.S.FR
நாம்(ஒடுக்கப்பட்ட இனம்/ஒடுக்கப்படும் இனம்)என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்று "எதிரி"யே தீர்மானிக்கிறான்!-வே.பிரபாகரன்.
//
சூப்பர் பஞ்சு...
டைம்மிங் பஞ்சாக அண்ணரின் கருத்தினை எடுத்து விட்டிருக்கிறீங்க.
ரொம்ப நன்றி
@Ideamani - The Master of All
நல்ல பதிவு மச்சி! ஆனா தலைப்பை ஏன் இவ்வளவு கொடூரமாக வைத்திருக்கிறாய்?
ஓ..... நம்மளைப் பற்றி “ சிலர்” என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறாயா? ஓகே ஓகே!//
ஹே...ஹே...
வணக்கம் மச்சி
எமது அருமை பெருமைகளை அறியாத சிலர் தமிழர்களைத் தரம் தாழ்த்திப் பேசிப் பேசியே தம் வாழ்க்கையினை ஓட்டுகின்றார்கள். அவர்களுக்கு கொஞ்சம் புரிதல் வரட்டுமே எனும் நோக்கில் தான் இப்படி ஓர் தலைப்பினை வைத்தேன்.
@Ideamani - The Master of All
இவற்றையெல்லாம், வெளிநாடுகளில் வாழும் மூத்த தலைமுறையினர் தான், எமக்கு எடுத்துக் கூறி, எமக்கு நம்பிக்கையூட்டி, எம்மை வழி நடத்த வேண்டும்!
ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கு அப்படி நடப்பதில்லை! இங்கு ஃபிரான்ஸைப் பொறுத்தவரை “ ஈழத்தமிழர் கொம்மியுனிட்டி” எந்தளவு மதிப்புடையது என்பது லா ஷபேலில் நின்றுகொண்டு, ஊர் வம்பளக்கும் சிலருக்குத் தெரிவதில்லை! அவற்றை ஊடகங்களும் எடுத்துரைப்பதும் இல்லை!
//
என்னுடைய அடுத்த இலக்கு அது தான்.
உலகின் பூர்வீக குடிகளோடு ஒப்பிட்டு எமது சமூகம் இன்று எந் நிலையில் இருக்கிறது என்பதனை விளக்கி எழுதவுள்ளேன். வெகு விரைவில் அந்தப் பதிவுகள் உங்களை நாடி வரும்.
@Ideamani - The Master of All
யோசிச்சுப்பார் - அது ஒரு சாதாரண வீடியோ இல்லை! அது தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வீடியோ! அது சொல்லாமல் பல செய்திகளைச் சொல்கிறது!
கவனித்தாயா அந்த வீடியோவில் “ ஆயுபோவன்” இல்லை!
//
தமிழர்கள் இன்று பல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் ஒரு விளைவு தான் இது மச்சி.
@பழனி.கந்தசாமி
தலைப்பு அசிங்கமாக இருக்கிறது.
//
தமிழர்களை நக்கிப் பொழைக்கும் இனம் என இன்னோர் இனம் சொல்வதை என்னால் ஏற்க முடியலை! அதனால் தான் அவர்கள் பாஷையில் அவர்களுக்கு ஓர் பதிலடி கொடுக்கும் வண்ணம் இப் பதிவினை எழுத நேர்ந்தது.
@துஷ்யந்தன்
துஸி...வயித்தெரிச்சல் என்று சொல்ல முடியாது. வரலாற்றினை மாற்றனும் எனும் அகங்காரம் என்றே சொல்ல முடியும்.
காகம் திட்டி மாடு சாகுமா?
@PREM.S
உங்கள் பதிவுகளின் தலைப்பு ஏன் இப்படி கருத்து சிறப்பினும் தலைப்பு சிறப்பில்லையே
//
நண்பா தலைப்பில் கவனம் செலுத்துகிறேன்.
எமது அருமை பெருமைகளை அறியாதோர் இப்படியான விடயங்களை எழுதி போலியான தகவல்களை மக்களிடத்தே கொண்டு செல்வதை சகிக்க முடியல்லை. அதன் ஓர் விளைவு தான் இப் பதிவு.
நிரூ!நன்றாக எழுதுகிறீர்கள்.ஆனால் தலைப்பில் எப்பொழுதும் தடுக்கி விழுகிறீர்கள்.மொத்த பதிவின் அழகை தலைப்பு கெடுத்து விடுகிறது.
Post a Comment