ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கீமூனைச் சந்திக்க வேண்டும் என மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஒரு பெண் ஓடோடி வந்தாள். அவள் பெயரை காவலர்கள் கேட்டார்கள். அதற்கு அவளோ தன் பெயர் "சலீமா" என்று உரைத்தாள். "பான்கிமூன் பயங்கர பிசியாக இருக்காரே!" என ஐநா சபையில் பணி புரியும் ஊழியர்கள் கூறியும், நீ செவிமடுக்காதவளாய்; என்னைச் சந்திக்க ஓடோடி வந்திருக்கிறாயே! அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார் பான்கிமூன்!
சலீமா பான்கிமூனின் வார்த்தைகளைக் கேட்டுச் சலிப்படையாதவளாக, "ஐயா பெரியவரே! என் ஆசை மகன் நஸ்ரூதினை பயங்கரவாதப் புலிகள் கொன்று விட்டார்கள்! ஆகவே இப்போது சிங்கள அரசு மீதான போர்க் குற்றம் பற்றி சனல் 4 தொலைக்காட்சி உரைப்பதை உடனடியாக நிறுத்தி விட்டு, புலிகள் என் மீதும், என் மகன் மீதும், என் வம்சம் மீதும் செய்த போர்க் குற்றங்களை ஆவணப்படுத்த வேண்டும். அந்த ஆவணங்களைப் பார்த்து ஐநா துடி துடித்து எழுந்து போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும்!" எனக் கூறி விம்மி விம்மி அழுதாள் அந்த அபலைப் பெண்!
பான்கிமூன் பலவாறாகச் சிந்திக்கலானார்! இப்போது புலிகளைத் தாம் பூண்டோடு அழித்து விட்டோம் என இலங்கை அரசு தலை மேல் அடித்து சத்தியம் செய்யா குறையாக பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது. புலிகளை இலங்கையில் வாழும் சிங்களவர்கள் மறந்து தொலைக்க நினைத்தாலும், சலீமாவின் வம்சம் மீண்டும் மீண்டும் புலிகள் தமக்கு கொடுமை இழைத்து விட்டார்கள் என நினைவுபடுத்துகிறது. இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு நாம் தீர்வு கொடுக்க ஏதாவது வழிகளைக் கண்டறிந்தாலும், சிறுபான்மை மக்கள் என்ற வகையினுள் தாம் அடங்க மாட்டோம் என ஓர் இனம் தம்மைத் தமிழர்களிலிருந்து பிரித்துப் பார்க்கிறது.
அப்படியாயின் தமிழர்களுக்கு இனிமேல் தீர்வு கொடுப்பது பற்றி யாருமே பேசக் கூடாதா எனச் சிந்திக்கலானார் பான்கிமூன். புலிகள் செய்த கடந்த கால யுத்த மீறல்களை இப்போது புலிகள் இல்லாத நேரத்தில் விசாரணை செய்து அவையும், பயங்கரவாத தாக்குதல்கள் என்றும், போர்க் குற்றங்கள் என்றும் தீர்ப்புக் கூறினால் ஈழப் பிரச்சினை தீர்ந்து விடுமா என ஐநா சபையில் உள்ள அனைத்துலகப் பிரதிநிதிகள் மண்டையைப் பிய்க்காத குறையாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது, பான்கிமூன், சலீமாவின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாதவராய், சலீமாவை அழைத்துக் கொண்டு,தனது மாநாட்டு மண்டபத்தில் அனைத்துலகப் பிரதிநிகளோடு அமர்ந்திருக்கிறார். இப்போது அரங்கத்தில் நிசப்தம் நிலவியது. அங்கே ஓர் ஒளிப் பிளம்பு தோன்றலாயிற்று. "நான் தான் எமதர்ம ராஜன்!" என தன்னை அறிமுகம் செய்தவாறு ஒளிப் பிளம்பினூடே ஓர் கறுத்த உருவம் அசைந்து வந்து பேசத் தொடங்கிற்று. "அபையில் உள்ள அனைத்துலக தீர்வு வழங்குனர்களே! மனிதாபிமானிகளே! எமதர்மனாகிய நான், என் பார்வைக்கு தெரிந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்" என அந்த கறுத்த உருவம் உரைக்க ஆரம்பித்தது.
ஈழத் தமிழர்களில் உதிரிக் கட்சிகள், சிங்களர்களின் காலை நக்கிப் பிழைக்கும் ஈனக் கட்சிகள் தவிர்த்து, ஏனைய தமிழர்கள் அனைவரும் தமக்கு ஓர் தீர்வு வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர், தம்மைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசின் பக்கம் தாம் உள்ளோம் என நடித்த மக்கள் உட்பட, அனைத்துத் தமிழ் மக்களும், இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும், குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஸேவை ஏற்றி, தீர்ப்பு வழங்க வேண்டும் என உறுதியாக நிற்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும், ஓர் இனத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஈழத் தமிழர்களே உங்களுக்கு எதுக்கடா இந்த தீர்வு என பொங்கிப் பிரவாகிக்கிறார்கள்!
அபையிலிருந்த அனைவரும் எமதர்மனை உற்றுப் பார்த்தார்கள். "யார் அந்த ஒரு சிலர் சொல்ல முடியுமா? அவர்களின் பெயர்களை கூற முடியுமா?" என்று கேட்டார்கள். எமதர்மன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "இதோ இங்கே வந்திருக்கிறாளே சலீமா! இவளைப் போல அதிகம் படித்த சில புத்திஜீவிகள் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்து, தமிழர்களுக்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் தீர்வு கிடைக்க கூடாது" என இறுமாப்புடன் நிற்கிறார்கள். "அப்படியாயின், இவர்களை அனைத்து மக்களும் கண்டு கொள்ள ஏதாவது வழிகள் இருக்கின்றனவா?" என கேட்டார் ஓர் இராஜதந்திரி.
எமதர்மன் சிரித்தபடி பதிலுரைத்தார். "சாட்டிலைட் வைத்து நீங்கள் லைவ் டெலிக்காஸ்ட் செய்யலாம்! ஆனால் இவர்கள் புல்லுருவிகள்! முதலில் இவர்கள் ஓர் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு சிலர் தான் தம்மைச் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரால் ஏனைய மக்களைப் புறக்கணிக்கப் பார்க்கிறார்கள் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இனிமேல் ஈழத் தமிழர்களே அடிச்சுக்கிட்டு சாகுங்கடா என எவர் வந்தாலும், அவர்கள் மூஞ்சியில் காறி உமிழ அனைத்து மக்களும் தயாராக` வேண்டும்! இது தான் என் கருத்து" என கூறி விட்டு எம தர்மன் மறைந்தார்.
அனைத்து இராஜதந்திரிகளும், ஒருத்தரை ஒருத்தர் பார்த்தார்கள். அரங்கில் மீண்டும் நிசப்தம்! சலீமா எங்கே என அனைவரும் தேடத் தொடங்கினார்கள். தன்னுடைய ஏமாற்று வித்தை இனிமேல் பலிக்காது என்பதனை உணர்ந்து சலீமா அவமானத்துடன் அரங்கை விட்டு நகரத் தொடங்கினாள்!
யாவும் கற்பனையே!
|
12 Comments:
காலை வணக்கம் நிரூபன்(நிருபன்?)!யாவும் கற்பனையல்ல,நிஜமே!கடந்த வாரம் புதன்கிழமை தினக்குரல் கட்டுரை ("பிரேரணையை வென்றெடுத்த அமெரிக்காவும் இலங்கையின் காலை வாரிவிட்ட இந்தியாவும்")க்கு வந்திருக்கும் கருத்துக்களைப் பார்த்தால் விளங்கும்!
வணக்கம் ஐயா,
இன்னும் கொஞ்ச கருத்துக்கள் மனதினுள் இருக்கு!
எழுத வேணாம் என்று நண்பர்கள் தடுக்கிறார்கள்.
அநேகமா இன்று மாலை மீண்டும் ஓர் ஊமக் குத்து பதிவு போடுவேன்!
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தோற்றது எப்படி- புதிய கண்டு பிடிப்பு கண்டு பிடிச்சிருக்காங்கோ! அவ்வ்வ்வ்வ்வ்
இப்ப கொஞ்ச நாளா நல்ல பையன் மாதிரி இருந்தா விட மாட்டேங்கிறாங்கோ! அவ்வ்வ்வ்வ்
தற்போதைய சூழ் நிலையில் மே வரை பொறுமை காப்பதும் கொஞ்சம் நல்லது போலவே தோன்றுகிறது!"மே" யில் அதிரடி ஒன்றுக்கு இடமுண்டு!(இன்ரநாஷனல் போலீஸ்)!
ஈழத் தமிழர்கள் எதிர்காலம் சிறக்கவேண்டுமானால் ஆழும் வர்க்கத்தின் தந்திர வலைகளில் சிக்காது வெற்றி கிட்டும் வரை ஒற்றுமையாய் செயல் படுத்தல் அவசியம் ......புரியாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்....
வாசகனை விசும்ப வைப்பதும்...
அதே வாசகனை குசும்பு செய்து நகைக்க வைப்பதிலும்...
நிரூபனுக்கு நிகர் நிரூபனே!
ஈனத்தனம் செய்து தம்மை வளர்த்துக்கொள்பவர்கள் நம்மவர்மத்தியில் நிறையவே இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையே.
@Yoga.S.FR
தற்போதைய சூழ் நிலையில் மே வரை பொறுமை காப்பதும் கொஞ்சம் நல்லது போலவே தோன்றுகிறது!"மே" யில் அதிரடி ஒன்றுக்கு இடமுண்டு!(இன்ரநாஷனல் போலீஸ்)!
//
கொஞ்சம் பொறுமையாக இருப்போம் ஐயா,
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்லிச் சொல்லியே பொறுமையைச் சோதித்து விட்டார்களே!
@koodal bala
ஈழத் தமிழர்கள் எதிர்காலம் சிறக்கவேண்டுமானால் ஆழும் வர்க்கத்தின் தந்திர வலைகளில் சிக்காது வெற்றி கிட்டும் வரை ஒற்றுமையாய் செயல் படுத்தல் அவசியம் ......புரியாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்....
//
சூப்பர் கருத்து அண்ணா.
தமிழர்களிற்கும் ஒற்றுமைக்கும் வெகு விரைவாகி விட்டதே!
@உலக சினிமா ரசிகன்
நன்றி அண்ணா.
@அம்பலத்தார்
உண்மை தான் ஐயா
copy+paste
யாவும் கற்பனையே!
எமதர்மன் சிரித்தபடி பதிலுரைத்தார். "சாட்டிலைட் வைத்து நீங்கள் லைவ் டெலிக்காஸ்ட் செய்யலாம்! ஆனால் இவர்கள் புல்லுருவிகள்! முதலில் இவர்கள் ஓர் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு சிலர் தான் தம்மைச் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரால் ஏனைய மக்களைப் புறக்கணிக்கப் பார்க்கிறார்கள் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இனிமேல் ஈழத் தமிழர்களே அடிச்சுக்கிட்டு சாகுங்கடா என எவர் வந்தாலும், அவர்கள் மூஞ்சியில் காறி உமிழ அனைத்து மக்களும் தயாராக` வேண்டும்! இது தான் என் கருத்து" என கூறி விட்டு எம தர்மன் மறைந்தார்.
//அடுத்ததாக ஒரு சிலர் தான் தம்மைச் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரால் ஏனைய மக்களைப் புறக்கணிக்கப் பார்க்கிறார்கள் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.//
//அபையிலிருந்த அனைவரும் எமதர்மனை உற்றுப் பார்த்தார்கள். "யார் அந்த ஒரு சிலர் சொல்ல முடியுமா? அவர்களின் பெயர்களை கூற முடியுமா?" என்று கேட்டார்கள். எமதர்மன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,//?????
//இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு நாம் தீர்வு கொடுக்க ஏதாவது வழிகளைக் கண்டறிந்தாலும், சிறுபான்மை மக்கள் என்ற வகையினுள் தாம் அடங்க மாட்டோம் என ஓர் இனம் தம்மைத் தமிழர்களிலிருந்து பிரித்துப் பார்க்கிறது//

Post a Comment