யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்!
முத்தவெளி முனியப்பர் கோயில் பின்னாலே
மூன்று மணி நேரம் காத்திருந்தாள் பவளம் தன்னாலே
பத்தரைக்கு வருவேன் என்றார் யோகா
பாவை "வோச்சை" பார்த்து நொந்து போனாள் லேசா
சத்தியமாய் ஆம்பிளைங்க குணமிதென்று சலித்தாள்
சரக்கடிக்க போயிருப்பாரோ யோகா என்று மனதுள் நினைத்தாள்
குத்துக்கலாய் நானிருக்க இந்த யோகருக்கோ
குஷ்பூ எனை விட்டு விட்டு குமரிப் பொண்ணா கேட்கிறது?
பத்துப் பவுண் தாலியா கேட்டேன்?
பாவை எனை கைப்பிடித்து கூட்டிப் போடா என்றேன்!
சித்தமதில் பிரம்மை பிடித்தவனாய்
சீரியஸ் பேச்சும் அறியாது இருக்கிறானே இவனோர் அப்பாவி
மொத்தமாக அள்ளி கொடுப்போம் என்றால்
மோப்பம் கூட புடிக்க தெரியாதவனாய் இருக்கிறானே அடப் பாவி!
சந்தனத்து மேனி காட்டி மயக்கிடவும் நினைத்தேன்
சரியான மோசக்காரி இவள் என பேசிடுவான் என பயந்தேன்
மந்தமான வெய்யிலிலே குடையினுள்ளே அணைத்திடவும் நினைத்தேன்
மாம்பழஞ் சந்தி வரை சைக்கிளிலே ரவுண்டு வர துடித்தேன்
அந்தியிலே அத்தான் யோகா நினைப்பினிலே திளைத்தேன்
அவன் மேனி எந்தன் ஆடையாகாதா என கனவில் மிதந்தேன்
சிந்தையிலே அவன் நினைப்பு - சித்தமெல்லாம் குறுகுறுப்பு
சீக்கிரமே என் மேனி சிவக்காதா வெட்கத்தினால் என தவிப்பு!
கந்தர்மடம் சந்தியில் காதல் பேசிடவும் விருப்பு
கவலை தீர கச்சாய் வரை சென்றுடனும் எனும் நினைப்பு!
எந்தன் ஆசை தீராதா என நினைத்தேன்
எனைத் தேடி அத்தான் யோகாவும் வர கனவினை கலைத்தேன்!
பவளத்தின் மனதை பஞ்சராக்கும் யோகாவின் அதிரடி வார்த்தைகள்!
பவளமே! என்னை உந்தன் பார்வையினால் சாய்த்த திரவியமே
கவலையே வேணாம்- வழியில் சைக்கிள் பஞ்சராகிட்டு அதிரசமே!
வேகமாய் வர நினைத்தேன் -வேல் விழி உனை காண துடித்தேன்
தாகமாய் வழியில் எடுக்க தர்ப்பூசணி வாங்கி உண்டேன்
பாகமாய் நீ என்னோடு இருப்பாய் எனும் நினைப்பினில் வந்தேன்
பாவையே உந்தன் மனசும் வாட ஓர் சேதி சொல்லப் போறேன்
கோபமாய் முகத்தில் காறி உமிழ்ந்திடாதே - மணக்கும்
கோதை நீ என்னுடன் கோபித்தாலோ உணவில் உப்பு கரிக்கும்!!
ஆளானா ஆம்பிளை எனக்கும் இப்போது அரியதோர் வாய்ப்பு
ஆறாயிரம் கடல் மைல் தாண்டி பிரான்ஸ் போகும் அழகிய வாய்ப்பு
ஆதலால் எனை நீயும் மறந்திடனும் பெற்றோர் சொற் கேட்டு
காதலை உதறித் தள்ளி "அரேஞ்" கலியாணம் செய்திடனும்
பேதையே என்னை மன்னிப்பாயா? இந்தப் பாவிக்கும் காதல்
பாவ விமோசனம் கொஞ்சம் கொடுத்து என்னை தண்டிப்பாயா?
பவளத்தின் பாசக் கயிற்றினால் பதறிய யோகாவின் நிலை!
அத்தானே என்னை காதல் மொழி பேசி
ஆட் கொண்ட அழகர் யோகாவே
செத்தாலும் உம்மை பிரியமாட்டேன் உறுதி - நான்
சொல்வதை கொஞ்சம் கேட்பீரா? - இப்போது
முத்தாக என் வயிற்றில் உம் வாரீசும்
மூன்று மாசமாக வளர்கிறதை அறியலையா?
கொத்தாத பாம்பென்று நினைத்தா கை வைத்தீர்?
கோதை எனை கட்டலைன்னா விபரீதம் நடக்கும்
பத்தோடு பதினொன்றாக கம்பி எண்ணி நீரும்
பாவத்தை போக்கிடவும் நேரும் எச்சரிக்கை என்றாள்!
பாவையின் மிரட்டல் கேட்டு பரிதவித்த யோகாவின் நிலை!
ஐயகோ என்னை விட்டு விடு
அறியாமல் நானும் காதல் செய்தேன்
மெய்யிலே வீரமுண்டு ஆனாலும்
மோசம் போய் விட்டேன் நானும்
பையிலே பைசா இல்லை ஆயினும்
பாவையே உன்னை கட்டுவேன் நம்பு!
கையிலே பிடித்தார் ரயிலின் சங்கிலியை
கணக்கு வழக்கின்றி கட்டுவேன் என்றார்
ஐயகோ கட்டுவேன் என்றார்- பயணிகள்
அனைவரும் யோகாவை பார்க்கலானார்- பகலிலே
மெய்யினை மறந்தார் கனவினில் விழுந்தார்
மேனியில் உணர்வுவர மெல்லமாய் அழுதார்!
கவிதையின் விளக்கம்: பிரபல பின்னூட்டவாதி யோகா அவர்கள் அந் நாளில் யாழ்ப்பாணத்தின் முத்தவெளியில் உள்ள முனியப்பர் கோயிலுக்குப் பின்னாடி பவளம் எனும் பெயர் கொண்ட பொண்ணைச் சந்திப்பதாக உறுதி மொழி வழங்கி விட்டு, மூன்று மணி நேரம் தாமதமாகச் சென்று சந்திக்கிறார். அப்போது, தான் பிரான்ஸிற்குப் போகும் விடயத்தினை அப் பெண்ணிடம் சொல்லுகிறார். தன்னை ஆசை வார்த்தை பேசி, வயிற்றில் புள்ளையை கொடுத்து விட்டு, யோகா மோசம் செய்திட்டாரே என நினைத்த அப்பாவிப் பெண்ணோ, யோகா தன்னை திருமணம் செய்யனும் என கேட்கின்றார். பெண்ணின் மிரட்டலுக்குப் பயந்த யோகாவும், தான் பயணிக்கும் ரயிலில் கட்டுறேன்! உன்னை கலியாணம் கட்டுறேன் என கூச்சலிடுகின்றார். தனக்குச் சுய நினைவு வரவே...அடடா..கனவில் இப்படியெல்லாம் செய்திட்டேனே என நினைத்து மெதுவாய் அழுகின்றார்.
அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:
*முத்த வெளி, கந்தர்மடம், கச்சாய், மாம்பஞ் சந்தி: யாழ்ப்பாணத்தில் உள்ள சிற்றூர்களின் பெயர்.
*வோச்: மணிக்கூடு
*அரேஞ் கலியாணம்: அரேஞ் மாரேஜ்.
வெகு விரைவில் உங்கள் நாற்று வலைப் பதிவில் ஓர் புத்தம் புதிய தொடர்...
பட உதவி: நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரன் சகோதரன் கந்தசாமி!
|
47 Comments:
aaaaaaaaaaaaaaaaa
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ஆஆஆஆஆஆஆஅ ...firstu firstu firstu
athu nanae nanee naneee ...............
யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்!///////////////////////
எங்கட மாம்ஸ் பற்றியா ....ஹைஈ ஜாலி ஜாலி ஜாலி ...
நோஒ என் மாமா மிகவும் நல்லவர் ...இதை யாரும் நம்பாதிங்கூ ...இது எல்லாம் அந்த நிரு அவரோட சதித் திட்டம் தான் ...
புகழின் உச்சியில் இருக்கும் எனது மாமாவை களங்கப் படுத்த வேண்டு எண்டு கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சில கெட்ட ஆவிகளின் வேலை than இது
நிறைய சிரிச்சிப் போட்டேன் ...
அம்பலத்தார் அங்கிள் எல்லாம் பெரிய பெரிய வேலைகள் செய்துப் போட்டு அமைதியா இருக்கும் போது எங்க மாமா செய்த சின்னத் தப்பை இப்புடி பப்பிளிகுட்டி பண்ணுறதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...
கலை : மாமா அழாதிங்க மாமா .............அழாதிங்க ....
எல்லாமே கனவு தானாம் ...
யோகா மாமா :கனவு பழிக்களை எண்டு தான் கலை அழுகுறேன்...
யோகா ஐயா ஊரில் இல்லை என்று நிரூபன் தெரிந்து கொண்டு இப்படி ஒரு கவிதையா????!!!! ஐயா மனசில் இப்படி ஒன்று இருந்ததா??அதுவும் கனவா!
வயிற்றில் வளரும் அளவுக்கு காதலில் மூழ்கிப்போகும் மோசாமான /கேவலமான காதலன் அல்ல யோகா ஐயா!!
மாம்பழச்சந்தியில் நானும் இருந்து பார்த்தேன் அவர் காணி கிடைக்கும் என்று பிறகுதான் தெரிந்து அவர் இன்னாற்ற இன்னார் என்று ஆகவே இது நிரூபனின் சதி என்று உலகத்துக்குச் சொல்லுவது என் கடமை. வேலையில் பிஸி பிறகு வாரன் !இது பழக்க தோஸம் பின்னூட்டம் போடுவது!
யோகா அப்பா லீவில நிக்கேக்க இப்பிடியெல்லாம் கலாய்க்கக்கூடாது சொல்லிப்போட்டன் நிரூ.பின்னூட்டம் கூட அதிர்ந்து போடத் தெரியாதவரை இப்பிடியெல்லாம் சொன்னால் நாங்கள் நம்பிவிடுவமோ.ஆனாலும் பத்தாது அவருக்கு.எனக்கு நேசன் தாற பால்கோப்பியை தானெல்லே எப்பவும் குடிக்கிறவர்.பத்தாது பத்தாது !
உந்த அதிரடி காதல் வார்த்தையில ஆர்தான் மயங்கமாட்டினம்.யோகா அப்பா கனவுதான்.இல்லாட்டி ச்ச...கனவாப்போச்சே எண்டு கவலைப்படுறீங்களோ தெரியேல்ல !
சரி சரி கவலையில்லாம லீவைச் சந்தோஷமாகக் கொண்டாடிவிட்டு வாங்கோ !
யோகா ஐயாவின்ர ஆத்துக்காரி இதை பாத்தா கதை கந்தலாகி போகுமே :)
ரசித்தேன்,
@கலை
ஆகா...
@கலை
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
//
அடடா...
@கலை
ஆஆஆஆஆஆஆஅ ...firstu firstu firstu
athu nanae nanee naneee ...............//
சூடா ஒரு சாயா போடுறேன்..
சீக்கிரமா காசை கொடுத்திட்டு, குடிச்சிட்டு பேசுங்க;-)))))))))))))))))))))
@கலை
யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்!///////////////////////
எங்கட மாம்ஸ் பற்றியா ....ஹைஈ ஜாலி ஜாலி ஜாலி ...
//
எதையுமே பார்த்த உடன முடிவு பண்ணிக்கப்புடாது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கவிதை படித்து முடிஞ்சதும் ரொம்பவே வருதப்படுவீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
@கலை
நோஒ என் மாமா மிகவும் நல்லவர் ...இதை யாரும் நம்பாதிங்கூ ...இது எல்லாம் அந்த நிரு அவரோட சதித் திட்டம் தான் ...
//
என்னது நிரூபனின் சதித்திட்டமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது பச்சைப் பொய்யுங்க
@கலை
புகழின் உச்சியில் இருக்கும் எனது மாமாவை களங்கப் படுத்த வேண்டு எண்டு கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சில கெட்ட ஆவிகளின் வேலை than இது
//
கெட்ட ஆவிகள் எல்லாம் கவிதை எழுதுமா? சொல்லவே இல்லைங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@கலை
நிறைய சிரிச்சிப் போட்டேன் ...
அம்பலத்தார் அங்கிள் எல்லாம் பெரிய பெரிய வேலைகள் செய்துப் போட்டு அமைதியா இருக்கும் போது எங்க மாமா செய்த சின்னத் தப்பை இப்புடி பப்பிளிகுட்டி பண்ணுறதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...
//
ஆகா....பேச்சு பேச்சா இருக்கனும்.
அம்பலத்தார் அங்கிளின் காலை வாரிட்டாங்களே கலை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@கலை
கலை : மாமா அழாதிங்க மாமா .............அழாதிங்க ....
எல்லாமே கனவு தானாம் ...
யோகா மாமா :கனவு பழிக்களை எண்டு தான் கலை அழுகுறேன்...
//
என்னது கனவு பலிக்கனுமா? அப்படீன்னா யோகா ஐயா பத்தி இன்னோர் கவிதை போட்டால் போகும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@தனிமரம்
வயிற்றில் வளரும் அளவுக்கு காதலில் மூழ்கிப்போகும் மோசாமான /கேவலமான காதலன் அல்ல யோகா ஐயா!!
//
அதென்ன கவிதையை முழுசா படிக்காம கோபத்தில வார்த்தையை வுடுறீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@தனிமரம்
மாம்பழச்சந்தியில் நானும் இருந்து பார்த்தேன் அவர் காணி கிடைக்கும் என்று பிறகுதான் தெரிந்து அவர் இன்னாற்ற இன்னார் என்று ஆகவே இது நிரூபனின் சதி என்று உலகத்துக்குச் சொல்லுவது என் கடமை. வேலையில் பிஸி பிறகு வாரன் !இது பழக்க தோஸம் பின்னூட்டம் போடுவது!
.//
அண்ணாச்சி, ரொம்பத் தான் லொள்ளு பண்றீங்க..
ஐயாவுக்கு பெரிய பொண்ணுங்க இருந்தா தானே காணியை கைப்பற்ற முடியும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ஹேமா
யோகா அப்பா லீவில நிக்கேக்க இப்பிடியெல்லாம் கலாய்க்கக்கூடாது சொல்லிப்போட்டன் நிரூ.பின்னூட்டம் கூட அதிர்ந்து போடத் தெரியாதவரை இப்பிடியெல்லாம் சொன்னால் நாங்கள் நம்பிவிடுவமோ.ஆனாலும் பத்தாது அவருக்கு.எனக்கு நேசன் தாற பால்கோப்பியை தானெல்லே எப்பவும் குடிக்கிறவர்.பத்தாது பத்தாது !//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
பின்னூட்டம் போடுவதிலும் முறைகள் இருக்கா? இது ஒரு கனவு கவிதைங்க. யாருமே போர்க் கொடி தூக்க வேணாம்.
அவ்வ்வ்வ்வ்வ்
@ஹேமா
உந்த அதிரடி காதல் வார்த்தையில ஆர்தான் மயங்கமாட்டினம்.யோகா அப்பா கனவுதான்.இல்லாட்டி ச்ச...கனவாப்போச்சே எண்டு கவலைப்படுறீங்களோ தெரியேல்ல !
சரி சரி கவலையில்லாம லீவைச் சந்தோஷமாகக் கொண்டாடிவிட்டு வாங்கோ !
//
ஹே....ஹே....
கனவு என்றதும் எல்லோரும் நம்பீட்டீனமே! அவ்வ்வ்வ்வ்வ்வ்
@கந்தசாமி.
யோகா ஐயாவின்ர ஆத்துக்காரி இதை பாத்தா கதை கந்தலாகி போகுமே :)
//
அதைத் தான் நானும் எதிர்பார்க்கிறேனே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@பழனி.கந்தசாமி
ரசித்தேன்,
..//
நன்றி ஐயா.
http://www.facebook.com/Channel4.Fake.Video
ஆஹா.... அருமை...
ஆஹா.... அருமை...
எல்லோருக்கும் காலை வணக்கம்!ஜாலியா இருப்பது தெரிகிறது!ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று ஓர் பழமொழி உண்டு தெரியுமா?என் பக்க நியாயங்களை?!எடுத்துரைத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.நன்றி,நன்றி!நிரூபன் வேட்டியை நான் உருவும் நாள் எப்போ வரும் என்று எதிர்பார்த்து...........................................?!
சே.குமார் said...
ஆஹா.... அருமை.../////என்னது,அருமையா????சே.......குமார்!ஹ!ஹ!ஹா!!!!!!
பழனி.கந்தசாமி said...
ரசித்தேன்,//////ரசியுங்கய்யா,ரசியுங்க!காசா,பணமா?????ஹி!ஹி!ஹி!!!!!!
பவளத்தின் மனதை பஞ்சராக்கும் யோகாவின் அதிரடி வார்த்தைகள்!//
ஐயோ பாவம் ஒருவார்தை நோகப்பேசாத யோகாவுக்கு....ம் ஆள் ஊருல இல்லை என்ற துணிச்சல்தான் நிரூவுக்கு.
@கலைகலை said... Best Blogger Tips [Reply To This Comment]
அம்பலத்தார் அங்கிள் எல்லாம் பெரிய பெரிய வேலைகள் செய்துப் போட்டு அமைதியா இருக்கும் போது எங்க மாமா செய்த சின்னத் தப்பை இப்புடி பப்பிளிகுட்டி பண்ணுறதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...//
சத்தமாக சொல்லாதையுங்கோ கலை செல்லம்மா காதில விழுந்தால் வீட்டில் சதிராட்டம்தான் நடக்கும்
//பிரபல பின்னூட்டவாதி யோகா அவர்கள் அந் நாளில் ..//
சினிமாவில் சிவாறி & MGR போல பின்னூட்டத்தில் காட்டான் & யோகா. என்ரை மச்சான் பின்னூட்டத்திலகம் காட்டான் அவர்களையும் பதிவில் குறிப்பிடாததற்கு நிரூபனுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Yoga.S.FR said...
//எல்லோருக்கும் காலை வணக்கம்!ஜாலியா இருப்பது தெரிகிறது!ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று ஓர் பழமொழி உண்டு தெரியுமா?என் பக்க நியாயங்களை?!எடுத்துரைத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.நன்றி,நன்றி!நிரூபன் வேட்டியை நான் உருவும் நாள் எப்போ வரும் என்று எதிர்பார்த்து...........................................?!//
ஹா ஹா அப்பெடியென்றால் எங்க நிரூபனை விரைவில் பழனி ஆண்டவர்கோலத்தில பார்க்கலாம் என்று சொல்லுறியளோ யோகா?
//அத்தானே என்னை காதல் மொழி பேசி
ஆட் கொண்ட அழகர் யோகாவே//
அந்தக்காலத்தில் யோகா எப்படி இருந்திருப்பார்? காதல் மன்னன் ஜெமினிகணேசன்... காதல் இளவரசன் கமல்....மோகன்.... கார்த்திக்........
நிரூபன் வேட்டியை நான் உருவும் நாள் எப்போ வரும் என்று எதிர்பார்த்து...........................................?!/////////////////////
அங்கிள் அந்த பொன்னான நாள் எண்டைக்கு வரும் எண்டு நான்கோலும் ஆவலுடன் எதிர்ப் பார்க்கினம்
கேர்ள்ஸ் ச்கிட்ட லாம் munnadiye sollip போடுங்கள் அங்கிள் ...இந்தப் பக்கமே வரமாட்டினம் ...எங்களுக்கு எல்லாம் ஒரே ஷிய்ஷிய்யா இருக்குமல்லோ ....
அம்பலத்தார் said...
@கலைகலை said... Best Blogger Tips [Reply To This Comment]
அம்பலத்தார் அங்கிள் எல்லாம் பெரிய பெரிய வேலைகள் செய்துப் போட்டு அமைதியா இருக்கும் போது எங்க மாமா செய்த சின்னத் தப்பை இப்புடி பப்பிளிகுட்டி பண்ணுறதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...//
சத்தமாக சொல்லாதையுங்கோ கலை செல்லம்மா காதில விழுந்தால் வீட்டில் சதிராட்டம்தான் நடக்கும்/////////////////////////////////
நோஒஒஒ........அங்கிள் நான் solla மாட்டினம் ... நீங்கள் இன்னும் சைட் அடிக்கிறிங்கள் கடலை போடுறிங்கள் ஒரு ஆன்டி கூட எண்டோ அவங்கக் கூட உங்கட பக்கத்து வீடுதான் எண்ட விடயம் எதுமே செல்லமா ஆன்ட்டி இடம் கண்டிப்பா நான் சொல்லவே மாட்டினம் ...
செல்லமா ஆன்ட்டியை மட்டும் ஒருக்கா எங்களுக்கு அறிமுகம் seithu vaiyungo அங்கிள் ...appram பாருங்கோ ஆன்ட்டி உங்களிடம் எப்புடி சுப்பரா நடந்துப்பாங்க எண்டுத தெரியும்
சூப்பர் கவிதை தலைவரே ... இது கவிதை!
ஜேகே said...
சூப்பர் கவிதை தலைவரே ... இது கவிதை!//////ஒ.கே!உங்கட பேரிலையும் ஒண்டு போட்டிடுவம்.என்ன,மெல்போர்னில இருக்குற சந்து,பொந்து பேர் தான் தெரியாது,ஹ!ஹ!ஹா!!!!!!!
இந்துக்களே நீங்கள் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்கவழக்கங்கள்!
http://www.etakkumatakku.com/2012/03/blog-post_26.html
அம்பலத்தாரிட்டையே பொல்ல வாங்கி,அம்பலத்தாருக்கே அடிப்பிக்க ஆள் ரெடி!இது,இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!இதை எழுதியவருக்கும் ஆப்புத் தான் போலும்,ஹ!ஹ!ஹா!!!!!!
வேட்டி உருவப்படுகிறது.
Post a Comment