அம்மா ஜெயலலிதா
உந்தன் ஆட்சி காலமதில் நீயோ
பலருக்கும் புரியாத புதிரம்மா
2G ஊழல் போதையில்
கொட்டமடித்த கலைஞர்
கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி நிரூபன் நாற்று
கெட்டியாக ஆட்சியினை பிடித்து
இலவச திட்டங்களோடு பலவற்றோடு
நீ நுழைந்தாய்!
நீ நுழைந்தாய்!
சட்டமன்றம் நுழைந்த நாள் முதலே
சர்ச்சைகளின் நாயகியாய் நீ! நிரூபன் நாற்று
ஒன்றா இரண்டா - அடுதடுத்து பல
சர்ச்சைகளில் சிக்கினாலும் - நீயோ
மூர்ச்சையாகவில்லை
மும்முரமாய் செயற்பட்டாய்
சமச்சீர் கல்வியில் தொடங்கி,
சட்டமன்ற புறக்கணிப்பு ஊடாக
அண்ணா நூலகத்தின்
அதிரடி அறிவிப்பையும் கடந்து
அருகே இருக்கும் கூடங்குளத்தையும் நீ மறந்து
இன்று மின் வெட்டில் வந்து நிற்கிறதம்மா
உந்தன் ஆட்சி - இதனால் மக்கள் நாற்று நிரூபன்
மனம் புண்பட்டு போயுள்ளதையும்
அறியாயோ சொல்லம்மா?
www.thamilnattu.com இலிருந்து அனுமதியின்றி காப்பியடிக்கப்பட பதிவு
மாட்டுக்கறி தின்ற மாமி
என சொல்லியதும்
தமிழகத்தை ஒன்று திரட்டி
உந்தன் பவர் என்னவென்று
உணர்த்திய பாவையே!!
இன்று பவர் இன்றி வாடுகின்ற
பாமர மக்களின் உணர்வுகளை புரியாமல்
ஆட்சித் திமிர் கொண்டா இருக்கின்றாய்?
அனுமதியின்றி நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
போயஸ்காடனில போர்த்திக்கிட்டு நீ படுப்பே
உடல் முழுதும் வியர்வையால் வழிந்தோட
உஷ்ணத்தை போக்கிட ஏசியின்றி நாம் தவிப்போம்!
வாயில் உணவு வைக்கையில கரண் போயிடுச்சே
என வாட்டமுற்று
சிம்மி விளக்கினையும் தேடிடுவோம்
நீயோ சென்னையில் வாஞ்சையுடன் இருந்து
அடுத்த நாள் சட்ட சபை பத்தி திட்டம் தீட்டிடுவாய்
கனவில் தவிக்கும் பெருசுங்க முன்னாள்
நடிகை ஜெயாவின் மிட் நைட் பாடல்களை
டீவிப் பெட்டியில் பார்க்க நினைக்கையிலோ
நிலாவைப் பார்த்து ரசியுங்கடா என சொல்லி
கரண்டினை நீயும் கட் செஞ்சிடுவேய் - கொடுத்த
வாக்குறுதியின் மேல் ஏறி நின்று
பூச்சாண்டி நீயும் காட்டுகின்றாய்!
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பியடிக்கப்பட்ட பதிவு
அடுத்த தேர்தலில் உனக்கான
ஆப்பை நீயே தேடி வைக்கின்றாயா - அம்மையே;
அணு உலை மூலம் மக்கள் வாழ்விற்கு
ஆப்படிக்க வழி இல்லையே என்பதால்
இப்படி ஓர் திட்டம் போடுகின்றாயா - நீ
கொடுத்த வாக்குறுதிகளோ இப்போது
காற்றில் பறக்கிறதே - கோதையே
அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியும்
வெற்றி பெறுவதற்கான
அவலை நீயும் வாயிலே போட்டு விட்டாயே!
மின் வெட்டால் கொல்றியே அம்மா - மனம்
புண்பட்டு போகிறதே
உனை நினைத்தால் சும்மா!!
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரமா? - கரண்ட்
போன பின்னர் ரெட்டை இலைக்கு
ஓட்டும் கிடைத்திடுமா - எண்ணிப் பாரம்மா?
இக் கவிதையில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை:
************************************************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பூவின் பெயர் "தமிழாகும்". தமிழ் என்ற வலைப் பூவினைச் சகோதரி தமிழ் அவர்கள் எழுதி வருகின்றார். தமிழ் எனும் பெயருக்கேற்றாற் போலவே அவர் பதிவுகளில் அழகிய மொழி நடையும்,இனிமையான சொல்லாடல்களும் படிப்பவர் மனங்களைக் கவர்ந்திழுக்கின்றது. கவிதை, சினிமா, உரை நடை என வித்தியாசமான வடிவங்களில் தன் வலைப் பூவில் ஆக்கங்களைப் பகிர்ந்து வருகின்றார் பதிவர் தமிழ்.
பதிவர் தமிழின் வலைப் பூவில் பின்னூட்டம் இட முடியாதுள்ளமை மிகப் பெரிய குறையாகும். அவரிடம் தொடர்பு கொண்டு சொல்ல முயன்றேன். தொடர்பு மின்னஞ்சலைப் பெற முடியவில்லை.
தமிழின் தமிழ் வலைப்பூவிற்குச் நீங்களும் ஒரு தடவை சென்று வரலாம் அல்லவா?
************************************************************************************************************************************
|
22 Comments:
வணக்கம் நிரூ
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பற்றி நன்றாகவே கவிதை வடித்துள்ளீர்கள்.
ஜெயலலிதாவிடம் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்
@மதுரன்வணக்கம் நிரூ
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பற்றி நன்றாகவே கவிதை வடித்துள்ளீர்கள்.
ஜெயலலிதாவிடம் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்
//
வணக்கம் மது,
பொறுத்திருந்து பார்ப்போம்,
அம்மா, இன்னும் என்ன திருவிளையாடல்கள் செய்கிறாவோ?
கற்காலம் வரலாற்று புத்தகத்திலும் கிராமத்திலும்தான் பார்த்து வந்த மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே படம் போட்டு காட்டிவிட்டார். சமத்துவம் என்பதை கொண்டு வர நினைகிறார் என்று சப்பு கொட்டு கொட்டுவதையிட்டு இதற்கான மாற்று வழிகளில் ஈடுபடலாமே,ஈழமக்கள் பார்க்காத மின்வெட்டா.
வணக்கம் நிரூபன்!தற்கால(கற்கால?)தமிழகத்தை கவியில் வடித்திருக்கி றீர்கள்,அருமை!ஆங்காங்கே எழுத்துப்(தட்டுப்)பிழைகள்,கவனிக்கவும்.சரி பார்த்து வெளியிட வினயமுடன் வேண்டுகிறேன்!வாழ்த்துக்கள்!!!!!!
என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!தற்கால(கற்கால?)தமிழகத்தை கவியில் வடித்திருக்கி றீர்கள்,அருமை!ஆங்காங்கே எழுத்துப்(தட்டுப்)பிழைகள்,கவனிக்கவும்.சரி பார்த்து வெளியிட வினயமுடன் வேண்டுகிறேன்!வாழ்த்துக்கள்!!!!!!
//
வணக்கம் ஐயா,
தவறுகளைத் தற்போது திருத்தி விட்டேன்.
மன்னிக்கவும்.
மிக்க நன்றி.
அவசரத்தில் கவிதையினை பிரசுரித்து விட்டு வெளியே போய் விட்டேன்.
@மன்மதகுஞ்சு
கற்காலம் வரலாற்று புத்தகத்திலும் கிராமத்திலும்தான் பார்த்து வந்த மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே படம் போட்டு காட்டிவிட்டார். சமத்துவம் என்பதை கொண்டு வர நினைகிறார் என்று சப்பு கொட்டு கொட்டுவதையிட்டு இதற்கான மாற்று வழிகளில் ஈடுபடலாமே,ஈழமக்கள் பார்க்காத மின்வெட்டா.
//
வாங்கோ மன்மதக் குஞ்சு,
நாம பார்க்காத மின் வெட்டா?
பதினைந்து வருடங்களாக குப்பி விளக்கிலும், லாந்தர் வெளிச்சத்திலும், நிலா வெளிச்சத்திலும் காலத்தை கழித்திருக்கிறோம்.
அம்மா, சமத்துவத்தை போதிக்க முயற்சிக்கிறார் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்குது என்று.
வணக்கம் நிரூ.அருமையாக கவிதை எழுதியுள்ளீர்கள் .இந்த மின்வெட்டு குறித்து எனக்கு நன்கு அறிமுகமான த.மி..வா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தமிழகத்தில் மின் உற்பத்தி தேவைக்கு அதிகமாகவே இருப்பதாகவும் ,மத்திய மின் தொகுப்பிற்கு செல்லும் அந்த மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப் படுவது குறைக்கப் படுவதாகவும் கூறினார் .அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை வீரியமிழக்க வைக்க ,வேண்டுமென்றே மத்திய அரசு இச்செயலில் ஈடுபடுவதாகவும் கூறுகிறார்...
இலங்கை பிரச்னையை விட தமிழ்நாட்டு பிரச்னையை தான் அதிகமா எழுதுறீங்க.. அங்கையா இருக்கீங்க
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியுதே!
அய்யா கவி ஜன நாயக நாட்டில் வெற்றி பெற்றது மக்களே மக்கள் நினைத்தால் நமது முதன் மந்திரி வீட்டில் கூட மின்சாரம் இல்லாமல் செய்ய முடியும் இப்போது மின்சாரம் இல்லாமல் போனதுக்கு காரணம்
அம்மா இல்லை அய்யா நாம் ஜப்பான் காரர்களை சுறுசுறுப்பாக
சிந்திக்கணும் முதலில் மற்றவர்களை புகழ்வதையும் இகழ்வதையும் நிறுத்தினாலே புதிதாய் சிந்திகின்ற ஆற்றல் நமக்கு வந்துவிடும் அய்யா
பாவம் அந்த அம்மா அவங்களும் ஒரு மனுசி தானே .
ஜெயா அவர்களே ். ஏணில ஏறி எட்டு மாதமாச்சு இன்னும்ஒரு ஆனியகூட புடுங்கல. எதிர்கட்சித்தலைவர் ஏதோ சொல்லிப்புட்டார்னு இப்பதான் திரானி இருக்கா, பிரியானி இருக்கான்னு கேக்குறிங்க. சூப்பர் பதிவு பாஸ்
100% correct, what we wish to say.....you said in your poem.............very good.
http://internetnanban.blogspot.in
இன்றைய நிலைமை கவிதையா வந்திருக்கு.அம்மா வந்த நேரமே சொல்லிட்டோம்தானே நம்பாதீங்கன்னு !
புதிய அறிமுகங்கள் நல்லது !
ஏன் இப்போ எல்லோரும் இப்படி கடுப்பை கிளப்புறீங்க?? உங்க எல்லோரின் பேச்சையும் பார்க்கும் போது ஜெயலலிதா மின்சாரத்தை அவங்க வீட்டு அலுமாரிக்க ஒளிச்சு வைச்சுக்கொண்டு தரமா வஞ்சகம் பண்ணுறமாதிரி இருக்கு.... ஹீ... ஹீ...
இதுக்கு விளக்கம் சொல்லுறத விட துக்ளக் ஆண்டு விழாவில் சோ சொன்ன ஒரு கதையை சுருக்கமா சொல்லுறேன் கேளுங்க....
ஒரு கார் இருக்கு..... அதை K என்பவருக்கு கொடுக்கிறாங்க மக்கள். அவர் அதை வச்சு மக்களுக்கு எதுவும் செய்யாமல் தன் மக்களுக்கு (பிள்ளைகளுக்கு) பார்த்து பார்த்து செய்து அதில் தன் பன்றிக்குட்டி போன்ற குடும்பம் முழுதையும் ஏற்றுகிறார்... கார் உடைந்து நொறுங்கி தள்ளாடுது,
அடுத்தமுறை அதே காரை மக்கள் j என்பவரிடம் கொடுக்கிறாங்க அவங்க அந்த உடைந்து நொறுங்கிய காரை கஸ்ரப்பட்டு திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவாறாங்க.. அவங்க கொண்டு வரும் போது மறுபடியும் மக்கள் அந்த காரை பழைய K இட்டையே கொடுக்கிறாங்க மறுபடியும் அவர் தன் குடும்பத்துக்காக அதை நொறுக்கிறார்..
இப்படி மாறி மாறி அந்த கார் போவதால்தான் இந்த பிரச்சனைகள்....
இதில் k கருணாநிதி , j ஜெயலலிதா ......
சோ முதலில் அந்த கருணாநிதி நொறுக்கிய காரை ஜெயலலிதா பழைய நிலைக்கு கொண்டு வர கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கப்பா... அப்புறம் உங்க பஞ்சாயத்தை வைச்சுங்க.... :(
@நிரூபன்
வணக்கம் தலைவரே
கலக்குங்க..கலக்குங்க..தடாலடியா இருக்கு கவிதை..இங்கு மலேசியாவில் இருந்துக்கொண்டு பல விஷயங்கள் தெரியாது முழிக்கிறேன்..காலை வணக்கங்களோடு நன்றிகள் நண்பரே.
@துஷ்யந்தன் மிஸ்டர் துஷ்யந்தன் ரொம்ம வருசமா அந்த காரை Rவம் அதுக்கு அப்பறம் J ம் வச்சிருந்தாங்க...அவிங்க ஓட்டாத ஓட்டா வயசாளி K ஓட்டிருக்க போறாரு ஹிஹி இது சோவுக்கு தெரியும்...உங்களுக்கு தெரியுமோ?
கவிதை...எனக்கு நல்லாயிருக்கு...அம்மா படிச்சா நல்லாயிருக்குமா....
ரசித்தேன்...
நல்லாயிருந்தது சகோதரம்...
ஜெயலலிதா Vs அணு...Saaaagaa continues...
காலை வணக்கம் நிரூ!
நலமா!
கவிதை நன்று!
சா இராமாநுசம்
பவர் கட்டால் தன்ர பவர இழந்திடுவாவோ அம்மா ? நல்லத்தனைய எழுதுற ;
பவர் கட்டால் தன்ர பவர இழந்திடுவாவோ அம்மா ? நல்லத்தனைய எழுதுற ;
Post a Comment