Thursday, November 3, 2011

THE OPPOSITE - விமர்சனம் - ஓரினச் சேர்க்கையும் தமிழ் சமூகமும்!

சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. 
அண்மைக் காலத்தில் எம் சமூகத்தில் காலாதி காலமாக நிலவி வந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய பார்வை மாறுபட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.ஆனாலும் ஓரினச் சேர்க்கையாளர்களுள் அல்லது தம்மை ஒத்த பால் இனத்தோடு வாழ விரும்புவோருள் ஒரு மனதாக தமக்குப் பிடித்தமானவரை அல்லது மனதால் ஒரு தலையாக ஒருவரை நினைத்து வாழுவோர் அரிதிலும் அரிது என்றே கூறலாம். THE OPPOSITE எனும் குறும்படம் கொஞ்சம் வித்தியாசமான கதைக் கருவினைத் தன்னத்தே கொண்டு திரைக்கு வந்திருக்கின்றது. பிரான்ஸில் வாழுகின்ற ஈழத்துக் கலைஞர்களின் கூட்டு முயற்சியினால் அவதாரம் நிறுவனத்தின் வெளியாடாக வந்திருக்கும் குறும்படம் தான் இந்த THE OPPOSITE.

ஆண் பெண் ஆகிய இரு பாலாருக்கும் தம் எதிர்ப் பாலாரிடத்தே தான் ஆசையும் காதலும் கனவுகளும் தொற்றிக் கொள்ளும் என்பது காலங் காலமாக எம் தமிழ்த் திரைப்படங்களும் இலக்கியங்களும் பேசி நிற்கும் பழமை வாதக் கருப் பொருளாகும். ஆனால் இங்கே ஒரு பெண்ணை விரும்புகின்ற ஆண் மீது, இன்னோர் ஆண் தன் மனதால் காதல் வசப்பட்டுக் கொள்கின்றார். கொஞ்சம் வித்தியாசமாக அதே வேளை கொஞ்சம் புதுமையாகவும் யோசித்திருக்கின்றார் இக் குறும்படத்தின் இயக்குனர் M.சுதன் அவர்கள். 

ஆண் மகனொருவர் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிதலற்றவராக, ஓரினச் சேர்க்கை பற்றி ஏதும் அறியாதவராக இயல்பாகவே தன் ஆசையினை ஒரு பெண் மீது கொண்டிருக்கும் வேளையில்;
மற்றைய ஆண் மகன் பெண்ணை விரும்பும் ஆண் மீது ஒரு தலையாக காதல் வசப்பட்டு, இறுதியில் தன் ஒரு பாற் காதலை வெளியே சொல்லுகின்றார்.
மனதால் ஒரு தலைக் காதலாக உள்ள ஆணின் காதல் ஜெயித்ததா?அல்லது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதற்கான பதிலை நீங்கள் குறும் படத்தினைப் பார்ப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 
எதிரெதிர் எண்ணங்களை உடைய இரண்டு ஆண்களையும், ஒரு பெண்ணையும் வைத்து இக் குறும்படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் M.சுதன் அவர்கள். M.சுதன், சதாபிரணவன், சபரீனா ஆகியோர் THE OPPOSITE குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜனா அவர்கள் தன்னுடைய அழுத்தமான பின்னணி இசை ஊடாக இப் படத்திற்கு அணியிசை செய்திருக்கிறார். டெசுபன் அவர்கள் ஒளிப்பதிவிலும், எடிற்றிங்கிலும் தன் கை வண்ணத்தை நிரூபித்து இக் குறும்படத் தயாரிப்பிற்கு ஏனைய கலைஞர்களோடு இணைந்து உழைத்திருக்கிறார். வித்தியாசமான கருப் பொருளைக் கொண்ட, உங்கள் மனதைக் கொஞ்சம் கனக்கச் செய்யக் கூடிய கதை நகர்வினைக் கொண்ட இக் குறும்படமானது பல விருதுகளையும் தட்டிச் சென்றிருக்கிறது.

*IASF: (Toronto Tamil Film Festival 2011 )
The Runner up Best Film
Best Actor (Sathapranavan)

*Navalar Short Film Festival: (Paris 2011)
Best Actor (Sathapranavan)

*RWFF (ReelWorld Film Festival): (Toronto 2011)
Official Selection

*Festival of Sankilyan Viruthu: (Paris 2010)
3rd Price
Best Cinematography
Best Editing
Best Story

Best Direction 
ஈழத்துப் புலம் பெயர் சினிமா வரலாற்றில் வித்தியாசமான கருப் பொருளைக் கொண்டதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிப் பேசும் புதுமையான கருவினைக் கொண்டதாகவும் இந்தப் படம் வெளி வந்திருப்பது புதியதொரு திசையினை நோக்கிப் பயணிக்கும் ஈழச் சினிமாவின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.

THE OPPOSITE: ஒரு தலைக் காதலாக மனதினுள் புதைந்திருக்கும் ஓரினச் சேர்கையாளரின் உணர்வினைச் சொல்லும் உன்னத ஒளிச் சித்திரம்!

***********************************************************************************************************************************************
இப் பதிவினூடாக தன் எண்ண உணர்வுகளைப் பல்வேறுபட்ட துறைகளின் வாயிலாகவும் பகிர்ந்து கொள்கின்ற சகோதரி "யசோதா காந்த்" அவர்களின் வலைப் பதிவிற்குத் தான் நாம் செல்லவிருக்கின்றோம். அரசியல், இலக்கியம், மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் எனப் பல தரப்பட்ட விடயங்களைத் தன்னுடைய "இதமான அலைகள்" வலைப் பதிவினூடாகப் பகிர்ந்து வருகின்றார் "யசோதா காந்த்" அவர்கள்.
யசோதா காந்த் அவர்களின் "இதமான அலைகள்" வலைப் பூவிற்குச் செல்ல:
***********************************************************************************************************
8 நிமிடங்கள் 52 செக்கன் நேர அளவினைக் கொண்ட இக் குறும்படத்தினை யூடியூப்பில் கண்டு களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:

48 Comments:

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

mee da firstuuuuuuuuuuuuuuuu:))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

நில்லுங்க என்ன சொல்றீங்களென இனித்தான் படிக்கப்போறேன்:)) ஆர்வக்கோளாறினால ஓடிவந்திட்டேன் அவ்வ்வ்வ்வ்:))).

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

அன்று தொட்டு இன்றுவரை இது தெரிந்தோ தெரியாமலோ இருந்துகொண்டிருக்கு. பிரித்தானியாவில் இதுக்கு அரசாங்கம் திருமணம் முடிக்க அனுமதி கொடுத்திருக்கு. என் கணவரோடு வேலைபார்க்கும், இங்கத்தைய ஒரு ஸ்பெஷலிஸ்ட்.... இதேபோல இன்னொருவரை முறைப்படி ரெஜிஸ்டர் பண்ணி, மோதிரம் மாத்தி திருமணம் முடித்து, வீடும் வாங்கி ஹப்பியாக இருக்கிறார்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

கைக்கிளை, பெருந்திணை///

இச்சொற்கள் தமிழில் இருப்பதையும் அதன் பொருளையும் இப்போதான் அறிகிறேன், தமிழில் வல்லவராக இருப்பீங்களோ?:).

நீங்கள் கூறும் படம் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கோ?...

கிட்டத்தட்ட இக்கதை போலவேதான்...

//Brokeback Mountain -// மூவியும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

mee da firstuuuuuuuuuuuuuuuu:))
//

ஆமா அக்கா.
சந்தேகமே இல்லை
நீங்க தான் முதலாவது!

வருக! வருக என்று வரவேற்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நில்லுங்க என்ன சொல்றீங்களென இனித்தான் படிக்கப்போறேன்:)) ஆர்வக்கோளாறினால ஓடிவந்திட்டேன் அவ்வ்வ்வ்வ்:))).
//

அப்போ அந்த கமெண்ட் ட்ரெயிலரா..

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

ஆஆஆ.....நிரூபனின்(ஆமைப்) பூட்டை உடைச்சிட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))). என்ன இது தனிய நின்று கதைக்கிறேன், ஆரையுமே காணேல்லையே.... பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அன்று தொட்டு இன்றுவரை இது தெரிந்தோ தெரியாமலோ இருந்துகொண்டிருக்கு. பிரித்தானியாவில் இதுக்கு அரசாங்கம் திருமணம் முடிக்க அனுமதி கொடுத்திருக்கு. என் கணவரோடு வேலைபார்க்கும், இங்கத்தைய ஒரு ஸ்பெஷலிஸ்ட்.... இதேபோல இன்னொருவரை முறைப்படி ரெஜிஸ்டர் பண்ணி, மோதிரம் மாத்தி திருமணம் முடித்து, வீடும் வாங்கி ஹப்பியாக இருக்கிறார்கள்.
//

அடடா...
அந்தத் தம்பதிகளையும் நிரூபன் வாழ்த்துகிறார் என்று சொல்லி விடுங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
கைக்கிளை, பெருந்திணை///

இச்சொற்கள் தமிழில் இருப்பதையும் அதன் பொருளையும் இப்போதான் அறிகிறேன், தமிழில் வல்லவராக இருப்பீங்களோ?:).

நீங்கள் கூறும் படம் தமிழ் மொழியில் வெளிவந்திருக்கோ?...

கிட்டத்தட்ட இக்கதை போலவேதான்...

//Brokeback Mountain -// மூவியும்.//

ஹி...ஹி...
தமிழில் வல்லவர் என்றெல்லாம் இல்லை.
ஏதோ படிக்கும் போது கடைசி வாங்கிலிருந்து நோட் பண்ணி வைச்சிருந்தவை மட்டும் நினைவில் நிற்குது..

ஆம், இது தமிழ் மொழியில் வந்த படம்.
எங்கள் கலைஞர்கள் தயாரித்திருக்கிறார்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

//அடடா...
அந்தத் தம்பதிகளையும் நிரூபன் வாழ்த்துகிறார் என்று சொல்லி விடுங்கோ.
//

என்னாது வாழ்த்துறீங்களோ? எங்கேயோ இடிக்குதே?:)))... சரி சரி ஓடிடாதீங்க நான் ஒண்ணுமே கேட்க மாட்டேன்.. நான் ரொம்ப பொண்ணு 6 வய...:))))).

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஆஆஆ.....நிரூபனின்(ஆமைப்) பூட்டை உடைச்சிட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))). என்ன இது தனிய நின்று கதைக்கிறேன், ஆரையுமே காணேல்லையே.... பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
//

ஹே...ஹே..

ஆமைப் பூட்டு போட்டு, வேலாயுதம் ரசிகர்களின் தீக்குளிப்பு பதிவின் காரணமாக இறுக்கிப் பூட்டியிருந்தேன்.

இப்ப புதுப் பதிவு என்பதால் ஆமைப் பூட்டை பூசார் உடைச்சிட்டார்.

Anonymous said...
Best Blogger Tips

ஓரினச்சேர்க்கை பாவம்...நான் கடந்த தலைமுறை...அது எனக்குப்புரியாது...

இருந்தாலும் வீட்டில் போய் காணொளி பார்க்கிறேன்...

ஒரீன/ஓரின (?) ...அப்படியே எனக்கு நூறு பொற்காசுகள் அனுப்பி வையுங்கள்...பிழை கண்டுபிடித்ததுக்கு...

தனிமரம் said...
Best Blogger Tips

சங்க இலக்கியத்துடன் வித்தியாசமான பதிவு !

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம், நிரூபன்! நான் இந்தப் படம் பார்க்கவில்லை.அதிராவுக்கு அந்த ஒரு பிழை தான் கண்ணில்?!பட்டது போலும்!இதோ,பாட்டுப்பாடிப் பேர் வாங்கும் புலவர்களை விடவும் பிழை கண்டு பிடித்துப் பேர் வாங்கிய புலவர் நானிருக்கிறேன்!///மதிப்பழக///மதிக்கப் பழக//// வேண்டும் என்று வரவேண்டும்.

Selmadmoi gir said...
Best Blogger Tips

பார்ப்பதற்கு தற்போது நேரமில்லை... பிறிதொரு நாள் பார்க்கிறேன்

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

காலங்கள் மாறும்போது பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. ஆனால் ஒருவர் தான் சிறு வயதில் கொண்டிருந்த ஒழுக்கம் பற்றிய கருத்துக்களை மாற்ற முடிவதில்லை.

என்னைப்போன்று போன தலைமுறையைச் சேர்ந்தவர்களினால் இந்த மாற்றங்களை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகித்துக் கொள்ளுகிறோம். அவ்வளவுதான்.

இன்னும் பல மாற்றங்கள் வரும்.

Anonymous said...
Best Blogger Tips

சகோதரி யசோதா காந்த் அவர்களின் "இதமான அலைகள்" வலைப் பூவிற்கு வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////ஈழச் சினிமா வரலாற்றில் வித்தியாசமான கருப் பொருளைக் கொண்டதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிப் பேசும் புதுமையான கருவினைக் கொண்டதாகவும் இந்தப் படம் வெளி வந்திருப்பது புதியதொரு திசையினை நோக்கிப் பயணிக்கும் ஈழச் சினிமாவின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.////

என்னால் இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....பிரான்ஸ் நாட்டில் வாழும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படம் எப்படி ஈழத்து சினிமா என்ற சொல்லுக்குள் அடங்கும்....

அப்படி என்றால் இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் பாலுமகேந்திரா ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பிறந்தவர்..அதற்காக அவரது படங்களை ஈழத்து சினிமா என்று சொல்ல முடியுமா?முடியாதே

தயவு செய்து யாரும் எனக்கு செம்பை நெளிக்கவேண்டும் என்பதற்காக....நான் பிரிவினைப்படுத்துகின்றேன்...என்று நினைக்கவேண்டாம்.....

நிரூபன் பாஸ் குறிப்பிட்டது எனக்கு புரியவில்லை அதான் கேள்வியாக கேட்டுள்ளேன் எனக்கு யாரும் பதில் தாங்க?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

படம் பார்த்தேன் மிக அருமையாக இருக்கின்றது பாஸ்...இயக்குனருக்கு ஓரு சபாஸ்

Anonymous said...
Best Blogger Tips

பெருந்திணை சரியான தமிழ் வார்த்தை உதாரணம் பாஸ்

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,

உடல்நிலை நலமா?

யதார்த்தங்களை திரைப்படங்கள்
சொல்ல எத்தனிக்கையில் வெற்றியின் விளிம்புக்கு
சென்றுவிடுகின்றன...
விமர்சம் மிக அருமை.

சகோதரி யசோதாகாந்த் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமானவை,
அவரின் அறிமுகம் மிகவும் நன்று. வாழ்த்துக்கள் சகோதரிக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

ஓரினச்சேர்க்கை பாவம்...நான் கடந்த தலைமுறை...அது எனக்குப்புரியாது...

இருந்தாலும் வீட்டில் போய் காணொளி பார்க்கிறேன்...

ஒரீன/ஓரின (?) ...அப்படியே எனக்கு நூறு பொற்காசுகள் அனுப்பி வையுங்கள்...பிழை கண்டுபிடித்ததுக்கு...
//

நான் பதிவு போட்டு விட்டுத் தூங்கி விட்டேன்.

மிக்க நன்றி.

தற்போது திருத்தி விட்டேன்.
அட்ரஸ் கொடுங்க.
அப்ரோச் பண்ணி அனுப்பி வைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

சங்க இலக்கியத்துடன் வித்தியாசமான பதிவு !
//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

இரவு வணக்கம், நிரூபன்! நான் இந்தப் படம் பார்க்கவில்லை.அதிராவுக்கு அந்த ஒரு பிழை தான் கண்ணில்?!பட்டது போலும்!இதோ,பாட்டுப்பாடிப் பேர் வாங்கும் புலவர்களை விடவும் பிழை கண்டு பிடித்துப் பேர் வாங்கிய புலவர் நானிருக்கிறேன்!///மதிப்பழக///மதிக்கப் பழக//// வேண்டும் என்று வரவேண்டும்.
//

வணக்கம் ஐயா,
நலமா இருக்கிறீங்களா?
லண்டன் பயணம் எல்லாம் எப்படி இருக்கிறது.

மிக்க நன்றி ஐயா,
கீபோர்ட்டில் டைப் பண்ணும் போதும், அவசரத்திலும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்கத் தவறி விடுகின்றேன்,
முடிந்த வரை எதிர்காலத்தில் வரும் பதிவுகளில் இத்தகைய தவறுகள் இடம் பெறா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Selmadmoi girl

பார்ப்பதற்கு தற்போது நேரமில்லை... பிறிதொரு நாள் பார்க்கிறேன்
//

நன்றி சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@DrPKandaswamyPhD

காலங்கள் மாறும்போது பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. ஆனால் ஒருவர் தான் சிறு வயதில் கொண்டிருந்த ஒழுக்கம் பற்றிய கருத்துக்களை மாற்ற முடிவதில்லை.

என்னைப்போன்று போன தலைமுறையைச் சேர்ந்தவர்களினால் இந்த மாற்றங்களை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகித்துக் கொள்ளுகிறோம். அவ்வளவுதான்.

இன்னும் பல மாற்றங்கள் வரும்.
//

நிதர்சனமான வரிகள் ஐயா.
ஆனாலும் எல்லோரும் மனிதர்கள் தானே!
எல்லோரினது உணர்வுகளும் வேறுபடும் எனும் உணர்வு எமக்குள் வந்தாலே போதும்!
அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என நினைக்கிறேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
////ஈழச் சினிமா வரலாற்றில் வித்தியாசமான கருப் பொருளைக் கொண்டதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிப் பேசும் புதுமையான கருவினைக் கொண்டதாகவும் இந்தப் படம் வெளி வந்திருப்பது புதியதொரு திசையினை நோக்கிப் பயணிக்கும் ஈழச் சினிமாவின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.////

என்னால் இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....பிரான்ஸ் நாட்டில் வாழும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படம் எப்படி ஈழத்து சினிமா என்ற சொல்லுக்குள் அடங்கும்....

அப்படி என்றால் இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் பாலுமகேந்திரா ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பிறந்தவர்..அதற்காக அவரது படங்களை ஈழத்து சினிமா என்று சொல்ல முடியுமா?முடியாதே

தயவு செய்து யாரும் எனக்கு செம்பை நெளிக்கவேண்டும் என்பதற்காக....நான் பிரிவினைப்படுத்துகின்றேன்...என்று நினைக்கவேண்டாம்.....

நிரூபன் பாஸ் குறிப்பிட்டது எனக்கு புரியவில்லை அதான் கேள்வியாக கேட்டுள்ளேன் எனக்கு யாரும் பதில் தாங்க?//

முன்பு ஒரு தடவை எழுதிய பதிவிலும் இப்படி ஒரு சர்ச்சை வந்தது.

அவ் வரிகளைத் திருத்தி தற்போது புலம் பெயர் ஈழத்துச் சினிமா என மாற்றியிருக்கிறேன் சகோ.

http://www.thamilnattu.com/2011/06/blog-post_23.html

இந்த இணைப்பில்; நீங்கள் பார்க்கலாம் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

படம் பார்த்தேன் மிக அருமையாக இருக்கின்றது பாஸ்...இயக்குனருக்கு ஓரு சபாஸ்
/

நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்

வணக்கம் சகோ நிரூபன்,

உடல்நிலை நலமா?

யதார்த்தங்களை திரைப்படங்கள்
சொல்ல எத்தனிக்கையில் வெற்றியின் விளிம்புக்கு
சென்றுவிடுகின்றன...
விமர்சம் மிக அருமை.

சகோதரி யசோதாகாந்த் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமானவை,
அவரின் அறிமுகம் மிகவும் நன்று. வாழ்த்துக்கள் சகோதரிக்கு.
//

அண்ணே வணக்கம் அண்ணே,
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் அன்பாலும், ஆதரவாலும் நலமாக இருக்கிறேன்.

நன்றி அண்ணா.

செங்கோவி said...
Best Blogger Tips

இந்த கான்செப்ட்டை படமாக எடுப்பதே தைரியம் தான்..

SURYAJEEVA said...
Best Blogger Tips

நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்

சசிகுமார் said...
Best Blogger Tips

குறும்படத்தை பார்க்க வேண்டும் ....

M.R said...
Best Blogger Tips

படம் பார்கிறேன் நண்பா ,

உடைநிலை சரியாகிவிட்டதா நண்பா ?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
Best Blogger Tips

அன்பு நண்பா
வித்தியாசமான பதிவு !
அருமையான பதிவு ...
உங்கள் தமிழ் அழகு .
யாரும் தொட பயப்படும் பதிவு .
உங்களின் பார்வை மிக சரி .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
Best Blogger Tips

அன்பு நண்பா
வித்தியாசமான பதிவு !
அருமையான பதிவு ...
உங்கள் தமிழ் அழகு .
யாரும் தொட பயப்படும் பதிவு .
உங்களின் பார்வை மிக சரி .

Subramanian said...
Best Blogger Tips

வித்தியாசமான கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட படத்தை பாராட்டி, அதை ஒரு இடுகையாக எங்களுக்கு அறியப்படுத்திய தங்களது உள்ளத்திற்கு நன்றி.! தொடரட்டும். வாழ்த்துக்கள்.

test said...
Best Blogger Tips

//கைக்கிளை, பெருந்திணை///
இந்த ரெண்டு சொல் மட்டும்தான் இதுவரை தெரியும்...இப்போதான் இவை பற்றி என்னவென்று தெரிந்தேன்...நன்றி!!

கூடல் பாலா said...
Best Blogger Tips

அட்டகாசமான விமர்சனம் !

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

பிறகு பார்க்கிறேன்.
வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி.

Unknown said...
Best Blogger Tips

அருமை நிரூ அந்த படமும்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இதைப் படமாக எடுக்க தைரியம் வேண்டும்..

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...மிக்க நன்றி ஐயா,
கீபோர்ட்டில் டைப் பண்ணும் போதும், அவசரத்திலும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்கத் தவறி விடுகின்றேன்,
முடிந்த வரை எதிர்காலத்தில் வரும் பதிவுகளில் இத்தகைய தவறுகள் இடம் பெறா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்./////அது சும்மா அதிராவைக் கலாய்த்தது.எனக்குத் தெரியாதா,எழுத்துப்பிழைகள் வருவது தவிர்க்க முடியாததென்று?///லண்டனில் தான் நிற்கிறேன்,அடுத்த கிழமை பிரான்சில்.நலமாகவே இருக்கிறேன்,நன்றி!

Anonymous said...
Best Blogger Tips

@???????

என் பிழைகளைத் திருத்த முன்கூலியாக வைத்துக்கொள்ளுங்கள்...-:)

shanmugavel said...
Best Blogger Tips

ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய பார்வை மாறியிருப்பது உண்மைதான்.விமர்சனம் நன்று.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

இந்த மாதிரியான விஷயங்கள் குறும்படங்களில் வருவது நல்ல விஷயம் தான். குறைந்த நேரத்தில் சொல்வது கடினம் தான்.

அமெரிக்காகாரன் ஒசத்தியா? ஜப்பான்காரன் ஒசத்தியா? படத்தை பாருங்க!

Vijay said...
Best Blogger Tips

அருமையான படம்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

விமர்சனம் ஓக்கே

நிரூபனுக்கு ஒரு கோரிக்கை.. 18 + பதிவுகள் போடும்போது, அல்லது காண்ட்ரவர்சியான பதிவுகள் போடும்போது அதில் பெண் பதிவர் அறிமுகம் செய்வதை தவிர்க்கலாம், தேவை அற்ற சங்கடங்கள் அவர்களுக்கு நேரலாம்..

மற்ற பதிவுகளில் அவர்கலை அறிமுகம் செய்யலாம்..

F.NIHAZA said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கு....

குறும்படத்தின் முயற்சி பாராட்டத்தக்கது....

ஆனால்...அந்தக் கருவை...ஏற்கவோ சகிக்கவோ முடியிரதில்லை....

இது என் தாழ்மையான கருத்து.....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails