Saturday, November 19, 2011

Not Lucky - விமர்சனம் - ஜோதிட நம்பிக்கைக்கு சொற்களால் சாட்டையடி!

மனித மனங்களின் ஆழ் மனத் தேடலைப் பொறுத்து அவரவர் மன நம்பிக்கைகள் வேறு பட்டுக் கொள்ளும். இறைவனைத் தேடி இன்று வரை சலித்துப் போனோரும், இறைவன் அல்லது எம்மை விட மேலான ஓர் சக்தி இவ் உலகினில் உள்ளது எனும் நம்பிக்கையில் வாழ்வோரும் எம்முள் உள்ளார்கள். மனித உணர்வுகளின் அடிப்படையில் ஆத்திகவாதி, நாத்திகவாதி என இரு வேறுப்பட்டோரை நாம் பிரித்து நோக்கினாலும்;எம்மை இயக்குகின்ற சக்தி அல்லது எம்மை விட மேலான ஒரு சக்தி இவ் உலகினில் உள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. 
நம்பிக்கைகளுக்கு அப்பால் நம்மிடையே உள்ள ஒரு பழக்க வழக்கம் தான் தினப் பலன் பார்த்து ஏப்பம் விடுவது. அதிஷ்டவசமாக சிலருக்கு இந்தத் தினப் பலன்கள் கை கொடுக்கும். ஆனால் சிலருக்கு! ஹி....ஹி...! சொல்லவே தேவையில்லை! ஏமாந்த சோனகிரி நிலமையினைத் தான் இத் தினப் பலன்கள் அள்ளி வழங்கும். தினப் பலன்களைப் பார்த்துத் தம் நாளாந்த வாழ்க்கையினை ஓட்டுவதற்காகவே பத்திரிகை வாங்கிப் படிப்போரும், பத்திரிகை பரவிக் கிடைக்கும் தேநீர்க் கடைகளை நாடிச் சென்று "ஓசிப் பேப்பர்" படிப்போரும் நம்மில் பலர் என்றே கூறலாம். 

இன்று அதிஷ்டம் உண்டாகும் என ஒரு ராசிக்கான பலனை அடிப்படையாக வைத்துப் பத்திரிகையில் வெளிவரும் தினப் பலனை நம்பி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ஒரு இளைஞனின் வாழ்விற்கு என்ன நடக்கும் என்பதனை காமெடிச் சாயம் பூசி, ஒரு மொக்கைப் படமாகத் தந்திருக்கிறார்கள் Twilight Entertainment நிறுவனத்தினர். தமிழ் சினிமாவில் காமெடிக் காட்சிகளில் அண்மையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஷாம் அவர்கள் இக் குறும்படத்தின் கதா நாயகான நடித்திருக்கிறார். பின்னணி இசை, கதை நகர்வு, மொக்கையாகவே படத்தினை நகர்த்தியிருக்கும் விதம் யாவும் அருமையாக இருக்கின்றது. படத்தின் மிகப் பெரிய குறை Short Film என்பதாலோ என்னவோ,படத்தினைப் பற்றிய விபரங்களையும் குறிப்பிடாது தவிர்த்திருக்கிறார்கள்.

பட எடிற்றிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை பிரமாதமாக அமைந்திருந்தாலும் இக் குறும்படத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களை Twilight Entertainment நிறுவனத்தினர் குறிப்பிடாது விட்டிருப்பது மிகப் பெரிய குறை அல்லது தவறாகும். இயல்பான வசனங்கள், இயல்பான வாழ்வியற் காட்சிகளைத் தாங்கி ஒரு இளைஞனின் வாழ்வு நம்பிக்கையின் அடிப்படையில் எவ்வாறு நகர்ந்து சென்று திசை மாறுகின்றது என்பதனை இப் படம் சொல்லி நிற்கின்றது. இப் படம் பற்றி வழமையான நடையில் விமர்சிக்க முடியவில்லை. இதற்கான பிரதான காரணம் இக் குறும்படம் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. 


Not Lucky: நம்பிக்கைகள், சென்டிமென்ட் ஆகியவற்றால் நொந்து போனவனின் காமெடி கலந்த உள்ளக் குமுறலின் வெளிப்பாடு!

29 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நல்ல நேரம் சதீஷ்க்கு எதிர் பதிவா? ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நல்ல நேரம் சதீஷ்க்கு எதிர் பதிவா? ஹி ஹி
//

அண்ணே ஏன் இந்த வேலை?
நானும் அவரும் நல்லா இருப்பது பிடிக்கலையா?
ஹி....ஹி...

K said...
Best Blogger Tips

good review.

K said...
Best Blogger Tips

Machchi, i am always opposite such a foolish things such as Astrology. It makes a large number of people as hopeless by propagating foolish stories.

It is very comedy one that all astrologers have their own solution for each term.

K said...
Best Blogger Tips

Can anyone answer my question?

In a big hospital in London, there were two babies born at the same time. One is Tamil and the next is English.

So, would it be the same future for two?

K said...
Best Blogger Tips

it is an open challenge!

Can any astrologer gives solution which depends on money?

K said...
Best Blogger Tips

sorry...... Which is not depend on money?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நல்ல மொக்கை படம் நகைச்சுவை நடிகர் ஷாமின் நடிப்பு பிரமாதம் திரைப்படங்களில் இவரது காமடி சிறப்பாக இருக்கும் குறிப்பாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் மொழிபெயர்ப்பாளராக வருவாரே என்ன ஒரு நடிப்பு இவரது நடிப்புத்திறமைக்கு பல படங்கள் இருக்கின்றது..

Unknown said...
Best Blogger Tips

கிளிப்ப பார்த்தேன் இயல்பா இல்லாம ஓவரா நடிக்கிறாங்க...
ஐடியாமணி கருத்து என்ன மாதிரி பாமரனுக்கு புரியாதுங்க...தமிழ்ல போட்டா வம்பாயிருமா?
சிபிக்கு பொழுதுபோகலை போல கோர்த்துடறார்.....

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

நிரூபனுக்கு இண்டைக்கு ராசிப்பலன் சரியிலைப்போல:)))

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

அந்த படம் எடுத்த நேரம் நல்ல நேரமா? உங்க விமர்சனமும் தூக்கலா இல்லையே..

ஓ.. படத்திலேயே தூக்கல் இல்லைன்னு சொல்லிட்டிங்க...


நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

SURYAJEEVA said...
Best Blogger Tips

//ஆத்திகவாதி, நாத்திகவாதி என இரு வேறுப்பட்டோரை நாம் பிரித்து நோக்கினாலும்;எம்மை இயக்குகின்ற சக்தி அல்லது எம்மை விட மேலான ஒரு சக்தி இவ் உலகினில் உள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. //

ஒரு சுத்தமான நாத்திகவாதியாய் மறுக்கிறேன்... ஒரு நாணயத்தை சுண்டி விட்டு பூ அல்லது தலை விழும் என்று கூறுவது கணித முறையில் ப்ரோபபிளிட்டி என்று வரும்... பூ விழுவுதும் தலை விழுவதும் மேலே உள்ள எதோ ஒரு சக்தியால் அல்ல.. சுற்றி விடும் கை விரல்.. அதன் வேகம் ஆகியவை பொறுத்து... அதே போல் நூறு அல்லது ஆயிரம் நானனயங்கள் சுன்டப் பட்டால் எது விழும் என்று யாரால் கூற முடியும்.. நம் வாழ்க்கை சில சமயம் நம் கைகளிலும் பெரும்பாலும் சமூகத்தின் கைகளிலுமே உள்ளது...

test said...
Best Blogger Tips

ம்ம்ம்..நடத்துங்க பாஸ்! :-)

Unknown said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி படம் அருமை. நல்லா பண்ணியிருக்காங்க..

rajamelaiyur said...
Best Blogger Tips

நகைசுவைய்டன் நல்ல செய்தி

rajamelaiyur said...
Best Blogger Tips

இன்று என் வலையில்

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

சசிகுமார் said...
Best Blogger Tips

சூப்பர் விமர்சனம் மச்சி படமும் தான்...

Anonymous said...
Best Blogger Tips

அண்ணே, மன்னிக்கணும், தலைக்கு மேல வேல.. ரெண்டு மூணு நாளா வர கெடைக்கல.. அப்புறம் எப்புடி இருக்கீங்க? btw ச்சாம்ஸ் எப்பவுமே இப்புடித்தான் கொஞ்சம் மொக்கையாதான் நடிப்பாரு, கரு எப்புடி இருந்தாலும் படமாக்கிய விதம மொக்கை... ஹீ ஹீ..

திருமகள் said...
Best Blogger Tips

1000 ரூபா கள்ளநோட்டு என்பதை உடனே ஊகிக்க முடிகிறது . Late ஆனதால் வேலைக்கு ஆப்பு என call , குப்பையை கிளறும் போது நாய் கடி + மருந்துக்கடையில் 1000 ரூபா நோட்டு பிடி+ போலீஸ் அடி ...!! இன்னும் "இனியநாள்" ஆக இருந்திருக்கும் !! ஐடியாமணி money தந்தால் நாங்களும் படம் எடுப்பமா ??

ஹேமா said...
Best Blogger Tips

விசர்ப்படம் நிரூ.இந்த மூஞ்சை சில படங்களில வரும் அப்பவே எனக்குப் பிடிக்காது.இந்தச் சாத்திரங்களை நம்பி வாழ்க்கையையே இழந்தவங்கள் எத்தனை பேர்.திருந்த இடம் இல்லை !

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நிரூபன் said...

@சி.பி.செந்தில்குமார்

நல்ல நேரம் சதீஷ்க்கு எதிர் பதிவா? ஹி ஹி
//

அண்ணே ஏன் இந்த வேலை?
நானும் அவரும் நல்லா இருப்பது பிடிக்கலையா?
ஹி....ஹி...//

சிபி பன்னாடைக்கு இப்பிடி கோர்த்து விடுறதே வேலையாப் போச்சு போடாங்...

Unknown said...
Best Blogger Tips

ஸ் ஸ் அபா....அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் மாப்ள!

Yoga.S. said...
Best Blogger Tips

சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

Unknown said...
Best Blogger Tips

என்ன அன்பரே நலமா!

நம்மை மறந்தாரை நாம்
மறக்க மாட்டோமால்

த ம ஓ 12

புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

குறும்படம்தானே!பார்த்து விடுகிறேன்.

Sharmmi Jeganmogan said...
Best Blogger Tips

@suryajeeva

உங்கள் பதிலிலேயே சொல்லிவிட்டீர்கள் சுற்றி விடும் கை விரல்... அதன் வேகம் பொறுத்ததென்று... அதையெல்லாம் யார் ஆட்டி வைக்கிறார்கள்? அந்த சக்தி தான் நிரூபன் சொல்வதும்.

Sharmmi Jeganmogan said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம் தம்பி...
வித்தியாசமான குறும்படம்.

shanmugavel said...
Best Blogger Tips

படம் சரியான விஷயத்தை முன் வைக்கிறது,விமர்சனமும் நன்று

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்

என்ன அன்பரே நலமா!

நம்மை மறந்தாரை நாம்
மறக்க மாட்டோமால்

த ம ஓ 12

புலவர் சா இராமாநுசம்
//

ஐயா நான் உங்களையோ, இல்லை வேறு உறவுகளையோ மறக்கவில்லை!

என்னுடைய நான்கு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்!
வேலை பிசியாலும், என்னுடைய கல்வியின் நிமித்தமும் இந்த மாதத்துடன் பதிவுலகினை விட்டு நின்று விடுவேன் என்று!

ஆகவே தான் ஐயா தங்கள் வலைப் பக்கம் வர முடியவில்லை!

எனக்கு இருக்கும் நேரத்தில் ஒரு பதிவு எழுதிச் சரிபார்க்கவே நேரம் போதாது உள்ளது ஐயா.
நன்றி ஐயா.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails