Sunday, November 13, 2011

Killer Elite - விமர்சனம் - உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய அதிரடி ஆக்‌ஷன்!

அதிகார வர்க்கத்தின் ஆயுதக் கரங்களின் பிடிக்குள் அகப்பட்டால் பல நிஜமான நிகழ்வுகளும் வெளித் தெரியாத மர்மங்களாகப் புதைந்து போய் விடும். பிரித்தானிய வரலாற்றில் பெரும் பரபரப்பினயையும், பிரித்தானியாவின் தரை மற்றும் விமானப் படையினருக்கு உலகளவில் அவமரியாதையினையும் ஏற்படுத்திய; எழுத்தாளர் Ranulph Fiennes அவர்களது The Feather Men எனும் நாவலினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் Killer Elite. 1971ம் ஆண்டு இடம் பெற்ற ஓமான் - துபாய் யுத்தத்தின் பின்னர், இரு நாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற அதே வருடத்தில் ஓமான் நாட்டு மன்னரின் பணிப்பின் பேரில் நான்கு லண்டன் இராணுவத்தினரால் துபாய் ஷேக் ஷாக்புத் பின் சுல்தான் அவர்களின் மூன்று புத்திரன்களைக் கொல்வதற்கு பிரித்தானிய இராணுவத்தினர் திட்டம் தீட்டுகின்றார்கள்.
இந்தக் கொலைக்குச் சன்மானமாக அல்லது பிரதி உபகாரமாக பிரித்தானியாவிற்கு இரகசியமாக பெற்றோலியப் பொருட்களை வழங்குவதற்கு உடன்படுகின்றார்கள் ஓமான் நாட்டு மன்னரும் அவரது பரிவாரங்களும். இச் சம்பவங்கள் நிகழ்ந்து வெளித் தெரியாத விடயங்களாகப் புதைந்து போய் விட; பல வருடங்களின் பின்னர் உலகம் சுற்றும் நாடோடியான (Adventure) Ranulph Fiennes அவர்கள் 17 வருடங்களின் பின்னர் உண்மைகளைக் கண்டறிந்து ஓர் நாவலாக இவ் விடயங்களை The Feather Men எனும் பெயரில் எழுதி வெளியிட்டார். இதனால் சிறிது காலத்திற்குப் பரபரப்பிற்குப் பஞ்சமின்றி பிரித்தானியாவினைப் பற்றிய அவதூறுச் செய்திகளும், சிறிய நாடுகளை ஏமாற்றும் முதலாளித்துவ நாடுகளின் பொய் மோசடிச் சதி வேலைகள் பற்றிய நிகழ்வுகளும் உலகமெங்கும் பரவலாகப் பேசப்பட்டது. இந்த உண்மைச் சம்வத்தினை அடிப்படையாக வைத்து விறு விறுப்பிற்கும், திரிலிங்கிற்கும் குறைவேதுமின்றி எடுக்கப்பட்டுள்ள அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் தான் இந்த Killer Elite திரைப்படமாகும்.

நாவலை முன்னுதாராணமாக கொண்டு இத் திரைப்படத்தினை எடுத்திருந்தாலும்; கொஞ்சம் வித்தியாசம் கூட்டி பல வருடங்களின் பின்னர் தன் குரோதத்தினைத் தீர்க்கும் நிலையில் பழிக்குப் பழி வாங்கும் நோக்குடன், துபாய் மன்னர் ஷேக் அவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போனில் வசிக்கும் அடி தடியில் சிறந்தவரான டனி (Danny) அவர்களைத் தொடர்பு கொண்டு ஆறு மில்லியன் ரூபாவிற்கு ஒரு டீலிங் வைக்கின்றார்.அந்த டீலிங் என்னவென்றால், தன் மூன்று மகன்களையும் பாலை வனத்தில் துடிக்கத் துடிக்க 1971ம் ஆண்டு கொலை செய்த இரு பிரித்தானிய விமானப் படை வீரர்களையும், இரு இராணுவ வீரர்களையும் லண்டனிற்குச் சென்று பிரித்தானிய இராணுவத்தினரின் பாதுகாப்புக் கோட்டையினுள்ளும், உளவுத் துறை ஏஜென்சியான SAS இன் கோட்டையினுள்ளும் புகுந்து கொலை செய்ய வேண்டும்.

கொலையாளிகளைப் பணங் கொடுத்து வாங்கித் தம் தேவை முடிந்ததும் தடயமேதுமின்றி தொடர்புகளைத் துண்டிப்பதென்பது மேற்குலகில் இன்று நிகழ்ந்து வரும் சர்வ சாதாரண விடயமாகும். ஆக்‌ஷனுக்கும் திரிலிங்கிற்கும் பஞ்சமேதுமின்றி (Hunter) கூலிக்கு வேலை முடிக்கும் டனி அவர்களின் செயற்பாடுகளை நகர்த்தியிருக்கிறார்கள் படக் குழுவினர். SAS எனப்படும் பிரித்தானிய உளவுத் துறை ஏஜென்சியின் கூடாரத்தினுள் இப் படத்தின் கதா நாயகன் நுழைய வேண்டும்.பலத்த பாதுகாப்புடன் இருக்கும் SAS நிறுவனத்தினுள் ஊடுருவினாரா? தனக்கு துபாய் மன்னரால் வழங்கப்பட்ட டீலிங்கினை வெற்றிகரமாக முடித்தாரா டனி ஆகிய வினாக்களுக்கான விடையினை நீங்கள் இப் படத்தினைப் பார்க்கையில் திரையில் கண்டு களிக்க முடியும்.  இவ் வருடத்தின் புரட்டாதி மாதம் 23ம் திகதி அன்று (2.09.2011) திரைக்கு வந்திருக்கும் இத் திரைப்படத்தினை Open Road Films நிறுவனத்தினர் அண்ணளவாக $70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

ஹாலிவூட் திரைப்படங்களின் ஆக்‌ஷன் - திரிலிங் திரைப்படங்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வரும் கதா நாயகர்களுள் ஒருவரானா ஜசோன் ஸ்ரதாம் (Jason Statham) அவர்கள் இத் திரைப்படத்தின் கதா நாயகனாக டனி எனும் பெயருடன் நடித்து ஆக்‌ஷன் திரிலிங் பிரியர்களுக்கு விருந்தளித்திருக்கிறார். இவருடன் இணைந்து கதா நாயகியாக Yvonne Strahovski அவர்கள் நடித்திருக்கிறார். ஆக்‌ஷனுக்குப் பஞ்சமில்லாத படத்தில் கதா நாயகிக்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்பது போன்று, கதா நாயகி இப் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து தலை காட்டி விட்டுச் செல்கின்றார். ஆனாலும் சென்டி மென்ட் கலந்த தன் நடிப்பால் பின்னியிருக்கிறார். உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தினை Gary McKendry அவர்கள் இயக்கியிருக்கின்றார். ஆக்‌சன் படங்களின் விறு விறுப்பான கதை நகர்விற்கு பின்னணி இசை பக்க பலமாக இருக்க வேண்டும் எனும் நியதிக்கு அமைவாக Reinhold Heli அவர்களும், The Other Ones ஆஸ்திரேலிய இசைக் குழுவினரும் இசை வழங்கியிருக்கிறார்கள்.
ஹாலிவூட் படங்களின் சிறப்பம்சங்களுள் நேர்த்தியான ஒளிப் பதிவும் ஒன்றென்பதால்; அதனையும் சிறப்பாகச் செய்திருக்கிறார் இப் படத்தின் ஒளிப்பதிவாளர் Simon Duggan அவர்கள். Matt Sherring அவர்களின் எழுத்துருவாக்கத்தில் உருவான இப் படத்தின் தயாரிப்பிற்கு Michael Boughen, Tony Winley, Steve Chasman, Sigurjon Sighvatsson ஆகிய கலைஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். கொடூரமான சண்டைக் காட்சிகள் உள்ள காரணத்தினால் சிறுவர்களுக்கு உகந்த படம் இது அல்ல. ஆனாலும் மனத் தைரியம் உள்ள குழைந்தைகள் உள்ளோர் குடும்பத்துடனும் இப் படத்தினைப் பார்த்து மகிழலாம். விரசமில்லாத பாலியல் காட்சிகள் இரு இடங்களில் பின்னணியில் முனகல் ஓசையுடன் வந்து செல்கின்றது. 15 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து மகிழ்வதற்கு உகந்த படம்.

116 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இத் படத்தின் ட்ரெயிலரினை யூடியூப்பில் கண்டு களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: புத்தம் புதிய படம் என்பதால் இப் படத்தினைப் பார்ப்பதற்கான இணைப்பினை வழங்க முடியவில்லை. கூகிளில் தேடுவதன் மூலம் நீங்கள் இப் படத்திற்கான இணைப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Killer Elite: பல வருடங்கள் கடந்தும் பழி வாங்கும் உணர்வு மறையாத மனிதர்களின் அதிரடிக் காட்சிகளை உள்ளடக்கிய விறு விறுப்பான படம்!

பிற் சேர்க்கை: இப் பதிவில் வரும் "The Feather Men" நாவலில் உள்ளடக்கிய உண்மைச் சம்பவங்களை வீக்கிப் பீடியா, மற்றும் Amazon.com, The Daily mail UK ஆகிய ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாக வைத்து ஒப்பிட்டு எழுதியுள்ளேன்.  
*************************************************************************************************************************************
இன்றைய தினம் நாற்று வலைப் பதிவின் பதிவர் அறிமுகம் பகுதியினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பதிவு தான் "பொட்டலம்" வலைப் பதிவாகும். எம் தமிழ் மரபில் புதையல்கள் மற்றும் நல்ல பல பொருட்கள் அடங்கிய பொதியினைப் பொட்டலம் என்று அழைப்பார்கள். இதே போன்று தான் பதிவர் "கார்த்தி" அவர்களும் புதிய படங்கள் எப்போது வெளி வருகின்றதோ அப்போது தான் தன் பொட்டலம் வலைப் பதிவினைத் தூசு தட்டிப் புதிய பதிவுகளை எழுதுவார். ஆனாலும் அவரது வலைப் பதிவில் இசை பற்றிய தேடல்கள், திரைப் படத் தகவல்கள், சினிமா விமர்சனங்கள் போன்றவை பொட்டலமாகப் பொதிந்திருந்து எமக்கு விருந்தளிக்கின்றது.
"கார்த்தி" அவர்களின் "பொட்டலம்" வலைப் பூவிற்குச் செல்ல:
http://vidivu-carthi.blogspot.com/
***************************************************************************************************************************************

21 Comments:

Unknown said...
Best Blogger Tips

mmmm super

test said...
Best Blogger Tips

NICE INTRO!!! THANKS BOSS!

மாய உலகம் said...
Best Blogger Tips

அதிகார வர்க்கத்தின் ஆயுதக் கரங்களின் பிடிக்குள் அகப்பட்டால் பல நிஜமான நிகழ்வுகளும் வெளித் தெரியாத மர்மங்களாகப் புதைந்து போய் விடும்.//

வணக்கம் பாஸ்.. இப்படி எத்தனையோ வரலாறுகள் நம்மை அடையாமலே போயிருக்கலாம்.

மாய உலகம் said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை நண்பா... வாழ்த்துக்கள்...

கூடல் பாலா said...
Best Blogger Tips

நடக்கட்டும் ...

Anonymous said...
Best Blogger Tips

ஓகே... ஆமா நம்ம ஆளுங்க உண்மை சம்பவங்களின் அடிப்படையில்ன்னு எடுக்குற படம் எல்லாமே மொக்கையா இருக்கு? ஆனா ஹாலிஹுட் காரன் எடுத்தா மட்டும் நல்லா இருக்கே...

Anonymous said...
Best Blogger Tips

சரிண்ணே...டவுன்லோடி பார்த்துட வேண்டியதுதான்...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

mmmm super
//

நன்றி சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

NICE INTRO!!! THANKS BOSS!
//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

வணக்கம் பாஸ்.. இப்படி எத்தனையோ வரலாறுகள் நம்மை அடையாமலே போயிருக்கலாம்.
//

உண்மை தான் நண்பா,.

எப்போதும் வலியது வெல்லும் என்று தானே சொல்லுவார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

விமர்சனம் அருமை நண்பா... வாழ்த்துக்கள்...//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

நடக்கட்டும் ...//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@மொக்கராசு மாமா

ஓகே... ஆமா நம்ம ஆளுங்க உண்மை சம்பவங்களின் அடிப்படையில்ன்னு எடுக்குற படம் எல்லாமே மொக்கையா இருக்கு? ஆனா ஹாலிஹுட் காரன் எடுத்தா மட்டும் நல்லா இருக்கே...
//

அதான் எனக்கும் புரியாத புதிராக இருக்கே பாஸ்!

ஹேமா said...
Best Blogger Tips

நேற்றுத்தான் Last Night பார்த்தேன்.நல்லதொரு படம் !

Thava said...
Best Blogger Tips

ரொம்ப அருமையான விமர்சனம்..நன்றிகள் பல.

M.R said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா
நல்ல விமர்சனம் நண்பா

Anonymous said...
Best Blogger Tips

நல்ல படம்...விமர்சனம் ரொம்ப அருமை அண்ணே...

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

முடிந்தால் பார்க்கலாம்.

Anonymous said...
Best Blogger Tips

TIN TIN பாத்துட்டீங்களா?

சசிகுமார் said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை...

shanmugavel said...
Best Blogger Tips

நிறைய சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள்,எனக்கு நேரமே கிடைக்கமாட்டேன் என்கிறது,நன்று

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails