ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
அம்மா மெதுவாக எங்களின் பூர்வீக வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினா(ர்).
அம்மா மெதுவாக எங்களின் பூர்வீக வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினா(ர்).
"நாங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்! எங்களின் பூர்வீகம் இந்தியா தான்!"
சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. இந்தியாவின் குமரிக் கண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த மூதாதையர்களின் எச்சம் தான் நாங்கள்.
எனக்கு அம்மா என்ன சொல்ல வருகிறா என்றே புரியாதவனாக அவாவின் விழியினை உற்றுப் பார்த்தேன்.
அந் நேரம் ஐயா (அம்மாவின் அப்பா) "குமரிக் கண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த மூதாதையர்கள்" எனும் வார்த்தையினைச் செவிமடுத்தவராய் குறுக்கிட்டார். "வரலாறு சொல்லும் போது விரிவாகவும், சின்னப் பையனுக்குப் புரியுமாறும் தெளிவுறச் சொல்ல வேண்டும் எனச் சொல்லி அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக இலங்கையும் - இந்தியாவும் ஒரே நிலப் பகுதியாகவே இருந்திருக்கின்றன. இது வரலாற்று நூல்களும், ஆய்வாளர்களும் கூறுகின்ற தகவல். ஆனால் இன்னும் சில அறிஞர்கள் தொல் பொருட் தடயங்களை அடிப்படையாக வைத்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே லெமூரியா கண்டத்தில் இலங்கைத் தமிழர்களின் பூர்வீக குடி மக்கள், இந்திய தமிழர்களின் மூதாதையர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, மற்றும் சுனாமி அலைகளின் விளைவினால், இந்த லெமூரியாக் கண்டத்தின் சிறிய பகுதி தீவுத் திடலாகி இந்து சமுத்திரத்தினுள் அமிழ்ந்து கொள்கிறது. இந்தப் பகுதி தான் பிற் காலத்தில் இலங்கையாகத் தோற்றம் பெற்றது என ஐயா சொல்லுகையில், வரலாற்றில் சிறு ஐயம் கொண்டவளாக அம்மா, "அப்படீன்னா இலங்கைக்கு எப்படித் தமிழர்கள் வந்தார்கள்?" இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பேரனுக்குச் சொல்ல வேண்டியது தானே?
"புள்ள உனக்கு ஆடு அறுக்க முன்னாடியே தமக்கு ஈரல் வேண்டும், இறைச்சி வறுவல் வேண்டும் என்று அடம்பிடிக்கிற ஆளுங்க மாதிரி நீயும் ஏன் அவசரப்படுறாய்? கிழவன் சொல்லுவேன் தானே?" இவ்வாறு ஐயா நச்சரித்தார்.
இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக குமரிக் கட்டத்தின் சிறு பகுதியாக இந்து சமுத்திரத்தினுள் அமிழ்ந்த இலங்கைச் சிறு தீவின் ஆதிக் குடிகள் இயக்கர் நாகர் எனும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். ஆனாலும் எங்கள் நாட்டில் (இலங்கையில்) தொன்று தொட்டு வாழ்ந்த பழங்குடி - மூதாதையர்களில் பலருக்கு வரலாற்றினை எழுதி ஆவணப்படுத்துவது தொடர்பான விடயங்கள் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கி.பி (கிறிஸ்துவிற்குப் பின்) பதினேழாம் நூற்றாண்டிலிருந்து தான் எங்களின் பண்டைத் தமிழர்கள் வரலாற்றினை எழுதத் ஆரம்பித்தார்கள்.
"அப்படீன்னா ஐயா, இப்ப புலி மாமாக்கள் கூட சண்டை போடுற சிங்கள மக்கள் எப்போது இலங்கைக்கு வந்தார்கள்?" இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டேன். "கி.மு.நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவின் வங்காள தேசத்திலிருந்து இலங்கையினுள் நுழைந்த ஆரியர்களின் வழித் தோன்றல் தான் இந்தச் சிங்களவர்கள்.
தென் இந்தியாவோடு நிலத்தால் தொடர்புடையதாகவும், பூகோளவியல் அடிப்படையில் தென் இந்தியாவோடு நெருங்கியிருந்த சிறு தீவு இலங்கை என்று கருதியும் தென் இந்தியாவிலிருந்து; தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் உணவு - முத்துக்கள்- திரவியங்கள் எனப் பல தரப்பட்ட பொருட்களைத் தேடியும் பண்டைக் காலத்தில் திராவிட இன மக்கள் ஈழத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். அத்தோடு இராஜ தந்திர நோக்கிலும், வியாபார நோக்கிலும் தென் இந்தியாவின் கேரளம், மற்றும் இதர பிரதேசங்களிலிருந்து ஈழத்தில் குடியேறியவர்களின் மூதாதையர்கள் தாம் எம் இனத்தின் விழுதுகள்.
பண்டைய காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ஆதிக் குடிகளுள் நிலவிய வருணாச்சிரம கோட்பாடுகளும், இராஜ தந்திர முறைகளும் தென் இந்தியாவில் நிலவிய பிராமணியக் கொள்கையினை முன் மாதிரியாக கொண்டே நிறுவப்பட்டன. தமிழர்கள் தொன்று தொட்டு வீரம் நிறைந்தவர்களாகவும், நெஞ்சுரம் கொண்டவர்களாகவும் ஈழத்தில் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். இலங்கையின் பண்டைய தமிழர்களின் வரலாற்றினை செகராசசேகர மாலை, பரராசசேகர மாலை முதலிய நூல்கள் சிறு துளியாகத் தொட்டுச் சொல்லியிருக்கின்றன. நீ பெரியவனானதும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
ஆனாலும் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய குறிப்புக்களை வரலாற்று அறிஞர்கள் தொகுத்துள்ள போது, சங்க இலக்கியங்களில் வரும் "ஈழத்து நாகனார், ஈழத்து குடும்பிகனார் பற்றிய....என்று ஐயா சொல்லத் தொடங்கவும், அம்மா மீண்டும் ஒரு தரம் ஐயாவை நச்சரிக்கத் தொடங்கினா. "ஈழம் என்றால் என்னவென்று உங்கட பேரனுக்கு சரியாகப் புரிய வைத்தால் தானே அவன் பெரியாளாகியதும் செகராசசேரமாலை, போன்ற நூல்களைப் படிக்கும் போது புரிந்து கொள்வான்?"
சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த காலப் பகுதியிலிருந்தே ஒட்டு மொத்த இலங்கைச் சிறு தீவினையும் ஈழம் என்று அழைத்தார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. கிறிஸ்துவிற்கு முற்பட்ட 12ம் நூற்றாண்டுகளிற்கு முன்னரான காலப் பகுதியில் ஈழத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருக்கமான - சுமூமகான உறவுகள் இருந்தன என்பதற்குச் சான்றாக சங்க இலக்கியங்களில் வரும் ஈழத்து நாகனார், ஈழத்து குடும்பிகனார்" முதலிய சொற் பிரயோகங்கள் அமைந்து கொள்கின்றன.
இவ்ளோ பெரிய வரலாற்றினைக் கொண்டிருக்கிற புலி மாமாக்கள் ஏன் சிங்கள ஆமியாக்களோட அடிபடுறாங்க? என்று நான் வாயினை ஆவென்றபடி கேள்வியெளுப்பினேன். அம்மா என்னை உற்றுப் பார்த்தவளாய் "தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய். இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே என்று சொல்லிக் கொண்டிருக்க ஐயா தம்பி நிரூக் குட்டி, இப்ப நாங்கள் சாப்பிடுவோம்,. இரவைக்கு (இரவிற்கு) மிகுதிக் கதையினைப் புள்ளைக்குச் சொல்லுறன் என்றவாறு அடுப்படிப் (கிச்சன்) பக்கம் நகரத் தொடங்கினார்.
எச்சங்கள் தொடர்ந்தும் வரும்...........

(இலங்கை - இந்திய நேரப் படி சனிக்கிழமை இரவு பிரசுரமாகும்)
பிற் சேர்க்கை: காட்டான் அண்ணாச்சியின் அன்பு வேண்டுகோளிற்கமைவாகவும், ஏனைய அன்பு உள்ளங்களின் ஆவலினைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இனிச் சனிக் கிழமை இரவிலும் "ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்" தொடர் உங்களை நாடி வரும்!
**********************************************************************************************************************************
அன்பிற்கினிய உறவுகளே! உங்களிடம் ஒரு வேண்டுகோள்!
தமிழ்மண மகுடத்தில் தொடர்ச்சியாக என் பதிவுகள் தெரிவாகிக் கொண்டிருப்பது நல்ல செயல் அல்ல. தொடர்ச்சியாக என் பதிவுகள் மகுடத்தில் தெரிவாகுவதால் அங்கிருந்து என் பதிவுகளை நோக்கி வருகின்ற வாசகர்களுக்குச் சில நேரங்களில் ஓவர் மொக்கைப் பதிவுகளாக இருக்கும் என் பதிவுகள் சலிப்பினை கொடுக்கலாம். நாளடைவில் "அட சீ....நிரூபனின் பதிவுகள் தானே இவை! இந்தப் பதிவுகள் எப்போதும் போல ஒரே மாதிரியான ரசனையில் இருக்கலாம்" எனும் உணர்வினை வாசகர்களுக்கு கொடுத்து வெறுப்பினையும் ஏற்படுத்தி விடும். மிக முக்கியமான வரலாற்றுப் பதிவினை எழுதுகின்ற போது அப் பதிவிற்கும் இதே நிலை ஏற்பட்டு விட்டால் பலரைச் சென்றடைய வேண்டிய பதிவு வழமையான கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டு வாசகர்களால் புறக்கணிக்கப்பட்டு விடும்.
புதிய பதிவர்கள், ஏனைய வாசக உள்ளங்களின் பதிவுகள் தமிழ்மண மகுடத்தில் வர வேண்டும் என்பதே என் அவா. அத்தோடு என்னைப் போன்ற பதிவர்கள் மகுடத்தில் குந்தியிருப்பதால் காத்திரமான பதிவர்களின் பதிவுகளும் காணாமற் போய் விடுகின்றன. ஆகவே இன்று முதல் 18 ஓட்டுக்களிற்கு மேல் யாரும் என் பதிவுகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம்.
"காத்திரமான அனைவரும் அறிய வேண்டும் என நீங்கள் நினைக்கும் என் பதிவுகளிற்கு மாத்திரம் உங்களின் பொன்னான ஓட்டுகளை அளவு கணக்கின்றி நீங்கள் செலுத்தலாம்". இதனையும் மீறி 18 ஓட்டுகளுக்கு மேல் நீங்கள் என் மொக்கைப் பதிவுகளுக்கு ஓட்டளித்தால், தமிழ்மண ஓட்டுப்பட்டையினை நீக்குவதனை விட எனக்கு வேறு வழி தெரியவில்லை உறவுகளே! மன்னிக்கவும்!
|
112 Comments:
18 க்கு மேல தமிழ்மணம் வேண்டாமா .... எங்களுக்கெல்லாம் வோட்டு எவ்வளவு வந்தாலும் குத்திக்கிட்டே இருங்கய்யான்னு சொல்லுவோம்... நீங்க என்ன பாஸ்ஸ்ஸ்ஸ்... அட போங்க பாஸ்
நாளடைவில் "அட சீ....நிரூபனின் பதிவுகள் தானே இவை! இந்தப் பதிவுகள் எப்போதும் போல ஒரே மாதிரியான ரசனையில் இருக்கலாம்" எனும் உணர்வினை வாசகர்களுக்கு கொடுத்து வெறுப்பினையும் ஏற்படுத்தி விடும்.//
உங்கள் பதிவுகளில் நீங்களே இப்படி ஒரு அனலைஸ்க்கு வந்த பிறகு... நீங்கள் ஏன் மொக்கை பதிவுகள் போடவேண்டும்.. மொக்கை பதிவைக்கூட மிகத்தரமா கொடுக்க மேலும் மெனக்கெடுங்க நண்பா... எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இளைப்பாற ஏதாவது ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணும்... அதற்கு நீங்கள் மொக்கை என்று சொல்லிவருகிறீர்களே அதை மேலும் மெருகூட்டி இன்னும் தரமா நல்லதொரு எண்டர்டெய்ன்மெண்டா கொடுங்க நண்பா.... அப்பறம் எப்படி சலித்துக்கொள்வார்கள்.. அவசரப்பட்டு பதிவுகளை போட முயற்சித்தால் உங்களது கவனிக்கபட வேண்டிய முக்கிய பதிவுகள் நீங்கள் சொல்வது போல் கவனிப்பாற்று போய்விடும் என நினைக்கிறேன்.... ரொம்பவும் பேசிட்டனோ... சாரி பாஸ்...
"நாங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்! எங்களின் பூர்வீகம் இந்தியா தான்!"
சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. //
சரித்திரம் மறைக்க பார்த்தாலும்.. உங்களது பதிவு தெளிவு படுத்திவிடும் சூப்பர் பாஸ்
சங்க இலக்கியங்களில் வரும் ஈழத்து நாகனார், ஈழத்து குடும்பிகனார்" முதலிய சொற் பிரயோகங்கள் அமைந்து கொள்கின்றன.//
ஆதாரம் இருக்கும் வரை நம்மள ஆரும் அசைக்க முடியாதுய்யா
இலங்கையின் பண்டைய தமிழர்களின் வரலாற்றினை செகராசசேகர மாலை, பரராசசேகர மாலை முதலிய நூல்கள் சிறு துளியாகத் தொட்டுச் சொல்லியிருக்கின்றன. நீ பெரியவனானதும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.//
படித்துவிட்டீர்களா... நானும் படிக்க முயல வேண்டும்
"தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய். இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே என்று சொல்லிக் கொண்டிருக்க ஐயா தம்பி நிரூக் குட்டி, இப்ப நாங்கள் சாப்பிடுவோம்,. //
சாப்பாட்டுடன் நிரூக் குட்டிக்கு வீரர்களின் வரலாற்றையும் சேர்த்து ஊட்டி விட்ட உங்களது தாயை வணங்கலாம்...
லெமூரியா பற்றிய கருத்துக்கள் மிக ஆர்வமாக படித்தேன், இன்னும் கூட எழுதி இருக்கலாம்,அதுபற்றி நீங்கள் ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
நம் இலக்கியங்கள் லெமூரியாவை குமரிக்கண்டம் என்று அழைக்கின்றன. அங்கு முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாகவும், பாண்டியர்களின் தலைநகரம் அங்குதான் இருந்தது என்றும் படித்திருக்கிறேன். அங்கு ஓடிய ஒரு ஆற்றின் பெயர் (ஞாபகம் இல்லை) கூட நம் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆரம்ப வராலாறினை தொட்டுக்காட்டியிருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.
வணக்கம் பாஸ் எனக்கும் உந்த குமரிக்கண்டம் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை...
இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக இலங்கையும் - இந்தியாவும் ஒரே நிலப் பகுதியாகவே இருந்திருக்கின்றன.// எழாயிரமா? இற்றைக்கு ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கடற்க் கோளால் துவாரகை கடலுள் மூழ்கியது என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள்..ஆனால் எந்த விதத்திலும் நூறு வீத உறுதித்தன்மை இல்லை தான்.. ஆனால் இற்றைக்கு பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட நீர் மட்ட அதிகரிப்பால் பாக்குநீரிணை தோற்றம் பெற்றதாகவும் சொல்கிறார்கள்..
///ஆனால் இன்னும் சில அறிஞர்கள் தொல் பொருட் தடயங்களை அடிப்படையாக வைத்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே லெமூரியா கண்டத்தில் இலங்கைத் தமிழர்களின் பூர்வீக குடி மக்கள், இந்திய தமிழர்களின் மூதாதையர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் கூறுகின்றார்கள்./// இற்றைக்கு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அழிந்து/ சிதைந்து போனதே லெமூரியா கண்டம் என்றும் ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.. லெமூரியாக் கண்டத்தின் அழியாத பகுதியே குமரிக்கண்டம் அதுவும் பிற்காலத்தில் கடல் கொண்டது..!
ரஷ்யாவிலே மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து நடாத்திய ஆராச்சியில் உலகின் தொன்மை குடிமக்கள் தமிழர்கள் தான் என்று உறுதிப்படுத்தியிருந்தார்கள்....
வணக்கம் நிரூபன் முதலில் எனது நன்றிகள் எங்களையும் செவிமடுத்ததற்கு..!!
அய்யா அப்படியா சொன்னார் ஆடறுக்க முன்ன......!! வேணான்னா விட்டுடுறன் ஹி ஹி

///"கி.மு.நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவின் வங்காள தேசத்திலிருந்து இலங்கையினுள் நுழைந்தவர்கள் தான் சிங்களவர்கள்./// விஜயன் சிங்களவனா இல்லை ஆரியனா ... கிறிஸ்துவுக்கு முன் சிங்களம் என்ற இனமோ மொழியோ இருந்திருக்கவில்லை...! சிங்களம் என்ற இனம் கிறிஸ்துவுக்கு பின்னர் 3 - 4 ம் நூற்றாண்டுகளில் ஒரு தனித்துவமான மொழி பேசுபவர்களை அடிப்படையாக கொண்டு உருவாகியதாக தான் அறியப்படுகிறது. இதற்க்கு உதாரணமாக 'ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நூலான மாகவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் அந்நூலை அவ்வினத்திற்க்கான பிரத்தியோக மொழியில், அதாவது சிங்கள மொழியில் எழுதவில்லை , பாளி மொழியிலே எழுதியிருந்தார் '. ஆக அக்காலத்திலே ஒரு வரலாற்று நூலை எழுதக்கூடிய வளர்ச்சியை சிங்கள மொழி கொண்டிருக்கவில்லை என்பதற்கு இது கூட சிறு உதாரணம்.
இது மட்டுமல்லாது அந்த காலத்து வரலாற்று கல்வெட்டுக்கள் பல பாளி என்ற ஒரு மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது.
///"கி.மு.நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவின் வங்காள தேசத்திலிருந்து இலங்கையினுள் நுழைந்தவர்கள் தான் சிங்களவர்கள்/// 'சிங்களவர்கள்' என்ற இடத்தில் 'ஆரியர்கள்' என்று வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் !
///சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த காலப் பகுதியிலிருந்தே ஒட்டு மொத்த இலங்கைச் சிறு தீவினையும் ஈழம் என்று அழைத்தார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. /// ஆமாம் ஆனால் இன்றோ அதற்க்கான அர்த்தத்தை மாற்றிவிட்டார்கள்... நீங்கள் கூட ஈழம் - தமிழீழம் என்ற சொற்க்களுக்கிடயிலான வேறுபாட்டை எடுத்துக்காடும் பதிவு போட்டிருந்தியளே
யாருக்காகவும் தொடரில் மாற்றம் செய்யவேண்டாம் உங்கள் மனதில் பட்ட உண்மையை சிறிதும் மாற்றமில்லாது எழுதுங்கள் சில விடயங்கள் எனக்கும் பிடிக்காது போகலாம் அதற்காக படைப்பாளியை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்காதீர்கள்..
///இவ்ளோ பெரிய வரலாற்றினைக் கொண்டிருக்கிற புலி மாமாக்கள் ஏன் சிங்கள ஆமியாக்களோட அடிபடுறாங்க? என்று நான் வாயினை ஆவென்றபடி கேள்வியெளுப்பினேன்.// ஏண்டா தம்பி இதெல்லாம் கேட்டுப்போட்டு இயக்கத்தில போய் சேரப்போறியே எண்டு அம்மாவும் பயந்திருப்பா போல !
எனது குடும்பத்தில் அனைவருமே இந்த தொடரை வாசிக்கிறோம் எங்களுக்கு தெரியாத பல விடயங்களைக்கூட தொட்டுச்செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்..
ஒய் இப்படியான பதிவுகளுக்கு எதற்கு பாஸ் கமெண்ட் மொடரேசன் ... எம்மால் மற்றவர்கள் போடும் பிரயோசனமான பின்னூட்டங்களை வாசிக்க முடியாத நிலை ஏற்ப்படுகிறதே((
தமிழ்மண ஓட்டு பற்றிய விடயம் தேவையில்லாதது.. ஏற்கனவே நாங்கள் முன்னர் ஒரு பதிவில் இதை கண்டித்திருந்தோம் ஓட்டு போடுவதும் போடமல் விடுவதும் எங்கள் இஸ்டம் அதில் நீங்கள் தலையிடுவது கண்டிக்கதக்கது..
படம் அருமை திரும்ப திரும்ப பார்த்துகொண்டிருந்தேன்.. பதிவை வேலைத் தலத்திலேயே வாசித்துவிட்டேன் பின்னூட்டம்தான் இப்போது...!!
நிரூ நண்பா, வணக்கம், நலமா? நான் ஆவலோடு எதிர்பாத்திருந்த அடுத்த பகுதியை வாசித்து மகிழ்ந்தேன். உங்கள் தேடல் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.. நீங்கள் ஒரு சிறந்த தேடல் பதிவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. தொடர்ந்து தேடுங்கள். அத்தோடு வரலாற்று முக்கியத்துவம் மிக்க விடயங்களை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் ஆங்காங்கே சிறு சிறு நகைச்சுவைகள் கலந்த ஒரு கதையாக கூறுவது உங்கள் எழுத்து ஆளுமையை சிறப்பாக காட்டுகிறது. (இவ்வாறு நம்ம வரலாற்று டீச்சரும் சுவாரஸ்யமா படிபிச்சிருந்தா நான் எல்லாம் பாசாகியிருபன் பாஸ்). தொடர்ந்தும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்த எச்சங்களை நான் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறேன். சலூட் பாஸ்..
பி.கு. விடுங்க பாஸ்.. நீங்க என்ன கள்ள ஓட்டா போடுறீங்க..?? அதெல்லாம் உங்கள் பதிவிற்கு வாசகர்கள் தரும் மகுடம். அது மொக்கை பதிவா இருந்தா எப்பிடி பாஸ் இத்தன ஓட்டு வரும்?? இருந்தாலும் உங்க பெருந்தன்மைக்கு தலை வணங்குரன் பாஸ்.
பல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளக்கூடயவாரு இருந்தது நன்றி பாஸ்
தமிழ் மணம் மகுடம் பற்றி உங்கள் எண்ணம் உயர்வானதுதான் ஆனால்.உங்களுக்கு வரும் வாக்குகளை ஏன் நீங்கள் தடுக்கவேண்டும் அவர்களுக்கு பதிவு பிடித்து இருந்தால் போடுகின்றார்கள் விடுங்க பாஸ்....
விபரம் அறிந்தேன் நண்பரே
தங்கள் பதிவு எல்லாமே சுவாரஸ்யமாகத்தான் உள்ளது நண்பா
கடைசி பாகம் என்று குறிப்பிட மறந்து விட வேண்டாம், கடைசி பாகம் வெளியிடும் அன்று
தெரியாத வரலாற்று நிகழ்வுகள் தெரிந்து கொண்டோம்
லெமூரியா பற்றிய தகவல்கள் அருமை நிரூ தொடரவும் வாழ்த்துக்கள்
கண்ணீரும் ரத்தமும் கலந்த சரித்திரம்
தொடரட்டும் உங்கள் பனி...
வாசகனாய் மட்டுமில்லாமல்..
சகோதரனாய் நானும் உங்கள்
கூட பயணம் செய்கின்றேன்...
வரலாற்று தொடர் அருமை சகோ.. தொடருங்கள்.
தமிழ்மணம் 16... ஹி..ஹி..
///"கி.மு.நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவின் வங்காள தேசத்திலிருந்து இலங்கையினுள் நுழைந்தவர்கள் தான் சிங்களவர்க///
இதை சிங்களவரின் முகவாக்கை வைத்தே எண்ணியிருந்தேன். சிங்கள பாசைக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், அதில் ஏகப்பட்ட ஹிந்தி, பங்காளி மற்றூம் வட இந்திய வார்த்தைகள் காணப்படுகின்றது.
பல புதிய விஷயங்கள் .. நன்றி
எங்கள் வாழ்வின் ஆதாரங்களை அடுத்த சந்ததியினரிடம் எடுத்துச் செல்லும் இந்தத்தொடரை தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.
ஒருவரது எழுத்தின் வலிமையும் கருத்தை எடுத்தாளும் திறனுமே அவரை மக்கள் மனங்களில் நிலைத்திருக்கவைக்கும். உங்களிடம் அந்த ஆளுமை இருக்கிறது. சஞ்சலங்களைவிட்டு உங்கள் பாணியில் தொடருங்கள்.
வெள்ளி வணக்கம்! நல்ல தெளிவூட்டல் பதிவு!நான் வாக்களிப்பதில்லை,அதனால் ஒன்றும் மூழ்கி விடாது!ஏனையோருக்கும் இடமளிக்க வேண்டும் என்ற பெருந்தன்மைக்கு வணக்கங்கள்,வாழ்த்துக்கள்!தொடர்க...........!
பின்னூட்டங்கள் யாவும் வடிகட்டப்படுகின்றன!////கேரளாப் பக்கம் போயிடாதீங்க!
அப்பாடா பதிவை படிச்சவுடன் எங்கடா ஓட்டு போட முடியாதொன்னு நெனச்சேன் தமிழ்மனதுல 18 வது ஓட்டு என்னோடது.
லெமூரியா கண்டத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவேண்டுமானால், கன்னியாகுமரி மியூசியத்தில் நிரூபன் சொன்னதை போல பல ஆவணங்கள் அங்கே உள்ளது....!!!
சிங்களர்கள், கலிங்கத்து ராஜாவின் அடங்காத மகனை ஒரு கப்பலில் எத்தி விட்டு நாட்டை விட்டு ஓடுறான்னு விரட்டபட்டவன்னு புத்தகங்களில் படித்திருக்கிறேன்...!!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம் இலக்கியங்கள் லெமூரியாவை குமரிக்கண்டம் என்று அழைக்கின்றன. அங்கு முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாகவும், பாண்டியர்களின் தலைநகரம் அங்குதான் இருந்தது என்றும் படித்திருக்கிறேன். அங்கு ஓடிய ஒரு ஆற்றின் பெயர் (ஞாபகம் இல்லை) கூட நம் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.//
பரளியாறு...என் நியாபகம்....
லெமூரியா பற்றி அருமையான தொகுப்பு, பல விவரங்கள் அறிந்து கொண்டேன்....!!!
பன்னிகுட்டி சொன்னா மாதிரி, லெமூரியா கண்டம் பற்றி விரிவான பதிவு ஒன்னு போடுங்கய்யா, இப்போ உள்ள பசங்களுக்கு அதைபற்றி ஒன்னுமே தெரியவில்லை என்பதே உண்மை...!!!
அருமையான வரலாறுப் பதிவுத் தொடர் .இதில் மென்மேலும் அறியாத தகவல்களை அள்ளி வழங்க வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
தமிழ்மணம் பற்றிய உங்க்ள் முடிவு சரிதான்..
நிரூபனின் பதிவுகளில் ஈழம் பற்றிய அவர் எழுத்துகள் முக்கியமானவை(இந்தத் தொடர் உட்பட). எனவே நாமும் அவற்றுக்கு மட்டுமே அதிக வாக்குகளை அளித்து, மகுடத்தில் ஏற்றுவது, அவரிடம் இருந்து ஈழம் சார்ந்த மேலும் பல நல்ல படைப்புகள் வர வழிவகுக்கும்.
நிரூ சொன்னபின், ஈழம்சாராத பதிவுகளுக்கு ஓட்டு 18ஐ தாண்டிவிட்டால் நான் வாக்களிப்பதில்லை..மற்றவர்களும் அதையே செய்யுங்களேன்..அதுவே நிரூவின் விருப்பமும்.
பன்னியார் சொன்னது போன்று, நம் சங்ககாலம் என்பது லெமூரியா என்ற குமரிக்கண்டத்தில் நிகழ்ந்தது தான். அதன்பின் வந்த ஊழிப்பேரலையில் அது அழிந்தது. சங்க கால பாண்டியர்களின் மதுரை அங்கேயே இருந்தது. ஆழிப்பேரலைக்குப் பின் அவர்கள் வடக்க்கு நோக்கி நகர்ந்தனர். இந்தியா முழுக்க பரவினர்..மதுரை-மதுரா ஒற்றுமையும் அப்படி வந்ததே..ஆதிமனிதர்களாக வர்லாறு குறிப்பிடுவது நம்மையே..
ஆனால் அதற்கான தொல்பொருள் ஆதாரங்கள் இல்லாததாலேயே, நாம் அதிகம் அதுபற்றிப் பேச முடியவில்லை..
ஒவ்வொருவரும் தன் இன வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். நம் குழந்தைகளுக்கு அதை சொல்வது மிக மிக் அவசியம். அதுவே நமக்கு உந்துசக்தியாகி, நம்மை வழிநடத்தும்..
பொதுவில் தொடர் எழுதுவதில் உள்ள சிக்கல், கமெண்ட்ஸ் தான்.
காட்டான் மாமா சொன்ன மாதிரி பின்னூட்டக்கருத்துகளை(என்னுடையதையும் சேர்த்துத் தான்) பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..நீங்கள் ஏற்கனவே திட்டமடி தொடருங்க.
அரிய தகவல் அடங்கிய வாறு தொடர் வேகமாகச் செல்கின்றது பின் தொடர்கின்றேன்!
எனக்கும் குமரிக் கண்டம் பூம்புகார் பற்றி தெரிந்து கொள்ள ஆசை நேரம் தான் சிந்தனையை கட்டுப்படுத்துகின்றது!
அருமையான தொகுப்பு.வறலாற்று பதிவு சூப்பர்.
உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் நண்பா
சிங்களவர்கள் இன்றைய இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலிருந்து அங்கே சென்று குடியேறியவர்கள் என்று படித்திருக்கிறேன்.குறிப்பாக ஒரியர்களின் முகச்சாயலும் சிங்களர்களின் முகச்சாயலும் ஒரே மாதிரி இருப்பதை அவதானிக்க முடிகிறது.இந்த பதிவு அனைவரிடமும் சேர வேண்டிய பதிவு என்பதால் 18 தாண்டினாலும் ஒட்டு போட்டே ஆக வேண்டும் என்பது எனது முடிவு.இன்னும் எழுதுங்கள் ஈழத்தமிழனின் வரலாற்றை.நன்றி.
வழக்கம் போல! நன்று.
18 க்கு மேல தமிழ்மணம் வேண்டாமா ...அப்ப...மைனஸ் வோட்டா தான் போடணும்...
லெமூரியா பற்றிய கருத்துக்கள் சிறப்பு...தொடருங்கள்...இதே வீரியத்தோடு...
நல்ல தகவல்கள்.ஆராய்ச்சி பூர்வமான பதிவு.நன்றி.
@மாய உலகம்
18 க்கு மேல தமிழ்மணம் வேண்டாமா .... எங்களுக்கெல்லாம் வோட்டு எவ்வளவு வந்தாலும் குத்திக்கிட்டே இருங்கய்யான்னு சொல்லுவோம்... நீங்க என்ன பாஸ்ஸ்ஸ்ஸ்... அட போங்க பாஸ்//
நிறைய ஓட்டுக்கள் கிடைத்தால் பதிவுகளிற்கான அங்கீகாரம் சில நேரங்களில் குறைந்துவிடும் அல்லவா.
உதாரணமாக மொக்கைப் பதிவுகளும் அதிக ஓட்டுப் பெற்றால் படிப்போருக்குச் சலிப்பினை ஏற்படுத்தும் அல்லவா.
@மாய உலகம்
உங்கள் பதிவுகளில் நீங்களே இப்படி ஒரு அனலைஸ்க்கு வந்த பிறகு... நீங்கள் ஏன் மொக்கை பதிவுகள் போடவேண்டும்.. மொக்கை பதிவைக்கூட மிகத்தரமா கொடுக்க மேலும் மெனக்கெடுங்க நண்பா... எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இளைப்பாற ஏதாவது ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணும்... அதற்கு நீங்கள் மொக்கை என்று சொல்லிவருகிறீர்களே அதை மேலும் மெருகூட்டி இன்னும் தரமா நல்லதொரு எண்டர்டெய்ன்மெண்டா கொடுங்க நண்பா.... அப்பறம் எப்படி சலித்துக்கொள்வார்கள்.. அவசரப்பட்டு பதிவுகளை போட முயற்சித்தால் உங்களது கவனிக்கபட வேண்டிய முக்கிய பதிவுகள் நீங்கள் சொல்வது போல் கவனிப்பாற்று போய்விடும் என நினைக்கிறேன்.... ரொம்பவும் பேசிட்டனோ... சாரி பாஸ்...//
நல்ல கருத்து நண்பா. வாரத்தில் ஒரு நாள் மொக்கப் பதிவு போட்டு ஜாலியாக கும்மி மகிழ்வோம், ஏனைய நாட்களில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, கவனம் எடுத்து நல்ல பதிவுகளைத் தர முயற்சி செய்கிறேன்.
உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களிற்கும் நன்றி பாஸ்.
@மாய உலகம்
சரித்திரம் மறைக்க பார்த்தாலும்.. உங்களது பதிவு தெளிவு படுத்திவிடும் சூப்பர் பாஸ்//
ஹே...ஹே...
நன்றி பாஸ்.
@மாய உலகம்
ஆதாரம் இருக்கும் வரை நம்மள ஆரும் அசைக்க முடியாதுய்யா//
அட அப்படியா...
நன்றி பாஸ்.
@மாய உலகம்
படித்துவிட்டீர்களா... நானும் படிக்க முயல வேண்டும்//
கொஞ்சம் படித்திருக்கிறேன் பாஸ்.
@மாய உலகம்
சாப்பாட்டுடன் நிரூக் குட்டிக்கு வீரர்களின் வரலாற்றையும் சேர்த்து ஊட்டி விட்ட உங்களது தாயை வணங்கலாம்...//
என் அம்மாவிடம் உங்களின் மரியாதை நிறைந்த கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.
நன்றி பாஸ்.
மிக்க நன்றி என்று சொல்லச் சொன்னா.
@பன்னிக்குட்டி ராம்சாமி
லெமூரியா பற்றிய கருத்துக்கள் மிக ஆர்வமாக படித்தேன், இன்னும் கூட எழுதி இருக்கலாம்,அதுபற்றி நீங்கள் ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.//
நன்றி அண்ணே, கண்டிப்பாக விரிவான ஒரு பதிவினை எழுதுகின்றேன்,
ஈழம் தொடர்பான கருத்துக்களை மாத்திரம் தொட்டுச் செல்வதால் லெமூரியா பற்றி மேலும் விபரிக்கத் தவறி விட்டேன்,
மன்னிக்கவும்,
@பன்னிக்குட்டி ராம்சாமி
நம் இலக்கியங்கள் லெமூரியாவை குமரிக்கண்டம் என்று அழைக்கின்றன. அங்கு முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாகவும், பாண்டியர்களின் தலைநகரம் அங்குதான் இருந்தது என்றும் படித்திருக்கிறேன். அங்கு ஓடிய ஒரு ஆற்றின் பெயர் (ஞாபகம் இல்லை) கூட நம் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
//
நல்ல கருத்து அண்ணாச்சி, அங்கே ஓடிய ஆறு பஃறுளி ஆறு என்று படித்திருக்கிறேன்.
@Dr. Butti Paul
ஆரம்ப வராலாறினை தொட்டுக்காட்டியிருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.//
மிக்க நன்றி பாஸ்.
உங்கள் ஆசியும், ஆதரவும் இருக்கும் வரை என் பணி தொடரும்.
@நிகழ்வுகள்
வணக்கம் பாஸ் எனக்கும் உந்த குமரிக்கண்டம் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை...//
வெகு விரைவில் அது பற்றி ஒரு தனிப் பதிவே போடுறேன் பாஸ்.
@நிகழ்வுகள்
ஏழாயிரமா? இற்றைக்கு ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கடற்க் கோளால் துவாரகை கடலுள் மூழ்கியது என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள்..ஆனால் எந்த விதத்திலும் நூறு வீத உறுதித்தன்மை இல்லை தான்.. ஆனால் இற்றைக்கு பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்ட நீர் மட்ட அதிகரிப்பால் பாக்குநீரிணை தோற்றம் பெற்றதாகவும் சொல்கிறார்கள்..//
பாஸ்..
இரண்டு விதமான வெவ்வேறு காலப் பகுதியினை வரலாறுகள் சொல்லுகின்றன, ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் 25,000ம் ஆண்டுகளிற்கு முன்பதாக என்றும் அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே இரண்டுவிதமான காலப் பகுதிகளையும் பதிவில் சுட்டியிருக்கிறேன்,
இத் தொடரினை நூலுருவிற்கு கொண்டு வர முன்பதாக, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்று பல தகவல்களைப் பெற்று, தொடரில் மேலும் பல விடயங்களைச் சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.
@நிகழ்வுகள்
ரஷ்யாவிலே மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து நடாத்திய ஆராச்சியில் உலகின் தொன்மை குடிமக்கள் தமிழர்கள் தான் என்று உறுதிப்படுத்தியிருந்தார்கள்....//
நல்ல கருத்து பாஸ்,,
கண்டிப்பாக லெமூரியா கண்டம் பற்றி இரண்டு பேராசிரியர்களோடு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று ஒரு விரிவான பதிவினைத் தர முயற்சி செய்கின்றேன்.
@காட்டான்
வணக்கம் நிரூபன் முதலில் எனது நன்றிகள் எங்களையும் செவிமடுத்ததற்கு..!!//
ஏன் அண்ணே, இதுக்கெல்லாம் நன்றியா சொல்லுவாங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@காட்டான்
அய்யா அப்படியா சொன்னார் ஆடறுக்க முன்ன......!! வேணான்னா விட்டுடுறன் ஹி ஹி//
எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@நிகழ்வுகள்
///"கி.மு.நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவின் வங்காள தேசத்திலிருந்து இலங்கையினுள் நுழைந்தவர்கள் தான் சிங்களவர்கள்/// 'சிங்களவர்கள்' என்ற இடத்தில் 'ஆரியர்கள்' என்று வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் !//
ஆமா பாஸ்...அந்த வரிகளை மாற்றி விட்டேன், ஆரியர்களின் வழித் தோன்றல் தான் சிங்களவர்கள் என்று எழுதியிருக்கிறேன்.
@நிகழ்வுகள்
/// ஆமாம் ஆனால் இன்றோ அதற்க்கான அர்த்தத்தை மாற்றிவிட்டார்கள்... நீங்கள் கூட ஈழம் - தமிழீழம் என்ற சொற்க்களுக்கிடயிலான வேறுபாட்டை எடுத்துக்காடும் பதிவு போட்டிருந்தியளே//
ஆமாம் பாஸ்..
வரலாற்றில் ஒன்றித்துப் போயிருக்கிறீங்களே...
@காட்டான்
யாருக்காகவும் தொடரில் மாற்றம் செய்யவேண்டாம் உங்கள் மனதில் பட்ட உண்மையை சிறிதும் மாற்றமில்லாது எழுதுங்கள் சில விடயங்கள் எனக்கும் பிடிக்காது போகலாம் அதற்காக படைப்பாளியை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்காதீர்கள்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமா பாஸ்...உங்களைப் போன்ற பல வாசகர்களின் ஆதரவு இருக்கும் வரை தொடர்ந்தும் எழுதுவேன் பாஸ்.
மிக்க நன்றி.
@நிகழ்வுகள்
ஏண்டா தம்பி இதெல்லாம் கேட்டுப்போட்டு இயக்கத்தில போய் சேரப்போறியே எண்டு அம்மாவும் பயந்திருப்பா போல !//
ஹே...ஹே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@காட்டான்
எனது குடும்பத்தில் அனைவருமே இந்த தொடரை வாசிக்கிறோம் எங்களுக்கு தெரியாத பல விடயங்களைக்கூட தொட்டுச்செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்..//
நெசமாவா....நன்றி அண்ணா..
ஏதும் இடக்கு முடக்கான விசயங்கள் வந்தால் சிகப்புக் கோடு போடுறேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@நிகழ்வுகள்
ஒய் இப்படியான பதிவுகளுக்கு எதற்கு பாஸ் கமெண்ட் மொடரேசன் ... எம்மால் மற்றவர்கள் போடும் பிரயோசனமான பின்னூட்டங்களை வாசிக்க முடியாத நிலை ஏற்ப்படுகிறதே((//
ஓக்கே பாஸ்...
கண்டிப்பாக தொடர் பதிவுகளை எழுதும் போது கமெண்ட் மொடரேசனை நீக்கி விடுகிறேன்.
@காட்டான்
தமிழ்மண ஓட்டு பற்றிய விடயம் தேவையில்லாதது.. ஏற்கனவே நாங்கள் முன்னர் ஒரு பதிவில் இதை கண்டித்திருந்தோம் ஓட்டு போடுவதும் போடமல் விடுவதும் எங்கள் இஸ்டம் அதில் நீங்கள் தலையிடுவது கண்டிக்கதக்கது..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன தான் இருந்தாலும், தொடர்ந்து அதிக ஓட்டுக்களைப் பெற்று எழுதுவது ஏனைய படைப்பாளிகளின் இடத்தினை தட்டிப் பறிப்பது போல ஆகும் அல்லவா..
@காட்டான்
படம் அருமை திரும்ப திரும்ப பார்த்துகொண்டிருந்தேன்.. பதிவை வேலைத் தலத்திலேயே வாசித்துவிட்டேன் பின்னூட்டம்தான் இப்போது...!!//
நன்றி அண்ணே...
@FOOD
ஒரு தேசத்தின் மக்களை அறிந்து கொள்ள உதவிடும் பகிர்வு. நன்றி.//
நன்றி ஆப்பிசர்.
@பி.அமல்ராஜ்
நிரூ நண்பா, வணக்கம், நலமா? நான் ஆவலோடு எதிர்பாத்திருந்த அடுத்த பகுதியை வாசித்து மகிழ்ந்தேன். உங்கள் தேடல் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.. நீங்கள் ஒரு சிறந்த தேடல் பதிவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. தொடர்ந்து தேடுங்கள். அத்தோடு வரலாற்று முக்கியத்துவம் மிக்க விடயங்களை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் ஆங்காங்கே சிறு சிறு நகைச்சுவைகள் கலந்த ஒரு கதையாக கூறுவது உங்கள் எழுத்து ஆளுமையை சிறப்பாக காட்டுகிறது. (இவ்வாறு நம்ம வரலாற்று டீச்சரும் சுவாரஸ்யமா படிபிச்சிருந்தா நான் எல்லாம் பாசாகியிருபன் பாஸ்). தொடர்ந்தும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்த எச்சங்களை நான் ஆவலோடு எதிர் பார்த்திருக்கிறேன். சலூட் பாஸ்..
பி.கு. விடுங்க பாஸ்.. நீங்க என்ன கள்ள ஓட்டா போடுறீங்க..?? அதெல்லாம் உங்கள் பதிவிற்கு வாசகர்கள் தரும் மகுடம். அது மொக்கை பதிவா இருந்தா எப்பிடி பாஸ் இத்தன ஓட்டு வரும்?? இருந்தாலும் உங்க பெருந்தன்மைக்கு தலை வணங்குரன் பாஸ்.//
நன்றி பாஸ்...ஏதோ என்னால முடிஞ்சதை வாசகர்களுக்கு சலிப்பேற்ற்படா வண்ணம் தொகுத்து தர முயற்சி செய்கிறேன்.
மிக்க நன்றி பாஸ்...
@K.s.s.Rajh
பல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளக்கூடயவாரு இருந்தது நன்றி பாஸ்//
நன்றி பாஸ்...
@M.R
விபரம் அறிந்தேன் நண்பரே
தங்கள் பதிவு எல்லாமே சுவாரஸ்யமாகத்தான் உள்ளது நண்பா//
நன்றி பாஸ்...
@suryajeeva
கடைசி பாகம் என்று குறிப்பிட மறந்து விட வேண்டாம், கடைசி பாகம் வெளியிடும் அன்று//
நன்றி பாஸ்...
அவ்ளோ ஆவலா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீஙகளோ..
@சி.பி.செந்தில்குமார்
தெரியாத வரலாற்று நிகழ்வுகள் தெரிந்து கொண்டோம்//
நன்றி பாஸ்...
@ஜ.ரா.ரமேஷ் பாபு
லெமூரியா பற்றிய தகவல்கள் அருமை நிரூ தொடரவும் வாழ்த்துக்கள்//
நன்றி பாஸ்...
@veedu
கண்ணீரும் ரத்தமும் கலந்த சரித்திரம்
தொடரட்டும் உங்கள் பனி...
வாசகனாய் மட்டுமில்லாமல்..
சகோதரனாய் நானும் உங்கள்
கூட பயணம் செய்கின்றேன்..//
நன்றி பாஸ்.....
@தமிழ்வாசி - Prakash
வரலாற்று தொடர் அருமை சகோ.. தொடருங்கள்.
தமிழ்மணம் 16... ஹி..ஹி.//
நன்றி பாஸ்..
@Mohamed Faaique
இதை சிங்களவரின் முகவாக்கை வைத்தே எண்ணியிருந்தேன். சிங்கள பாசைக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், அதில் ஏகப்பட்ட ஹிந்தி, பங்காளி மற்றூம் வட இந்திய வார்த்தைகள் காணப்படுகின்றது.//
நன்றி பாஸ்..
சிங்களவர்களின் வருகை பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும், அடுத்த பாகத்தில் சிங்களவர்களின் வருகையினையும் எழுதுகின்றேன் பாஸ்...
@"என் ராஜபாட்டை"- ராஜா
பல புதிய விஷயங்கள் .. நன்றி//
நன்றி பாஸ்...
@அம்பலத்தார்
எங்கள் வாழ்வின் ஆதாரங்களை அடுத்த சந்ததியினரிடம் எடுத்துச் செல்லும் இந்தத்தொடரை தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.//
நன்றி ஐயா.
@அம்பலத்தார்
ஒருவரது எழுத்தின் வலிமையும் கருத்தை எடுத்தாளும் திறனுமே அவரை மக்கள் மனங்களில் நிலைத்திருக்கவைக்கும். உங்களிடம் அந்த ஆளுமை இருக்கிறது. சஞ்சலங்களைவிட்டு உங்கள் பாணியில் தொடருங்கள்//
நன்றி ஐயா..
உங்களைப் போன்றோரின் ஆதரவு இருக்கும் வரை என்னால் முடிந்த வரை தொடரைச் சிறப்புற எழுதுகின்றேன்.
@Yoga.s.FR
வெள்ளி வணக்கம்! நல்ல தெளிவூட்டல் பதிவு!நான் வாக்களிப்பதில்லை,அதனால் ஒன்றும் மூழ்கி விடாது!ஏனையோருக்கும் இடமளிக்க வேண்டும் என்ற பெருந்தன்மைக்கு வணக்கங்கள்,வாழ்த்துக்கள்!தொடர்க...........!//
நன்றி ஐயா...
@Yoga.s.FR
பின்னூட்டங்கள் யாவும் வடிகட்டப்படுகின்றன!////கேரளாப் பக்கம் போயிடாதீங்க!//
ஹே...ஹே....
@சசிகுமார்
அப்பாடா பதிவை படிச்சவுடன் எங்கடா ஓட்டு போட முடியாதொன்னு நெனச்சேன் தமிழ்மனதுல 18 வது ஓட்டு என்னோடது.//
நன்றி பாஸ்...
@MANO நாஞ்சில் மனோ
லெமூரியா கண்டத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவேண்டுமானால், கன்னியாகுமரி மியூசியத்தில் நிரூபன் சொன்னதை போல பல ஆவணங்கள் அங்கே உள்ளது....!!!//
ஆம் அண்ணாச்சி.
நானும் அடுத்த வருடம் கன்னியாகுமரிப் பக்கம் போவதாக முடிவு செய்துள்ளேன், அப்போது இன்னும் அதிக தகவல்களைப் பெற்று வரலாற்றினைச் செழுமைப்படுத்தப் பார்க்கிறேன்.
@MANO நாஞ்சில் மனோ
சிங்களர்கள், கலிங்கத்து ராஜாவின் அடங்காத மகனை ஒரு கப்பலில் எத்தி விட்டு நாட்டை விட்டு ஓடுறான்னு விரட்டபட்டவன்னு புத்தகங்களில் படித்திருக்கிறேன்...!!!//
ஆமா பாஸ்...இதனை இன்னும் விரிவக எழுதுகிறேன்.
@MANO நாஞ்சில் மனோ
லெமூரியா பற்றி அருமையான தொகுப்பு, பல விவரங்கள் அறிந்து கொண்டேன்....!!!//
நன்றி அண்ணா.
@MANO நாஞ்சில் மனோ
பன்னிகுட்டி சொன்னா மாதிரி, லெமூரியா கண்டம் பற்றி விரிவான பதிவு ஒன்னு போடுங்கய்யா, இப்போ உள்ள பசங்களுக்கு அதைபற்றி ஒன்னுமே தெரியவில்லை என்பதே உண்மை...!!!//
கண்டிப்பாக லெமூரியா பற்றி விரிவான பதிவு ஒன்றினை எழுதுகிறேன்.
@அம்பாளடியாள்
அருமையான வரலாறுப் பதிவுத் தொடர் .இதில் மென்மேலும் அறியாத தகவல்களை அள்ளி வழங்க வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ....//
நன்றி அக்கா.
@செங்கோவி
தமிழ்மணம் பற்றிய உங்க்ள் முடிவு சரிதான்..
நிரூபனின் பதிவுகளில் ஈழம் பற்றிய அவர் எழுத்துகள் முக்கியமானவை(இந்தத் தொடர் உட்பட). எனவே நாமும் அவற்றுக்கு மட்டுமே அதிக வாக்குகளை அளித்து, மகுடத்தில் ஏற்றுவது, அவரிடம் இருந்து ஈழம் சார்ந்த மேலும் பல நல்ல படைப்புகள் வர வழிவகுக்கும்.
நிரூ சொன்னபின், ஈழம்சாராத பதிவுகளுக்கு ஓட்டு 18ஐ தாண்டிவிட்டால் நான் வாக்களிப்பதில்லை..மற்றவர்களும் அதையே செய்யுங்களேன்..அதுவே நிரூவின் விருப்பமும்.//
தங்களின் புரிந்துணர்விற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி பாஸ்.
@செங்கோவி
ஒவ்வொருவரும் தன் இன வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். நம் குழந்தைகளுக்கு அதை சொல்வது மிக மிக் அவசியம். அதுவே நமக்கு உந்துசக்தியாகி, நம்மை வழிநடத்தும்..//
நன்றி பாஸ்...
@செங்கோவி
பொதுவில் தொடர் எழுதுவதில் உள்ள சிக்கல், கமெண்ட்ஸ் தான்.
காட்டான் மாமா சொன்ன மாதிரி பின்னூட்டக்கருத்துகளை(என்னுடையதையும் சேர்த்துத் தான்) பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..நீங்கள் ஏற்கனவே திட்டமடி தொடருங்க.//
நன்றி பாஸ்...
@தனிமரம்
அரிய தகவல் அடங்கிய வாறு தொடர் வேகமாகச் செல்கின்றது பின் தொடர்கின்றேன்!
எனக்கும் குமரிக் கண்டம் பூம்புகார் பற்றி தெரிந்து கொள்ள ஆசை நேரம் தான் சிந்தனையை கட்டுப்படுத்துகின்றது!//
நன்றி பாஸ்...
@வைரை சதிஷ்
அருமையான தொகுப்பு.வறலாற்று பதிவு சூப்பர்.
உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் நண்பா//
நன்றி பாஸ்...
@shanmugavel
வழக்கம் போல! நன்று.//
நன்றி பாஸ்..
@ரெவெரி
18 க்கு மேல தமிழ்மணம் வேண்டாமா ...அப்ப...மைனஸ் வோட்டா தான் போடணும்...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ரெவெரி
லெமூரியா பற்றிய கருத்துக்கள் சிறப்பு...தொடருங்கள்...இதே வீரியத்தோடு...//
நன்றி பாஸ்..
@சென்னை பித்தன்
நல்ல தகவல்கள்.ஆராய்ச்சி பூர்வமான பதிவு.நன்றி.//
நன்றி ஐயா.
நிரூபன் said...
என் அம்மாவிடம் உங்களின் மரியாதை நிறைந்த கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.
நன்றி பாஸ்.
மிக்க நன்றி என்று சொல்லச் சொன்னா.//
உங்களுக்கு தாய் என்றால் எனக்கும் தாய் தானே... மகனுக்கு எதற்கு நன்றி... அவர்களது ஆசிர்வாதம் கிடைத்தால் சந்தோசம்... நன்றி நண்பா
உங்கள் எண்ணங்கள் நிறைறே வாழ்த்துக்கள்....சகோ...
Post a Comment