உறவுகளே, அண்மையில் இணையத்தில் வலம், வந்து கொண்டிருந்த போது எதேச்சையாக குட்டி ரேவதி அவர்களால் கூடு. தமிழ்ஸ்டூடியோ எனும் இணையத்தளத்தில் ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள் எனும் தொடரினைப் படிக்க நேர்ந்தது. இத் தொடரின் ஏழாவது பாகத்திலே ஈழத்துப் பெண் கவிஞராகிய ஆழியாளின் கவிதைகளையும், அவர் ஈழத்துக் கவிதை மரபின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்களையும் குட்டி ரேவதி விளக்கியிருந்தார்.
தமிழகத்து உறவுகளிடம் ஈழத்துக் கவிதை வளர்ச்சி பற்றிய ஒரு தவறான புரிந்துணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இக் கட்டுரையில் ஒரு சில விடயங்கள் இடம் பெற்றிருந்தன. சகோதரி குட்டி ரேவதி அவர்களால் எழுதப்பட்ட இத் தொடரில் ஆழியாளின் இரண்டு நூல்களில் வெளிவந்த கவிதைகளை அடிப்படையாக வைத்து, ஈழத்து கவிதை வரலாற்றில் ஆழியாளுக்கு முன்னர் தோன்றிய மறுமலர்ச்சிக் காலப் பெண் கவிஞர்களின் கவித்துவத் திறமைகள், அவர்களின் ஈழத்துக் கவிதை வளர்ச்சிக்கான பங்களிப்புக்கள் முதலியன மழுங்கடிக்கப்படும் வண்ணம் ஆழியாளை முன்னிறுத்திக் கட்டுரையாசிரியர் ஒரு சில கூற்றுக்களைப் பகிர்ந்திருந்தார்.
ஆழியாளைப் பற்றிய அறிமுகத்தோடு, ஆழியாளின் கவித்துவத்தினை திறனாய்வு செய்யும் நோக்கிலும், ஆழியாளை முதன்மைப்படுத்தி ஈழத்துப் பெண் கவிதை வளர்ச்சியினை, பெண்ணியல் வாதப் போக்கினை தமிழகத்து மேடைகளில் ஆய்விற்கு உட்படுத்தும் இச் சகோதரியின் முயற்சி பாராட்டத்தக்கது.
ஆனால் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில், ஆழியாளுக்கு முன்னர் தோன்றிய பெண் கவிஞர்கள் பற்றிய தகவல்களை விடுத்து ’’ஆழியாளை முதன்மைப்படுத்தி பெண்ணியல் வாதம், ஈழத்து கவித்துவ, மொழியியல் வளர்ச்சியில் ஆழியாளின் கவிதைகளினூடாக 1990களின் இறுதிப் பகுதியில் ஆழியாள் முதலிய(இங்கே கட்டுரையாசிரியர் ஆழியாளை முதன்மைப்படுத்துவதோடு, ஆழியாள் முதலிய கவிஞர்கள் எனும் கூற்றினை உட்புகுத்தியிருக்கிறார்) கவிஞர்கள் ஊடாக முதன்மைப்படுகிறது எனும் தொனிபடத் தனது கட்டுரையினைச் சகோதரி, எழுதியிருந்தார்.
இக் கட்டுரையினைப் படிக்க இங்கே செல்லவும்.
1990களின் இறுதிப் பகுதிக்கும், 1980களின் பிற்பகுதிக்கும் அல்லது 1990களின் முற்பகுதிக்கும் உள்ள வேறுபாட்டினை எண்ணிக்கை அடிப்படையில் அனைவருமே எளிதாக உணர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
1990களின் பிற்பகுதியில் ஆழியாளைத் தவிர்த்துப் பார்த்தால், ஈழத்தில் தோன்றிய ஏனைய பெண் கவிஞர்களின் கவிதைகளின் உள்ளடக்கம், பாடு பொருள் யாவும் போராட்டம் சார்ந்தே காணப்படுகின்றது. இவர்களில் யாருமே இடப்பெயர்வுகள், போராட்டப் பிரச்சாரம் முதலிய இன்ன பிற காரணிகளால், பெண்ணியல் வாதம் பற்றிய உட் கிடக்கைகளினைச் சார்ந்து தமது கவிதைகளை அமைக்கவில்லை.
ஈழத்துக் கவித்துவ வளர்ச்சியில் மொழியியல் ரீதியாக, பெண்ணியல் வாதம் 1980களினைத் தொடர்ந்து வேர் கொள்ளத் தொடங்குகிறது. 1990களிற்கு முற்பகுதியில், ஈழத்துக் கவித்துவ மரபில் பெண்களின் பங்கு எவ்வாறு இருந்தது, மொழியியல் வளர்ச்சி, பெண்ணியல் வாதக் கோட்பாடுகள் பற்றிய புரிதல்கள் எந் நிலையில் இருந்தன என்பதற்கு 1986ம் ஆண்டு ‘பெண்கள் ஆய்வு வட்ட வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள்’’ எனும் நூல் சான்றாக அமைந்து கொள்கிறது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்னூறுகளின் முற்பகுதியில் வெளிவந்த, அ. சங்கரி, சி.சிவரமணி சன்மார்க்கா, ரங்கா, மசூறா. ஏ. மஜீட், ஔவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி, கப்டன் வானதி(புலிகள் இயக்கத்தினைச் சேர்ந்த கவிஞர்) முதலிய கவிஞர்களின் கவிதைகளில் பாரம்பரிய ஆணாதிக்க மரபின் அடிப்படையில் நின்றும் விலகிய பார்வையில், புதிய கோணத்தில், பெண்களின் விடுதலையினையும், பெண்ணியல் வாதத்தினையும் முதன்மைப்படுத்தும் புரட்சிகரக் கருத்துக்கள் காணப்படுகின்றன.
அப்படியாயின் ஆழியாள் எப்போது வந்தார்? இக் காலத்திற்கு முன்னரா இல்லைப் பின்னரா?
இவ் இடத்தில் குட்டி ரேவதியிடம் ஒரு கேள்வி. இத்தகைய புரட்சிகரச் சிந்தனைகளை உடைய கவிஞர்களின் காலப் பகுதியினைத் தொடர்ந்து தானே ஆழியாள் 1990களின் பிற்பகுதியில் கவித்துவப் புரட்சி படைக்கத் தொடங்குகிறார் என்று கூறுகிறீர்கள். 1990களின் பிற்பகுதியில் ஆழியாளைத் தவிர்த்து பெயர் சொல்லுமளவிற்கு பெண்ணியல் வாதத்தினை ஈழத்தில் முன்னிறுத்திப் படைப்புக்களை வெளியிட்ட கவிஞர்கள் இல்லாத போது, எப்படி உங்கள் கட்டுரையில் ஆழியாள் முதலான கவிஞர்கள் முதன்மைப்படுத்தப்படுவார்கள்??
ஆக விரிவாகவும், விளக்கமாகவும், ஈழத்துக் கவிதை பற்றிய புரிதல்கள் ஏதுமின்றி, ஆழியாளின் கவிதைகள் வெளிவருவதற்கு முற்பட்ட காலப் பகுதிக்குரிய கவிஞர்கள் பற்றிய புரிதல்கள் ஏதுமின்றி உங்களின் இக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது எனும் எனது கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே?
இன்னும் விரிவாக, எளிய மொழி நடையில் சொல்வதாயின் 1990களின் முற் பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த கவிஞர்கள் கோடு போட்டார்கள். 1990களின் பிற் பகுதியில் வந்த ஆழியாள் ஈழத்துக் கவித்துவ பெண்ணியல் வாத மொழி வளர்ச்சியில் றோடு போட்டார்! இக் கூற்றினை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள் எனும் கட்டுரையின் ஏழாவது பாகத்தில் ‘’ஆழியாள் என் ஆதித் தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி’’
எனும் தலைப்பின் கீழ் இடம் பெறும் பதிவில் அவர் கூறிய முரண்பாடான, வரலாற்றுத் திரிபினை தமிழக இலக்கிய அறிஞர்களிடத்தே ஏற்படுத்தவல்ல, ஈழத்தின் ஏனைய படைப்பாளிகளின் திறமைகளினை மழுங்கடித்து, ஒரு நபரை முன்னிலைப்படுத்தக் கூடிய கூற்றுக்கள் இவை தான்!
’’பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். // (ஆழியாள் போன்றவர்களே காரணம்)
சகோதரி! 1990களின் பிற்பகுதியில் உருவான பெண்ணியல் வாதச் சிந்தனைகள் கொண்ட கவிதை வளர்ச்சிக்கு ஆதாரமாக ஆழியாளைத் தவிர்த்து, உங்களால் வேறு சில கவிஞர்களின் பெயர்களை முன் வைக்க முடியுமா?
இங்கே தொண்ணூறுகளின் நிறைவில் எனும் பொருள் பட இச் சகோதரி விபரித்திருக்கும் கூற்றினை ஈழத்தின் பாலர் வகுப்பு மாணவனே நன்றாகப் புரிந்து கொள்வான் என நினைக்கிறேன். இவ் இடத்தில் இவர் எடுத்தியம்பியிருக்கும் இக் கூற்றினூடாக ஏனைய கவிஞர்கள் மறைக்கப்பட்டு, ஆழியாள் முதன்மைப்படுத்தபடுகிறார் என்பதனை உணர்ந்தவனாய் நான் முன்வைத்த கருத்துக்கள் இவை தான்.
ஆழியாளுக்கு முன்னதாகவே,1986களின் இறுதிக் காலங்களில் சங்கரி எனும் பெண் கவிஞர் ஈழத்துப் பெண்ணியல் வாதக் கவிதை மொழி வளர்ச்சியில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருந்துள்ளார். ஆழியாள் சங்கரி, சிவரமணி முதலிய ஈழத்து பெண் படைப்பாளிகளைப் பின் தொடர்ந்து வந்தவர்.//
கப்டன் வானதி, சங்கரி, சிவரமணி முதலிய பெண்கள் 1990களிற்கு முற்பட்ட காலங்களிலே ஈழத்து பெண் கவிதை வளர்ச்சியின் முன்னோடிகளாக, பண்டைய நாகரிக ஆணாதிக்க கழுகுப் பிடியினுள் சிக்கியிருந்த சமூகத்தில் புரட்சிக் கருத்துக்களை, கவிதையின் போக்கில் பெண் தொடர்பான மையக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கி விட்டார்கள்.
ஆழியாளுக்கு முன்பதாகவே 1986களின் இறுதிக் காலங்களில் சங்கரி எனும் பெண் கவிஞர் ஈழத்துப் பெண்ணியல் வாதக் கவிதை மொழி வளர்ச்சியில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருந்துள்ளார். ’’ஆழியாள்; சங்கரி, சிவரமணி முதலிய ஈழத்து பெண் படைப்பாளிகளைப் பின் தொடர்ந்து வந்தவர். எனும் வகையில் நான் என் பின்னூட்டங்களை முன் வைத்திருந்தேன். என் கருத்துக்களைத் திசை திருப்பும் நோக்கில் கூடு- தமிழ் ஸ்டூடியோ எனும் தளத்தில்;
nirooban mudhalil kavithai enraal enna enru purindhuk kolla vendum. inge nootrukkum thonnoour per kavignargalthaan. avargalin serivaanvargal mattume inge padhiyappadugiraargal enru ninaikkiren. naan paartthavarai appadithaan.
அனுப்பியவர் Mugil on Wednesday, 30.03.11 @ 04:33am எனுன் தொனி பட ஒரு நண்பர் தனது கருத்துக்களை முன் வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் நோக்கில்;
சகோதரம், கவிதை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன்!!!
ஈழத்துக் கவிதை மொழி வளர்ச்சியில் ஆழியாள் முதன்மைப்படுத்தப்பட்ட காரணத்தினால் தான் நான் இங்கே ஒரு சில விடயங்களை முன்னுதாராணமாக கையாள வேண்டிய தேவை ஏற்பட்டது. இங்கே செறிவானவர்களை விடுத்து, ஆழியாளைப் பற்றிய குறிப்புக்களே முதன்மைப்படுத்தப்பட்ட காரணத்தால் நான் என் விளக்கங்களை முன் வைக்க வேண்டியிருந்தது. //
//கவிதை என்றால் என்ன என்று எனக்கு கற்பித்து, தன்னார்வ விளக்கங்கள் கொடுப்பதிலும் பார்க்க, இந்தப் பதிவின் ஊடாக கூறப்படும் கருத்துக்களால் மழுங்கடிக்கப்படும் ஈழத்தின் ஏனைய வாழ்ந்து முடித்த வரலாற்றில் பதியப்பட்ட கவிஞர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுவதனை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.//
என்று ஒரு பின்னூட்டத்தினை அனுப்பிய பின்னர், ஆழியாளின் கவிதை நூல்களுள் ஒன்றான ‘’உரத்துப்பேச’’ எனும் கவிதை நூலின் இறுதிப் பகுதியில் இடம் பெற்ற. மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும், எனும் தெ. மதுசூதனனின்’’விமர்சனப் பகுதியினூடாக ஒரு சில குறிப்புக்களை எடுத்து இந்தத் தளத்திற்கு எனது கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அனுப்பியிருந்தேன்.
இப்போ கவிதைச் செயற்பாட்டில் ஒரே வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்த போக்குகளுடள் புதுப் பிரக்ஞையுடன் பீறிட்டுக் கிழம்பும் பெண்களின் குரல்கள் எண்பதுகளின் பின்னர் அதிகமாகத் தமிழ்க் கவிதையில் மேற்கிளம்பின.
(இது ஆழியாளின் ’உரத்துப்பேச’நூல் பற்றிய விமர்சனத்தில் மதுசூதனன் அவர்களால் எழுதப்பட்ட கூற்றாகும். ஆழியாளின் நூலிலே மதுசூதனன் 1980களின் பிற்பகுதியினைச் சுட்டிக் காட்டும் போது, சகோதரி ரேவதி மட்டும் எவ்வாறு 1990களின் பிற்பகுதியில் ஈழத்துக் கவிதை மொழியியல் வளர்ச்சியில் பெண்ணியல் வாதக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டது என்று ஆழியாளின் நூலினை அடிப்படையாக வைத்துக் கூறுவது சரியாகும் அல்லது சாத்தியமாகும்?( நான் அனுப்பியஇந்தப் பின்னூட்டமும் கூடு இணையத்தளத்தில் வெளியிடப்படாது, வெட்டப்பட்டு, வேறு கருத்துக்கள் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது)
ஆனால் வேர்ட்பிரஷ் தளங்களிலும்(Word press) புளொக்கர் அல்லாத ஏனைய இணையத் தளங்களில் பின்னூட்டங்களை மாற்றி, வெட்டித் தமது கருத்துக்களை, நானே சொல்வது போல வெளியிட்டுத் தமது பிழைகளை நியாயப்படுத்த முனைவார்கள் என்பதனை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
இனிச் சகோதரி குட்டி ரேவதியிடம் நான் இன்னும் சில கேள்விகளைக் கேட்க விரும்பும் கேள்விகள்.
*உங்களது கட்டுரைகளைப் படித்து, நான் விளக்கம் கோரி என் தரப்புக் கேள்விகளை வைத்து இற்றோடு மூன்று நாட்களாகியும் உங்களால் ஏன் எனக்குச் சரியான விளக்கத்தை தர முடியவில்லை?
*உங்களிடம் விளக்கம் கோரி என் தரப்பு நியாயத்தை ஆதாரபூர்வமாக்க நான் அனுப்பிய பின்னூட்டங்கள் யாவும் திருத்தம் செய்யப்பட்டு, வெட்டப்பட்டு, இணையத்தள நிர்வாகிகளால் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படும் வரைக்கும் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
இதன் உள்ளார்ந்தம், நீங்கள் ஆழியாளை முதன்மைப்படுத்தி 1990களின் பிற்பகுதியில் ஈழத்துக் கவிதை மரபில் மாற்றங்கள் ஏற்பட்டன, எனும் கருத்தினை/உங்களின் கருத்துக்களை முன் வைக்கலாம், அதனை நிராகரித்து, 1990களின் முற்பகுயில் இருந்தே ஈழத்துக்கவிதை மரபில் ஆதாரபூர்வமாக்கிப் பின்னூட்டங்களை அனுப்பினால் அவை வெட்டி, மாற்றம் செய்யப்பட்டு, உங்களுக்கு ஆதரவான கருத்துக்களாக, உங்கள் கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் வெளியிடப் படுகின்றனவோ?
*பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம் எனக் கூறும் நீங்கள் 1986ம் ஆண்டளவில் பெண்கள் ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் எனும் நூலினையோ, அதனுடன் சார்ந்த அக் காலப் பகுதிக்குரிய ஏனைய பெண் கவிஞர்களின் கவித்துவத் திறனையோ முதன்மைப்படுத்தாது, பிறகாலத்தில் 1990களின் நிறைவில் தான் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் பெண்ணியல் வாதம், ஆழியாளினூடாகவே முதன்மைப் பட்டது எனக் கூறுவது எவ் வகையில் நியாயமாகும்?
இக் கேள்விகளுக்குச் சாதகமான பதில்கள் அல்லது விளக்கங்கள் கிடைக்கும் எனும் அடிப்படையில் இப் பதிவினைச் சகோதரி ரேவதியிடமும், ஏனைய வாசக நெஞ்சங்களிடமும் சமர்பிக்கிறேன்.
இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், குட்டி ரேவதியின் கட்டுரையில் காணப்படும் ஒரு சில குறிப்புக்கள், தவறுகளிற்கு விளக்கங்களைக் கேட்டு நிற்பதேயாகும். பதிவர்கள், வாசகர்கள் இப் பதிவின் உள்ளடகத்தினை உணர்ந்தவர்களாய் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில் இப் பதிவினை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
|
72 Comments:
வணக்கம் சகோதரம், ஈழத்துப் பெண் கவிதையின் வளர்ச்சிப் போக்குப் பற்றிய அலசல் தமிழக்த்து மேடைகளில் இடம் பெற்றிருக்கிறது எனும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
//‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். //
இக் கூற்றினை நான் நிராகரிக்கிறேன். ஆழியாளுக்கு முன்பதாகவே 1986களின் இறுதிக் காலங்களில் சங்கரி எனும் பெண் கவிஞர் ஈழத்துப் பெண்ணியக் கவிதை மொழி வளர்ச்சியில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருந்துள்ளார். ஆழியாள் சங்கரி, சிவரமணி முதலிய ஈழத்து பெண் படைப்பாளிகளைப் பின் தொடர்ந்து வந்தவர்.
இதற்கு எடுத்துக் காட்டாக 1987 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” எனும் தொகுப்பில் “அ.சங்கரி” முதலான பல பெண் கவிஞர்களின் தொகுப்புக்கள் இடம் பெற்றுள்ளன,
அவர்கள் பார்வையில்
எனக்கு
முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவுமில்லை.
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமையாகும்.
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கு
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரை
இதுவே வழக்கம்.
இது சங்கரியின் கவிதை.
அனுப்பியவர் நிரூபன் on Tuesday, 29.03.11 @ 15:24pm
இது கூடு தமிழ்ஸ்டூடியோ இணையத்தில் வெளியான சகோதரி ரேவதியின் கட்டுரைக்கு நான் அனுப்பிய முதல் பின்னூட்டம்.
சகோதரம், இப் படைப்பினை, அல்லது இவ் ஆய்வினை உற்று நோக்குகையில் ஆழியாளின் பின்னர் தான் ஈழத்துப் பெண் கவிதை வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டது என்கின்ற ஒரு தவறான புரிதலை படிப்பவர்களுக்கு ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
கப்டன் வானதி, சங்கரி, சிவரமணி முதலிய பெண்கள் 1990களிற்கு முற்பட்ட காலங்களிலே ஈழத்து பெண் கவிதை வளர்ச்சியின் முன்னோடிகளாக, பண்டைய நாகரிக ஆணாதிக்க கழுகுப் பிடியினுள் சிக்கியிருந்த சமூகத்தில் புரட்சிக் கருத்துக்களை, கவிதையின் போக்கில் பெண் தொடர்பான மையக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கி விட்டார்கள்.
http://www.noolaham.net/project/01/16/16.htm
இதோ இதில் வருகின்ற இவர்களின் கவிதைகளே இதற்கு வெள்ளிடை மலையாக இருக்கின்றன.
ஈழத்துக் கவிதையில் சங்கரி, சிவரமணி, ஒளவை, சன்மார்க்கா, கப்டன் வானதி(போராளிக் கவிஞர்) ஆகியோருக்குப் பின்னர் தான் ஆழியாள் காலடியெடுத்து வைக்கிறார் என்பதனை நினைவூட்ட விரும்புகிறேன் சகோதரம்.
http://www.noolaham.net/project/01/16/16.htm
அனுப்பியவர் நிரூபன் on Tuesday, 29.03.11 @ 15:38pm
நிரூபன், தவறாக புரிந்துக் கொண்டு விட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆழியாளுக்கு முன்னரே நிறைய கவிஞர்கள் அங்கே மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டதும், கவி ஆளுமைகளும் இருந்துள்ளனர் தான். ஆனால் அவர்களில் ஆழியாளும் ஒருவர் என்பது தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழியாலஈ முதன்மைப் படுத்தவில்லை. நன்றி. சிவசங்கரன்
அனுப்பியவர் சிவசங்கரன் on Tuesday, 29.03.11 @ 22:38pm
nirooban mudhalil kavithai enraal enna enru purindhuk kolla vendum. inge nootrukkum thonnoour per kavignargalthaan. avargalin serivaanvargal mattume inge padhiyappadugiraargal enru ninaikkiren. naan paartthavarai appadithaan.
அனுப்பியவர் Mugil on Wednesday, 30.03.11 @ 04:33am
nirooban mudhalil kavithai enraal enna enru purindhuk kolla vendum. inge nootrukkum thonnoour per kavignargalthaan. avargalin serivaanvargal mattume inge padhiyappadugiraargal enru ninaikkiren. naan paartthavarai appadithஅஅன்.//
சகோதரம், கவிதை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன்!!!
ஈழத்துக் கவிதை மொழி வளர்ச்சியில் ஆழியாள் முதன்மைப்படுத்தப்பட்ட காரணத்தினால் தான் நான் இங்கே ஒரு சில விடயங்களை முன்னுதாராணமாக கையாள வேண்டிய தேவை ஏற்பட்டது. இங்கே செறிவானவர்களை விடுத்து, ஆழியாளைப் பற்றிய குறிப்புக்களே முதன்மைப்படுத்தப்பட்ட காரணத்தால் நான் என் விளக்கங்களை முன் வைக்க வேண்டியிருந்தது.
கவிதை என்றால் என்ன என்று எனக்கு கற்பித்து, தன்னார்வ விளக்கங்கள் கொடுப்பதிலும் பார்க்க, இந்தப் பதிவின் ஊடாக கூறப்படும் கருத்துக்களால் மழுங்கடிக்கப்படும் ஈழத்தின் ஏனைய வாழ்ந்து முடித்த வரலாற்றில் பதியப்பட்ட கவிஞர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுவதனை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 15:51pm
பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். //
ஈழத்தில் பேராசிரியர் விசாகரூபனினால் வெளியிடப்பட்ட ஈழத்து கவிதை மரபு பற்றிய நூலும் இதற்குச் சான்றாக அமையும். அதிலும் ஆழியாளுக்கு முன்பதாக, காலதி காலமாக இருந்து வந்த கவிதை மரபில் புரட்சி செய்த பெண்களாக சங்கரி, கப்டன் வானதி(புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர், சிவரமணி) முதலிய பல கவிஞர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 15:53pm
/‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். //
உறவுகளே, இங்கே கட்டுரையாசிரியர் முன்வைத்த, அல்லது அவரால் கோடிட்டுக் காட்டப்பட்ட விடயங்களை வைத்தே நான் எனது கருத்துக்களை முன் வைத்திருந்தேன். இஙே தொண்ணூறுகளின் நிறைவில்(தொண்னணூறுகளின் முடிவில்) மொழி வழியாகச் சாத்தியப்பட'' எனும் தவறான புரிதல் தமிழக உறவுகளிடம் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் நான் எனது கருத்துக்களை முன் வைத்திருந்தேன். ஒரு சில உதாரணங்களை சுட்டியிருந்தேன்.
ஈழத்து கவிதை மரபு பற்றி ஆய்வு செய்து தனது பல்கலைக் கழக பட்டத்தினைப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளர் விசாகரூபனினால் வெளியிடப்பட்ட ஈழத்துக் கவிஞர்களினைப் பற்றிய ஆய்வு நூலே இதற்குச் சான்றாக அமையும்.
பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனின் ஈழத்து கவிதை வளர்ச்சி பற்றிய நூலில் ஈழத்தின் கவிதை வளர்ச்சி பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் ஆரயப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அந் நூல் கிடைக்கும் என நினைக்கிறேன்,
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 16:15pm
//‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். //
//நிரூபன், தவறாக புரிந்துக் கொண்டு விட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆழியாளுக்கு முன்னரே நிறைய கவிஞர்கள் அங்கே மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டதும், கவி ஆளுமைகளும் இருந்துள்ளனர் தான். ஆனால் அவர்களில் ஆழியாளும் ஒருவர் என்பது தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழியாலஈ முதன்மைப் படுத்தவில்லை. நன்றி. சிவசங்கரன்//
இங்கே முதலாவதாக மேற்கோளிடப்பட்டிருப்பது கட்டுரையாசிரியரின் கூற்று.
இரண்டாவது சிவசங்கரன் எனும் சகோதரரின் கூற்று.
நான் கூற வரும் விடயம்,1990களின் நிறைவில் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் என்பதனூடாக ஆழியாள் முதன்மைப்படுத்தப்பட்டார் என்பதனை நிராகரிக்கிறேன் என்பதேயாகும். இதனை தெளிவான தமிழில் தான் கூறுகிறேன்.
ஆழியாள் முதலானவர்கள் என்று கூறும் கட்டுரையாசிரியர் ஆழியாழின் நூலின் இறுதிப் பகுதியில் உள்ள (இறுதியாக வெளி வந்த பதிப்பில்)
‘இறுதியில் மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும் என்ற தெ.மதுசூதனனின் கட்டுரையினைப் படிக்கத் தவறி விட்டார் என்றே கருதுகிறேன்.
இக் கட்டுரையினைப் படித்திருந்தால் ஆழியால் முதலான கவிஞர்கள் சாத்தியமானார்கள் என்ற கூற்று வந்திருக்காது..
தமிழக உறவுகளிடம் ஈழத்து கவிதை வளர்ச்சி, பெண் கவிஞர்களின் பங்கு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படக் கூடாது என்பதற்காக தான் தவறுகளைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதற்காக ஒரு நண்பர் வந்து கவிதை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும் என பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஓர் இடையீடு:
மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும்
தெ.மதுசூதனன்
விடியலில்
கருக்கல் கலைகிற பொழுதில்
எனக்குக் கிடைத்த
தற்காலிக அமைதியில்
நான் உறங்கும் போது,
ஒரு முரட்டுத் தனமான
கதவுத் தட்டலுக்குச் செவிகள்
விழிக்கும்
ஊர்வசி -
நாம் முன்னர் போல் இல்லை. பல்வேறு புதிய பிரச்சனைப் பாடுகளின் மத்தியில் கேள்விமேல் கேள்விகள் மேற்கிளம்பிய வண்ணம் நாம் நமக்குள் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையின் பல்வேறு பரிமாணத் தன்மைகள் துலங்கலாகத் தெரிவதற்கு முன்னே அல்லது கண்டு பிடிப்பதற்கு முன்னே நம்மை மிக மோசமான ஒடுக்குமுறைக் கரங்கள் அழுத்திக் கொண்டிருக்கின்றன. நமது வாழ்க்கை நம்மிடமிருந்து பறிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. நமது அடையாளம் சரி பிழைக்கு அப்பால் அழித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம்.
நாம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது இருப்பின் அர்த்தம் தேடிய ~உயிர்ப்பு’ சதாகாலமும் தனக்குள்ளும் தனக்கு அப்பாலும் முரண்டு களைத்துச் சோர்ந்து, தனது அறிவுச் சேகரப் பிடிமானத்தில் தட்டுத்தடுமாறி நிலைகுலைந்து தொப்பென வீழ்தலும் வீழ்ந்த மறுகணம் நிமிர்தலும் என ஒரு சுழற்சிக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றோம்.
விடுதலை, இலட்சியம், கொள்கை, புரட்சி என யாவும் மனித விடுதலை, மனித வாழ்கை இவற்றின் அடியொற்றி யாவற்றையும் புரட்டிப் போட்டுப்
பார்க்க வேண்டிய நிலைமைக்குள் வைக்கப் பட்டுள்ளோம். விடுதலையின் விரிதளங்கள் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்றைய நிலையில் தமிழ் அடையாளம் என்பது ஒரு சமூக முழு உண்மை. இதுவும் குறிப்பான அரசியல் விளைவுகளுக்குரியது. ~தமிழர்’ எனும் ஒரே ஒரு தகுதிப்பாட்டின் விளைவாகவே, அதிகத் துன்பங்களைச் சுமக்க வேண்டியவர்களாகிறோம். இதனால் ஈழத்தில் தமிழ் அடையாளம் ~தமிழ்பேசும் மக்கள்’ எனும் அடை மொழியுடன் கூடிய அரசியல் கருத்தாக்கமாகவும் வளர்ந்துள்ளது.
ஆக தமிழர் எனும் அடையாளம் எம்மீது திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. நாமும் அதனை விடமுடியாது பிணைக்கப்பட்டுள்ளோம். ஆனால் அதற்காச் சாராம்சமான பண்புகளுடன் மூடிய முழு அடையாளங்களைக் கட்டமுடியாது. இங்கே நாம் எமது விமரிசனங்கள முன்வைத்தேயாக வேண்டும்.
நாம் மாற்றிக் கொள்ளத்தக்க பன்மைத்துவ அடையாளங்களை வலியுறுத்தும்வேளை, சில அடையாளங்கள் குறித்த அரசியல் முக்கியத்துவமும் உண்டு என்பதையும் மறுத்துவிடக் கூடாது. துமிழராக இருப்பவருக்கு வேறு அடையாளங்களும் சாத்தியம். தமிழர் என்பதற்கு எந்தளவு அரசியல் முக்கியத்துவம் உண்டோ, அந்வளவிற்கு சூழலைப் பொறுத்து சில சந்தர்ப்பங்களில் கூடுதலாகவும் கூட, பிற பண்பாட்டு அடையாளங்களுக்கும் அரசியல் முக்கியத்துவம் இருக்கும்.
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 16:23pm
ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபின் தனித்துவம், தொடர்ச்சி அதன் இன்றைய புதிய பரிமாணங்கள் யாவும் அனைத்துலகத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் புதிய பரிணாமத்தை ஈட்டியுள்ளன.
எத்தகைய நெருக்கடிகள், இன்னல்கள், வாழ்க்கை முறைகள் யாவற்றுக்குள்ளும் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம். வாழ்வின் சகல பரிநாமங்களினூடு சந்திக்கும் முரண்களையும் அவரவர்தம் இயல்புக்கேற்ப முகங் கொள்கிறோம். சிலர் தம் அனுபத்தளத்திற்கும் அப்பால் சென்று, தமது அறிவுச் சேகரத் தீவிரத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதன் நிமிர்வில் சவால்கள எதிர் கொள்கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராகத் தேசிய விடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுகையில் அக்கிளர்ச்சி தேசத்தின் பல்வேறு அம்சஙளையும் தழுவியாதாகவே இருக்கும். நாமும் இத்தகையதொரு வரலாற்றுச் சூழமைவிலேயே உள்ளோம்.
இதனால் தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் முக்கியமான தளமாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் உருவான எழுத்துகள் ~அரசியல் கவிதைகள்’ என அடையாளம் காணும் விதத்தில் அமைந்தன. குவிதைச் செயற்பாட்டில் புதிய விழப்புணர்வுடன் ~அரசியல் கவிதைகள்’ தோற்றம் பெற்றன. இவை ஈழத்துதுத் தமிழ்க் கவிதையின் சமகால அரசியல் முக்கியத்துவம் உள்ள கவிதைகளாகவே பிரிநிலைப்படுத்திப் பார்க்கும் தேவையை இயல்பாக்கிக் கொண்டன.
இப்போ கவிதைச் செயற்பாட்டில் ஒரே வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்த போக்குகளுடள் புதுப் பிரக்ஞையுடன் பீறிட்டுக் கிழம்பும் பெண்களின் குரல்கள் எண்பதுகளின் பின்னர் அதிகமாகத் தமிழ்க் கவிதையில் மேற்கிளம்பின.
தமிழ்த் தேசியப் போராட்டம் பல்வேறு முரண்களைத் தன்னகத்தே கொண்டு வந்தாலும் தமக்குள் பல்வேறு முரண்களைத் தன்னகத்தே கொண்டு வந்தாலும் தமக்குள் பல்வேறு பரிமாணங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் உள்ளது. இதனால் இக்காலகட்ட கவிஞர்கள் யாவரும் ஒரே வார்ப்பில் ஒற்றைக்குரலில் மட்டும் ஒலிப்பர்கள் அல்ல. அவர்களும் பல்வேறு குரல்களில் தமது கவிதை கவிதையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அரசியல் கவிதை, போராட்டக் கவிதை இன்னும் விரிந்த தளங்களில் நீட்சி கொள்கிறது.
¦¦¦
¦¦
என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல்
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை.
- சிவரமணி -
எண்பதுகளின் பின்னர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் முனைப்பும் அதனால் உருவான விழிப்பும் பிரக்ஞையும் கவனிப்புக்குரியது. இதன் முக்கியத் தளமாற்றம் பெண்கள் அரசியல் ஈடுபாட்டிலும் இலக்கிய வெளிப்பாட்டிலும் நிகழ்ந்தது.
தேசிய விடுதலை இயக்கங்களில் பெண்கள் அதிகமாகத் தங்களை இனைக்கத் தொடங்கினர். தேசிய விடுதலையின் விரித்தளச் சிந்தனை பன்முகப்பட்டதாயிற்று. சாதியம், பால்நிலை கடந்த விடுதலைக்கான வித்துக்கள் மேற்கிளம்பின. பல்வேறு பெண் அமைப்புகள் தோற்றம் பெற்றன.
தேசிய விடுதைலைப் போராட்டம் குறித்த அரசியல் கோட்பாட்டு ரீதியான சிந்தனைகள் தாங்கிய பத்திரிகைள், சஞ்சிகைள் வெளிப்பட்டன. பெண்களுக்கென்று தனித்த இதழ்கள’ வெளி வந்தன. கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நாடகம் என கலை இலக்கியத்தளங்களில் பெண்கள் அதிக நாட்டம் கொண்டு ஈடுபடத் தொடங்கினர். வாசிப்பும் எழுத்தும் (பெண்கள் சார்ந்த) சமூகச் செயற்பாட்டு ரீதியிலும் அதிகம் வெளிப்படத் தொடங்கின.
இப்பின்புலத்தில் தான் 1986களில் பெண்கள் ஆய்வு வட்டம் ~சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுப்பின் வருகை, பெண் எழுத்தாளர்களின் தனித்துவத்திறன் வெளிப்பாதும் போக்கையும் பெண்மொழி சார்ந்த படைப்புகளின் வருகையையும் தமிழுக்கு வழங்கிச் செல்லும் தேவையையும் உணர்த்திற்று.
~சொல்லாத சேதிகள்’ வெளிப்பட்ட காலத்தின் பின்னர் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பல்வேறு தளமாற்றங்கள் உருவாயின. அவற்றினூடும் பெண்கள் எவ்வாறு அவற்றை முகங் கொடுத்துள்ளனர் என்பதற்கு இக்காலத்தின் பின்னர் வந்த கவிதைகளே சாட்சி. இது இத்துடன் நிற்கவில்லை. இன்னும் பல்வேறு புதிய புதிய பெண் எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
இந்த வகையில் தொன்னூறுகளில் புதிய பெண் எழுத்தாளார்கள் பலர் தோற்றம் கொண்டனர். இவர்களது கவிதை வெளிப்பாடடுப் பாங்கும் கவிதையின் மொழி ஆக்கத் தேர்வும் புதிதாக அமைந்தன. பெண்ணிலைவாதம் குறித்த சிந்னைத் தெளிவும் கோட்பாட்டுப் புரிதலும் வாய்க்கப்பெற்ற காலகட்டத்தில் இவர்களது எழுத்துக்கள் அமைந்தமை தனிச்சிறப்பு.
இன்றைய சமூகம் என்பது ஆணாதிக்கச் சமூகமே என்பது வெளிப்படை. இவ்வகையில் இந்த ஆணாதிக்கச் சமூகத்தினுடைய யதார்த்த நிலை, நடைமுறை ஆகியவை மொழியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கூட இதன்வழியே உற்பத்தி செய்கின்றன. இச் சொற்களும் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கூட இதன் வழியே உற்பத்தி செய்கின்றன. இச் சொற்றொடர்களும் அடங்கிய மொழியானது பால்வாதத்தை வெளிப்பாட்டுத்துவதாகவும் அதனை நிலைநிறுத்தும் சாதனமாகவும் அமைகிறது.
இது மாத்திரமன்றி இன்றைய ஆணாதிக்கம், தந்தை வழிச் சமூகத்தின் மொழியின் இலக்கணங்கள், சமூகத்தின் மொழியின் இலக்கணங்கள், சமூகத்தில் அதிகாரம் பெற்றிருந்த ஆண்களாலேயே உருவாக்கப்பட்டிருந்தன. மொழி பற்றிய சிந்தனைகள் பேரகராதிகள், சொற்கழஞ்சியங்கள் யாவும் அதிகாரம் பெற்றிருந்தோராலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடை பார்வையும் நோக்கும் கிரகிப்பும் புரிதலுமே மொழியில் முதலிடம் பெற்றன. இவ்வகையில் ஆண் நிலைப்பட்ட ஒன்றாகவே மொழி உருவாகி வளர்ந்துள்ளது. அவ்வாறே அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 16:24pm
இப்பின்புலத்தில் தான் 1986களில் பெண்கள் ஆய்வு வட்டம் ~சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுப்பின் வருகை, பெண் எழுத்தாளர்களின் தனித்துவத்திறன் வெளிப்பாதும் போக்கையும் பெண்மொழி சார்ந்த படைப்புகளின் வருகையையும் தமிழுக்கு வழங்கிச் செல்லும் தேவையையும் உணர்த்திற்று.
~சொல்லாத சேதிகள்’ வெளிப்பட்ட காலத்தின் பின்னர் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பல்வேறு தளமாற்றங்கள் உருவாயின. அவற்றினூடும் பெண்கள் எவ்வாறு அவற்றை முகங் கொடுத்துள்ளனர் என்பதற்கு இக்காலத்தின் பின்னர் வந்த கவிதைகளே சாட்சி. இது இத்துடன் நிற்கவில்லை. இன்னும் பல்வேறு புதிய புதிய பெண் எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
இந்த வகையில் தொன்னூறுகளில் புதிய பெண் எழுத்தாளார்கள் பலர் தோற்றம் கொண்டனர். இவர்களது கவிதை வெளிப்பாடடுப் பாங்கும் கவிதையின் மொழி ஆக்கத் தேர்வும் புதிதாக அமைந்தன. பெண்ணிலைவாதம் குறித்த சிந்னைத் தெளிவும் கோட்பாட்டுப் புரிதலும் வாய்க்கப்பெற்ற காலகட்டத்தில் இவர்களது எழுத்துக்கள் அமைந்தமை தனிச்சிறப்பு.
(இது ஆழியாளின் உரத்துப் பேச நூலின் இறுதியில் உள்ள
ஓர் இடையீடு:
மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும்
எனும் பகுதியில் இருக்கும் விடயங்கள்.
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 16:26pm
இறுதியாக ஒரே ஒரு சிறிய உதாரணத்தை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்.
தமிகத் தமிழ்ச் சினிமாவில் வைரமுத்து தான் பல புரட்சிகளுக்கு காரணமாக அமைந்தார்!! எனும் கூற்றின் அடிப்படையில் நான் ஒரு கட்டுரையினை வரைந்தால் அது உங்களால் எப்படி நோக்கப்படும்.
வைரமுத்திவின் பின்னால் ஏனைய கண்ணதாசன், வாலி. பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முதலிய பல கவிஞர்களின் பங்களிப்புக்ககள் மறைக்கப்படுகின்றன அல்லது மழுங்கடிக்கப்படுகின்றன. இல்லையா?
அதோ கோணத்தில் தான் இங்கே ஆழியாளின் ஊடாக ஆழியாளை இம் மரபினுள் உட் செலுத்திய, ஆழியாளின் எழுத்துக்கள் இந் நிலைக்கு வர காரணமாக இருந்த ஏனைய கவிஞர்கள்(1990களிற்கு முற்பட்ட காலப் பகுதியினைச் சேர்ந்த பெண் கவிஞர்கள்) பற்றிய புரிதல்கள் இல்லாது, ஆழியாள் மட்டும் ஈழத்து கவிதை மொழி வளர்ச்சிக்குப் பாடு பட்டார், காரணமாக அமைந்தார் எனும் வகையில் கட்டுரை வரையப்பட்டிருக்கிறது எனறே கூறலாம்.
அனுப்பியவர் நிரூபன் on Thursday, 31.03.11 @ 16:37pm
நண்பர் நிரூபன் அவர்களுக்கு, குட்டி ரேவதி இங்கே நல்ல கவிதைகளை எழுதிய கவிஞர்களைதான் அறிமுகம் செய்துக் கொண்டு இருக்கிறார். விட்டால் நீங்கள், வைரமுத்தும், ப. விஜய், தாமரை எல்லோரையும் பற்றி எழுத சொல்லுவீர்கள் போல. கவிதை என்பது அதன் உச்சம் தொட வேண்டும். அவனே கவிஞன். புரிந்துக் கொண்டு பேசுங்கள்.
அனுப்பியவர் பனிமலர் on Thursday, 31.03.11 @ 22:55pm//
கூடு இணையத்தளத்தில் என் உதாரணக் கருத்தினைக் கூடச் சரியாகப் புரிந்து கொண்டு வாசகர்களால் கருத்துக்களைப் பகிர முடியவில்லையே எனும் போது வேதனையாக இருக்கிறது.
இந்த நாட்டில் ஒன்றும் தெரியாதவன் அறிவாளி என்பது போல் உள்ளது உங்கள் கருத்து நிரூபன். எல்லா பெண் கவிஞர்களையும் இங்கே தொகுக்க முடியாது என்று நினைக்கிறேன். அல்லது பின் பகுதியில் தொகுக்கலாம். குட்டி ரேவதி வைத்திருக்கும் தலைப்பைப் பாருங்கள். அதுவே உங்களுக்கு உண்மையை விளக்கும். நீங்கள் சொன்ன கவிஞர்கள் பின்னர் வரலாம், வராமலும் போகலாம்.
அனுப்பியவர் முத்து ரமணி on Thursday, 31.03.11 @ 23:23pm//
இது சகோதரி ரேவதியின் கருத்தினை வலுச் சேர்க்கும் வகையில் முத்து ரமணி எனும் இன்னொரு சகோதரி அனுப்பிய பின்னூட்டம். எல்லாப் பெண் கவிஞர்களையும் தொகுக்கும் படி நான் எங்கேயாவது கேட்டேனா? இல்லை ஆழியாளை முன்னிறுத்தும் கூற்றுக்களின் நியாயத்தன்மையினைப் பற்றிய எதிர்கருத்துக்களை நான் முன் வைத்தேனா? வாசக நெஞ்சங்களே! இதற்கான பதில் உங்களின் கைகளிற்கு விடப்படுகிறது.
வணக்கம் நிரூபன்.
நீங்கள் குறிப்பிடும் ஈழத்துப் பெண் கவிஞர்கள் யாரையும் (ஆழியாள் உட்பட) இதுவரை வாசித்தது இல்லை என்பதை மிகுந்த வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறேன். உடனடியாக வாசிக்க வேண்டும். தமிழகத்தில் அவை எங்கு கிடைக்கும்.
////இவர்களில் யாருமே இடப்பெயர்வுகள், போராட்டப் பிரச்சாரம் முதலிய இன்ன பிற காரணிகளால், பெண்ணியல் வாதம் பற்றிய உட் கிடக்கைகளினைச் சார்ந்து தமது கவிதைகளை அமைக்கவில்லை. ////
பல விடயம் மறைந்திருக்கிறது.. பல பெண் கவிஞர்கள் வளர்ச்சி மழுங்கடிக்கப்படதால் காணமல் போயும் இருக்கிறார்கள்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
கண்ணை கட்டி COTல விட்டது போல் இருக்கு...
சகோதரர் நிரூபன் பஜ்ஜி கொடுக்கபடாது என்று சொன்னமையால் வெறும் கருத்துக்கு மட்டும் வந்திருக்கிறேன்.. என்ன எழுதியிருக்கீங்க.. இன்னைக்கு எப்படி பொழுது போகும்னு பாத்தேன்.. உங்க பதிவ படிச்சா போயிடும் போலிருக்கு.. படிக்கிறன்..
ஓ.. அவரா நீங்க.? பதிவுலக சர்ச்சைகுள்ள சேந்துட்டீங்க போல..
அத விடுங்க.. இது ஒண்ணுத்துக்கும் உதவாத மேட்டரு.. நண்பர் சிவசங்கரின் வாக்கையே நானும் மொழிகிறேன்..
ஆழியாளை முதன்மைபடுத்தவில்லை.. அவரை போன்று என்று சொல்கிறார்.. ஆழியாளும் சங்கரி,சிவரமணி பின்பற்றியவர் தானே.! அப்படியானால் ஆழியாளும் சங்கரி,சிவரமணி வழி வந்தவர் தானே.!! அதனால் குட்டி ரேவதி சொன்னது சரிபோல தான் தெரிகிறது.. நீங்கள் பார்த்த கோணம் வேறு அதனால் அது தவறாக உங்களுக்கு தெரிகிறது..
இதில் கவிஞர்களின் பங்களிப்பை மங்கடிப்பதாக தெரியவில்லை.. இப்பொழுது நான் கிரிக்கெட்டை பற்றி பதிவு போட்டால் சச்சினை ஏத்தி தான் பேசுவேன்.. அவர் தான் சிறந்தவர் என்பேன்.. ஆனால் அவருக்கு முன்னரே ப்ராட்மேன் ஒரு சிறந்த வீரர் அல்லவா.? சச்சின் அவுட் கொடுத்ததும் வெளியேறும் பண்பை புகழ்வேன்.. ஆனால் கில்க்றிஸ்ட் இவருக்கு முன்னரே இப்படி விளையாண்டதை மறுக்க முடியாது.. இருப்பினும் நான் எப்போதும் சச்சினை தான் ஏத்தி பேசுவேன்..
புரிந்துகொள்ளுங்கள்.. ஒவ்வொரு மனிதருக்கும் கண்ணோட்டம் வேறுபடும்.. நான் இதுவரை குட்டி ரேவதியின் பதிப்புகளை படித்ததில்லை.. அதனால் என்னை அவரது சப்போர்ட்டர் என நினைத்திடவேண்டாம்.. எது சரி என பட்டதோ அதை சொல்லியிருக்கிறேன்..
எனினும் கவி உலகம் மீது தங்களின் பற்றையும் ஆர்வத்தையும் மதிக்கிறேன்..
கோபம் நியாயமானது.!! ஆனால் தேவையற்றது..
தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்..
i am very sorry! only votes today! ( heavy works )
நிரூபன்...மன எண்ணங்கள்தான் எழுத்தாகிறது.அவரவர் கருத்தும் எண்ணங்களும் அவர்களுச் சரியே.அதோடு இப்படியானவர்கள் கர்வமான கருத்துக்களை எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.அதுதான் அவர்களின் புகழுக்கும் காரணம்.விட்டுத் தள்ளுங்கள் !
@ஹேமா:சரியாக சொன்னீர்கள்.. விடுங்கள் நிரூபன்..
@இரா.எட்வின்
வணக்கம் நிரூபன்.
நீங்கள் குறிப்பிடும் ஈழத்துப் பெண் கவிஞர்கள் யாரையும் (ஆழியாள் உட்பட) இதுவரை வாசித்தது இல்லை என்பதை மிகுந்த வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறேன். உடனடியாக வாசிக்க வேண்டும். தமிழகத்தில் அவை எங்கு கிடைக்கும்.//
தமிழகத்தின் ஒரு சில பிரபலமான புத்தக நிலையங்களில் கிடைக்கும் என நினைக்கிறேன். ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், நூல்களையும் நூலகம் எனும் இணையத்தளத்தில் நேரடியாக வாசிக்கலாம்.
இதோ அதற்கான இணைப்பு.
http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A
http://noolaham.net/project/02/176/176.htm
தமிழகத்தில் ஆழியாளின் இவ் உரத்துப் பேச நூலினை கீழ் குறிப்பிடப்படும் இடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
//
நூல் தலைப்பு :உரத்துப் பேச…
ஆசிரியர் :ஆழியாள்.
பொருள் :கவிதை.
முதற்பதிப்பு :2000, ஜூலை
உரிமை :ஆசிரியர்.
பக்கம் :டெமி.
வெளியீடு :மறு
71, முதலாவது பிரதான சாலை,
இந்திரா நகர்,சென்னை - 20.
வடிவமைப்பு :வே. கருணாநிதி.
அச்சாக்கம் :தி பார்க்கர்,
293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்னை - 14, Ph: 8215684.
http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
@♔ம.தி.சுதா♔
♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]
////இவர்களில் யாருமே இடப்பெயர்வுகள், போராட்டப் பிரச்சாரம் முதலிய இன்ன பிற காரணிகளால், பெண்ணியல் வாதம் பற்றிய உட் கிடக்கைகளினைச் சார்ந்து தமது கவிதைகளை அமைக்கவில்லை. ////
பல விடயம் மறைந்திருக்கிறது.. பல பெண் கவிஞர்கள் வளர்ச்சி மழுங்கடிக்கப்படதால் காணமல் போயும் இருக்கிறார்கள்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//
ஆமாம் சுதா, பிற்காலத்தில் பெண்ணியம் பற்றியோ, அடக்கப்பட்டு, ஆணாதிக்கப் பிரச்சாரத்தின் கீழ் பாடசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, கட்டாய மூளைச் சலவை செய்து போராட்டங்களில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களைப் பற்றியோ, ஏனைய பெண்களின் பிரச்சினைகள் பற்றியோ யாரும் கவிதைகளை எழுத முன் வரவில்லை.
அப்படி ஒரு சிலர் கவிதைகளைப் படைத்திருந்தாலும், அவற்றினை வெளிக்கொணர வட கிழக்கினைப் பொறுத்தவரை ஒரு காத்திரமான ஊடகம் இருக்கவில்லை. புலிகளின் குரலும், விடுதலைப் புலிகலள் பத்திரிகையும், சுதந்திரப் பறவைகள் பத்திரிகையும், ஈழநாதமும் பெண்களைப் போராட்ட, மூளைச் சலவை செய்யும் கருத்துக்களிற்கும், போராட்டத்தினுள் ஈர்க்கும் நோக்கிலான கருத்துக்களுக்குமே முதன்மையளித்தன,
இக் காலப் பகுதியில் தினமுரசு, சரிநிகர், இடி, மல்லிகை, அமுது, மற்றும் தென்னிலங்கைப் பத்திரிகைகள் வாயிலாக முஸ்லிம் பெண்களின் எழுத்துக்களும், மலையகத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களுமே வளர்ச்சியடைந்தன. அல்லது காத்திரமான நிலையினை எய்தின என்று கூறலாம்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3710:2010-02-18-09-58-52&catid=1:articles&Itemid=264
மேற் குறித்த இணைப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களின் பற்றிய குறிப்பினைக் கண்டு கொள்ளலாம். ஈழத்துப் பெண் கவிஞர்கள் பற்றிய குறிப்பில் ஆழியாள் மொழியியல் அடிப்படையில் புரட்சி செய்தாக கூறும் சகோதரி, இந்த இணைப்பில் சென்று பார்வையிட்டால் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் பங்களிப்புச் செய்த பல பெண் கவிஞர்களின் பங்களிப்பினையும், அவர்களது எழுத்துப் புரட்சியின் விளைவுகளையும் கண்டு கொள்ளலாம்.
பெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்.)
றஞ்சி திங்கள், 18 பெப்ரவரி 2008 15:26
சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களின் கவிதைகள் தமிழ் இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்படவேண்டியவை. அவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அந்த வகையில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக்கொண்ட “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு மிக முக்கியமானது என்றே கூறலாம். 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள். அதேபோல் புலம்பெயர் தேசத்தில் வெளியிடப்பட்ட மறயாத மறுபாதி மற்றும் தமிழகத்தில் வெளியிடப்பட்ட பறத்தல் அதன் சுதந்திரம், தற்போது பெயல் மணக்கும் பொழுது, புலம்பெயர்தேசத்தில் தற்போது வெளிவந்துள்ள மை... என தொகுப்புகளாக்கப் பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. எல்லாமே பேசப்படும் தொகுப்புகளாக வந்துகொண்டிருப்பதே அதன் தேவையை உணர்த்தப் போதுமானது.
இத்தொகுப்பில் கிட்டதட்ட 280 பக்கங்களில் 93 கவிஞர்களின் கவிதைகள் அ.மங்கை அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பை வெளிக்கொணர்வதில் கவிதைகளை தேடிக்கொள்வது, தேர்வுசெய்வது தொடக்கம் நிதிச்சமாளிப்பு வரை மண்டையைப்போட்டு உடைக்க வேண்டியிருக்கும். அத்தோடு அச்சிடுவது பின் பரவலடையச் செய்வது என்றெல்லாம் தொடர்ச்சியாக உழைக்கவேண்டியிருக்கும். கையைக்கடிக்கும் நிலையானாலும்கூட இந்த சமூக உழைப்பின் மீதான திருப்தியே தொடர்ந்து இவ்வகைச் செயற்பாடுகளை தொடரச் செய்துவிடுகிறது. இதனூடாகப் பயணித்த அ.மங்கையின் உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
கமலா வாசுகியின் ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டு ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் பெயல் மணக்கும் பொழுதாக வெளிவந்துள்ளது. இத் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்ட அனைத்து கவிதைகளும் சஞ்சிகைகள், தொகுப்புக்கள், வெளியீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவைகளை ஒவ்வொரு கவிதைகளுக்கும் கீழே கவிதைகள் எடுக்கப்பட்ட வெளியீடுகளின் விபரத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் மங்கை
பெயல் மணக்கும் பொழுது தொகுப்புக்குள் அதாவது கவிதைக்குள் செல்வதல்ல இக்குறிப்பின் நோக்கம். இது தொடர்பான சில விடயங்களைப் பற்றிப் பேசவே முனைகிறது இக்குறிப்பு.
பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகில் அதிகளவு கவனிக்கப்படுவதில்லை. அத்துடன் படைப்பாளிகள் பெண்கள் என்ற காரணத்தினால் ஆண்களே ஆதிக்கம் பெற்றுள்ள விமர்சன உலகில் தமக்கு பிடித்தவர்களை பட்டியல் இடுவதும் மற்றைய பெண்களை ஓரம் கட்டுவதும் நடைபெற்று வரும் இன்றைய சூழலில் அ.மங்கையின் தொகுப்பு முயற்சி இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
தந்தைவழிச் சமூக விழுமியங்களால் வழிநடத்தப்படும் சமூகத்தில் வாழ்கின்ற இலக்கியம் படைக்கும் பெண்கள் இன்னொருபுறமாக இலக்கியம் படைப்பது பெரும்பகுதியாகிவிடுகிறது. அதனால் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளும் கருத்துக்களும் ஆண்நிலைப்பட்டதாக அமைந்துவிடுவதை சஞ்சிகைகள், பத்திரிகைகள்; இணையத்தளங்கள், வானொலிகள் வானொளிகள் என எல்லா கலையிலக்கிய வடிவங்களிலும் காணலாம். இதை மறுதலித்து எழும் பெண்நிலை கலைஇலக்கியப் போக்குகளை நாம் இன்று அடையாளம் காண்கிறோம். இன்று தமிழ்ப் பெண் கவிஞர்கள் ஆழமான உணர்ச்சிச் செறிவையும் சிக்கனமான மொழியாள்கையையும் ஆழ்ந்த தேடலும் மொழிப்பயிற்சியும் உள்ள பல பெண் மொழிக் கவிதைகளை படைத்து வருகின்றார்கள். சிந்தனையும் ஆக்கத்திறனும் ஒரு பெண் படைப்பாளியின் அடிப்படை பலம் என்ற வகையில் இவ்வாறான தொகுப்புகள் காலத்தின் தேவையும்கூட. அதனால் இவ்வெளியீடுகள் வரலாற்று ஆவணங்களாக அடுத்த சந்ததியினருக்கும் இருக்கப்போகின்றன என்பது கவனிக்கற்பாலது.
இத் தொகுப்பில் பிழைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொகுப்பாளர் அ.மங்கை இருப்பதை அவரது குறிப்பில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதனால்தான் மங்கை இவ்வாறு கூறுகின்றார்... ‘’இத் தொகுப்பிற்காகத் தேடியலைந்த போது எழும்பிய கேள்விகள் பல. மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள் பெண்கவிஞருடையது இல்லை என்பதை தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது” எனக் குறிப்பிடுகின்றார். ‘’கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இப்படி ஒரு குரல் உண்டு எனத் தெரிந்த போது இதுபோன்ற வெளிப்பாடுகளின் தேவை அவற்றை வெளியிடப் பெண்பெயர் தெரிவு செய்தமை போன்றவற்றை நாம் கட்டுடைக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது” என்கிறார் மங்கை. பெண்குரலினை ஆவணப்படுத்துதல் என்று வரும்போது இது ஒரு மிகமிக முக்கியமான பிரச்சினைதான்.
இங்கு பிரச்சினை புனைபெயரைச் சூடுவதிலல்ல. போர்க்காலத்தின் நெருக்கடிகளுக்கும் கருத்துச் சுதந்திர மறுப்புகளுக்கும் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எழுத்தாளர்கள் புனைபெயரை வேண்டி நிற்பது என்பது அவர்களின் உரிமையாகிறது. ஆனால் இதையே சிலர் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இது ஒரு ஜனநாயக செயற்பாடாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும் சக்திகளின் பெயரை ஒடுக்கும் சக்திகள் கையாள்வது பல குழப்பங்களை விளைவிக்கவல்லது. ஈழப்போராட்ட இயக்கங்களில் இது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களின் பெயரைச் சூடுவது பெண்களின் பெயரில் எழுதுவது என்றெல்லாம் உத்திகள் பாவிக்கப்பட்டன. பின்நவீனத்துவம், கட்டுடைப்பு, பெருங்கதையாடல் என்ற முழக்கங்களும் இந்த விடயத்தில் கவனம்கொள்ளவில்லை என்றே படுகிறது. பெண்பெயரைப் பாவிப்பதில் என்ன தவறு என்ற கேள்விக்குமேல் இவர்களில் பலர் செல்வதில்லை. ஏன் பாவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையளிப்பதை தவிர்த்துவிடுகின்றனர். சென்ரிமென்ற் வெளிப்பாடு அல்லது தமது எழுத்துகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவது (பெண்களின் பெயரில் இருந்துகொண்டு பெண்களைத் தாக்குவது உட்பட) இந்த வழியிலும் சாத்தியப்படவே செய்கிறது.
இத் தொகுப்பில் இந்தப் புனைபெயர் பற்றிய அச்சம் அதை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட இயலாமை தனது தொகுப்பில் தன்னை மீறி தவறுநேர்ந்தவிடப் போகிறது என்ற நிலையை அ.மங்கைக்குத் தோற்றுவித்திருக்கிறது. அதேபோல் முகவுரை எழுதிய சித்திரலேகாகூட இதுபற்றிக் குறிப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்குப் பிறகும் பெண்கள் பெயரில் எழுதிய ஆண்கள் (இந்நூல் வெளியீடொன்றிலும்கூட) இதுவரை தாமாக முன்வந்து அதைத்; தெரிவிக்கவில்லை.
மங்கை தொகுத்த ஈழத்து பெண்கவிஞர்கள் தொகுப்பிலும் புதுவைரத்தினதுரை போன்றே இன்னும் ஒருசில ஆண்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன என அறியவருகிறது. அதை வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகவே படுகிறது.
மாலிகா (புதுவை இரத்தினதுரை) போலவே ஆதிரா (கற்சுறா) ஆமிரபாலி, (ஹரிஹரசர்மா) (பக்கங்கள் 36,37,41) இருவரும் ஆண்களே. யூவியாவும் ஆண் என்றே சந்தேகிக்கப்படுகிறது (புலம்பெயர் நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி யூவியா என்ற பெயரில் எழுதும் பெண்கள் யாரும் கிடையாது.) இருள்வெளியில் இக் கவிதை பிரசுரிக்கப்பட்டிருப்பதைத் தவிர, வேறு கவிதைகள் வெளிவந்ததாக நாம் அறியவில்லை. யூவியாவின் இக் கவிதையை வெளியிட்ட இருள்வெளியின் தொகுப்பாளர்களான சுகன், சோபாசக்தி ஆகியோர் இக் கவிதைக்குரியவர் பெண்ணா அல்லது ஆணா என்பதை தெரிந்துவைத்திருக்க சந்தர்ப்பம் உண்டு.
1998 ஒக்ரோபரில் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்கள் சஞ்சிகையான சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு புனைபெயரில் எழுதும்போது ஆண்கள் பெண்களின் பெயர்களைப் பாவிப்பது தொடர்பில் ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தது. அதற்கேற்ப அப்போது எக்ஸில் ஆசிரியர் குழுவில் இருந்த கற்சுறா ‘தேவி கணேசன்| என்ற தனது இன்னொரு புனைபெயரை மாற்றிக்கொண்டதுடன் அதுபற்றியும் சக்திக்கும் அறிவித்திருந்தார். ஆனாலும் ஆதிரா என்ற பெயரில் அவர் பிற்பாடு எழுதிய அவரது இரு கவிதைகளும் இத்தொகுப்பில்; தொகுக்கப்பட்டுவிட்டன . அதேபோல் ஆமிரபாலி என்ற பெயருக்குரியவரும் மூன்றாவது மனிதன், வீரகேசரியின் உயிர்எழுத்து, இணையத்தளங்கள் (முரண்வெளி) ஆகியவற்றில் எழுதிவருகின்ற ஹரிஹரசர்மா ஆவர்.
இத் தவறுக்கு முழுப்பொறுப்பையும் இந்த பெண்பெயரின் பின்னால் நின்று எழுதிய ஆண்களே பொறுப்பேற்க வேண்டும். இந்தக் குழப்பங்கள் இனிவரும்காலத்திலாவது தவிர்க்கப்படுவது குறைந்தபட்சம் தொகுப்பாளர்களின் சங்கடங்களையாவது தீர்த்துக்கொள்ளும்.
தமிழகத்தில் வளர்மதி போன்றவர்கள் பெண் ஆண் அடையாளங்களை அழிப்பதற்காகவே இவ்வாறான பொதுப்பெயர்களைச் சூடுவது பற்றி எற்கனவே கூறியவர்கள். இது வேறுவகையானது. இதை மேலுள்ள பெண்பெயர்களுடன் போட்டுக் குழப்புவது இன்னும் குழப்பங்களையே உண்டாக்கும். சித்திரலேகா தனது முகவுரையில் இக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார். “பெயர்தொடர்பான மயக்கமே இது பாடல் புனைந்தவர் ஆணா?பெண்ணா? என்கின்ற மயக்கம் சங்ககாலம் வரை தொடர்கின்றது தமயந்தி,அருந்ததி போன்ற பெயர்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் பெண்கள் பெயரை பயன்படுத்துவது இதற்கு காரணம்” என்கிறார்.
மேலும் சித்ரலேகாவின் அதே குறிப்பில் "பெயரை மட்டுமன்றி வேறு தகவல்களையும் சேகரிக்க வேண்டிய கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய தேவையை இது சுட்டுகிறது. இது மாத்திரமல்ல ஒருவரே பல பெயர்களில் எழுதும் வழக்கமும் உண்டு. விஜயலட்சுமி சேகர், விஜயலட்சுமி கந்தையா, சிநேகா என மூன்று பெயர்களில் எழுதுபவரும் விஜயலட்சுமி என்ற ஒருவர்தான். இதேபோல வேறும் சிலர் என்கிறார். இந்த விடயமும் கவனிக்கவேண்டியது” என்று குறிப்பிடுவது ஏனோ தெரியவில்லை. விஜயலக்சுமி எல்லாமே பெண் பெயர்களைத்தானே புனைபெயராகச் சூடியுள்ளார் என்ற விடயம் ஒருபுறமும் மறைந்துநின்று தாக்குதல்தொடுக்க இது வசதியாக இருக்கலாம் என்ற தர்க்கமும் இருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படி பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவைகளும்கூட உள்ளது என்ற உண்மையையும் பொறுப்புடன் நாம் அணுகித்தான் ஆகவேண்டும். வேடிக்கை என்னவென்றால் சித்ரலேகாவும் சங்கரி, சன்மார்க்கா என்ற புனைபெயர்களில் எழுதி வந்துள்ளார் என்பதுதான். (இந்தப் பெயர்களில் அவரது கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.)
இத் தொகுப்பில் ஏற்கனவே ஈழத்து கவிதை எழுத்துகளில் அறியப்பட்டவர்களாக இருக்கும் கமலா வாசுகி, மாதுமை, சிமோன்தி, சலனி, மலரா, சாரங்கா, ஜெபா, மதனி, பாலரஞ்சனிசர்மா போன்ற கவிஞர்களின் கவிதைகள் இத் தொகுப்பில் சேர்க்கப்படாமல் போனது குறைபாடாகச் சுட்டமுடியும். இவர்களின் கவிதைகள் பெண்கள் சந்திப்பு மலர், பெண், சரிநிகர், வீரகேசரி உயிர்எழுத்து, ஊடறு, காலச்சுவடு ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் கவிதைகள், கொலைசெய்யப்பட்ட செல்வியின் கவிதைகள், போராளிப் பெண்களான மேஜர் பாரதி, காப்டன், வானதி ஆகியோரின் கவிதைகளும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளமை தொகுதிக்கு கனம் சேர்ப்பவை.
இன்று ஈழத்திலும், உலகின் வேறு பல இடங்களிலும் நடைபெற்று வரும் தேசிய இனப்போராட்டங்களில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர். ஒருபெண் தன்னை பெண்ணாக மட்டும் உணர்ந்து வாழாமல் குறிப்பிட்ட தேசியஇனத்தையும் சார்ந்தவளாக தன்னை உணர்கிறாள். இது அவர்களிடத்தில் வயப்பட்டுவரும் ஆளுமை, இலக்கியம், எல்லாம் வேறுபடக் காரணமாகிறது. அதேபோல் போர்ச்சூழலில் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வும், தேசிய இனப் போராட்டத்தால் சாதி, பெண்ணொடுக்குமுறையெல்லாம் இரண்டாம்பட்சத்திற்கு தள்ளப்பட்ட மூடுண்ட நிலையும் இவர்களது எழுத்துகளில் வெளிப்படுகிறது. அதனால் ஏற்படும் வலி எழுத்துக்களில் வடிக்கப்படுகின்றன. இது ஈழச்சூழல்.
ஈழத்து பெண் படைப்பாளிகளுடன் தமிழ் நாட்டு பெண் படைப்பாளின் எழுத்துக்களை ஒப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறது. அவர்கள் அவர்களின் சூழலை உள்வாங்கியபடிதான் எழுதமுடியும். வேண்டுமானால் போர்ச்சூழலையும்விட தமிழகத்தில் மோசமான வாழ்நிலைகளையும் ஒடுக்குமுறைகளையும் அனுபவித்துவரும் (தலித்துகள் உட்பட) ஒடுக்கப்பட்ட சக்திகளிலிருந்து இவ்வகை எழுத்துகள் பெரியளவில் வராத அல்லது வரமுடியாத ஆதங்கத்தினை நாம் குறிப்பிடலாம். வசதிவாய்ப்புகள் கொண்ட புலம்பெயர் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளின்மீது திரும்பாத விமர்சனம் அல்லது ஒப்பீடு தமிழகப் பெண் எழுத்தாளர்கள் மீது திரும்புவது சந்தேகங்களையே உண்டுபண்ணும். இது விருப்புவெறுப்புகள் சார்ந்ததாகவே அமையும். ஈழம் தமிழகம் என்று பெண் எழுத்துக்களை எதிரெதிர் நிறுத்தவே துணைபோகும். தமிழகப் பெண் எழுத்தாளர்களின் மீதான விமர்சனத்தை நேராகவே வைப்பதற்குப் பதில் பெயல் மணக்கும் பொழுதினூடாக சந்திக்க முனைவதாக அது அமைந்துவிடலாம்.
“இலக்கியத்தின் அழகியல் அளவுகோல் தனிப்பட்ட இரசனை மட்டங்கள் போன்றவற்றை இது போன்ற தொகுதிக்குள் கொண்டு வர நான் விரும்பவில்லை வாழ்வா- சாவா என்ற போராட்டத்தில் மூச்சுவிடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு கூவி விற்க நான் தயாராக இல்லை அதற்கான மனம் என்னிடம் இல்லை...” என்கிறார் அ.மங்கை. இக் கவிதைகளை யார் கூவி விற்றார்கள். ஏற்கனவே இக் கவிதைகள் பல சஞ்சிகைகள, மலர்கள், தொகுப்புக்களில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறான தொகுப்புகளைக் கொணர்ந்தவர்கள் பணப்பிரச்சினைகளுள் திண்டாடித்தான் கொண்டுவந்தார்கள்... மீண்டும் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இதற்கான வளம் தனிநபரிடம் இருப்பது உண்மைதான். ஆனாலும் இங்கும் அதனால் யாரும் வியாபாரம் செய்வதில்லை.
அ.மங்கையின் இக் கூற்றினை அடியொற்றி விருபா என்ற இணையத்தளம் இப்படி எழுதுகிறது... “இத் தொகுப்பினை செய்த அ.மங்கை அவர்கள் சென்னையில் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றுகின்றார். ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடன் உயர்வான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத்து இலக்கிய வட்டத்துடனான தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர். உணர்வுபூர்வமாக ஒன்றித்து செயலாற்றுபவர்.. . “ ((http://viruba.blogspot.com/2007/06/blog-post.html). இது யாரை நோகடிக்கும் வார்த்தைகள்? சமூக அக்கறையுடன் செயற்படுபவர்கள் வேறு எவரும் இல்லையா?. ஈழத்து இலக்கியவட்டத்துடனான உயர்வான (???) தொடர்புகளை அ.மங்கை கொண்டிருப்பவர் என்று விருபா கூறுவது உண்மையானால் இந்தப் பெண்பெயர்களுக்குள் புகுந்து நின்ற ஆண்களை அவர் தெரிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் அமைந்திருக்கும் என்று ஒருவரால் வாதிட முடியும்.
இந்திய பெண் எழுத்தாளர்கள் ஈழப்பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பதும், ஈழத்துக்கு நேரில் போய் தொடர்புகொள்வதும், புலம்பெயர் தேசத்தில் பெண்கள் சந்திப்புகளில் பங்குகொண்டு தொடர்புறுவதும் என பலமான தொடர்பு ஒன்று உள்ளது. ஈழத்து இலக்கியத்தில் அவர்களும் அக்கறையுடையவர்கள். தமிழ்ப் பெண் கவிஞர்களின் தொகுப்பான பறத்தல் அதன் சுதந்திரம், விஜயலக்சுமியின் சிறுகதைத் தொகுப்பான வானம் ஏன் மேலே போனது போன்றவற்றையும் தமிழகப் பெண்களே வெளியிட்டுள்ளனர். இதன் ஒரு தொடர்ச்சியாகவே பெயல் மணக்கும் பொழுதையும் நாம் பார்க்க முடியும். அது இத் தொகுப்புக்காக அ.மங்கையின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவது என்பதாகாது.
தொகுப்பு - பெயல் மணக்கும் பொழுது
தொகுப்பாளர் - அ.மங்கை
தொடர்புகட்கு -
மாற்று
1, இந்தியன் வங்கி காலனி
வள்ளலார்தெரு, பத்மநாபா நகர்
சூளைமேடு சென்னை 94
தொலைபேசி - 0091 44 24742886
- றஞ்சி
அவர்கள் பார்வையில்
எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைக்ள் ஆகும்
-கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.
-அ.சங்கரி
இது 1990களிற்கு முற்பட்ட காலப் பகுதியான 1986ம் ஆண்டு வெளியான சங்கரியின் கவிதை.
இன்று நான் பெரிய பெண்
நான்
கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பனியாய் உறைந்த நீர்
பூவைப் போலவும்
காற்றைப் போலவும்
நீரைப் போலவும்
குதித்துத் திரிந்து
சுற்றிய பருவத்தில்
காலை உதைத்து
வீரிட்டு அழவும்
கல கல என்று
கை தட்டிச் சிரிக்கவும்
கோபம் வந்தால்
கொப்பியைக் கிழிக்கவும்
முடிந்ந கால்ம்.
மரத்தில் ஏறவும்
மாங்காய் பிடுங்கவும்
பக்கத்து வீட்டுப்
பிள்ளைகளுடனே
கிட்டி அடிக்கவும்
ஒளித்துப் பிடிக்கவும்
ஒன்றும் பேசிலர் எவரும்.
இன்று
நான் பெரிய பெண்.
உரத்துச் சிரித்தல் கூடாது.
விரித்த புகையிலை
அடக்கம்; பொறுமை;
நாணம்
பெண்மையின் அணிகலம்.
கதைத்தல்; சிரித்தல்;
பார்த்தல்; நடத்தல்;
உடுத்தல்
எல்லாம் இன்னபடி என்றெழுதி.....
நான்
கல்லாய்
பாறையாய்
பனியாய்
பெண்ணாய்.....
-அ. சங்கரி.
விடுதலை வேண்டினும்
எனது-
ஓராயிரம் சிறகுகளை
விரிக்கவும்
விண்ணிற் பறக்கவும்
ஏங்கினேன்.
வானின்
நட்சத்திரங்களையும்
சூரியனையும்
தொட்டுப் பார்க்க
அவாவிற்று என் ஆன்மா.
பூமியின் பரப்புக்கு
அப்பால்
அண்ட வெளியில்
ஸ்பேஸ் ஒடிசியின் விண்கலம் போல
எல்லையின்றிச் சுழலவும்
எண்ணினேன்.
வானிற் பறக்கும்
புள் எல்லாம் நானாக
மாறாவும் எண்ணினேன்.
ஆனால்--
காலிற் பிணைத்த
இரும்புக் குண்டுகள்
அம்மியும் பானையும்
தாலியும் வேலியும்
என்னை--
நிலத்திலும்
நிலத்தின் கீழே
பாதாள இருட்டிலும்
அழுத்தும்.
அ. சங்கரி
இடைவெளி
உனது கையினைப் பற்றி
இறுக்கிக் குலுக்கியும்
நெற்றியில் ஒரு சிறு
முத்தம் இட்டும்
எனது அன்பினை
உணர்த்தவே விரும்பினேன்.
நண்பனே
இராக்குயில் கூவும்
சோளகக் காற்றின் உறுமல் கேட்கும்
நடுநிசிப் போதிலும்
கூர் உணர்திறனும்
விழித்த கண்ணுமாய் கடமையாற்றுவாய்.
என்றும்
மனித வாழ்க்கை பற்றியும்
எமது அரசியற்சூழல் பற்றியும்
உயிர்ப்பாய் இயங்கும்
உன்னை நோக்கி
வியப்பும் உறுவேன்
அவ் வியப்பும்
நீண்ட கால நெருக்கமும்
என்னிற் காதலை விளைக்கும்.
அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்த விரும்பினேன்.
எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது;
எனது நெஞ்சில் பெருகும்
நேசத்தின் ஒரு பரிமாணம்.
எனினும் நண்பனே
ஒரு பெண்ணிடம்
சொல்வது போலவும் உணர்த்துவது போலவும்
உன்னை அணுக அஞ்சினேன்.
பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்.
பெண்ணை
என்றும் பேதையாகவும்
ஆணை
வீரபுருஷ நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும்
எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
உனக்கும் தெரியும்.
அதை நான் விரும்பினேன்
எனது ந்ண்பனே
இந்த இடைவெளி
எமக்குள் இருப்பின்
எனது கதலை
உணரவே மாட்டாய்.
என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால் அந்த உச்சிக்கு
வரமுடியாதே!
-அ. சங்கரி
இருப்பும் இறப்பும்
உன்னை முன்னர்
ஒருபோதும் அறியேன்
மூவாயிரம் மாணவருள் ஒருவனாய்
நீ மிக மிகச் சாதாரணமாய்
இருந்திருப்பாய்.
நாடகம் என்றோ
ஸ்ரைக் என்றோ
மாணவர் அவை வேலைகள் என்றோ
எதிலுமே அக்கறை அற்றவனாக
வந்து போயிருக்கலாம்.
எதோ ஒருநாளில்
உன்னை நான்
எதிர்ப்பட்டிருத்தலும் கூடும்
வளர்ந்து பரந்த
வாகையின் நிழலில்
நூலக வாயிற் படிகளில்
அன்றேல்
பல்கலைக்கழக முகப்பு வாயிலில்
பின்புறமாகப் பலாலி வீதியில்
எங்கேனும்
கண்டும் இருக்கலாம்.
எனினும்
அப்போது உன்னை அறியேன்
இன்று
உனது அவலச் சாவை
உணர்த்திய நோட்டீஸ்
நூலகச் சுவரிலும்
விஞ்ஞானபீட வாயில் முன்னும்
கண்டு கனத்தது நெஞ்சு.
இளைஞனே
இன்று முழுவதும்
உனது முகமும்
இன்றுதான் அறிந்த
உனது பெயரும்
மனதை அரித்தன
மெதுவாய்.
உனது பெயரினை
உனது ஊரினை
உனது இருப்பினை
அறிவித்தது அந்த
மரண நோட்டீஸ்.
வாழ்ந்ததை உணர்த்திய
மரணம்!
நான்
துயர் மிகக் கொண்டேன்.
-அ. சங்கரி
முனைப்பு
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.
--சி. சிவரமணி.
எமது விடுதலை
நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.
--சி. சிவரமணி
ஒரு தாயின் புலம்பல்
தெருப்புழுதியில் உன் உடம்பு
முதுகெல்லாம் இரத்த வெள்ளம்
நீதானா என்று குனிந்து பார்த்தேன்
ஓம் ராசா, நீயே தான்
"ஏன் ஆச்சி அழுகின்றாய்"
என்று கூடிநிற்கும் சனம்கேட்க
"பெடியனைத் தெரியுமா உனக்கு?"
என்று மிரட்டுகிறான் காக்கிச் சட்டை.
அவன் கையில் துவக்கு வெயிலில் மின்னுகிறது
"தெரியாது" என்று தலையசத்தேன்
நான் பெற்ற முதல் முத்தை
நெஞ்சம் பதறுதையா.
குருஷேத்திரத்தில் கர்ணன்வீழ
"ஐயோ மகனே" என்று குந்தி
ஓடிச்சென்று அணைத்தாளே
ஐயோ ராசா நான் பாவி
இப்போ வந்து பிறந்து விட்டேன்
என் பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.
எனக்கு மட்டும் பலமிருந்தால்
இரவிரவாய் உன்னை எடுத்துச் சென்று
செம்மணியில் எரித்திருப்பேன்.
முந்தநாள் சாமம் உனக்குப்
பழஞ்சோறு போட்ட கை
இந்தக் கடனையும்
துணிவோடு செய்திருக்கும்.
இராவணன் கொடுமை தாங்காது
காடாறுமாதம் போனவன் நீ.
நமது தலைவர்கள் போல
ஏதாவது சாட்டுச் சொல்லி
அங்கேயே இருந்திருக்கலாகாதோ?
திரும்பி வந்து ஏழுநாளில்
உன்னைச் சுட்டார்களோ கொடும்பாவிகள்.
ஏன் ராசா திரும்பி வந்தாய்?
உன்னை மகனென்று நான் வீட்டே
கொண்டு போனால் உன்தம்பிமாரை
விட்டு வைப்பாரோ கொடியவர்கள்?
வேட்டையாடித் தீர்த்துவிட்டுக்
கொட்டிலையும் எரிப்பார்கள்
மாட்டையும் லொறியில் ஏத்தி
பலாலி போய்ச் சேர்வார்கள்.
யாரென்று கேட்க யாரிருக்கிறார்
மகனே நான் ஏழையெல்லோ!
பெரிய இடத்துப் பிள்ளையெல்லாம்
மேல்நாடோடி டாக்டராக
நீயேன் ராசா எல்லாத்தையும்
உன் தோள்மேல் ஏற்றாய்?
உன்னை நம்பி வாழ்ந்த எம்மை
என்னென்று மறந்து போனாய்?
என் ஒருத்தி கூலியிலே
உங்களை நான் வளர்த்தெடுத்தேன்
நீங்கள் வளர்ந்து மரமாகி
எனக்கு நிழல் தரும் வேளை
என் கனவெல்லாம் தெருப்புழுதியில்
அப்படியே அழிஞ்சுபோச்சு.
என் கடைசிக் காலம்வரை
என் கைதான் எனக்குதவி.
மெய்யே ராசா, நான் போய்வாறன்
மிச்சத்தை வீட்டில் அழ்
என் வயித்தெரிச்சல் ஒருநாள்
இப்பாவிகளை எரிக்குமெல்லோ.
தனிநாடு கேட்டு மேடையேறி
கனக்கக் கதைத்தவர்கள்
அயல் நாட்டில் விருந்துண்டு
பாதுகாப்பாய் இருக்கையிலே
ஊருக்காய் மடிந்தபிள்ளை
தெருப்புழுதியில் கிடக்கின்றான்.
அவனை அங்கு விட்டுச்செல்ல
என் நெஞ்சம் விம்முதையா.
என்பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.
--சன்மார்க்கா
உண்மையிலும் உண்மையாக
விரிந்து கிடந்த
கூந்தலை முடிந்து
கலைந்து போன ஆடைகளை
அணிவதற்காய் நானும்
மெதுவாக எழுந்த போது
'இவள் அவனோட விரும்பித்தான்....'
வார்த்தைகள் என்னை
அறுத்து வதைத்தன
திரும்பிப் பார்த்தேன்
அம்மா, அக்கா, அண்ணா அனைவருமே
என்னைப் பிழையாக....
"தான் செத்திருக்கலாம்
இல்லாட்டி
அவனைச் சாக்காட்டியிருக்கலாம்
இரண்டு மில்லாமல் எங்கட மானத்தை...."?
தொடர்ந்தன பொறிகள்.
ஆனால்....நான் சிரித்தேன்
"இராணுவக் கற்பழிப்புக்காய் கலங்கிடலாகாது" என
மேடையேறி முழங்கிய அண்ணன்
புத்தகங்களில் ஊதிய அக்கா
இன்று.... எனது ஊரவன்
அதே நிலையில்....
எனக்குப் புரியவில்லை
அந்நியன் ஆத்திரத்தில்
அடக்கு முறையின் வடிவில் நடந்து கொண்டான்
ஆனால்... இவனோ...
காமனாய்... கயவனாய்...
இவனை என்ன செய்யலாம்?
கற்புக்காய் கண்ணீர் வடிக்க
நான் ஒன்றும் கண்ணகியல்ல
மானத்தை நினைத்து நிற்க,
நான் ஒன்றும்
இழக்கவில்லை.
தற்கொலையில் உயிரைமாய்க்க
நான் ஒன்றும் கோழையில்லை
இராணுவத்தை விட்டுத் தள்ளினோம்.
ஆனால்... நமது இனத்தவனை வெறிபிடித்தவனை
திருமணமாகி இரு குழந்தையும் பெற்றவனை
என்னைப்போல் இன்னும்
எத்தனை பேர்?
இவனைப்போல் இன்னும்
எத்தனை பேர்?
இவர்களுக்கு என்ன செய்யலாம்?
குழம்பினேன்
நான் குழறவில்லை
குடும்ப கௌரவத்திற்காக
என்னைக் கொல்லலாம்
ஆனால் நானாக...
அது நடக்காது.
எனது பாதங்கள் தொடரும் பயணத்தில்
முடிந்தால்.... துணிவிருந்தால்
உண்மையிலும் உண்மையாக
எவராவது வாழ வரலாம்.
--ரங்கா
நீறு பூத்த தணல்
மீட்டப்படாத மனவீணியில்
அமுங்கிக் கிடந்த
முகாரி ராகத்தை
ஏன் மீட்டி விட்டீர்?
தரையில் சிந்தாமல்
தேங்கிக் கிடந்த
கண்ணீர் மழையை
ஏன் சிந்தச் செய்தீர்?
நீறுபூத்த தணலென
எரியாமலிருந்த
எண்ணெய்த்தீயை
ஏன் ஊதி விட்டீர்?
கவிதைகள் பல படைத்து
காவியத்தில் நானொரு
ஓவியமாய்த் திகழ
பாதை காட்டினீரோ?
பலே பலே
எனது கண்களின்
வடிப்பில்
என்னுள்ளத்தின்
தவிப்பில்
உங்களுக்குத்தான்
எவ்வளவு இன்பம்?
--மசூறா ஏ. மஜீட்
அன்றும் இன்றும்
இதயத்தில் இருந்து மேலெழுந்து
எதுவோ தொண்டயில் சிக்கிட
உன் முன்னிலையில் அன்று
நான் வாயடத்துப் போனேன்
எனது மௌனத்தை உனக்குப் பதிலாக்கி
தொடர்ந்தது காலம்.
உன்னோடு உலாவந்த நாட்களில்
கைதொட உறையும்
உணர்வுகளின் சிலிர்ப்பில்
"என்ன.. பேசேன்.."
என்று நீ கேட்டும்
"ஊம்.."; என்பது மட்டுமே
எனது பதிலாகி நிற்க,
உள்ளும் புறமும்
எல்லை கடந்த ஏகாந்தப் பெருவெளியும்
ஓசைகளடங்கி உறைந்துபோக.
அத்தனைக்குமாக நீயே
திரும்மத் திருமப் பேசுவாய்.
முகமெங்கும் மகிழ்ச்சிப் பூக்களாய்
எச்சில் குமிழ்களுடன்
பேச்சும் வெடித்துச் சிதறும்
அரசியல், சினிமா, திருவிழா.... என
கூட வந்த
அடுத்தவனின் விமர்சனங்கள்
அத்தனைக்கும் நடுவே
எனது மௌனங்களத்தனையும்
உனதாக்கி
நீ உன்வழி தொடர்ந்தாய்.
அன்று,
நேருக்கு நேராய்த்தான்
நீ கேட்டபொழுது
எனது சம்மதமாக
என்னுடன் இழைந்த மௌனம்
இன்று,
வலியெடுக்கும் இதய சோகத்தின்
சீழ்அகற்றி சுகமளிக்க மறுக்கிறது.
காரணமற்ற நிராகரிப்புடன்
நீ எங்கோ வெகுதொலைவில்
மகிழ்ச்சிப் பிரவகிப்பில்.
அன்றைய எனது மௌனமும்
இன்றைய உனது மௌனமும்
உனக்கே சாதகமானதில்
என்றென்றைக்கும்
வசந்தங்கள் உனக்கும்
சோகங்கள் எனக்குமாய்
ஆக்கிற்று உலகம்.
நானோ,
கனல் வாய்பிழந்து
புழுதி பறக்கின்ற
மைதானவெளி முழுதும்
தீ மிதித்து நடக்கின்றேன்
மௌனமோ
இடையே சுகமாய்த்துயிலும்.
--பிரேமி
அந்த நாளை எண்ணி
பிரியமானவனே, உன்னை ஏன் எனக்குப்
பிடித்திருக்கிறது?
அறிவுக்காகவா? அழகுக்காகவா?
ஒழுக்கத்துக்காகவா? அன்றி, ஒப்பற்ற
குணத்துக்காகவா?
கேள்விகள் சாலைகள் போல்
வளைந்து நெளிந்து
அடிவானம் பூமியை முத்தமிடும் புள்ளியில்
சிக்கிடும் என் இதயம்.
இதய இழையங்களில் நீக்கமற நீ
உன் நினைவில் தவிக்கும் நான்.
அறிவு பூர்வமாக பிளட்டோனிக் லவ்
உணர்ச்சிகள் தாரகைகளாக தொலைதூரத்தில்.
சமாந்தர வாழ்வுகள் சாசுவதம் என்றுணர்ந்தும்
உன் அன்புக் கடலில் முக்குளிக்கும் நான்
எதிர்காலத்தை எண்ணி
சந்தப் பொருளாக மாறும் நாளை எதிர்நோக்கி
மூர்ச்சை அடைகிறேன்.
--ரேணுகா நவரட்ணம்
அந்த நாளை எண்ணி
பிரியமானவனே, உன்னை ஏன் எனக்குப்
பிடித்திருக்கிறது?
அறிவுக்காகவா? அழகுக்காகவா?
ஒழுக்கத்துக்காகவா? அன்றி, ஒப்பற்ற
குணத்துக்காகவா?
கேள்விகள் சாலைகள் போல்
வளைந்து நெளிந்து
அடிவானம் பூமியை முத்தமிடும் புள்ளியில்
சிக்கிடும் என் இதயம்.
இதய இழையங்களில் நீக்கமற நீ
உன் நினைவில் தவிக்கும் நான்.
அறிவு பூர்வமாக பிளட்டோனிக் லவ்
உணர்ச்சிகள் தாரகைகளாக தொலைதூரத்தில்.
சமாந்தர வாழ்வுகள் சாசுவதம் என்றுணர்ந்தும்
உன் அன்புக் கடலில் முக்குளிக்கும் நான்
எதிர்காலத்தை எண்ணி
சந்தப் பொருளாக மாறும் நாளை எதிர்நோக்கி
மூர்ச்சை அடைகிறேன்.
--ரேணுகா நவரட்ணம்
வாசகர்களே, மேலே உங்களுக்காய் தரப்பட்ட கவிதைகள் யாவும், 1990களிற்கு முன்னர் ஈழத்தில் வெளி வந்த தமிழ், முஸ்லிம் பெண்களின் கவிதைகள். இக் கவிதைகளின் பெண்ணியல் வாத மொழி வளர்ச்சிக்கும்,
குட்டி ரேவதி தனது கட்டுரையில் ஆழியாளை முதன்மைப் படுத்திக் கூறும் பெண்ணியல் வாத மொழி வளர்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை உற்றுப் பாருங்கள்?
பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். எனும் கூற்றினை தனது கூற்றினை மெய்ப்பிக்க ரேவதி அவர்கள் கையாளும் கவிதைகள் இவை தான்.
மன்னம்பேரிகள்
காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத்தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.
அழகி மன்னம்பேரிக்கும்*
அவள் கோணேஸ்வரிக்கும்**
புரிந்த வன்மொழியாகத் தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
* மன்னம்பேரி (22) 1971 ஜே.வி.பி.கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவள். 1971 ஏப்ரல் 16 – இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.
** கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ம் காலனியைக் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு, இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.
பதில்
என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது.
அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங்கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.
என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறி கொட்டும்.
தனித்து,
அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.
அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என் மொழி.
அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.
அதுவரை நீ காத்திரு.
பாதுகாப்பு
உடலில் பட்ட ரணங்கள் ஆறுமுன்னே
ஆழக்கோடுகள் அதன் மேல் கிழித்து
கூராய்ச் செதுக்கிய கதிகால்களை நட
படுநேராய் எழுகிறது வேலிகள்.
தோல் மினுமினுத்துச் செழிக்க
மார்பின் பருக்கைகள் திரட்சிகளாகும் போது
சோடிக் கண்களால் உன்னை மேய்ந்தபடி
அவை கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றன.
பருவ கால மாற்றமதில்
மாரித் தவக்கைகளும் மயிர்க்கொட்டிகளும்
வந்து போய்க்கொண்டிருக்க,
கொலைஞன் ஒருவனின் கூர்க்கத்தி முனையைப் போல்
வளரும் எட்டு வாரக் கரு உருவில்
வயிற்றின் கொழகொழத்த சதை இடுக்குகளுள்
புகுந்தபடி
சொகுசின் கணச்சூட்டில்
வேலிகள் ஆழமாய்ப்
புதைந்து பதிகின்றன.
அருகில் ஆங்காங்கே
இன்னமும் வேலிகள்
வெளிர் பச்சையாய் முளைவிட்டுக் கிளம்பியபடி
வழிபாதை நெடுகிலும் சாரிசாரியாய்ச்
சாரிசாரியாய்….
உன் கண்பாப்பாக்கள் சலித்துக் குறுகி இருளும் வண்ணம்
மனம் எட்டும் பரப்பெங்கும் விரிந்து கிடக்கின்றன.
நீ நினைத்திருக்கலாம் அவை தாண்டுவதற்கென்று.
அவை காத்திருக்கின்றன
தோல்க்கூடாரத்தினுள்.
சிறுகச் சிறுக அரித்து அறியாக்கணத்தில்
உன்னுள் புகுந்து
முழுதாய் விழுங்கி ஏப்பம் விடுவதற்காகவே.
@தம்பி கூர்மதியன்
சகோதரர் நிரூபன் பஜ்ஜி கொடுக்கபடாது என்று சொன்னமையால் வெறும் கருத்துக்கு மட்டும் வந்திருக்கிறேன்.. என்ன எழுதியிருக்கீங்க.. இன்னைக்கு எப்படி பொழுது போகும்னு பாத்தேன்.. உங்க பதிவ படிச்சா போயிடும் போலிருக்கு.. படிக்கிறன்..//
வணக்கம், வந்தனம் சகோ,
பதிவுலகில் தங்களது பதிவுகளை மட்டும் எல்லோரும் படிக்க வேண்டும், தங்களுக்கு மட்டுமே வாக்குகள் கிடைக்க வேண்டும் எனும் தனி நல, தூர நோக்கில் ஒரு சில அன்பு உள்ளங்கள் ஓடோடி வந்து பதிவினைப் படிக்காமல் பஜ்ஜி, வடை என்று பின்னூட்டமிட்டுத் தங்களது பதிவுகளை நோக்கி வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதால் தான் வடை இல்லை என்று சொன்னேன்.
ரொம்ப சீரியஸ்ஸாகிட்டீங்களோ?
உங்க பதிவ படிச்சா போயிடும் போலிருக்கு.. படிக்கிறன்.//
அம்புட்டுப் பெரிய பதிவோ?
@தம்பி கூர்மதியன்
ஓ.. அவரா நீங்க.? பதிவுலக சர்ச்சைகுள்ள சேந்துட்டீங்க போல..//
நான் அவன் இல்லை பாஸ், ஒரு சில தவறான கருத்துக்களை மட்டும் சுட்டிக் காட்டுவது தான் என் பதிவின் நோக்கம், மற்றும் படி சண்டைக்கெல்லாம் நான் போக மாட்டேனுங்க...
உங்களின் அன்பிற்கு நன்றிகள் சகோ.
அத விடுங்க.. இது ஒண்ணுத்துக்கும் உதவாத மேட்டரு.. நண்பர் சிவசங்கரின் வாக்கையே நானும் மொழிகிறேன்..//
ஆழியாளை முதன்மைபடுத்தவில்லை.. அவரை போன்று என்று சொல்கிறார்.. ஆழியாளும் சங்கரி,சிவரமணி பின்பற்றியவர் தானே.! அப்படியானால் ஆழியாளும் சங்கரி,சிவரமணி வழி வந்தவர் தானே.!! அதனால் குட்டி ரேவதி சொன்னது சரிபோல தான் தெரிகிறது.. நீங்கள் பார்த்த கோணம் வேறு அதனால் அது தவறாக உங்களுக்கு தெரிகிறது..//
சகோதரம், நான் இன்னா சொல்ல வர்றேன் என்றால்.
//
பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம்//
எனும் கூற்று தவறு என்று கூற வருகிறேன். இப்போது புரிகிறதா?
1990களின் முற்பகுதிக்கும், 1990களின் நிறைவுப் பகுதிக்கும் நிறைய வேறுபாடுகள் இலக்கிய ரீதியில் உள்ளன தானே.
ஆழியாளை விட ஆழியாளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களே ஈழத்தில் அதிக மொழியியற் புரட்சி செய்தவர்களாக ஈழத்து இலக்கிய ஆய்வாளார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் எனும் போதும் குட்டி ரேவதி கூறுவது எப்படிச் சரியாகும்?
@தம்பி கூர்மதியன்
எனினும் கவி உலகம் மீது தங்களின் பற்றையும் ஆர்வத்தையும் மதிக்கிறேன்..
கோபம் நியாயமானது.!! ஆனால் தேவையற்றது..
தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.//
இதில் தவறாக நீங்கள் ஏதும் சொல்லவில்லை.
என் வாதங்களுக்கு எதிர்க் கருத்துக்களை மட்டுமே வைத்துள்ளீர்கள். நோ ப்ராப்ளம்.
அடேயப்பா ஸ்பெக்ட்ரம் 80000 பக்க குற்றப்பத்திரிக்கை மாதிரி இல்ல இருக்கு இந்த பதிவு
கஷ்டம் தான் படிக்கிறேன்
அருமையான விவாதங்கள் பயனுள்ள ஆய்வு தொகுப்பு
ஆ சண்டை.....
இங்கே என்னய்யா நடக்குது இம்புட்டு நீளத்துக்கு நைல் நதி மாதிரி நீளுது...
கருனாநிதிக்கிட்டே பிடிச்சி குடுத்துருவேன் ஆமா.....
நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்கள் சாதியம்,பிரதேசவாதம் ,வறுமை.வேலையில் இட ஓதுக்கீடு ,இனவாதச்சிந்தனை, என பலவற்றை பின் தள்ளிவிட்டது .ஆழியாலுக்கு முன்பே பத்மா சோமகாந்தன்( s.சோமகாந்தன் எழுத்தாளரின் மனைவி)கோகிலா மகேந்திரன் இவர்(நீண்டகாலத்தின் பின் தினக்குரலில் தொடர் எழுதியவர் உயரப்பறக்கும் காகங்கள் என்பது தலைப்பு என் நினைக்கிறேன்(சரியாக ஞாபகம் இல்லை) என ஓரு சிலர் கவிதைத்துறையில் முயற்ச்சி செய்துவிட்டுத்தான் நாவல் எழுதவந்தார்கள் முன் தினகரனில் இவர்கள் களம்கண்டவர்கள் லேக்கவுஸ் தடம்மாற இவர்கள் வேறு திசையில் பிரவேசித்தார்கள். குட்டி ரேவதி தான் அறியாத சிலரைவிட்டுவிட்டு ஆழியாலை மட்டும் விமர்சனத்தில் சேர்த்து மற்றவர்களை மூடிமறைக்கிறார் என்பதில் ஐய்யமில்லை பேராதனை ஜினைதா சேரிப் (மூங்கில் காட்டு நிலா) நுலாசிறியர் இவர்கூட 1989 இல் வளைகுடாவிற்கு போகும் பெண்களின் சூழ்நிலையை பெண்களின் பார்வையில்.
\|என் அனுமதியில்லாமல் எல்லைமீறும் வெள்ளை சேக்கின் அந்தப்புறத்தில் ஆணியடித்து அலையவிடத்துடிக்குது
அதிகாரமில்லா அபலை வேலைக்காரியின்
ஆக்ரோசம்...
இக்கவிதை சிந்தாமணியில் வந்தது பத்திரிக்கை 24பக்கம் கொண்ட அழகான வடிவமைப்பு இப்போது நின்றுவிட்டது.இப்படி சில பெண்கவிஞர்கள் அதிகம் கவனிக்கப்படமல் போனது துரதிஸ்டவசம் இவைபுரியாது குட்டி ரேவதி தன்னை நிலைநிறுத்த தெரியாத புள்ளியில் பயணிக்கக்கூடாது முற்போக்கு பெண்ணிலைவாதிகள் என கனிமொழிபோல் பேசுவதற்கு அதிகமாக உள்ளதை பின் தள்ளிவிட்டு தாங்கள் பெண்கள் என்பதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.இன்னும் பட்டியல் தரமுடியும் கடமைக்கு மணியடித்துவிட்டது மீண்டும் வருவேன்.
நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்கள் சாதியம்,பிரதேசவாதம் ,வறுமை.வேலையில் இட ஓதுக்கீடு ,இனவாதச்சிந்தனை, என பலவற்றை பின் தள்ளிவிட்டது .ஆழியாலுக்கு முன்பே பத்மா சோமகாந்தன்( s.சோமகாந்தன் எழுத்தாளரின் மனைவி)கோகிலா மகேந்திரன் இவர்(நீண்டகாலத்தின் பின் தினக்குரலில் தொடர் எழுதியவர் உயரப்பறக்கும் காகங்கள் என்பது தலைப்பு என் நினைக்கிறேன்(சரியாக ஞாபகம் இல்லை) என ஓரு சிலர் கவிதைத்துறையில் முயற்ச்சி செய்துவிட்டுத்தான் நாவல் எழுதவந்தார்கள் முன் தினகரனில் இவர்கள் களம்கண்டவர்கள் லேக்கவுஸ் தடம்மாற இவர்கள் வேறு திசையில் பிரவேசித்தார்கள். குட்டி ரேவதி தான் அறியாத சிலரைவிட்டுவிட்டு ஆழியாலை மட்டும் விமர்சனத்தில் சேர்த்து மற்றவர்களை மூடிமறைக்கிறார் என்பதில் ஐய்யமில்லை பேராதனை ஜினைதா சேரிப் (மூங்கில் காட்டு நிலா) நுலாசிறியர் இவர்கூட 1989 இல் வளைகுடாவிற்கு போகும் பெண்களின் சூழ்நிலையை பெண்களின் பார்வையில்.
\|என் அனுமதியில்லாமல் எல்லைமீறும் வெள்ளை சேக்கின் அந்தப்புறத்தில் ஆணியடித்து அலையவிடத்துடிக்குது
அதிகாரமில்லா அபலை வேலைக்காரியின்
ஆக்ரோசம்...
இக்கவிதை சிந்தாமணியில் வந்தது பத்திரிக்கை 24பக்கம் கொண்ட அழகான வடிவமைப்பு இப்போது நின்றுவிட்டது.இப்படி சில பெண்கவிஞர்கள் அதிகம் கவனிக்கப்படமல் போனது துரதிஸ்டவசம் இவைபுரியாது குட்டி ரேவதி தன்னை நிலைநிறுத்த தெரியாத புள்ளியில் பயணிக்கக்கூடாது முற்போக்கு பெண்ணிலைவாதிகள் என கனிமொழிபோல் பேசுவதற்கு அதிகமாக உள்ளதை பின் தள்ளிவிட்டு தாங்கள் பெண்கள் என்பதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.இன்னும் பட்டியல் தரமுடியும் கடமைக்கு மணியடித்துவிட்டது மீண்டும் வருவேன்.
நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்கள் சாதியம்,பிரதேசவாதம் ,வறுமை.வேலையில் இட ஓதுக்கீடு ,இனவாதச்சிந்தனை, என பலவற்றை பின் தள்ளிவிட்டது .ஆழியாலுக்கு முன்பே பத்மா சோமகாந்தன்( s.சோமகாந்தன் எழுத்தாளரின் மனைவி)கோகிலா மகேந்திரன் இவர்(நீண்டகாலத்தின் பின் தினக்குரலில் தொடர் எழுதியவர் உயரப்பறக்கும் காகங்கள் என்பது தலைப்பு என் நினைக்கிறேன்(சரியாக ஞாபகம் இல்லை) என ஓரு சிலர் கவிதைத்துறையில் முயற்ச்சி செய்துவிட்டுத்தான் நாவல் எழுதவந்தார்கள் முன் தினகரனில் இவர்கள் களம்கண்டவர்கள் லேக்கவுஸ் தடம்மாற இவர்கள் வேறு திசையில் பிரவேசித்தார்கள். குட்டி ரேவதி தான் அறியாத சிலரைவிட்டுவிட்டு ஆழியாலை மட்டும் விமர்சனத்தில் சேர்த்து மற்றவர்களை மூடிமறைக்கிறார் என்பதில் ஐய்யமில்லை பேராதனை ஜினைதா சேரிப் (மூங்கில் காட்டு நிலா) நுலாசிறியர் இவர்கூட 1989 இல் வளைகுடாவிற்கு போகும் பெண்களின் சூழ்நிலையை பெண்களின் பார்வையில்.
\|என் அனுமதியில்லாமல் எல்லைமீறும் வெள்ளை சேக்கின் அந்தப்புறத்தில் ஆணியடித்து அலையவிடத்துடிக்குது
அதிகாரமில்லா அபலை வேலைக்காரியின்
ஆக்ரோசம்...
இக்கவிதை சிந்தாமணியில் வந்தது பத்திரிக்கை 24பக்கம் கொண்ட அழகான வடிவமைப்பு இப்போது நின்றுவிட்டது.இப்படி சில பெண்கவிஞர்கள் அதிகம் கவனிக்கப்படமல் போனது துரதிஸ்டவசம் இவைபுரியாது குட்டி ரேவதி தன்னை நிலைநிறுத்த தெரியாத புள்ளியில் பயணிக்கக்கூடாது முற்போக்கு பெண்ணிலைவாதிகள் என கனிமொழிபோல் பேசுவதற்கு அதிகமாக உள்ளதை பின் தள்ளிவிட்டு தாங்கள் பெண்கள் என்பதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது.இன்னும் பட்டியல் தரமுடியும் கடமைக்கு மணியடித்துவிட்டது மீண்டும் வருவேன்.
@நேசன்://விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது //
நண்பர் நேசன் அவர்களே.!! பொட்டாம் பொதுவாய் எல்லோரையுந் இப்படி சொல்வது சரியா.?
@நேசன்:
//புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.//
தமிழர்களுக்குள்ளே இப்படி ஒரு மனப்பக்குவமா.? நண்பரே.! நாங்கள் உங்களோடு ரத்தம் சிந்தாமல் இருக்கலாம்.. உரிமைகள் மறுக்கப்பட்ட இடத்தில் உணர்வுகளுக்காக வாழாமல் இருக்கலாம்..
உங்களை பற்றி வருத்தமாக பேசி பேசியே உங்களை எங்களிடத்தும் இருந்தும் ஒதுக்கி வைத்து பார்க்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா.?
தமிழ்நாட்டவர்,ஈழதமிழர் என என்றும் நான் பிரித்து பார்த்ததில்லை.. நீங்கள் அனுபவித்த வலியை நாங்கள் உணர்கிறோம்.. இடம் மாறலாம் மொழி ஒன்றுதான்..
இங்கயும் சிலர் உங்களை பற்றி புரியாமல் பதிப்புகளை வெளியிடுவர்.. ஆனால் எம்மில் பலர் உங்களின் வலியை உணர்ந்தவர்.. நாங்கள் பார்வையாளர்கள் தான்.. ஆனால் உள்ளார்ந்து பார்க்கும் நேசவாதிகள்.. புரிந்துகொள்ளுங்கள்..
எமது எழுத்து தொடங்கியது தமிழுக்காக(ஈழம்), உங்களின் வருத்தத்தை பதிவு செய்யும் விதமாய்.. ஆனால் எம் தமிழர் வருந்தியது எழுத்தாய் கூட இருக்ககூடாது என கிழித்துபோட்டவன் நான்.. எல்லோருக்கும் பொக்கிஷமான அவர்களின் முதல் கவிதை என்னுடைய முதல் கவிதை எங்கோ குப்பை தொட்டியில்.. எதற்காக.? நமக்காக..
@Nesan
நிருபன் நான் அறிந்தவரையில் ஈழத்து கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ்நாட்டவருக்கு இருக்காது அவர்களால் எங்களின் இயல்பு நிலை பிரதேசவாதம்,போராட்டவழிமுறைகள் 1990 இன் பின் ஏற்பட்ட போராட்டவீரியம் எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏதுமற்ற பார்வையாளர்கள் மட்டுமே.பெண்னிலைவாதம் சுதந்திரம் என்ற பரந்ததேசத்தில் குறுநிலைவாதங்க//
வணக்கம் சகோதரம் நேசன் அவர்களே, நீங்கள் இவ்விடத்தில் குறிப்பிடும், ‘ஈழத்துக் கவிதைகளை விமர்சிக்கும் பின்புலம் தமிழ் நாட்டவருக்கு இருக்காது எனும்’’ கருத்தினை நிராகரிக்கிறேன். மறுத்துரைக்கிறேன்.
கவிதைகளை விமர்சிப்பதற்கு அக் கவிதை நூல்களைப் பற்றிய புரிதலும், அந் நூல்களும் கிடைத்தால் போதும், மொழியை யார் வேண்டுமானாலும், தமது தேவைக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் கையாளாலாம்.
கவிதைகளை விமர்சிப்பதற்கு அந்தக் கவிதைகள் பற்றிய பூரண அறிவு இருந்தாலே போதும்.
இங்கே நான் பகிர்ந்து கொண்ட விமர்சனக் குறிப்புக்களில் ஒரு சிலவும் தமிழகச் சகோதரிகளிடம் இருந்தே எடுக்கப்பட்டன.
கவிதையினை விமர்சிக்கும் பின்புலம் இருக்காது எனும் தொனிப் பொருளில் தமிழ்கத்தில் இருக்கும் அனைத்து இலக்கியவாதிகளையும் சேர்த்துக் குறிப்பிடும் வகையிலான உங்களின் சொல்லாடல் இவ் இடத்தில் தவிர்க்கப்பட வேண்டியது.
நான் கூட இப் பதிவின் இறுதியில் கேட்டுக் கொண்ட விடயங்கள்
//இக் கேள்விகளுக்குச் சாதகமான பதில்கள் அல்லது விளக்கங்கள் கிடைக்கும் எனும் அடிப்படையில் இப் பதிவினைச் சகோதரி ரேவதியிடமும், ஏனைய வாசக நெஞ்சங்களிடமும் சமர்பிக்கிறேன்.
இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், குட்டி ரேவதியின் கட்டுரையில் காணப்படும் ஒரு சில குறிப்புக்கள், தவறுகளிற்கு விளக்கங்களைக் கேட்டு நிற்பதேயாகும். பதிவர்கள், வாசகர்கள் இப் பதிவின் உள்ளடகத்தினை உணர்ந்தவர்களாய் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில் இப் பதிவினை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
@கூர்மதியான் ஆவர்களே உங்களை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் எங்கள் வலி,வேதனைகள் தமிழ்,ஹிந்தி சினிமாவில் சொல்லப்படுவதுபோல் காஸ்மீரில்,ஈழத்தில் இரானுவம் மக்களை மீட்பது தேசத்தியாகம் என்று மனிரத்தினம் படத்தில் காட்டபடுவதில் போல் உண்மையில்லை எங்கள் வலி நான் நாடுகடந்து வாழ்லும் துயரம் எழுத்தில் வடிக்க என்னால் (துயரம்,நேரமின்மை)முடியாது ஆனால் ஈழ்த்தின் வரலாறு வித்தியாசமானது கவிதைப்போக்கு 1990முன்பே முன்னேறியது என்பதற்கு மலையக கவிதைத்தொகுதிகளாக வெளிவந்துள்ள (புதியமொட்டுமள் -1990) அரும்புகள்(1990)இத்தொகுப்பில் கலைமகள் ஹிதாயாவின் ""அந்தநாள் என்று வரும்"" செல்வி அரபா உம்மா(இஸ்லாமியச் செல்வி) போன்றோர் பெண்விடுதலை ,துயரங்களை பாடுகின்றானர் என்று மலையகத் தமிழ் இலக்கியம் 1994 இல் வெளியிட்ட நூல் பக்கம்(224) கூறுகிறது இன்னூல் நேரத்திற்கே அச்சிடமுயன்றும் அரசியல்காரனங்களால் பின்போடவேண்டி ஏற்பட்டது துரதிஸ்டவசம். மேலும் கலாநிதி .க.அருணாசலம் அவர்கள் தொகுத்துள்ள இன்நூலில் அவர் 1990 இற்கு முன் எழுதிய
புதுக்கவிஞர்கள் பட்டியலில் ஆர்.நளினி,க.நாகபூசனி(இப்போது இலங்கை வர்தகசேவை/தென்றல் அறிவிப்பாளினி(எனக்குப்பிடித்த) )பிரமிளா கந்தையா, என்போர் மலையககவிதையுலகில் நம்மிக்கையூட்டும் கவிஞர்கள் என்று கூறியுள்ளார்.அதேபோல் பல புதியவர்கள் பெண் துயரங்களை ஆண்கள் பாடியுள்ளனர் அதில் குறிஞ்சி தென்னவன் முக்கியமானவர்,மற்றும் வ.ஜ.சு.ஜெயபாலன்(ஆடுகளம் வில்லன்) போன்றோர் 1990இற்கு முன் கவிதையூடாக
பெண்னிலையிலைபாடியுள்ள நிலையில் குட்டிரேவதி வரலாற்றை திரிவு படுத்துகிறார்(வைரமுத்து+மனிரத்தினம் கன்னத்தில் முத்தமிட்டால்)இப்படி சிலர் செய்யும் வரலாற்றுத்தகவல்கள் எங்களை காயப்படுத்துகிறது.நண்றி நிருபன் நீங்கள் தொடங்கியதால் என் வேதனையை இங்கு பதிவு செய்யுரேன் இதில் பிழையிருப்பின் சின்னவன் அடியேனை இலக்கியம் படிக்க யுத்தம் விடவில்லை மன்னியுங்கள் இன்னும் தொடர்வேன் புலம் பெயர்தேசத்தில் அடிப்படைதேவைகளை தேடுவதில் அதிகநேரம் பதிவுகளை தொடரமுடியவில்லை.
அடியேன் சொல்லவருவது ஈழத்தின் கவிதையினை/நாவல்/சிறுகதை எதிலும் எம் துயரம்,வாழ்வுநிலை எதுவும் வெறும் கற்பனை அல்ல அது வரலாறு ஆனால் புகழ் பெறவேண்டி சில மேலோட்டமாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுறும் என்று பேரில் மற்றவரகளை கீழ் இறக்கவேண்டாம் என்பதைத்தான் அடியேன் சொல்லுறன் நிரூபனே இன்னும் பேசலாம் ரயில் வருகிறது நான் ஏறனும் இது என்ன யாழ்தேவியா?.
.
@நிரூபன்
ஆமிரபாலி பற்றித்தெரியாது.. ஆதிரா அல்லது அதீதா என்ற பெயரில் எழுதியது கற்சுறா என்று எங்ஙணம் சொல்கிறீர்கள்???
@கிருத்திகன்
என் பழைய பதிவுகளை ஆர்வத்துடன் படித்து, அதில் உள்ள ஐயங்களைக் கேட்கும் உங்களுக்கு முதலில் நன்றிகள் சகோ.
மாலிகா எனும் பெயரில் எழுதிய புதுவை இரத்தினதுரை என்பது போல,
ஆமிரா, கற்சுறா முதலிய பெயரில் எழுதியவர்களும் ஆண்களே என இருள்வளியில் வெளி வந்த கவிதைகளை ஆய்வு செய்துள்ள றஞ்சி அவர்கள் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான இணைப்பினை இங்கே பகிர்கிறேன் சகா.
http://www.keetru.com/literature/essays/ranjini.php
சுறாவிடமே கேட்டுப்பார்க்கிறேன் நிரூபன்
கிருத்திகன் said...
சுறாவிடமே கேட்டுப்பார்க்கிறேன் நிரூபன்//
என்னய்யா, குழப்புறீங்க. அப்போ றஞ்சியின் ஆய்வும் பொய்யா;-))
@நிரூபன்..
றஞ்சியின் ஆய்வின் மெய் பொய் பற்றி எனக்குத் தெரியாது. என் இனிய நண்பர் ஒருவர் ஒன்று சொல்வார். ‘இலக்கியம் என்பது வேறு, இலக்கிய அரசியல் என்பது வேறு’ என்று. இலக்கிய அரசியல் தமிழ்ச்சூழலில் பொய்மை, மெய்மைகளைக் கடந்து ஊகங்களினடிப்படையில் எழுவது.
@கிருத்திகன்
@நிரூபன்..
றஞ்சியின் ஆய்வின் மெய் பொய் பற்றி எனக்குத் தெரியாது. என் இனிய நண்பர் ஒருவர் ஒன்று சொல்வார். ‘இலக்கியம் என்பது வேறு, இலக்கிய அரசியல் என்பது வேறு’ என்று. இலக்கிய அரசியல் தமிழ்ச்சூழலில் பொய்மை, மெய்மைகளைக் கடந்து ஊகங்களினடிப்படையில் எழுவது.//
சகோ, தங்களின் இலக்கிய அரசியல் பற்றிய கூற்றினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இங்கே குறிப்பிட்ட ஒரு காலத்தினை அடிப்படையாக வைத்து எழுந்த கவிதை இலக்கியத்தின் உள்ளடக்கத்தினைத் தானே என் பதிவில் ஆதாரங்களுடன் ஆராய்ந்திருக்கிறேன். ஊக்கங்களின் அடிப்படையில் இப் பதிவினை தயாரிக்கவில்லை தானே சகோ.
குட்டி ரேவதியின் விளக்கங்களும், ஈழத்துக் கவிதை பற்றிய விடயங்களும் ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கலாம், அவரது கூற்றுக்களை நிராகரிக்க நான் கையாண்டுள்ள எடுகோள்கள் ஆதாரங்களை அடிப்படையாக வைத்துத் தான் மேற்கோளிடப்பட்டுள்ளன சகோ.
Post a Comment