Sunday, July 6, 2014

பிரபாகரனை வைத்து அரசியல் பிச்சை எடுக்கும் சீமான் எனும் நாகரிக கோமாளி!!


தமிழக அரசியல் மேடைகளில் அவ்வப் போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாக ஈழம் என்பது உள்ளது என்பது நாம் கண் கூடாக கண்டு வரும் உண்மை. இதில் 2009ம் ஆண்டின் பின்னரான ஈழ விடுதலைப் போராட்ட மாறுதல்கள் வெத்து வேட்டு அரசியல் நிகழ்த்தும் காமெடிப் பீஸ்களிற்கு வாயில் அவல் கிடைத்த கதையாக மாறியுள்ளது. 

போட்டோ ஷொப்பில் செய்யப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சீமான் அவர்கள் நின்று எடுக்கப்பட்டது போன்ற மாயை தரும் புகைப்படம் அவரின் அரசியல் புள்ளிக்கு கோலமிட்டது. அதிலிருந்து ஆரம்பித்த அரசியல் பிச்சையெடுப்பு சம்பவம் இன்று புலிகளின் சின்னம் போன்ற மாதிரிச் சின்னத்தை அவர் கட்சியில் புகுத்தியதன் ஊடாக இன்றும் தொடர்கின்றது. 

இந்தச் சம்பவங்களையெல்லாம் பார்க்கையில் சே..எத்தனை போராளிகளின் தியாகங்கள் இப்படியெல்லாம் சிலரின் பேராசைக்காக பயன்படுத்தப்படுகின்றது எனும் ஏக்கம் வந்து போகின்றது. சீமானின் அரசியல் மேடை ஒவ்வொன்றும் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கொடுக்கும் அறை கூவல் மேடையாக காண்பிக்கப்படுகின்றது. இதில் சீமானும், அவரது கட்சித் தொண்டர்களும் போடும் பில்டப் இருக்கின்றதே..ஸப்பா என்ன சொல்ல

“அண்ணன் பிரபாகரனின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தான் அரசியல் நீரோட்டத்தில் கலப்பதாக ஒரு பேச்சு. ( நல்ல வேளை அவர் கனவில் வந்ததாக சொல்லவில்லை)
அடுத்து பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.. அப்புறம் கட்சிக் கொடி.. அண்ணன் வழியில் அனல் பறக்கும் பேச்சாளர் சீமானின் உணர்வை உலகிற்கு உணர்த்த..

இந்தக் காமெடிகளையெல்லாம் மெய்ப்பிக்கும் வண்ணம் சில போட்டோக்களை இணைத்துள்ளேன். பார்த்து நீங்களும் சிரித்து மகிழுங்கள்.

2 Comments:

எம்.ஞானசேகரன் said...
Best Blogger Tips

இப்படி ஒரு பிழைப்பு எதற்கு இந்த சீமானுக்கு என்றுதான் தெரியவில்லை.

ராவணன் said...
Best Blogger Tips

சீமான் மட்டுமா....வைகோ... நெடுமாறன் என்று பலரையும் இதில் குறை கூறலாம். ஈழத்தைப் பற்றி பேசுவதால் இவர்களுக்கு என்ன லாபம்.
பிரபாகரனுக்கு என்ன லாபமோ அதுதான் இவர்களுக்கும் லாபம்.
பிரபாகரன் சுயநலவாதி என்றால் இவர்களும் அப்படியே.
ஈழத்துக்கு ஆதரவாக பேசுபவர்களை எள்ளி நகையாடுபவர்கள் சிங்கள அடிவருடிகள் என்று நான் கூறுகின்றேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails