Friday, July 4, 2014

தூசு தட்டப்படும் ஒரு பதிவரின் அந்தரங்கம் - விபரம் அறிய விரைந்து வாருங்கள்

வணக்கம் மக்கள்ஸ், எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? ரொம்ப நீண்ட நாளைக்கு அப்புறமா உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..என்ன அப்படிப் பார்க்கிறீங்க..நான் ஒண்ணும் காணாமற் போகவில்லைங்க. வேலை பிஸி..டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படிக் கிடைத்தாலும் அந்த நேரம் புரட்சி எப்.எம் இல் நிகழ்ச்சி தொகுத்து வழங்க செலவாகிடுது. இந்த லட்சணத்தில எப்படி நான் ப்ளாக் எழுத முடியும். 

கொஞ்சம் இருங்க..என்னங்க அப்படிப் பார்க்கின்றீங்க. நாளொன்றுக்கு மூணு பதிவு எழுதின பதிவர் சரக்குத் தீர்ந்ததும் ஓய்ந்திட்டார் அப்படீன்னு நெனைக்கிறீங்களா? நமக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமில்லே..எந் நேரமும் இன்ரநெட்டில உட்கார்ந்திருந்தால் எப்படியுங்க வீட்டு வேலைகளைக் கவனிப்பது? அது தானுங்க சமைப்பது.. துணி துவைப்பது. பெருக்குவது..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூட்டுவது!!

இதுக்குப் பிறகும் கொலவெறியோடு ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? அதாகப்பட்டது பதிவர் சந்திப்பு இல்லை பதிவர் விழா ஏதும் நடக்குதா? இந்தப் பய புள்ளை தானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்க எழுத வந்திட்டானோ அப்படியெல்லாம் நினைக்கப்படாது. ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் பதிவு எழுதியாச்சும் பதிவர் என்று நிரூபிக்கும் பழக்கம் நமக்கு எல்லாம் இல்லைங்க.. எழுதினா வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு..ஹா..ஹா இது நம்ம ஸ்டைல். அப்புறம் இந்தப் பெரிய இடை வெளியில் என்ன நீ சாதிச்சே..அப்படீன்னு கேட்கிறீங்க தானே?

நிறைய விஷயங்கள் சாதிச்சிருக்கேன்..நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு மக்கள்ஸ். பதிவு எழுத வந்து என்ன கிழிச்சே என்று பலர் கேட்கலாம்... பதிவராக இருந்து ஒரு வானொலி ஆரம்பித்து இன்று 75,000 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் Fans உடன் வெற்றி நடை போடுகின்றோம்..இது நம்ம இன்னோர் உலகம். பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யுங்கள்.
இனிமே நேரம் கிடைக்கும் சமயங்களில்..அவ்வப் போது உங்களோடு உரையாட வருவேன். நீங்களும் உங்கள் நிரூபனிற்கு உங்களின் பழைய அன்பினை மறக்காது வாரி வழங்குவீர்கள் என நம்புகின்றேன். அப்புறம் என்னங்க போட்டோவை பார்த்து ஷாக் ஆகுறீங்க..ஹே..ஹே இது நம்ம புது கெட்டப். இனிமே பலதரப்பட்ட விடயங்கள் அவ்வப் போது உங்களை மகிழ்விக்கும்.

அப்புறமா என் குரலைக் கேட்டு மகிழனும் என்று ஆசையா? நாள் தோறும் உங்கள் புரட்சி எப்.எம் இல் இந்திய நேரம் மாலை 06.00 மணி முதல் “தூவானம்” எனும் நிகழ்ச்சி பண்றேன்..கேட்டு மகிழ இங்கே கிளிக் பண்ணுங்கள். 

3 Comments:

Mathuran said...
Best Blogger Tips

வெல்கம் பேக் தலைவா ! ரீ என்ரிக்கு வாழ்த்துக்கள் !

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்!

தனிமரம் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் குருவே தொடரட்டும் உங்கள் வெற்றிப்பாதை!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails