Saturday, October 5, 2013

சும்மா பிரிச்சு மேஞ்சிடுவோமில்லே!

என்னங்கடா இது ஓர் புது பேச்சு என்று பார்க்கிறீங்களா? இல்லவே இல்லைங்க. நம்ம ஊர்ல பிரிச்சு மேஞ்சிடுவோம் என்பது ஓர் வட்டார மொழி வழக்குப் போல என்று சொல்லலாம். ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வோர் விதமான வட்டார மொழி வழக்கு இருக்கும். அவ் வகையில் தான் எங்கள் ஊர்களில் மிகவும் பிரபல்யமானது “சும்மா பிரிச்சு மேய்தல்” என்பதும்.


ஒரு வியாபாரம் அமோகமாக நடக்குது என்றால் ‘அடப் போங்கப்பா..இன்னைக்கு பிஸ்னஸ் சும்மா பிரிச்சு மேஞ்சிருக்கில்லே” என்று சொல்வோம். அது போல அதிகளவானோர் ஒரு நிகழ்விற்கு வருகை தந்திருந்தால், “சனம் சும்மா பிரிச்சு மேஞ்சிருக்கு” என்று சொல்லுவோம்.

இது தவிர கிரிக்கட்டில் ஓர் அணி அமோகமாக ரண் அடித்துக் கொண்டிருந்தால் அதனையும் ‘சும்மா பிரிச்சு மேஞ்சிருக்காங்க” எனும் தொனிப்படச் சொல்லுவோம். அமோகமாக , அதிரடியாக நிகழும் சம்பவங்களைக் கூட பிரிச்சு மேஞ்சிருக்கு எனச் சொல்லுவார்கள். இந்தச் சொல் தொடர்பில் இன்னோர் கருத்தினையும் நினைவில் கொள்ளலாம். “பிரிச்சு மேஞ்சிருக்கு” என்பது கெட்ட அர்த்தத்திலும் வந்து கொள்ளுமாம்.

இன்னைக்கு நம்ம ப்ளாக்கிற்கு அதிக ட்ராபிக் கிடைத்தால் அதனையும் இதே அர்த்தம் கொண்டு தான் சொல்வோம். “ட்ராபிக் சும்மா பிரிச்சு மேஞ்சிருக்கு” என்று!
சூடான படங்கள், சுவையான செய்திகள், இதனை விட இன்னும் சுவாரஸ்யமான விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

உங்கள் பார்வைக்காக:

பேஸ்புக்கில் ஏமாற்றும் பெண்கள் - படங்கள் இணைப்பு 

கரீனாவின் கவர்ச்சிப் படங்கள்

ஜெய் இன் வாய்ப்பை பிடுங்கிய அஜித்

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails