Thursday, October 3, 2013

கலைஞரின் மானம் காற்றிலே பறந்தது - படம் இணைப்பு!

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்
கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்
சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்
செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!
முத்தமிழறிஞர்! முது பெரும் முதல்வர் - ஆட்சி
பித்தது பிடித்து தினமும் பிதற்றிடலானார்
செத்திடும் வேளையில் பொதுச் சொத்துமேல் ஆசை
நித்தமும் கொண்டவராய் நிதம் வருகின்றார்!
மக்களின் சொத்தினை மர்மமாய் கொள்ளையிட்டார்
மாளிகை கட்டி தன் மக்களை வளர்த்திட்டார்
அக்கிரமங்கள் எங்கனும் நடந்தால் - இரங்கி
அறிக்கையும் விட்டு அனுதாபத்தால் ஏமாற்றிடுவார்!!

மணிமேல் ஆசை கொண்டார் 
மகளை ராசாவுடன் கூட்டாக்கி
கனிவாய் ஊழலிட்டார் - கனியின்
இனிய வாழ்வையும் இடருள் அழுந்த வைத்தார்

கோபாலபுரத்தில் கோமகனாய் கொலுவீற்றிருப்பார்
ஆவேச அறிக்கை விட்டு இன்றோ சினிமாவில்
வடிவேல் இல்லாத குறையினையும் அய்யா போக்கிடுவார்
தாவாத தன் உணர்வு இன்னமும் குறையலையே என
மானாட மயிலாட பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கிடுவார் - இன்னும்
போகாத தன்னுயிரை பெருந்தீயில் மாய்ப்பேன் என 
பொய்யெல்லாம் உரைத்து பேசாமல் சிரிக்க வைப்பார்! 

கலைஞரின் கோவணம் கோபாலபுரத்து
காற்றினில் பறந்ததோ - மக்கள் கண்ணீரின்
வலிமையால் உந்தன் கட்சி வாழ்வும் 
தோல்வியில் துவண்டதோ? - எளிமையின் சிகரமாம்
அண்ணாவை முன் வைத்து நீ நடத்தும்
ஏமாற்று வித்தையும் இன்று சிதைந்ததோ - பேரீச்சம் பழத்திற்கும்
விலை போகா இரும்புத் துண்டாய் 
உன் அரசியல் வாழ்வும்

வஞ்சியர் நடனம் பார்க்கையில் வதையோனே 
மஞ்சள் துண்டதும் தொலைந்ததோ - மனையாளை
கொஞ்சையில் உந்தன் வெள்ளை துண்டும் 
வேறிடம் தேடி நகர்ந்ததோ - சிந்தனை எல்லாம்
அஞ்சிடா அரசியல் நடாத்துவதில் என சொன்ன பெரியோனே
கஞ்சனாய் உனை ஆக்கிட்டாரோ - நீயும் காவி உடுத்த
துறவியாய் மாறிட ஆசை கொண்டாயோ?

கோவணம் எனப்படுவது ஆபாசச் சொல் அல்ல. தமிழர்களின் பாரம்பரிய உடையினைக் குறிப்பிடும் சொல் ஆகும். 



இப் பதிவிற்குரிய படமானது பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்டது!
சூடான படங்கள், சுவையான செய்திகள், இதனை விட இன்னும் சுவாரஸ்யமான விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

உங்கள் பார்வைக்காக:

* கணவர் இல்லா இடத்தில் நண்பருடன் காதல் - ஓர் பெண்ணின் மனக் குமுறல்

* மீரா ஜாஸ்மீன் - குளு குளு படங்கள்.

* வசூலில் ராஜா ராணி - விபரம் அறிய இங்கே கிளிக்

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails