Friday, April 5, 2013

சூடான இடுகையில் சுகமாக குந்துவது எப்பூடி?

எச்சரிக்கை - இது பதிவர்களுக்கு உகந்த பதிவல்ல
தமிழ்மணத்தில் சூடான இடுகை என்றோர் பகுதி இருப்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமாகும். வாசகர் பரிந்துரை, தமிழ்மண மகுடம், வரிசையில் சூடான இடுகையும் ரொம்ப ரொம்ப சிறப்பிற்குரிய பகுதியாகும். 

இப்பொழுது தமிழ்மணத்தில் பல பதிவுகள் தலைப்புக்களில் புரட்சி செய்தால் தான் சூடான இடுகையினை எட்டிப் பார்க்கிறது. எவ்ளோ கஷ்டப்பட்டு, ரூம் போட்டு யோசித்து ஒரு நல்ல பதிவு எழுதினால் யார் தான் கண்டுக்கிறாங்க. இப்படி சூடான தலைப்பு வைத்து சுகமாக மகுடத்தில் அடியேனும் போய் முற் காலத்தில் உட்கார்ந்திருக்கேன். 

இந்த சூடான இடுகையில் சுகமாக போய் உட்காரணும் என்றால் நீங்க என்ன செய்யனும் தெரியுமா? கீழ் காணும் தலைப்புக்களில் உங்கள் பதிவுகளை எழுத வேண்டும்.
*உங்கள் பதிவுகளில் ஆபாசமாக, நிர்வாணமாக உள்ளிட்ட தலைப்புக்கள் இடம் பெற வேண்டும்
*அதை, இதை , எதை என்று குறிச் சொற்கள் மூலம் உங்கள் பதிவு அலங்கரிக்கப்பட வேண்டும்.
*உங்கள் மனைவியை நடு வீதிக்கு இழுக்கும் வகையில் தலைப்பு வைத்து பதிவு எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும். 
உதாரணமாக - என் மனைவியா? இப்படியா? 
திருமணமணத்திற்கு பின் என் மனைவிக்கு இப்படியா?
இப்படி எழுத தெரிந்தால் இக் காலத்தில் சூடான இடுகையில் சுகமாக உட்காரலாம்!

இப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல! 


1 Comments:

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

கரெக்ட்டுங்க.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails