எம் உறவுகளின்
ஊரில் இப்போதுதேர்தல் காலம்!
தம் தேவைகளை உணர்ந்தோராய்
வேட்பாளர்கள் அனைவரும்
வீடு தேடி வரும் காலம்
கையெடுத்து கும்பிட்டு
தம் சுயத்தை வெளிப்படுத்த
கவலையின்றி பிச்சை கேட்கும் காலம்!
பொய்களையெல்லாம் வர்ணமடித்து
பேச்சோசை எனும் பூ(ச்) சூடி
அலங்கரித்து, அழகாக்கி
அனைவரின் கதவுகளையும் தட்டி
வாக்குக் கேட்கும் இழிவான காலம்!
வங்குரோத்து அரசியல்வாதிகளின்
வயித்து பிழைப்புக்கான வசந்த காலம்!!
மக்களின் பிரச்சினை
என்னவென்றே தெரியாத
மந்திரிகள் - குள்ள நரிகள்
தாம் புசித்ததை பணநாயகத்தை
ஏப்பம் விடும் நோக்கில்
’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!
அதன் ஓர் கட்டமாக
இப்போது சங்கரன் கோவிலில்
அரங்கேறப் போகிறது சிங்கிடி நடனம்!!
உடலின் புஜ பலத்திற்கு
வார்த்தை ஜாலமிட்டு
வானொலி தொலைக்காட்சியெங்கும்
வாக்குக்காய் கையேந்தும்
வல்லூறுகளின் பிரச்சாரம்!
வாக்குறுதிகள் எல்லாம்
இந்த வசந்த காலம் முடிவுற்றதும்
காற்றில் பறக்கும்
ஐயகோ அபச்சாரம்!!
வீதிகள் தோறும்
திடீரென முளைக்கும்
விலை மதிப்பற்ற
விளம்பர பலகைகள்;
வித்தியாசம் வித்தியசமாய்
அழுக்காச்சி அரசியல்வாதிகளின்
வித்தைகளைப் புகழ்ந்து
தெருவெங்கும் முளைக்கும் சிலைகள்!!
விளம்பர பலகைகளில்
நாக்கு கிழிபட்ட படி
நாலு வார்த்தைகளை
உதிர்க்கும் உயிரற்ற ஜீவன்கள்!
நம்பி வாக்களித்து
எதிர்காலத்தை
தொலைப்போருக்கு என்று
நீங்கும் இந்த இழிவான சாபங்கள்?
மக்கள் நலன்களெனும்
மேடை நாடகத்தில்
மந்திரிகள் வில்லன்களாய்;’
சந்தர்ப்பவாத, சூழ்ச்சிகளை
அறியாதோராய்
குறிஞ்சிப் பூவை போல
இலவசங்கள் இம் முறையும்
கிடைக்காதா என இரஞ்சி
ஏப்பம் விட்ட படி
எல்லோர் முகங்களும்!
விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு முதல்
மேல் நாட்டு விஸ்கி வரை
பிரச்சாரங்களின் பெறுமதியை
வாக்குகளாய் மாற்றும்,
இம் முறையும்
அது கிடைத்துவிட்டால்
கட்சிகளை மக்கள்
மனங்கள் வாயாரப் போற்றும்!!
வருடம் தோறும்
காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்
அவற்றின் உண்மையை
உணராதவர்களாய் சேற்றில்
கால் பதிக்கும் ஏழைகள்!
மீண்டும் தேர்தல் வரும்,
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்,
இலவசங்கள்
இன்று போல்
என்றென்றும்
இடை விடாது தொடரும்!!
தலையில் மிளகாய்
அரைக்கும் வித்தை
தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!
மக்களின் அன்றாட
வாழ்வோ நெருப்பில்
மெழுகு போல எரியும்!
|
9 Comments:
மீள் வணக்கம் நிரூபன்!இன்றைக்கு லீவோ?இருங்கள் படித்து விட்டு............
@Yoga.S.FR
மீள் வணக்கம் நிரூபன்!இன்றைக்கு லீவோ?இருங்கள் படித்து விட்டு............
//
வணக்கம் ஐயா, இன்னைக்கு கொஞ்சம் பிரீ...
அதால உங்களோடு உறவாட முடிகிறது.
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.
இலவசங்கள்
இன்று போல்
என்றென்றும்
இடை விடாது தொடரும்!!////அதெப்படி திடீரென்று நிறுத்துவது?ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடருமென்பது "முத்தமிழ்"வித்தகர் உதிர்த்த பொன்மொழியாயிற்றே????
@Yoga.S.FR
அதெப்படி திடீரென்று நிறுத்துவது?ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடருமென்பது "முத்தமிழ்"வித்தகர் உதிர்த்த பொன்மொழியாயிற்றே????//
அந்த வாயில யாராச்சும் பினாயில் ஊத்துங்கப்பா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நிரூபன் said...
@Yoga.S.FR
அதெப்படி திடீரென்று நிறுத்துவது?ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடருமென்பது "முத்தமிழ்"வித்தகர் உதிர்த்த பொன்மொழியாயிற்றே????//
அந்த வாயில யாராச்சும் பினாயில் ஊத்துங்கப்பா..////கண்டிப்பாக!ஏனெனில் அந்த வாய் நாற்றம் தாங்கவே முடியவில்லை.அப்போது செய்யாததை,இப்போதும் செய்ய மறுக்கும் இந்த நா........யை(இடையில் இரண்டு எழுத்துகள் வரும்)என்ன செய்ய????
இன்று இலவசங்கள் இல்லை என்றாள் யாரையா ஓட்டுப் போடுவாங்க இந்த இலவசத்தில் தான் தமிழன் பொழுதே போக்கின்றான்.ஐயாவும் அம்மாவும் தருவது போதது. இன்னொரு டீவி கிடைத்தால் இன்னும் தேவல.
ஏவறை க்கு அர்த்தம் தேடினேன் இறுதியில் கொடுத்தது சிறப்பு
மீண்டும் தேர்தல் வரும்,
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்,
உண்மையச் சொன்னன்...அப்படி தானே
http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html
முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!
Post a Comment