இந்தியாவைப் போர்க் குற்ற வழக்கில் நிறுத்தப் போகும் இலங்கை! காஷ்மீர் படுகொலைகள் மீண்டும் கிளறப்படுமா?
எல்லோருக்கும் வணக்கமுங்கோ, இனிய சந்தோசமான வியாழக்கிழமை வாழ்த்துக்களுங்கோ!
ஈழப் போரில் இலங்கையின் வெற்றிகளுக்குப் பின் நின்றோரில் கணிசமான பங்களிப்பினை வழங்கியது இந்தியா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். முப்பதாண்டு காலத் தார்மீகப் போரை முடிவிற்கு கொண்டு வருவதில் இலங்கையினை விட,இந்தியா தான் பல வழிகளிலும் ஆக்ரோசத்துடன் நின்று தனது பங்களிப்பினை போர்க் களத்தில் வளங்கியிருந்தது. கடற் கண்காணிப்பு, விமானங்களைக் கண்காணிக்கும் ரேடர் (ராடர்) உதவி, கள முனையில் திட்டமிடல் உதவி, உட்பட பல உதவிகளைச் செய்ததோடு, இலங்கையினைச் சர்வதேச யுத்த மீறல் விசாரணைகளிலுருந்தும் பாதுகாத்து வந்த பெருமை இந்தியாவிற்கும், இந்திய காங்கிரஸ் மத்திய அரசிற்குமே உரியது.
இப்போது இலங்கையின் முகத்தில் காரி உமிழாத குறையாக, கள முனையில் நீங்கள் இப்படியெல்லாம் செய்யுங்கள் என ஐடியா கொடுத்து விட்டு, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என இலங்கை கெஞ்சி மன்றாடியும் செவிமடுக்காது இந்தியா பல்டி அடித்திருக்கிறது. இது இலங்கைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியையும், பிள்ளையினை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டாது இந்தியா இடை நடுவில் இந்தியா கை விட்டு விட்டதே எனும் ஏமாற்றத்தினையும் கொடுத்திருக்கிறது. இதன் விளைவாக இப்போது இலங்கை இராஜதந்திர ரீதியில் இந்தியாவைப் பழிவாங்க களமிறங்கியிருக்கிறது.
காஷ்மீரில் இந்தியப் பழங்குடிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள், இந்தியாவில் வெளிச்சத்திற்கு வராத காஷ்மீர் படுகொலைகள் எனப் பழைய வரலாறுகளைத் தேடி எடுத்து, சீனா, பாகிஸ்தான், அரபு நாடுகளின் உதவியோடு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாராகிறதாம் இலங்கை.இலங்கையின் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி AFP, மற்றும் தமிழ் இணையத் தளங்கள் இந்த அதிரடிச் செய்தியினை வெளியிட்டிருக்கின்றன. இலங்கையின் போர்க் குற்ற ஆதார வீடியோக்கள் உலகத் தமிழர் பேரவைக்கு கிடைப்பதற்கு இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பங்களிப்பு நல்கியதாக ஏலவே இலங்கைக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இலங்கை இப்போது வட்டியும் முதலுமாக தன் குரோதத்தை தீர்க்க களமிறங்கியிருக்கிறது.
இலங்கையின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் சீனா பிரதான சக்தியாக நிற்பதால், இலங்கையினைக் கைப் பொம்மையாகப் பாவித்து இந்தியாவை அடக்க நினைக்கிறது சீனா. இன்னோர் வகையில் கூறினால், இந்தியா மீது அமெரிக்க உதவியுடன் ஓர் அழுத்தத்தை கொண்டு வந்து, அமெரிக்க - இந்திய நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தினால் ஆசியாக் கண்டத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை இந்திய இராணுவ பலத்துடன் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை கனவு காண்கிறது. எது எப்படியோ....புலி எதிர்ப்பாளர்கள் முதல், தமிழாதரவு சக்திகள் வரை இலங்கையின் குணம் பற்றி பல்வேறு வழிகளிலும் எடுத்துக் கூறி, இந்தியா செவிசாய்க்காது ஈழப் போரில் தன் ஈனச் செயலைக் காட்டியிருந்தது. இப்போது அதற்கான பலனை அனுபவிக்க தயாராகிறது.
|
29 Comments:
இலங்கைக்கு ஆயுதம் தந்தது புலிகளை அழிக்க இப்போ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில ஓட்டு போட்டது தமிழரை காப்பாத்த அப்பிடின்னு சொல்லுறாங்க ..
@ஜ.ரா.ரமேஷ் பாபு
இலங்கைக்கு ஆயுதம் தந்தது புலிகளை அழிக்க இப்போ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில ஓட்டு போட்டது தமிழரை காப்பாத்த அப்பிடின்னு சொல்லுறாங்க ..
//
நல்லாத் தான் பூச்சுத்துறாங்கோ....நாம வேடிக்கை பார்ப்போம் நண்பா.
காலை வணக்கம் நிரூபன்!எப்படியோ,"தன் வினை தன்னைச் சுடும் என்னும் பழமொழி"(முதுமொழி?)உண்மையானது என நீ............................ண்ட காலத்தின் பின்னர்,எங்கள் வாழ்நாளில் கண்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பத்தை கொடுத்த "காகித" வல்லரசுக்கு நன்றி!!!!!!
@Yoga.S.FR

.//
மதிய வணக்கம் ஐயா,
அருமையான கருத்தினைச் சொல்லியிருக்கிறீங்க.
நமக்கு இப்போது கூத்துப் பார்க்கும் காலம். ஆகவே பொறுமையாகப் பார்ப்போம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சகோ.நிரூபன்!நலமா?
இந்திய எதிர்ப்பு நிலை என்ற ஈழத்தமிழர் மனோபாவம் எந்த தீர்வையும் கொண்டு வராது என்பதை அனைவரும் உணரவேண்டும்.இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகளில் குறைகளில் இல்லாமல் இல்லை. ஜனநாயகத்தின் கட்டமைப்புக்குள் இந்தியாவை விமர்சிக்க தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.பிரச்சினைகளும்,சிக்கலுமான நிலையில் ஈழத்தமிழர்கள் மௌனம் காப்பதும்,சாதகமான நிலையில் இணைந்து குரல் கொடுப்பது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்க கூடும்.
யார் யார் மீது மனித உரிமை பிரச்சினைகளை கொண்டு வருவது?இலங்கை,சீனா,அரபுநாடுகள்?வடிவேல் இல்லாத குறை தீர்க்க இப்படியும் கூட வழிகள் உள்ளதா:)
ஆனாலும் வாய்க்கொழுப்பு அடங்கேல்லையே சிவப்புச் சாலவைக் கூட்டத்துக்கு.அவங்கட கையில இன்னும் பலம் இருக்கு நிரூ !
உண்மையான என் உளங்கவர்ந்த பதிவு
அருமை
புலவர் சா இராமாநுசம்
கூட்டுக்குள் குழப்பமா? கைகோர்த்து தமிழனின் இரத்தத்தை ருசி பார்த்தவர்கள் தெருச்சண்டை இட தயாராவதை பார்த்து ரசிப்போம். எம்மைக் கதறக் கதற கொன்று குவித்த கொலைவெறியரும் அப்பாவி காஸ்மீரத்து மக்களை கொன்று குவித்த கொலைவெறியரும் மோதட்டும் உண்மைகள் வெளிவரட்டும். கலகத்தில் நீதி பிறக்கட்டும்.
அவர்களைப்போல் நாம் ஒரு இனத்தையே அழிக்க களம் இறங்கவில்லையே. நாம்தான் பாராளுமன்றத்தையே தகர்த்தால்கூட அவனுக்குத் தேவையான அத்தனை வசதியும் செய்து கொடுக்கும் நல்லவர்கள் ஆயிற்றே.
//காஷ்மீரில் இந்தியப் பழங்குடிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள்// காஷ்மீரில் பழங்குடிகள் எப்போது கொல்லப்பட்டார்கள்?
//சீனா, பாகிஸ்தான், அரபு நாடுகளின் உதவியோடு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாராகிறதாம் இலங்கை.// அரபு நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு தேவை.
//இந்தியா மீது அமெரிக்க உதவியுடன் ஓர் அழுத்தத்தை கொண்டு வந்து, அமெரிக்க - இந்திய நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தினால் ஆசியாக் கண்டத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை இந்திய இராணுவ பலத்துடன் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை கனவு காண்கிறது.// வாய்ப்பே இல்லை. சுண்டைக்காய் நாடான இலங்கையைவிட இந்தியாவுக்கே அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும்.
வணக்கம் நண்பா ; எது எப்படியோ இறுதிபோரின் பிரதான பங்காளரான இந்தியாவுக்கு இலங்கை மிக பெரிய ஆப்பினை வைத்து இந்தியாவும் இலங்கையும் மாட்டிகொள்ளட்டுமே ; உண்மையில் இலங்கைக்கு மட்டும் ஏன் தண்டனை .?
இந்தியா என்னும் இடங்களில் எல்லாம் சோனியா என்று குறிப்பிடுவதும் சரியானதாகவே இருக்கும்.
ஜெனீவா தீர்மானத்தில் பல நாடுகள் உள்நாட்டு, உறவு நாட்டு பிரச்சனைகளின் அடிப்படையில் முடிவெடுத்து, தமிழர்களுக்கு உதவாமல் போய்விட்டன.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
@ராஜ நடராஜன்
சகோ.நிரூபன்!நலமா?
இந்திய எதிர்ப்பு நிலை என்ற ஈழத்தமிழர் மனோபாவம் எந்த தீர்வையும் கொண்டு வராது என்பதை அனைவரும் உணரவேண்டும்.இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகளில் குறைகளில் இல்லாமல் இல்லை. ஜனநாயகத்தின் கட்டமைப்புக்குள் இந்தியாவை விமர்சிக்க தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.பிரச்சினைகளும்,சிக்கலுமான நிலையில் ஈழத்தமிழர்கள் மௌனம் காப்பதும்,சாதகமான நிலையில் இணைந்து குரல் கொடுப்பது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்க கூடும்.
யார் யார் மீது மனித உரிமை பிரச்சினைகளை கொண்டு வருவது?இலங்கை,சீனா,அரபுநாடுகள்?வடிவேல் இல்லாத குறை தீர்க்க இப்படியும் கூட வழிகள் உள்ளதா:)
//
வணக்கம் அண்ணா,
நான் நல்லா இருக்கேன், நீங்கள் நலமா?
‘
இந்தியாவிற்கு ஈழத் தமிழர்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அண்மைய ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் காரணமாக....இலங்கை வாழ் சிங்களவர்கள் தான் இந்தியாவிற்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள்.
இந்தியாவை எதிர்த்த புலிகள் அமைப்பு கூட...இந்தியாவின் துணையின்றி தம்மால் ஈழப் போரில் வெல்ல முடியாது என பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்கள்.
இப் பதிவில் கூட...ஈழத் தமிழர்கள் இந்தியாவிற்கு எதிராக இருப்பதாக சொல்லவில்லை. சிங்கள அரசியல்வாதிகளும்., இராஜதந்திரிகளும் தான் ஈழ மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக நினைத்து, தமது இந்திய எதிர்ப்பு நிலையினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்த அறிவிப்பு கூட சிங்கள புத்திஜீவிகளால் வெளியிட்டப்பட்ட அறிவுப்பு தான். ஒரேயொரு ஆதங்கம்.
ஈழப் போர் இடம் பெறும் போது, புலிகள் என்ற பேரில் தமிழ் மக்களை அழிக்க இலங்கைக்கு உதவி வழங்க வேணாம் என எல்லோரும் இந்தியாவின் காலில் விழா குறையாக மன்றாடினார்கள். ஆனால் இந்திய மத்திய அரசு எட்டுக் கோடி தமிழகச் சொந்தங்களின் உணர்வையும் உதறித் தள்ளி இராஜபக்ஸேவிற்கு சேவை மேல் சேவை செய்தது. அந்தச் சேவைக்குரிய பிரதி உபகாரத்தை பக்ஸே குழுவினர் எப்படித் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்பதனை விளக்கவே இப் பதிவினை எழுதினேன்.
@ஹேமா
ஆனாலும் வாய்க்கொழுப்பு அடங்கேல்லையே சிவப்புச் சாலவைக் கூட்டத்துக்கு.அவங்கட கையில இன்னும் பலம் இருக்கு நிரூ !
//
ஹே...ஹே..
பலம் இருந்தாலும் பல்லு பிடுங்கப்பட்ட பாம்பு தானே இலங்கை! அவ்வ்வ்வ்வ்வ்வ்
@புலவர் சா இராமாநுசம்
உண்மையான என் உளங்கவர்ந்த பதிவு
அருமை
புலவர் சா இராமாநுசம்//
நன்றி ஐயா.
@சத்தியா
கூட்டுக்குள் குழப்பமா? கைகோர்த்து தமிழனின் இரத்தத்தை ருசி பார்த்தவர்கள் தெருச்சண்டை இட தயாராவதை பார்த்து ரசிப்போம். எம்மைக் கதறக் கதற கொன்று குவித்த கொலைவெறியரும் அப்பாவி காஸ்மீரத்து மக்களை கொன்று குவித்த கொலைவெறியரும் மோதட்டும் உண்மைகள் வெளிவரட்டும். கலகத்தில் நீதி பிறக்கட்டும்.///
உண்மைகள் வெளி வந்தாலும், எமக்கோர் தீர்வு கிடைக்க இலங்கை அரசாங்கம் வழி விடலையே?
@விச்சு
அவர்களைப்போல் நாம் ஒரு இனத்தையே அழிக்க களம் இறங்கவில்லையே. நாம்தான் பாராளுமன்றத்தையே தகர்த்தால்கூட அவனுக்குத் தேவையான அத்தனை வசதியும் செய்து கொடுக்கும் நல்லவர்கள் ஆயிற்றே..//
நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறீங்க விச்சு.
இலங்கை நன்றி மறந்து, இந்தியா செய்த உதவிகளை மறந்து இப்போது திணவெடுத்தாடுகிறது.
இந்தியாவிடம் இலங்கை வாங்கி கட்டினால் நமக்கு சந்தோசமே!
@Robin
//காஷ்மீரில் இந்தியப் பழங்குடிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள்// காஷ்மீரில் பழங்குடிகள் எப்போது கொல்லப்பட்டார்கள்?
//
அப்படித் தானுங்க மாண்பு மிகு இலங்கையின் அறிவற்ற அரசியல்வாதிகள் அறிக்கை விட்டிருக்காங்க ரொபின் அண்ணா.
@Robin
//சீனா, பாகிஸ்தான், அரபு நாடுகளின் உதவியோடு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாராகிறதாம் இலங்கை.// அரபு நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு தேவை.
//
அரபு நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு தேவை. ஆனால் அண்மைக்கால அரசியல் நகர்வுகளில் அரபு நாடுகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டினையே காண்பிக்கின்றன.
@Robin
//இந்தியா மீது அமெரிக்க உதவியுடன் ஓர் அழுத்தத்தை கொண்டு வந்து, அமெரிக்க - இந்திய நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தினால் ஆசியாக் கண்டத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை இந்திய இராணுவ பலத்துடன் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை கனவு காண்கிறது.// வாய்ப்பே இல்லை. சுண்டைக்காய் நாடான இலங்கையைவிட இந்தியாவுக்கே அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும்.
//
உண்மை தான்....அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு போதும் பகைச்சுக்காது. ஆனால் இலங்கை அரசியல்வாதிகள் இரண்டு நாடுகளும் முட்டி மோதனும் என்றல்லவா ஆர்ப்பட்டம் செய்து அறிக்கை விடுகிறார்கள்.
@Mahan.Thamesh
வணக்கம் நண்பா ; எது எப்படியோ இறுதிபோரின் பிரதான பங்காளரான இந்தியாவுக்கு இலங்கை மிக பெரிய ஆப்பினை வைத்து இந்தியாவும் இலங்கையும் மாட்டிகொள்ளட்டுமே ; உண்மையில் இலங்கைக்கு மட்டும் ஏன் தண்டனை .?
//
பொறுத்திருந்து பார்ப்போம்.
உதவி செய்தவன் மாட்டிக்காமலா போவான்?
@பாரத்... பாரதி...
இந்தியா என்னும் இடங்களில் எல்லாம் சோனியா என்று குறிப்பிடுவதும் சரியானதாகவே இருக்கும்.
//
இது சூப்பர் கருத்து நண்பா..
@பாரத்... பாரதி...
ஜெனீவா தீர்மானத்தில் பல நாடுகள் உள்நாட்டு, உறவு நாட்டு பிரச்சனைகளின் அடிப்படையில் முடிவெடுத்து, தமிழர்களுக்கு உதவாமல் போய்விட்டன.
//
உண்மை தான் நண்பா. பொறுத்திருந்து பார்ப்போம்.
எங்களுக்கும் காலம் வராமலா போகும்?
@சென்னை பித்தன்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
//
நன்றி ஐயா.
சீனாவும் அமெரிக்காவும் அடுத்த சில வருடங்களில் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பதில் தான் எல்லாமே இந்தியாவிற்கு இருக்கிறது சகோதரம் ...
இந்தியா + அமெரிக்கா
சீனா + அமெரிக்கா
அமெரிக்கா சீனா இந்தியா தனித்தனி...
இந்த மூன்று சினாரியோ தான் இனி...
உலகின் (மற்ற) அனைத்து நாடுகளும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் என்பது என் கணிப்பு...
பொருளாதாரம் ஒன்று தான் இந்த மூன்றில் எது வல்லரசு என்று தீர்மானிக்கும்...கொஞ்சம் சந்தர்ப்பவாதம் helps in a big way...
மற்றவை எல்லாம் சைடு ஷோ... பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்று ...
இலங்கை விசயத்தில் சமீபத்தைய அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு வரும் காலத்தில் எந்த ஆபத்தும் வரக்கூடாதென்று சாமர்த்தியமாய் இந்தியா தான் காய் நகற்றியதாய் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன...
இப்ப நடப்பதெல்லாம் eyewash...
வழக்கம் போல் பதிவின் தலைப்பு மக்களை சுண்டி இழுக்கிறது சகோதரம்...
ரொம்ப எழுதிட்டேன் போல...இரவு வணக்கங்கள்...
தீர்மானத்திற்கு ஆதரவா இந்தியா வாக்களித்தாலும் தீர்மானம் நீர்த்து போக அதில் சில திருத்தங்களை இந்தியா கொண்டு வந்துள்ளது.
** ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.
தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதா பிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.
இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைக்காரனின் ஆலோசனையுடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.
இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதா பிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது. **
Post a Comment