நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;
வீரியம் மிக்க விதைகளாக
விளைச்சல்களை அதிகரிக்கும்
பயிர்களைப் பயிரிட
அவர்கள் ஒவ்வோர் முறையும்
எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்;
தாங்கள் புசித்த
எலும்புத் துண்டுகளின்
எச்சில் நாற்றம்
காயும் முன்னே
எங்களை விலை பேச
கைகளை உயர்த்தியபடி
தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!
என் பாட்டனும், என் வம்சமும்
இந்த கோவணத் துணிகளின்
நறு மணத்திற்கு கட்டுப் பட்டு
ஒவ்வோர் முறையும்
மன விருத்தியெனும் மூளையினை
மளிகை(க்) கடையில்
அடகு வைத்தவர்களாய்
மகரந்த மணியினை தடவுவது போல
அவர்களைப் பார்த்து
தடவிச் சிரித்து
தம் புலன்களால்
பூரிப் படைந்து வாழ்கிறார்கள்!
இதனைத் தான் இன்றும்,
பொங்கிப் பிரவாகித்து
போதனைகள் செய்யும்
பிராணனை உட் கொண்டோரும்
செய்து மகிழ்கிறார்கள்!
அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!
நாங்கள் மட்டும்
கைகளை ஏந்தி அந்த
முகம் சுளிக்கும் வாடையினை
நறுமணம் எனும்
பெயர் சூடி;
எம் எதிர்காலமும்
சுயங்களும் சுக்கு நூறாகுவதை உணாராமல்
சுகித்து மகிழ்ந்து,
புசித்துப் பசியாறத் தொடங்குகிறோம்!!
(அ)ஐய்யாவின் இதே பழைய
கந்தல் துணிக்கும்
அம்மாவின் கிழிந்த சீலைக்கும்
இன்றும் ஆட் காட்டி
விரலை உயர்த்தி
ஆலாபனை செய்யும் பொழுதில்
அமெரிக்காவோ விண் கலத்தில்
செவ்வாயை கடந்து சொல்லாத
சேதிகளைச் சொல்லி நிற்கிறது!
அடுத்த தேர்தல் வருகிறதாம்
மிளகாய் அரைக்க அவர்களும்
இலவசத்தோடு வருவார்கள் - நாமும்
மிகவும் குளிர்ந்த மனத்தோடு
வரவேற்று ஒப்பாரி வைத்து அழுவோம்!!
|
6 Comments:
வணக்கம் நிரூ, ஒவ்வொரு வார்த்தையையும் சாட்டையடியாக அருமையான பதிவு.
சரியான வார்த்தைகள்..அதை கவிதை வடிவத்தில் கொடுத்து மிரள வைத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி நண்பரே.
// அம்பலத்தார் said...
வணக்கம் நிரூ, ஒவ்வொரு வார்த்தையையும் சாட்டையடியாக அருமையான பதிவு.//
இது சத்தியமான உண்மை...தொடருங்கள்.
வணக்கம் நிரூபன்!!
நல்லதோர் கவிதை பகிர்வு
வணக்கம் நிரூபன்!கொல்லும் கவி எழுதி கிறங்கடித்து விட்டீர்கள்!!!!!
என்னமோ எழுதியிருக்கீங்க...
பவர் கட்டுனால படிக்க முடியலீங்க...
உங்கட "பதிவுலக நாரதர்" பதிவுல ராஜ் என்ட பேருல வந்து ஒருத்தர் அலப்பறையை கொடுத்தாரே, அவரே ஒரு காப்பி-பேஸ்டு பதிவர்தான்!
அவரோட கடைசி போஸ்டு இது,
http://hollywoodraj.blogspot.com/2012/03/1.html
இது பாலாவின் வலைத்தளத்திலிருந்து அப்படியே அபேஸ் பண்ணப்பட்டுள்ளது!
http://balavin.wordpress.com/2008/07/11/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/
Post a Comment