அச்சத்தில் சிங்கள தேசம் - ஆரவாரத்தில் தமிழர்கள் - ஆப்பினை அகற்றும் முயற்சியில் அல்லக்கை அமைச்சர்கள்!
இறுதிப் போரின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள், சர்வதேச போர் விதிகளுக்கு முரணான அரஜாகங்கள், மற்றும் கொடூரமான சம்பவங்கள் பல தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டதாக தகவல்கள் கசியத் தொடங்கின. இறுதிப் போர் முடிந்த பின்னர், இலங்கையின் அக்கிரமங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என தமிழர் தரப்பினர் இடை விடாது குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் தலையீடுகள் இடம் பெறும் பட்சத்தில் தமது அராஜகங்கள் யாவும் வெளி உலகிற்கு நிரூபிக்கப்பட்டு விடும் என இலங்கை அரசு ஐயம் கொள்ள ஆரம்பித்தது. இதன் பிரகாரம், தமது பக்கம் நியாயம் இருப்பது போன்று காட்டிக் கொள்ளவும், தாம் செய்த மனித உரிமை மீறல்களை குழி தோண்டிப் புதைப்பதற்கும் உள் நாட்டில் தமக்குச் சாதகமான இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள புத்திஜீவிகளின் உதவியுடன் விசாரணை நடாத்துவதே சாலச் சிறந்தது என மகிந்தர் அரசு திட்டம் தீட்டியது.
"கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” எனும் பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கி கடந்த மூன்றாண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் சோக கதைகளை மாத்திரம் திரட்டும் நோக்கில் செயற்பட்டு வந்ததோடு, இலங்கை அரசு மனித உரிமை மீறல்களைச் செய்யவில்லை என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் தலையில் அடிச்சு சத்தியம் செய்யா குறையாக போலி அறிக்கைகளையும் வெளியிட்டு, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்க் நல்லிணக்க குழுவின் வாயிற்குப் பூட்டுப் போட்டு உலக நாடுகளிற்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது சிங்கள தேசம்.
எத்தனை நாளைக்குத் தான் இந்த ஏமாற்று வித்தைகளைப் பொறுப்பது என உலக நாடுகள் கூடி ஆராயத் தொடங்கின. இலங்கையின் கண் துடைப்பு நாடகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமாயின் இலங்கைக்கு எதிராக ஐயா சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு குற்றவாளிக் கூண்டில் சிங்கள தேசத்தினை ஏற்றி கேள்வி கேட்டு, இலங்கையின் ஆட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா தலமையில் உலக நாடுகள் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்ற நாட் குறித்தன. அந்தப் பொன் நாள் தான் 07.03.2012. அமெரிக்கா இலங்கையின் கண் துடைப்பு நாடகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் விசாரணைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனும் கடுமையான தீர்மானத்தினை அமெரிக்கா ஐநா சபையில் இப்போது வழங்கியிருக்கிறது.
மனிதாபிமான நெறி முறைகளில் அதிக கவனம் செலுத்தும் - ஐநாவில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் இந்த வரைபினைச் சமர்ப்பித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான வாக்கெடுப்பிற்கும் நாட் குறித்திருக்கிறது அமெரிக்கா. இதுவரை காலமும் இலங்கை விடய`த்தில் சிங்கள தேசத்திற்குப் பாதகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது, இந்தியாவும், சீனாவும், இன்னும் சில நாடுகளும் இலங்கையின் வாலில் தொங்கிக் கொண்டிருந்து அந்த தீர்மானங்களை எல்லாம் புறந் தள்ளி, இலங்கை அரசின் பூச்சாண்டி வித்தைகளுக்கு மெத்தை அமைத்துக் கொடுத்தன.
தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்க அம்மையார் மரிய ஒற்றியோ (Maro Otero) |
ஆனால் இன்றளவில் உலக நாடுகளின் பெரும்பான்மை அங்கீகாரத்தினைப் பெற்று அமெரிக்கா கடுமையான ஓர் தீர்மானத்தினை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்திருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாக்கெடுப்பினை தோற்கடிக்கும் நோக்கில் ஜப்பானில் இருந்து ஜெனீவாவிற்கு அவசர அவசரமாக புறப்பட்டிருக்கிறார். இலங்கை அரசும் தாம் செய்வதெல்லாம் சரி என நிரூபிக்கும் வகையில் சில தமிழின விரோதிகளையும், தன் கூடவே இருந்து தமிழர் தரப்பு மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சிங்கள தேசத்தின் கால்களை நக்கிப் பிழைக்கும் நச்சுப் பாம்புகளையும் சுவிஸ்சர்லாந்தில் களமிறக்கியிருக்கிறது.
இப்போது பக்ஸே சகோதர்களுக்கு சோதனைக் காலம் வந்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை வாக்கெடுப்புக்களுடன் நிறைவேற்றப்படுமாயின் நீண்ட காலமாக இலங்கை மக்களை ஆட்டிப் படைக்கும் குடும்ப அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகளவில் உள்ளன. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் வகையில் "ஐநாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் நகல் தீர்மானத்திற்கு பல நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன” என ஓர் சுத்து மாத்து அறிக்கையினை வெளியிட்டு அமெரிக்காவிற்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஜெனிவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி தாமர குணநாயகம்.
அமெரிக்க அரசினது தீர்மானம் பெரும்பான்மை வாக்கெடுப்புக்களின் உதவியுடன் நிறைவேற்றப்படுமாயின், ஒரு வருடத்தினுள் இலங்கை பின் வரும் விடயங்களை நடை முறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
*இலங்கையின் வட - கிழக்கு (தமிழர் தாயகத்தில்) பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் முற்றாக விலக்கப்பட வேண்டும்;
*பாரபட்சமற்ற முறையில் இறுதி யுத்தம், மற்றும் இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்;
*நீண்ட காலமாக நிலவி வரும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும்;
*சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மேலை நாடுகளைப் போன்று - அனைத்து மக்காளும் சிவில் கொள்கைகளின் அடிப்படையில் நியாயமாக நடாத்தப்பட வேண்டும்;
*சட்டவிரோத கைதுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்;
*தமிழர்களைப் புறந் தள்ளி வைக்கும் இலங்கையின் சனநாயகச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்;
*கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண ஆணைக் குழுவின் தீர்மானங்களினை வரவேற்று, இலங்கை அரசானது கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.
*பாரபட்சமற்ற முறையில் இறுதி யுத்தம், மற்றும் இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்;
*நீண்ட காலமாக நிலவி வரும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும்;
*சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மேலை நாடுகளைப் போன்று - அனைத்து மக்காளும் சிவில் கொள்கைகளின் அடிப்படையில் நியாயமாக நடாத்தப்பட வேண்டும்;
*சட்டவிரோத கைதுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்;
*தமிழர்களைப் புறந் தள்ளி வைக்கும் இலங்கையின் சனநாயகச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்;
*கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண ஆணைக் குழுவின் தீர்மானங்களினை வரவேற்று, இலங்கை அரசானது கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.
பல ஆயிரம் மக்களின் கண்ணீருக்கும், புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களின் ஓய்வு உறக்கம் அற்ற அறப் போராட்டங்களிற்கும்; தாய்த் தமிழக உறவுகளின் ஒருமித்த குரலுக்கும்; மனித உரிமை ஆர்வலர்களின் அபிலாஷைகளுக்கும், நாடு கடந்த தமீழ அரசாங்கத்தின் பணிகளுக்கும் நிச்சயம் நல்ல சேதி வெகு விரைவில் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் அனைவரும் காத்திருப்போம்!
இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் வழமை போலவே கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
|
15 Comments:
கண்ணீர் சக்தி வாய்ந்தது மச்சி! கொஞ்சமா வடித்தோம்? :-(
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.
http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html
இந்த முறையும் தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா சாரி சோனியா கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க... இதுக்கு மேல எழுதுனா கெட்ட கெட்ட வார்த்தையா வருது மச்சி...
@ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW
கண்ணீர் சக்தி வாய்ந்தது மச்சி! கொஞ்சமா வடித்தோம்? :-(
//
ம்.....(((((((;
@அருள்
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.
//
தகவல் பகிர்விற்கு நன்றி நண்பா.
@சசிகுமார்
இந்த முறையும் தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா சாரி சோனியா கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க... இதுக்கு மேல எழுதுனா கெட்ட கெட்ட வார்த்தையா வருது மச்சி...
//
இம்முறை இந்த வித்தையெல்லாம் பலிக்காது என நினைக்கிறேன். பார்ப்போம்..
சோழியன் (அமெரிக்கா) குடுமி சும்மா ஆடாது தான்....
உள்நோக்கத்துடன் என்றாலும் அது ஆடினால் மட்டும் போதும் என்பது தான் எமது தற்போதைய எதிர்பார்ப்பு.
ஒரு வாரத்திற்கு முன்பே அமெரிக்கா தனது அறிக்கையை வெளியிட்டது வரவேற்க தக்கது.
இறுதி வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறேன்.
உங்கள் பதிவைக் கண்டவுடன்தான் பல தளங்களையும் பார்வையிட்டு விட்டு வந்தேன்.
பகிர்வுக்கு நன்றி சகோ!
//இந்த முறையும் தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா சாரி சோனியா கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க... இதுக்கு மேல எழுதுனா கெட்ட கெட்ட வார்த்தையா வருது மச்சி..//
சசி!இந்தியா எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட நிலையில் உள்ளது.எப்பொழுதும் முதுகெலும்பில்லா தன்மையில் நடுநிலை வகுக்கிறேன் பேர்வழியென மதில் மேல் பூனை obstain மட்டுமே இப்பொழுதும் கை கொடுக்கும்.
வணக்கம் நிரூபன்!உண்மையில் அமெரிக்காவின் முன்னைய தீர்மானத்தில்(பரிந்துரை?)ஆறு மாத அவகாசம் வழங்கும் விதத்திலேயே அது வடிவமைக்கப்பட்டது!அதிலும் மூக்கை நுழைத்த இந்தியாவால் தான் இப்போது ஓராண்டுகளாக கால அவகாசம் நீட்டிக்கப் பட்டிருக்கிறது.எப்படியோ,எங்கள் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடக் கூடிய தீர்மானம் ஒன்று ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேறுவது வரவேற்பதற்குரியதே.அதிலும்,இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை மனித உரிமை சபை கண்காணித்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வேறு குறிப்பிடப்பட்டிருக்கிறது!பார்க்கலாம்.
இறந்த உயிர்களுக்கு நீதி தேவை.. ஆனால் ஆளும் காங்கிரஸ் ஆர்வலர்கள் அதை தடுக்க பார்க்கின்றனர்......
நல்ல சேதி விரைவில் கிடைக்கும்...வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறேன்...
It is not about that crook rajapakshe or impotent India...It is about justice for all those innocent lives lost...
நிச்சயம் நல்ல சேதி வரும் சகோதரம்...
விடிவு காலம் பிறக்கும்.
தீர்மானங்களை வாசிக்கவே மனம் குளிர்ச்சியா இருக்கு.
எங்களுக்கும் விடியும் என் நம்புவோம் !
அமேரிக்கா ஏதாவது உருப்படியாகச் செய்யுமென்று நம்பிக்கையில்லை. கடைசி யுத்தத்தில் அமேரிக்காவின் பங்கும் இருந்தது.
Post a Comment