என்னமோ பேசுகிறாள்! ஒண்ணுமே புரியலையே! என் செய்வேன் நான்?
கனவுகளில் கரைந்து போகாதவாறு
உன் நினைவுகளை
பத்திரப்படுத்த முனைகிறேன்; ஆனாலும்
கனவுகளில் வந்து சென்றாலும்,
நினைவுகளினூடே நேரலையில்
தரிசனம் தர மறுக்கிறாய் நீ
தவிக்கிறேன் நான்; என்
மன உணர்வை கூட்டுறாய் நீ
மதி மயங்கி கனவில்
முனகி காதல் வெறுப்பினில்
திளைத்து களைக்கிறேன் நான்!
நீ உச்சி மோந்து சொல்லப் போகும்
அந்த ஒற்றை வார்த்தைக்காகவும்
உணர்வற்ற ஜீவனாய்
ஏங்குகிறேன் நான்- நீயோ
காதல் என்றால் என்னவென்றே
தெரியாதவளாய் கையசைத்துச் செல்லுகிறாய்;
போடி கள்ளீ! இனிமேல் வந்திடாதே!
மீறி வந்தால் அள்ளி எடுப்பேன்;
அன்பால் உனை கொஞ்சம்
கிள்ளி ரசிப்பேன்!
அழகால் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிறியே ஏன்?
நீ கோபப்படும் போது ஓரழகு
கொஞ்சும் போது வேறழகு
என பெண்ணைப் பார்த்து
தன் கவிதை
கண்ணை திறந்த கவிஞன்;
உன்னைப் பாத்திருந்தால்
அப்படிப் பாடியிருக்க மாட்டான்?
ஏன் தெரியுமா?
என் பார்வையில்
நீ எப்போதும் ஓரழகுதான்!
தருகின்ற இந்த உலகத்தில்
என்னுடைய எதிர்பார்ப்புக்களுக்கும் மேலாக
என் மனதினுள் பல(ப்) பல
கனவுகளைத் தருகின்ற
விம்பமாக என்றும் நீயிருக்கின்றாய்
என்பதில் எவ்வித ஐயமுமில்லை!
அகதியாக்கி அலைய வைத்தாய் - காதல் சகதியினுள் அமிழ வைத்தாய்!
இறுதியாக என்னவளை
இரணைப் பாலையில்
பார்த்ததாய் ஞாபகம்
இரு விழிகளினால் கதை பேசியவாறு
வெடியோசைகளுள் எம்
நொடிகளை நகர்த்தியவாறு
இனி உ(ன்)னை எங்கே
காணுவேன் எனும் ஏக்கத்தோடு
நான் பார்த்திருக்க - எனை பார்த்து
உன் விழிகள் பரிதவிக்க
என்னை கடந்து சென்றாய்;
உயிர் பிளந்து
உணர்வை குலைத்து
மனதை அச்சத்தில் உறையச் செய்யும்
வெடியோசைகளுக்குள்ளும் நீ என்னை
விலகிச் செல்லும் நொடிப் பொழுதை
நினைவுகளில் பதியமிட்டபடி
பார்த்து நின்றேன்-உன் விம்பம்
மறையும் தருணம் வரை!
அகதி முகாம் எங்கும்
எனை அநாதரவாய் விட்டவளை
அலைந்து நிதம் தேடினேன்- நீயோ
உன் நினைவில் அகதியாக்கி என்னை
அலையவிட்டுச் சென்றுவிட்டாயே - தகுமா?
ஆனாலும் என்ன?
மீண்டும் உயிர்த்தெழும் என் நகரின்
கீழிருந்து நீ என்றாவது
ஒரு நாள்
விருட்சமாய் வளர்வாய் எனும்
நம்பிக்கையுடன் வாழ்கிறேன்!
கிள்ளி ரசிப்பேன்!
அழகால் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிறியே ஏன்?
நீ கோபப்படும் போது ஓரழகு
கொஞ்சும் போது வேறழகு
என பெண்ணைப் பார்த்து
தன் கவிதை
கண்ணை திறந்த கவிஞன்;
உன்னைப் பாத்திருந்தால்
அப்படிப் பாடியிருக்க மாட்டான்?
ஏன் தெரியுமா?
என் பார்வையில்
நீ எப்போதும் ஓரழகுதான்!
அப்பழுக்கற்ற பளிங்கு சிலையாய் இந்த அத்தானின் மனதில் நீ!
எதிர் பார்ப்புகளெல்லாம் ஏமாற்றங்களை(த்)தருகின்ற இந்த உலகத்தில்
என்னுடைய எதிர்பார்ப்புக்களுக்கும் மேலாக
என் மனதினுள் பல(ப்) பல
கனவுகளைத் தருகின்ற
விம்பமாக என்றும் நீயிருக்கின்றாய்
என்பதில் எவ்வித ஐயமுமில்லை!
அகதியாக்கி அலைய வைத்தாய் - காதல் சகதியினுள் அமிழ வைத்தாய்!
இறுதியாக என்னவளை
இரணைப் பாலையில்
பார்த்ததாய் ஞாபகம்
இரு விழிகளினால் கதை பேசியவாறு
வெடியோசைகளுள் எம்
நொடிகளை நகர்த்தியவாறு
இனி உ(ன்)னை எங்கே
காணுவேன் எனும் ஏக்கத்தோடு
நான் பார்த்திருக்க - எனை பார்த்து
உன் விழிகள் பரிதவிக்க
என்னை கடந்து சென்றாய்;
உயிர் பிளந்து
உணர்வை குலைத்து
மனதை அச்சத்தில் உறையச் செய்யும்
வெடியோசைகளுக்குள்ளும் நீ என்னை
விலகிச் செல்லும் நொடிப் பொழுதை
நினைவுகளில் பதியமிட்டபடி
பார்த்து நின்றேன்-உன் விம்பம்
மறையும் தருணம் வரை!
அகதி முகாம் எங்கும்
எனை அநாதரவாய் விட்டவளை
அலைந்து நிதம் தேடினேன்- நீயோ
உன் நினைவில் அகதியாக்கி என்னை
அலையவிட்டுச் சென்றுவிட்டாயே - தகுமா?
ஆனாலும் என்ன?
மீண்டும் உயிர்த்தெழும் என் நகரின்
கீழிருந்து நீ என்றாவது
ஒரு நாள்
விருட்சமாய் வளர்வாய் எனும்
நம்பிக்கையுடன் வாழ்கிறேன்!
|
33 Comments:
//தெரியாதளவாய் கையசைத்துச் செல்லுகிறாய்;//
றீச்சர் ஓடிவாங்க ஸ்பெல்லிங்கூஊஊஊஉ:))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ட பெஸ்ட்டு:)) இது வேற 1ஸ்ட்டு:))
//ஏன் தெரியுமா?
என் பார்வையில்
நீ எப்போதும் ஓரழகுதான்! //
கலக்கிட்டீங்க..
//அப்பழுக்கற்ற பளிங்கு சிலையாய் இந்த அத்தானின் மனதில் நீ!//
முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ.. நிலவில கால் பதித்துவிட்ட இந்தக் காலத்திலுமா அத்.....???:))))).
//இறுதியாக என்னவளை
இரணைப் பாலையில்
பார்த்ததாய் ஞாபகம்
இரு விழிகளினால் கதை பேசியவாறு
வெடியோசைகளுள் எம்
நொடிகளை நகர்த்தியவாறு
இனி உ(ன்)னை எங்கே
காணுவேன் எனும் ஏக்கத்தோடு
நான் பார்த்திருக்க - எனை பார்த்து
உன் விழிகள் பரிதவிக்க
என்னை கடந்து சென்றாய்;
உயிர் பிளந்து
உணர்வை குலைத்து
மனதை அச்சத்தில் உறையச் செய்யும்
வெடியோசைகளுக்குள்ளும் நீ என்னை
விலகிச் செல்லும் நொடிப் பொழுதை
நினைவுகளில் பதியமிட்டபடி
பார்த்து நின்றேன்-உன் விம்பம்
மறையும் தருணம் வரை!//
சூப்பர் மனதைத் தொடுகிறது.
Good Morning CAT!
என்னமோ பேசுகிறாள்! ஒண்ணுமே புரியலையே! என் செய்வேன் நான்?////இப்புடித்தான்(பிரான்சுக்கு) வந்த புதிசில எனக்கும் இருந்திச்சு!போகப்போக,பிரெஞ்சு வகுப்புக்கு(ஓசியில)போய் கொஞ்சம்,கொஞ்சமா படிச்சு..............ஹும்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!(பூனை வந்திருக்கு,எஸ்கேப்பாகுவம்!)
athira said...
//ஏன் தெரியுமா?
என் பார்வையில்
நீ எப்போதும் ஓரழகுதான்! //
கலக்கிட்டீங்க.////?!?!?!?!?!):):):):):
வணக்கம் நிரூபன்!
என்ன புலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ;-))
Yoga.S.FR said...
//Good Morning CAT!//
பொஞ்சோர்:)) யோகா அண்ணன்:))..
//(பூனை வந்திருக்கு,எஸ்கேப்பாகுவம்!)///
சே..சே... பயப்பூடாதீங்க, இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை நான் சுத்த விரதம்:)).. கடிக்கிறது மட்டுமில்லை பிராண்டவும் மாட்டேன்:))...
எதுக்கும் சேஃப்டியா எங்காவது மேசைக்குக் கீழ இருங்கோ.. ஏனெண்டால் நிரூபனைக் காணேல்லை, நாங்கதானே கதைக்கிறம், இருந்தாப்போல பதுங்கியிருந்து அட்டாக் பண்ணினாலும் பண்ணிடுவார்:))..
அதுக்குக் காரணம் இருக்கு:)) போன தலைப்பில பின்னிப் பெடல் எடுத்திட்டமில்ல:)) எங்கிட்டயேவா:))... ஹையோ “மஞ்சவனப்பதி” முருகா என்னைக் காப்பாத்தப்பா...
// Yoga.S.FR said...
athira said...
//ஏன் தெரியுமா?
என் பார்வையில்
நீ எப்போதும் ஓரழகுதான்! //
கலக்கிட்டீங்க.////?!?!?!?!?!):):):):)//
அது நிரூபனுக்கு மாலைக்கண்ணாம்:))... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))
//காட்டான் said...
வணக்கம் நிரூபன்!
என்ன புலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ;-)//
நீங்க வேற காட்டான் அண்ணன், வெந்த புண்ணில வேலைப் பாயவைக்கிறீங்க...:)) அவர் ஏற்கனவே நொந்து நூடில்ஸாகிப் போயிருக்கிறார்:)))....
ஹையோ ”நாற்று” சாடையா ஆடுதே..:))) ஓடுங்க ஓடுங்க... நிரூபன் வாறார்போல தெரியுது:))
@athira
தெரியாதளவாய் கையசைத்துச் செல்லுகிறாய்;//
றீச்சர் ஓடிவாங்க ஸ்பெல்லிங்கூஊஊஊஉ:))
//
வணக்கமுங்கோ,
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
அவசரத்தில தெரியாதவளாய் மாறி வந்திட்டு.
அவ்வ்வ்வ்வ்
வேற வேற அழகை ரசிக்கும் ஆண்கள் உலகில் ஓரழகை ரசிக்கும் நிரூபன்.அழகான வரிகளால் படைத்துள்ளீர்கள்."காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் கையசைத்து செல்கிறாய்". அண்ணே! நடிக்கிறாங்க. ஜாக்கிரதை!!!
@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ட பெஸ்ட்டு:)) இது வேற 1ஸ்ட்டு:))
//
சந்தேகமே இல்லைங்க. நீங்க தான் பஸ்ட்டு
நிரு... கவிதை ரொமான்ஸ் மழை :)
காதல் கவிதைகள் நமக்கு எல்லாம் எந்த காலத்தில் திகட்டி இருக்கு.... சோ.... சூப்பர் :)
காட்டான் மாம்ஸ் சொன்ன மாதிரி புலம்பல் ரெம்ப அதிகமாகவே கேக்குதே..... ஹா ஹா....
சீக்கிரம் கல்யாணம் கட்டுங்க பாஸ் லைப் நல்லா இருக்கும் :)
@athira
கலக்கிட்டீங்க..
//
ஏன் நான் என்ன கிணறா இறைச்சிட்டிருக்கேன்;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Yoga.S.FR
Good Morning CAT!
//
ஐயா, எனக்கு வணக்கம் எல்லாம் கிடையாதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Yoga.S.FR
என்னமோ பேசுகிறாள்! ஒண்ணுமே புரியலையே! என் செய்வேன் நான்?////இப்புடித்தான்(பிரான்சுக்கு) வந்த புதிசில எனக்கும் இருந்திச்சு!போகப்போக,பிரெஞ்சு வகுப்புக்கு(ஓசியில)போய் கொஞ்சம்,கொஞ்சமா படிச்சு..............ஹும்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!(பூனை வந்திருக்கு,எஸ்கேப்பாகுவம்!)
//
ஐயா, நீங்க வேற,
சில நேரம் தமிழ்ப் பொண்ணுங்கள் பேசுவது கூட நம்மளுக்கு புரியாத ஒன்றாக தான் இருக்கும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@காட்டான்
வணக்கம் நிரூபன்!
என்ன புலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ;-))
//
அண்ணே, இனிமே கொஞ்சம் கம்மி பண்ணிக்கிறேன்.
@athira
Yoga.S.FR said...
//Good Morning CAT!//
பொஞ்சோர்:)) யோகா அண்ணன்:))..
//(பூனை வந்திருக்கு,எஸ்கேப்பாகுவம்!)///
சே..சே... பயப்பூடாதீங்க, இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை நான் சுத்த விரதம்:)).. கடிக்கிறது மட்டுமில்லை பிராண்டவும் மாட்டேன்:))...
//
ஹே...ஹே..
பார்த்து ஐயா, பிராண்டினாலும், ரத்தம் குடிக்காம விட்டா ரொம்ப புண்ணியமாகுமில்லே.
@athira
எதுக்கும் சேஃப்டியா எங்காவது மேசைக்குக் கீழ இருங்கோ.. ஏனெண்டால் நிரூபனைக் காணேல்லை, நாங்கதானே கதைக்கிறம், இருந்தாப்போல பதுங்கியிருந்து அட்டாக் பண்ணினாலும் பண்ணிடுவார்:))..
அதுக்குக் காரணம் இருக்கு:)) போன தலைப்பில பின்னிப் பெடல் எடுத்திட்டமில்ல:)) எங்கிட்டயேவா:))... ஹையோ “மஞ்சவனப்பதி” முருகா என்னைக் காப்பாத்தப்பா...
//
அவ்வ்வ்வ்வ்
நீங்கள் கொக்குவிலா? அப்படீன்னா உங்களுக்கு மஞ்சனவப்பத்திக்கு கிட்ட உள்ள,
லவ்லேன் எல்லாம் அத்துப்படி. என்ன?
நான் சொல்ல வந்தது லவ்லேன் தெரியும் என்று!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்கிட்டேவா? போன பதிவில பதில் சொல்லியிருந்தேன். பின்னர் மாற்று கருத்த்க்கள் ஏதும் வரவில்லை.
@athira
/ஏன் தெரியுமா?
என் பார்வையில்
நீ எப்போதும் ஓரழகுதான்! //
கலக்கிட்டீங்க.////?!?!?!?!?!):):):):)//
அது நிரூபனுக்கு மாலைக்கண்ணாம்:))... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))
//
என்னது எனக்கு மாலைக் கண்ணா? நாம யாரு! புடிச்சாலும் புளியங் கொம்மா பிடிப்பமில்லே;-))))))))))
@athira
நீங்க வேற காட்டான் அண்ணன், வெந்த புண்ணில வேலைப் பாயவைக்கிறீங்க...:)) அவர் ஏற்கனவே நொந்து நூடில்ஸாகிப் போயிருக்கிறார்:)))....
ஹையோ ”நாற்று” சாடையா ஆடுதே..:))) ஓடுங்க ஓடுங்க... நிரூபன் வாறார்போல தெரியுது:))
//
என் வரவை அறிந்து
மரஞ் செடி கொடிகளும் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறது! பார்த்தீர்களா?
மரியாதையின் நிமித்தம், மரங்கள் தலையசைத்திருக்கு. நாற்றும் ஆடியிருக்கு. இதெல்லாம் என்னோட வாழ்க்கையில சகஜமுங்கோ.
அவ்வ்வ்வ்வ்
@விச்சு
வேற வேற அழகை ரசிக்கும் ஆண்கள் உலகில் ஓரழகை ரசிக்கும் நிரூபன்.அழகான வரிகளால் படைத்துள்ளீர்கள்."காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் கையசைத்து செல்கிறாய்". அண்ணே! நடிக்கிறாங்க. ஜாக்கிரதை!!!//
நன்றி நண்பா,
ஜாக்கிரதையாகவே இருந்துக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@துஷ்யந்தன்
நிரு... கவிதை ரொமான்ஸ் மழை :)
காதல் கவிதைகள் நமக்கு எல்லாம் எந்த காலத்தில் திகட்டி இருக்கு.... சோ.... சூப்பர் :)
//
அனுபவம் பேச்கிறதே துஸி!
@துஷ்யந்தன்
காட்டான் மாம்ஸ் சொன்ன மாதிரி புலம்பல் ரெம்ப அதிகமாகவே கேக்குதே..... ஹா ஹா....
சீக்கிரம் கல்யாணம் கட்டுங்க பாஸ் லைப் நல்லா இருக்கும் :)
//
கலியாணம் கட்டினா நான் ப்ளாக்கிற்கு வரமுடியாதே நண்பா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஞாயிறு காதல்.காதலிக்க இண்டைக்கு நேரம் கிடைச்சிருக்கு நிரூவுக்கு !
பாருங்கோவன்...கலியாணம் கட்டினா ப்ளாக்குக்கு வரேலாதாம்.பாவம் பெடியன்...வாழ்க்கையையே தியாகம் செய்றாராம்.அவவையும் கூட்டிக்கொண்டு ப்ளாக்குக்கு வரலாம் நிரூ.அப்பிடியான ஒரு ஆளைத் தேடிக் கலியாணம் செய்தாச் சரி !
என்ன பாஸ் கொஞ்சம்.புலம்பல். அதிகமாக இருக்கு.கடைசியா இரணப்பாலையில். பார்த்தீர்களா மறக்க முடியாத நினைவுகள். வெளிநாட்டு வாழ்க்கை மாத்தும் கவலை வேண்டாம்
கொஞ்சம் காதல்..கொஞ்சம் புலம்பல்...கொஞ்சம் குறும்பு...ஒன்றாய் சேர்த்தால் இந்த பதிவு... Chandralekha...-:)
சூப்பர் சூப்பர் சூப்பர் கவிதைகள்...கொஞ்சம் உணர்ச்சி வச படுடீன்களோ..
ungal vayalil aanaithum pasumai
naa muyalai pola kadiththathel a thyrithu konden....
ungal kavi i verumbum ethaiyam konda
puthiyavanprakash
Post a Comment