எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பதிவின் தலைப்பினைப் பார்த்திட்டு பல பேரு உணர்ச்சி வசப்பட்டிருப்பாங்க. எல்லோரும் கூல் டவுண். வெளியே என்ன எழுதி இருக்கு என்று முடிவு பண்ணிக்க முன்னாடி, பதிவினைப் படித்து, பதிவில் என்ன எழுதி இருக்கு என்பதனை படிச்ச பின்னாடி நிச்சயமா உங்களின் கோபம், ஆத்திரம் எல்லாம் காணாமற் போயிடுமுங்க. இப் பதிவானது தனக்கு தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. ஒத்தப் பதிவினூடாக மொத்த ஹிட்சையும் அள்ளுவது எப்படி எனும் தொடரின் ஏழாவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள். இனி பாகம் ஏழினுள் நுழைவோமா?
பதிவுலகில் இப்போது விருதுகள் குவியும் மாதம். யார், யாருக்கு விருது கொடுப்பது எனும் வரையறை இல்லாமல் நமக்குப் பிடித்தவர்களுக்கு விருதுகளை அள்ளி வழங்குகின்றோம். மூத்த பதிவர்கள் தமது எழுத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புளகாங்கிதம் அடைந்த்து விருதுகளைப் பரிமாறிக் கொள்ள,அப் பதிவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொள்ளும் இளையவர்களோ, புதிதாக பதிவுலகினுள் எழுத வந்த பதிவர்கள், பத்துப் பதிவுகளை மாத்திரம் எழுதிய பதிவர்கள் எனப் பலருக்கும் விருதுகளை அள்ளிப் பூச் சொரிந்து வாழ்த்துப்பா பாடாத குறையாக வழங்கி மகிழ்கிறார்கள்.
எனக்கு விருது கிடைக்கலை என்ற வயித்தெரிச்சலில் இப் பதிவு எழுதப்பட்டது என்று நீங்க யாராச்சும் புலம்பினால், அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாதுங்க. எனக்கும் பல நண்பர்கள் விருது கொடுத்திருக்கிறாங்க. ஆனால் நான் அந்த விருதுகளை ஏற்றுக் கொள்வதில்லை. எனக்கு பலர் விருது வழங்கும் போது, நான் கேட்கும் கேள்வி, என்னுடைய எழுத்தில் உங்களுக்கு எந்தப் பதிவு பிடித்திருக்கு என்று நினைத்து நீங்க விருது கொடுக்கிறீங்க? விருது வழங்கும் நபர் ஏதாச்சும் ஒரு பதிலை சொல்லுவாரு. நான் சொல்வேன். இந்த விருதிற்கு நான் தகுதியானவன் அல்ல. ஏன்னா நான் எழுதிய அந்தப் பதிவு ஒரு மகா அசிங்கப் பதிவாக அல்லது மரண மொக்கைப் பதிவாக இருக்கும்.
இந்த மாதிரியான சூழல்களின் அடிப்படையில் தான் பதிவுலக விருது வழங்கும் வைபவங்களும் கணிக்கப்படுகின்றன.ஒரு படைப்பாளி தன்னுடைய எழுத்திற்கு அங்கீகாரம் வேண்டி பதிவெழுத வருகின்றான்.அவனுடைய படைப்புக்கள் பலரையும் சென்றடைய முன்பதாக, அந்தப் பதிவர் பத்துப் பதிவுகளை எழுதி முடிக்க முன்பதாக, "சார்! உங்க எழுத்துக்கான அங்கீகாரம் இந்த ஸ்பெயின் நாட்டு விருது மூலமாக கிடைக்குது சார்! இதோ உங்களுக்கான விருது!" அப்படீன்னு சொல்லி, புதிதாக எழுத வந்த பதிவரையும் உசுப்பேத்தி, உணர்ச்சியின் உச்சக் கட்டத்திற்கு கொண்டு போயிடுவாங்க சில பதிவர்கள்.
பதிவுலகில் ஒருவரின் எழுத்துக்களிற்கான அங்கீகாரமாக விருதுகள் வழங்கப்படுகின்றன என நீங்கள் யாராச்சும் நினைத்தால் அந்த நினைப்பினை இன்றுடன் மறந்து விடுங்கள். பதிவுலகில் தமது வாக்கு, பின்னூட்டம், பதிவரசியல் வட்டத்தினைப் பெருக்கி கொள்வதற்காக தான் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு பதிவர் புதிய பதிவருக்கு கமெண்ட் அடிச்சு பார்ப்பாரு. புதிய பதிவர் கண்டுக்கலைன்னா அடுத்த அஸ்திரமா இந்த விருதினை கொடுப்பது என ஆரம்பித்து,விருதினை வழங்கி, புதிய பதிவரையும் தன் கஸ்டடிக்கு வரப் பண்ணிடுவாரு! இது தான் பதிவுலக யதார்த்தம்.
இன்னும் சில பதிவருங்க என்னா பண்ணுவாங்க என்றால், பல நாளா தமக்கு யாராச்சும் விருது கொடுக்க மாட்டாங்களா என்று காத்திட்டிருப்பாங்க. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போன பின்னாடி, தாமாக ஓர் வலைப் பதிவினை, புதிய பெயரில் உருவாக்கி, அந்த ப்ளாக்கின் ஊடாக தன்னுடைய ப்ளாக்கிற்கு விருது கொடுத்து மகிழுவாங்க. இந்த வகையறாப் பதிவர்கள் சிலரை நானும் சந்தித்திருக்கிறேன்.ஒரு பதிவர் என்னா பண்ணினாரு என்றால், பதிவெழுத வந்து சில மாதங்களே ஆன நிலையில் யாருமே தனக்கு விருது வழங்கலை என்ற கோபத்தில தனக்கு தானே விருது கொடுத்து பார்த்தாரு! தன்னை யாருமே கண்டுக்கலை என்று உணர்ந்த பின்னர், பதிவுலகினையே பரபரப்பாக்கும் வண்ணம், விருதிற்கு என்றோர் தனித் தளம் ஆரம்பித்து தன் பதிவிற்கு பல விருதுகளை கொடுத்து பார்த்தாரு.
அப்புறமா, சில நாட்களின் பின்னர் இது அந்தப் பதிவரின் வேலை தான் என்பதனை பதிவுலகம் உணர்ந்து கொண்டது.வேறு வழியின்றி விருதிற்கென்று உருவாக்கப்பட்ட தளத்தினை அழித்து விட்டு, இப்போ தன் வலையினூடாக ஓர் புதிய விருதினை, புதிய பெயரில் கொடுக்க ஆரம்பித்திருக்காரு. இப்படிப் பல பதிவர்கள் பதிவரசியல் வட்டத்தினைப் பெருக்கும் நோக்கில் பதிவுலகில் வலம் வர்றாங்க. புதுப் பதிவர்களின் எழுத்துக்கள் அடையாளம் காண முன்னாடியே விருதுகள் என்ற மாயையினுள் புதிய பதிவர்களை உள்ளடக்கி, அவர்களின் படைப்புக்களை அங்கீகாரத்தினை உங்கள் அகங்காரத்தால் அழிப்பதனை விடுத்து, காத்திருந்து, காலம் கனியும் போது, காத்திரமான படைப்பாளிகளுக்கு உங்கள் விருதுகளை வழங்கலாம் அல்லவா?
இத் தொடரின் அடுத்த பாகத்தில் இன்னும் சில பதிவுலக ரகசியங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.
பதிவின் தலைப்பினைப் பார்த்திட்டு பல பேரு உணர்ச்சி வசப்பட்டிருப்பாங்க. எல்லோரும் கூல் டவுண். வெளியே என்ன எழுதி இருக்கு என்று முடிவு பண்ணிக்க முன்னாடி, பதிவினைப் படித்து, பதிவில் என்ன எழுதி இருக்கு என்பதனை படிச்ச பின்னர் நிச்சயமா உங்களின் கோபம், ஆத்திரம் எல்லாம் காணாமற் போயிடுமுங்க. இப் பதிவானது தனக்கு தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது

|
96 Comments:
தொடருங்கள் சகோ! :-)
சரியான மொக்கையா இருக்கு இருந்தும் கொஞ்சமா உண்மை சொன்னீங்க...
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
தொடருங்கள் சகோ! :-)
//
ஹே...ஹே..
பரதேசி! உனக்கு வேற பின்னூட்டம் போட தெரியாதா?
@சிட்டுக்குருவி
சரியான மொக்கையா இருக்கு இருந்தும் கொஞ்சமா உண்மை சொன்னீங்க...
//
இங்கே காத்திரப் பதிவு எழுதுமே கிடையாது .
மொக்கை பதிவுகள் தான் கிடைக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம் நண்பரே,
உண்மையா சொல்கிறேன்..எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..தொடரட்டும் தங்கள் பணி..நன்றி.
வணக்கம் நிரூபன்!
பார்த்தேன் ,படித்தேன் ,ரசித்தேன் ,சிரித்தேன் . தொடருங்கள் அடுத்த பதிவில் வருவேன் .
வணக்கம் சகோதரா,
நலமா?
பதிவின் தலைப்பைப் பார்த்ததும் எனக்கு கோபம் வரவில்லை.
நிரூபன் எப்போதும் கோபப்படும்படி எழுதமாட்டார் என்ற நம்பிக்கை
என் மனதில் எப்போதும் உண்டு..
வழக்கம்போல
" நெற்றிக்கண் திறப்பினும்
குற்றமா குற்றமே"
என்ற நவீன நக்கீரனாய்...
வணக்கம் நிரூபன் .நலம்தானே
பரீட்சை நேரமா ??? கொஞ்ச நாளா உங்களை எங்கும் பார்க்கலை .
//எனப் பலருக்கும் விருதுகளை அள்ளிப் பூச் சொரிந்து வாழ்த்துப்பா பாடாத குறையாக வழங்கி மகிழ்கிறார்கள்.
//
இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசம் நம்மையும் எல்லாரும் மறவாமல் இருக்கிறார்கள் என்று நினைவுபடுத்த .
அப்படீன்னும் எடுத்துக்கலாம்
நிரூ...சுகம்தானே
அதுசரி...பதிவே விருதுபோலத்தான் கிடக்கு.நடத்துங்கோ!
எப்ப பார்த்தாலும் இந்த அக்கா திட்டுறதுக்குதான் வருவான்னு உன் மனசுல கோபப்படுறது கேக்குது ஹி..ஹி..ஹி.. என்ன செய்ய :-)
எனக்கு இப்போதெல்லாம் விருதின் மேல் நாட்டம் இருப்பதில்லை. ஏன்னா என் எழுத்தின் மதிப்பை உணர்ந்து வைத்திருக்கிறேன். அதற்காக விருது கொடுப்பதையும் அதை பெறுவதையும் இந்த அளவுக்கு மட்டம் தட்டியிருக்க தேவையில்லை.
முன்பு பதிவெழுத வந்த புதிதில் எனக்கு கிடைத்த முதல் விருது என்னமோ எனக்கு கிடைத்த அங்கிகாரம் போலவே இருந்தது. சின்ன சின்ன ஊக்கங்கள் தானே மனிதனை முன்னேற்றபாதையை நோக்கி பயணிக்க செய்யுது.
இவ்விருதும் அது போலவே தான்.
விருது கொடுக்குறது என்ன அவ்வளவு ஈசின்னு நெனச்சுக்கீட்டீங்களா நிரூபன்? அவ்வ்வ்வ்வ்
ஒரு நாலு பேரை கூப்பிட்டு கொடுத்தா அதுல 2 பேரு ஒன்னும் சொல்லாம மரியாதை நிமிர்த்தம் வாங்கிக்குவாங்க. மீதி 2 பேரு அவமானப்படுத்தாத குறையா "எனக்கு இதெல்லாம் தேவை இல்லை" என சொல்லும் போது மனதிற்கு எவ்வளவு சங்கடமா இருக்கும் தெரியுமா? கொடுப்பதே ஒரு அன்பின் பரிசாய் தான். அதில் ஒர்த் இல்லைன்னு முன்பே தெரிந்தும் எனக்கு வேண்டாம்னா என்ன அர்த்தம்? முன்பு இது போல் சில முறை காயப்பட்டிருக்கிறேன். அதானாலேயே எவரேனும் கொடுத்தால் மகிழ்ச்சியோடு வாங்கிவிடுவேன். நம்மால் முடிந்த சிறு மகிழ்ச்சியை பிறருக்கு பகிரும் போது கிடைக்கும் சுகமே தனி தான்.
மெட்ராஸ் பவன் அப்பறம் இன்னும் சில இடங்களில் நான் கொடுத்த விருதினை வைத்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் பெருமையா தான் இருக்கு :-)
உன் எண்ணம் தவறுன்னு சொல்லல... என் எண்ணத்தையும் பரிசீலித்து பார் :-)
இப்படிக்கு
எப்பவும் திட்டிக்கொண்டே இருக்கும்
அன்பு அக்காச்சி
ஆமினா முஹம்மத்
தனக்கு தானே விருது கொடுத்த அந்த பதிவருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். யாரென்று தனியாக சொல்லுங்கள் எனக்கு. என்னால் முடிந்த ஊக்கங்கள் தருகிறேன். நம் நாற்றின் மூலமும் வரவேற்பு கிடைக்கச்செய்யலாம்.
அங்கிகாரத்திற்காக தானே இப்படி செய்கிறார். அதை நாமே முறையாய் கொடுத்துட்டால் அவரும் ஊக்கத்தோட எழுத ஆரம்பித்துவிடுவார்
ஓக்கே
அவ்வளவுதான் பேசி முடிச்சுட்டேன் :-)
இப்படி எல்லாம் சேம் சைடு கோல் போடக்கூடாது.
நிரூ.. உங்கள் எழுத்திலும் உண்மை உள்ளது. இருந்தாலும் அடுத்த பதிவரால் நம் எழுத்து அங்கீகரிக்கப்படும்போது ஒரு சின்ன சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் என் தளத்தினை அறிமுகப்படுத்தியத போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
வணக்கம் நிரூபன்!
எனக்கு இது ஒன்றும் தவறாக தெரியவில்லை.. நண்பர்களிடையே இருக்கும் நற்பின் அடையாளமாகத்தான் இந்த விருதுகளை நான் பார்க்கிறேன்!! தனக்கு பிடித்தவர்களுக்கு விருதை கொடுக்கிறார் அவ்வளவும்தான்!! என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன். இதில் தவறு இல்லை யாருமே அங்கிகாரத்துக்குதான் எழுதுகிறார்கள்.. அவர்கள் எங்களுக்கு பிடித்திருந்தால் அங்கீகரிப்பதில் தவறில்லை.. இதை விட டாக்குத்தர் பட்டம் படும் பாடு தெரியும்தானே..!! ( பதிவுலகில் எல்லோரும் உண்மையை சொல்வதில் நற்புக்காய் சில விடயங்களை சகித்துக்கொண்டிருக்கிரார்கள்!!!)
எனக்கும் இவ்வாறு ஒரு விருது இந்தமாதம் கிடைத்தது. கொடுத்த பதிவர் என் வலைத்தளத்தை வாசித்து வருகிறார் என்பதும் அவருக்கு என் மொக்கை விமர்சனங்களும் பிடித்திருந்தது என்பதும் விருது கிடைத்த பின்பு தான் எனக்குத் தெரியும்.
அதில் ஒரு சிறு சந்தோஷம் கிடைக்கிறது. வந்து இரண்டு மாதங்களாகப் போகிறது. அதற்குள் நம்மையும் பதிவுலகில் நோட் பண்ணி விருது கொடுக்கிறார்களே. மகிழ்ச்சி ... மகிழ்ச்சி.
அதிலும் புதிய பதிவர்களுக்கான விருது என்பதால், நாம் அவர்களுக்கு கொடுக்கும்போது அது அவர்களை மேலும் எழுதவும் ஊக்குவிக்கும்.
தனக்குத் தானே விருது கொடுப்பது என்பது மட்டுமே இங்கு எனக்குத் தெரியும் கேவலமான செயல். மற்றபடி இது ஒன்றும் தப்பில்லை.
பதிவுக்கு என் வன்மையான கண்டனங்கள்.. பதிவைப் படிச்சதும் என் கை கால் எல்லாம் வெட வெடத்துப்போய் ரைப் பண்ணவும் முடியேல்லை:)).. கோபத்தில எனச் சொல்ல வந்தேன்:))... கொஞ்சம் நில்லுங்க வாறேன்.. எங்கிட்டயேவா...
ஆமா ஆமினா அக்கா(ச்ச்சும்மா சொல்லிப் பார்த்தேன், இதுக்கெல்லாம் முறைக்கப்பூடா:))) பேசி முடிச்சிட்டா இல்லை... அதை நான் கண்டினியூ பண்ணப்போறேன்...
இன்று ஒரு கை பார்த்திடலாம்... தோ. வரேன்:)).
காட்டான் said...
//என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன்.////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. விடுங்க என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. யாரும் தடுத்திடாதீங்க:)))
//
angelin said...
//எனப் பலருக்கும் விருதுகளை அள்ளிப் பூச் சொரிந்து வாழ்த்துப்பா பாடாத குறையாக வழங்கி மகிழ்கிறார்கள்.
//
இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசம் நம்மையும் எல்லாரும் மறவாமல் இருக்கிறார்கள் என்று நினைவுபடுத்த .
அப்படீன்னும் எடுத்துக்கலா//
அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))
//எனக்கு விருது கிடைக்கலை என்ற வயித்தெரிச்சலில் இப் பதிவு எழுதப்பட்டது என்று நீங்க யாராச்சும் புலம்பினாள்,//
றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்... ஓடிவாங்க... ஸ்பெலிங்கு மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஉ:)) எங்கிட்டயேவா... என் கண்ணுக்கு எல்லாஆஆஆஆமே தெரியுமாக்கும்:)).
// angelin said...
வணக்கம் நிரூபன் .நலம்தானே
பரீட்சை நேரமா ??? கொஞ்ச நாளா உங்களை எங்கும் பார்க்கலை .///
ஓமோம் நிரூபனுக்குப் பரீட்சைதான் ஆனா இது வேற பரீட்சை:))
நிரூபன் பதிவுலகத்து வந்த புதிதில எனக்கும் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்பது உண்மை, இந்த விருதுகளைப் பார்க்க...
ஆனா போகப் போகத்தான் எனக்குப் புரிந்தது, அது நல்ல பதிவுகளுக்கானது என மட்டும் அர்த்தமில்லை... முக்கியமாக ஒரு ஊக்கியாகத்தான் விருது இருக்கின்றது.
அதிலும், புதிதாக வலைப்பூ திறந்த ஒருவருக்க்கு, விருத்தைக் கொடுத்திட்டு, அவரின் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கோ...
நான் இனி நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன், ஒழுங்காக எழுதுகிறேன்.... என்றெல்லாம் எழுதுவது தெரியுது... இதிலிருந்து என்ன புரியுது... விருது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாகத்தைக் கொடுக்கிறது...
இன்னும் சொல்லப்போனால் விருது என ஓரிடத்தில் ஆரம்பித்தவுடன், முழு வலையுலகுமே.. கல்யாணக்கொண்டாட்டம் போல... விருதைப் போடுவதும், அதை அடுத்தவருக்குக் கொடுப்பதுமாக குதூகலித்து உற்சாகம் பெற்றுவிடுவதைக் காண முடிகிறதல்லவா? இதுதானே தேவை.
எழுத எதுவுமில்லை என விட்டிட்டிருப்போர்கூட.. விருதைப்போட்டு புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்பது என் கருத்து.
இதில் தப்போ தவறோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
திரட்டிகளில் எல்லாம் 1ம் இடத்துக்கு வருவோரின் பதிவுகள் “அனைத்துமே”, உண்மையிலேயே விலைமதிப்பில்லாத உயர்ந்த பதிவுகளா? இல்லைத்தானே..
அப்போ திரட்டிகளில் முதலிடம் அவற்றுக்குக் கிடைக்கும்போது, ஒருவரை உற்சாகப்படுத்த விருது கொடுப்பதில் , அவரின் பதிவுகளைக் கவனித்துத்தான் விருது வழங்க வேண்டும் என கருத்துக் கொள்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.
அடுத்து தனக்குத் தானே விருது கொடுத்து தன்னை பப்ளிக்கில் வெளிக்கொணர்கிறார்கள் என்பது..
நீங்கள் சொல்வது உண்மைதான், பார்க்கும்போது ஒருவித எரிச்சல் உருவாகும்தான்... ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளப்படாது நிரூபன்.. அடுத்தவர்களால் நமக்கோ, மற்றவருக்கோ இடையூறு இல்லாதவரை, அவர்கள் எதுவும் செய்யட்டுமே... நன்மையோ தீமையோ அது அவர்களையே சேரும்.
என் கணவர் எனக்கு அடிக்கடி சொல்வார்... எமக்கு கிடைக்கும் என்பது கிடைக்காமல் போகாது, கிடைக்காதென்பது கிடைக்காது, அதனால நாம் மனவேதனையுறக்கூடாது என்று.
ஒரு பழமொழி இருக்குத் தெரியுமோ?
“உடம்பில் எண்ணெய் பூசிக்கொண்டு மண்ணிலே எப்படிப் புரண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும்” என்று.
அதுபோலத்தான் நிரூபன், எவர் எப்படி கள்ளத்தனமாக ஓடினாலும், அவரவருக்குக் கிடைக்கவேண்டிய பணம், புகழ் தான் கிடைக்குமே தவிர.. அதற்கு மேல் ஒரு துளியும் கிடைக்காது.
இன்று என் பதிவுக்கு பின்னூட்டம் 200 கிடைக்கும் என எழுத்தில் இருப்பின், அதை ஆராலும் தடுக்க முடியாது. அதுபோல, 20 ஐத்தாண்டாது என இருப்பின்.. எவ்ளோ அழுதாலும்... மனவேதனைதான் மிஞ்சுமேதவிர.. முடியாது.. அது விதி.
அதுசரி மேலே இருக்கும் படத்திலிருப்பது சிறுத்தைதானே? பூஸ் இல்லையே? சிறுத்தை என நினைத்தே... நல்ல பிள்ளையாகப் போகிறேன்... இல்லாவிட்டால் இப்போ நான் பிரித்தானிய ஜெயிலில் இருந்திருப்பேன்... ஒரு கொலைக் கேசில என்னை உள்ளே தள்ளியிருப்பினம் என்றேன்:))
//நிரூபன் said...
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
தொடருங்கள் சகோ! :-)
//
ஹே...ஹே..
பரதேசி! உனக்கு வேற பின்னூட்டம் போட தெரியாதா?//
athu therinja avar een ippadi irukkirar?
ஹையோ ஹையோ தமிழ்ல எழுதினால் வாசிச்சிட்டு வெடி வச்சிட்டாலும்(எனக்குத்தான்:)) என்ற பயத்திலதான் இங்கிலீசில எழுதினனான்.. எப்பூடி என் கிட்னியா?:)) எங்கிட்டயேவா? அவருக்குத்தான் ஏ பீ சீ டீ யே தெரியாதெல்லோ? நிரூபந்தானே அதை எனக்குச் சொன்னார்:)))..
உஸ்ஸ்ஸ் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))) எங்கிட்டயேவா? 2 நாளைக்கு முருங்கை மரத்தால இறங்கப்போறதில்லை.. இது “.......” மேல சத்தியம்:)))
எந்த பலனும் எதிர்பாராமல் எழுதும் சகோக்களுக்கு இது முதுகில் தட்டிக்கொடுப்பது போன்றது தானே...
எப்பொதுமே சக படைப்பாளியின் அங்கீகாரம் ..highest form of appreciation...
இதை அப்படியே எடுத்துக்கொண்டால் என்ன சகோதரம்...? Why can't we give 'em the benefit of the doubt...
ஒருவர் முகஸ்துதிக்கு தந்தாரோ...இல்லை லாபம் எதிர்பார்த்து தந்தாரோ...நட்புக்காக தந்தாரோ...எழுத்தை மதித்து தந்தாரோ...கொடுப்பதை நன்றியோடு வாங்கிக்கொள்வது தானே முறை...(Without going overboard)
உங்கள் பதிவின் காரணம் புரிகிறது...
நான் மதிக்கும் நால்வர் எனக்கு விருது தந்தார்கள்...மரியாதை நிமித்தமாய்...நட்பு நிமித்தமாய் நன்றியோடு சிறிது தர்மசங்கடத்தோடு பெற்றுக்கொண்டேன்...
அவை என்றும் என் வலைப்பூவில் இருக்கும்...
அதே நேரம் ஏறக்குறைய எல்லாரும் விருது பெறும் நேரத்தில் அதை மற்ற படைப்பாளிகளுக்கு கொடுக்க நினைக்கையில் ஏதொ ஒரு அசௌகர்யமான உணர்வு...
I know it is rude...but I will live with it...
Cheers...
ATHIRA SAID //ஆமா ஆமினா அக்கா(ச்ச்சும்மா சொல்லிப் பார்த்தேன், //
இந்த ஒரு மேட்டரை பார்த்து அடி கொடுக்கற வரைக்குமாவது ஆமீனா வீட்டில் கரண்ட் கட் ஆகக்கூடாது
காட்டான் said...
//என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன்.////
//விடுங்க என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. யாரும் தடுத்திடாதீங்க:)))//
I'M HAPPY TODAY ,I'M HAPPY TODAY
அண்ணா ப்ளீஸ் சீக்கிரமே அந்த ஐந்து பேருக்கும் அவார்ட் தாங்களேன் ..
அந்த காட்சியை நாங்க லைவா பாக்கணும்
//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//
அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன்
சீக்கிரம் வாங்க .

அந்த காட்சியை நாங்க லைவா பாக்கணும்///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உலகத்தில நல்லவங்க(என்னைச் சொன்னேன்:)) வாழவே முடியாது போல:)) பொறுக்காதே.. பொயிங்கி எழும்பீனம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
// angelin said...
//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//
அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன்
சீக்கிரம் வாங்க .///
மீயும்...மீயும்... எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறதாம்:)).. நோ அஞ்சு நிரூபன் இண்டைக்கு வெளில வருவார் என்றா நினைக்கிறீங்க? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))... நாமெல்லாம் ஆரு?:)).. விட்டிடுவமா?.. எங்கிட்டயேவா?:)).. இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், வறுத்த கச்சான் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுச் சாப்பிட்டு இருப்பம்:)).
நான் இப்ப வரிசையா பல பின்னூட்டங்களோடு காத்திருக்கிறேன் .
உடனே வாங்க நிரூபன் WE NEED YOUR OPINION.
we should express our appreciation five times more than our criticism.
எங்கேயோ எப்பவோ படிச்சது ஆனா இன்னும் நினைவில் இருக்கு .
ஒரு அவார்டை பத்து பதிவு எழுதிய ஒருத்தருக்கு கொடுத்தால் அது அவர் இன்னும் பல நூறு பதிவு எழுத OR அவரை வெளிச்சத்தில் காட்ட அது உதவுமென்றால் அதில் தவறேதும் கிடையாது என்ற ஆணித்தரமான கருத்துடன் எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்
//எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்//
மீயும்...மீயும்.... என் வாதட்தை முடித்துக் கொள்கிறேன்..... உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா.. என்னை இப்பூடித் தனிய விட்டிட்டு அஞ்சு ஓடிட்டா.... மீயும் எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அன்பரே
ஏங்க...இப்படிச் சொல்லீட்டீங்களே
மீண்டும் அனைவருக்கும் வணக்கமுங்க,
நான் எங்கேயும் போகலைன்ங்க. பயந்தும் ஓடலைங்க. வேலை முடிச்சு இப்போ தான் வீட்டிற்கு வந்திருக்கேனுங்க.
எல்லோரிடமும் ஓர் பொதுவான கேள்வி! பின்னூட்டம் ஊடாக உங்கள் பக்க கருத்துக்களை + நியாயங்களை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க. அனைவருக்கும் பாராட்டுக்கள்!
எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்றால் என்ன? ப்ளீஸ் விளக்குங்கள்.
எழுத்திற்கான அங்கீகாரமாக விருது கொடுக்கப்பட்டிருப்பதாக பல பதிவர்கள் தம் வலையில் விருதுகளை ஸ்லைட் ஷோ வடிவில் வைத்திருக்கிறார்களே! அதன் அர்த்தம் என்ன?
நட்பிற்கான அங்கீகாரமாக விருதுகள் கொடுக்கப்படுகின்றனவா? எழுத்திற்கான அங்கீகாரமாக விருதுகள் கொடுக்கப்படுகின்றனவா?
சினிமாவில் பாடல் எழுதுவதில் வைரமுத்து வல்லவர்,
கவிதையில் கம்பன், ஷெல்லி, கவியரசர்,
இசையில் ஆஸ்கார் விருது வென்றவர் ஏ.ஆர்.ரகுமான்.
அப்படீன்னா...ஒரு டவுட்டுங்க. நட்பிற்காக விருதுகளை நாம் பகிர்வதாக இருப்பின், ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு கொடுக்க வேண்டிய விருதை ஹரீஸ்ஜெயராஜ் சாருக்கு குடுக்கலாமேங்க?
அப்படி யாருமே பண்ணமா, ஆஸ்கார் என்ற அமைப்பின் ஊடாக அல்லவா விருது கொடுத்திருக்கிறாங்க.
அப்போ ஏனுங்க, மத்த இசையமைப்பாளர்களுக்கும் இதே பாணியில் ஓர் விருதினை கொடுத்திருக்கலாமே? யாருமே அப்படி ஏன் திங் பண்ணாம தனித்துவமான ஒருவருக்கு விருது கொடுக்கிறாங்க!
விருது எனப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன? ப்ளீஸ்..தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! திறமையானவர், ஓர் துறையில் சிறந்தவருக்கு வழங்கப்படுவது தான் விருது!
நட்பிற்கு அங்கீகாரமாக விருது வழங்கப்படுவதாக வலையுலகில் பலருமே பேசுவதில்லை! என் எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனைப் பார்க்கிறேன் என்றால்,
காப்பி பேஸ்ட் பதிவருக்கு சிறந்த படைப்பாளி என்ற விருதும், சும்மா உட்காந்து யோசித்து எழுதுபவனுக்கு ஒரு விருதும் கிடைக்காது, தமக்கு பிடித்தவர்களுக்கு மாத்திரம் விருது கொடுப்பதை இங்கே கருத்துரை வழங்கிய அனைவரும் மனதளவில் ஏத்து கொள்ளுறீங்களா?
@Kumaran
வணக்கம் நண்பரே,
உண்மையா சொல்கிறேன்..எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..தொடரட்டும் தங்கள் பணி..நன்றி//
பரவாயில்லை நண்பா,.
நன்றி.
@தனிமரம்
வணக்கம் நிரூபன்!
பார்த்தேன் ,படித்தேன் ,ரசித்தேன் ,சிரித்தேன் . தொடருங்கள் அடுத்த பதிவில் வருவேன் .
//
வணக்கமுங்கோ, தனி,
நன்றி.
@மகேந்திரன்
வணக்கம் சகோதரா,
நலமா?
பதிவின் தலைப்பைப் பார்த்ததும் எனக்கு கோபம் வரவில்லை.
நிரூபன் எப்போதும் கோபப்படும்படி எழுதமாட்டார் என்ற நம்பிக்கை
என் மனதில் எப்போதும் உண்டு..
வழக்கம்போல
" நெற்றிக்கண் திறப்பினும்
குற்றமா குற்றமே"
என்ற நவீன நக்கீரனாய்...//
நன்றி அண்ணர்.
பதிவின் உண்மைத் தன்மையினை உணர்ந்து நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறீங்க.
@angelin
வணக்கம் நிரூபன் .நலம்தானே
பரீட்சை நேரமா ??? கொஞ்ச நாளா உங்களை எங்கும் பார்க்கலை .
//
வணக்கம் அக்கா,
நான் உங்க புண்ணியத்தில நல்லா இருக்கேன்.
பரீட்சை ஒன்றும் இல்லை. கொஞ்சம் பிசி.
@angelin
இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசம் நம்மையும் எல்லாரும் மறவாமல் இருக்கிறார்கள் என்று நினைவுபடுத்த .
அப்படீன்னும் எடுத்துக்கலாம் //
நம்மை யாரும் மறவாமல் இருப்பதற்காக விருது கொடுப்பதில் தப்பேதுமில்லை. ஆனால் வலையுலகில் விருது வழங்குவோர் சிலரைப் பார்க்கையில், நமக்கு ஓர் அடிமை சிக்கமாட்டானா எனும் நிலையில் தான் விருது வழங்குகிறார்கள். இந் நிலமை மாற வேண்டும் என்பது தான் பலரின் எண்ணம்.
ஒரு கேள்வி! எம்மை யாரும் மறக்காம இருப்பதற்கு விருது கொடுக்கிறோம் என்றால். அப்புறம் எதுக்குங்க, எழுத்திற்கு அங்கீகாரம் அப்படீன்னு அந்த விருதில் ஓர் அடை மொழி சேர்க்கனும்?
@ஹேமா
நிரூ...சுகம்தானே
அதுசரி...பதிவே விருதுபோலத்தான் கிடக்கு.நடத்துங்கோ!
//
ரொம்ப நக்கலு ஆச்சி!
சாரி அக்காச்சி!
நன்றி.
வணக்கம் பாஸ் நலமா?
தனக்குத்தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களைப்பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
நமது எழுத்தை படித்து சரியாயிருந்தா நல்லா எழுதற,இல்லையா நீ எழுதறது சரியில்லை அப்படின்னு சொல்லும் நண்பர்கள் கொடுக்கும் விருதினை ஏற்பதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
//எதையும் எதிர் பார்த்தோ,பாராட்டு கிடைக்குமேன்றோ பதிவெழுதுவதில்லை யாரும்.ஆனால் இது போன்ற தட்டிகொடுக்கும் நிகழ்வுகள்,நண்பர்கள் தரும் இது போன்ற அங்கீகாரம் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றும் போதே துடைத்து புத்துணர்வுடன் எழுத வைக்கிறது.//
இது நண்பர்கள் ராஜ் எனக்கு விருது வழங்கிய பதிவில் எனது கமெண்ட்.எனது நிலைப்பாடும் இதுதான்.
@ஆமினா
ப்ப பார்த்தாலும் இந்த அக்கா திட்டுறதுக்குதான் வருவான்னு உன் மனசுல கோபப்படுறது கேக்குது ஹி..ஹி..ஹி.. என்ன செய்ய :-)
எனக்கு இப்போதெல்லாம் விருதின் மேல் நாட்டம் இருப்பதில்லை. ஏன்னா என் எழுத்தின் மதிப்பை உணர்ந்து வைத்திருக்கிறேன். அதற்காக விருது கொடுப்பதையும் அதை பெறுவதையும் இந்த அளவுக்கு மட்டம் தட்டியிருக்க தேவையில்லை.
முன்பு பதிவெழுத வந்த புதிதில் எனக்கு கிடைத்த முதல் விருது என்னமோ எனக்கு கிடைத்த அங்கிகாரம் போலவே இருந்தது. சின்ன சின்ன ஊக்கங்கள் தானே மனிதனை முன்னேற்றபாதையை நோக்கி பயணிக்க செய்யுது.
இவ்விருதும் அது போலவே தான். //
நான் ஒன்னும் கோவிச்சுக்கலை அக்கா,
குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கப்பட்டால் அந்த விருதுக்கு ஓர் மதிப்பும், மரியாதையும், மவுசும் இருக்கும். ஆனால் கும்பலில் கோவிந்தாவாக விருது கொடுத்து மகிழ்வதை உங்களால் ஏற்க முடிகிறதா?
இதில சிலர் தமக்கு தாமே இன்னோர் ப்ளாக் ஆரம்பித்து அது மூலமாயும் விருது கொடுக்கிறாங்க. இந்த கொடுமைகளை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?
விருது கொடுப்போரை மட்டந் தட்டி எழுதனும் என்ற நோக்கில் இப் பதிவினை எழுதவில்லை. ஓர் அங்கீகாரமானத்து அனைவருக்கும் வழங்கப்படும் போது,
அந்த அங்கீகாரத்திற்கு அர்த்தம் இருப்பதாக நாம் நினைத்து வழங்க வேண்டும் எனும் நோக்கில் தான் இப் பதிவினை எழுதியிருக்கேன்.
@ஆமினா
விருது கொடுக்குறது என்ன அவ்வளவு ஈசின்னு நெனச்சுக்கீட்டீங்களா நிரூபன்? அவ்வ்வ்வ்வ்
ஒரு நாலு பேரை கூப்பிட்டு கொடுத்தா அதுல 2 பேரு ஒன்னும் சொல்லாம மரியாதை நிமிர்த்தம் வாங்கிக்குவாங்க. மீதி 2 பேரு அவமானப்படுத்தாத குறையா "எனக்கு இதெல்லாம் தேவை இல்லை" என சொல்லும் போது மனதிற்கு எவ்வளவு சங்கடமா இருக்கும் தெரியுமா? கொடுப்பதே ஒரு அன்பின் பரிசாய் தான். அதில் ஒர்த் இல்லைன்னு முன்பே தெரிந்தும் எனக்கு வேண்டாம்னா என்ன அர்த்தம்? முன்பு இது போல் சில முறை காயப்பட்டிருக்கிறேன். அதானாலேயே எவரேனும் கொடுத்தால் மகிழ்ச்சியோடு வாங்கிவிடுவேன். நம்மால் முடிந்த சிறு மகிழ்ச்சியை பிறருக்கு பகிரும் போது கிடைக்கும் சுகமே தனி தான்.//
விருது ஒர்த் இல்லைன்னு நெனைச்சு யாருமே மறுப்பதாக நான் அறியவில்லை. சிலர் உங்கள் படைப்பிற்கான அங்கீகாரமாக விருது என்று சொல்லி கொடுக்கும் போது,
எமது படைப்பு, எம் எழுத்துக்கள் அந்தளவு தூரம் ஒர்த் ஆக இருக்கா என நினைத்து தான் பலர் விருதுகளை புறக்கணிக்கிறார்கள்.
அக்கா, விருது கொடுப்பதை வாங்குவதும் தவறில்லை. விருது கொடுப்பதும் தவறில்லை. ஆனால் எல்லோருக்கும் இதோ...விருது என்று சொல்லி கொடுப்பதன் ஊடாக, அந்த விருதிற்குள்ள அர்த்தத்தினை நாம் இல்லாது செய்கின்றோம் தானே?
@ஆமினா
தனக்கு தானே விருது கொடுத்த அந்த பதிவருக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். யாரென்று தனியாக சொல்லுங்கள் எனக்கு. என்னால் முடிந்த ஊக்கங்கள் தருகிறேன். நம் நாற்றின் மூலமும் வரவேற்பு கிடைக்கச்செய்யலாம்.
அங்கிகாரத்திற்காக தானே இப்படி செய்கிறார். அதை நாமே முறையாய் கொடுத்துட்டால் அவரும் ஊக்கத்தோட எழுத ஆரம்பித்துவிடுவார்
ஓக்கே
அவ்வளவுதான் பேசி முடிச்சுட்டேன் :-)//
ஹே ஹே ஹே...
அவருக்கு பல ரீதியில் அங்கீகாரம் கிடைக்கனும் என நினைத்து நானும் என் பதிவுகளிலும் அறிமுகம் செய்திருக்கேன். ஆனாலும் அவர் தன்னை தானே புகழ்ந்து எழுதுவதையும், தனக்கு தானே விருது கொடுத்து சுய சொறிதல் செய்வதையும் இன்னமும் நிறுத்தலைங்க. ஆதலால் இனிமே அவர் வழியில் நாம எதற்கு குறுக்கிடுவான் என நினைத்து விலகிட்டோம்.
@பழனி.கந்தசாமி
இப்படி எல்லாம் சேம் சைடு கோல் போடக்கூடாது.
//
ஹே...ஹே..நன்றி ஐயா.
@விச்சு
நிரூ.. உங்கள் எழுத்திலும் உண்மை உள்ளது. இருந்தாலும் அடுத்த பதிவரால் நம் எழுத்து அங்கீகரிக்கப்படும்போது ஒரு சின்ன சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் என் தளத்தினை அறிமுகப்படுத்தியத போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
//
சகோதரம் விச்சு,
பதிவரை அறிமுகப்படுத்துவது, விருது கொடுப்பது எல்லாமே தவறில்லை.
கடந்த வருடம் மட்டும் இரு நூற்றிற்கு மேற்பட்ட புதிய பதிவர்களை நான் அறிமுகப்படுத்தியிருப்பேன். ஆனால் அவர்கள் எல்லோரும் என்னை சுற்றி வரனும் என்று நான் நினைத்ததுண்டா? இல்லையே!
ஆனால் இந்த விருது வழங்கும் நபர்கள் சிலர், தமக்கு ஓர் அடிமை சிக்கமாட்டான என நினைத்து அலைவது தான் என்னால் சகிக்க முடியலை! நன்றாக வலை உலகை உற்று நோக்குங்கள். இன்னும் சில விடயங்கள் புதியவரான உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வலையுலக அரசியலாக இருக்கும்.
ஒரு விருதினை ஓர் எல்லைக்குள் மட்டுப்படுத்தி கொடுக்கலாம். ஆனால் எல்லோருக்கும் ஒரே தாளக் கதியில் கொடுப்பதை உங்களால் ஏற்க முடியுமா சகோ?
@காட்டான்
வணக்கம் நிரூபன்!
எனக்கு இது ஒன்றும் தவறாக தெரியவில்லை.. நண்பர்களிடையே இருக்கும் நற்பின் அடையாளமாகத்தான் இந்த விருதுகளை நான் பார்க்கிறேன்!! தனக்கு பிடித்தவர்களுக்கு விருதை கொடுக்கிறார் அவ்வளவும்தான்!! //
மாமோய்....இந்த கருத்தினை நான் மறுத்துரைக்கிறேன்.
நட்பின் அடையாளமாக விருது கொடுப்பது ஓக்கே...
ஆனால் பல இடங்களில் இருந்து சுட்ட பதிவின் அடையாளமாக விருது கொடுக்கலாமா? அதனை பெற்ற பதிவரோ, என் எழுத்துக்களை உலகெங்கும் இருந்து எல்லோரும் படிக்கிறாங்க. என் எழுத்திற்கான அங்கீகாரமாக இந்த விருதினை கொடுத்திருக்காங்க என்றோர் தனிப் புலம்பல், சலம்பல். அலம்பல்; பதிவு போட்டு பதிவுலகில் உள்ள பலருக்கும் கடுப்பினை கிளப்புவதனை தங்களால் ஏற்க முடிகிறதா?
@காட்டான்
இதில் தவறு இல்லை யாருமே அங்கிகாரத்துக்குதான் எழுதுகிறார்கள்.. அவர்கள் எங்களுக்கு பிடித்திருந்தால் அங்கீகரிப்பதில் தவறில்லை.. இதை விட டாக்குத்தர் பட்டம் படும் பாடு தெரியும்தானே..!! ( பதிவுலகில் எல்லோரும் உண்மையை சொல்வதில் நற்புக்காய் சில விடயங்களை சகித்துக்கொண்டிருக்கிரார்கள்!!!)//
அண்ணர், நட்பிற்காக உண்மைகளை சொல்லாதிருப்பதை நான் ஒரு போதும் வரவேற்பதில்லை. நண்பர்கள் வழி தவறும் போது திருத்தினால் தான் அது நட்பின் அடையாளம்.
நட்பின் அடையாளமாக விருது கொடுப்பது ஓக்கே! ஆனால் எழுத்தின் அங்கீகாரமாக புதிதாக வலை எழுத வந்து ஒரு பதிவு மாத்திரம் எழுதினவருக்கும் விருது கொடுத்து விருதிற்கான அர்த்தத்தினையே இல்லாது செய்கிறார்களே?
இது பற்றி தங்கள் கருத்து என்ன?
@ஹாலிவுட்ரசிகன்
வருகிறார் என்பதும் அவருக்கு என் மொக்கை விமர்சனங்களும் பிடித்திருந்தது என்பதும் விருது கிடைத்த பின்பு தான் எனக்குத் தெரியும்.
அதில் ஒரு சிறு சந்தோஷம் கிடைக்கிறது. வந்து இரண்டு மாதங்களாகப் போகிறது. அதற்குள் நம்மையும் பதிவுலகில் நோட் பண்ணி விருது கொடுக்கிறார்களே. மகிழ்ச்சி ... மகிழ்ச்சி.
அதிலும் புதிய பதிவர்களுக்கான விருது என்பதால், நாம் அவர்களுக்கு கொடுக்கும்போது அது அவர்களை மேலும் எழுதவும் ஊக்குவிக்கும்.
//
ஹாலிவூட் நண்பா,
உங்கள் விமர்சனங்களிற்கு விருது கிடைத்தது தொடர்பில் மாற்றுக்கருத்து ஏதுமே இல்லை. ஆனால் புதிதாக பதிவெழுத வந்து, மூன்று, நான்கு பதிவே எழுதிடாதவர்களுக்கும் விருது கொடுத்து, அடிமையாக்க சிலர் நினைக்கிறார்களே. அது தவறு தானே நண்பா?
@athira
பதிவுக்கு என் வன்மையான கண்டனங்கள்.. பதிவைப் படிச்சதும் என் கை கால் எல்லாம் வெட வெடத்துப்போய் ரைப் பண்ணவும் முடியேல்லை:)).. //
நல்ல வேளை, கண்டனம் செலுத்துவதோடு நிறுத்திடீங்க. கட்சிக் கொடி, கறுப்புக் கொடிப் போராட்டம் ஒன்னும் நடத்தலைங்க.
ஏன் கையும். ஓடலை, காலும் ஓடலை!
லண்டனில குளிர் கூடிட்டா?
இனிமே பதிவை படிக்கும் போது ஹீட்டரை போட்டு விட்டு படியுங்க ;-)))
@athira
இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசம் நம்மையும் எல்லாரும் மறவாமல் இருக்கிறார்கள் என்று நினைவுபடுத்த .
அப்படீன்னும் எடுத்துக்கலா//
அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))
//
சின்னச் சின்ன சந்தோசத்திற்காக விருது கொடுப்பது ஓக்கேங்க.
ஆனால் அங்கீகாரம், உங்கள் எழுத்துக்களுக்கான கௌரவிப்பு என்று சொல்லி விருது கொடுக்கிறாங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதற்கு உங்கள் பதில் என்ன?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்ல வாறீங்களா?
@athira
//எனக்கு விருது கிடைக்கலை என்ற வயித்தெரிச்சலில் இப் பதிவு எழுதப்பட்டது என்று நீங்க யாராச்சும் புலம்பினாள்,//
றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்... ஓடிவாங்க... ஸ்பெலிங்கு மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஉ:)) எங்கிட்டயேவா... என் கண்ணுக்கு எல்லாஆஆஆஆமே தெரியுமாக்கும்:)).
//
றீச்சர் ஓடியந்து பிரம்பு எடுக்க முன்னாடி எழுத்துப் பிழையை மாத்திடுறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
/ angelin said...
வணக்கம் நிரூபன் .நலம்தானே
பரீட்சை நேரமா ??? கொஞ்ச நாளா உங்களை எங்கும் பார்க்கலை .///
ஓமோம் நிரூபனுக்குப் பரீட்சைதான் ஆனா இது வேற பரீட்சை:))
//
நல்லா வைக்கிறாங்க அப்பு
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
நிரூபன் பதிவுலகத்து வந்த புதிதில எனக்கும் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்பது உண்மை, இந்த விருதுகளைப் பார்க்க...
ஆனா போகப் போகத்தான் எனக்குப் புரிந்தது, அது நல்ல பதிவுகளுக்கானது என மட்டும் அர்த்தமில்லை... முக்கியமாக ஒரு ஊக்கியாகத்தான் விருது இருக்கின்றது.
அதிலும், புதிதாக வலைப்பூ திறந்த ஒருவருக்க்கு, விருத்தைக் கொடுத்திட்டு, அவரின் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கோ...
நான் இனி நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன், ஒழுங்காக எழுதுகிறேன்.... என்றெல்லாம் எழுதுவது தெரியுது... இதிலிருந்து என்ன புரியுது... விருது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாகத்தைக் கொடுக்கிறது...
இன்னும் சொல்லப்போனால் விருது என ஓரிடத்தில் ஆரம்பித்தவுடன், முழு வலையுலகுமே.. கல்யாணக்கொண்டாட்டம் போல... விருதைப் போடுவதும், அதை அடுத்தவருக்குக் கொடுப்பதுமாக குதூகலித்து உற்சாகம் பெற்றுவிடுவதைக் காண முடிகிறதல்லவா? இதுதானே தேவை.
//
புதிதாக எழுத வந்தோர், பழைய பதிவரின் காலைச் சுத்தி வருமாறும் விருது கொடுத்து மயக்குகிறார்களே. உங்கள் கருத்து என்ன?
நட்பிற்கு அடையாளமாக விருது கொடுக்கலாம். ஆனால் அங்கீகாரம் என்றோர் மை பூசி விருது கொடுப்பதை உங்களால் ஏற்க முடியுமா?
ஊக்கம், உற்சாக பாணம் எல்லாம் ஓக்கே தான். அந்த விருதானது குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் பகிரப்படும் போது, அதற்கு அர்த்தம் இருக்கும். ஆனால் கும்பலில் கோவிந்தா போல யார், யாருக்கு, யார் விருது கொடுப்பது என்று கூட உணர முடியாதவர்களாக பலர் விருது கொடுக்கிறார்களே! இது பற்றி உங்கள் கருத்த்ஜு என்ன?
@athira
எழுத எதுவுமில்லை என விட்டிட்டிருப்போர்கூட.. விருதைப்போட்டு புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்பது என் கருத்து.
இதில் தப்போ தவறோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
திரட்டிகளில் எல்லாம் 1ம் இடத்துக்கு வருவோரின் பதிவுகள் “அனைத்துமே”, உண்மையிலேயே விலைமதிப்பில்லாத உயர்ந்த பதிவுகளா? இல்லைத்தானே..
அப்போ திரட்டிகளில் முதலிடம் அவற்றுக்குக் கிடைக்கும்போது, ஒருவரை உற்சாகப்படுத்த விருது கொடுப்பதில் , அவரின் பதிவுகளைக் கவனித்துத்தான் விருது வழங்க வேண்டும் என கருத்துக் கொள்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.
//
சூப்பர் கருத்து சொல்லியிருக்கிறீங்க. அடுத்த பதிவில் திரட்டிகளில் நம்பர் ஒன்னாக வருவோர் பத்தி எழுதலாம் என்றிருக்கேன்.
ஹூம்........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
//Yoga.S.FR said...
ஹூம்........!!!!!!!!!!!!!!!!!!!!!!!///
பட்டாசு, கண்ணிவெடி, மிதிவெடி எல்லாம் வெடிச்சூஊஊஊஊஊ.. ஆட்களும் கத்திக் கதைத்து மயங்கிப்போன பின்புதானே... ஆரோவுடைய சத்தம், அதுவும் மெதுவாக் கேட்குது:))...
ஹையோ நானில்ல நானில்ல:) இண்டைக்கு என் ராசிப்பலனைக் கவனிக்காமல் அடிக்கடி என்னவோ சொல்லிக்கொண்டே இருக்கிறேனே.. அவ்வ்வ்வ்வ்..
முருகா, இனியும் என்னை இதில் பின்னூட்டம் போட விட்டிடாமல் பார்த்துக்கொள்ளப்பா.. வள்ளிக்குச் சங்கிலி போடுவேன்... ஓம் பென்டன் போட்டது:))
வணக்கம் இரவு வந்தனம் நிரூபன் .
எங்க தங்க தன்னிகரில்லா தானை தலைவி பெண்சிங்கம் அதிரா அவர்கள் தலைமையேற்று வீரநடை போட்டு வரும்போது சின்னஞ்சிறு அற்ப பூண்டுவாகிய நான் ஒதுங்கி தூர இருந்து ...........ஓடிவிடுகிறேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))
athira said...முருகா, இனியும் என்னை இதில் பின்னூட்டம் போட விட்டிடாமல் பார்த்துக்கொள்ளப்பா.. வள்ளிக்குச் சங்கிலி போடுவேன்... ஓம் பென்டன் போட்டது:////GURANTIE!!!!!!!
@athira
நிரூபன் பதிவுலகத்து வந்த புதிதில எனக்கும் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்பது உண்மை, இந்த விருதுகளைப் பார்க்க...
ஆனா போகப் போகத்தான் எனக்குப் புரிந்தது, அது நல்ல பதிவுகளுக்கானது என மட்டும் அர்த்தமில்லை... முக்கியமாக ஒரு ஊக்கியாகத்தான் விருது இருக்கின்றது.
அதிலும், புதிதாக வலைப்பூ திறந்த ஒருவருக்க்கு, விருத்தைக் கொடுத்திட்டு, அவரின் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கோ...
நான் இனி நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன், ஒழுங்காக எழுதுகிறேன்.... என்றெல்லாம் எழுதுவது தெரியுது... இதிலிருந்து என்ன புரியுது... விருது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாகத்தைக் கொடுக்கிறது... //
புதிதாக வந்த ஒரு பதிவர் எம்மையே சுத்தி சுத்தி வந்து நல்ல பின்னூட்டங்கள் போடனும் என்பதற்காகவா இப்படி விருது கொடுக்கிறோம்? ப்ளீஸ் தெளிவு படுத்துங்கள். புதிதாக வந்த ஒருவரின் எழுத்துக்கள் மேன்மையடைய விருது கொடுப்பதாயின் வலைப் பூவின் ஜுனியர் விருது என்ற ஓர் விருதினை நீங்க கொடுக்கலாமே? அதேனுங்க சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் ஒரே மாதிரியான விருதினை கொடுக்கிறாங்க?
@athira
திரட்டிகளில் எல்லாம் 1ம் இடத்துக்கு வருவோரின் பதிவுகள் “அனைத்துமே”, உண்மையிலேயே விலைமதிப்பில்லாத உயர்ந்த பதிவுகளா? இல்லைத்தானே..
அப்போ திரட்டிகளில் முதலிடம் அவற்றுக்குக் கிடைக்கும்போது, ஒருவரை உற்சாகப்படுத்த விருது கொடுப்பதில் , அவரின் பதிவுகளைக் கவனித்துத்தான் விருது வழங்க வேண்டும் என கருத்துக் கொள்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.//
திரட்டிகளில் நம்பர் ஒன் ஆக வருவது ரொம்ப சிம்பிளான விடயம், நல்ல பதிவு எழுதி தான் நம்பர் ஒன்னாக வரனும் என்று யாரும் நினைப்பதாக தெரியல்லை.
எழுந்தமானத்திற்கு உப்புச் சப்பற்ற, உப்புமா பதிவுகளை போட்டு, பதிவர்களை மன ரீதியில் கொன்று தான் பலர் நம்பர் ஒன்னாக வருகிறார்கள். இந் நிலை மாற வேண்டும். இது தொடர்பாக இன்னுமோர் பதிவில் எழுதுகின்றேன்.
இந்த நம்பர் ஒன் மாயையினால் பல காத்திரமான பதிவர்கள் காணமாற் போகின்றார்கள் என்பது உண்மையே.
@athira
அடுத்து தனக்குத் தானே விருது கொடுத்து தன்னை பப்ளிக்கில் வெளிக்கொணர்கிறார்கள் என்பது..
நீங்கள் சொல்வது உண்மைதான், பார்க்கும்போது ஒருவித எரிச்சல் உருவாகும்தான்... ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளப்படாது நிரூபன்.. அடுத்தவர்களால் நமக்கோ, மற்றவருக்கோ இடையூறு இல்லாதவரை, அவர்கள் எதுவும் செய்யட்டுமே... நன்மையோ தீமையோ அது அவர்களையே சேரும்.
//
மற்றவர்கள் தம்மை தாமே புகழ்ந்து எழுதுவதை படித்து தொலைக்குமாறு வற்புறுத்தி அல்லவா கொல்கிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு தீமை தானே எழுகின்றது. தமக்கு தாமே அங்கீகார விருது கொடுப்பது, தாமும் ஓர் பதிவர், தம் எழுத்துக்களையும் படிக்க அனைவரும் வரனும் என்ற நல் நோக்கத்தினால் தான். அந் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியதாகினும், இப்படி குள்ளநரி விளையாட்டுக்கள் இடம் பெறும் போது,
எல்லை மீறும் போது சகிக்க முடியாதல்லவா இருக்கிறது.
@athira
என் கணவர் எனக்கு அடிக்கடி சொல்வார்... எமக்கு கிடைக்கும் என்பது கிடைக்காமல் போகாது, கிடைக்காதென்பது கிடைக்காது, அதனால நாம் மனவேதனையுறக்கூடாது என்று.
ஒரு பழமொழி இருக்குத் தெரியுமோ?
“உடம்பில் எண்ணெய் பூசிக்கொண்டு மண்ணிலே எப்படிப் புரண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும்” என்று.
அதுபோலத்தான் நிரூபன், எவர் எப்படி கள்ளத்தனமாக ஓடினாலும், அவரவருக்குக் கிடைக்கவேண்டிய பணம், புகழ் தான் கிடைக்குமே தவிர.. அதற்கு மேல் ஒரு துளியும் கிடைக்காது.
இன்று என் பதிவுக்கு பின்னூட்டம் 200 கிடைக்கும் என எழுத்தில் இருப்பின், அதை ஆராலும் தடுக்க முடியாது. அதுபோல, 20 ஐத்தாண்டாது என இருப்பின்.. எவ்ளோ அழுதாலும்... மனவேதனைதான் மிஞ்சுமேதவிர.. முடியாது.. அது விதி.//
இப்படி திருட்டுத்தனமாக ஓடுவதுடன் அவர்கள் நிற்கிறார்களா? இல்லையே, ஏனைய பதிவர்களை மட்டந் தட்டி, அவர்களின் எழுத்துக்களை குறைத்து மதிப்பீடு செய்து, தம் படைப்புக்களை தாமே புகழ்ந்து எழுதி எரிச்சல் ஊட்டுகிறார்களே! என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.
@athira
அதுசரி மேலே இருக்கும் படத்திலிருப்பது சிறுத்தைதானே? பூஸ் இல்லையே? சிறுத்தை என நினைத்தே... நல்ல பிள்ளையாகப் போகிறேன்... இல்லாவிட்டால் இப்போ நான் பிரித்தானிய ஜெயிலில் இருந்திருப்பேன்... ஒரு கொலைக் கேசில என்னை உள்ளே தள்ளியிருப்பினம் என்றேன்:))
//
உங்கட வள்ளி, சங்கிலி களவெடுத்த ஐடியா funny மேல சத்தியமா சொல்றேன்! படத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை. கூகிளில் தேடும் போது இப் படம் மாட்டிச்சு. மேலே படத்தில் இருப்பது சிறுத்தை என்றே இப்போதைக்கு நினைப்போம். அது பூஸ் அல்ல;-)))
@athira
/நிரூபன் said...
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
தொடருங்கள் சகோ! :-)
//
ஹே...ஹே..
பரதேசி! உனக்கு வேற பின்னூட்டம் போட தெரியாதா?//
athu therinja avar een ippadi irukkirar?
ஹையோ ஹையோ தமிழ்ல எழுதினால் வாசிச்சிட்டு வெடி வச்சிட்டாலும்(எனக்குத்தான்:)) என்ற பயத்திலதான் இங்கிலீசில எழுதினனான்.. எப்பூடி என் கிட்னியா?:)) எங்கிட்டயேவா? அவருக்குத்தான் ஏ பீ சீ டீ யே தெரியாதெல்லோ? நிரூபந்தானே அதை எனக்குச் சொன்னார்:)))..
உஸ்ஸ்ஸ் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))) எங்கிட்டயேவா? 2 நாளைக்கு முருங்கை மரத்தால இறங்கப்போறதில்லை.. இது “.......” மேல சத்தியம்:)))
//
அவன் ஆங்கிலத்தை மொழி பெயர்க்க ரெண்டு மொழி பெயர்ப்பாளர்களை வைச்சிருக்கான். அவனோட மொழி பெயர்ப்பாளர்கள் மட்டும் பார்க்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல வேளை அவங்க ரெண்டு பேரும் ஹாலிடேயில் இருக்காங்களாம்.
@ரெவெரி
எந்த பலனும் எதிர்பாராமல் எழுதும் சகோக்களுக்கு இது முதுகில் தட்டிக்கொடுப்பது போன்றது தானே...
எப்பொதுமே சக படைப்பாளியின் அங்கீகாரம் ..highest form of appreciation...
இதை அப்படியே எடுத்துக்கொண்டால் என்ன சகோதரம்...? Why can't we give 'em the benefit of the doubt...
ஒருவர் முகஸ்துதிக்கு தந்தாரோ...இல்லை லாபம் எதிர்பார்த்து தந்தாரோ...நட்புக்காக தந்தாரோ...எழுத்தை மதித்து தந்தாரோ...கொடுப்பதை நன்றியோடு வாங்கிக்கொள்வது தானே முறை...(Without going overboard)
உங்கள் பதிவின் காரணம் புரிகிறது...
//
பாராட்டுதல், மனம் திறந்து, மனமுவந்து ஒரு படைப்பாளியின் கருத்துக்களை கூறுவது இவை எப்போதும் ஆக்கபூர்வமான எழுத்துலகை கட்டியெழுப்ப, படைப்பாளியை மெருகேற்ற நிச்சயமாக உதவும்.
ஆனால் எல்லோருக்கும் ஒரே விருதினை அங்கீகாரமாக் கொடுத்தால், நல்ல படைப்பாளியை நம்மால் அடையாளங் கண்டு கொள்ள முடியாது போகும் அல்லவா?
அடுத்த விடயம், பல இடங்களில் பதிவுலகினுள் நுழைந்து ரெண்டு, மூனு பதிவுகளே எழுதாத பச்சிளங் குழந்தைகளுக்கும் அல்லவா விருதுகளை வழங்கி உசுப்பேத்துகிறார்கள்.இதனை எப்படி அண்ணா, பாராட்டுதலாக எடுத்துக்க முடியும்?
@ரெவெரி
நான் மதிக்கும் நால்வர் எனக்கு விருது தந்தார்கள்...மரியாதை நிமித்தமாய்...நட்பு நிமித்தமாய் நன்றியோடு சிறிது தர்மசங்கடத்தோடு பெற்றுக்கொண்டேன்...
அவை என்றும் என் வலைப்பூவில் இருக்கும்...
அதே நேரம் ஏறக்குறைய எல்லாரும் விருது பெறும் நேரத்தில் அதை மற்ற படைப்பாளிகளுக்கு கொடுக்க நினைக்கையில் ஏதொ ஒரு அசௌகர்யமான உணர்வு...
I know it is rude...but I will live with it...
Cheers...//
அண்ணே, விருது என்றால் என்ன? அதற்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும். எல்லா படைப்பாளிக்கும் உடனுக்குடன் விருது கொடுக்கும் பண்பாட்டினை நாம் பதிவுலகில் நிலை நிறுத்தினால், இந்த சகதிக்குள் அமிழ்ந்து பல நல்ல படைப்பாளிகள் காணாமற் போய்விடுவார்கள். அல்லது தவற விடப்படுவார்கள். ஆகவே ஆஸ்கார் என்றால் என்ன அர்த்தம்?
Film Fare என்றால் என்ன அர்த்தம்? அதன் அடிப்படையில் தனித்துவமான படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுவதனை வரவேற்கிறேன். ஆனால் கும்பலில் கோவிந்தாவாக, விருது கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை.
@angelin
ATHIRA SAID //ஆமா ஆமினா அக்கா(ச்ச்சும்மா சொல்லிப் பார்த்தேன், //
இந்த ஒரு மேட்டரை பார்த்து அடி கொடுக்கற வரைக்குமாவது ஆமீனா வீட்டில் கரண்ட் கட் ஆகக்கூடாது
//
என்ன ஒரு சப்போர்ட்...
ஒன்னா சேர்ந்து நிரூபனுக்கு அடிக்கிறதென்றால், எல்லோருக்கும் ஹேப்பியோ?
நான் சும்மா.....காமெடிக்கு சொன்னேன்.
@angelin
காட்டான் said...
//என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன்.////
//விடுங்க என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. யாரும் தடுத்திடாதீங்க:)))//
I'M HAPPY TODAY ,I'M HAPPY TODAY
அண்ணா ப்ளீஸ் சீக்கிரமே அந்த ஐந்து பேருக்கும் அவார்ட் தாங்களேன் ..
அந்த காட்சியை நாங்க லைவா பாக்கணும்
//
அண்ணர், ஒவ்வோர் படைப்பாளிக்கும், ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்துக்கள் உயர்ந்தவையாக மனதில் இடம் பிடித்திருக்கும். அது தனி மனித உரிமை. ஆனால் நட்பிற்காக விருது கொடுப்பதாக கூறி, சிலர் எழுத்திற்கு அங்கீகாரம் எனச் சொல்லி சைட் கேப்பில் கிடா வெட்டுவதனைத் தான் ஏற்க முடியலை.
@angelin
//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//
அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன்
சீக்கிரம் வாங்க .//
இதோ...வந்துட்டேனுங்க.
@athira
angelin said...
காட்டான் said...
//என்னிடம் யாராவது ஐந்து பேருக்கு மட்டும் விருது கொடு என்றால் மாப்பிள மகேந்திரனுக்கும் துஷி ,கந்து ,மணி, ஆமினா, போன்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டு விருது கொடுப்பேன்.////
//விடுங்க என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்.. யாரும் தடுத்திடாதீங்க:)))//
I'M HAPPY TODAY ,I'M HAPPY TODAY
அண்ணா ப்ளீஸ் சீக்கிரமே அந்த ஐந்து பேருக்கும் அவார்ட் தாங்களேன் ..
அந்த காட்சியை நாங்க லைவா பாக்கணும்///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உலகத்தில நல்லவங்க(என்னைச் சொன்னேன்:)) வாழவே முடியாது போல:)) பொறுக்காதே.. பொயிங்கி எழும்பீனம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
//
காட்டான் அண்ணர், லிஸ்ட்டில் அதிரா அக்காவை தவற விட்டமைக்கு வன்மையான கண்டனங்கள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
/ angelin said...
//அதே..அதேதான்... ஆராவது நிருபனைப் புடிச்சு வாங்கோ:)))//
அதுதானே .நானே அப்படி இப்படி அசையாம கணினி முன் இருக்கேன்
சீக்கிரம் வாங்க .///
மீயும்...மீயும்... எவ்ளோ நேரம்தான் காத்திருக்கிறதாம்:)).. நோ அஞ்சு நிரூபன் இண்டைக்கு வெளில வருவார் என்றா நினைக்கிறீங்க? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))... நாமெல்லாம் ஆரு?:)).. விட்டிடுவமா?.. எங்கிட்டயேவா?:)).. இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், வறுத்த கச்சான் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுச் சாப்பிட்டு இருப்பம்:))./
இதோ வந்திட்டேனில்லே.
வெளியே வராம நான் எங்கே போக போறேனுங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தாங்க அஞ்சு.. ச்ச்ச்சும்மா இருக்காமல், வறுத்த கச்சான் கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுச் சாப்பிட்டு இருப்பம்:)).//
கச்சான் சாப்பிடுறது ஓக்கே. ஆனால் கச்சான் கோதை பொது இடத்தில போட்டால் தண்டப் பணம் அறவிட்ப்படும். அதால மறுவாதையா பின் கொண்டு வந்து குப்பைகளை கிளீன் பண்ணிட்டு போங்க.
இது கவுன்சில் ஓடர்;-)))
@angelin
நான் இப்ப வரிசையா பல பின்னூட்டங்களோடு காத்திருக்கிறேன் .
உடனே வாங்க நிரூபன் WE NEED YOUR OPINION.
//
இதோ வந்திட்டேனுங்க அக்கா.
@angelin
we should express our appreciation five times more than our criticism.
எங்கேயோ எப்பவோ படிச்சது ஆனா இன்னும் நினைவில் இருக்கு .
ஒரு அவார்டை பத்து பதிவு எழுதிய ஒருத்தருக்கு கொடுத்தால் அது அவர் இன்னும் பல நூறு பதிவு எழுத OR அவரை வெளிச்சத்தில் காட்ட அது உதவுமென்றால் அதில் தவறேதும் கிடையாது என்ற ஆணித்தரமான கருத்துடன் எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்
//
அக்கா. பலருக்கும் விருது கொடுப்பது தப்பில்லை. ஆனால் தமிழ்ப் பதிவுலகில் என்ன நோக்கத்தில விருது கொடுக்கிறாங்க என்பதனை பாருங்க.
சஞ்சிகைகள், பத்திரிகைகள் தினந் தோறும் வெளியாகும் செய்திகளை காப்பி பேஸ்ட் செய்து பிரசுரிப்பவருக்கும் விருது கொடுக்கிறாங்களே. அதுவும் ஆரோக்கியமான் விடயமா? அவரை மேலும் நல் வழியில் எழுத தூண்டுமா? இல்லே காப்பி பேஸ்ட் செய்ய தூண்டுமா?
@athira
//எனது வாதத்தை முடித்துகொள்கிறேன்//
மீயும்...மீயும்.... என் வாதட்தை முடித்துக் கொள்கிறேன்..... உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா.. என்னை இப்பூடித் தனிய விட்டிட்டு அஞ்சு ஓடிட்டா.... மீயும் எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))
//
எதுக்குங்க எஸ்கேப் ஆகிறீங்க. நான் தான் மீண்டும் வந்திட்டேனே..
@PREM.S
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அன்பரே
//
நண்பரே, அப்படீன்னா....
இந்த மாதிரி நபர்களையும் நீங்கள் ஏற்று கொள்ளுறீங்களா?
//
ல பதிவருங்க என்னா பண்ணுவாங்க என்றால், பல நாளா தமக்கு யாராச்சும் விருது கொடுக்க மாட்டாங்களா என்று காத்திட்டிருப்பாங்க. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போன பின்னாடி, தாமாக ஓர் வலைப் பதிவினை, புதிய பெயரில் உருவாக்கி, அந்த ப்ளாக்கின் ஊடாக தன்னுடைய ப்ளாக்கிற்கு விருது கொடுத்து மகிழுவாங்க. //
இது தொடர்பிலும் உங்களுக்கு உடன்பாடில்லையா நண்பரெ?
@குணசேகரன்...
ஏங்க...இப்படிச் சொல்லீட்டீங்களே
//
நண்பா, ஏதோ எனக்கு தெரிந்த விடயத்தினை பகிர்ந்திருக்கேன்.
தீர்மானிக்க வேண்டியது நீங்க தான்.
@கோகுல்
வணக்கம் பாஸ் நலமா?
தனக்குத்தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களைப்பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
நமது எழுத்தை படித்து சரியாயிருந்தா நல்லா எழுதற,இல்லையா நீ எழுதறது சரியில்லை அப்படின்னு சொல்லும் நண்பர்கள் கொடுக்கும் விருதினை ஏற்பதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
//
வணக்கம் பாஸ்,
நான் நலம்,
நீங்கள் நலமா? நண்பர்கள் கொடுக்கும் விருதுகளை ஏற்பது தவறில்லை தான். ஆனால் சிலர் முகஸ்துதிக்காக விருது கொடுக்கிறாங்களே. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
@கோகுல்
வணக்கம் பாஸ் நலமா?
தனக்குத்தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களைப்பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
நமது எழுத்தை படித்து சரியாயிருந்தா நல்லா எழுதற,இல்லையா நீ எழுதறது சரியில்லை அப்படின்னு சொல்லும் நண்பர்கள் கொடுக்கும் விருதினை ஏற்பதில் பிழை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
//
வணக்கம் பாஸ்,
நான் நலம்,
நீங்கள் நலமா? நண்பர்கள் கொடுக்கும் விருதுகளை ஏற்பது தவறில்லை தான். ஆனால் சிலர் முகஸ்துதிக்காக விருது கொடுக்கிறாங்களே. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
@கோகுல்
//எதையும் எதிர் பார்த்தோ,பாராட்டு கிடைக்குமேன்றோ பதிவெழுதுவதில்லை யாரும்.ஆனால் இது போன்ற தட்டிகொடுக்கும் நிகழ்வுகள்,நண்பர்கள் தரும் இது போன்ற அங்கீகாரம் சில சமயம் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றும் போதே துடைத்து புத்துணர்வுடன் எழுத வைக்கிறது.//
இது நண்பர்கள் ராஜ் எனக்கு விருது வழங்கிய பதிவில் எனது கமெண்ட்.எனது நிலைப்பாடும் இதுதான்.
//
நண்பா, விருதுகள் ஊக்கிகளாக அமையும் என்பதில் ஐயமில்லை. தனித்துவமாக திறமையானவர்களை அடையாளங் கண்டு வழங்கினால் அவ் விருதுகள் நிச்சயமாக நல்ல பலனை கொடுக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரே ப்ளோவில் ஒரே மாதிரியான விருதுகளை கண்டிசன் போட்டு வழங்குவது எப்படி நண்பா, எழுத்தாற்றலை பெருக்க உதவும்? உற்சாகத்தை கொடுக்கும்?
சகோதரர் நிரூபன், எனக்குத் தலை சுத்துது உங்கள் இடுகையும், கருத்துகளும். தனக்குத் தானே விருது என்ன கொடுப்பவர் - எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.......பதிவுலகம் பற்றி அறியப்படுகிறேன். நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
பதிவுலகில் இதெல்லாம் சாதாரணமப்பா! கண்டுக்கப்படாது!
அது விருது என்பதால்...அதுவும் ஏறக்குறைய அத்தனை பேரும் பெற்றதால் தான் இத்தனை ஆதங்கம் என்பது என் எண்ணம்...
லூஸ்ல விடுங்க....
நாற்று சார்பில் ஆண்டின் தலை சிறந்த பதிவாளர்கள் மூவரை தேர்ந்தெடுத்து (Actually only two...You already have me as No.1...You better be -:) விருது அளியுங்கள்...எல்லாம் சரியாகிவிடும்...
இதையெல்லாம் வெறும் கவண ஈர்ப்பு என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
//எதுக்குங்க எஸ்கேப் ஆகிறீங்க. நான் தான் மீண்டும் வந்திட்டேனே..//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நாங்க வரவில்லையெனில், அது அனைத்தையும் அக்ஷெப்ட் பண்ணிட்டம் என அர்த்தமிலை:)) எங்களுக்கு நேரமில்லை என்றுதான் அர்த்தமாக்கும்..க்கும்..க்கும்.....:))))..
ஆ.... காப்பாத்துங்கோ... காப்பாத்துங்கோ... நிரூபன் கலைக்கிறார் காப்பாத்துங்கோ.. காப்பாத்துங்கோ:))...... ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ அட சே..சே... இது கனவா:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) உண்மையிலயே துரத்துறார் என நினைச்சிட்டேன்:))..
நாங்க ரெளத்திரமு......ம்ம்ம்ம்ம்ம் பேசுவோம்:)))... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
இதெல்லாம் விடுங்கண்ணே, எங்களுக்கு எப்போ நீங்க விருது குடுக்கப்போறீங்க?
நண்பா! உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன் இதுக்கு கோவிச்சுக்குவீங்களோ?
பல்சுவை பதிவர்கள்
93 comments!!!
படித்து முடித்ததும் மனதுக்குள் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது!!!
நன்றி நண்பர்களே.
Great well done
Post a Comment