ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருக்கும் இந்திய அணி Vodafone நிறுவனத்தின் அணுசரணையில் இடம் பெறும் நான்கு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கை, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பங்கு பற்றும் முக்கோண ஒரு நாள் தொடரிலும், ஆஸ்திரேலியா அணியுடன் Twenty Twenty ஆட்டத்திலும் பங்கெடுக்கவுள்ளது. இதன் டெஸ்ட் கிரிக்கட் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 26.12.2011 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியினர் 122 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தார்கள்.
தற்போது இத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் சிட்னி கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியினரின் துடுபபாட்டப் பலம் மேலோங்கியுள்ளது எனலாம். நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய தோனி தலமையிலான இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது. இதன் பிரகாரம் 191 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்து சுருண்டு விட; ஆஸ்திரேலிய அணியினர் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தார்கள். நல்லதோர் அடித்தளமாக மூன்று இலக்குகளை இழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியினரின் மூத்த வீரர் ரிக்கி பொன்ரிங் அவர்களும், மைக்கல் கிளார்க் அவர்களும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியினரின் ஓட்ட எண்ணிக்கையினை வலுவடையச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இருவருமே சதங்களைப் பெற்றிருப்பது ஆஸ்திரேலிய அணியினரின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்துவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியினர் பக்கம் தான் இந்த டெஸ்ட் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்புக்கள் திரும்பியுள்ளது. ஒவ்வோர் அணியினருக்கும் அவர்களின் தாயக மண்ணின் மைதானங்கள் எப்போதுமே சாதகமாக அமைந்து கொள்ளும் என்பது கிரிக்கd ஆய்வாளர்களின் கூற்று. இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக நாம் அண்மையில் காணக் கூடியவை இந்திய ஆஸ்திரேலிய ஆட்டம், மற்றும் இலங்கை தென்னாபிரிக்க போட்டிகளாகும்.
ஆஸ்திரேலிய அணியினர் ஏற்கனவே ஓர் போட்டியினை வென்றிருக்கும் நிலையில் தற்போதைய இரண்டாவது போட்டியினையும் வெற்றியீட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கே உண்டு. இந்திய அணியினரைப் பொறுத்தளவில் துடுப்பாட்டம் என்பது சச்சின் ரெண்டுல்கர், கௌதம் கம்பீர், (Gautam Gambhir) ராகுல் ட்ராவிட், VVS லக்ஸ்மன், விராட் கோலி (Virat kohli) ஆகியோரின் பங்களிப்பில் தான் தங்கியுள்ளது. இன்றைய சூழலில் இந்திய அணி வீரர்களின் முதல் நிலை மற்றும் மூத்த ஆட்டக்காரர்களாக உள்ள சச்சின், ட்ராவிட் போன்றோரின் பங்களிப்பு என்பது நம்பிக்கையீனத்தினை தான் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனை விட அனுபவம் மிக்கவரான யுவராஜ் இப் போட்டியில் கலந்து கொள்ளாமையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினையே கொடுத்திருக்கிறது.
இந்திய அணியினரின் துடுப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் இள ரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவையினை இந்திய அணியினர் இந்தப் போட்டியின் ஊடாக என்றாலும் உணர்ந்து கொண்டால் அடுத்தடுத்த ஆட்டங்களின் இந்திய அணியினரின் வெற்றி வாய்ப்பினை உறுதிப்படுத்துவற்கான சந்தர்ப்பங்கள் அமையும் என்பதில் ஐயமில்லை. ஆஸ்திரேலிய அணியினரின் துடுப்பாட்டத் திறன் என்பது முதன் நிலை வீரர்கள் தொடக்கம், இறுதி ஆட்டக்காரர்கள் வரை தக்க சமயத்தில் வெளிப்படுத்தப்படும் என்பது கடந்த காலப் போட்டிகளின் ஊடாக நாம் கண்டிருப்போம் அல்லவா? பந்து வீச்சைப் பொறுத்த வரை ஆஸ்திரேலிய அணியினர் பக்கம் அவர்களிற்குச் சாதகமான தாய் மண் ஆடுகளத்திற்கு ஏற்றாற் போல மிகவும் திறமையாகப் பந்து வீசக் கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். இப்போதைய நிலவரம் வரை, ஆஸ்திரேலிய அணியினரின் வெற்றி வாய்ப்பிற்கு மிகவும் உறு துணையாக இருப்பதில் பந்து வீச்சாளர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது.
இந்திய அணியினரின் பந்து வீச்சாளர்களின் நிலை என்பது இன்றளவில் கொஞ்சம் கேள்விக் குறியாகவே உள்ளது. பந்து வீச்சைப் பொறுத்த வரை ஷகீர் கான் எனும் முதல் நிலைப் பந்து வீச்சாளரையும், ஏனைய வீரர்களான உமேஸ் யாதவ், இஷாந் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் பங்களிப்பினை நம்பித் தான் இந்திய அணி இருக்கின்றது. ஷகீர் கான் மீதான நம்பிக்கை இன்றளவில் இந்திய அணி வீரர்களுக்குச் சாதமற்ற ஆஸ்திரேலிய மைதனாங்களின் அடிப்படையில் ஐயத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப் படி சிட்னியில் இடம் பெறும் இரண்டாவது கிரிக்கட் போட்டியினையும் வெற்றியீட்டுவதற்கான அதிகளவான சந்தர்ப்பங்கள் ஆஸ்திரேலிய அணியினருக்கே உண்டு. இப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியிட்டீனால் தொடர் 2-0 எனும் நிலைப்பாட்டினை இந்திய அணியினருக்கு கொடுக்கும்.
இந்திய அணியினருக்கு ஏனைய இரண்டு போட்டிகளையும் வெற்றியீட்டிய வேண்டிய மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. இவ் இரண்டு போட்டிகளையும் வெற்றியீட்டினால் தான் தொடரைச் சம நிலையில் முடிக்கலாம். இல்லையேல் ஆஸ்திரேலிய அணியினர் வசம் தொடரைப் பரிசளிக்க வேண்டிய நிலையே இந்திய அணியினருக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆஸி வீரர்களுக்கே Vodafone தொடரைக் கைப்பற்றுவதற்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன. தை மாதம் 28ம் திகதி மாலை இந்த ஐயங்களுக்கான முடிவு கிடைக்கும். அதுவரை பொறுத்திருப்போம்!
பிற்சேர்க்கை: அன்பிற்கினிய நண்பர்களே; இந்தப் பதிவு என்னுடைய இரண்டாவது கிரிக்கட் பதிவு. இப் பதிவு தொடர்பான பாராட்டுக்களை விட, விமர்சனங்களைத் தான் அதிகளவில் வரவேற்கிறேன். ஆகவே இப் பதிவில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டினால் கிரிக்கட் மற்றும் விளையாட்டுப் பதிவுகளை வருங் காலத்தில் எழுதும் போது செம்மைப்படுத்திட உங்கள் கருத்துக்கள் உதவும்.
*இப் பதிவில் உள்ள சில தவறுகளையும், கிரிக்கட் வீரர்களின் பெயர்கள் தொடர்பான சரியான தமிழ் வடிவங்களையும் நண்பர்கள் KSS.ராஜ் மற்றும் சண்முகன் ஆகியோர் சுட்டிக் காட்டித் திருத்துவதற்கு உதவி செய்தார்கள். இவர்கள் இருவருக்கும், கோகுலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளை உங்கள் அனைவர் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
***********************************************************************************************************
உலக சினிமா விமர்சனங்களை அறிய வேண்டுமா? ஆங்கிலத் திரைப் பட விமர்சனங்களைப் படித்து, நல்ல சினிமாப் படம் எது என நீங்கள் அறிய வேண்டுமா? உங்களுக்காக காத்திருக்கிறது "குமரனின் எண்ணங்களும் திரை வண்ணங்களும் வலைப்பூ". உலக சினிமாப் பட விமர்சனங்களுக்கு என்று தனியான ஓர் வலைப் பூவினை எழுதி வருகின்றார் குமரன் அவர்கள். குமரனின் உலக சினிமா விமர்சனங்களை நீங்களும் படித்துப் பார்க்க:
***********************************************************************************************************
|
16 Comments:
அட கிரிக்கெட் பதிவு!
// பந்து வீச்சில் இந்திய அணி வீரர்களில் அதிகளவு எதிர்பார்ப்புக்களைப் பெற்றிருந்த ஷகீர் கான் அவர்கள் இந்த ஆட்டத்தில் பிரகாசிக்கத் தவறி விட்டார். விரற் கோகில் (Virat Kohil) மாத்திரம் இந்திய அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிக் கொண்டிருக்கின்றார்.அதிகளவு ஓட்டங்கள் எதனையும் கொடுக்காது இலாவகமாகப் பந்து வீச்சினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றே கூற வேண்டும்.//
ஹா ஹா செம காமெடி பாஸ்.
அந்நிய மண்ணில் இந்தியஅணியின் திறமை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.
ஷகீர் கான் மீதான நம்பிக்கை இன்றளவில் இந்திய அணி வீரர்களுக்குச் சாதமற்ற ஆஸ்திரேலிய மைதனாங்களின் அடிப்படையில் ஐயத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.//
ஜாகீர்கான் மட்டுமே இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசுவதாக தோன்றுகிறது.
@Shanmugan Murugavel
// பந்து வீச்சில் இந்திய அணி வீரர்களில் அதிகளவு எதிர்பார்ப்புக்களைப் பெற்றிருந்த ஷகீர் கான் அவர்கள் இந்த ஆட்டத்தில் பிரகாசிக்கத் தவறி விட்டார். விரற் கோகில் (Virat Kohil) மாத்திரம் இந்திய அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிக் கொண்டிருக்கின்றார்.அதிகளவு ஓட்டங்கள் எதனையும் கொடுக்காது இலாவகமாகப் பந்து வீச்சினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றே கூற வேண்டும்.//
ஹா ஹா செம காமெடி பாஸ்.
//
பாஸ்..நேற்றைய ஆட்டத் தொடங்கத்தில் ஷகீர் கான் அவ்வளவாக சோபிக்கவில்லை. அதனை வைத்து தான் இப்படி எழுதினேன். இதில் காமெடி பண்ணிச் சிரிப்பதை விடுத்து தவறினைச் சுட்டி விளக்கம் கூறினால் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் அல்லவா?
பதிவில் கூட சிகப்பு மையினால் குறிப்பிட்டிருக்கிறேனேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுமாறு.
@கோகுல்
ஷகீர் கான் மீதான நம்பிக்கை இன்றளவில் இந்திய அணி வீரர்களுக்குச் சாதமற்ற ஆஸ்திரேலிய மைதனாங்களின் அடிப்படையில் ஐயத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.//
ஜாகீர்கான் மட்டுமே இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசுவதாக தோன்றுகிறது.
//
கோகுல் நான் சொல்வது நேற்றைய ஆட்ட நிலவரங்களை அடிப்ப்டையாக வைத்து.
உண்மை எதுவாக இருந்தாலும் இந்திய வெற்றிபெற்றுவிடும் என்று நம்பி நம்பி ஏமாறும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்
கிரிக்கெட் பதிவு அருமை சகோ
அட இன்னைக்கு கிரிக்கெட் பதிவா... நமக்கு அதிகமா நாட்டம் கிடையாது....
இப் பதிவில் உள்ள சில தவறுகளையும், கிரிக்கட் வீரர்களின் பெயர்கள் தொடர்பான சரியான தமிழ் வடிவங்களையும் நண்பர்கள் KSS.ராஜ் மற்றும் சண்முகன் ஆகியோர் சுட்டிக் காட்டித் திருத்துவதற்கு உதவி செய்தார்கள். இவர்கள் இருவருக்கும், கோகுலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளை உங்கள் அனைவர் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வெளி நாட்டு மைதானங்களில் இது நடக்க கூடியதே...அவர்கள் இந்தியா வரும் போது சுழ்லுக்கு ஏற்றாற்போல அமைக்கிறார்கள் ஹிஹி...என்னத்த சொல்ல!
\\இன்றைய சூழலில் இந்திய அணி வீரர்களின் முதல் நிலை மற்றும் மூத்த ஆட்டக்காரர்களாக உள்ள சச்சின், ட்ராவிட் போன்றோரின் பங்களிப்பு என்பது நம்பிக்கையீனத்தினை தான் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.//
இவர்கள் இருவரையும் விமர்சிப்பது அழகல்ல..முதல் போட்டியில் சச்சினின் பங்களிப்பு இல்லையென்றால் இந்தியா இன்னிங்க்ஸ் தோல்வியை தழுவி மண்ணை கவ்வியிருந்தாலும் ஆச்சர்யமில்லை..அதோடு நீங்கள் சொல்லியிருக்கும் அந்த அனுபவக்காரர் யுவராஜிற்கு டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க முடியவில்லை..பல வாய்புகள் இதுவரை கொடுத்தாகிவிட்டது...இருக்கும் அணியில் எந்த குறையும் இல்லை...ஏதோ ஒரு உந்தல் மட்டுமே குறைகிறது..இந்த போட்டியை இந்தியா டிரா செய்தால் நான் நிச்சயம் ஆச்சரியப்படமாட்டேன்..
இந்த போட்டியுலும் முதல் இன்னிங்க்சில் சச்சினின் ஆட்டத்தில் (41)இருந்த ஒரு நேர்த்தியை தாங்கள் கவனிக்கவில்லை என்று அஞ்சுகிறேன்..ஆட்டம் நடக்கும் மைதானம் இந்தியா அணியின் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் மாற்றுகருத்து ஏதுமில்லை..ஆனால் களம் எதுவாகினும் அதெற்கெல்லாம் அப்பார்ப்பட்டவர்கள் சச்சினும் திராவிடும்..
நடப்பதை பார்த்தால் ஆஸியை வீழ்த்துதல் சிரமம் என்றே தெரிகிறது. சச்சினின் 100 ஆவது நூறையே மையப்படுத்தினால் இந்தியா வெல்வது சிரமமே! பாண்டிங் வேறு பார்மில் வந்து விட்டார்.
i have no cricket knowledge hi hi
bit i like the intro of kumaran blog
ம்ம்.. இந்த போட்டியிலும் இந்தியா மண் கவ்வப்போகிறது. இன்னும் மூன்று நாட்கள் களத்தில் நின்று துடுப்பெடுத்தாடும் பக்குவம் .. அதுவும் அவுஸ்ரேலிய வேகங்களை சமாளிக்கும் திறமை இருப்பதாக தெரியவில்லை..அனேகமாக இனிங்க்ஸ் தோல்வி தான்...
துடுப்பாட்டத்துக்கு கைகொடுக்க கூடிய மைதானத்தில் இந்தியாவின் மிக மட்டமான துடுப்பாட்டத்தை பார்க்க கடுப்பாக தான் இருந்தது..
2 வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்விதான்!
Post a Comment