ஹாலிவூட் சயன்டிபிக்கல் & திரிலர் & க்ரைம் பட விமர்சனம்:
நம்ம முன்னோர்கள் காலத்தில நெனைச்ச மாத்திரத்தில பறக்கிற விமானங்களும், விரும்பின நேரத்தில கூடு விட்டு கூடு பாயுற மந்திரங்களும் இருந்ததாக புராணக் கதைகளையும், உப கதைகளையும் அடிப்படையாக வைச்சு இன்னைக்கும் பேசிக்கிட்டிருக்காங்க. இவை எல்லாவற்றையும் விட, டைம் மெசின் என்கின்ற ஒன்று கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து காமிக்ஸ் கதைகளையும், பிக்ஸன் கதைகளையும் எழுத ஆரம்பிச்சாங்க. இவ் வழியில் காலச் சக்கரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு சயன்டிபிக்கல், ஆக்சன், த்ரிலர், படம் தான் Ticking Clock. எல்லோரும் ஸ்னாக்ஸ், சிப்ஸ் என்று உங்க கூடவே நொறுக்குத் தீனிகளை எடுத்திட்டு வந்திருப்பீங்க என்பதால டைரக்டா விமர்சனத்திற்குள் நுழைவோமா?
Ticking Clock: படத்தோட மையக் கதை என்னவென்று பார்ப்போமா? ஜேம்ஸ் எனும் பெயர் கொண்ட இளைஞன் தன்னோட டைரியில பல பெண்களைக் கொல்ல ப்ளான் பண்ணி, அவங்களைப் பத்தின விபரங்களை நோட் பண்ணி, படம் வரைஞ்சு வைச்சுக்கிறான். டைரியில உள்ள லிஸ்ட்டிற்கு அமைவாக யார் யாரை கொடூரமாக வெட்டி, கீறி, கொலை செய்யனுமோ?அவங்க அனைவரையும் கொலை செய்து கொண்டிருக்கிறான். இந் நிலையில் பிரபல க்ரைம் ஸ்டோரி எழுத்தாளர் Lewis Hicks அவர்கள் மாலையில் தன்னோடு பேசிய நண்பியின் வீட்டிற்கு இரவில் செல்லுகையில் அங்கே அந்த கொலையாளி தன் நண்பியைக் குரூரமாக கொன்று விட்டு எஸ்கேப் ஆகுவதனை கண்டு பின் தொடருகிறார்.ஆனால் கொலையாளியோ தன்னைப் பின் தொடரும் நாயகன் லூயிஸ் அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு எஸ் ஆகின்றான்.
சில நாட்களின் பின்னர், க்ரைம் எழுத்தாளர் தான் பின் தொடர்ந்து போயி கொலையாளியின் கையால் பலமாக அடி வாங்கிய இடத்திற்குச் செல்கின்றார். அங்கிருந்து ஓர் டைரியைக் கைப்பற்றுகின்றார். அந்த டயரியின் உதவியுடன் யார் யாரை ஜேம்ஸ் கொலை செய்யப் போகின்றார் என்பதனை அறிந்து ஒவ்வோர் தடவையும் கொலையாளியிடமிருந்து அப்பாவிகளைப் பாதுகாக்கப் போயி கொலைக் குற்றத்தில் இவர் மாட்டிக் கொள்கின்றார். ஒரு நாள் லூயிஸின் வீட்டிற்கு டயரியினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வில்லன் ஜேம்ஸ் வருகின்ற போது, இடம் பெற்ற மோதலில் கத்திக் குத்திற்கு இலக்காகின்றான்.தன்னுடைய தலை முடியினையும், தான் அணிந்திருந்த உடையின் சிறு துண்டினையும், தடயமாக கத்திக் குத்து இடம் பெற்ற பின்னர் தவற விட்டுச் செல்கின்றான்.
லூயிஸின் நடமாட்டம், சீரியல் கில்லர் பாணியில் கொலைகள் இடம் பெறும் ஒவ்வோர் இடங்களிலும் காணப்படுவதால், போலீஸாரின் சந்தேகம் லூயிஸ் மீது திரும்பி விட, குற்றவாளி போலீஸின் வலையில் அகப்படாமல் தப்பிக்கின்றான். இந் நிலையில் தன் அன்பான மனைவியிடமிருந்தும் தான் ஓர் கொலையாளி என்று செய்யாத குற்றத்திற்காக திட்டு வாங்கி, பிரிந்திருக்கின்றான் ஹீரோ லூயிஸ். போலீஸின் வலையிலிருந்து தான் தப்பிக்க வேண்டும் எனும் நிலையில் லூயிஸின் வீட்டில் சீரியல் கில்லர் விட்டுச் சென்ற தடயங்களை எடுத்து மரபணுப் பரிசோதனை செய்யத் தொடங்குகின்றார் லூயிஸும், அவரது பத்திரிகை நண்பர்களும். அப்போது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.
படத்தின் அரை வாசிப் பகுதி வரை இவ்வாறான ஓர் சம்பவம் தான் கொலைக்கான காரணம் என யாரும் ஊகிக்கா வண்ணம் கிரைம் ஸ்டோரியினைத் திரிலிங் மை பூசி நகர்த்தியிருக்கிறார்கள். 2011ம் ஆண்டில் வாழ்வோர் 2032ம் ஆண்டில் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை தன் கைவசம் உள்ள டைம் மெசின் மூலம் ஊகித்து ஒருவர் கொலையினைச் செய்வதோடு, பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும், குடூரமான கொலைகளையும் நிகழ்த்துகின்றார். ஸோ...ஜேம்ஸ் பிரதான கொலையாளி இல்லை எனும் ரீதியில் கதையின் ட்ராக் மாறுகின்றது. அப்போ யாருங்க கொலையாளி என்று தானே கேட்கிறீங்க. அதுக்குத் தான் நீங்க படத்தைப் பார்க்கனும். படத்தில் 2032ம் ஆண்டில் வாழும் மனிதர்களின் குணம் இப்படி இருக்கும் என்பதனை ஊகிக்கித்து அறிகிறாங்க என்பதனை விஞ்ஞான ரீதியாக அறிய ஆவலா? அதற்காகவும் நீங்க படத்தைப் பார்க்க ட்ரை பண்ணலாமில்லேங்க.
இனி படம் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் விடயங்கள்:
*கைக் குழந்தையினையும், தாயையும் கடத்தி வந்து குழந்தை அழுதபடி பார்த்திருக்க தாயை குரூரமாக கொலை செய்திட்டு, தாயின் ரத்தத்தால் குழந்தையின் தலை கோதுதல்.
*அணு அணுவாக பெண்கள் வலியை உணரும் வண்ணம், துடிக்கத் துடிக்கப் பெண்களின் உறுப்புக்களை கண்ட துண்டமாக வெட்டுதல்.
*குறடு, மற்றும் கூரிய ஆயுதங்கள், எரிவாயு ஆகியவற்றின் உதவியோடு கொடூரமாக துன்புறுத்துதல்.
*கொலை செய்யும் ஒவ்வோர் பெண்களையும் ஒவ்வொரு பறவையின் உருவ அமைப்பில் வெட்டிக் கொல்லுதல்.
அடுத்து இப் படம் பற்றி கொஞ்சம் பார்ப்போமா? 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வந்திருக்கும் இந்தப் படத்தினை Ernie Barbarsh அவர்கள் இயக்கியிருக்கிறார். இப் படத்திற்கான க்ரைம் ஸ்டோரியினை John Turman அவர்கள் எழுதியிருக்கிறார். விறு விறுப்பிற்குப் பஞ்சமின்றி அடுத்தது என்னவென்று நீங்கள் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் இப் படத்திற்கான இசையினை Richard Freedman அவர்கள் வழங்கியிருக்கிறார். Sony Pictures நிறுவனத்தினர் இப் படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள். இப் படத்தில் Cuba Gooding, Neal Mcdnough ஆகியோருடன், மற்றும் பல ஹாலிவூட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பொழுது போக்கு நோக்கில் நீங்கள் இப் படத்தினைப் பார்க்கலாம். டைம் மெஷின் கதைகளில் ஆர்வமுள்ளோர், ஆக்சன், கிரைம், த்ரிலிங் விரும்பிகள் ஆகியோருக்கு ஏற்ற படம் இது.
இணையத் தளத்தில் தேடுவதன் மூலம் இப் படத்தினை விரும்புவோர் ஆன்லைனில் பார்த்து மகிழ முடியும். புதிய படங்களின் லிங் கொடுத்தால் ப்ளாக்கிற்கு கூகிள்காரனுங்க சூனிய வைச்சிடுவாங்களாம். அதால கொடுக்க முடியலைங்க.
******************************************************************************************************************************
முற்று முழுதாகத் தொழில்நுட்பப் பதிவுகளுக்கும்,தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கும் என்று பதிவர் மதுரன் அவர்கள் "Tamilsoft" எனும் இணையத் தளத்தினை உருவாக்கியிருக்கிறார். கவலைப் படாதீங்க. அங்கே ஓட்டுப் பட்டை எதுவுமே இருக்காதுங்க. ஸோ...உங்களுக்கு விரும்பிய தொழில்நுட்பத் தகவல்களைப் பெற விரும்பின் நீங்களும் Tamilsoft பக்கம் போய் வரலாம் அல்லவா?
*********************************************************************************************************************************
|
12 Comments:
இது கிரிஸ் பூதத்தோட கதை மாதிரியல்லா இருக்குது.அப்பப்பா பயங்கரமா இருக்குது.நான் பார்க்கலப்பா.
நிறைய படங்கள் பார்க்கவேண்டிய வரிசையில் நிற்கின்றன. இதையும் அடுக்கி வைக்கிறேன்.
விமர்சனத்திற்கு நன்றி.
நல்ல விமர்சனம்.நட்சத்திர வாழ்த்துக்கள்.
விமர்சனம் படிக்கும் போதே தெரிகிறது படம் ரத்த வகையை சார்ந்து இருக்குமென்று..ரொம்ப வன்முறைகள் கொண்ட படங்களை நான் பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்..தங்களது விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை எப்படியோ தருகிறது..நேரம் + வாய்ப்பு கிடைப்பின் பார்க்க முயற்சி செய்கிறேன்..நன்றி..
மாலை வணக்கம் நிரூபன்!விமர்சனம் அருமை.என்னவோ ஸ்டார்,ஸ்டார் என்று எல்லோரும் வாழ்த்துகிறார்களே?அது தான் காலையில்"அந்த"போட்டோவை பிரசுரித்தீர்களோ?இப்போ காணமே,எங்கே?ரசிகர்கள் கேட்கிறார்களே???என்னவோ,ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துக்கள்!
இப்படிப் படமெனில் அப்பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன்... படம் பார்க்கிறீங்களோ நிரூபன்?:)).
பார்த்த படம் தான்.விமர்சனம் கலக்கல் பாஸ்.'ஒவ்வொரு வாட்டியும் கொலையாளியை பிடிக்க போயி மாட்டிக்கிறது தான் ஸீன்!!
அப்புறம் தமிழ்மண நட்சத்திரமாகி இருக்கீங்க...வாழ்த்துக்கள் தல!!குறுகிய காலத்துக்குள் அடைந்த ஒருவர் நீங்களாய் தான் இருக்க முடியும்!
மச்சி கிரைம் பிரியர்களை மட்டுமல்லாது அறிவியல் பிரியர்களையும் திருப்திப்படுத்தும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறாய் அப்படித் தானே...
ஃஃஃஃஃபுதிய படங்களின் லிங் கொடுத்தால் ப்ளாக்கிற்கு கூகிள்காரனுங்க சூனிய வைச்சிடுவாங்களாம். அதால கொடுக்க முடியலைங்க.ஃஃஃஃ
அட இப்புடி ஒண்ணு கூட இருக்கா... பேசாமல் இன்னொர பளொக் திறந்து அதில லிங்கை கொடுத்திட்டு அங்க போறதுக்கான தொடுப்பை இங்கே கொடு..
@Yoga.S.FR
மாலை வணக்கம் நிரூபன்!விமர்சனம் அருமை.என்னவோ ஸ்டார்,ஸ்டார் என்று எல்லோரும் வாழ்த்துகிறார்களே?அது தான் காலையில்"அந்த"போட்டோவை பிரசுரித்தீர்களோ?இப்போ காணமே,எங்கே?ரசிகர்கள் கேட்கிறார்களே???என்னவோ,ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துக்கள்!
//
வணக்கம் ஐயா,
போட்டோ போடுமளவிற்கு நான் இன்னமும் பெரியாளாகலை.
ஆதலால் போட்டோவை எடுத்திட்டேன்/
நன்றி ஐயா.
நிரு.... முதலில் தமிழ் மணத்தில் நட்சத்திரம் ஆனதுக்கு என் வாழ்த்துக்கள்.
நிரு பாஸ் வலை மணத்தில் ஒவ்வொரு நாளும் நட்சத்திரம் தானே... :) :)
நிரு... விமர்சனம் சூப்பர் வ்வ்வ்வ்... எனக்கு திரில் படங்கள் ரெம்ப பிடிக்கும் அதுவும் இரவில் இப்படியான படங்கள் பார்ப்பதில் அவ்ளோ ஆர்வமா இருக்கும்... :) கடைசியாக அப்படி இரவில் ரசித்து பார்த்த திரில் தமிழ் படம் மாதவனுடையது.
எனக்கு பொதுவாகவே ஹாலிவுட் படங்கள் பிடிக்காது. ஆனால் உங்களின் இந்த விமர்சனம் பார்த்ததில் இருந்து படத்தை உடனேயே பார்க்கணும் போல இருக்கே... :)))))
லிங்க் தரவில்லையே... :((((
இதுக்கு சுதா அண்ணாவின் அட்வைஸ் சூப்பர்... :)))))) அப்படி செய்தால் என்ன ?? ஹா ஹா.
நிரு மை பேஸ்புக் க்கு அந்த பட லிங்க் அனுப்புங்களேன்... ப்ளீஸ் ப்ளீஸ்
தமிழ் மண நச்சத்திரத்துகு எனது வாழ்த்துக்கள்!!
Post a Comment