வணிக நோக்கில் தயாரிக்கப்படும் திரைப் படங்களில் ஆத்மார்த்த ரீதியில் ரசிகர்களைத் திருப்திப்படுத்த வல்ல நவரசச் சுவையினை நாம் எல்லாப் படங்களிலும் எதிர்பார்க்க முடியாது. எங்காவது ஓர் படம், வருஷத்தில் ஒரு தடவையாச்சும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களைப் போக்கும் வண்ணம் அனைத்து விதமான சுவைகளையும் உள்ளடக்கி அத்தி பூத்தாற் போல வந்து கொள்ளும்.ஹாலிவூட் திரைப் படங்களின் வித்தியாசமான எண்ணக் கருக்கள், வித்தியாசமான கோணத்திலான கதை நகர்வுகளின் மத்தியில் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிருக்கும் Red திரைப்படமும் தன்னளவில் அனைத்து விதமான ரசனைகளையும் உள்ளடக்கி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வண்ணம் திரைக்கு வந்திருக்கிறது.
படத்தின் மையக் கதை:
அமெரிக்க உளவுத் துறையின் (CIA) முன்னாள் ரகசிய உளவாளியும், திறமை மிக்க ஆப்பிசராகவும் இருந்தவர் தான் இந்த Red படத்தில் கதா நாயகன் பாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர் Bruce Wills அவர்கள். ஓய்வு பெற்ற பின்னர் தன் சேவைக் காலத்திற்கான கொடுப்பனவுகளை காசோலையாகப் பெற்றுக் கொண்டிருந்த ஆப்பீசர் Frank Moses அவர்களின் காசோலைக் கொடுப்பனவு தொடர்பில் சிக்கல்கள் ஏற்படவே திடீரென்று தனது ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கிக் கொண்டிருந்த கம்பனியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரியும் Sarah இனைத் தொடர்பு கொள்கின்றார். சாராவுடன் ரகசிய உரையாடல்களைத் தன்னுடைய காசோலைக் கொடுப்பனவு தொடர்பான விடயங்களைத் தவிர்த்து நட்புறவுடன் பேசத் தொடங்குகின்றார்.இந் நேரத்தில் படத்தின் நர்வு சூடு பிடிக்கத் தொடங்குகின்றது.
ஆம் சாராவுடன் பேசிக் கொண்டிருந்த ப்ராங் மோசஸின் வீட்டினைச் சுற்றி வளைத்து CIA உளவுப் பிரிவினர் தாக்குதல் நடாத்த தொடங்குகின்றார்கள். ஒரு முன்னாள் உளவு நிறுவனத்தில் பணி புரிந்தவர் என்ற ரீதியில் CIA இன் தாக்குதல்களை முறியடிக்கும் அதே வேளை தன்னுடன் உரையாடிய குற்றத்திற்காக CIA நிறுவனத்தினர் சாராவின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு அவள் மீதும் தாக்குதல் நடாத்துவார்கள் என்ற ஐயத்தில் சாரா வீட்டிற்குச் சென்று ரகசியமாக மறைந்திருந்து, அவளைக் கடத்தி தன் கஸ்ட்டடியில் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சி செய்கிறார் நாயகன் ப்ராங்க். ஆனால் ப்ராங்க் மறைந்திருப்பதனைக் சாரா கண்டவுடன், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ப்ராங்கிடமிருந்து எஸ்கேப் ஆக முயற்சிக்கையில் சாராவினைக் கைது செய்து வாயில் ப்ளாஸ்டிக் டேப் (Duckted Tape) ஒட்டி வாகனத்தில் ஏற்றி தன்னுடைய மற்றுமோர் நண்பரான Morgan Freeman வீட்டிற்கு கடத்திச் செல்கிறார்.
இந் நிலையில் தன் நண்பர் Morgan Freeman வீட்டில் சராவினைப் பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு; ப்ராங் வெளியே செல்லும் போது சிஐஏ நிறுவனத்தினர் மோப்பம் பிடித்து வந்து சேராவினைக் கடத்துகின்றனர். சேராவினை சிஐஏ இடமிருந்து மீட்டெடுத்த ப்ராங்கிற்கு தனது நண்பர் Morgan Freeman சுடப்பட்டிருக்கலாம் எனும் ஐயமும் எழுந்து கொள்கின்றது. இந் நேரத்தில் தன்னுடைய மற்றொரு நண்பரைத் தேடி சேராவையும் அழைத்துக் கொண்டு ப்ராங்க் அவர்கள் பயணிக்கிறார். சேரா, ப்ராங், மற்றும் அவரது நண்பனான John Malkovich ஆகியோர் இணைந்து சிஐஏ நிறுவனத்தின் கட்டமைப்பினைச் சிதைக்க முயற்சிகளை மேற் கொள்ளும் போது இறந்து விட்டதாக கருதப்படும் Morgan Freeman அவர்களும் சிஐஏ கண்ணில் படாது ஒளித்திருந்து விட்டு தக்க தருணத்தில் மூவருடனும் இணைந்து கொள்கின்றார்.
இப்போது ப்ராங், சாரா, Morgan Freeman, John Malkovich, ஆகியோருடன் இன்னும் சில நண்பர்களும் இணைந்து சிஐஏ நிறுவனத்தினரைப் பழிவாங்கி, அவர்கள் செய்த தவறுகளை அம்பலபடுத்தும் நோக்கில் புறப்படுகின்றார்கள். இந் நிலையில் CIA இன் தவறுகளை எதிர்த்து சிஐஏ நிறுவனத்தினரின் முகத்திரையினைக் கிழிக்கும் நோக்கில் முக்கியமான ஓர் பாயிண்டை நாயகன் ப்ராங் மோஸஸ் அவர்கள் கண்டு பிடிக்கிறார். அது என்ன? சிஐஏ நிறுவனம் மேற்படி நால்வரினதும் நடவடிக்கைகளுக்கு எப்படி முகங் கொடுக்கிறது? நால்வரும் இணைந்து சிஐஏ நிறுவனத்தினை எவ்வாறு பழிவாங்குகின்றார்கள் எனும் கேள்விகளுக்கான விடைகளைச் சுவாரஸ்யமாக காமெடி கலந்து, கொஞ்சம் ரொமான்டிக் சேர்த்து இப் படத்தினை எடுத்திருக்கிறார்கள்.
படம் பற்றிய சில சுவாரஸ்யங்கள்:
*வீட்டினுள் வரும் கொலையாளிகளைக் கொலை செய்து விட்டு, மேலும் எதிரிகள் தன்னைக் கொலை செய்ய காத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து நாயகன் ப்ராங்க் அவர்கள் துப்பாக்கித் தோட்டாக்களை நெருப்பில் பொரிக்க வைக்கையில்,பதுங்கியிருப்போர் யாவரும் வீட்டினுள் மோதல் இடம் பெறுகின்றது எனும் நினைப்பில் வீட்டினை முற்றுகையிட்டு வசமாக வந்து மாட்டிக் கொள்வது.
*இப் படத்தில் ஓய்வு பெற்ற வயோதிபராக வரும் Morgan Freeman அவர்கள் தன் வீட்டில் உள்ள டீவி சானல் தெளிவாக தெரியலையே எனும் நோக்கில், ஒரு பெண்ணை அழைத்து டீவி சானல் செட் பண்ணச் சொல்லி விட்டு அவளது பின் அழகைப் பார்த்து ரசிப்பதும், Nice View என்று சொல்லி கிண்டலடிப்பதும்.
*Old Man உன்னால் ஏதும் செய்ய இயலாது என வில்லன் கூட்டத்தினைச் சேர்ந்த பெண் சொல்லும் போது, John Malkovich அவர்கள் That's right old man என நகைச்சுவையாகச் சொல்லி துப்பாக்கியால் சுட்டிக் கொல்வதும் உங்களை ரசிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
இனி படம் பற்றிய சிறிய அறிமுகம்:
15ம் திகதி அக்டோபர் மாதம் திரைக்கு வந்திருக்கும் Red ஹாலிவூட் படத்தினை இதே பெயரில் உள்ள காமிக்ஸ் புத்தகத்தினை அடிப்படையாக வைத்து Robert Schwentke அவர்கள் இயக்கியிருக்கிறார். ஹாலிவூட் ஆக்சன் படங்களுக்குப் பெயர் பெற்ற Bruce Wills அவர்கள் கதாநாயகனாகவும், இவருடன் Mary Louis Parker அவர்கள் சாரா ஆகவும், Morgan Freeman, John Malkovich அவர்களும் மற்றும் பல ஹாலிவூட் நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள். Chrisophe Beck அவர்கள் தன்னுடைய இனிய இசையால் இப் படத்தின் விறு விறுப்பிற்கும், காமெடிக்கும் வலுச் சேர்த்திருக்கிறார். Summit Entertainment நிறுவனத்தினர் இப் படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள்.
13 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வண்ணம் 58 அமெரிக்க மில்லியன் ரூபா செலவில் இப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரு மணித்தியாலமும், 51 நிமிடங்களும் கொண்ட இப் படத்தினை ஓய்வு நேரம் கிடைக்கையில் நீங்களும் பார்த்து மகிழலாம் அல்லவா?
Red: விறு விறுப்பிற்கு பஞ்சமின்றி நகரும் ஆக்சன், காமெடி, ரொமான்டிக் கலந்த காவியம்.
நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், எம் புருவங்களை நிமிர்த்தி எம்மை நாமே கேள்வி கேட்கும் வண்ணம் தமிழகத்தில் 11 வயதினை உடைய ஓர் சிறுமி கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் உலகளவில் இதுவரை யாருமே செய்திருக்காத சாதனையினை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சிறுமியின் சாதனை பற்றியும், துடிப்பான இச் சுட்டிப் பெண்ணைப் பற்றியும் நீங்களும் அறிய வேண்டுமா?
|
19 Comments:
தங்கள் விமர்சனங்களின் பெரிய ரசிகன்..நிறைய நல்ல படங்களை அறிமுகம் செய்து வரும் தங்களது பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
இன்றும் ஒரு நல்ல படத்தோடு சிறப்பான விமர்சனமும் வழங்கியுள்ளீகள்..படத்தை பார்க்க தூண்டும் எழுத்துக்கள்.
நன்றிகள் பல.
விமர்சனம் அருமை
படம் ஏற்கனவே பார்த்துவிட்டேன்
உங்கள் விமர்சனம் சரியாய் பொருந்துகிறது நிரு
இன்னும் படம் பார்க்கவில்லை. ஆக்ஷன் படம் என்பதால் சீக்கிரமே பார்த்துவிடுவேன்.
அறிமுகத்திற்கு நன்றி.
பாஸ், உங்க ஹொலிவூட் பட விமர்சன ரசிகன் நான். இப்படியான விமர்சனங்கள் எழுதும் ஒரு சில பதிவர்களில் தனித்து முத்திரை பதிக்க தொடர்ந்து வித்தியாசமான படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
அன்பு சகோ நலம் தானே
வியாபமான
விஸ்தாரமான
வித்தியாசமான
விமர்சனம்
வியந்து பொனேன் சகோ
அப்போ இப்படியான பதிவு போட்டா வரோ ஓடி வருவார்... ஹா ஹா...
நிருபன்.... இது நிறய பேருக்கு பிடித்த பதிவுதான் நம்மில் ஹாலிவுட் ரசிகர்கள் ஏராளாம்.... ஆனா எனக்கு பிடிக்காதே!!!! அவ்வவ்
அதான் இப்படியான உங்கள் பதிவில் நான் எஸ் ஆகிறேன்.... ஹா ஹா.... ஹாலிவுட் ரசிகர்களுக்கு குட் பதிவு.
என்னால் பார்க்கமுடியுமா தெரியவில்லை.உங்கள் விமர்சனம் படிக்க சுவாரஸ்யம்.
நிரூபன்,
வணக்கம்
வாழ்த்துக்கள்..
வணக்கம் பாஸ் இனிய காலைவணக்கம்
உங்கள் ஹாலிவுட் பட விமர்சணங்கள் பார்த்துதான் நான் பல ஹாலிவுட் படங்கள் பார்பதுண்டு.அந்தவகையில் இந்த படமும் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது பார்த்திட்டா போச்சி
@Kumaran
தங்கள் விமர்சனங்களின் பெரிய ரசிகன்..நிறைய நல்ல படங்களை அறிமுகம் செய்து வரும் தங்களது பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
இன்றும் ஒரு நல்ல படத்தோடு சிறப்பான விமர்சனமும் வழங்கியுள்ளீகள்..படத்தை பார்க்க தூண்டும் எழுத்துக்கள்.
நன்றிகள் பல.//
வணக்கம் நண்பா,
தங்களின் மேலான கருத்துக்களிற்கு மிக்க நன்றி, தொடர்ந்தும் உங்களது நேர் - மறை விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். அப்போது தான் என் படைப்புக்களை மேலும் செம்மைப்படுத்த முடியும்.
@நிவாஸ்
விமர்சனம் அருமை
படம் ஏற்கனவே பார்த்துவிட்டேன்
உங்கள் விமர்சனம் சரியாய் பொருந்துகிறது நிரு//
நன்றி நண்பா.
@ஹாலிவுட்ரசிகன்
இன்னும் படம் பார்க்கவில்லை. ஆக்ஷன் படம் என்பதால் சீக்கிரமே பார்த்துவிடுவேன்.
//
நேரம் இருக்கும் போது பார்த்து விட்டு சொல்லுங்க நண்பா.
@KANA VARO
பாஸ், உங்க ஹொலிவூட் பட விமர்சன ரசிகன் நான். இப்படியான விமர்சனங்கள் எழுதும் ஒரு சில பதிவர்களில் தனித்து முத்திரை பதிக்க தொடர்ந்து வித்தியாசமான படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
//
பாஸ்..எல்லோரும் உசுப்பேத்தி என்னை ரணகளப்படுத்தா விட்டால் சந்தோசமே;-))))
@A.R.ராஜகோபாலன்
நன்றி அண்ணா.
@துஷ்யந்தன்
அப்போ இப்படியான பதிவு போட்டா வரோ ஓடி வருவார்... ஹா ஹா...
நிருபன்.... இது நிறய பேருக்கு பிடித்த பதிவுதான் நம்மில் ஹாலிவுட் ரசிகர்கள் ஏராளாம்.... ஆனா எனக்கு பிடிக்காதே!!!! அவ்வவ்
//
நன்றி துஸி,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ரசனை அல்லவா?
வரோவிற்கு படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் என நினைக்கிறேன்.
@shanmugavel
என்னால் பார்க்கமுடியுமா தெரியவில்லை.உங்கள் விமர்சனம் படிக்க சுவாரஸ்யம்.
//
நன்றி அண்ணே.
@அப்பு
நிரூபன்,
வணக்கம்
வாழ்த்துக்கள்..
//
நன்றி அண்ணா.
@K.s.s.Rajh
வணக்கம் பாஸ் இனிய காலைவணக்கம்
உங்கள் ஹாலிவுட் பட விமர்சணங்கள் பார்த்துதான் நான் பல ஹாலிவுட் படங்கள் பார்பதுண்டு.அந்தவகையில் இந்த படமும் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது பார்த்திட்டா போச்சி///
நன்றி நண்பா.
விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது....யுடூயூப்ல தேடிப் பார்க்கலாம்......
Post a Comment