Sunday, January 29, 2012

One Day: பெண்ணை பாதுகாக்கும் நட்பு- அனுபவிக்க போராடும் காதல்!

கோலிவுட்/ ஹாலிவூட் திரை விமர்சனம்:
12வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படம்.
எல்லோருக்கும் வணக்கமுங்க, 
நட்பினைக் காதலாக மாற்றுவதும், காதலை நட்பாக மாற்றுவதும் இக் கால இளசுகளின் ஒரு ஜாலியான வாலிப வயசின் விளையாட்டு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.கல்லூரியில் ஓர் ஆணுக்கு கிடைக்கும் அதிஷ்டவசமான பெண் நட்பினை வாழ்வின் இறுதிக் கணங்கள் வரை தன் கூடவே அழைத்துச் செல்லும் பாக்கியம் எல்லோருக்கும் இலகுவில் கிடைப்பதில்லை. இப்படியான ஓர் சம்பவத்தினைக் கொண்ட படம் பற்றிய விமர்சனத்தினைத் தான் இப் பதிவினூடாக படிக்கப் போகிறோம். கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட் ஆக இருந்தாலும், நம்ம தமிழ்ப் படங்களில் இப்படியான கான்செப்ட்டினைப் பார்த்திருக்கிறோம் என்று கூட கூறலாம். சரி, வாருங்கள்..படத்திற்குள் நுழைவோம்.
படத்தின் மையக் கதை: 15ம் திகதி ஜூலை மாதம், 1988ம் ஆண்டிலிருந்து, 15ம் திகதி ஜூலை 2006ம் ஆண்டு வரையான 18 வருட காலப் பகுதிக்குள் மிக மிக நெருக்கமாக இருக்கும் கல்லூரி நண்பர்கள் இருவரினது வாழ்க்கையின் ஒரு நாள் நிகழ்வுகளை ஒவ்வோர் வருடத்தின் அடிப்படையிலும் பேசுகின்ற படம் தான் இந்த One Day. 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி காலேஜ்ஜில் பட்டமளிப்பு விழா முடிவடைந்த பின்னர் கல்லூரிச் சிட்டுக்கள் திசைக்கு ஒன்றாகச் சிதறிப் போகும் போது, இலகுவில் தம்மை தமது நட்பு எனும் பந்தத்திலிரிந்து பிரிக்க முடியாதவர்களாக எம்மா (Emma) மற்றும், டெக்ஸ்டர் (Dextar) ஆகிய இரு நண்பர்கள் விளங்குகிறார்கள்.

நட்போடு ஓர் பெண்ணின் அருகே ஆண் இருந்தாலும், சில சமயங்களில் அவனது உணர்வுகள் திசை மாறிப் போகும் நிலை ஏற்படும் அல்லவா? இதனை உணர்ந்த நாயகி; "அருகே இருக்கலாம், ஆடை மாற்றலாம், அழகை ரசிக்கலாம். தொட்டும் பார்க்கலாம். ஆனால் செக்ஸ் மட்டும் பண்ணிக்க கூடாது!" அப்படீன்னு கண்டிசன் போடுறாங்க. இதனால் நாயகன் நாய் போல அலையாத குறையாக நண்பி எமாவினை வலைக்குள் விழ வைக்க முயற்சிக்கிறார். அது முடியாது போகவே, தனது நட்பு ஒரு புறம் இருக்கட்டும், தொழில் தேடி தன் எதிர்கால வாழ்வை மேம்படுத்தனும் என்று கிளம்பிடுறாரு. நாயகி லண்டனில் உள்ள ஓர் மெக்ஸிக்கன் உணவகத்தில் வேலை பார்க்க ஆரம்பிக்க, நாயகன் உலகம் சுற்றும் வாலிபனாக கிளம்பிடுறாரு.

மீண்டும் தன் நண்பியை சந்திக்க முன்பதாக மூன்று பெண் துணைகளை தன் வாழ்வில் மூன்று வருட இடை வெளிக்குள் கண்டு அனுபவித்து, உண்டு உறங்கிட்டு வர்றாரு.அப்புறமா;ஒரு டீவி ஸ்டேசனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக டெக்ஸ்டருக்கு வேலை கிடைக்குது. அங்கே உள்ள மாடல் ஸில்வி நாயகன் மேல காதல் வசப்படுறாங்க. ஆனாலும் தன் கல்லூரி நண்பி எமாவினை மறக்க முடியாதவராக, நண்பியிடம் மீண்டும் வந்து, காதலிப்பதாக சொல்கிறார். அதுக்கு நண்பியோ, "நீ ஒரு பிரபலமான டீவி தொகுப்பாளர். உனக்கு என்னை மாதிரி பொண்ணுங்களோட பீலிங்ஸ் புரியாது. காதல் என்றால் உன்ன மாதிரி பிரபலத்திற்கு என்னான்னே தெரியாது" அப்படீன்னு பேசி, நட்பாக இருக்க விரும்புறாரு. இதனால மறுபடியும் தன் கூட டீவி ஸ்டேசனில் வேலை பார்க்கும் மாடலுடனா காதலை காண்டினியூ பண்ற நிலைக்கு நாயகன் தள்ளப்படுறாரு. 
காதலின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது, பாதுகாப்பான உறவினை கையாள முடியலை என்பதால் கலியாணத்திற்கு முன்பதாகவே ஸ்ல்வி அம்மா ஆகிடுறாங்க. ஐ மீன் கர்ப்பம் தரித்திட்டாங்க. இதனை உணர்ந்த நாயகன், சட்டு புட்டென்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறாரு. திருமணம் நிறைவாக நடந்தாலும், தன் நண்பி மீதான காதலையும், நட்பையும் மறக்க முடியாதவராக அடிக்கடி சந்தித்து கொள்கிறாரு.இந்த வேளையில் எமாவிற்கும் காமெடி நடிகர் ஒருவருடன் திருமணம் நிகழ்கிறது. இருவரது மண வாழ்க்கையிலும் சந்தோசம் என்பதே இல்லை. இதனால் மீண்டும் இரண்டு நட்புக்களும் சேரத் துடிக்கிறார்கள். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான பின்னர், நடிகையும், மாடல் அழகியுமான ஸ்ல்வியாவை மணம் புரிந்த நாயகனின் வாழ்வு நாயகியின் நடத்தையால் கேள்விக்குறியாகிறது. இருவரும் டிவோர்ஸ் வாங்கிடுறாங்க. 

அப்புறமா, எமாவினைத் தேடி மீண்டும் நாயகன் போறாரு. இணை பிரியாத நட்புக்கள் இருவரும் இணைந்தார்களா? நாயகனுக்கு நாயகி மீதான உடல் பசி தீர்ந்ததா என்பதனை அறிய விரும்புவோர்,இப் படத்தினைப் பார்க்க முயற்சிக்கலாம். படத்தின் முடிவு, நாம் நினைப்பது போல இருக்காதுங்க. காரணம் நாயகனும் நாயகியும் சேர்ந்தாங்களா என்று நாம நினைத்துப் பார்த்திட்டு இருப்போம். இடையில் ஒரு சின்னத் திருப்பம் நிகழுதுங்க. அதை நான் சொன்னால் உங்களுக்கு படம் பற்றிய ஆர்வம் இல்லாமல் போயிடும் அல்லவா?அப்புறமா, டெக்ஸ்டருக்கு பிறந்த மகள் தந்தையின் அரவணைப்பும், தாயின் அன்பும் இல்லாமல் நிற்கிறாங்க. உண்மையிலே மனதினை உருக்கும் ஓர் காவியத்தினை அழகுறப் படமாக்கியிருக்கிறாங்க என்று தான் கூற வேண்டும்.

படம் பற்றிய சில சுவாரஸ்யங்கள்: 
*19ம் திகதி ஆகஸ்ட்டு மாசம் திரைக்கு வந்திருக்கிற இப் படத்தினை, Focus Features நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டிருக்கிறாங்க. இயக்குனர் Lone Scherifg அவர்கள், இயக்கியிருக்காங்க. 
*எம்மாவாக நடிகை Anne Hathaway அவர்கள் நடித்திருக்கிறாங்க. டெக்ஸ்டராக, நடிகர் Jim Sturgess அவர்கள் நடித்திருக்கிறாங்க. இவர்களுடன், மாடல் அழகி ஸ்ல்வியாக, Roma Garai, அவர்கள் நடித்திருக்கிறாங்க. 
*டெக்ஸ்டரின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை, Patrica Clarkson அவர்கள் தன் மகனுடன் பாச மழை பொழிந்து நடிப்பில் அசத்தியிருக்காரு.
*இசையில், Karen Elliot அவர்கள் அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் ஏற்றாற் போல, கலக்கியிருக்கிறாரு.
*இப் படமும்,அனைத்து விதமான உணர்ச்சிகளையும் உள்வாங்கி, வெளிவந்திருக்கிறது. 
*நீச்சல் குளத்தில் நீந்த ஆரம்பிக்கையில் உடலை அனுபவிக்காது, நீந்துவது தப்பில்லை என நாயகியினை வற்புறுத்தி, ஆடைகளை அவிழ்த்து விட்டு, நீந்த ஆரம்பிப்பதும், இரு சிறுவர்கள் ஓடி வந்து ஆடைகளைத் திருடிச் சென்று விட, நாயகன் ஆடை இல்லாமல் சனக் கூட்டம் நிறைந்த வீதியில் திருடர்களைத் துரத்திச் செல்வதும்;ரொம்பவே சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் இருக்குமுங்க. 
*ஒரு மணித்தியாலமும், 48 நிமிடங்களும் தான் இந்தப் படம் ஓடுற நேரம். 
*பொழுதுபோக்கிற்கு ஏத்த படம். உங்கள் சண்டேயை சந்தோசமாக கழிக்க இப் படத்தினைப் பார்க்கலாமுங்க.

One day: இணை பிரியாத நட்புக்களின் இதயத்து உணர்வுகளினைப் பேசும் படம்!
***************************************************************************************************************
மகிழம்பூச்சரம் பற்றி அறியாதோர் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். பதிவுலகில் மகிழம்பூச்சரம் இருந்தால் எப்படி இருக்கும்? கம கம என்று நறுமணம் வீசும் அல்லவா? கதை, கவிதை, கட்டுரை,சிறுகதை உள்ளிட்ட இலக்கியப் படைப்புக்களையும், பெண்ணியம் தொடர்பான படைப்புக்களையும் சகோதரி "சாகம்பரி" அவர்கள் "மகிழம்பூச்சரம்" எனும் வலைப் பூவில் அழகுறப் பதிந்து வருகின்றார்.
***************************************************************************************************************

17 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

படம் நல்ல கதை போல தெரியுது. சொன்னது போல அடுத்த சண்டே தான் பார்க்கணும்.

Thava said...
Best Blogger Tips

இனிய வணக்கம் நண்பரே,
மனதை தொட்டுவிட்டது தங்கள் விமர்சனம்..அதுவும் காதல் படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் எனக்கு.நல்ல படமாக இருக்கும் என்பதை தங்கள் எழுத்துக்களே நம்பிக்கை தருகின்றன.ஏற்கனவே பார்க்க போகிற படங்களை கொஞ்சம் பட்டியல் போட்டு வைத்துள்ளேன்.இதையும் சேர்த்து நேரம் கிடைப்பின் பார்த்துவிடுகிறேன்.நன்றி..

Unknown said...
Best Blogger Tips

நலமா! நிரூ!
நான் படமே பார்ப்பதில்லை!

புலவர் சா இராமாநுசம்

K said...
Best Blogger Tips

நட்பினைக் காதலாக மாற்றுவதும், காதலை நட்பாக மாற்றுவதும் இக் கால இளசுகளின் ஒரு ஜாலியான வாலிப வயசின் விளையாட்டு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.//////

யோ, நட்பு காதலாக மாறும்,ஓகே! அதெப்படி காதல் நட்பாக மாறும்? ஒரு மாதிரியா இருக்காதா?

K said...
Best Blogger Tips

கலியாணத்திற்கு முன்பதாகவே ஸ்ல்வி அம்மா ஆகிடுறாங்க. ஐ மீன் கர்ப்பம் தரித்திட்டாங்க./////

என்னது நடிகை மீனா மறுபடியும் கர்ப்பமாயிட்டாய்ங்களா?

K said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி நல்ல விமர்சனம் மச்சி! படம் பார்க்க ஐ ஹேவ் நோ டைம்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அருமையான விமர்சனம்.படம் பார்க்க எங்கே விடுகிறார்கள்?பாடசாலை சென்றபின் பார்க்கலாம் என்றான்,ஆயிரத்தெட்டு வேலைகள்.பார்க்கலாம்,ஓய்வு?!கிட்டும்போது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

படம் நல்ல கதை போல தெரியுது. சொன்னது போல அடுத்த சண்டே தான் பார்க்கணும்.
//
சண்டே, டைம் கிடைக்கும் போது பாருங்க பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

மனதை தொட்டுவிட்டது தங்கள் விமர்சனம்..அதுவும் காதல் படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் எனக்கு.நல்ல படமாக இருக்கும் என்பதை தங்கள் எழுத்துக்களே நம்பிக்கை தருகின்றன.ஏற்கனவே பார்க்க போகிற படங்களை கொஞ்சம் பட்டியல் போட்டு வைத்துள்ளேன்.இதையும் சேர்த்து நேரம் கிடைப்பின் பார்த்துவிடுகிறேன்.நன்றி..
//

வணக்கம் நண்பா,

நேரங் கிடைக்கும் போது பாருங்க, முதற் பாதி கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும், ஆனால் பின்னர் விறு விறுப்பாக இருக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்
நலமா! நிரூ!
நான் படமே பார்ப்பதில்லை!

புலவர் சா இராமாநுசம்//

வருகைக்கு நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

யோ, நட்பு காதலாக மாறும்,ஓகே! அதெப்படி காதல் நட்பாக மாறும்? ஒரு மாதிரியா இருக்காதா?
//

அவ்வ்வ்வ்வ்

அது அப்படி மாறினவங்க கிட்டத் தான் நீங்க கேட்டு தெரிஞ்சுக்கனும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

என்னது நடிகை மீனா மறுபடியும் கர்ப்பமாயிட்டாய்ங்களா?
//

இது ரொம்ப ஓவரு மவனே! பிச்சுப்புடுவேன்! பிச்சு!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

ஹி ஹி ஹி நல்ல விமர்சனம் மச்சி! படம் பார்க்க ஐ ஹேவ் நோ டைம்!
//

அவ்வ்வ்
டைம் இருக்கும் போது பார்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FRவணக்கம் நிரூபன்!அருமையான விமர்சனம்.படம் பார்க்க எங்கே விடுகிறார்கள்?பாடசாலை சென்றபின் பார்க்கலாம் என்றான்,ஆயிரத்தெட்டு வேலைகள்.பார்க்கலாம்,ஓய்வு?!கிட்டும்போது.
//

வணக்கம் ஐயா,
பாடசாலை சென்ற பின்னர் பார்ப்பது தான் உங்களுக்கும் வசதியாக இருக்கும்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

நல்லதொரு படம் போலத்தான் இருக்கிறது.அதற்கென்ன பார்த்தால் போச்சு.பகிர்ந்ததற்கு நன்றி அண்ணாச்சி....

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...
வணக்கம் ஐயா,
பாடசாலை சென்ற பின்னர் பார்ப்பது தான் உங்களுக்கும் வசதியாக இருக்கும்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///அடோ!அப்பே கத்தாக்கரண ரெஸ்பெக்ட்!

Mahan.Thamesh said...
Best Blogger Tips

சகோ நல்லாவே விமர்சனம் பண்ணியிருக்கிங்க . பார்த்திட்ட போச்சு .

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails