Friday, January 6, 2012

ஏகாம்பரத்தாரின் பொண்டாட்டிக்கு என்னால ஏழில சனி!

ஏகாம்பரத்தாரின் ஏக்கப் புலம்பல்!

கலியாண வயசில் கனவுகளின் தொல்லை கூட
கன்னியரைத் தேடி ஏகாம்பரத்தாருக்கு மனதில் ஏக்கம்
பலியாடாய் ஒருத்தி எ(ன்)னை தேடி வந்து - இன்ப
பாவம் தனைப் போக்கிடாளா என்று தினம் வாட்டம்
சிலையான மங்கையவள் என் சிந்தையினை தூண்டி
சில்மிஷங்கள் செய்யாளா என்பதனால் இல்லை தூக்கம்
வலை போட்டு பெண்களினை நாளும் தேடிப் பார்த்தார்
வடிவான குட்டி மாட்டிடவே வாஞ்சையுடன் தொடர்ந்தார்!
அழகான பெண்ணவள்- அந்தப் புற தேவதையாய்
அடியேனை தேடி வர வேண்டுமென நினைத்தார்
அழையாத விருந்தினர் போல் அவள் பின்னே தினமும்
அலைந்து தன் ஆசையினை சொல்லிடவே துடித்தார்
வலை போட்ட தூண்டினிலே வனிதாவும் மாட்டிடவே
வயசிற்கும், உடைகளுக்கும் விடுதலையை கொடுத்திட நினைத்தார்!
நிலையான இவ் உலகில் நிறைவான இன்பம் போல
நினைவிற்குத் தீனியிட ஏதும் இல்லையே என உணர்ந்தார்!!

வனிதாவை அழைத்தார்- வடிவான மொழியினூடே காதல் உரைத்தார்
வடிவான மங்கையவள் எனப் புகழ்ந்தார் 
இனிதாக இன்ப மொழி பேசினார் - மங்கையினை தனக்கு 
இசைவாக மாற்றிடவே இயல்பின்றி துடித்தார்
கனிவான பேச்சு - கன்னம் குழை காதல் மொழி ஊற்று 
கவலை போக்க காதினிலே செல்லக்கடி
மனதார மானே உன்னை விரும்புகிறேன் என மையலிட்டார்
மடிசாய வேண்டுமென விருப்பம் கொண்டார்!!

தாலியொன்று கட்டு என்றாள் - தனஞ்செயனே உந்தன்
தாகம் தீர்க்க முன்பாக என்னை நீயும் ஊரறிய
மாலையிட வேண்டும் - மடி சாய முன்பாக 
மையலதை விட்டு விட்டு இனிதாக எனை நீயும்
கலியாணம் கட்டிடவே வழி பார்க்க வேண்டும்,
காதலித்த வேகம் போன்று கட்டிலிட முன்பாக
காலமெல்லாம் என்னுடனே காதலியாய் வாழ்வே னென்று
கண்ண பிரான் முன்னிலையில் சத்தியமும் செய்ய வேண்டும்!
உடன்பட்டார் ஏகாம்பரத்தார் - வனிதாவை தனக்கான
உற்ற துணையாக்கிடவே முடிவெடுத்தார்
இடர் கொண்ட காளையாய் இன்பத் தீயில் துடிக்கும்
இளையவர் ஏகாம்பரமும் பொறுப்பாரா? - புறப்பட்டார்
அடங்காத வெறி கொண்டு வனிதாவை
அணைத்து மகிழந்திடவே வேண்டுமென ஆவலுற்றார்
விடம் உண்ட மனிதன் போல விறுவிறுப்பு மிக்கவராய்
விழிகளிலே திருமண நாளை எதிர் பார்த்திருந்தார்!

அந் நாளும் வந்தது - அழகி வனிதாவோ கலியாண
அரங்கத்தில் காலெடுத்து வைக்கையிலே எனைக் கண்டு
செந்தாமரையை கண்ட சூரியனாய் முகம் சிவந்தாள்
செல்லமாய் நானும் முகம் மலர்த்தி சிரித்தேன் - கலியாண(ப்)
பந்தலிலே ஓரமாய் இருந்த மாப்பிளை ஏகாம்பரமோ எனை
பட படக்கும் பயத்துடன் ஓர் பார்வை பார்த்தார்!
அந் நேரம் தொடங்கியது சந்தேகம் - முறைத்தார்
ஆனாலும் அபையோர் முன்னிலையில் மூடி மறைத்தார்!

என் வீட்டிற்குப் பின்னாலே குடியிருந்தார் - எதேச்சையாய்
ஏகாம்பரத்தார் மனைவியுமோ என் கண்ணில் பட்டாள்
பண்பாட்டில் சிறந்தவனாய்; மனதில் ஏதும் நினைக்காது
பக்குவமாய் அவளைக் கண்டு சிரித்தேன் -
தன் பாட்டில் நான் சிரிப்பதனைக் கண்டவுடன் அவருக்கு
தானகவே வந்து தொற்றியது சந்தேக நோய்
இன்புற்றிருக்க மணஞ் செய்த ஏகாம்பரத்தின் வாழ்வோ
இருதலை கொள்ளியாய் சந்தேகத்துடன் நகர தொடங்கியது!

ஏகாம்பரத்தாரின் பெண்டாட்டிக்கு என்னால இப்போது
ஏழில சனி என்று ஊரெல்லாம் பேச்சு - சிவன் உமை
பாகமாய் இருந்த குடும்பத்தினுள் பற்றியது நெருப்பு
பாவியாய் நானிருந்தேன் - வனிதாவை பார்ப்பதையும் தவிர்த்தேன்!
வேகமாய் ஓர் நாள் வீட்டிற்குள் வந்தார் - வாள் கொண்டு
வெட்டுவேன் உனை நிரூபா - கவனம் என்றார்
சோகமாய் தன் மண வாழ்க்கையை தொடங்கினார்
சந்தேகப் பேயை விரட்டிட முடியாது திண்டாடுகின்றார்!

இன்றைய தினம் வெளியான மற்றுமோர் பதிவினைப் படிக்க: 

கொடுங்கோலர் மகிந்தரின் அழிவு காலம் நெருங்கி விட்டதா?

24 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அருமை!உங்களாலும் முடிகிறதே??????ஹ!ஹ!ஹா!!!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

உங்கள் திறமைக்கு வரையறையே கிடையாது போல இருக்கே. ஆல் ஏரியால கலக்குறீங்க ...

அனுஷ்யா said...
Best Blogger Tips

தயவு செஞ்சு என் கல்யாணத்துக்கு வந்துடாதிங்க தலைவரே...ஹி ஹி ஹி...

உண்மையா?இல்லை புனைவா?
எப்படியோ ரொம்ப நல்லா நூல் கோர்த்து போல வார்த்தைகள்...அழகு..

டவுட்டு: சம்பந்தமே இல்லாம நடுவுல எதுக்கு அந்த KINGFISHER CALENDAR சமந்தா? வனிதாவின் வர்ணனைக்கு இடையூறாய் தோன்றுகிறது..

Jana said...
Best Blogger Tips

ஏகாம்பரத்தாரின் பெண்டாட்டிக்கு என்னால இப்போது
ஏழில சனி ...

உங்களுக்கெ தெரியும் இந்த நடைக்கு நான் பரம இரசிகன் என்று..
இரசனைக்கு விருந்தளித்த நிரூவுக்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

அருமையான நடை
சிலப்பதிகாரம் போல்தொடர் நிலைச் செய்யுளைத்
தொடர்ந்த நிறைவு
தொடர வாழ்த்துக்கள்
(கவிதையைச் சொன்னேன் )
த.ம 4

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு எப்படா ஒரே நாளில் ரெண்டு பதிவு??? பாஸ் பொறாமையா இருக்கு :(

முதல் போட்டோ அழகா இருக்கே..... (யாரு அது!!!)

அப்புறம் ஏகாம்பரத்தின் வாழ்க்கையில் குண்டே (சந்தேகம்) வைச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி கவிதை வேற!!!!
ஏன் இந்த கொலை வெறி நிரு!!!!! :)))

சுதா SJ said...
Best Blogger Tips

கவிதையில் தமிழ் புகுந்து விளையாடுது :)))))

KANA VARO said...
Best Blogger Tips

கவிதை அருவியா கொட்டுது போல!

shanmugavel said...
Best Blogger Tips

ஏகாம்பரத்தார் பாவம்.இப்படி ஒரு சந்தேகமா? பொம்பள சிரிச்சா போச்சுன்னு சொல்றது இதுதானா?

சுதா SJ said...
Best Blogger Tips

மற்ற பதிவுக்கு இரவுக்கு வாறேன் :))))

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
காட்டான் said...
Best Blogger Tips

அது சரி..! படவா ஏகாம்பரத்தார நித்திரை கொள்ளவிடாமல் செய்திட்டு நீ அத இரசித்து கவிதை வேற எழுதுறியோ..?

காட்டான் said...
Best Blogger Tips

சந்தேக பேய் பிடிச்சா எல்லோருக்கும் ஏகாம்பரத்தார் நிலைதான்..!!

காட்டான் said...
Best Blogger Tips

உங்கள மாதிரி ஆட்கள் பக்கத்து வீட்டுக்காரனாய் இருந்தாலும் எல்லோருக்கும் ஏகாம்பரத்தார் நிலை வரும்போல..!!)

Unknown said...
Best Blogger Tips

கலியாணப்பந்தலிலே கன்னியவள் உன்னைக்கண்டு மயங்கிட
நீ..என்ன மன்மத%#@&# ஆ..
அடப்பாவி.... ஏகாம்பரத்துக்கு ஏழில
சனியா?
இல்ல.....விடுய்யா...விடுய்யா முறைக்காத...!

ஹேமா said...
Best Blogger Tips

தலையங்கம் பார்த்துச் சிரிச்சிட்டேன்.நிரூ...பகிடி பகிடியா மனுஷரைக் கடிச்சு வைக்க உங்களாலதான் முடியுது !

Admin said...
Best Blogger Tips

அழகிய மொழிநடை... சகலவற்றிலும் அசத்துறிங்க உங்கள் திறமை வியப்பூட்டுகிறது நண்பா..

Admin said...
Best Blogger Tips

ஏகாம்பரத்தாரின் மனைவியைப் பார்த்து சிரிச்சதோட நிறுத்திக் கொள்ளுங்க நண்பா. ஏகாம்பரத்தாரின் மனைவிய பார்த்து சிரித்து ஏகாம்பரத்தாரின் குடும்பத்த நடுத்தெருவில நிக்க வைத்த மாதிரி வேறு எந்தக் குடும்பத்தையும் நிக்க வைத்திடாதிங்க நண்பா

தனிமரம் said...
Best Blogger Tips

அழகாய் போன இல்வாழ்வில் ஒரு சந்தேகப் புயலை கொண்டுவந்து ஏகாம்பரத்தின் வாழ்வில் சதி செய்யலாமா பாஸ்! வனிதாவின் அழகில் மயங்கினாலும் சந்தேக மயக்கம் அதிகம் போலும் ஏகாம்பரத்திற்கு!

athira said...
Best Blogger Tips

அடடா ஏகம்பரத்தாரின் காதல் கன்னி... இப்போ நிரூபனின் கையில்:)).. என்னா ஒரு கற்பனை... நல்லாயிருக்கு கவிதை நிரூபன்.

athira said...
Best Blogger Tips

சந்தேகம் எப்போது வருகிறதென்றால்.. தம்மீது பிழை உள்ளவர்க்கே அது அதிகம் வருகிறது... ஏகாம்பரத்தார், தன் மனைவி இருக்க இன்னொரு பெண்ணுக்காக அலைந்தாரெல்லோ.... அதனால அடுத்தவர் தன் மனைவியைப் பார்க்கும்போது... தன்னைப்போலவே அடுத்தவரையும் எண்ணுகிறார்....

கவி அழகன் said...
Best Blogger Tips

today i am free அதனால கொஞ்சம் இந்தப்பக்கம் மினக்கடுரன்

Mathuran said...
Best Blogger Tips

ஹா ஹா ஏகாம்பரத்தார் எனிமேல் உங்களையும் தன்ர மனிசியைம்யும் மாறி மாறி பார்க்கவே நேரம் போயிடும்...
பாவம் மனிசன்,,,

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

அருமையான கவிதை நிரூபன்.. எப்பிடியெல்லாம் ஜோசிக்கிறீங்கப்பா... வாழ்த்துக்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails