மச்சாள்காரிங்க கூட ஜாலியாக பால்ய வயதினைக் கழிச்சுக் கொண்டிருந்த எனக்கு இடியாக அமைந்தது என் அப்பாவின் வேலை மாற்றம். இதன் காரணமாக முதலாம் ஆண்டு கல்வியினை நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்று தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் மீண்டும் வித்யா & நித்யா கூட விளையாட மாட்டேனா என்று ஏங்கிக் கொண்டிருந்தேனுங்க. அப்போது தான் எனக்குப் பக்கத்தில் ஒரு பூக் கட்டுக் கட்டிய ஆளு வந்து அமர்ந்திருந்தா. என் ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவங்க என் கூடவே வருவா என்று நான் நினைச்சிட்டிருந்தேன். ஆனால் அவங்க மூனாம் கிளாஸ் முடிய முன்னாடியே எஸ் ஆகிட்டாங்க.
இனிப் பாகம் ஒன்றின் தொடர்ச்சியாக......
அந்தப் பொண்ணோட பெயரு ஷிரோமி. அவங்களோட அப்பா ஒரு ரேடியோ திருத்துற கடை வைச்சிருந்தாரு. நம்மூரை விட்டு இடம் பெயர்ந்து போகும் வரைக்கும் அவங்க என்னோட தான் ஒன்னாகப் படிச்சாங்க. நமக்குள்ளான நட்பு, அல்லது நெருக்கம் ஒரு நாடகத்தின் மூலம் தான் ஆரம்பமாகியது. பள்ளியிலும் நாம இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். அதே போல டீயூசன் கிளாசிலும் நாம ரெண்டு பேரும் ஒரே கல்வி நிலையத்தில் தான் படித்தோம். நம்ம டியூசன் கிளாஸின் ஆண்டு விழா நிகழ்வினை முன்னிட்டு; நம்ம டியூசன் டீச்சர் ஒரு சிறுவர் நடனம் பழக்கினாங்க. சிறுவர்களாக இருந்த காலத்தில சிறுவர் நடனம் தானேங்க பண்ண முடியும்.
அந்த சிறுவர் நடனத்திற்கான பாடலாக "அப்பா என்னை அழைத்துச் சென்றார் அங்கே ஓர் இடம். அங்கிருந்த குயிலும் மயிலும் எனத் தொடங்கும் சிறுவர் பாடலுக்கான நடனத்திற்கு எம்மைத் தயார்படுத்தினார்கள்.நானும் ஷிரோமியும் அருகருகே நின்று நடனம் ஆடத் தொடங்கினோம். மேற்படி பாடலில் ஒவ்வோர் மிருகங்களின் பெயரைச் சொல்லியும், ஒவ்வோர் மாணவரும் அபிநயம் செய்யும் வண்ணம் நடனம் பழக்கியிருந்தாங்க நம்ம டீச்சர். இந்த நடனம் மூலம் நாம ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ் ஆகிடோம். அதன் பின்னர் வகுப்பில் எப்போதும் எனக்கு அருகே ஷிரோமி இருக்கனும். ஷிரோமிக்கு அருகே நான் இருக்கனும் என்கின்ற நிலமை உருவாகிப் போச்சு.
யாராச்சும் நம்மளைப் பிரிக்கும் நோக்கில் நம்ம செயாரை (கதிரையை) கைப்பற்றினா ஐயா, ஒரு ஹீரோ போல எழுந்து நின்று ரணகளம் பண்ணி, ஷிரோமிக்கு பக்கத்தில யாரும் இருக்காதவாறு பார்த்துக்குவேன். இதன் பிறகு ஷிரோமி வீட்டிற்கு நான் விளையாடப் போவது, அவங்க என் வீட்டிற்கு வருவது என்று ஒரு இணை பிரியாத பந்தம் போன்ற நெருக்கமான நட்பு உருவாகிட்டுதுங்க. ஷிரோமி கூட ரொம்ப புடிச்ச விடயம் என்பதற்கு அப்பால், அந்த சின்ன வயசிலே ஷிரோமி என்னோட ஆளா இருக்க மாட்டாளா என்று ஏங்கியிருக்கேனுங்க.
இந்த ஏக்கத்தைப் போக்குவதற்கு வசதியாக நம்ம நண்பர்களும் ஹெல்ப் செஞ்சாங்க பாருங்க! அவங்களை வாழ்த்த என் வசம் அப்போது வார்த்தைகளை இருக்கலைங்க. ஆளாளுக்கு ஒவ்வோர் பொண்ணின் பெயரை அவனோட ஆளு இவனு! இவனோட ஆளு இவளு! எனச் சொல்லி பட்டம் சூட்டி மகிழுவேனுங்க. என்னைப் பார்த்து ஷிரோமியோட ஆளு எனச் சொல்லி நான்காம் கிளாஸில கிண்டலடிப்பதும், ஷிரோமியைப் பார்த்து என் ஆளு எனச் சொல்லி கிண்டலடிப்பதும் எமது வகுப்பறையில் வழக்கமாகி விட்டது. படிப்பு, போட்டி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் இருவருமே ஒன்னாக கலந்து கொள்ளத் தொடங்கினோம். அந்த வயசில் ஒரு பேச்சுப் போட்டிக்கு ஷிரோமி வீட்டிற்குச் சென்று அவங்க அம்மாவின் வழிகாட்டலில் நாம இருவரும் பேசிப் பழகியிருக்கோம்.
இந்த அனுபவம் நான் பெரிய பையன் ஆன பின்னர் கிடைக்கலையே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருக்கேனுங்க. ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க எங்க ஊரை விட்டு சொல்லாம கொள்ளாம எங்கேயோ போயிட்டாங்க. அப்புறம் நான் அவங்களைக் காணவே இல்லைங்க. இறுதியாக யாரோ ஒரு நண்பன் சொன்னான். அவங்க இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பக்கம் உள்ள கண்டிக்குப் போயிட்டாங்க என்று. என் பதின்ம வயது வரை நான் மீண்டும் காண மாட்டேனா என ஏங்கிய பொண்ணு இந்த ஷிரோமி தான்.
இப்படியாக நான் கற்பனைகளில் மிதந்திட்டிருந்த சமயத்தில் என்ன நடந்திருக்கும் என்று கேட்கிறீங்களா? அதை அடுத்த பாகத்தில சொல்றேனுங்க.
பூக்கட்டு: சின்னப் பாப்பாக்களுக்கு இருக்கும் தலைமுடியினை ஒன்றாக கோதி குஞ்சம் போன்று உச்சியில் கட்டப்பட்டிருக்கும் முடி ஸ்டைல் தான் பூக்கட்டு.
*************************************************************************************************************
பதிவர்களுக்கோர் நற் செய்தி!
பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்ற ஓர் செய்தியினை தமிழ் நண்பர்கள் இணையத் தளத்தினர் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு நாளும் தமது பதிவுகளை இணைக்க விரும்பும் பதிவர்களின் முழுப் பதிவினையும் திரட்டிக் கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் தளமானது இன்று முதல்; தமிழ் நண்பர்கள் தளத்திலிருந்து உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருகை தந்து முழுப் பதிவினையும் படிக்கின்ற வசதியினை அறிமுகப்படுத்துகின்றது.
தமிழ் நண்பர்கள் தளமானது இன்று முதல் திரட்டியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறது. ஆர்வமுள்ள பதிவர்கள் தமிழ் நண்பர்கள் தளத்திற்குச் சென்று, உங்கள் பதிவுகளையும் இணைத்துக் கொள்ள விரும்பின் கீழே உள்ள முகவரியில் கிளிக் செய்யுங்கள்.
*************************************************************************************************************
|
13 Comments:
நாம தான் முதலா
நல்ல சுவாரசியமான பதிவுடா நண்பா . ஐயா, ஒரு ஹீரோ போல எழுந்து நின்று ரணகளம் பண்ணி, ஷிரோமிக்கு பக்கத்தில யாரும் இருக்காதவாறு பார்த்துக்குவேன். ஹீரோ ஹீரோ .
இப்படியாக நான் கற்பனைகளில் மிதந்திட்டிருந்த சமயத்தில் என்ன நடந்திருக்கும் என்று கேட்கிறீங்களா? அதை அடுத்த பாகத்தில சொல்றேனுங்க.
கவுத்துப்போட்டியே நண்பா இதன் அடுத்த பதிவ எதிர்பார்குறேன் .
////அந்த சின்ன வயசிலே ஷிரோமி என்னோட ஆளா இருக்க மாட்டாளா என்று ஏங்கியிருக்கேனுங்க.
////
ஹி.ஹி.ஹி.ஹி. பாஸ் எனக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு...ஹி.ஹி.ஹி.ஹி அந்த வயதில் எல்லோறுக்கும் நினைக்கத்தோனும் தான் அவ்வ்வ்வ்
இந்த தொடரில் பல விடயங்கள் வெளிவரும் போல அவ்வ்வ்வ்வ்
தொடர் சுவாரஸ்யமாத் தான் போகுது. அடுத்ததா என்ன வருதுன்னு பாப்போம்.
இப்படியாக நான் கற்பனைகளில் மிதந்திட்டிருந்த சமயத்தில் என்ன நடந்திருக்கும் என்று கேட்கிறீங்களா...?//
நான் யூகிக்கிறேன்... அறிமுகம்...அடுத்த தலைவி...
சரிதானே நிரூ?
//அந்த வயசில் ஒரு பேச்சுப் போட்டிக்கு ஷிரோமி வீட்டிற்குச் சென்று அவங்க அம்மாவின் வழிகாட்டலில் நாம இருவரும் பேசிப் பழகியிருக்கோம்.//
பாஸ், பேச்சு பழகிநீங்களா அல்லது பேசப் பழகிநீங்களா? நானே கண்புஸ் ஆகிட்டேன்.. கலக்கலா போகுது நிரூ இந்த தொடர்..
தமிழில் பூக்கட்டு என்று சொல்லும்போது எவ்ளோ இனிமையா இருக்கு
இதை ஆங்கிலத்தில் pigtail /ponytail/ என்பார்கள் .
ஓகே தொடருங்கள் உங்க autograph
அப்புறம் என்ன நடந்திருக்கும்!
அடுத்ததாக ஒரு - நேமிசா வந்திருப்பா. ஸ்போட்ஸ் மீற்றில் ரெண்டு பேரும் ஒரே ஹவுஸ்ல சந்திச்சிருப்பிங்க.
பிறகு கொஞச நாள்ல அவா கொழும்புக்குப் போயிருப்பா.
ஹிஹிஹி....
நல்லா சொல்லிட்டு இருக்கீங்க நிரூ.. தொடருங்க..
ஆனா நாலாங்கிளாஸ் படிக்கும் போதே சேத்து வச்சு பேசறது சூப்பர் மேட்டரு.. எனக்கு அந்த பாக்கியம் எல்லாம் பத்தாவது படிக்கும் போதுதான் கெடச்சது...
அரே பேட்டா...பிஞ்சிலே பழுத்த பையன் நீங்க.....தொடர் எழுதங்க சேட்டு பின்னாடியே வரான்.....
திகட்டாமல் பரிமாறியிருக்கீங்கண்ணே! ருசி கண்ட பூனையாக்கிட்டீங்க.. இனி தவறாம ஆஜராகிட்றேன்..:)
திகட்டாமல் பரிமாறியிருக்கீங்கண்ணே! ருசி கண்ட பூனையாக்கிட்டீங்க.. இனி தவறாம ஆஜராகிட்றேன்..:)
Post a Comment