அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பதிவுலகில் பல புதியவர்களாலும், அனுபவம் நிரம்பிய பதிவர்களாலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் சில இருக்கு. ஸோ..அது பத்தி அலசுவது தான் இன்றைய பதிவின் நோக்கம். நாற்று வலைப் பதிவில் "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடரின் நான்காவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் தொடர்ச்சியான:
மூன்றாவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.
இப்போ பதிவிற்கு எப்படி ஓர் அழகிய தலைப்பு வைக்கலாம் என்பதற்கான எளிய உதாரணத்தினைப் பார்ப்போம். நான் வீதியால் போகும் போது சில பறவைகள் பறந்திட்டு இருக்கு. ஒரு பாட்டி ரோட்டில குந்தி இருந்து யோசித்துக் கொண்டு; பறவைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கா. கொஞ்ச தூரம் தள்ளி, ஒரு சின்னப் பையன் பட்டங் கட்டிக் கொண்டிருக்கான். இம்புட்டு மேட்டரையும் வைத்து ஓர் பதிவு எழுதனும் என்றால் என்ன பண்ணுவேன்? "உட்கார்ந்து யோசித்த பார்ட்டி! உருப்படியாய் பட்டம் கட்டிய பையன்!" அப்படீன்னு கொஞ்சம் பரபரப்பும், கவர்ச்சியும், பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது போன்ற தலைப்பினை வைக்க ட்ரை பண்ணுவேன். ஆனால் எல்லாப் பதிவுகளுக்கும் இம் மாதிரியான தலைப்புக்களை வைக்க முடியாது. இந்த இடத்தில தான் நமக்கு ஆப்பு காத்திருக்கு.
நாம் என்ன கருப் பொருளை மையப்படுத்தி எமது பதிவினை எழுதப் போகிறோம் என்பது பற்றிய தெளிவு எமக்கு இருக்க வேண்டும். சில சமயம் ஓர் பதிவிற்கு நல்ல தலைப்பினைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் பதிவினை எழுதிய பின்னர் தலைப்பு வைக்கும் பொறுப்பினைக் கையிலெடுக்கலாம். சுண்டியிழுக்கும் தலைப்புக்கள் வைத்து எழுதுவதனைத் தான் பதிவுலகில் பல வாசகர்கள் இப்போது தமது கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த தலைப்புக்கள் எல்லாப் பதிவுகளிற்கும் பொருந்தாது. வலையுலகில் சினிமா, அரசியல், மொக்கை, நையாண்டி, பரபரப்பு, கிரிக்கட் மற்றும் சூடான பதிவுகளுகுத் தான் மவுசு அதிகம். ஆன்மீகப் பதிவும், இலக்கியப் பதிவும் எழுதினால் அவற்றினைப் படிக்க வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கும் என பலர் வருந்துவதனைக் கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆன்மீகப் பதிவினையும், இலக்கியப் பதிவினையும் கூட இலகுவாக அனைவரையும் படிக்கும் வண்ணம் எழுதலாமுங்கோ. என்ன ஆச்சரியமாக இருக்கா?
நான் எல்லாம் பதிவு எழுத வந்த புதிதில் நல்ல தலைப்புக்கள் வைத்து இலக்கியப் பதிவுகள் எழுதிப் பார்த்தேன். அப்புறம் என்னனங்க. ஒவ்வோர் நாளும் நானே என் வலையினைத் திரும்பத் திரும்ப பார்த்துப் படிச்சுக் கொள்ள வேண்டியதாகிட்டு. அப்புறமா பல நண்பர்களின் பதிவுகளைப் படிச்ச போது தான் இந்த நுட்பம் தெரிய வந்தது. அதன் பின்னர் இலக்கியப் பதிவுகளுக்கு இனிப்பான தலைப்பு வைக்கும் வித்தையினைக் கையிலெடுத்தேன். சில பசங்க என்ன பண்ணுவாங்க என்றால்; பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லாம பரபரப்பினை ஏற்படுத்துவாங்க. இம் மாதிரிப் பதிவுகளைப் படிப்பதற்கென்று ஒரு கூட்டம் வலையுலகில் ஆவலுடன் காத்திருக்கும். இவங்க என்னா பண்ணுவாங்க என்றால், நீங்க பரபரப்பு தலைப்புடன் பதிவு போட்டதும், பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லைன்னா மைனஸ் ஓட்டு மேல மைனஸ் ஓட்டா குத்தி உங்களுக்கு பல்பு கொடுத்திடுவாங்க. இப்படி ஆரம்பத்தில் நானும் பல பதிவுகளுக்கு தலைப்பு வைத்துப் பல்பு வாங்கியிருக்கேனுங்க.
பதிவர்களை முட்டாளாக்கும் பதிவர்கள்:
பதிவுலகில் சில பதிவர்கள் தம்முடைய கருத்தினைத் திணிக்கும் நோக்கில் செயற்படுவாங்க. புதிய பதிவர்களால், அனுபவசாலிகளால் இப் பதிவர்களின் உள் நோக்கத்தினை இலகுவில் அறிந்து கொள்ள முடியாதிருக்கும். இம் மாதிரிப் பதிவர்கள் என்னா பண்ணுவாங்க என்றால், புதிதாக ஒரு பதிவர் வலை எழுத வந்தாலே போதும். ஓடிப் போய் பாலோ பண்ணுவாங்க. அப்புறமா அந்தப் பதிவர் ஒரு இழிச்சவாயன் என்ற நெனைப்பில பதிவரோட பதிவில இருந்து ஒரு பத்து வரியினை அல்லது ஒரு பந்தியினைக் காப்பி பண்ணி அந்த வசனங்களுக்கு கீழே வாழ்த்துக்கள் அப்படீன்னு ஒரு கமெண்ட் போடுவாங்க. இல்லே அருமை அப்படீன்னு ஓர் கமெண்ட் போடுவாங்க. இன்னும் சிலரோ ம்...அப்படீன்னு கமெண்ட் போடுவாங்க. இம் மாதிரியான கமெண்டுகளை நீங்க பார்த்ததும் ஒரு கணம் ஆடிப் போயிடுவீங்க. ஏன்னா இவங்க நடவடிக்கைகள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!
அடடா..என் பதிவிற்கு இப்படி ஓர் கமெண்ட் வந்திருக்கே என்று நீங்க கண் மூடித் திறக்க முன்னாடி, இந்த முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடும் பதிவர் இதே மாதிரி ஸ்டைலில் பல பதிவர்கள் பதிவிலும் கமெண்ட் போட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாருங்க.இவங்களோட முக்கிய நோக்கம் என்னவென்றால், அவங்க பதிவினை நாம படிக்கனும். ஆனால் அவங்க நம்ம பதிவுகளைப் படிக்க மாட்டாங்க. உதாரணமாக ஒரு பதிவரோட பதிவிலை 25 பேர் கருத்துப் போட்டிருக்காங்க என்றால் 26ம் நபரா இந்தப் பதிவர் வந்து மேலே உள்ள பந்தியினையோ அல்லது அந்தப் பதிவின் கீழ் உள்ள பின்னூட்டத்தில் ஏதாச்சும் ஒன்றினையோ காப்பி பண்ணி கமெண்டாக வாந்தி எடுத்திட்டு அருமை அப்படீன்னு போட்டுக்கிட்டு போய்க் கிட்டே இருப்பாங்க.
சில பதிவர்கள் தமக்கு வரும் கருத்துக்களைப் படிச்சுப் பார்த்து கமெண்ட் போடுவாங்க. ஆனால் சில பதிவர்களோ தமக்கு யார் யார் கமெண்ட் போட்டிருக்காங்க என்று மாத்திரம் பார்ப்பாங்களே தவிர, அவங்க என்ன சொல்லியிருககங்க என்பதனை அறியாது மொய்க் கடமையினை தாங்களும் பதிலுக்கு நிறைவேற்றுவாங்க. அதுவும் எப்படி மொய்க் கடமையை நிறைவேற்றுவாங்க தெரியுமா? அப்பாவித்தனமாக அடடா...இந்தப் பதிவர் என் பதிவினைப் படித்து அல்லவா கமெண்ட் போட்டிருக்கார் எனும் நினைப்பில் பதிவினைப் படித்து மாஞ்சு மாஞ்சு கமெண்ட் போட்டுகிட்டு இருப்பாருங்க. அப்போ இந்த கருத்து திணிப்பினை மேற்கொள்ளும் பதிவர் என்னா பண்ணுவார் என்றால் நமக்கு ஓர் அடிமை சிக்கிட்டான்! இனிமே அவனை கெட்டியாகப் பிடிச்சுக்க வேண்டியது தான் எனும் நோக்கில் உங்க வலைக்கு இதே மாதிரியான கமெண்டுகளைப் போட்டுக்கிட்டே இருப்பாங்க.
பதிவர்களின் காதில் பூச் சுத்தும் பதிவர்கள் பற்றி அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.
|
158 Comments:
பதிவுக்கு தலைப்பு வாசகர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் இருத்தல் அவசியம். ஆனால் மனச்சாட்சி இல்லாமல் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் தலைப்புக்களை மட்டும் சூடாக வைப்பவர்களை என்ன சொல்வது?????????
//பதிவர்களை முட்டாளாக்கும் பதிவர்கள்//
நான் மேலே சொன்னவர்களும் இந்த வகைக்குள் வருவார்கள்.. ஹி ஹி
அடுத்த பகுதியில் கனபேரின் டவுசர் கிழியுமா?????????????
//புதிதாக ஒரு பதிவர் வலை எழுத வந்தாலே போதும். ஓடிப் போய் பாலோ பண்ணுவாங்க. அப்புறமா அந்தப் பதிவர் ஒரு இழிச்சவாயன் என்ற நெனைப்பில பதிவரோட பதிவில இருந்து ஒரு பத்து வரியினை அல்லது ஒரு பந்தியினைக் காப்பி பண்ணி அந்த வசனங்களுக்கு கீழே வாழ்த்துக்கள் அப்படீன்னு ஒரு கமெண்ட் போடுவாங்க.///
ஆரம்பத்தில இருந்து இப்பிடி ஒருத்தர் என் ப்ளாக்கிற்கும் வந்தார். எனக்கு ஆரம்பத்தில இந்த இராஜதந்திரம் புரியல்ல.. அப்புறம் விசயம் தெரிந்ததும் அவர் ப்ளாக் பக்கம் போகாம விட்டன். அவரும் விட்டுட்டார். ஹி ஹி
@மதுரன்
பதிவுக்கு தலைப்பு வாசகர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் இருத்தல் அவசியம். ஆனால் மனச்சாட்சி இல்லாமல் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் தலைப்புக்களை மட்டும் சூடாக வைப்பவர்களை என்ன சொல்வது?????????//
ஹே..ஹே...
இப்படி நானும் செய்திருக்கேன்.
ஆனால் நிறைய இல்லை.
சில பதிவுகளுக்கு இப்படி தலைப்பு வைத்து பல்பும் வாங்கியிருக்கேன்.
@மதுரன்
பதிவுக்கு தலைப்பு வாசகர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் இருத்தல் அவசியம். ஆனால் மனச்சாட்சி இல்லாமல் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் தலைப்புக்களை மட்டும் சூடாக வைப்பவர்களை என்ன சொல்வது?????????//
இம் மாதிரிப் பதிவுகளைப் படிப்பதற்கென்று ஒரு கூட்டம் வலையுலகில் ஆவலுடன் காத்திருக்கும். இவங்க என்னா பண்ணுவாங்க என்றால், நீங்க பரபரப்பு தலைப்புடன் பதிவு போட்டதும், பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லைன்னா மைனஸ் ஓட்டு மேல மைனஸ் ஓட்டா குத்தி உங்களுக்கு பல்பு கொடுத்திடுவாங்க. இப்படி ஆரம்பத்தில் நானும் பல பதிவுகளுக்கு தலைப்பு வைத்துப் பல்பு வாங்கியிருக்கேனுங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எட்டிப் பார்ப்பதுக்குள் அடுத்த தலைப்போ.. எனக்கு ஆராவது நிரூபனை ஒருக்கால் பிடிச்சுத் தாங்கோ... போற வழியில புண்ணியம் கிடைக்காட்டிலும் ஒரு பக்கட் கே எஃப் சி கிடைக்கும்:))
//அடடா..என் பதிவிற்கு இப்படி ஓர் கமெண்ட் வந்திருக்கே என்று நீங்க கண் மூடித் திறக்க முன்னாடி, இந்த முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடும் பதிவர் இதே மாதிரி ஸ்டைலில் பல பதிவர்கள் பதிவிலும் கமெண்ட் போட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாருங்க.இவங்களோட முக்கிய நோக்கம் என்னவென்றால், அவங்க பதிவினை நாம படிக்கனும். ஆனால் அவங்க நம்ம பதிவுகளைப் படிக்க மாட்டாங்க. உதாரணமாக ஒரு பதிவரோட பதிவிலை 25 பேர் கருத்துப் போட்டிருக்காங்க என்றால் 26ம் நபரா இந்தப் பதிவர் வந்து மேலே உள்ள பந்தியினையோ அல்லது அந்தப் பதிவின் கீழ் உள்ள பின்னூட்டத்தில் ஏதாச்சும் ஒன்றினையோ காப்பி பண்ணி கமெண்டாக வாந்தி எடுத்திட்டு அருமை அப்படீன்னு போட்டுக்கிட்டு போய்க் கிட்டே இருப்பாங்க.//
இது கரீட்டு... ஆரம்பம் முதலே எனக்கும் இதனால்தான் ஒற்றைவரிப் பதில் போடுவோரைப் பிடிக்காது... அபடியான பின்னூட்டங்கள் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே.. அது எனக்குப் பிடிப்பதே இல்லை, 5 பேர் வந்தாலும் ஒன்றுகூடி அலசி ஆராய்ந்து கதைப்போவதே பிடிக்கும்.
இன்னும் சிலர் இருக்கினம், ஓடிவந்து பின்னூட்டம் போடுவினம், ஆனா வந்திட்டினமே என நாம் தொடர்ந்து அவர்களின் ஒவ்வொரு பதிவுக்குப் போனாலும் வரமாட்டினம் எம்மிடம், ஆனா சரி விட்டிடலாம் என ஒதுங்கும்போது, மீண்டும் ஓடிவந்து ஒரு பின்னூட்டம் போடுவினம்... இது ஒருவகையில “பதிவுலக ரிக்ஸ் தான்:))..
@மதுரன்
நான் மேலே சொன்னவர்களும் இந்த வகைக்குள் வருவார்கள்.. ஹி ஹி
அடுத்த பகுதியில் கனபேரின் டவுசர் கிழியுமா?????????????
//
கண்டிப்பாக கிழியும் தல.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@மதுரன்
ஆரம்பத்தில இருந்து இப்பிடி ஒருத்தர் என் ப்ளாக்கிற்கும் வந்தார். எனக்கு ஆரம்பத்தில இந்த இராஜதந்திரம் புரியல்ல.. அப்புறம் விசயம் தெரிந்ததும் அவர் ப்ளாக் பக்கம் போகாம விட்டன். அவரும் விட்டுட்டார். ஹி ஹி//
ஆமா...இந்த மாதிரியான இராஜ தந்திரம் இன்னும் பலருக்கு சுத்தமாப் புரிவதே இல்லை.
நம்பி ஏமாறுறாங்க பாஸ்.
@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எட்டிப் பார்ப்பதுக்குள் அடுத்த தலைப்போ.. எனக்கு ஆராவது நிரூபனை ஒருக்கால் பிடிச்சுத் தாங்கோ... போற வழியில புண்ணியம் கிடைக்காட்டிலும் ஒரு பக்கட் கே எஃப் சி கிடைக்கும்:))
//
ஒரு பக்கேட் KFC இற்காக நிரூபனைப் பிடிக்க முடியாது. அவ்வ்வ்
எனக்கு மக்டொனால்ட் தான் வேணும்.
அதோட் ஸ்ரோபரி ஸீஸ் கேக், Rice Pudding, மற்றும், Sunday Special ஐஸ்கிரீமும் ரொம்ப பிடிக்கும்.
இவை அனைத்தும் கொடுத்தால் ஒரு வேளை நிரூபனை கைது செய்யலாம்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
இன்னும் சிலர் இருக்கினம், ஓடிவந்து பின்னூட்டம் போடுவினம், ஆனா வந்திட்டினமே என நாம் தொடர்ந்து அவர்களின் ஒவ்வொரு பதிவுக்குப் போனாலும் வரமாட்டினம் எம்மிடம், ஆனா சரி விட்டிடலாம் என ஒதுங்கும்போது, மீண்டும் ஓடிவந்து ஒரு பின்னூட்டம் போடுவினம்... இது ஒருவகையில “பதிவுலக ரிக்ஸ் தான்:))..//
ஆகா....
பூனை பதுங்கிறது கேள்விப்பட்டிருக்கேன்.
இன்னைக்குத் தான் பூனை புலியாகப் பாய்வதனைப் பார்த்திருக்கேன்.
ஆனால் அப்படியான ஆட்கள் ஏன் பின்னூட்டம் போடுறேல்லை என்பதற்கு அட்லீஸ் ஏதாச்சும் ஒரு நொண்டிச் சாட்டு என்றாலும் வைச்சிருப்பீனம் தானே;-)))
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஆனானப்பட்ட நிரூபனையே சாய்ச்சுப்புட்டாங்களே.
நிரூ...பீல் பண்ணாத..
இதெல்லாம் சகஜம் தானே உன் லைப்பில-)))))
@athira
இது கரீட்டு... ஆரம்பம் முதலே எனக்கும் இதனால்தான் ஒற்றைவரிப் பதில் போடுவோரைப் பிடிக்காது... அபடியான பின்னூட்டங்கள் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே.. அது எனக்குப் பிடிப்பதே இல்லை, 5 பேர் வந்தாலும் ஒன்றுகூடி அலசி ஆராய்ந்து கதைப்போவதே பிடிக்கும்.//
இதில இன்னும் சிலர்,
தமது வலைக்கு வரவைப்பதற்காகவே
சகோ..உங்கள் வருகைக்காக என் கருத்துப் பெட்டியும், ஓட்டுப் பட்டையும் காத்திருக்கு அப்படீன்னு அதிரா அக்காவின் பழைய பதிவுகளையும் தேடித் தேடிக் கமெண்ட் போட்டிருக்காங்க.
நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி அவதானிச்சிருக்கேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பல ராஜதந்திர டெக்னிக்குகளை இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே....?
ஆனா ஆரம்பத்துல புதுபதிவர்கள் கொஞ்சம் ஏமாந்தாலும் அப்புறம் இதுதான் டெக்னிக்குன்னு வெளங்கிக்கிட்டு, அவங்களும் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க..... அப்புறம் மொய்க்கு மொய் பரிபூரணமாகிடுது...!
@பன்னிக்குட்டி ராம்சாமி
பல ராஜதந்திர டெக்னிக்குகளை இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே....?
//
எத்தனை நாளைக்குத் தான் இவை எல்லாம் ரகசியங்கள் என்று கண்டுக்காம இருக்க முடியும் அண்ணே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நான் வெளியே கிளம்புறேன்.
ஒரு ஆறு மணி நேரம் கழிச்சு வந்து பதில் போடுறேன்.
மன்னிக்கவும். & பை பை.
முந்தையதில் தொடங்கி மொத்தமா படிச்சாச்சு.யூஸ் பண்ணிப் பாப்போம்.
அப்புறமா அந்தப் பதிவர் ஒரு இழிச்சவாயன் என்ற நெனைப்பில பதிவரோட பதிவில இருந்து ஒரு பத்து வரியினை அல்லது ஒரு பந்தியினைக் காப்பி பண்ணி அந்த வசனங்களுக்கு கீழே வாழ்த்துக்கள் அப்படீன்னு ஒரு கமெண்ட் போடுவாங்க. //////
வாழ்த்துக்கள்!
இல்லே அருமை அப்படீன்னு ஓர் கமெண்ட் போடுவாங்க. /////
அருமை!
இன்னும் சிலரோ ம்...அப்படீன்னு கமெண்ட் போடுவாங்க. //////
ம்.....!
அருமை
சூப்பரு
கலக்கல்
ம்ம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்
இதோட சேர்த்து 7 கமென்ட்
கூட ஒன்னு சேர்த்து 8 கமென்ட்டா போடணும் சொல்லிபுட்டேன் ஆமா
அருமை! வாழ்த்துக்கள்!
கத்தி
கோடாரி
அலவாங்கு
மண்வெட்டி
33 வது வடை எனக்கா?
34 வது பூரி உனக்கா?
பதிவுலக அனுபவம் கிடைச்சதும் இன்னார் இன்னார் படிக்காமதேன் கமென்டுறாங்கன்னு கண்டுபிடிச்சு அவங்க ப்ளாக்குக்கு போறதே நிறுத்திடுவேன்.
முட்டாளாக்க நினைப்பவர்களை நாமும் முட்டாளாக்க வேண்டும் :-)
சார்/ கலக்கலா எழுதியிருக்கீங்க!
இன்று என் வலையில்!
“ மூச்சு விடுவது எப்படி?”
இன்று என் வலையில்,
“ ஒரு கொசு சிக்கிக்கிச்சு”
ரஜினியின் படங்களுக்குப் பிறகு, முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றிற்கு நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் எழுதியுள்ளது. அது மாதவன்- ஆர்யா நடித்த பொங்கல் ரிலீஸான 'வேட்டை' படத்துக்கு!
இந்தப் படத்துக்கான விமர்சனத்தில், "தூத்துக்குடி என்ற கடலோர பகுதியில் நடக்கும் இந்தப் படத்தின் கதை தீயசக்தியை வேட்டையாடும் போலீஸை மையப்படுத்தி அமைந்துள்ளது. பொழுதுபோக்கு, சென்டிமென்ட், காதல், விறுவிறுப்பான சண்டைகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என ஒரு கச்சிதமான பொழுதுபோக்குப் படம்," என குறிப்பிட்டுள்ளார், விமர்சனத்தை எழுதிய ராச்செல் சால்ஸ்.
தமிழ் சினிமாவின் வீச்சு எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது. இப்படியொரு விமர்சனம் வெளியாக படத்தின் தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட பப்ளிசிட்டி உத்திகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது!
சார், இதையும் கொஞ்சம் படிங்க,
“ ஆண்கள் குறைக்க வேண்டியது - தொப்பையா? உப்பையா?”
"உலகத்தில் இந்தியா தவிர்த்து, வேறு நாட்டுப் படங்களில் டூயட் இருக்கா, சோகப்பாட்டு இருக்கா.." என்றெல்லாம் கிண்டலடித்து வந்தனர் இங்குள்ள சில விமர்சகர்கள். ஆனால் இப்போதோ, இந்த டூயட்டுகள், குத்துப்பாட்டுகளை சர்வதேச ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. அடுத்து ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய ஸ்டைல் குத்துப்பாட்டு என்று போட்டாலும் வியப்பதற்கில்லை!!
முதல் முறையாக வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த தமிழ் சினிமா விமர்சனம் ரஜினியின் 'சிவாஜி - தி பாஸ்' (அதற்கு முன் முத்து படம் பற்றி ஜப்பான் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின!). நியூயார்க் டைம்ஸ், பிபிசி, கார்டியன் என பல பத்திரிகைகள் 'சிவாஜி'யை 'அட்டகாசமான பொழுதுபோக்குப் படம்' என எழுதின.
அடுத்து இதே ரஜினியின் எந்திரன் படத்துக்கு உலகின் முக்கியப் பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்துமே விமர்சனம் எழுதின. 'இதை ஒரு இந்தியப் படம் என்று நம்பமுடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது அமெரிக்காவின் ஸ்லேட் இணைய இதழ். "புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" என்று ரஜினியை அபாரமாக வர்ணித்து இந்த பத்திரிகை எழுதிய கட்டுரையை இந்தியா டுடே அப்படியே எடுத்தாள அது பெரிய பிரச்சினையானது நினைவிருக்கலாம்!
ஆன்(ண்) லைனில் வேலை வாய்ப்பு!
அதாவது ஆன் லைனில் இருக்கும் ஆண்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு,
இதில் கிளிக்குக!
பன்னி அண்ணே, நலமா இருக்கீங்களா தலைவா?
ஆன்லைனில் கக்கூசில் இருந்தபடியே சம்பாதிப்பது எப்படி? முழு ஆதாரத்துடன்
www.dubaakkoor.com
ஹா ஹ ஹா ஹா !
அண்ணே, உங்களப் பார்த்து நானும் கூலிங் கிளாஸ் போட்டிருக்கேன்! “ அம்சமா” இருக்கா?
/////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
பன்னி அண்ணே, நலமா இருக்கீங்களா தலைவா?/////
படுவா கமெண்ட்டு போடுங்கடான்னா ரெண்டு மைல் நீளத்துக்கு எழுதி வெச்சிருக்கே? அதை படிச்சி அது பதில் எழுதுறதுக்குள்ள பவர் ஸ்டாரோட அடுத்த படமே ரிலீஸ் ஆகிடுமே?
உங்கள் பதிவு அருமை. மேலும் பல டெம்ப்ளேட் கமென்ட்களை பெற எங்கள் தளத்தில் இணைக்கவும்.
:-)
ஹா ஹா ஹா எல்லாம் ஒரு வேண்டுதல் அண்ணே!
இன்று என் வலையில்,
முக்காமல் கக்கா போவது எப்படி?
////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
ஹா ஹா ஹா எல்லாம் ஒரு வேண்டுதல் அண்ணே!/////
ங்கொக்காமக்கா.... இதுவேறயா...?
அண்ணே, இப்போ உங்க வலைக்குப் போறேன்! என்னோட 2 மைல் நீளத்துக்கு ஏதாச்சும் சூப்பரா பதில் போட்டிருப்பீங்கல்ல!
என்னது பதிலா...... அடுத்த வருசம், இதே நாளு, இதே கெழம வந்து பாரு.....
என்னது பதிலா...... அடுத்த வருசம், இதே நாளு, இதே கெழம வந்து பாரு.....://////
அண்ணே, அந்தளவுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லீங்கண்ணா! எனக்கு இப்பவே வேணும்! நான் உங்க பதிலைச் சொன்னேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்!
@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எட்டிப் பார்ப்பதுக்குள் அடுத்த தலைப்போ.. எனக்கு ஆராவது நிரூபனை ஒருக்கால் பிடிச்சுத் தாங்கோ...//////
ஒரு காலைப் புடிச்சு இழுத்தா, அவன் வரமாட்டான்! ரெண்டு காலையும் புடிச்சு இழுக்கணும் ஆதிரா!
ஒரு பத்து வரியினை அல்லது ஒரு பந்தியினைக் காப்பி பண்ணி அந்த வசனங்களுக்கு கீழே//
வாழ்த்துக்கள்.அருமை.ம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்!
अनुच्छेद कॉकटेल
మంచి
bonne
நன்று...........
ஹஹஹ...எல்லா மொழிக்கும் பொருந்தும் பதிவு காதுல பூ சுத்துகிற பதிவர்களா...?அறிமுகப்படுத்திறிங்களா........படுத்துங்க..படுத்துங்க.....
ஹா.ஹா.ஹா.ஹா. பலரின் டவுசர் கிழியுது போல..
நானும் பதிவுலகம் வந்த புதுசில் இப்படியான மேட்டர்களில் சிக்க முதல் ஒரு பதிவரின் ஆலோசனைகளின் பெயரில் இப்படியான பதிவுலக ராஜதந்திரங்களை சீக்கிரம் கற்றுக்கொண்டேன்.அவ்வ்வ்வ்வ்வ்
அனேகமாக பதிவுலகில் இருக்கும் பிரபல பதிவர்கள் எல்லோறுக்கும் தெரிந்த மேட்டர்கள் தான் இவை இதை நீங்கள் சொல்வதால் பல புதிய பதிவர்களுக்கு நிச்சயம் பயன் படும்..
நிருபன் பதிவுலக கலாச்சாரம் பத்தி கரெக்டா புரிஞ்சு வஞ்சிருக்க,எனக்கு ஐடியா மணி கமெண்ட் அஹ பாத்ததும் சிரிப்பு தான் வந்தது, அப்பறம் நிருபன் பதிவு இடும் நாளும் தேதியும் இருக்கிற ஸ்டைல் அஹ கொஞ்சம் மாத்தலாமே நிருபன்...சரியா தெரிய மாட்டிங்குது ஹி ஹி...
ஹிந்தி...,தெலுங்கு..,பிரஞ்சு..இவனுக்கு இத்தனை மொழி தெரியுமா..?பெரிய அப்பாடக்கர்ன்னு நினைச்சுக்காதிங்க உபயம் : Google Translate இதுக்கு பெயர்தான் காதுல பூ சுத்துவது என்பது என் பெயரை கண்டிப்பாக அறிமுகப்படுத்தவும்!
;-) !!
:-( ;-(!!
சில பதிவுகள் மிகவும் நுணுக்கத்தோடுகஷ்டப்பட்டு எழுதியிருப்பாங்க
அதற்க்கான அங்கீகாரமா முழுதையும் படித்து பின்னூட்டமிட்டா எழுதினவங்களுக்கு சந்தோஷமா இருக்குமே .
பிரச்சினையான வில்லங்கமான சப்ஜெக்டா இருந்தா நான் எட்டி பார்த்துட்டு
ஓடி போய்டுவேன் .
Indli 6
thamaizh10 5
+ 4
இன்னும் பல விடயங்களை சொல்லுங்கள். நமக்கு ரொம்ப யூஸ் ஆகும் போல தெரியுது.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
அப்படியே இந்த இங்கிலீசு பட விமர்சனங்களுக்கு எவ்வாறு சூடா தலைப்பு வைக்கலாம்ணும் சொல்லிருங்க.
வணக்கம் நண்பா பதிவுலகையும் பதிவர்களையும் (ஒரு சில) தார் தாரஆ கிளுசிட்டிங்க ! அடுத்த பதிவை எதிர் பார்த்து
//ஒரு பதிவரோட பதிவிலை 25 பேர் கருத்துப் போட்டிருக்காங்க என்றால் 26ம் நபரா இந்தப் பதிவர் வந்து மேலே உள்ள பந்தியினையோ அல்லது அந்தப் பதிவின் கீழ் உள்ள பின்னூட்டத்தில் ஏதாச்சும் ஒன்றினையோ காப்பி பண்ணி கமெண்டாக வாந்தி எடுத்திட்டு அருமை அப்படீன்னு போட்டுக்கிட்டு போய்க் கிட்டே இருப்பாங்க.//
ஹா..ஹா... சில இடங்களில் பார்த்திருக்கிறேன் ..என்ன பதிவுன்னு தெரியாமலேயே கமெண்ட் இருக்கும் .. :-))
அடக் கடவுளே என்னாச்சு இண்டைக்கு எல்லோருக்கும்....:))..
போன தலைப்பில எங்களோட மோதி, கிழிஞ்சுபோனதில ஐ மீன்.. மிகமூடியைச் சொன்னேன்:))... மேன்மைமிகு ஐடியா பெல்லுக்கு ஏதும் ஆகியிருக்கலாம்.. ஆனா ஆமினா, அஞ்சு, இடையில காட்டான் அண்ணனுக்கும் என்ன ஆச்சு?:))... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இத்தனையும் பார்த்த பிறகு என் கை சும்மா இருக்குமோ.. அதிரா.. ரெடி ஸ்ரெடி ஸ்ராட்....
இத்தோட நிரூபன் ஓடிவந்து புதுத்தலைப்புப் போடுவார்.. அவ்வ்வ்வ்வ்:)))...
எச்சூஸ்மி.. நிரூபனை ஒருக்கால் ஆராவது பிடிச்சுத் தருவியளோ?:)))
// ஜெய்லானி said...

ஹா..ஹா... சில இடங்களில் பார்த்திருக்கிறேன் ..என்ன பதிவுன்னு தெரியாமலேயே கமெண்ட் இருக்கும் .. :-)//
எல்லோருக்குமே..
அருமை..
கலக்கிட்டீங்க...
சூப்பர்....
இப்பூடியே இருக்கும்... இனியும் ஆராவது இப்பூடிச் சொல்லுவினமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))...
பதிவுலக ரகசியங்கள் எல்லாம் வெளிய வந்திருச்சே ...
இன்னொரு ஸ்டைல்:).... இதை எழுதாட்டில் எனக்கு மண்டையே வெடிச்சிடும்:)).
சிலபேர் ஒழுங்கா பதிவெல்லாம் படிப்பினம், ஆனா எதுக்காக எங்கட நேரத்தையும், கிட்னியையும் வேஸ்ட் பண்ணோனும் என.. பின்னூட்டம் போட மாட்டினம்..
ஆனா அவங்கட தலைப்பு வெளிவர 5 நிமிடத்துக்கு முன்பு, ஓடி ஓடி அப்போதிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டம் போடுவினம்...
அப்படி சிலரின் பின்னூட்டத்தைப் பார்த்ததுமே புரிஞ்சிடும், ஆஹா புதுத் தலைப்பு வரப்போகுதென... சொல்லி வச்சதுபோல டாண் என வரும்... யானை வரும் பின்னே மணியோசை.. முன்னே:)).
அது முடிந்ததும் மீண்டும் தலையை உள்ளே இழுத்துப்போடுவினம்...:))
// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எட்டிப் பார்ப்பதுக்குள் அடுத்த தலைப்போ.. எனக்கு ஆராவது நிரூபனை ஒருக்கால் பிடிச்சுத் தாங்கோ...//////
ஒரு காலைப் புடிச்சு இழுத்தா, அவன் வரமாட்டான்! ரெண்டு காலையும் புடிச்சு இழுக்கணும் ஆதிரா!//
சே..சே.. ஒரு குட்டிக் கல்லெடுத்து எறிஞ்சாலே வந்திடுவார்... அதைவிட்டுப் போட்டு எதுக்கு:))..
//ஒரு பக்கேட் KFC இற்காக நிரூபனைப் பிடிக்க முடியாது. அவ்வ்வ்
எனக்கு மக்டொனால்ட் தான் வேணும்.
அதோட் ஸ்ரோபரி ஸீஸ் கேக், Rice Pudding, மற்றும், Sunday Special ஐஸ்கிரீமும் ரொம்ப பிடிக்கும்.
இவை அனைத்தும் கொடுத்தால் ஒரு வேளை நிரூபனை கைது செய்யலாம்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ரொம்ம்ம்ம்ம்ம்பச் சீப்பா இருக்கே:)).. இது வேற சீப்:))
//
சே..சே.. ஒரு குட்டிக் கல்லெடுத்து எறிஞ்சாலே வந்திடுவார்... அதைவிட்டுப் போட்டு எதுக்கு:)).. //
என்னது குட்டி ,...கல்லெடுத்து எறிஞ்சாலே போதுமா.??? வில்லங்கமா இருக்கே அவ்வ்வ்வ் :-))))
//ஆனா அவங்கட தலைப்பு வெளிவர 5 நிமிடத்துக்கு முன்பு, ஓடி ஓடி அப்போதிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டம் போடுவினம்...
அப்படி சிலரின் பின்னூட்டத்தைப் பார்த்ததுமே புரிஞ்சிடும், ஆஹா புதுத் தலைப்பு வரப்போகுதென... சொல்லி வச்சதுபோல டாண் என வரும்... யானை வரும் பின்னே மணியோசை.. முன்னே:)).
அது முடிந்ததும் மீண்டும் தலையை உள்ளே இழுத்துப்போடுவினம்...:))//
1000 % சரிதான் :-)))
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆனா ஆரம்பத்துல புதுபதிவர்கள் கொஞ்சம் ஏமாந்தாலும் அப்புறம் இதுதான் டெக்னிக்குன்னு வெளங்கிக்கிட்டு, அவங்களும் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க..... அப்புறம் மொய்க்கு மொய் பரிபூரணமாகிடுது...!//
அண்ணே, எப்படியாச்சும் இந்த டெக்னிக்கை உடைக்கனும்.
அதற்கான முன்னேற்பாடுகளுடன் தான் அடுத்தடுத்த பதிவுகள் வரவிருக்கிறது.
@சுவடுகள்
முந்தையதில் தொடங்கி மொத்தமா படிச்சாச்சு.யூஸ் பண்ணிப் பாப்போம்.
//
அடப் பாவி..;இப்படியான ஐடியாக்கள் இனிமே செல்லாது என்பதற்காகத் தான் இந்தப் பதிவினையே போட்டிருக்கேன்.
நீங்க யூஸ் பண்னிப் பார்க்கப் போறீங்களோ;-)))
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
வாழ்த்துக்கள்!
//
congratulation
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
இல்லே அருமை அப்படீன்னு ஓர் கமெண்ட் போடுவாங்க. /////
அருமை!//
Super, Or
Really Great.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
இன்னும் சிலரோ ம்...அப்படீன்னு கமெண்ட் போடுவாங்க. //////
ம்.....!//
mm, Lol
@ஆமினா
அருமை
//
wow.
@ஆமினா
சூப்பரு
//
உங்கள் கருத்துக்கள் என்னைப் போன்ற புதியவர்களை மேலும் எழுதத் தூண்டுகின்றது.
நன்றி.
@ஆமினா
கலக்கல்
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்தும் உங்களின் வருகையினை எதிர்பார்க்கிறேன்.
@ஆமினா
வாழ்த்துக்கள்
//
நெசமாவா சொல்லுறீங்க.
இப்படித் தான் 1948 இலையும் சொன்னாங்க.
@ஆமினா
ம்ம்
//
என்னது உம்மாண்டி வாறாங்களா?
மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
@ஆமினா
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
என்னது உங்க வீட்டு நாய்க் குட்டி ரொம்ப குலைக்குதா?
@ஆமினா
இதோட சேர்த்து 7 கமென்ட்
கூட ஒன்னு சேர்த்து 8 கமென்ட்டா போடணும் சொல்லிபுட்டேன் ஆமா
//
ரொம்ப நன்றிங்க.
உங்க பின்னூட்டங்கள் என்னை ரொம்பவும் உற்சாகப்படுத்துகிறது.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
அருமை! வாழ்த்துக்கள்!
//
நன்றி.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
கத்தி
//
கடப்பாரை
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
கோடாரி
//
சுத்தியல்
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
அலவாங்கு
//
நீ ஒரு தேவாங்கு
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மண்வெட்டி
//
என்னது நீ ஒரு மண்ணாங்கட்டியா;-)))
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
33 வது வடை எனக்கா?
//
உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற பிகருக்கு
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி34 வது பூரி உனக்கா?
//
அதுவும் எனக்கே.
@ஆமினா
பதிவுலக அனுபவம் கிடைச்சதும் இன்னார் இன்னார் படிக்காமதேன் கமென்டுறாங்கன்னு கண்டுபிடிச்சு அவங்க ப்ளாக்குக்கு போறதே நிறுத்திடுவேன்.
முட்டாளாக்க நினைப்பவர்களை நாமும் முட்டாளாக்க வேண்டும் :-)
//
இப்பத் தான் உங்களுக்கு நெசமாவே ஞானம் வெளிச்சிருக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
சார்/ கலக்கலா எழுதியிருக்கீங்க!
//
ரொம்ப நன்றிங்க.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
இன்று என் வலையில்!
“ மூச்சு விடுவது எப்படி?”
//
என்னது மூச்சா விடுவது எப்படியா?
என்ன சார் வீடியோ பதிவா போடுறீங்களா?
@பன்னிக்குட்டி ராம்சாமி
ரஜினியின் படங்களுக்குப் பிறகு, முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றிற்கு நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் எழுதியுள்ளது. அது மாதவன்- ஆர்யா நடித்த பொங்கல் ரிலீஸான 'வேட்டை' படத்துக்கு!
இந்தப் படத்துக்கான விமர்சனத்தில், "தூத்துக்குடி என்ற கடலோர பகுதியில் நடக்கும் இந்தப் படத்தின் கதை தீயசக்தியை வேட்டையாடும் போலீஸை மையப்படுத்தி அமைந்துள்ளது. பொழுதுபோக்கு, சென்டிமென்ட், காதல், விறுவிறுப்பான சண்டைகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என ஒரு கச்சிதமான பொழுதுபோக்குப் படம்," என குறிப்பிட்டுள்ளார், விமர்சனத்தை எழுதிய ராச்செல் சால்ஸ்.//
After the film, one of the first Tamil film to be written in the New York Times review. It Madhavan - Shruthi new film release 'hunting' for the film!
This for a review, "Business in the coastal area of this film demon hunter the police focused on use. Recreation, centiment, romantic, interesting fights, dancing and put to music a perfect entertaining film," he noted, reviews written by Rachel cals.
@பன்னிக்குட்டி ராம்சாமி
தமிழ் சினிமாவின் வீச்சு எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது. இப்படியொரு விமர்சனம் வெளியாக படத்தின் தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட பப்ளிசிட்டி உத்திகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது!
//
Tamil cinema has risen to the level of the amplitude can be seen as an example. Review undertaken by the producers of the film techniques such publicity is a reason!
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
சார், இதையும் கொஞ்சம் படிங்க,
“ ஆண்கள் குறைக்க வேண்டியது - தொப்பையா? உப்பையா?”
//
ஹையோ..ஹையோ..
என்னது மப்பையா?
@பன்னிக்குட்டி ராம்சாமி
உலகத்தில் இந்தியா தவிர்த்து, வேறு நாட்டுப் படங்களில் டூயட் இருக்கா, சோகப்பாட்டு இருக்கா.." என்றெல்லாம் கிண்டலடித்து வந்தனர் இங்குள்ள சில விமர்சகர்கள். ஆனால் இப்போதோ, இந்த டூயட்டுகள், குத்துப்பாட்டுகளை சர்வதேச ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. அடுத்து ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய ஸ்டைல் குத்துப்பாட்டு என்று போட்டாலும் வியப்பதற்கில்லை!!
In the world of India, excluding any other country in the films message is, cokappattu there .. "dealt kintalatittu arrived here a few critics. But now, the tuyattukal, குத்துப்பாட்டுகளை international fans prefer watching that proved it. Next, something of a Hollywood film in Indian style kuttuppattu the boats viyappatarkillai!
@பன்னிக்குட்டி ராம்சாமி
முதல் முறையாக வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த தமிழ் சினிமா விமர்சனம் ரஜினியின் 'சிவாஜி - தி பாஸ்' (அதற்கு முன் முத்து படம் பற்றி ஜப்பான் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின!). நியூயார்க் டைம்ஸ், பிபிசி, கார்டியன் என பல பத்திரிகைகள் 'சிவாஜி'யை 'அட்டகாசமான பொழுதுபோக்குப் படம்' என எழுதின.
//
For the first time in the foreign press criticism of the Tamil cinema Rajnikanth's 'Sivaji - The Boss' (the front page of newspapers in Japan, wrote about a pearl). The New York Times, BBC, the Guardian newspaper as' Sivaji 'to' brilliant film entertainment that direction.
@பன்னிக்குட்டி ராம்சாமி
அடுத்து இதே ரஜினியின் எந்திரன் படத்துக்கு உலகின் முக்கியப் பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்துமே விமர்சனம் எழுதின. 'இதை ஒரு இந்தியப் படம் என்று நம்பமுடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது அமெரிக்காவின் ஸ்லேட் இணைய இதழ். "புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" என்று ரஜினியை அபாரமாக வர்ணித்து இந்த பத்திரிகை எழுதிய கட்டுரையை இந்தியா டுடே அப்படியே எடுத்தாள அது பெரிய பிரச்சினையானது நினைவிருக்கலாம்!
//
TV film of the same film after the world's leading magazines, websites weighed all the criticism. 'I do not believe that an Indian film' claims that the online magazine Slate. "Tiger's one of the major storm, earthquake, married and born to him 'Your' Probably," the magazine wrote this article in India Today that dream project etuttala varnittu great as it may remember the big issue!
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
ஆன்(ண்) லைனில் வேலை வாய்ப்பு!
அதாவது ஆன் லைனில் இருக்கும் ஆண்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு,
இதில் கிளிக்குக!//
you mean straight forward.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
பன்னி அண்ணே, நலமா இருக்கீங்களா தலைவா?
//
அவரோட நலத்திற்கு என்ன குறைச்சல்?
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆன்லைனில் கக்கூசில் இருந்தபடியே சம்பாதிப்பது எப்படி? முழு ஆதாரத்துடன்
www.dubaakkoor.com//
ஹையோ....ஹையோ.....
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
ஹா ஹ ஹா ஹா !
//
ஹே...ஹே...ஹே...
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
அண்ணே, உங்களப் பார்த்து நானும் கூலிங் கிளாஸ் போட்டிருக்கேன்! “ அம்சமா” இருக்கா?
//
என்னது அம்சா போல இருக்கிறியோ என்று கேட்கிறாயா?
அட மூதேவி...மூஞ்சியைப் பாரு.
@பன்னிக்குட்டி ராம்சாமி
படுவா கமெண்ட்டு போடுங்கடான்னா ரெண்டு மைல் நீளத்துக்கு எழுதி வெச்சிருக்கே? அதை படிச்சி அது பதில் எழுதுறதுக்குள்ள பவர் ஸ்டாரோட அடுத்த படமே ரிலீஸ் ஆகிடுமே?
//
ஆச்சுவலி அது ஒரு ரீமேக் கமெண்டு.
@ஆமினா
உங்கள் பதிவு அருமை. மேலும் பல டெம்ப்ளேட் கமென்ட்களை பெற எங்கள் தளத்தில் இணைக்கவும்.
:-)//
இணைச்சிட்டாப் போச்சு/
@ஆமினா
உங்கள் பதிவு அருமை. மேலும் பல டெம்ப்ளேட் கமென்ட்களை பெற எங்கள் தளத்தில் இணைக்கவும்.
:-)//
இணைச்சிட்டாப் போச்சு/
@ரெவெரி
ஒரு பத்து வரியினை அல்லது ஒரு பந்தியினைக் காப்பி பண்ணி அந்த வசனங்களுக்கு கீழே//
வாழ்த்துக்கள்.அருமை.ம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்!//
சிலர் எப்படித் தான் சொன்னாலும் திருந்த மாட்டாங்க இல்லே..
@veedu
अनुच्छेद कॉकटेल
//
அட்ரா...அட்ரா....
@veedu
మంచి
//
ஏ...இந்தா...
@veedu
நன்று...........
ஹஹஹ...எல்லா மொழிக்கும் பொருந்தும் பதிவு காதுல பூ சுத்துகிற பதிவர்களா...?அறிமுகப்படுத்திறிங்களா........படுத்துங்க..படுத்துங்க.....
//
அறிமுகப்படுத்திட்டாப் போச்சு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
@குட்டிப்பையன்
ஹா.ஹா.ஹா.ஹா. பலரின் டவுசர் கிழியுது போல..
நானும் பதிவுலகம் வந்த புதுசில் இப்படியான மேட்டர்களில் சிக்க முதல் ஒரு பதிவரின் ஆலோசனைகளின் பெயரில் இப்படியான பதிவுலக ராஜதந்திரங்களை சீக்கிரம் கற்றுக்கொண்டேன்.அவ்வ்வ்வ்வ்வ்
அனேகமாக பதிவுலகில் இருக்கும் பிரபல பதிவர்கள் எல்லோறுக்கும் தெரிந்த மேட்டர்கள் தான் இவை இதை நீங்கள் சொல்வதால் பல புதிய பதிவர்களுக்கு நிச்சயம் பயன் படும்..
Ja//
நெசமாத் தான் சொல்லுறீங்களோ..
அனுபவம் புதுவை...அவளிடம் கண்டேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ரேவா
நிருபன் பதிவுலக கலாச்சாரம் பத்தி கரெக்டா புரிஞ்சு வஞ்சிருக்க,எனக்கு ஐடியா மணி கமெண்ட் அஹ பாத்ததும் சிரிப்பு தான் வந்தது, அப்பறம் நிருபன் பதிவு இடும் நாளும் தேதியும் இருக்கிற ஸ்டைல் அஹ கொஞ்சம் மாத்தலாமே நிருபன்...சரியா தெரிய மாட்டிங்குது ஹி ஹி...
//
இதோ...மாத்துகிறேன்..
நேயர் விருப்பம் உடனே நிறைவேறட்டும்.
@veedu
ஹிந்தி...,தெலுங்கு..,பிரஞ்சு..இவனுக்கு இத்தனை மொழி தெரியுமா..?பெரிய அப்பாடக்கர்ன்னு நினைச்சுக்காதிங்க உபயம் : Google Translate இதுக்கு பெயர்தான் காதுல பூ சுத்துவது என்பது என் பெயரை கண்டிப்பாக அறிமுகப்படுத்தவும்!
//
கண்டிப்பா உங்க பெயரை அறிமுகப்படுத்துறேனுங்க.
@காட்டான்
;-) !!
//
@##$$*$**$
@காட்டான்
:-( ;-(!!
//
@**#*#*#*#*#*##*
@angelin
.....
//
{}{}{}{}{}{}{}{
@angelin
???
//
<><><><><><><><><><><<
@angelin
:)))))
//
((((((((((((((((((((
@angelin
Good Post
//
Thanks for your awesome comment
@angelin
Good Post
//
Thanks for your awesome comment
@angelin
சில பதிவுகள் மிகவும் நுணுக்கத்தோடுகஷ்டப்பட்டு எழுதியிருப்பாங்க
அதற்க்கான அங்கீகாரமா முழுதையும் படித்து பின்னூட்டமிட்டா எழுதினவங்களுக்கு சந்தோஷமா இருக்குமே .
பிரச்சினையான வில்லங்கமான சப்ஜெக்டா இருந்தா நான் எட்டி பார்த்துட்டு
ஓடி போய்டுவேன் .//
நீங்க சொல்வது கரெக்டு தான் அக்கா.
ஆனால் எல்லோரும் அப்படி நடந்து கொள்வதில்லையே.
@angelin
Indli 6
thamaizh10 5
+ 4//
Thank you very much
@ஹாலிவுட்ரசிகன்
இன்னும் பல விடயங்களை சொல்லுங்கள். நமக்கு ரொம்ப யூஸ் ஆகும் போல தெரியுது.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
//
கண்டிப்பாகச் சொல்லுறேனுங்க.
உங்களினதும், குமரனினதும் விருப்பத் தெரிவாகத் தான் இந்தப் பதிவு வந்து கொண்டிருக்கிறது.
@ஹாலிவுட்ரசிகன்
அப்படியே இந்த இங்கிலீசு பட விமர்சனங்களுக்கு எவ்வாறு சூடா தலைப்பு வைக்கலாம்ணும் சொல்லிருங்க.//
அது படத்தில தங்கியிருக்கு தல.
@கோவிந்தராஜ்,மதுரை.
வணக்கம் நண்பா பதிவுலகையும் பதிவர்களையும் (ஒரு சில) தார் தாரஆ கிளுசிட்டிங்க ! அடுத்த பதிவை எதிர் பார்த்து//
நன்றி நண்பா.
இனித் தான் மெயின் பிக்ஸரே இருக்கு.
இது சும்மா ட்ரெயிலர் தான்.
@ஜெய்லானி
ஹா..ஹா... சில இடங்களில் பார்த்திருக்கிறேன் ..என்ன பதிவுன்னு தெரியாமலேயே கமெண்ட் இருக்கும் .. :-))
//
இப்படியும் பலர் இருக்காங்கோ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
அடக் கடவுளே என்னாச்சு இண்டைக்கு எல்லோருக்கும்....:))..
//
இன்னைக்கு பௌர்ணமி என்று சொல்லுறாங்க.
அதனால இப்படி கமெண்ட் மேல கமெண்ட் போட்டிருப்பாங்களோ;-))))
@athira
போன தலைப்பில எங்களோட மோதி, கிழிஞ்சுபோனதில ஐ மீன்.. மிகமூடியைச் சொன்னேன்:))... மேன்மைமிகு ஐடியா பெல்லுக்கு ஏதும் ஆகியிருக்கலாம்.. ஆனா ஆமினா, அஞ்சு, இடையில காட்டான் அண்ணனுக்கும் என்ன ஆச்சு?:))... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இத்தனையும் பார்த்த பிறகு என் கை சும்மா இருக்குமோ.. அதிரா.. ரெடி ஸ்ரெடி ஸ்ராட்....
இத்தோட நிரூபன் ஓடிவந்து புதுத்தலைப்புப் போடுவார்.. அவ்வ்வ்வ்வ்:)))...
எச்சூஸ்மி.. நிரூபனை ஒருக்கால் ஆராவது பிடிச்சுத் தருவியளோ?:)))
//
ஹே...ஹே..
நிரூபனைப் பிடிக்கத் தான் சிகப்பு சால்வை அங்கிளின் பச்சை உடைக்காரரும் அலைகிறார்கள் என நினைக்கிறேன்.
அவங்களோட பேசினீங்க என்றா கண்டிப்பா புடிச்சு கொடுத்திடுவாங்க.
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@athira
போன தலைப்பில எங்களோட மோதி, கிழிஞ்சுபோனதில ஐ மீன்.. மிகமூடியைச் சொன்னேன்:))... மேன்மைமிகு ஐடியா பெல்லுக்கு ஏதும் ஆகியிருக்கலாம்.. //
அவருக்கு இன்னைக்கு பறுவம் தானே..
அதனால ஏதும் ஆகியிருக்கலாம்.
@athira
ஹா..ஹா... சில இடங்களில் பார்த்திருக்கிறேன் ..என்ன பதிவுன்னு தெரியாமலேயே கமெண்ட் இருக்கும் .. :-)//
எல்லோருக்குமே..
அருமை..
கலக்கிட்டீங்க...
சூப்பர்....
இப்பூடியே இருக்கும்... இனியும் ஆராவது இப்பூடிச் சொல்லுவினமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))...
//
இனிமே இப்படி யாரும் சொல்லக் கூடாது என்று தான் இந்தப் பதிவினை எழுதியிருக்கேன்.
ஆனால் அடுத்த பதிவு இப் பதிவினை விட ரொம்ப காரமா இருக்கும்.
அவ்
@athira
சிலபேர் ஒழுங்கா பதிவெல்லாம் படிப்பினம், ஆனா எதுக்காக எங்கட நேரத்தையும், கிட்னியையும் வேஸ்ட் பண்ணோனும் என.. பின்னூட்டம் போட மாட்டினம்..
ஆனா அவங்கட தலைப்பு வெளிவர 5 நிமிடத்துக்கு முன்பு, ஓடி ஓடி அப்போதிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டம் போடுவினம்...
//
நானும் இப்படியானவர்களைப் பார்த்திருக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira
அப்படி சிலரின் பின்னூட்டத்தைப் பார்த்ததுமே புரிஞ்சிடும், ஆஹா புதுத் தலைப்பு வரப்போகுதென... சொல்லி வச்சதுபோல டாண் என வரும்... யானை வரும் பின்னே மணியோசை.. முன்னே:)).
அது முடிந்ததும் மீண்டும் தலையை உள்ளே இழுத்துப்போடுவினம்...:))
//
அடடா, இந்த ஐடியா எனக்கு நினைவிற்கு வராமற் போச்சே....
@கோவை நேரம்
பதிவுலக ரகசியங்கள் எல்லாம் வெளிய வந்திருச்சே ...
//
நெசமாவா சொல்லுறீங்க.
நாம இங்கே இரண்டாம் உலக மகா யுத்தத்தினைப் பற்றியல்லவா பேசிக் கொண்டிருக்கோம்.
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@athira
இவை அனைத்தும் கொடுத்தால் ஒரு வேளை நிரூபனை கைது செய்யலாம்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ரொம்ம்ம்ம்ம்ம்பச் சீப்பா இருக்கே:)).. இது வேற சீப்:))
//
இது ரொம்ப நக்கலு,
இம்புட்டும் கொடுத்தாலும் என்னை இலகுவில் பிடிக்க முடியாது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ஜெய்லானி
//
சே..சே.. ஒரு குட்டிக் கல்லெடுத்து எறிஞ்சாலே வந்திடுவார்... அதைவிட்டுப் போட்டு எதுக்கு:)).. //
என்னது குட்டி ,...கல்லெடுத்து எறிஞ்சாலே போதுமா.??? வில்லங்கமா இருக்கே அவ்வ்வ்வ் :-))))
//
அடப் பாவிங்களா..
எல்லோரும் ஒரு மார்க்கமாத் தான் கெளம்பியிருக்காங்க. இல்லே...
கல்லுத் தான் எறியுறீங்க என்றாலும் பார்த்து எறியுங்க.
கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லு எறிஞ்சிடாதீங்கோ
நேற்றிரவு நானும் இதுவரை எனக்கு வந்திருந்த கமெண்டுகளை பின்னோக்கி சென்று பார்த்தேன்...
டெம்ப்ளேட் கமெண்டுகள் எது என்று கண்டுபிடிக்கும் சூட்சுமம் எனக்கும் கொஞ்சம் தெரிந்துவிட்டது...
நான் உங்களுடைய 'பதிவுலகை தாக்கும் வைரஸ்' பதிவினை படித்தது முதல் இதுபோல பல பதிவுலக இரகசியங்களை கவனிக்க தொடங்கியுள்ளேன்...
படிக்காத பதிவுகளில் பின்னூட்டம் எழுதியதில்லை..ஆனால் நான் என் தளத்திற்கான இணைப்பினை பலரின் பதிவுகளில் வழங்கியுள்ளேன்...அப்போதெல்லாம் மூத்த பதிவர்களால் என்னுடைய பின்னூட்டங்களும் இவ்வாறே பார்வையிட பட்டிருக்கும் என்றே நினைக்கிறன்..சிரித்துகொள்கிறேன்..
புதிய பதிவர்களுக்கான தங்களின் விழிப்புணர்வு பதிவுகள் அருமை...தொடருங்கள்...
\\@ரேவா
நிருபன் பதிவுலக கலாச்சாரம் பத்தி கரெக்டா புரிஞ்சு வஞ்சிருக்க,எனக்கு ஐடியா மணி கமெண்ட் அஹ பாத்ததும் சிரிப்பு தான் வந்தது, அப்பறம் நிருபன் பதிவு இடும் நாளும் தேதியும் இருக்கிற ஸ்டைல் அஹ கொஞ்சம் மாத்தலாமே நிருபன்...சரியா தெரிய மாட்டிங்குது ஹி ஹி...
//
இதோ...மாத்துகிறேன்..
நேயர் விருப்பம் உடனே நிறைவேறட்டும்.\\
இன்னும் மாற்ற வில்லையே...ஹி ஹி ...
நேற்று தங்களின் விமர்சனத்திற்கு பிறகு நானும் வலையில் மாற்றங்கள் செய்தலாகிவிட்டது...
மாப்ளே, இந்த பதிவை நான் படிக்க உன் தலைப்பு தான் சுண்டி இழுத்துச்சு... ஹி..ஹி...
நிரூபன்....
“இதுவும் கடந்து போகும்”.
@athira
நிரூபன்....
“இதுவும் கடந்து போகும்”.//
அக்கா மீ பாவம்,
எனக்கு இந்த அர்த்தம் என்ன என்று புரியலை?
உங்க ப்ளாக்கிற்கு ஓடி வாங்க....
@மயிலன்
அப்போதெல்லாம் மூத்த பதிவர்களால் என்னுடைய பின்னூட்டங்களும் இவ்வாறே பார்வையிட பட்டிருக்கும் என்றே நினைக்கிறன்..சிரித்துகொள்கிறேன்..
புதிய பதிவர்களுக்கான தங்களின் விழிப்புணர்வு பதிவுகள் அருமை...தொடருங்கள்...//
நண்பா, இங்கே யாருமே மூத்த பதிவர் அப்படீன்னு இல்லை.
நம்ம சிபி செந்தில்குமாரிடம் போய்,
அவரோட வயசை குறைச்சு சொல்லிப் பாருங்க.
ரொம்ப கடுப்பாயிடுவாரு.
ஸோ..எல்லோருமே யூத்து தான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
உங்கள் அன்பிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.
@மயிலன்
இதோ...மாத்துகிறேன்..
நேயர் விருப்பம் உடனே நிறைவேறட்டும்.\\
இன்னும் மாற்ற வில்லையே...ஹி ஹி ...
நேற்று தங்களின் விமர்சனத்திற்கு பிறகு நானும் வலையில் மாற்றங்கள் செய்தலாகிவிட்டது...
//
நண்பா, இப்பொழுது மாற்றி விட்டேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, இந்த பதிவை நான் படிக்க உன் தலைப்பு தான் சுண்டி இழுத்துச்சு... ஹி..ஹி...
//
நெசமாவா சொல்லுறீங்க.
ரொம்ப நன்றி நண்பா.
@athira
நிரூபன்....
“இதுவும் கடந்து போகும்”.//
என்னம்மோ...பூனைப் பாசையில சொல்லியிருக்கிறீங்க.
எனக்கு ஒன்னுமே புரியலை
நிரூ....உங்களிட்ட பதிவுலகம் பற்றி நிறையக் கதைக்கக் கிடக்கு.ஆறுதலா ஒருக்கா போன் எடுங்கோ.நானும்தான் முக்கி முக்கி கவிதை எழுதுறன் !
கால்பந்து விளையாட்டுல same side goal என்று ஒன்று உண்டு. அதை இப்போதுதான் பார்க்கிறேன்.
நண்பர் மதுரனின் முதலாவதான கருத்து தான் என்னுடையதும்..
Post a Comment