பொங்கல் பொங்கப் போறவங்க,பொங்கல் பொங்காது தைத் திருநாளை அனுபவிக்கப் போறவங்க; மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும் உரித்தாகட்டும்!
உங்கள் நாற்று வலைப் பதிவில் "ஒத்தப் பதிவில் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி? எனும் தொடர் வாயிலாக பதிவு எழுதும் போது பதிவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இப் பதிவின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகம் இன்றைய பொங்கல் திரு நாளில் உங்களை நாடி வருகின்றது.
இன்றைய பதிவில் நாம படிக்கவிருக்கும் விடயம் ரொம்ப ரொம்ப முக்கியமான விடயமுங்க. பதிவெழுதுவதற்கான கருப் பொருளை எப்படித் தேர்வு செய்வது எனும் விடயமே, இன்றைய தினம் இப் பதிவினூடாகப் படிக்கப் போகின்றோம். கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருந்து யோசித்தால் பதிவெழுத நல்ல மேட்டர் கிடைக்கும் என யாராவது நினைத்தால் அந்த எண்ணத்தினை உடனடியாகத் தூக்கி எறியுங்க.கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து யோசித்து சினிமா விமர்சனம், அரசியல்,விளையாட்டுப் பதிவுகளை எழுதுவது சாத்தியமான மேட்டருங்க. ஆனால் ரொம்ப சூப்பரான பதிவு எழுதனும் என்றால்,நீங்க ஓய்வாக இருக்கிற நேரத்தில சிந்திக்கனுமுங்க.
அதாவது நீங்க ஆப்பிஸில் ஒர்க் பண்ணும் போதோ அல்லது நீங்க வண்டியில பிரயாணம் செய்யும் போது, இல்லேன்னா நீங்க ஓய்வாக எங்கேயாச்சும் காலாற நடந்து போகும் போது உங்களின் மனதினுள் உள்ள கற்பனைக் குதிரை ஓடத் தொடங்குமுங்க. அப்படிக் கற்பனைக் குதிரை ஓடும் போது சில நல்ல விடயங்கள் உங்கள் மனதில் தோன்றுமுங்க. இல்லேன்னா நீங்கள் உங்கள் கண் முன்னே சில விடயங்களைக் காணும் வாய்ப்புக்களும் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் சட்டு புட்டென்று கம்பியூட்டரை ஆன் செஞ்சு எழுத ஆரம்பிக்க கூடாதுங்க. மனசில இன்னைக்குப் பார்த்த மேட்டரை எப்படி விரிவாக + வாசகர்கள் ரசிக்கும் வண்ணம் விளக்கமாக எழுதலாம் என்று நீங்க யோசித்து, அப்புறமாத் தான் பதிவு எழுத ஆரம்பிக்கனும்.
இது என்னோட தனிப்பட்ட அனுபவமும் கூட. இப்படித் தான் நீங்க பதிவு எழுதனும் என்று விதிமுறைகள் எவையும் கிடையாதுங்க. ஆனால் என் தனிப்பட்ட அனுபவம், நான் பதிவெழுதும் முறைகள், என்னோட பதிவுகளுக்கு எம்புட்டு டைம் செலவு செஞ்சுக்கிறேன் என்றெல்லாம் நண்பர்கள் கேள்வி கேட்டாங்க. நான் வேலையில் இருக்கும் போது இல்லேன்னா எங்கேயாச்சும் போகும் போது, வண்டி ஓட்டும் போது சில விடயங்கள் கிளிக் ஆகுமுங்க. ஸோ...அப்படிக் கிளிக் ஆகும் விடயங்களைக் கெட்டியாகப் பிடித்து வைச்சிருப்பேனுங்க. இப்படிப் பல விடயங்களை நினைவில் சேமித்து வைத்து எழுதுவதால் ஒரு பதிவு எழுதுவதற்கு அதிக நேரம் நீங்க செலவு செஞ்சுக்க வேண்டி ஏற்படாதுங்க. ஆனால் பாழாப் போன என்னோட மனசில தோன்றுற ரொம்ப சூப்பரான விடயங்களும் சில வேளைகளில் மறந்து போயிடுமுங்க.
உதாரணத்திற்கு, நான் போகும் போது சில பறவைகள் பறந்திட்டு இருக்கு. ஒரு பாட்டி ரோட்டில குந்தி இருந்திட்டு, பறவைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கா. கொஞ்ச தூரம் தள்ளி, ஒரு சின்னப் பையன் பட்டங் கட்டிக் கொண்டிருக்கான். இம்புட்டு மேட்டரையும் வைத்து ஓர் பதிவு எழுதனும் என்றால் என்ன பண்ணுவேன்? மொதல்ல பதிவுக்கு பொருத்தமான ஹெடிங்கை செலக்ட் பண்ணனுமுங்க. ஒவ்வோர் பதிவிற்கான வருகையினை அப் பதிவின் ஹெடிங் தான் தீர்மானிக்குதுங்க. ஸோ...இந்த மாதிரி விடயங்களை நாம அடுத்த பதிவில் பார்ப்போமா? இம்புட்டு அட்வைஸ் சொல்லும் அளவிற்கு நான் ஓர் பெரிய பதிவர் இல்லைங்க. உங்களைப் போன்ற சாதா ஆளு தான் நானும். உங்க மனதில பதிவுகள் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை கண்டிப்பாக கேளுங்கள் நண்பர்களே.
*******************************************************************************************************************
விசேட அறிவித்தல்:
அன்பிற்குரிய உறவுகளே;
வரும் திங்கட் கிழமை 16.01.2012 அன்று இலங்கை, இந்திய நேரப்படி மதியம், ஐரோப்பிய நேரப்படி காலை உங்கள் நாற்று வலையில், "வலையுலகில் ஒருவருடம் + தமிழ்மண நட்சத்திர வாரம்!" அப்படீன்னு ஓர் சிறப்பு நினைவு மீட்டல் பதிவு வெளிவரக் காத்திருக்கிறது. அனைவரையும் குடும்ப சமேதரராய் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.
*******************************************************************************************************************
|
17 Comments:
வணக்கம் பாஸ்!
மீள் வணக்கம் நிரூபன்!சும்மா ஜாலிக்குத் தான் முன்னைய பதிவுக்கு கமென்ட் போட்டேன்!அது இந்த அளவுக்கு???அப்புறம் பதிவு எழுதுவது எப்படி என்று கொஞ்சம்,கொஞ்சமாக புதியவர்களுக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லி வருகிறீர்கள்!என் போன்றவர்களுக்கு நிட்சயம் உதவும்! நன்றி,நிரூபன்!!!!
ஜீ... said...
வணக்கம் பாஸ்!/////ஜீ.,என்ன ஒரு ஸ்பீட்????
//ஆனால் ரொம்ப சூப்பரான பதிவு எழுதனும் என்றால், நீங்க ஓய்வாக இருக்கிற நேரத்தில சிந்திக்கனுமுங்க//
ஒத்துக்கிடுறேன்!
//மொதல்ல பதிவுக்கு பொருத்தமான ஹெடிங்கை செலக்ட் பண்ணனுமுங்க//
எங்க பாஸ்! சமயத்தில தாவு தீர்ந்து போயிடும்!
//அதாவது நீங்க ஆப்பிஸில் ஒர்க் பண்ணும் போதோ அல்லது நீங்க வண்டியில பிரயாணம் செய்யும் போது, இல்லேன்னா நீங்க ஓய்வாக எங்கேயாச்சும் காலாற நடந்து போகும் போது உங்களின் மனதினுள் உள்ள கற்பனைக் குதிரை ஓடத் தொடங்குமுங்க//
உண்மைதான் பாஸ்! பிரயாணம் செய்யும்போதுதான் நிறையத் தோணும்!
ஆனா எனக்கு தோணுறதெல்லாம் கோக்குமாக்காவே இருக்குது!
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
அனைவருக்கும் பயன்படும்படியான அருமையான
அனுபவப் பதிவு.பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
த.ம 3
மச்சி... பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....
நல்ல பயனுள்ள பதிவு...!நாம பதிவு எழுதனும் என்று உக்கார்ந்து எழுதுவது அவ்வளவு சரியிருப்பதில்லை...தனிமையில் சிந்திப்பது நன்றாக வருகிறது உண்மைதான்...
மாப்ள அப்புறம் ஒரு விசயம் மாட்டுபொங்கல் வாழ்த்துகள்....
// ஆனால் ரொம்ப சூப்பரான பதிவு எழுதனும் என்றால்,நீங்க ஓய்வாக இருக்கிற நேரத்தில சிந்திக்கனுமுங்க. //
அப்போ நீங்க ரொம்ப நேரம் வெட்டியாத் தான் இருக்கீங்க போல.
//பொங்கல் பொங்கினவங்க,பொங்கல் பொங்காது தைத் திருநாளை அனுபவிக்கிறவங்க; //
என்னாது பொங்கல் முடிஞ்சுதோ? அவ்வ்வ்வ்வ்:))
வணக்கம் யோகா ஐயா, உங்க மேல நான் அப்படிச் சொல்லவில்லை, நீங்க பின்னூட்டம் போட முன்னாடியே, பலர் கம்பியூட்டர் உள்ளவங்களுக்கு இப் பதிவு யூஸ் ஆகாது என்று சொல்லி பதிவினைத் திசை திருப்பிட்டாங்க. ஸோ...அதனால தான் அப்படி எழுதினேன்.
உங்களுக்காக எழுதவில்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@athira//பொங்கல் பொங்கினவங்க,பொங்கல் பொங்காது தைத் திருநாளை அனுபவிக்கிறவங்க; //
என்னாது பொங்கல் முடிஞ்சுதோ? அவ்வ்வ்வ்வ்:))
//
அதிரா அக்கா, ரொம்ப ரொம்ப நன்றி,
இப்போது பதிவின் ஆரம்பத்தில் அந்த வரிகளை மாற்றி விட்டேன். பொங்கல் ஞாயிற்றுக் கிழமை என்று நீங்கள் நினைவூட்டிய பின்னர் தான் தெரிந்தது.
மன்னிக்கவும். நான் இருக்கும் இடத்தில் பொங்கல் கொண்டாட மாட்டாங்க தானே. நானும் இன்னைக்கு பொங்கல் என நினைத்து எழுதிட்டேன்.
நிரூபன் said...
பொங்கல் ஞாயிற்றுக் கிழமை என்று பின்னர் தான் தெரிந்தது.
மன்னிக்கவும். நான் இருக்கும் இடத்தில் பொங்கல் கொண்டாட மாட்டாங்க தானே.நானும் இன்னைக்கு பொங்கல் என நினைத்து எழுதிட்டேன்.//////என்னது, நீங்கள் இருக்கும் இடத்தில் பொங்கல் கொண்டாட மாட்டார்களா?உலகில் தமிழர் இல்லாத நாடு எது,பொங்கல் பொங்க்காதிருக்க???என்ன,ஊரில் கொண்டாடும் சந்தோஷம் இங்கே கிடைக்காது!தவிரவும்,என்னைப் போன்றோர் "கடமைக்காக"பொங்கல் செய்கிறோம் என்பதும் உண்மைதான்!என்று பிறந்த,சொந்த ஊரை விட்டு வந்தோமோ அன்றிலிருந்து இதே நிலைதான்!
ரொம்ப நல்ல பதிவு நண்பரே..
நான் பொதுவா விமர்சனங்கள் வலைப்பூவுல எழுதறது இல்ல..உண்மைய சொல்லனும்னா அது எழுத அந்த குறிப்பிட்ட துறைய பத்தி நிறைய அறிவு வேணும்..அதுக்காகவே ஒதுங்கிடறது..:) அப்பபோ முகநூலில் மட்டும் எதாவது விமர்சனம் எழுதறது...அவ்ளோதான்..ஆனா சில நண்பர்கள் சினிமாவை விட விமர்சனங்கால் நல்லா எழுதுறாங்க..:)
அதோட விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் எப்பவுமே ஒரு கவர்ச்சி உண்டு...பதிவர்கள் சீக்கிரம் பிரபலம் ஆகணுமுன்னா நிதானமாய் சிந்தித்து நல்ல ஆரோக்கியமான விவாத கட்டுரைகள் எழுதலாம் என்பது என்னோட கருத்து...
நன்றி நண்பரே..
பொங்கல் வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பரே..
ரொம்ப அருமையான பயனுள்ள பதிவு.தொடரட்டும் தங்கள் பணி..நன்றி.
Post a Comment