அதிரடி அரசியல் நையாண்டி அரங்கம்!
சோ பத்த வைச்ச சோக்கான நெருப்பு!
மன்னருக்கு எப்போதும் அருகே இருக்கும்
மந்திரிகள் தான்
ஆசையெனும் தீயை பற்ற வைப்பார்கள் - எங்கள்
மம்மியிற்கும் சோ ஐயா
சோக்கான தீயை பத்த வைச்சார்!
விம்மியழும் நேரத்தில்;
ஊழலுடன், சசிகலாவின் பிரிவும்
மம்மியினை வாட்டிடவே;
மன மகிழ்ச்சி வேண்டி சோவும்
சோக்கான சேதியினைச் சொன்னாரே - என நினைத்து
மனம் மகிழ்ந்து நிற்கையிலோ
பம்முகின்ற கலைஞரோ - பாம்பு போல சீறினார் - ஆனாலும்
பச்சைக் கொடிச் சம்மதத்தை காட்டினார் மம்மி!
பாஜக உடன் சேர்ந்து
பாரதத்தின் தலைவியென
ஆகிடுவேன் என உரைத்தார்!
தன் ஆசையினையும் போட்டு உடைத்தார்!
லோக்சபா நோக்கி நகர்கிறது சோ வைத்த வேட்டு
லோக்கலில் ஆட்சியை பிடித்தவருக்கு
நேஷனல் லெவலில் மாட்சிமை காணலாம் என
மன உறுதியை கொடுக்கப் போகிறது புதிய கூட்டு!
துக்ளக் ஆண்டு விழாவில் மம்மிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
துக்கத்தை கொடுத்து
தூக்கத்தை கெடுக்கிறது கலைஞருக்கு இந்த சேதி!
மம்மியின் மன உறுதி!
எம்ஜிஆர் காட்டிய ஏற்ற மிகு வழியில்
ஏழைகள் மனங் கவர்ந்தார் - இன்று
தமிழ் வம்சத்தின் மனங்களில்
தானை தலைவியாய் கொலுவிருக்கின்றார் - 2G ஊழலில்
பம்மிய கலைஞர் குழுவுக்கு வேட்டு வைத்தார்
இனியும் தமிழகத்தின் ஒளி விளக்காக விளங்குவேன்
என நம்பிக்கை ஒளி கொடுக்கின்றார்!!
அம்மாவின் மன உறுதி
ஐயாவின் காலம் முடிய முன்னர்
ஐயாவின் காலம் முடிய முன்னர்
திமுக குழுவிற்கு பேதியை கொடுக்கும்!
ஆட்சியை இழந்த
ஐயா கட்சியின் பாதையையும் மாற்றும்!
கலைஞரின் பிரிவினைக் குணம்!
குந்தியிருந்தாலும் குழப்பம் நிகழ்ந்தாலும்
ஆட்சிக் கதிரை எனும் ஆசனம் இன்றி
அமைதியாய் கவி எழுதினாலும்
அடிக்கடி ஐயாவின் மனமோ விம்மி வெடிக்கிறது!
பம்மி கிடந்தாலும், பாடையில் போகும் நேரத்திலும்
மம்மி என்னை விடுகிறாரா? - இல்லையே என
புலம்ப வைக்கிறதாம் ஜெயாவின் நடத்தைகள்!
கைங்கரியம் நிறைந்த கை கொடுக்கும்
காங்கிரசு என் அருகே இருக்கையில்
மம்மியிற்கு ஆட்சியா - துடிக்கின்றார் கலைஞர்
மண்ணுலகில் தான் உள்ள வரை
சோனியா மம்மியிற்கே ஆட்சி என
தமிழனுக்குள் தானும் ஓர் பிரிவினை என
தன் குணத்தினை உணர்த்தினார் கலைஞர்!
தானும் ஓர் பச்சோந்தி என
மீண்டும் நிரூபித்தார் கொலைஞர்!
இக் கவிதை எள்ளல் நடையில் அமைந்த ஓர் வசனக கவிதையாகும்!
|
11 Comments:
@மனசாட்சி
வணக்கம்
//
வணக்கம் நண்பா,
முதலாவது கருத்தினை இன்முகத்துடன் ஆரம்பித்த உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்.
ஏனைய பின்னூட்டங்களுக்கு பின்னர் பதில் கொடுக்கிறேன்.
கவிதை எள்ளி நகை ஆடுது
வயசான காலத்தில் ஐயா ரொம்பவே குழப்பத்தில் இருக்கார் வரும் 3ம் தேதி பார்ப்போம்.
அட அட கவிதை கவிதை இன்றைய நாட்டு நடப்பு அப்படியே புரியுது.
வணக்கம் நிரூபன்!கவிதை அருமை.செய்தி நல்லது!விடுவார்களா,"நம்பியார்"கள்????????????????
சகோ நிரூ!நீங்க என்ன இரண்டு தடவை க்யூவுல நிக்கிறீங்க:)
ஓ!நீலக்கலரில் தெரிவது தனி வரிசையா? அப்ப சரி.
வணக்கம் நிரூபன்!
அம்மாவுக்கு நல்ல ஆசைதான் வந்திருக்கு.. ஆனா ஐயாவின் குணம் தெரிந்ததுதானே.? மூப்பனாருக்கு வந்த பிரதமர் சான்ஸ குஜ்ராலுக்கு மாத்திவிட்டவர்தானே.? இப்பவும் பாருங்கோ சோனியாவோ மோடியோ பிரதமரானால் ஆதரிப்பார். ஆனா அம்மான்னா..?
தமிழர்களே தமிழர்களே
நீங்கள் என்னைக்
கல்லிலே கட்டிக் கடலிலே போட்டாலும்
நான்
கட்டுமரமேறி வந்து,
காங்கிரசின் காலடியில்தான்
வீழ்ந்து கிடப்பேன்.
-கொ_ _ _ர்.
வீழ்வது தமிழாகிலும்,
வாழ்வது நானாக வேண்டும்.
அன்பு சகோ கவிஞர் நிருபன்
வணக்கம்
துள்ளல் நடையில்
எள்ளல் கவிதை
வள்ளல் போல்
வழங்கினீர் ...........
அருமை.
இது இப்ப வந்த ஆசையில்ல.... பத்து வருஷதுக்கு முன்னாடியே வந்துச்சு இந்தம்மாவுக்கு....
நையாண்டி அற்புதம் சகோதரம்...
கலைஞ்சர் ஸ்டைல்...
Post a Comment