Sunday, January 15, 2012

நண்பன் - சிந்தனையை தூண்டும் விஜயின் சினிமா திருப்பு முனை

2012ம் ஆண்டின் பொங்கல் வெளியீட்டு திரைவிமர்சனம்:
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனித மூளையின் செயற்பாடுகளை மனிதனால் உருவாக்கப்பட்ட கம்பியூட்டர்கள் வெல்லத் துடிக்கும் வேளையில்; வியாபார நோக்கம்,பொழுதுபோக்கு அம்சம் மற்றும் ஜனரஞ்சக அந்தஸ்து ஆகியவற்றினை முன்னிறுத்தி,சமூகத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான செய்தியினைக் கொடுக்கின்ற திரைப்படங்களானது வெளி வருவது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்கில் எம் வாசல் எங்கும் இன்பம் தங்க வேண்டும் என நாம் பொங்கத் தயாராகும் இந் நேரத்தில் திரைக்கு வந்திருக்கிறது R.ஷங்கரின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் நண்பன் படம்.
நண்பன் படத்தின் மையக் கருத்தும் சுருக்கமான கதையும்: 
இணை பிரியாத காலேஜ் நண்பர்கள் மூவர், தம் கல்லூரி நாட்கள் முடிந்த பின்னர் திசைக்கு ஒன்றாகப் பிரிந்திருக்கிறார்கள். இந் நேரத்தில் இப் படத்தின் நாயகர்களுள் ஒருவராக வரும், வெங்கட்ராமன் எனப்படும் நடிகர் ஸ்ரீகாந்தின் நினைவு மீட்டலுக்கு ஊடாக கதை ப்ளாஷ் பேக் அடிப்படையில் நகர்கிறது. சேவற்கொடி செந்தில் (நடிகர் ஜீவா), மற்றும் வெங்கட்ராமன் (நடிகர் ஸ்ரீகாந்த்) ஆகியோர் ஒத்த ரசனையுடையவர்களாகத் தமது கல்லூரி வாழ்வினை ஆரம்பிக்கும் போது; இவர்களோடு பஞ்சவன் பாரி வேந்தனும் (நடிகர் விஜய்) இணைந்து கொள்கிறார். இந் நிலையில் கல்லூரியில் உள்ள மாணவர்களை செம்மறியாடுகள் போன்று ஒரே ட்ரக்கில் ஓட வைக்க நினைக்கிறார் தலமைப் பேராசிரியர் விருமாண்டி சந்தானமாக வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள்.

பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை மனனம் செய்து Theory அடிப்படையில் எல்லா மாணவர்களும் நடக்க வேண்டும் எனும் கல்வி முறைக்கு முற்றிலும் முரண்பாடாக எம் அனுபவ அறிவின் மூலம் கல்வியினை எமக்குச் சாதகாமாக மாற்றி கற்க வேண்டும் எனும் சிந்தனையினை முன் வைக்கிறார் பாரியாக வரும் விஜய். கல்வியில் விஜயிற்குச் சவால் விடுவதோடு, காமெடியிலும் களை கட்டியிருக்கிறார், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து இஞ்ஜினியரிங் கற்கும் ஸ்ரீவத்சன் அல்லது சைலன்ஸர் எனும் செல்லப் பெயர் கொண்ட நடிகர் சத்தியன். "ஒவ்வாத கோணங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்" என்பதற்கு அமைவாக கல்லூரியில் விருமாண்டி சந்தானத்த்திற்கும், பாரிக்கும் இடையில் ஒவ்வோர் விடயங்களிலும் லாஜிக் அடிப்படையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந் நிலையில் பாரியின் நண்பர்களாக இருக்கும் சேவற்கொடி செந்தில் மற்றும் வெங்கட் ஆகியோரைப் பிரிக்க நினைக்கிறார் பேராசிரியர்.

தன் அனுபவ அறிவின் மூலம் ஆசிரியரின் மனதில் சில விடயங்களைப் புரிய வைத்து மாணவர்கள் மனதில் இருக்கும் கற்றலுக்கு முரண்பாடான உளவியல் அம்சங்களைக் களைய நினைக்கிறார் பாரி. கல்லூரி வாழ்வு முடிந்து பிரிந்திருக்கும் வேளையில் பாரியினைத் தேடி நண்பர்கள் செந்திலும், வெங்கட்டும் அவரது ஊரான ஊட்டிக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து சூடு பிடிக்கின்றது படத்தின் கதை. ஆம் பாரியினைத் தேடிச் செல்வோருக்கு ஓர் மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்று நான் சொல்வது தகுமா? சத்தியராஜ்ஜின் மகளாக ரிஜா எனும் பெயரோடு வருகின்றார் இடுப்பழகி இலியானா. மூன்று நண்பர்களை அடிப்படையாக வைத்து நகரும் கதையில் இடுப்பழகிக்கு என்ன வேலை என நீங்கள் கேட்கலாம்? தன்னுடைய அனுபவ அறிவு,  மற்றும் உளவியல் தேடல் மூலம் இலியானாவினையும் கொத்த நினைக்கிறார் விஜய். படம் பத்தி மேலதிகமாக அறியனும் என்று தோன்றுகிறதா? ஸோ...டைம்மை வேஸ்ட் பண்ணாம இப்பவே தியேட்டருக்கு கிளம்புங்க.

படம் பற்றிய சுவாரஸ்யங்கள் மற்றும் சுவையான விடயங்கள்:
*காதல் மற்றும், இதர அம்சங்களினை விட, கருப் பொருளிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 3இடியற்ஸ் படத்தினை எம் தமிழ் நாட்டுச் சினிமாவிற்கு ஏற்றாற் போல மீள் உருவாக்கம் செய்து கிராபிக்ஸ் வர்ணம் பூசி, பிரமாண்டம் எனும் பட்டை தீட்டி எழில் கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர் அவர்கள்.
*வழமையாக விஜய் படங்களில் அடிதடியில் தூள் கிளப்பும் விஜய் இப் படத்தில் சொல்லுக்கு முதன்மை கொடுக்கும் ரோலில் நடித்திருக்கிறார்.
*நடிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந், மற்றும் ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்தவர் (பெயர் ஞாபகம் இல்லை) மற்றும் நடிகர் சத்தியராஜ் ஆகியோரும், இலியானாவின் அக்கா பாத்திரமேற்று நடித்தவரும் மிகவும் திறமையாக + கதையோடு ஒன்றித்து நடித்திருக்கிறார்கள்.
*எஸ்.ஜே சூர்யா சிறிய காட்சியில் வந்து போனாலும், கு(கொ)டுக்கப்பட்ட காட்சியினை விறு விறுப்பாக மிரட்டலுடன் செய்திருக்கிறார்.
*இலியானா இடுப்பாட்டத்தின் மூலம் மனசை ஆட்டுவித்தது மாத்திரமன்றி, ஒரு வித கிறங்கடிக்கும் தமிழ் பேசி ஹன்சிகா மேனியாவில் தவிக்கும் தமிழர்களை தன் பக்கமிழுக்க முயற்சித்திருக்கிறார்.
*கலையில் T.முத்துராஜ் அவர்கள் பாடல்களிலும், இதர காட்சிகளிலும் சங்கரின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்.

*காமெடியில் சத்தியனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும்,உடல் குலுங்கும் வண்ணம் சிரிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. தமிழுக்கான சரியான அர்த்தம் தெரியாதவராக அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வந்து கல்வி கற்கும் சைலன்ஸர் அவர்கள் மேடையில் ஆசிரியர் தினத்திற்கு பேசுவதற்காக தயாரித்த உரையில் விஜய் தன் கைவரிசையினைக் காட்டி விடுகின்றார். அந் நேரத்தில் கற்பிக்கும் எனும் வார்த்தையினை கற்பழித்தார் எனவும், பலானா புக் படித்து பல பெண்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறார் எனச் சொல்லுவது போலவும், மினிஸ்டரைப் பார்த்து கலவி அமைச்சர் என விளித்துப் பேசும் வண்ணமும் மாற்றி விடுகின்றார் விஜய். தான் பேசுவது என்ன என்பதற்கான அர்த்தமே அறியாதவராய் சத்யன் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்த 6 நிமிடங்களும் திரையரங்கு சிரிப்பொலியால் அதிர்கிறது.  குழந்தை தனமான முகச் சாயலுடன், சீரியஸ் காமெடிக்கும், சிரிப்புக் காமெடிக்கும் நல்லதோர் நடிப்பினை இப் படத்தில் கொடுத்திருக்கிறார் சத்தியன் அவர்கள்.

*இசையில் ஹரிஸ்ஜெயராய் அவர்கள் தன் வழமையான வித்துவத் திறமையினைக் காட்டியிருக்கிறார். இம் முறை கொஞ்சம் ஒரு படி மேலே போய் நண்பனில் "ஹார்ட்டிலே பட்டரி சார்ஜ்ஜு தான் All is well” எனும் பாடலில் ரியாலிட்டியாக ஓர் இசைக் கோர்வையினை ஒலிப்பதிவு செய்து சேர்த்திருக்கிறார்.
*பாடல்களில் அனைத்துப் பாடல் வரிகளும் மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தாலும், "அஸ்க்கு லஸ்க்கா ஏமோ....ஏமோ...பாடலும், இருக்கானா இடுப்பு இருக்கானா...இல்லையானா இலியானா...பாடலும் காட்சிப்படுத்தலிலும்,பாடல் வரிகளின் செதுக்கலிலும்,இசையின் மேன்மையிலும் படத்தில் செழுமை பெற்றிருக்கிறது. இலியானா இடுப்பு இருக்கான பாடலிலும், அஸ்க்கு லஸ்க்கா பாடல்களிலும் ஷங்கர் தன்னுடைய பிரமாண்ட காட்சிப்படுத்தலையும்,கலை நயத்தில் தன் ஸ்பெசாலிட்டியினையும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
*வசனங்களை மதன் கார்க்கி & ஷங்கர் இணைந்து எழுதியிருந்தாலும், சில இடங்களில் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா எனும் கூற்றினை அல்லது வைரமுத்துவின் நினைவில் நிற்கும் பாடல் வரிகளின் சாயல்களை அப்படியே மதன் கார்க்கி வசனங்களிலும் புகுத்தியிருப்பது அவரது தனித்துவத்தினை வெள்ளிடை மலையாக காண்பிக்கிறது.
படத்தில் சில தவறுகள் அல்லது சறுக்கல்கள்:
இளைய தளபதி விஜயின் அண்மைக்கால சறுக்கல்கள் நிறைந்த திரையுலக வாழ்வில் காவலன், வேலாயுதத்திற்குப் பின்னர் நல்லதோர் திருப்பத்தினை இத் திரைப்படம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஸ்ரீகாந்த் அவர்கள் Air India விமானத்தில் பயணிக்க ரெடியாகும் போது, ஹார்ட் அட்டாக் வந்தவர் போல் நடிப்பதும், விமானத்திற்குள அவர் உடலில் எந்தவிதமான பரிசோதனை எதனையும் மேற்கொள்ளாது உடனடியாக அவருக்காக விமானத்தினைத் தரையிறக்குவது லாஜிக் சறுக்கல். எந்த ஓர் விமானத்திலும் விமானம் பறக்க தொடங்கும் போது பிரயாணிக்கு உடல் நலக் குறைவு என்றால் உடனடியாக பரிசோதனை செய்து கன்போர்ம் செய்வார்கள். ஆனால் இங்கே?
*படத்தின் முடிவினை 10 நிமிடங்கள் வரை சம்பந்தமே இல்லாது நீட்டி முடித்திருப்பது பார்ப்போருக்கு சலிப்பினை கொடுக்கலாம்.இதர விடயங்களில் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

நண்பன்: சமூகத்தின் சிந்தனையைத் தூண்டும் வழிகாட்டி!
நான் படம் பார்த்த தியேட்டரில்; விஜய் ரசிகர்கள் அல்லாதோர், மற்றும் வேலாயுதம் பிடிக்காது என்று கூறியோரின் இப் படத்திற்கான ரேட்டிங்: பிரம்மாதம், விஜய் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறார். சூப்பர் படம். ஆனால் கொஞ்சம் அதிக நேரம் எடுத்து விட்டார்கள். 

இனி மனதில் நிற்கும் வசனங்கள் சில உங்கள் பார்வைக்காக:
*நமக்கு எப்போதும் துன்பம் நேரும் போது All is well என்று நெஞ்சை தொட்டு சொல்லிக்கனும்.
*கிஸ் அடிக்கும் போது மூக்கும், மூக்கும் இடிச்சுக்குமா? ஆய்....வேண்ணா நான் இப்போ கொடுத்து காட்டவா?
*குசும்பன் எப்போதும் பின்னாடி தான் குசும்பை காண்பிப்பான்.
*ப்ரென்ஷிப்பில இதெல்லாம் சாதாரணமப்பா.
*Oh My God I'm all right, பூமரத்து பிச்சாத்தா தான் என்னை காப்பாத்தியிருக்கா.
*தலைவா You are great. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.
*ஆனானப்பட்ட வைரஸிற்கே ஆப்பு வைச்சிட்டியே.
*நீ மட்டும் இப்போ வெளியே வரலைன்னா. உன் கதவிலேயே சிறுநீர் அபிசேகம் பண்ணிடுவேன்.
*Life is a race. நீ வேகமா ஓடனும். இல்லேன்னா பின்னாடி வர்றவன் உன்னை ஏறி மிதிச்சிட்டே போய்க்கிட்டு இருப்பான்.
*ஸ்பைசில பேனா எழுதலைன்னா பென்சில் யூஸ் பண்ணியிருக்கலாமே. ரெண்டு ரூபாவுடன் முடிஞ்சிருக்குமே....ஹா...ஹா..
*கடந்த 32 வருடங்களாக இந்த கல்லூரியில் பல மாணவ, மாணவியர்கள் மிகச் சிறந்த முறையிலே இவரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பல பேர் இவரால் கற்பழிக்கப்பட இருக்கிறார்கள். எனக்கு ஓர் ஆச்சரியம் ஓர் மனிதன் தன் வாழ்நாளில் எப்படி இத்தனை மாணவிகளை கற்பழிக்க முடியும்? தன் வாலிப வயதிலிருந்தே பலான புத்தகங்களை படித்து படித்து, பற்பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு தன்னை இதற்காகவே வலிமைப்படுத்தியிருக்கிறார். நாம் அனைவரும் இவரைப் பின்பற்ற வேண்டும்! இன்று மாணவர்களாக இருக்கும் நாளை உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இவரைப் போலவே கற்பழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
*கற்பழிக்கும் கர்ணன் விருமாண்டி வாழ்க! வாழ்க!
*கலவிக்காக சிறந்த கொங்கைகளை உடையவர் இவர். கலவி அமைச்சர் அவர்களே, உங்கள் கொங்கைகளை எங்கள் கற்பழிப்பு கர்ணன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கொங்கை பரப்பு செயலாளரே அவர் தான். வெகு விரைவில் ஊரே அறிய உங்கள் கொங்கைகளை அவரே கற்பழிப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
*ஆசிரியர்களுக்கு நாம் குசுவாசத்தினைக் காட்டும் தருணம் இது,
*உண்மையிலே லவ் இருந்தா, அவன் உங்க முன்னாடி வந்தா ரீ ரெக்காடிங் கேட்கும், பட பட என்று பட்டாம் பூச்சி பறக்கும், உடம்பு எல்லாம் பூப் பூக்கும், நட்சத்திரம் எல்லாம் நிலாவக தோன்றும்!
*இதெல்லாம் ஷங்கர் பட கிராபிக்ஸில தான் நடக்கும்.
*உனக்கு புடிச்ச துறையை தேர்ந்தெடுத்துக்கோ. கடுமையா உழைச்சுக்கோ, வெற்றி ஆட்டோமெட்ரிக்கா வரும்.

*******************************************************************************************************************
கட்டணம் செலுத்தாத விளம்பரம்:
அன்பிற்குரிய உறவுகளே;
வரும் திங்கட் கிழமை 16.01.2012 அன்று இலங்கை, இந்திய நேரப்படி மதியம், ஐரோப்பிய நேரப்படி காலை உங்கள் நாற்று வலையில், "வலையுலகில் ஒருவருடம் + தமிழ்மண நட்சத்திர வாரம்!" அப்படீன்னு ஓர் சிறப்பு நினைவு மீட்டல் பதிவு வெளிவரக் காத்திருக்கிறது. அனைவரையும் குடும்ப சமேதரராய் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.
*******************************************************************************************************************

31 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

வெயிட் ... வாசிச்சுட்டு வாரேன்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

அருமையான பதிவு. நீங்களும் பிடித்த வசனங்கள் செக்ஷன் ஆரம்பிச்சிருக்கீங்க. எப்படித் தான் ஞாபகம் வச்சிருக்கீங்களோ?

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நிரூபன்.

Yoga.S. said...
Best Blogger Tips

மாலை வணக்கம் நிரூபன்!தைத்திரு நாளாம் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! நான்,படம் இணைய வழி இணைப்பில் தொ(ல்)லைக்காட்சியில் பார்த்தேன்!உண்மையில்,உலகில் இருக்கும் அத்தனை தமிழர்களுக்குமே ஷங்கர் ஒரு சிறந்த சேதியை இந்தப் படமூலம் தெரிவித்திருக்கிறார்! நடிகர்கள், நடிகைகள் இரண்டாம் பட்சம் தான்!!!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
பதிவுலகில் எல்லா விமர்சனங்களும் நன்றாக இருக்கின்றது .. உங்கள் விமர்சனம் உட்பட..கட்டாயம் படத்தை பார்க்கின்றேன் அண்ணன் சொல்லித்தந்திருக்கிறார் டெக்கினிக்கு.. ஹி ஹி!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

வெயிட் ... வாசிச்சுட்டு வாரேன்.
//

நான் எங்கேயும் போக மாட்டேன்.
நீங்க வாசித்திட்டு ஆறுதலா வாங்கோ;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

அருமையான பதிவு. நீங்களும் பிடித்த வசனங்கள் செக்ஷன் ஆரம்பிச்சிருக்கீங்க. எப்படித் தான் ஞாபகம் வச்சிருக்கீங்களோ?

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நிரூபன்.
//

ஏன்யா இந்த கொல வெறி.
பிடித்த வசனம் எழுத நான் மனதை கட்டுப்படுத்த படுற பாடிருக்கிறதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தியேட்டரில ஒரு பிகரை கூட பார்க்க முடியலை. பார்த்தா மனசில வசனம் நிற்க மாட்டேங்குது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தப் பதிவ்ற்கு சும்மா ஜாலிக்குத் தான் பிடித்த வசனங்கள் பகுதி சேர்த்தேன். இனிமேல் சேர்த்துக்க மாட்டேன்.

Anonymous said...
Best Blogger Tips

உங்களிடமிருந்து உடனடி தமிழ்ப்பட விமர்சனம்!! நண்பன் அனைவரையும் கவர்ந்து விட்டான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

மாலை வணக்கம் நிரூபன்!தைத்திரு நாளாம் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! நான்,படம் இணைய வழி இணைப்பில் தொ(ல்)லைக்காட்சியில் பார்த்தேன்!உண்மையில்,உலகில் இருக்கும் அத்தனை தமிழர்களுக்குமே ஷங்கர் ஒரு சிறந்த சேதியை இந்தப் படமூலம் தெரிவித்திருக்கிறார்! நடிகர்கள், நடிகைகள் இரண்டாம் பட்சம் தான்!!!
//

மாலை வணக்கம் ஐயா,

தங்களுக்கும், தங்களின் பேரப் பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய இன்ப தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஷங்கரின் வித்தியாசமான சிந்தனை, ரீமேக் பண்ணிய படத்தில் தமிழர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காட்சிகளை அமைத்தமை எல்லாமே படத்திற்கு பலம் ஐயா.

நீங்க சொல்வது போல, நடிக நடிகைகளை விட, இங்கே கதையிற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
வணக்கம் நிரூபன்!
பதிவுலகில் எல்லா விமர்சனங்களும் நன்றாக இருக்கின்றது .. உங்கள் விமர்சனம் உட்பட..கட்டாயம் படத்தை பார்க்கின்றேன் அண்ணன் சொல்லித்தந்திருக்கிறார் டெக்கினிக்கு.. ஹி ஹி!!//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

உங்களிடமிருந்து உடனடி தமிழ்ப்பட விமர்சனம்!! நண்பன் அனைவரையும் கவர்ந்து விட்டான்.
//

நன்றி சிவா அண்ணா.

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

சிபி ஃபார்முலா சக்சஸ்...

அனுஷ்யா said...
Best Blogger Tips

படம் ரெண்டு தடவ பாத்துட்டேன்...ஆனா பதினஞ்சு விமர்சனம் வாசிச்சுட்டேன்...ஒவ்வொன்றும் ஒரு இரகம்..
முழுக்க முழுக்க செந்தமிழில் ஓர் விமர்சனம்..நல்லாஇருக்கு ...

Mathuran said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ

அட்டகாசமான விமர்சனம்!!

விஜய் ரசிகனா இருந்தும் இன்னும் படம் பார்க்கல்ல.. சேம் சேம் பப்பி சேம்..

அப்புறம் ஒரு திருத்தம் //விஜயின் அண்மைக்கால சறுக்கல்கள் நிறைந்த திரையுலக வாழ்வில் வேலாயுதத்திற்குப் பின்னர் // காவலனிலேயே விஜய் வழமைக்கு திரும்பிவிட்டார்

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran
பாஸ்,
வசனங்கள் சில ஞாபகத்தில் நின்றது, விமர்சனத்துடன் பிடித்த வசனங்களையும் எழுதலாம் என்று ஆரம்பித்தேன்.
இப்படி ஆகிட்டு பாஸ்,
நன்றி.

Admin said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் பார்க்கணும் என்ற எண்ணம் வந்திருக்கின்றது. நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

கவி அழகன் said...
Best Blogger Tips

பொங்கல் வாழ்த்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

வணக்கம் நிரூ

அட்டகாசமான விமர்சனம்!!

விஜய் ரசிகனா இருந்தும் இன்னும் படம் பார்க்கல்ல.. சேம் சேம் பப்பி சேம்..

அப்புறம் ஒரு திருத்தம் //விஜயின் அண்மைக்கால சறுக்கல்கள் நிறைந்த திரையுலக வாழ்வில் வேலாயுதத்திற்குப் பின்னர் // காவலனிலேயே விஜய் வழமைக்கு திரும்பிவிட்டார்
//

நன்றி மது, நான் அவ் வரிகளை மாற்றி விடுகின்றேன். காரணம் நான் காவலன் பார்க்கவில்லை. மன்னிக்கவும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சந்ரு

நல்ல விமர்சனம் பார்க்கணும் என்ற எண்ணம் வந்திருக்கின்றது. நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்
//

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்

படம் ரெண்டு தடவ பாத்துட்டேன்...ஆனா பதினஞ்சு விமர்சனம் வாசிச்சுட்டேன்...ஒவ்வொன்றும் ஒரு இரகம்..
முழுக்க முழுக்க செந்தமிழில் ஓர் விமர்சனம்..நல்லாஇருக்கு ...
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்
படம் ரெண்டு தடவ பாத்துட்டேன்...ஆனா பதினஞ்சு விமர்சனம் வாசிச்சுட்டேன்...ஒவ்வொன்றும் ஒரு இரகம்..
முழுக்க முழுக்க செந்தமிழில் ஓர் விமர்சனம்..நல்லாஇருக்கு ...
//

ஆனாலும் சில இடங்களில் ஆங்கிலம் கலந்திருக்கேனே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

பொங்கல் வாழ்த்துக்கள்
//


உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன், பொங்கல் வாழ்த்துக்கள்.

விமர்சனம் அருமை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. எனக்கும் அதே கேள்விதான்.. என்னண்டு அந்த வசனங்கள் எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்க??

Unknown said...
Best Blogger Tips

படம் பார்த்தாச்சா....விமர்சனம்..வசனம்...ம்ம் நடக்கட்டும்...நடக்கட்டும்...
மாட்டு பொங்கல் வாழத்துகள்!இது மூன்றாவது தடவையா சொல்லுகிறேன் நீங்க கோவிக்கவே இல்லை எனக்கு போரடிக்குது!

Yoga.S. said...
Best Blogger Tips

veedu said...
படம் பார்த்தாச்சா.விமர்சனம்..வசனம்...ம்ம் நடக்கட்டும்...நடக்கட்டும்...
"மாட்டு பொங்கல்" வாழத்துகள்!இது மூன்றாவது தடவையா சொல்லுகிறேன் நீங்க கோவிக்கவே இல்லை எனக்கு போரடிக்குது!///உங்களுக்கும் "மாட்டுப்பொங்கல்" வாழ்த்துக்கள்!!!!!!(இப்ப என்ன செய்வீங்க?இப்ப என்ன சொல்வீங்க???)

சசிகுமார் said...
Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

K said...
Best Blogger Tips

மச்சி, அருமையான விமர்சனம்! பலவிஷயங்களைக் கவனித்து எழுதியிருக்கே! குறிப்பா, இசை பற்றிக் குறிப்பிட்ட விதம் சூப்பர்!

நான் இன்று இரவு பார்க்கலாம் என்று இருக்கிறேன்!

படத்தைப் பார்த்துவிட்டு மறுபடியும் ஒரு தடவை உன் விமர்சனத்தைப் படிப்பேன்! நன்றி!

K said...
Best Blogger Tips

அட, சொல்ல மறந்துட்டேன்!

மச்சி, உனக்கும் உன்னுடைய அவவுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>. ஸ்ரீகாந்த் அவர்கள் Air India விமானத்தில் பயணிக்க ரெடியாகும் போது, ஹார்ட் அட்டாக் வந்தவர் போல் நடிப்பதும், விமானத்திற்குள அவர் உடலில் எந்தவிதமான பரிசோதனை எதனையும் மேற்கொள்ளாது உடனடியாக அவருக்காக விமானத்தினைத் தரையிறக்குவது லாஜிக் சறுக்கல். எந்த ஓர் விமானத்திலும் விமானம் பறக்க தொடங்கும் போது பிரயாணிக்கு உடல் நலக் குறைவு என்றால் உடனடியாக பரிசோதனை செய்து கன்போர்ம் செய்வார்க

இதே டவுட் எனக்கும் வந்தது, விமான நிலையத்தில் பணி புரியும் நண்பரிடம் விசாரித்தேன், ஹார்ட் அட்டாக் என்பது உடனடியாக சிகிச்சை தர வேண்டிய நிலை என்பதால் அப்படி விமானத்தை இறக்கிய நிகழ்வுகள் நடப்பதுண்டு என்றார்

KANA VARO said...
Best Blogger Tips

நிரூபன் said...

@Philosophy Prabhakaran
பாஸ்,
வசனங்கள் சில ஞாபகத்தில் நின்றது, விமர்சனத்துடன் பிடித்த வசனங்களையும் எழுதலாம் என்று ஆரம்பித்தேன்.
இப்படி ஆகிட்டு பாஸ்,
நன்றி.//

ஹீ ஹீ பிள்ளையார் பிடிக்க போய் குரங்காயிட்டுதோ!

KANA VARO said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...

இதே டவுட் எனக்கும் வந்தது, விமான நிலையத்தில் பணி புரியும் நண்பரிடம் விசாரித்தேன், ஹார்ட் அட்டாக் என்பது உடனடியாக சிகிச்சை தர வேண்டிய நிலை என்பதால் அப்படி விமானத்தை இறக்கிய நிகழ்வுகள் நடப்பதுண்டு என்றார்//

ஆமா இதை மட்டும் வக்கனையா சொல்லுங்கோ தல, உங்க விமர்சனத்தில மட்டும் லாஜிக் சொதப்பல் எண்டு ஏதேதோ சொல்லுங்கோ!

Thava said...
Best Blogger Tips

லேட்டாக வாரேனு தப்பா நினைக்க வேண்டாம்.
நேற்றுதான் நேரம் கிடைத்து இணையத்துக்கே வந்தேன்.
நல்ல விமர்சனம் (இது நான் சொல்லியா தெரிய வேண்டும்//எப்போதும் நீங்கள் சூப்பர்தான்)..
நன்றி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails