ஊடகங்களின் தலையாய கடமை என்பது நம்பகத் தன்மை வாய்ந்த செய்திகளை வழங்குவது மாத்திரமன்றி, மக்களைச் சென்றடையும் செய்திகளானது மக்களுக்கு அந்த ஊடகங்கள் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். பரபரப்பு, விறு விறுப்பு, புலனாய்வு எனும் பெயரில் அதிரடிச் செய்திகளையும், கற்பனைச் செய்திகளையும் மக்களை நம்ப வைக்கும் நோக்குடன் வெளியிட்டு வருகின்ற பத்திரிகை தான் நக்கீரன் பத்திரிகை. ஈழ மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடிய பெருமையினையும் தமிழக ஊடகங்கள் வரிசையில் இந்த நக்கீரன் பத்திரிகையே அதிகளவில் பெற்றிருக்கிறது.
"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் தினமணி பத்திரிகையினைப் படித்துக் கொண்டிருப்பது" போன்ற ஓர் பரபரப்புப் படத்தினை இறுதிப் போர் நிகழ்ந்து ஒரு சில தினங்களின் பின்னர் கிராபிக்ஸ் அடிப்படையில் வெளியிட்டு முகத்தில் அறை வாங்கி, உலகத் தமிழ் மக்களிடம் நிறையவே வாங்கிக் கட்டிக் கொண்டது நக்கீரன் பத்திரிகை. அதன் பின்னர் பட்ட பின்னே புத்தி பிறக்கும் எனும் வழியில் நக்கீரன் திருந்தியதா என்றால் இல்லை. சிறிது காலத்தில் "முல்லைத்தீவிலிருந்து ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவள் நக்கீரனுக்கு முல்லைத்தீவிலிருந்து கடிதம் அனுப்பியிருக்கிறாள்"எனவும் கூறி ஓர் கடிதத்தினை வெளியிட்டு பரபரப்பினை உண்டு பண்ணியது இந்த நாய்க்கீரன்.
கடிதம் வெளியாகி ஒரு சில நாட்களிலே தமிழக உறவுகளாலும், உலககெங்கும் வாழும் உறவுகளாலும் நக்கீரன் பத்திரிகை எழுதிய கற்பனைக் கடிதம் இது என்றும், மேற்படி கடிதத்தில் உள்ள விடயங்கள் யாவும் தமிழக மக்களின் மொழி நடையில் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறி நக்கீரனின் பொய் முகம் அம்பலப்படுத்தப்பட்டது.இதன் பின்னரும் பரபரப்பிற்கும்,விறு விறுப்பிற்கும் செய்திகள் போட்டால் தான் வியாபாரம் செழிக்கும் என ஞானக் கண் கொண்டு அலையும் நக்கீரன் திருந்தியதா? ஹே..ஹே.. "ஏழாம் அறிவு திரைப்படம் வர முன்பதாக இன்னும் என்ன தோழா..." என்ற பாடல் காட்சிக்கு ஈழப் போராட்டம், ஈழ மக்களின் அவலங்களை உள்ளடக்கிய வீடியோத் தொகுப்பினைத் தயாரித்து மக்களின் அவலங்களை வைத்து சுய இன்பம், சுய இலாபம் தேடிக் கொண்டது நக்கீரன் குழு!
நக்கீரன் அலுவலகத்தின் தற்போதைய நிலை:
இனி இன்றைய பொழுதில் நக்கீரனுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போமா? "மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான்!" எனும் பரபரப்பு படத்துடன் இவ் வார நக்கீரன் (08.01.2012) இதழ் வெளியாகித் தமிழகத்தின் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், அதிமுக கட்சியினர் மத்தியிலும் உணர்ச்சித் தீயினைப் பற்ற வைத்திருக்கிறது. இன்றைய தினம் (07.01.2012) அன்று சிதம்பரத்தில் அதிமுக குழுவினர் தலமையில் காலை ஆரம்பிக்கப்பட்ட நக்கீரன் பத்திரிகையினைக் கொழுத்தி கண்டனத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வானது மெது மெதுவாக சாத்தூர், திருச்சி, வேலூர், குடியாத்தம் டவுன், அரூர், குன்னூர் எனப் பரவத் தொடங்கியது. இறுதியில் சென்னை ராயப் பேட்டையில் அமைந்துள்ள நக்கீரன் தலமையகத்திலும் மக்கள் குழுமித் தாக்குமளவிற்கு விஸ்பரூபம் எடுத்திருக்கிறது.
ஊடக நெறிகளுக்கும் அப்பால் உறுதிப்படுத்தாத செய்திகளை உண்மைச் செய்திகள் போன்று வெளியிட்டால் பணஞ் சம்பாதிக்கலாம் எனும் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பது உண்மையில் ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான விடயமாகும்.இதனைக் கண்டித்து தூங்கிக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி கூடத் திடீரென விழிப்புற்றுக் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சுதந்திர ஊடக அமைப்புக்கள் நக்கீரன் அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்திருக்கின்றனர். உண்மையில் ஜெயா குழுவினர் நிதானமாக நக்கீரன் அலுவலகம் மீதும், நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீதும் கண் மூடித்தனமாக தாக்குதல் நடாத்த முன்பதாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கலாம். நக்கீரனின் ஈனப் பிழைப்பிற்கு நல்லதோர் பாடமும் புகட்டியிருக்கலாம். ஆனால் உணர்ச்சி வேகத்தில் தவறிழைத்து விட்டார்கள்.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அவர்கள் சில மணி நேரத்திற்கு முன்பதாக நக்கீரன் மீது தாக்குதல் நடாத்தி தம் வெறித் தனத்தை தீர்த்த பின்னர், தாக்குதல் நடாத்தியது தவறு என்றும், நக்கீரன் குழுவினர் மீது சட்ட ரீதியில் வழக்குத் தாக்கல் செய்து உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டதற்காக நஷ்ட ஈடு கோரவுள்ளதாகவும் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். இது ரொம்ப காமெடியாக இல்லே. ஒரு நிறுவனத்தின் ஊடக நடவடிக்கைகள் யாவையும் கொல வெறியோடு முடக்கி விட்டு, நக்கீரன் மீது இனி நஷ்ட ஈடு கோருவதால் என்னய்யா பலன்? கொஞ்சமாவது சிந்தித்து, நக்கீரன் பத்திரிகை இனிமேல் மீள முடியா வண்ணம் பல மில்லியன் கோடி ரூபாக்களை இலங்கையின் முன்னாள் அமைச்சரும், பாதுகாப்பு செயலருமான கோத்தபாயா ராஜபக்ஸ இலங்கைப் பத்திரிகை ஒன்றிடம் கோரியது போலாச்சும் கேட்டிருக்கலாமே? ஹி...ஹி...
அம்மா கட்சி எப்போதும் ஆறுதலாக யோசிப்பாங்க என்பது இது தானோ!
குறிப்பிட்ட சம்பவத்தின் பின் தமிழகத்தின் தற்போதைய நிலமை:
நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையின் ஒரு பக்கச் சாலையினை மூடி இப்போது போக்குவரத்தினைத் தடை செய்திருக்கிறார்கள். நக்கீரன் அலுவலகத்தில் பெருமளவான பொலீஸார் குவிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் பதட்டம் தணியவில்லை என்றும் நண்பர் துவாகரன் கூறியிருக்கிறார். ஊடக சுதந்திரத்த முடக்கும் வகையில் நக்கீரனின் குரல் வளையினை நசுக்கியது தவறு என்று எல்லோரும் கண்டனம் வெளியிட்டாலும், நக்கீரனின் உண்மை முகத்தினை நன்றாக உணர்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த தாக்குதல் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றாகவே கருதப்படுகின்றது. நக்கீரன் பத்திரிகை நிறுவனம் மீது நடாத்தப்பட்ட இவ்வளவு கொல வெறித் தாக்குதல்களின் பின்னரும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அதிமுக முடிவெடுத்திருப்பது காலங் கடந்த ஞானமாகும். இது செத்த பாம்பை மெத்தப் பெரிய பொல்லால் அடிக்கும் நிலமைக்கு ஒப்பானது அல்லவா?ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம் என்பதற்கான இவ் வருடத்தின் முதலாவது உதாரணம் இது அல்லவா?
தமிழக ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட செய்திகளுடனும், சம்பவ இடத்திற்கு அண்மையிலிருந்து பெறப்பட்ட "நண்பரும், பதிவருமான துவாகரனின்"தொலைபேசிச் செய்தியின் அடிப்படையிலும் இக் கட்டுரையானது எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துருவாக்கம்: செல்வராஜா நிரூபன்.
இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலமும், நக்கீரன் தளத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை.
************************************************************************************************************
தமிழ் வலைப் பதிவர்களினதும், வலைப் பதிவுகளினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றது. இது ஆரோக்கியமான இணைய வாசிப்பினை மேம்படுத்தும் ஓர் நல்ல விடயமாக அமைந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை. அண்மையில் "மெய்ப்பொருள்" எனும் வலைப் பூவோடு "சீனிவாசன்" அவர்களும் பதிவுலகில் நுழைந்திருக்கிறார். சமூகத்திற்குப் பயன்மிக்க பதிவுகளைத் தன் வலைப் பதிவில் எழுதி வருகின்றார். சீனிவாசனின் மெய்ப்பொருள் தளத்திற்கு நீங்களும் ஒரு தடவை சென்று பாருங்களேன்!
************************************************************************************************************
|
23 Comments:
மச்சி, என்னைப் பொறுத்தவரை கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும்! இதுதான் உண்மையான ஊடக சுதந்திரம்!
அதிமுக வின் கையில் ஊடகங்கள் இல்லையா? நக்கீரனின் கட்டுரைக்கு தமது ஊடகங்கள் மூலமாகப் பதில் சொல்வதே சிறந்தது! கருத்துக்களைக் கருத்துக்களால் முறியடிக்க ஒரு தில் வேண்டும்! நம்பிக்கை வேண்டும்!
அதை விடுத்து குண்டர்களை ஏவி, கொட்டனால் அடிப்பது எப்படிச் சரியாகும்?
ஈழப் பிரச்சனையை வைத்து, நக்கீரன் வியாபாரம் செய்தது உண்மைதான்! குறிப்பாக அந்த 9 வயசு சிறுமி கடிதம் எழுதினாள் என்று கோபால் அண்ணன் புரூடா விட்ட போது எனக்கும் செம கடுப்பாகியது!
ஆனால், இதற்கெல்லாம் தீர்வு அவர்களைத் தாக்குவது கிடையாது! நக்கீரனது எழுத்துக்களுக்கு எழுத்துக்களால் பதில் சொல்ல அதிமுகவில் எவருக்குமே திராணி இல்லையா?
என்னைப் பொறுத்தவரை நக்கீரனைத் தாக்கியது மிகவும் முட்டாள் தனம்! அதிமுகவுக்கு ஒரு பின்னடைவு!
ஊடக சுதந்திரத்த முடக்கும் வகையில் நக்கீரனின் குரல் வளையினை நசுக்கியது தவறு என்று எல்லோரும் கண்டனம் வெளியிட்டாலும், நக்கீரனின் உண்மை முகத்தினை நன்றாக உணர்ந்தவர்களைப் பொறுத்தவரை இந்த தாக்குதல் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றாகவே கருதப்படுகின்றது.///////
மச்சி, இது உனது தனிப்பட்ட கருத்தா? இருக்காது என்று நம்புகிறேன்!
நக்கீரன் எவ்வளவுதான் மோசமான செய்திகளை வெளியிட்டாலும், அலுவலகத்தைத் தாக்குவது மஹா முட்டாள் தனம்!
நக்கீரனுக்கு எதிராக எழுதுவதென்பது ஒரு கஷ்டமான காரியம் அல்லவே!
@Powder Star - Dr. ஐடியாமணி
மச்சி, கீழே ஓர் கருத்துச் சொல்லியிருக்கேனே!
ஊடக சுதந்திரம் பற்றியும், அதிமுக கட்சியின் அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம் செயல் பற்றியும்.
துவாரகன் என்று ஒரு பதிவரா? யாருப்பா அது?
மச்சி, கீழே ஓர் கருத்துச் சொல்லியிருக்கேனே!
ஊடக சுதந்திரம் பற்றியும், அதிமுக கட்சியின் அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம் செயல் பற்றியும்./////
கவனித்தேன் மச்சி! உன் கருத்துதான் எனது கருத்தும்! மிகவும் நியாயமாக எழுதப்பட்ட கட்டுரை!
@Powder Star - Dr. ஐடியாமணி
துவாரகன் என்று ஒரு பதிவரா? யாருப்பா அது?
//
ஹே...ஹே...
இயமனுக்கே நீ இடியாப்பம் தீத்துவாய் போல இருக்கு;-)))
சரியில்ல என்ற பெயரில எழுதும் பதிவர் மச்சி. உனக்கு நல்லாத் தெரியுமே அவரை;-)))))))
ஊடக சுதந்திரத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ஒக்கார்ந்து ஜோசிச்சா "நக்கீரனுக்கு இதுவும் வேணும் ,இன்னமும் வேணும்" ன்னு தான் தோணுது;)
ஆனாலும் ஆட்சியில் இருப்பவர்களே இவ்வாறான சட்ட மீறல்களை செய்வது கண்டிக்கத்தக்கது தான் ...
இந்த திமுக ,அதிமுக அபிமான குஞ்சுகளுக்கு தங்கள் தங்கள் தலைவர்கள் எதோ வானத்தில இருந்து குதிச்ச தேவதைகள் என்ற நெனைப்பு...
நித்தியானந்தாவின் வயிற்றெரிச்சலும், ரஞ்சிதாவின் சாபமும் நக்கீரனை புரட்டி போட்டுவிட்டது!
ஊடகத்துறையில் இருப்பதற்கு ஒரு சதவீதம் கூட லாயக்கில்லை கோபாலுக்கு. ( பாடிய இரும்பாக்கிகடா கோவாலு.....)
Powder Star - Dr. ஐடியாமணி said...
மச்சி, என்னைப்
பொறுத்தவரை கருத்துக்களைக்
கருத்துக்களால் எதிர்கொள்ள
வேண்டும்! இதுதான் உண்மையான
ஊடக சுதந்திரம்!
அதிமுக வின் கையில் ஊடகங்கள்
இல்லையா? நக்கீரனின்
கட்டுரைக்கு தமது ஊடகங்கள்
மூலமாகப் பதில்
சொல்வதே சிறந்தது!
கருத்துக்களைக் கருத்துக்களால்
முறியடிக்க ஒரு தில்
வேண்டும்! நம்பிக்கை வேண்டும்!
/////
யோவ் வெங்க, தமிழ்நாட்டு சி.எம் அவங்க. அவங்கள பத்தி இவ்ளோ கேவலமா ஒரு பத்திரிகை செய்தி வெளியிடலாமா? பத்திரிக்கை தர்மம் பத்தி பேசற?
அலுவலகத்தைத்
தாக்குவது மஹா முட்டாள் தனம்!
நக்கீரனுக்கு எதிராக
எழுதுவதென்பது ஒரு கஷ்டமான
காரியம் அல்லவே!
/////
இது கரைக்டு. நிரூபன் சொன்னது மாதிரி நஷ்டஈடு கேக்கலாம்!
விறு விறு சூடான பகிர்வுக்கு நன்றி....
மக்களின் முதல் குரலாக இருந்த பத்திரிக்கை உலகம் இப்போது வியாபார போட்டி உலகில் வெறும் பொய்களை மட்டும் அச்சேற்றும் நிலையில் தரம் தாழ்ந்து போன பத்திரிக்கை வரிசையில் நக்கீரனும் ஒன்றுதான்! அம்மாவின் முதல் கல்வீச்சு தொடங்கிவிட்டது கோபால் மீது!இனி தாத்தாவிற்கு ஒரு கிழமை கடிதம் எழுதும் வேலைகிடைத்துவிட்டது!
//இலங்கை அமைச்சர் கோத்தபாயா //
அவன் அமைச்சர் இல்லை பாஸ்.
வணக்கம் நிரூபன்!கருத்துக்களைக் கருத்தால் எதிர்க்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான்.ஜெயலலிதா முதல்வர் என்பதற்கு அப்பால்,ஒரு தனி மனிதர் மேல் சேறு வீசி,கீழ்த்தரமாக விமர்சிப்பது பத்திரிக்கை தர்மமாகாது.ஒரு ஜன நாயக நாட்டில் எவரையும் விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையுண்டு!ஆனாலும் இது கொஞ்சம் அதிகம் தான்.கருத்துக் கணிப்பு நடத்தியதற்கே அலுவலகத்தை அடித்து நொருக்கி,தீவைத்து "கொலை"யும் செய்தவர்கள் கண்டனம்???????ஹ!ஹ!ஹா!!!!!!!!!!
@எழிலருவி
//இலங்கை அமைச்சர் கோத்தபாயா //
அவன் அமைச்சர் இல்லை பாஸ்.
//
ஆகா...முன்னாள் அமைச்சர் என்று வரனும், தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
நாய்க்கீரன் திருந்தவே மாட்டான்....
nakkeran ku aappu kaaththirukku
அடி பலமோ
இது தான் அம்மா ஆட்சி.
//நாய்க்கீரன்.// எழுத்துப்பிழை அல்ல எனில் இரசித்தேன்..
இப்போதைய சம்பவம் குறித்து எனக்கு எந்த கருதும் இல்லை...
ஆனால் ஈழ வேதனையை காசாக்கிய நாட்களை இன்னும் நான் மறக்க வில்லை..
இறுதி போர் முடிந்து மூன்று மாதங்களுக்கு குறையாமல் அட்டையில் தலைவர் பிரபாகரன் படம் மட்டுமே..
நன்றி..
எதோ ஒரு உணவு பொருளை ஜெயா சாப்பிட்டார் என்று எழுதியதற்கே இந்த பொங்கு பொங்கும் நடுநிலை வியாதிகள், கனிமொழி மற்றும் ராசா குறித்து அருவருப்பாகவும், ஆபாச தொனியிலும் செய்திகளை கிசுகிசு பாணியில் தினமலம், ரிபோர்ட்டர் , ஜுவி போன்றவை செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டபோது, இந்த பத்திரிகைகளை கேள்வி கேட்காமல், நடுநிலை வியாதிகள் வாயில் என்ன சாப்பிட்டு கொண்டிருந்தனர் ????
அது என்ன பத்திரிகை சுதந்திரம், தனி நபர் தாக்குதல்.. கலைஞர் பத்தி தினமலர், தினமணி எழுதும் போதும்,சோ எழுதும்போதும் இனிக்குது... தனிநபர் தாக்குதலா தெரியல.. ஆனா ஜெயலலிதாவ பத்தி எழுதினா மட்டும் தனிப்பட்ட வாழ்கைய தாக்கி எழுத கூடாதுன்னு சொல்லுறது.. இந்த நடுநிலைமை தான் எனக்கு புரியல.
@Prakash
மேற்கண்ட பத்திரிக்கைகள் தமிழர்களை கேவலபடுத்துவதை தினசரி செய்து வருகின்றன.
Post a Comment